Archive for the ‘ஜமாயத்-உல்-உலமா’ category
ஜூலை 17, 2016
முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன? ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

இசுலாமியத் தீவிரவாதம் என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST
[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html
[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அமைதி டிவி, அரேபியா, அல் - உம்மா, அல் - கொய்தா, அல்லா, அல்லா பெயர், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சவுதி, சவுதி அரேபியா, சிமி, சிரியா, சுன்னத், சுன்னத் ஜமாஅத், சுன்னத் ஜமாத், சுன்னி, சூபி, சூபித்துவம், ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜவாஹிருல்லா, ஜாகிர் நாயக், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், பீஸ் டிவி, Uncategorized
Tags: அமைதி டிவி, இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குரான், கொலை, சுன்னி, செக்யூலரிஸம், ஜாகிர் நாயக், ஜிஹாத், தாலிபான், பரவும் தீவிரவாதம், பீஸ் டிவி, மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர். 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].
- மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
- எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
- மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
- ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
- மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
- இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
- ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
- வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
- ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
- முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
- இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி
இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது, பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:
சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்
ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்! |
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610
[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST
[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html
[5] http://adiraipirai.in/?p=26723
[6] http://adiraipirai.in/?p=26767
[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அல் - உம்மா, அல் - காய்தா, அல்லா, இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இராக், இரான், இறைதூதர், இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், கிலாபத், கிலாபத் இயக்கம், சவுதி, சவுதி அரேபியா, சூபித்துவம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜாகிர் நாயக், Uncategorized
Tags: ஆதரவு, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், எதிர்ப்பு, எஸ்.டி.பி.ஐ, காபிர், காஷ்மீரம், குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சென்னை, சேப்பாக்கம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முஜாஹித்தீன், முரண்பாடு, முஸ்லிம், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
நவம்பர் 26, 2015
தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (1)!

அதிரை – உபயம் – நன்றி
திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் (நவம்பர். 2015): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது என்று பெயரைக் குறிப்பிடாமல் இருக்கும்போது, “ரோஷன் மஹாலில் நடைபெற்றது” என்கிறது விகடன்[1]. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், பொது செயலாளராக கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், பொருளாளராக எம்.எஸ்.ஏ.ஷாஜகான் ஆகியோர் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்[2]. மேலும், முதன்மை துணை தலைவராக எம். அப்துல் ரகுமான் தேர்வு செய்யப்பட்டார்[3]. காதர் மொஹித்தீன் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒன்றுதான் குறிப்பிடுகிறது[4]. அதாவது தேர்தல் எல்லாம் இல்லை, “ஒரு மனதாகத்” தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்!

IUML conference, Trichy entrance 24-11-2015. stage
முஸ்லிம் லீக்கின் பிரிவுகள், அவற்றின் தலைவர்கள்: முஸ்லிம் லீக், முச்லிம்கள் வைத்துள்ள வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதியாளர்கள் என்று பலரிடம் உறவுகளை வைத்துள்ளது. அவர்களிடமிருந்து நிதியுதவியும் பெறுகிறது. இது தவிர, –
1. துணை தலைவர்கள்,
2. மாநில செயலாளர்கள்,
3. துணை செயலாளர்கள்,
4. சார்பு அணிகள்,
5. மாநில இணை செயலாளர்கள்,
6. முஸ்லிம் மாணவர் பேரவை, |
7. சுதந்திர தொழிலாளர் யூனியன்,
8. மகளிர் லீக்,
9. மின்னணு ஊடக பிரிவு,
10. கவுரவ ஆலோசகர்கள்,
11. தலைமை நிலைய பேச்சாளர்கள்,
12. தலைமை நிலைய பாடகர்கள் |
முதலியோர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அளவில் அணுகுமுறை, திட்டம், செயல்பாடு முதலியவற்றுடன் வேலைசெய்கிறது முஸ்லிம் லீக். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது, ஊடகக்காரர்கள் அணுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது[6]. இது தொடர்பாக திருச்சியில் நடந்த கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்[7]:

IUML conference, Trichy entrance 24-11-2015. audience
ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!: முஸ்லிம் லீக்கைப் பொறுத்த வரையில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தான் எம்.எல்.ஏ, எம்.பி மற்ற பதவிகளை பெற்று வருகிறது. ஜெயலலிதா, தமிழக அரசை தனது கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் தனது கட்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். ஆனால், அவர் ஆட்சி செய்யும் அரசின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை. அவரது பிடியில் இருந்து அரசு தளர்ந்து விட்டது என்பதைவிட, தொலைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் யாரும் அரசு கட்டுப்பாட்டில் இல்லை, என்றெல்லாம் விமர்சித்தார்[8]. |
இப்படியெல்லாம் பேசுவது, ஜெயலலிதா-விரோத பேச்சாலரசு-விரோத பேச்சா என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டில் “கட்சி” உள்ளது ஆனால் “அரசு” இல்லை என்றால், வேடிக்கைதான்! மழை பெய்ந்து ஓய்ந்தது போலத்தான்! போயஸ் கார்டனில் மழை நீர் நுழையவில்லை, ஆனால், கோபாலபுரத்தில் நுழைந்த மர்மம் போலும்! |
ஆனால், காயிதே மில்லத் சமாதிக்கு வந்து துணியைப் போர்த்தும் போது, கருணாநிதி – ஜெயலலிதா இருவருக்கும் தான், கூட இருந்து பிடித்துக் கொள்கிறார்கள்! அவர்களும் குல்லா போடுவதும், தலையில் முக்காடு போடுவதிலிம் குறைச்சல் இல்லை!

