Archive for the ‘ஜமாத்’ category
மே 1, 2020
இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர்: முஸ்லிம்களுக்கு சிகிச்சை மறுத்தது, வெறிநாய்கள் கடித்தது, குவாரென்டைன் செய்தது, தடை நீக்கியது!

கேரளா சென்று திரும்பிய இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர்களுக்குத் திரும்பியவர்கள்: 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்[1]. திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரகநல்லூர் ஊராட்சி இஸ்லாம் நகர் பகுதியில் 1,100 குடும்பங்கள் வசிக்கின்றன[2]. இதேபோல் சாத்திரம், ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகரில் மொத்தம் 750 வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் காய்கறி நறுக்கும் கத்தியை கூர்மை தீட்டும் தொழில் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கு சென்று அந்தப் பகுதியில் தொழில் செய்பவர்கள். இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது. எனவே இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் மக்கள் கேரளா சென்று திரும்பியவர்கள் என்பதால் இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்காமல் நகர்புறம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தனர்[3]. எனவே அரசு ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்காததால் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணஅமுதம் மற்றும் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி சேகர், ஒன்றிய ஆணையர்கள் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி அந்த கிராமங்களை சுற்றி காவலர்களை நியமித்து செக்போஸ்ட் அமைத்து சீல் வைத்தனர்[4]. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்தனர்.

முஸ்லிம் என்பதால் வேறு மருத்துவமனையைப் பாத்துக்கோங்கன்னு‘ சொன்ன மருத்துவர்: திருத்தணியை அடுத்த இஸ்லாம் நகர் பகுதியில் வசிக்கும் சைதா என்பவர் தன் மனைவி ஆஷாவுக்கு கடந்த சில வாரங்களாக திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்துள்ளார். திடீரென ஒருநாள், சைதாவைத் தொடர்புகொண்ட மருத்துவமனை நிர்வாகம் `மேற்கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதென்றும், தங்கள் மருத்துவமனையில் முஸ்லிம் மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என்று கூறி சைதாவின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சைதா, “என் மனைவி ஆஷாவுக்கு போன மாசம் திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு. உடனடியா, திருத்தணியில இருக்குற பீகாக் மருத்துமனைக்கு கூட்டிட்டுப் போனேன். என் மனைவியைப் பரிசோதிச்சிட்டு அவங்களுக்கு கிட்னில பாதிப்பு இருக்கு, உடனடியாக ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னாங்க. நான் அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு, அவங்க உடல் நிலை மோசமா இருக்கறதால உடனடியா ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாங்க. இல்லனா உயிருக்கு உத்தரவாதம் இல்லைனு சொன்னதால நானும் என் மனைவியை அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை செய்யலாம்னு முடிவெடுத்தேன். அந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000 செலவாகும்னு முதல்ல சொன்னாங்க, ஆனா எங்க கிட்ட ரூ.65,000 வாங்கிட்டாங்க. அறுவை சிகிச்சை முடிஞ்சு அங்கேயே 4 நாள் வெச்சிருந்தாங்க பிறகு வீட்டுக்கு அனுப்பிட்டு, தொடர்ந்து வாரத்துல செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வந்து டயாலிசிஸ் செஞ்சுட்டு போகணும்னு சொன்னாங்க. நானும் கடந்த செவ்வாய்க்கிழமை கூட என் மனைவிய கூட்டிட்டுப் போய் டயாலிசிஸ் செஞ்சுட்டு வந்தேன். ஆனா இந்த நிலையில ஏப்ரல் 2-ம் தேதி காலையில மருத்துவமனைல இருந்து போன் வந்துச்சு. என்கிட்ட பேசினவரு `நாளைக்கு நீங்க டயாலிசிஸ் சிகிச்சைக்கு வர வேண்டாம், எங்க மருத்துவமனைல முஸ்லிம் யாருக்கும் சிகிச்சை அளிக்கக் கூடாதுனு எங்க எம்.டி சொல்லிட்டாரு, அதனால நீங்க மேற்படி சிகிச்சைக்கு வேற மருத்துவமனையைப் பாத்துக்கோங்கன்னு” சொன்னாங்க.

திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை: நான் பதிலுக்கு என் மனைவிக்கு ஆரம்பத்துல இருந்தே உங்க மருத்துவமனையிலதானே பார்த்துட்டு வர்றேன். இப்போ திடீர்னு இப்படி சொன்னீங்கன்னா நாங்க இந்த 144 தடை நேரத்துல எங்க போறதுன்னு கேட்டதுக்கு, இல்ல சார் எங்களுக்கு திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை வந்துருக்கு. அதுல, முஸ்லிம் மதத்தினர் யாரு சிகிச்சைக்கு வந்தாலும் அனுமதிக்க வேண்டாம்னு உத்தரவு போட்ருக்காங்க. உங்களுக்கு மேற்படி சிகிச்சை வேணும்னா நீங்க உங்க மனைவிய அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிப் போன வெச்சுட்டாங்க. இப்ப என் மனைவிக்கு டயாலிசிஸ் பண்ணனும். மருத்துவமனை நிர்வாகம் திடீர்னு இப்படி சொல்லிட்டதால அடுத்து என்ன பண்றதுனு தெரியாம தவிச்சிட்டு இருக்கோம். ஒரு நாள் சிகிச்சை அளிக்கத் தவறினா கூட அவ உயிருக்கே ஆபத்தாயிடும். திருத்தணி பகுதில வேற எங்கயும் இந்த சிகிச்சை கிடையாது. எங்க பகுதில இஸ்லாமிய சமூக மக்கள்தான் அதிகமா இருக்கோம். ஆரம்பத்துல இருந்து சிகிச்சை அளிச்சிட்டு வந்துட்டு இப்ப அவங்க இப்படி எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் புறக்கணிக்கிறதுதான் எதுக்குன்னு தெரியல, குறிப்பாக எங்க மதத்தினருக்கு மட்டும் சிகிச்சை இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னும் தெரியல.

டெல்லில நடந்த ஜமா-அத் மாநாட்டுக்குப் போய்ட்டு வந்துருப்போம்னுதான் எங்களுக்கு சிகிச்சை அளிக்காம புறக்கணிக்குறாங்க. ஆனா எங்க இஸ்லாம் நகர் பகுதியில இருந்து ஒருத்தர் கூட அந்த மாநாட்டுக்குப் போகல. அப்படி இருக்கும்போது உயிர் காக்கும் மருத்துவமனையில இது மாதிரி மத பாகுபாடு பார்ப்பதுதான் மிகுந்த வேதனை அளிக்குது. நான் என் மனைவிய வேற மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுமதிப்பேன். ஆனா எங்களுக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. இன்னைக்கு இப்படி செய்றவங்க நாளைக்கு ஒரு அவசரம்னு போனாலும் இப்படித்தான் எங்களைப் புறக்கணிப்பாங்க. திருவள்ளூர் இணை இயக்குநர்தான் சுற்றறிக்கை அனுப்புனதா சொன்னதால நாங்க இப்ப இணை இயக்குநர்கிட்டயே தகுந்த ஆதாரங்களோடு புகார் மனு அளிச்சிருக்கோம். நடவடிக்கை எடுக்ககுறதா உறுதி அளித்துள்ளார். மேற்கொண்டு அரசு பீகாக் மருத்துவமனை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து என் மனைவிக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க உதவணும்” என்றார்.

அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல்: இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோவிடம் பேசினோம், “பாதிக்கப்பட்டுள்ள ஆஷாவின் தரப்பிலிருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிரான புகார் மனுவைப் பெற்றிருக்கிறேன். மனுவின் மீதான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளேன். அரசுத் தரப்பிலிருந்து அப்படி ஏதும் சுற்றறிக்கைகள் அனுப்பவில்லை. மருத்துவமனை நிர்வாகம் பொய்யான ஒரு கருத்தை பரப்பியிருப்பது முறையல்ல. மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறேன். உடனடியாக விசாரிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “ஆஷா எங்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நாங்கள்தான் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், தற்போது நோய்த் தொற்று பரவலின் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவித்து அரசு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளித்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கும் கூறினோம்[5]. ஆனால், இப்போது அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், நாங்கள் ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்று கூறி சமாளித்தனர்[6].

முஸ்லிம் நகரில் வெறி பிடித்த நாய்கள் கடித்தது: திருத்தணி அருகே ஒரே நாளில் 20 சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்தன. திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்டது இஸ்லாம் நகர். இங்கு, 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இங்கு அரசினர் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இஸ்லாம் நகர் பகுதியில் வெறி நாய்கள் கடந்த இரு நாள்களாக சுற்றி திரிந்தன. புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவியர் மற்றும் தெருவில் விளையாடிய சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்துள்ளன. இதில், ஆதீரா(7), சலீம்(6), மஸ்தான்(11), பாய்ஸ் (11), சலீம்முல்லா(12), முகமது அலி (3), ஆயிஷா (7), பாத்திமா (10) உள்பட 18 மாணவ-மாணவிகள், பாஷா பாய் (32) காதர்பாஷா(56) ஆகிய இருவர் என மொத்தம், 20 பேரை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளன[7]. இதில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெறி நாய்கள் தொடர்ந்து இஸ்லாம் நகரில் சுற்றித்திரிவதால், புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் கம்புடன் சென்றனர். அதே போல் மாலையும் கம்புகளுடன் வீட்டுக்குத் திரும்பினர். வெறி நாய்களைப் பிடிக்க வேண்டும் என ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இஸ்லாம் நகர் மக்கள் கூறுகின்றனர்[8]. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, இஸ்லாம் நகரில் சுற்றித்திரியும் வெறி நாய்களைப் பிடித்து காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணி : வீரகநல்லுார் ஊராட்சியில், 28 நாட்களாக போடப்பட்டிருந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது: திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இஸ்லாம் நகரில் வசிக்கும், 59 இஸ்லாமியர்கள் சாணை பிடிக்கும் தொழிலுக்காக, மார்ச் மாதம், கேரளாவுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தனர்.இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, இஸ்லாம் நகர் பகுதியில் வசித்த, 59 குடும்பத்தினரை தனிமைப்படுத்தினர்.மேலும், வெளியாட்கள் யாரும் செல்லாதவாறு வருவாய் துறை மற்றும் சுகாதார துறையின் சார்பில், நுழைவு வாயிலில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தனிமைப்பட்டவர்களுக்கு, 28 நாட்கள் முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர், இஸ்லாம் நகர் முழுதும் வீடு வீடாகச் சென்று, வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டது [9]. அதை தொடர்ந்து, திருத்தணி கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உத்தரவின்படி, இஸ்லாம் நகர் சுற்றிலும் மூடப்பட்ட எல்லைகள் மற்றும் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன[10].

- முஸ்லிம்கள் இவ்வாறு தனிடயாக சேர்ந்து, இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் என்றெல்லாம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- எல்லோரையும் போல, சேர்ந்து இல்லாமல், இவ்வாறு தனித்திருக்க வேண்டிய, தம்மைத் தனித்துக் காட்டிக் கொள்ளக் கூடிய போக்கு தான் தெரிகிறது.
- இவ்வாறு செய்வதால் தான் மற்றவர்களுக்கு, நிச்சயமாக மனங்களில் சந்தேகம், அச்சம், பீதி, கலவரம் முதலியவை வருகின்றன.
- இந்த கொரோனா காலத்தில், யாரிடத்தில் தொற்று உள்ளது, இல்லை குடும்பத்தில் உள்ளது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
- முஸ்லிம்கள் இல்லாதவர்களே தனிமைப் படுத்திக் கொண்டு வாழும் தனிமனிதர்கள், குடும்பங்கள் இருக்கின்றன.
- ஆகவே, இங்கு “முஸ்லிம்” என்ற பிரச்சினையை கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை.
- சிகிச்சைப் பொறுத்த வரையில், இருதரப்பிலுமுள்ள விவகாரங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.
- செக்யூலரிஸம் என்றபோது, எல்லா வழிகளிலும் அது கடைபிடிக்கப் படவேண்டும்.
© வேதபிரகாஷ்
01-05-2020

