காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?
பலதார திருமணங்களில் பெண்கள் சிக்குவது விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது: பலதாரத் திருமணம் நடந்து கொண்டே இருப்பது, பெண்களின் பலவீனத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறாது, ஏனெனில், இப்படி, ஒரு ஆண், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. “வேலைக்குப் போகிகிறானா, இல்லையா?” என்று கூட தெரியாமல், ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், அவாற்றையும் மீறி, இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன எனும்போது, வியப்பாக இருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணிடம் அவ்வளவு எளிதாக ஏமாந்து விடுவாளா என்று நினைக்கும் போது திகைப்பாக உள்ளது. அடிப்படையிலேயே ஏதோ தவறு-தப்பு இருப்பது தெரிகிறது. எந்த பெண்ணும் தனது கற்பை, தாம்பத்தியத்தை அவ்வளவு எளிதாகக் கொடுத்து விடமாட்டாள். அந்நிலையில், ஒரு பெண் தெரிந்து செய்கிறாள் என்றால், கற்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாகிறது. பிறகு, அது மிக்க தீவிரமான சமூகப் பிரச்சினையாகி விடுகிறது.
பலதார திருமணம் மற்றும் பணமோசடி என்ற குற்றங்களில் ஈடுபட்ட காதர் பாட்சா: திண்டுக்கல் பெண் உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்தவர், ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதர் பாட்சாவின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1] என்று இப்பொழுது – ஆகஸ்டில் தினமலர் செய்தி வெளியிட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், ஜூலை 25ம் தேதியே, இம்மோசடியில் சம்பந்தப்பட்ட காதர் பாட்சா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 24-07-2026 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[2]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[3] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.
சலாமியா பானு மதுரையில் கொடுத்த புகார்: பிறகு எட்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். மதுரை புதுார் இ.பி., காலனியை சேர்ந்தவர் சலாமியா பானு (28). இவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து அளித்த புகார் மனு[4]: “எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்[5]. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயாருடன் ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது[6]. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[7].
ஜூன் 26.2016ல் காதர் பாட்சாவுடன் திருமணம்: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் தஸ்லிமா தனது உறவினர் பையன் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு அவரை பிடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அவர் எனது தாய், தந்தையரின் அனுமதி பெற்று தன்னை காதர்பாட்சா என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு வங்கியில் வேலை செய்வதாக கூறினார். அப்போது அவர், என்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்[8]. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்பாட்சா (32). தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் பேசி, சம்மதம் பெற்று எனக்கும், காதர் பாட்சாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு ஜூன் 26.2016ல் திருமணம் நடந்தது”. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தஸ்லிமா தன்னை வற்புருத்தி கல்யாணம் செய்து வைத்தாள் என்கிறார்[9].
“காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை” என்ற தோழி: சலாமியா பானு தொடர்கிறார், “அப்போது மணமகனின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி நான் தஸ்லிமாவிடம் கேட்டேன். அதற்கு காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்றார். இவர் அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாக கூறி என்னை திருமணம் செய்தார். 2 பேரும் எனது தாய் வீட்டில் / புதூரில் உள்ள எங்களது வீட்டில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது கணவர் காதர்பாட்சா திருமணத்திற்காக வங்கியில் 40 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன் என்றார். இதைதொடர்ந்து ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அப்போது அவர் வேலை விஷயமாக ஒரு வாரம் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தார்”.
பணம், நகையோடு மாயமான காதர் பாட்சா: சலாமியா பானு தொடர்கிறார், “திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார்[10]. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட். 2ஆம் தேதி காதர் பாட்சா வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றார்[11]. பின்பு என்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய், 8 பவுன் நகை, ஏ.டி.எம்., கார்டுகளை எடுத்துச் சென்றார். ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். அதன்பின்னர் ரம்ஜானுக்கு முதல்நாள் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது செல்போன் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த 5 செல்போன் எண்களுக்கும் மாறி, மாறி போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்று எனக்கு பயம் வந்து, தஸ்லிமாவிடம் கேட்டேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்”.
© வேதபிரகாஷ்
26-08-2016
[1] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் திண்டுக்கல்லில் மோசடி : தனிப்படை போலீசார் தேடல், ஆகஸ்ட்.22 2015: 23.56
[2] தினகரன், 7 பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’ கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.
[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1590948
[5] வெதுனியா, 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர், வெள்ளி, 22 ஜூலை 2016 (02:05 IST).
[6] தினத்தந்தி, நகை, பணத்துடன் மாயமாகி விட்டார்: 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 12:29 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 5:00 AM IST.
[7] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf
[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/woman-petition-on-her-husband-he-who-married-many-women-116072200004_1.html
[9] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf
[10] தமிழ்முரசு, 8 பெண்களை மணம்புரிந்த கல்யாணராமன் மீது புகார், 23 Jul 2016
[11] http://www.tamilmurasu.com.sg/2016/07/23/216412367-3931.html
அண்மைய பின்னூட்டங்கள்