Jeyalalita at Quade millat tomb
அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, திமுக தலைமையிலான அணி: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளதோடு, தேர்தல் முடிவு, ஜனநாயக இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அருமையான பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பங்கு பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது. |
பிஹார் உதாரணத்தைப் பின்பற்றுவோம் என்றால், ஊழல் கட்சிகளோடு கூட்டு வைத்துக் கொள்வோம் என்றாகிறது. அப்படியென்றால், திமுகவோடு கூட்டு வைத்துக் கொள்வது, சாலப் பொறுத்தமானதே! சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் எப்படியுள்ளன, எவ்வாறு செயல்படுகின்றன என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான்! முஸ்லிம் லீக், “சமய சார்பற்ற” என்று பேசுவதும் வேடிக்கைதான்! |

IUML conference, Trichy entrance 24-11-2015 -press briefed
அரசியலாக்கப்படும் வெள்ளச் சேதம்: தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல்…: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடமைகளை இழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் பங்கேற்கிறது. மத்திய மாநில அரசுகள் தங்களின் மெத்தன போக்கை கைவிட்டு அவதியுற்றுள்ள மக்கள் அனைவருக்கும் நிவாரண பணியை போர்க்காள அடிப்படையில் விரைவுபடுத்திட வேண்டுகோள் விடுக்கிறது. இதுவரை ஏற்பட்ட சேதம் ரூபாய் 8,481 கோடி என்றும் முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் முதற்கட்டமாக ரூபாய் 939 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இழப்பீடு கணக்கீடும் மத்திய அரசிடம் முதல்வர் விடுத்த தொகையும், மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரணமும் மிகவும் குறைவு ஆகும். பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுடைய நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
© வேதபிரகாஷ்
26-11-2015
[1] http://www.vikatan.com/news/tamilnadu/55536-.art
[2] வெப்துனியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக காதர்மொய்தீன் மீண்டும் தேர்வு, Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (05:20 IST)
[3] தினத்தந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு, மாற்றம் செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST.
[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/kader-moideen-re-elected-as-president-of-the-indian-union-muslim-league-115112500010_1.html
[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/26021349/Indian-Union-Muslim-League-the-partys-Tamil-Nadu-state.vpf
[6] தமிழ்.ஒன்.இந்தியா, அதிமுகவை வீழ்த்த சட்டமன்ற தேர்தலில் திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடரும், Posted by: Chakra, Published: Wednesday, November 25, 2015, 13:22 [IST].
[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/iuml-urges-opposition-come-under-dmk-alliance-defeat-aiadmk-240684.html
[8] விகடன், ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!, Posted Date : 21:18 (24/11/2015); Last updated : 21:18 (24/11/2015).
பிரிவுகள்: இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், கருணாநிதி, காதர் மொய்தின், காதர்மொய்தின், காயிதே மில்லத், கிலாபத், கிலாபத் இயக்கம், ஜமா அத், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜெயலலிதா
Tags: இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய லீக், இந்துக்கள், இஸ்லாம், கருணாநிதி, காதர் மொகிதீன், காதர் மொய்தீன், செக்யூலரிஸம், ஜெயலலிதா, முகமதியர், முஸ்லீம்கள்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 25, 2014
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

சென்னை முஸ்லிம்களின் ஜிஹாதி ஆதரவு இருக்கும் போது ஏன் ஜிஹாதி–எதிர்ப்பு இல்லை?: சாதாரணமாக தமிழக முஸ்லிம்கள் மற்ற விசயங்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களை சென்னைக்கு கூட்டி வந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். “கசாபை தூக்கில் போடாதே” என்று முன்னரும் தூக்கில் போட்ட பிறகும் அவனை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்பார்கள், ஆனால், முஸ்லிம்கள் இப்படி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்க மாட்டார்கள், தடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்விசயத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்களே ஏன் என்று தெரியவில்லை. “தீவிரவதிகளாக மாறும் பெண்கள்” என்று 05-10-2014 தேதியிட்ட தினத்தந்தியில் ஒரு கட்டுரை வெளியிட்டவுடன், “ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” என்ற முஸ்லிம் அமைப்பு, அதனை எதிர்த்து கண்டன கடிதத்தை அனுப்பியதாம். உடனே, 08-10-2014 அன்று, தினத்தந்தி, “கட்டுரையில் இடம் பெற்ற ஜிஹாத் பற்றிய தகவல் தவறானது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல”, என்று வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதாம். ஆனால், அதையும் விடாமல், “இதுபோன்ற தவறான அவதூறான செய்திகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் முஸ்லிம் விரோதபோக்கை பத்திரிக்கையில் தொடர்வீர்களானால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை வன்மையான கண்டனுத்துடன் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) எச்சரிக்கிறது”, என்று இன்னொரு கடிதத்தை 08-10-2014 அன்று அனுப்பியுள்ளது. அதாவது, அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்
“ஐமுமுக”வின் கடிதத்தின் நோக்கம் அலசப்படுகிறது: இந்தியாவில் அடிக்கடி கருத்து சுதந்திரம், எண்ணும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசப்படும், எழுதப்படும், விவாதிக்கப்படும். ஆனால், அந்த உரிமைகள், சுதந்திரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும், செய்பவர்களின் உரிமைகள், சுதந்திரங்களரென்ன, மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது இல்லை. “பாசிஸம்” என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது ஒருவர் தனது கருத்தை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கும் முறை அதுவாம். பிறகு அப்படி சொல்பவர்களே, அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே? இதென்ன, அந்த போதிக்கும் மகாத்மாக்களுக்குப் புரியாமலா இருக்கும்? இங்கும் “ஐமுமுக”வின் கடிதம் பல விசயங்களை வெளிப்படுத்துகிறது. தினத்தந்தி அல்லது இன்னொரு ஊடகம் எந்த செய்தியை வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதனை இவ்வாறு முடிவெடுக்க முடியுமா? அல்லது தினத்தந்தி ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு, பிறகு அது தவறு, பொய் என்று சொல்லி இருந்துவிட முடியுமா?

