Archive for the ‘ஜமா மஸ்ஜித்’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)

எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.

பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.

மத்திய உளவுத்துறையும், தமிழக போலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமயமாக்கப் படும் தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.


தமிழகத்தில் முதன்முதலாக என்... செய்துள்ள வழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] தினமலர், எஸ்.., உட்பட 27 பேருக்கு வெகுமதி, Added : அக் 28, 2022 04:31..

https://www.dinamalar.com/news_detail.asp?id=3156201 – :~:text=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%2C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1% E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%2C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு விவகாரம்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.

[3] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/dgp-praises-the-policemens-for-their-excellent-work-in-covai-car-blast-case-rkew2t

[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[5] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

[6] நியூஸ்.4.தமிழ், கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!, Sakthi by SAKTHI October 28, 2022

[7] https://www.news4tamil.com/coimbatore-car-bombing-incident-tamil-nadu-police-ignored-the-central-intelligence-agencys-warning/

வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?

மே 20, 2021

வண்ணாரம்பூண்டி களத்தூர்முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?

வண்ணாரம்பூண்டி களத்தூர் கிராமத்தில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகி, அவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு இடைஞலாக தொந்தரவுகள் செய்து நீதிமன்றத்திற்கு சென்றது: முஸ்லிம்கள் ஒரு பகுதியில், தெருவில், கிராமத்தில் அதிகமாகி விட்டால், எப்படி அவர்கள் தங்களது ஆக்கிரமிப்பு மற்றும் மற்றவர்களின் உரிமைகளை, தங்களது மத நம்பிக்கை, சிறுபான்மை, மிரட்டுதல், சண்டை போடுதல், வன்முறை, கலவரம் என்று முறைகளை, திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி, அமைதியைக் குலைக்கிறார்கள் என்பதனை கவனிக்கலாம். அதே போல, வழக்குகளையும் எப்படி பல்லாண்டுகளாக இழுத்தடிக்கலாம், அரசிய ஆதரவு, கட்சி அதிகாரம், மைனாரிடி அந்தஸ்து போன்றவற்றை உபயோகப் படுத்தி இழுத்தடிக்கலாம் என்பதையும் கையாலுவதை கவனிக்கலாம். நீதிமன்றங்களும், நீதிபதிகளும், இத்தகைய வழக்குகளை விசாரிக்காமல், தள்ளி வைப்பது, கிடப்பில் போடுவது போன்றவற்றையும் காணலாம். இவற்றையெல்லாம் கவனிப்போர் யாரும் இல்லை எனலாம். இப்படித்தான் 1951, 2018 என்று நடந்து வரும் வழக்குகள் 2021 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ளன என்பதை அறியலாம். மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம், இப்பொழுது, கருத்து தெரிவித்துள்ளது.

1951 முதல் 2021 வரை 70 ஆண்டுகளாக நடந்து வரு முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருக்கம் எதிர்ப்பு முதலியன: வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். இதனுள்ளேயே வண்ணாரம்பூண்டி, மில்லத் நகர் ஆகிவற்றையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், சில முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன, ஆனால், இப்பொழுது, மக்கள் தொகையில் சம அளவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூா் கிராமத்தில் கிழக்கு பகுதியில் முஸ்லிம்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறார்கள், அதாவது, முஸ்லிம்கள் ஜனத்தொகை திடீரென்று அதிகமாகி-அதிகமாக்கி தான், அத்தகைய நிலையினை உருவாக்கியுள்ளனர்.  அந்நிலையில் தான், தாங்கள் வசிக்கும் தெருக்களில் ஊர்வலம் போகக் கூடாது, சாமியை எடுத்துச் செல்லக் கூடாது என்றெல்லாம் படிப்படியாக சொல்லி, ஆரம்பித்து, பிறகு கலவரத்தில் கொண்டு முடிப்பதையும் பார்க்கலாம். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் என நான்கு கோயில்கள் உள்ளன[1]. முன்னர், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 1950-1960 என்று ஆரம்பித்து, 1970-1980களில் மசூதி-வீடுகள் என்று பெருக்கி,, 1990-2000களில் ஊர்வலம் கூடாது என்று ஆரம்பித்தனர். இப்பொழுது, 2010-2010களில் நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறியுள்ளன.