[1] தினத்தந்தி, 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைப்பு !!, 29 மார்ச். 2020
[2] https://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei/144+tadai+utharavai+meeriya+kiramangalukku+boleesar+marrum+athikarikal+seel+vaippu-newsid-174710006
[3] தினகரன், ஊரடங்கு உத்தரவை மீறிய கிராமங்களுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி, 2020-03-29@ 10:50:46
[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575209
[5] விகடன், நோயாளியைப் புறக்கணித்த திருத்தணி தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை உறுதி!,சே. பாலாஜி, Published:05 Apr 2020 6 PM Updated:05 Apr 2020 6 PM
[6] https://www.vikatan.com/government-and-politics/healthy/private-hospital-deny-treating-patients-in-thiruttani?artfrm=v4
[7] தினமணி, ஒரே நாளில் 20 பேரைக் கடித்த வெறி நாய்கள், By DIN | Published on : 25th January 2018 04:08 AM
[8] https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/jan/25/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2850692.html
[9] தினமலர், ஊராட்சியில் சோதனைச்சாவடி அகற்றம், Added : ஏப் 27, 2020 22:49
[10]https://www.dinamalar.com/news_detail.asp?id=2529164&fbclid=IwAR2n0nyehih1wCuYMFTyEXh20IVD-zM5k4ZwlQ1hFVuj7fsBDy1tb6DBnaU
பிரிவுகள்: அச்சம், அடையாளம், அனுமதி, ஆட்கொல்லி, இஸ்லாம் நகர், உயிர்கொல்லி, கரோனா, கரோனா ஜிஹாத், கரோனா தொற்று, கேரளா, சந்தேகம், சிகிச்சை, ஜமா அத், ஜமாத், தனிமைப்படுத்துதல், தப்லீக், தப்லீக் ஜமாஅத், பாரபட்சம், முஸ்லிம் நகர், வீரகநல்லூர், வெறிநாய்கள்
Tags: இறப்பு, இஸ்லாம், இஸ்லாம் நகர், குவாரென்டைன், கொரோனா, கொரோனா வைரஸ், கொள்ளை நோய், சிகிச்சை, தனிமைப் படுத்துதல், தனிமைப்படுத்துதல், தப்லிக், தப்லிக் ஜமாத், தப்லீக், தொற்று, தொற்று நோய், பரவும் நோய், பலன், முஸ்லிம், முஸ்லிம் நகர், முஸ்லிம்கள், வீரகநல்லூர், வெறிநாய்கள், வைரஸ் கொரோனா
Comments: Be the first to comment
மே 9, 2018
பிணத்தை வைத்து மதவாதம் செய்தல் – மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரை – பெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்–முஸ்லிம்” கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி?