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு
மேலே குறிப்பிட்ட “ஐமுமுக”வின் கடிதத்தில் உள்ள சொற்றொடர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அவை கிழே கொடுக்கப் படுகின்றன?
- தவறான அவதூறான செய்திகள் – இந்தியாவில் ஏன் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் வெடிகுண்டு வெடிப்பு, கொலை முதலிய காரியங்களில் வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்களே. பர்த்வானில் கூட, ரெசூல் கரீம் வீட்டில் உள்ளூர் போலீஸ் தேடியபோது கிடைக்காத குண்டுகள்[1] என்.ஐ.ஏ தேடியபோது கிடைத்ததாமே? கிடைத்துள்ள ஒரு பென்-டிரைவில் குண்டுகள் எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் இருக்கின்றன[2]. மால்டா மாவட்டத்தில் பத்து நாட்களில் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன[3]. அந்த குண்டு தொழிற்சாலையில் 36 பேர் வேலை செய்துள்ளனர்[4]. முன்பே அந்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் குண்டுதயாரிப்பு முறைபற்றி விவரங்கள் கிடைத்திருக்கும்[5]. ஆனால், மாநில போலீஸார் அவற்றை அழித்து விட்டார்கள். அசாமில் பார்பேடா என்ற இடத்தில் ஆறு இளைஞர்கள் இவ்விசயத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்[6]. இவையெல்லாம் செய்திகளாக வந்துள்ளனவே, வந்துக் கொண்டிருக்கின்றனவே? அவையெல்லாம் தவறான செய்திகளா அல்லது அவதூறான செய்திகளா? காஷ்மீரத்தில் ஐசிஸ் கொடிகள் காட்டி, “நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவோம்”, என்று முழக்கமிடும் போது, மற்ற முஸ்லிம்கள் கண்டிக்கவில்லையேலொமர் அப்துல்லா மட்டும் அவர்கள் “முட்டாள்கள்” என்று சொல்லியிருக்கிறார், அதையும் அவதூறு என்று எச்சரிக்கப் படவில்லையே? அந்த “ஐசிஸ்”ஸுடன் சம்பந்தப் பட்டதுதானே “செக்ஸ் ஜிஹாத்” என்பதெல்லாம்.
- முஸ்லிம் விரோதபோக்கு – ஊடகங்களில் பெரும்பான்மையாக “இந்துவிரோத போக்கு” தான் காணப்படுகின்றது, ஆனால், இவர்கள் “முஸ்லிம் விரோதபோக்கு” உள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். இதற்கெல்லாம் யார் காரணம் என்று முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக நினைத்ததில்லை. ஆனால், முச்லிம்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், முச்லிம்களே ஆகமாட்டார்கள், இங்குதான் அவர்களுடைய பிரச்சினை உள்ளது. அவர்கள் தாம் மற்ற எல்லோரையும் தமக்கு எதிரிகளாக நினைக்கிறார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் தாம், இப்படி அவர்களை நினைக்கச் செய்கிறது. இது அவர்களுடைய இறையியல் மற்ரும் மனோரீதியிலாக நடக்கும் போராட்டம். அதற்கு ஜிஹாதி தான் தீர்ப்பு என்று அவர்கள் நினைத்து செயல்படும் போது, அவர்கள் தாம் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
- பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது – அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை பெரும்பாலும் ஆட்டி வைப்பவர்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்திகள். இவர்கள் தங்களது சித்தாந்தம் வலுப்பட, ஆதரவாக இருக்க, மற்ற சித்தாந்திகளை எதிர்க்க, தங்களது பத்திரிகா தர்மத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், “செக்யூலரிஸம்” போர்வையில், அவர்கள் உண்மையில், பாரபட்சமான செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றனர். செய்திகளை விலைக்கு வாங்குவது, ஊடகங்களில் செய்திகளை விதைப்பது, வளர்ப்பது, பரப்புவது…..போன்ற வேலைகளை தாராளமாக செய்து வருகிறார்கள். அதற்காக இப்பொழுது நவீன முறையில் “ஜேர்னலிஸ்ட்” பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களுடைய வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ எந்த செயல், இயக்கம் அல்லது தனிமனிதன் செயல்படுகிறானோ, அதற்கு எதிராக செயல்படும். இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும், “பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது” எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியிடுவது – ஒன்று உண்மையான செய்திகளை, ஒட்டு மொத்தமாக மனிதர்கள், பொதுவாக பாதிக்கப்படும் விசயங்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா போன்ற விசயங்களும் செய்திகளாக வரும். அதேபோல, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாதி போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, அத்தகைய செய்திகளும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுதவிர மேலே குறிப்பிடப் பட்டபடி, அவர்களுடைய வணிகங்கள்-வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ பாதிக்கப் பட்டால், அதை எதிர்க்கும் முறையில் பிரச்சார ரீதியில் செய்திகள் தோன்றும்.
- விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஏற்கெனவே விளைவுகள் மிகக்கடுமையாகி விட்டதால் தான், இந்தியர்கள் ஜிஹாதைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் மதரீதியில் பிரிக்கப் பட்டு, அது ஒன்றாக இருக்கமுடியாமல், இரண்டாக பிரிந்தும், முஸ்லிம்கள் உண்மையினை புரிந்து கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டியிருக்கிறார்கள். காஷ்மீர் மட்டுமல்லாது வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இதற்கு ஜிஹாதிகள் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கினர். இத்தனை குண்டுகள் வெடித்தும், மக்கள் இறந்தும், ரத்தம் பாய்ந்தும், மனித உறுப்புகள் சிதறியும்……அவர்கள் திருப்தியடையாமல், குண்டு தொழிற்சாலைல்கள் வைத்துக் கொண்டு, கடுமையான விளைவுகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கண்ண்டிக்காமல், “விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று மிரட்டுவதின் உள்நோக்கம் என்ன?
- வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை – எச்சரிக்கை ஜிஹாதிகளுக்கு இல்லாமல், அத்தகைய அபாயகரமான உண்மைகளை எடுத்துக் காட்டுபவர்களுக்கு ஏன் விடவேண்டும்? கண்டனமும் “இஸ்லாம் பெயரில்” நடக்கின்ற குற்றங்களை, தீவிரவாதங்களை நோக்கியில்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் மீது ஏன் தொடர்ந்து இருக்கவேண்டும்? அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்கரவாதம் போன்றவை ஏன் வன்மையுடன் இருக்கும் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும்? “வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை” என்பது இப்படித்தான் மிரட்டலாக இருக்க வேண்டுமா?

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு – அல் – உம்மா – நன்றி “சதர்ன் ஜிஹாதி.காம்”
இந்திய முஸ்லிம்கள் மாறவேண்டும்: “தாருல்-இஸ்லாம் : தாருல்-ஹராப்” “மோமின்-காபிர்”,ளிறைவனால் வெளிப்படுத்தப் பட்ட புத்தகத்தைக் கொண்டவர்கள் – புத்தகங்கள் இல்லாதவர்கள்” ….என பற்பல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தான் இந்தியாவில் முஸ்லிம்-அல்லதவர்களை, குறிப்பாக இந்துக்களை அணுகி வருகின்றனர். இது நேர்-எதிர்மறை முறைகள், நல்லது-கெட்டது வழிகள், அறிவிக்கப்பட்ட-அறிவிக்கப்படாத தாக்குதல்கள் என்றபலமுறைகளில் நடந்து வருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்கள், இந்துக்களின் வீடுகளில் விசேஷங்கள் நடந்தால் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள், ஆனால், இப்பொழுது தவிர்த்து வருகிறார்கள். காரணம் அடிப்படவாத முஸ்லிம்கள், “இந்து வீடுகளுக்குச் செல்லக் கூடாது. சாத்தான்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது”, என்றேல்லாம் போதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்துக்கள் இதுமாதிரி சொல்வதில்லை, ஏன், அவர்களுக்கு அத்தகைய எண்ணமே தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஏழை முஸ்லிம்களைப் பார்த்தால் இரக்கப்படத்தான் செய்கிறார்கள், தானம் செய்கிறார்கள் (அதாவது அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்ப்பதில்லை).

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்
முஸ்லிம்கள் பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். முதலில் இந்த மனப்பாங்கை நீக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம், ஜிஹாதித்துவம் பேசும், ஊக்குவிக்கும், பரப்பு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்கானிௐகபட வேண்டும், அவர்கள் திருத்தப் படவேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி, சாந்தி முதலியவை வரும், கிடைக்கும், தொடரும். பர்த்வானில் குண்டுகள் வெடித்த ஒலி இப்பொழுதுதான் மம்தா பேனர்ஜிக்குக் கேட்டிருக்கிறதாம்[7], அதுபோல, இங்குள்ள முஸ்லிம்களுக்கும் கேட்டால்[8] சரிதான்! காந்தி யெயந்தி அன்று குண்டுவெடித்து ஆட்கள் செத்து, இவ்வளது சோதனைகள் நடந்து முடிந்த பிறகு, “தீவிரவாதிகள், தீவிரவாதிகள் தாம்”, என்று அம்மையார் 17-10-2014 அன்றுதான் ஒப்புக் கொண்டுள்ளார். சரி சென்னை முஸ்லிம்கள் எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?