 விழா சம்பிரதாயங்கள் நடத்த, 2018ல் நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்ற நிலை: இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்[2]. கோவில் விழாக்கள் நடத்த, இவ்வாறு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் என்று ஆராயத்தக்கது.

2018லிருந்து நிலுவையில் இருக்கும் வழக்கு 2021ல் விசாரணைக்கு வந்தது: உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08, 2021) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, முன்பு வந்தது[3]. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு[4]: “கோவில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது எனவும், சட்டம்ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கூறி, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது[5]. மக்கள் மதம் சார்ந்தவா்களாகவும், ஆண்கள் சமுதாயம் சார்ந்தவா்களாகவும் இருக்கலாம். ஆனால் சாலை எப்படி சமுதாயம் சார்ந்ததாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்[6].

2018ல் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள்: வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம்.

  1. முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும்.
  2. ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம்.
  3. அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும்.
  4. 2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்[7].
  5. 3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது.
  6. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்[8]. மசூதி என்பது, இப்பொழுது வந்தது, ஆனால், கோவில்கள் நூறாண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றீற்கு வேண்டிய ஆகம விதிமுறைகளின் படி சடங்குகள், கிரியைகள், தின-பூஜைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றும் நடந்து வருகின்றன.

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல: இப்பொழுது தீர்ப்பில், இவ்வாறு முக்கியமான அம்சங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன:

  • மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல[9].
  • எந்த மதம் சார்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்[10].
  • மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.
  • இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
  • சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

19-05-2021


[1] தமிழ்.இந்து,  மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதிப்பது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து,ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 May 2021 03:15 PM; Last Updated : 08 May 2021 03:15 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/668435-highcourt-opinion-on-intolerance.html

[3] தினமணி, மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல, By DIN  |   Published on : 09th May 2021 03:35 AM.

[4]   https://www.dinamani.com/tamilnadu/2021/may/09/losing-religious-tolerance-is-not-good-for-the-religious-harmony-of-the-country-3620082.html

[5] தினத்தந்தி, கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்சென்னை நீதிமன்றம் உத்தரவு, பதிவு: மே 08,  2021 15:50 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2021/05/08155020/Temples-and-religious-processions-should-be-allowed.vpf

[7] தினத்தந்தி, மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்லசென்னை உயர்நீதிமன்றம், பதிவு : மே 08, 2021, 05:50 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/05/08175015/2374891/If-religious-intolerance-is-allowed-it-is-the-countryNot.vpf

[9] இ.டிவி.பாரத், மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதிப்பது நல்லதல்லஉயர் நீதிமன்றம் கருத்து, Published on: May 8, 2021, 8:24 PM IST.

[10] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/high-court-opinion-allowing-religious-intolerance-is-not-good-for-the-country-secularism/tamil-nadu20210508202416901

சுன்னத் வல் ஜமாத் – அமைப்பின் அறிக்கை, சுற்றில்………..

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

ஓகஸ்ட் 31, 2016

தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது.

Maulana Anwarul Haq booked for rape 19-08-2016பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர்.

Maulana Anwarul Haq caught on video for rape with woman 19-08-2016தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும்.

Maulana Anwarul Haq Imam caught on video for rape 19-08-2016ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்‌ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை.

Maulana Anwarul Haq Imam booked for rape 19-08-2016கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம்  என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது.

Najibabad, imam caught in videoகற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

© வேதபிரகாஷ்

31-08-2016

Maulana Anwarul Haq Imam demanded death sentence for Kamalesh Tiwari

[1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am

[2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56].

[3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST

[4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016.

http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/

[6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html

[7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56.

[8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html

[9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/

[10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516