முகமதியர், முஸ்லிம், துலுக்கர் – இவர்களின் போலித்தனம்: இஸ்லாமியர் ஏதோ தாங்கள் ஆகாயத்திலிருந்து நேரே இறங்கிவிட்டவர் மாதிரி பாவித்துக் கொண்டு பேசுவர். முகமதியரோ தங்களது 1300 ஆண்டுகள் பெருமையை வர்ணிப்பர். முஸ்லிம்களோ தாங்கள் தான் ஒட்டுமொத்த மனித இனத்தின் எஜமானர் என்பது போல எதேச்சதிகார மதவாதத்தை பிரகடனம் செய்வர். ஆனால், துலுக்கரின் மனங்களில் என்ன இருக்கிறது என்பது ஜிஹாதி குரூர-கொடூர குண்டுவெடிப்புக்காரர்கள், கொலைகாரர்கள் மூலம் 1300 வருடங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அறிவுஜீவித் தனத்துடன், “தலித்-முஸ்லிம்” கூட்டு, ஒற்றுமை மற்றும் ஓட்டு வங்கி என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டிருப்பர். எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பெண்கள் என்று எல்லா ஒடுக்கப்பட்ட, அமுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இவர்களை சேர்த்துவிட்டால், இந்தியாவில் “இந்துக்கள்” 15-25% சதவீதம் தான் என்றும் கணக்குப் போடும் கில்லாடிகள் இருக்கின்றனர்[1]. அந்நிலையில் தான், அவர்களது போலித் தனத்தை “பிண அரசியல்” வெளிப்படுத்துகிறது. இன்றைக்கு வன்னியம்மாள் பிணம், மசூதி தெருவு வழியாக செல்லக் கூடாது என்ற மதவெறி-மிருகங்கள் தான், 2009ல் புதைத்தப் பிணதையே தோண்டியெடுத்துள்ளனர். இனி அந்த விவரங்களை கவனிப்போம். கருணாநிதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் [2006-2011] அந்த குரூரம் நடந்தது.

பாகிஸ்தானில் நடந்து வருவது சென்னையில் 2009ல் நடந்தது: அஹமதியாக்கள் பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு இஸ்லாமிய பிரிவாகும். நபியின் தூதர்கள் மீண்டும் தோன்றுவார்கள் எனப் பல விசயத்தில் இவர்கள் சுன்னி முஸ்லீம்களுடன் வேறுபட்டிருக்கிறார்கள். ஷியாக்களும் “மெஹதி” என்பவரை எதிர்பார்த்துள்ளார்கள். ஒரிறைத் தத்துவம், ரமலான் நோன்பு, மெக்கா புனிதப்பயணம் என இப்படி ஒற்றுமைகள் இருந்தாலும் மற்ற முஸ்லீம்கள் இவர்களை “காபிர்” என்று அறிவித்து புறக்கணிக்கிறார்கள். பாகிஸ்தானில் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று அறிவிக்கப்பட்டனர். அதனால், அவர்கள் தொடந்து தாக்கப்படுவதுடன், அவர்களது மசூதிகளும் இடிக்கப் பட்டன. அவர்களது பிணங்களும் மற்ற முஸ்லிம்களின் பபரிஸ்தானில் புதைக்க அனுமதி இல்லை[2]. புதைத்தாலும், தோண்டி எடுத்து விடுவர்[3]. அதே நிலைதான், மே 2009ல் சென்னையில் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், இஸ்லாமிய ஆட்சியில், அஹ்மதியா முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன[4]. சமீபத்தில் [மார்ச் 2018] கூட பாகிஸ்தான் நாளிதழில், இது எடுத்துக் காட்டப்பட்டது[5]. இனி சென்னை பிண விவகாரத்தைப் பார்ப்போம்.

மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது (01-06-2009): சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். திடீரென்று மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முஸ்லீம்களின் கபரிஸ்தானத்தில் மே 31, 2009 அன்று மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள். இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது. அதாவது இந்துக்கள் “காபிர்கள்” என்பதால், அங்கு புதைக்கப்பட்டது!