© வேதபிரகாஷ்
25-10-2014
[1] Earlier, a senior Bengal police officer told The Telegraph that departmental proceedings would be initiated against the team that had searched Rezaul Karim’s house in Burdwan and returned empty-handed on October 8. In the same house, the NIA and the NSG had yesterday found 39 home-made bombs.
[2] …….the Bengal police had also recovered a pen drive from a house in the area, that had a recording of an instructor explaining in Urdu and Bangla how to make bombs, improvised explosive devices and hand grenades.
http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226
[3] http://www.ibtimes.co.in/third-blast-west-bengals-malda-district-10-days-611486
[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226
[5] On October 3, CID had detonated the 55 IEDs found in the Khagragarh blast site. October 5 itself, just three days after the Khagragarh IED explosions when all the samples had been destroyed by CID.
http://timesofindia.indiatimes.com/city/kolkata/Burdwan-39-bombs-detonated-explosives-samples-sent-for-testing/articleshow/44863732.cms
[6] http://indiatoday.intoday.in/story/burdwan-blast-nia-gets-custody-of-three-accused/1/395558.html
[7] http://www.telegraphindia.com/1141018/jsp/frontpage/story_18939287.jsp
[8] Left defenceless by the discovery of a cache of bombs that Bengal police had overlooked, chief minister Mamata Banerjee today said “terrorists are terrorists” and declared that “we do not have any problems with the NIA” which is probing the Burdwan blast.
பிரிவுகள்: எச்சரிக்கை, ஐமுமுக, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு சுன்னத் ஜமாத், திமுக, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தேச விரோதம், பட்கல், பர்த்வான், மிரட்டல்
Tags: இஸ்லாம் ஜிஹாதி, ஐ.எஸ்.ஐ, ஐமுமுக, குண்டு, குண்டுவெடிப்பு, சிமி, சைசிஸ், ஜிஹாதி குண்டு, தமிழகம், தமிழ்நாடு, திமுக, பாகிஸ்தான்
Comments: Be the first to comment
மே 12, 2013
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?
கடந்த நாட்களில் குண்டுவெடிப்பு, வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது[1]. தலிபான்கள் தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதனாமது, பெண்கள் ஓட்டுப் போடக்கூடாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள், பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், பெண்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்[2]. பாகிஸ்தானின் 14வது தேசிய மற்றும் மாகாண தேர்தல் நடந்துள்ளது. 372 கீழ்சபை மற்றும் 728 தேசிய அசெம்பிளி என்று சேர்ந்து தேர்தல் நடக்கின்றது. இன்னும் மக்கள் தெளிவாக வாக்களிக்கவில்லை என்கிறார்கள். ஏனெனில் யாருக்கும் அதிக இடங்கள் கிடைக்கவில்லை[3].
நவாஸ்செரிப்கட்சிமுன்னணியில்இருக்கின்றது: பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் செரிப் கட்சி முன்னணியில் இருந்து, ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது[4]. இப்பொழுதுள்ள நிலவரங்களின் படி, பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தனிக்கட்சி என்றுள்ளது[5]. இம்ரான் கான் பரிதாப அலையில் ஒருவேளை முன்னணியில் வருவார் என்று நினைத்தார்கள், ஆனால், நடக்கவில்லை[6].
கட்சிகளின் நிலவரம்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) [Pakistan Muslim League-Nawaz (PML-N)], பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் [Pakistan Tehreek-i-Insaf (PTI)] மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan Peoples party (PPP)] என்பவைதான் பிரதான கட்சிகளாக இருக்கின்றன.
கட்சியின் பெயர்
|
தலைவர் / பிரதம மந்திரி வேட்பாளர்
|
ஆங்கிலத்தில்
|
கிடைத்துள்ள இடங்கள்
|
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) |
நவாஸ் செரிப்பின் கட்சி |
Pakistan Muslim League-Nawaz (PML-N)[7] |
120
|
தெஹ்ரீக்-இ-இன்சாப் |
இம்ரான் கான் |
Pakistan Tehreek-i-Insaf (PTI)[8] |
30
|
பாகிஸ்தான் மக்கள் கட்சி |
யூசுப் ராஜா ஜிலானி,ஆளும் கட்சி |
Pakistan Peoples party (PPP)[9] |
35
|
நவாஸ் செரிப் மறுபடியும் பிரதமர் ஆகிறார்: 13 ஆண்டுகள் கழித்து, நவாஸ் செரிப், முன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆகிறார்[10]. 1990 மற்றும் 1997ல் பிரதமராக இருந்தார், ஆனால், இருமுறைகளிலும், குலாம் இஸாக் கான் மற்றும் பெர்வீஸ் முசாரப் என்கின்ற ஜனாதிபதிகளினால் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டார்[11].
இம்ரான் கானின் கிரிக்கெட் கவர்ச்சி வேலை செய்யவில்லை: இம்ரான் கானின் கிரிக்கெட் பேச்சு, மற்றவர்களைப் பற்றித் தாக்கிப் பேசிய பேச்சு, பரிதாப அலை எதுவும் வேலை செய்யவில்லை என்று தெரிகிறது[12]. கூட்டங்களில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வதில், தனக்கு நிகர் தாந்தான் என்ற ரீதியில் பேசி வந்தார். இந்தியாவில் அம்பயர்கள் தனக்கு எதிராக அல்லது சாதகமாக இல்லை என்றாலும், தான் வென்றாதாகக் கூறிக் கொண்டார். எனினும் நிறைய இடங்களைப் பிடிக்கவில்லை. இதனால், எதிர்கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவோம் என்று கட்சியினர் கூறியிருக்கிறார்கள்[13].
மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைகளாகவே உள்ளன: ஓட்டு போட்டவர்களின் சதவீதம் 50 முதல் 60 வரை இருக்கிறது[14]. பொது மக்களைக் கேட்டால், அவர்களும் தண்ணீர், மின்சாரம், வேலை வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்று தான் பேசுகிறார்கள், அதாவது பொருளாதாரப் பிரச்சினைகள் தாம் முக்கியமாக இருக்கின்றன[15].

பெண்கள் வந்து ஓட்டுப் போட்டது

© வேதபிரகாஷ்
12-05-2013
[7] Pakistan Muslim League (N) – Although, the party claims to be the extension of the All India Muslim League under the leadership of Mohammad Ali Jinnah that led the Muslims of sub-continent India to establish Pakistan, a separate country for the Indian Muslim but due to almost a dozen parties under the same name it is a bit difficult to confirm the claim.
[8] Pakistan Tehrik-e Insaf (PTI) – This party has gained considerable momentum over the last two years. Imran khan, once the hero of the Pakistan cricket who brought the 1992 champion trophy of the Cricket World Cup—established PTI in February 1996.
[9] Pakistan People’s Party- Since its inception in 1967, PPP in Pakistan’s recent history remained the only political party, having grass root level representation having liberal democratic norms. The charisma of its founding leader Zulfiqar Ali Bhutto based its manifesto on secularism and social equality, and ruled over the hearts and minds of the millions of Pakistanis for decades.
[11] Nawaz Sharif has remained prime minister two times in 1990 and 1997 but both of his government wre prematurely dismissed, once by then president Ghulam Ishaq Khan and then his second government was ousted in 1999 in a military coup by former military ruler Gen (r) Pervez Musharraf.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அரசாங்கத்தை மிரட்டல், இந்திய விரோதி ஜிலானி, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி, இஸ்லாம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காயிதே மில்லத், கிரிக்கெட் விளையாட்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், கூட்டம், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், நவாஸ், பலுச்சிஸ்தானம், பலுச்சிஸ்தான், பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, லஷ்கர்-இ-தொய்பா, லாகூர், லாஹூர், லீனா
Tags: ஓட்டு, கிழக்கு பாகிஸ்தான், சிறுபான்மையினர், தேர்தல், பாகிஸ்தான், பாகிஸ்தான். தேர்தல், பெரும்பான்மையினர், முஸ்லிம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம்கள்
Comments: 1 பின்னூட்டம்
மே 11, 2013
பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?
பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?
பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].
பாகிஸ்தானில்தேர்தல் – திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

© வேதபிரகாஷ்
11-05-2013
[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.
[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
பிரிவுகள்: அஃறிணை, அடிப்படைவாதம், அடையாளம், அது, அலி, அலி சகோதரர்கள், அழுக்கு, அவதூறு, அவன், அவள், ஆஜ்மீர், ஆணல்ல, ஆண்பால், ஆண்மை, ஆளுமை, இஸ்லாமாபாத், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஓட்டு, ஓட்டுவங்கி, காஃபிர், கார்டூன், காஷ்மீர், சரீயத், சரீயத் சட்டம், சிந்து, சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த், சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூபி, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், தாஹிர் ஷைஜாத், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்பால், பெண்மை, மிலாடி நபி, மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், ரத்தம், ராவல்பிண்டி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி, லஸ்கர்-இ-தொய்பா, லாகூர், லாஹூர், லீனா, வாசிம் அக்ரம், வாசிம் அக்ரம் மாலிக், வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஷியா, ஷியா-சுன்னி, ஹதீஸ்
Tags: அது, அலி, அவன், அவள், ஆணல்ல, ஆண், ஆண்மை, ஆளுமை, இம்ரான் கான், இஸ்லாம், ஓட்டு, ஓட்டு வங்கி, ஓட்டுரிமை, கராச்சி, கான், செரீப், திருநங்கை, தேர்தல், நடனம், நாட்டியம், பந்து, பாட்டு, பிஎன்பி, பிபிபி, பெண், பெண் உரிமை, பெண் கடமை, பெண்ணல்ல, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்மை, முகமது அலி ஜின்னா, முஸ்லீம் ஓட்டு, ராவல் பின்டி, விக்கெட், விளையாட்டு
Comments: 3 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 29, 2013
முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?