அஹ்மதியா முஸ்லிம் ஜமா–அத் தலைவர் பஷாரத் அஹ்மது கூறியது[6]: சென்னை அஹ்மதியா முஸ்லிம் ஜமா-அத் தலைவர் பஷாரத் அஹ்மது ஞாயிற்றுக்கிழமை செய்திய்யாளர்களிடம் கூறியது, “அஹ்மதி முஸ்லிம் சமயத்தை சேர்ந்த மும்தாஜ் பேகம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். உவரது உடலை ஆதம்பாக்கம் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முதலில் அனுமதியளித்த அந்த நிர்வாகம் திடீரென மறுத்தது. இதைத் தொடர்ந்து ராயப்பேட்டை மயானத்தில் முறையாக அனுமதி மெற்று மே 31ல் அடக்கம் செய்தோம், அப்பொழுது சிலர், ‘அஹ்மதி முஸ்லிம்கள், முஸ்லிம்களே அல்ல’ என்று கூறி அடக்கம் செய்ய எதிர்ப்பு தெர்வித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அவர்கள் உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறியதைத் தொடர்ந்து நாங்கள் நிம்மதியடைந்தோம். அந்த பெண்ணின் உடல் தோண்டியெடுக்கப் பட்டு கிருஷ்ணாம்பேட்டை இந்துக்கள் மயானத்தில் அடக்கம் செய்யப் பட்ட தகவலை பத்திரிக்கைகளைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொண்டோம். இது மனிதாபிமானன் அற்ற செயல்,” என்றார் அவர். அதனால், அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்[7].

அல்லா சென்னை காஜியை தண்டித்தாரா?: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப் சில நாட்களில் பதவி விலக நேர்ந்தது. அவர் பதவி விலக நேர்ந்ததற்கு, முஸ்லிம் இயக்கங்களில் தீவிரமான கருத்து வேறுபாடுகளும், அரசியலும் இருந்தது. காஜியோ அரசு அதிகாரி என்னை ஏமாற்றி விட்டார், என்றார்[8]. “வக்ப்ஃ போர்ட்” மாற்றியமைக்கப் படுவதால், அவ்வாறு செய்யப்பட்டது, என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப் பட்டது. அஹ்மதியா காஜி, “அல்லா தான் அவருக்கு தண்டனை அளித்தார்,” என்றார். இந்த விவரங்களை, இந்த வீடியோவில் காணலாம்[9]. ஈவு-இரக்கம் இல்லாமல், ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்த பிறகும், தோண்டியெடுக்க ஆணையிட்டது, அந்த காஜியின் ஞானத்தை கேள்விக் குறியாக்குகிறது. எல்லோருமே குரான், அல்லா பெயரைச் சொல்லி இத்தகைய மனிதத்தன்மையெற்ற காரியங்களை செய்தால், யார் பொறுப்பு என்பதனை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அஹ்மதியா இறையிலும், அடிப்படைவாத–தீவிரவாத இஸ்லாமும்: இஸ்லாமிய நாடுகளில் “நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்” என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாகிஸ்தானில் அஹமதியாக்கள் கொல்லப்படுவதும், அந்நாட்டில் முஸ்லீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்தப் பட்டுள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற முஸ்லீம்கள் அஹமதியா முஸ்லீம்களை ”காபிர்கள்” என்று தான் நடத்துகிறார்கள்[10]. மொஹம்மது நபியையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இஸ்லாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்[11]. பெண்களுக்கு எல்லா உரிமைகள் இருக்கின்றன என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

சகிப்புத் தன்மை அற்ற சென்னை முஸ்லிம்கள்: இஸ்லாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம். 2009லேயே, சென்னை முகமதியர் இப்படி இருந்தார்கள் என்றால், பத்தாண்டுகளில், 2018ல் – அவர்களது மனப்பாங்கு எப்படி வெறிகொள்ளும். அதுதான், ஐசிஸ்-க்கு ஆள் எடுப்பது, அனுப்பவது என்ற நிலைக்கு வந்துள்ளது, சென்னையிகேயே அத்தகைய பயங்கரங்கள் நடந்துள்ளன. அதனால் தான், வன்னியம்மாள் உடலைக் கூட “தங்கள் தெரு” வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என்று கலவரம் செய்துள்ளார்கள்.