குர்ஷித் ஆலம் கான் அத்தகை யசதிதிட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் (28-04-2013): ஆஸம் கான் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் செலவதற்காக பாஸ்டன் விமானநிலையத்திற்குச் சென்ற போது, வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[1]. ஆனால், அது தம்மை முஸ்லிம் என்பதனால் அவ்வாறு நடஎது கொண்டார்கள் என்று குறைகூறினார். இப்பொழுது, சல்மான் குர்ஷித் தான் இதற்குக் காரணம் என்று பழிபோடுகிறார்[2]. குர்ஷித் ஆலம் கான் அத்தகைய சதி திட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்[3].
முஸ்லிம், முஸ்லிமை எப்படி பழிவாங்குவார்?: உம்மா, ஷரீயத் மற்றும் ஹதீஸ் முதலிய சித்தாந்தங்களின் படி, ஒரு முஸ்லிம், முஸ்லீமிற்கு எதிராக செயல்படலாகாது. அப்படி செய்வதானால், ஒரு முஸ்லிம், அடுத்த முஸ்லீமை காபிர் என்று அறிவித்து ஜிஹாத் தொடக வேண்டும். அப்படியென்றால், அரசியல் ரீதியில் இந்த இரு முஸ்லிம் தலைவர்களும் ஜிஹாதை ஆரம்பித்து விட்டார்கள் போலும்.
பாஸ்டன் விமான நிலையத்தில் சோதனை: 24-04-2013 புதன்கிழமை அன்று, அகிலேஷ் யாதவ் சார்பில் 11 பேர் கொண்ட படாளம் பாஸ்டன் விமானநிலையத்தில் வந்திறங்கியது. வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[4].
முஸ்லிம்கள் கும்பமேளாவிற்கு பொறுப்பு, ஆனால், இந்துக்கள் செத்தா முஸ்லிம்கள் பொறுப்பல்ல: செக்யூலர் நாடென்பதால், கும்பமேளாவிற்கு பொறுப்பாக ஆஸம்கான் என்ற மதவாத அமைச்சரே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், நெரிசலில் இறப்புகள் ஏற்பட்டவுடன், முஸ்லிம்கள் “கும்பமேளாவிற்கு பொறுப்பு, ஆனால், இந்துக்கள் செத்தால் நாங்கள் பொறுப்பல்ல”, என்ற ரீதியில் பழியை ரெயில்வே மீது போட்டார் ஆஸம் கான். ஆனால், ரெயில்வே பொறுப்பாளர் தான் பொறுப்பு என்றனர். இதனால் ஆஸம் கான் ராஜினாமா செய்தார்.
கும்பமேளா என்பது சரித்திரரீதியில் சுமார் 3000 வருடங்களாக நடைப் பெற்றுவருகின்றது. அதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோடி கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள். இப்பொழுது சொல்லப்படும் “கூட்டத்தை நிர்வகிப்பது” (Crowd Management) என்ற தத்துவம் எல்லாம் அப்பொழுது கிடையாது, ஏனெனில், மக்களே ஒழுங்காக, சிரத்தையாக, சீராக மேளாவில் கலந்து கொண்டு தத்தம் இடங்களுக்கு, நாடுகளுக்குத் திரும்பிச் சென்று விடுவர். ஆனால், இப்பொழுது ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலிருந்து (Harvard University) ஒரு குழு, இதைப் பற்றி ஆய்வு நடத்த ஜனவரியிலேயே வந்து தங்கியது[5]. கடந்த பிப்ரவரி 2013ல் நடந்து முடுந்த கும்பமேளா வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும்.
மக்கள் இறந்த பிறகு, பழியை ஊடகங்களின் மீது போட்ட ஆஸம் கான்: அலகாபாத்தில், கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் பலியான விவகாரத்திற்கு, மீடியாக்களே காரணம் என்று, கும்பமேளா குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியவரும், மாநில அமைச்சருமான முகம்மது ஆசம் கான் கூறியுள்ளார்[6]. உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆசம் கான் கூறியதாவது, மகாகும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் விழுந்து 2 பேர் பலியாயினர். மீடியாக்கள் இந்த செய்தியை வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அவ்விடத்திலிருந்து விரைந்து வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில்வே ஸ்டேசன் பகுதிக்கு விரைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மாநில நிர்வாகம், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அளவிற்கதிகமாக ஆட்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மட்டுமே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?
முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன் – முலாயத்தின் மகன் முழக்கம்: முன்னர் ராமஜென்மபூமி விஷயத்தில் முலாயம் அடாவடி காரியங்களை மேற்கொண்டதால், சாதுக்கள் பலர் கொல்லப்பட நேர்ந்தது; அவர்களை அயோத்தியாவிற்கு வரமுடியாத அளவிற்கு தடுத்தார்; ரெயில்கள் திருப்பிவிடப்பட்டன; ரத்து செய்யப்பட்டன; நடந்து வந்தவர்களையும் அடித்து, துரத்தினர்; இதனால் “முல்லாயம் சிங் யாதவ்” என்றெ அழைக்கபடலானார். அவரது மகன், சும்மா இருப்பாரா? முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன்[7] – என்று முலாயத்தின் மகன் முழக்கமிட்டு, தனது “முல்லா”த்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டார்[8]. இவருடன் ஆஸம் கான், டயானா எக், கெர்க் கிரீனௌ, ராஹுல் மல்ஹோத்ரா முதலியோர் பேசுவதாக இருந்தது[9]. ஆனால், அவர் வரமாட்டார் என்று ஹார்வார்ட் வெப்சை அறிவித்தது[10].
வேதபிரகாஷ்
29-04-2013
[7] Yadav was listed as a panel speaker in the spring symposium of Harvard’s South Asia Initiative on the subject “Harvard Without Borders: Mapping the Kumbh Mela.” But evidently, Harvard’s outlook on borders was not shared by the department of homeland security when it held up minister Khan at the airport. Yadav later opted out of the presentation at the last minute due to what organizers said was “unforeseen circumstances.”
பிரிவுகள்: அகிலேஷ், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி, அமெரிக்க ஜிஹாத், அல்லா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, ஒழுங்கு, கட்டுப்பாடு, கும்பமேளா, கும்பல், கூட்டம், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், நிர்வாகம், வாரணசி குண்டுவெடிப்பு, ஹார்வார்ட்
Tags: ஃபத்வா, அகிலேஷ், அமெரிக்கா, அவமதிக்கும் இஸ்லாம், ஆஸம் கான், ஆஸம்கான், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், ஒழுக்கம், கட்டுப்பாடு, காபிர், கும்ப மேளா, கும்பமேளா, கும்பம், கும்பல், கூட்டம், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முல், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ஹார்வார்ட்
Comments: Be the first to comment
ஏப்ரல் 7, 2013
பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?
இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:
- அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
- அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
- அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
- ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
- எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
- பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
- ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.
இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].
அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7]. “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர். இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].
அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.
“இஸ்லாமிஸ்டுகள்” மற்றும் “செக்யூலரிஸ்டுகள்”: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.
இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:
- 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
- · முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
- “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].
வேதபிரகாஷ்
07-04-2013
[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.
[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”
பிரிவுகள்: ஃபத்வா, அரசு நிதி, அரேபியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அஹமதியா, அஹ்மதியா, இணைதள ஜிஹாத், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, ஈத், உலமா வாரியம், உலமாக்கள், கதறல், கற்பழிப்பு, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, குரூரம், கொடூரம், சண்டை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சிலை வழிபாடு, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, போர், போர் குற்றம், யுத்த பலிகள், யுத்தம்
Tags: அஹ்மதியா, இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குரூரம், குற்றம், கைதியா, கொடூரம், சண்டை, சுன்னி, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலரிஸம், செக்யூலார் அரசாங்கம், பங்களாதேசம், பங்காபந்து, போரா, போர், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் பெண்கள், முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்தம், லெப்பை, ஷியா
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 22, 2013
தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8]. இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST
கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை
முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.
© வேதபிரகாஷ்
23-03-2013
[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.
[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.
[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.
[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கல்வீச்சு, கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், கொடி எரிப்பு, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், பிதாயீன், மசூதி, மதரஸா, மதரஸாக்கள், மதவெறி, ரகசிய சர்வே
Tags: ஃபிதாயீன், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உபி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளே நுழைதல், ஊடுவல், காஷ்மீர இஸ்லாம், சமரசம், ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜிஹாதி தீவிரவாதம், தீவிரவாதம், நேபாளம், பிதாயீன், பெண் தீவிரவாதிகள், முஜாஹித்தீன், ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹிஜ்லி ஷரீப்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 22, 2013
மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு
லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.
வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள் நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அப்சல் குரு, அரேபியா, அலி, அலி சகோதரர்கள், அல் - உம்மா, அல் - காய்தா, அல் ஹதீஸ், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அஹமதியா, அஹமது ஷா புகாரி, அஹ்மதியாக்கள், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம், இமாம் அலி, இமாம் கவுன்சில், இமாம் செக்ஸ், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உரூஸ், உறவினர், கல்லடி ஜிஹாத், கல்வத், கல்வீச்சு, காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சன்னி, சன்னி ஜமைதுல் உல்மா, சமரசப்பேச்சு, சமஸ்கிருதம், சவுதி, சவுதி அரேபியா, சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூபித்துவம், செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தலாக், தலாக்-தலாக்-தலாக், தலித் முஸ்லீம்கள், தலிபான், வாஹாபி, வாஹாபி இயக்கம்
Tags: அடிப்படைவாத சித்தாந்தம், அடிப்படைவாத தீவிரவாதம், அரேபியா, ஏற்றுமதி, சவுதி, சவுதி ந்ரேபியா, சித்தாந்த தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பயங்கரவாதம், தீவிரவாத பயங்கரவாதம், பயங்கரவாத-தீவிரவாதம், பயங்கரவாதம், வாஹாபி, வாஹாபி தீவிரவாதம், வாஹாபி பயங்கரவாதம்
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்