ஜிஹாதி இஸ்லாம் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை: முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள். இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இஸ்லாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள், என்பதெல்லாம் பொய். ஏனெனில், உழைத்து முன்னேறி, சமூகத்தில் அந்தஸ்த்துடன் மற்றவர் போன்று வாழ வேண்டும் என்றால், அடிப்படைவாத, மதவாத, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள், நேரிடையாகவோ-மறைமுகமாகவோ அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது தெருகிறது. குறிப்பாக பெற்றோர், உற்றோர், மற்றவர் தடுக்காமல் இருப்பதோடு, பன உதவியும் செய்து வருகிறார்கள்.
© வேதபிரகாஷ்
09-05-2018

[1] “தலித்” போர்வையில், முகமதிய சஞ்சிகைகள் இந்த பொய்யை அதிகமாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றன.
[2] Express Tribune, No place for Ahmadi body in a Muslim graveyard, Pakistan, Published: November 2, 2010.
[3] https://tribune.com.pk/story/71177/no-place-for-ahmedi-body-in-a-muslim-graveyard/
[4] Daily Times, Forbidden truth: Ahmadis in the social fabric of Pakistan, Pakistan, by Busharat Elahi Jamil, MARCH 13, 2018.
[5] https://dailytimes.com.pk/214057/forbidden-truth-ahmadis-in-the-social-fabric-of-pakistan/
[6] தினமணி, அஹ்மதி முஸ்லிம்களுக்கு, தனி மயானம் அமைக்க கோரிக்கை, சென்னை, ஜூன். 8, 2009.
[7] Deccan Chronicle, Jamaath seeks burial ground, Chennai, Jume 11, 2009.
[8] Deccan Chronicale, Official cheated me: Chief Kazi, June 6, 2009.
[9] https://www.youtube.com/watch?v=VrWFxK-SXss
[10] வினவு, அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!, இளநம்பி, –புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009, பக்கம்.9.
[11] https://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/
பிரிவுகள்: ஃபத்வா, அசிங்கப்படுத்திய முகமதியர், அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அல்லா, அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அல்லாஹ், அவமதிக்கும் இஸ்லாம், குரான், சட்டம், சட்டம் மீறல், சரீயத், சென்னை, ஜனநாயகம், ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜிஹாதி, தலாக், தலாக்-தலாக்-தலாக், தலித் போர்வை, தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், தலிபான், துலுக்க, துலுக்கன், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தௌவீத் ஜமாத், நபி, பத்வா, பர்கா, பள்ளி வாசல், பாகிஸ்தான், பாஜக, பாட்டி, பிண ஊர்வலம், புதைத்தல், பெண், பெண் உரிமை, பெரியகுளம், போஹ்ரா, மசூதி, மசூதி இடிப்பு, மசூதி தெரு, மதகலவரம், மதரஸா, மதரஸாக்கள், மதவாதம், மதவிரோதி, மதவெறி, மனித உயிர், மனித நேயம், முகமது, முஸ்லிம் தெரு, முஸ்லிம் பிரச்சினை, முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், மெஹந்தி, மொஹம்மது, ஷரியத், ஷியா, ஷிர்க்
Tags: அடிப்படைவாதம், அஹ்மதி, அஹ்மதி முஸ்லிம், அஹ்மதியா, இடுகாடு, கபரிஸ்தான், சவம், சுடுகாடு, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாத், தீவிரவாதம், தோண்டியெடுத்தல், பயங்கரவாதம், பிணம், மயானம், மறுபடி புதைத்தல்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 26, 2016
கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

அபு நைஸா மற்றும் அபு அல்–ஸ்வீடி பெண்களுடன் தொடர்பு கொண்டு சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஐசிஸ்ஸில் சேர்ந்தது: அல்-மக்ரபி 2015ல் அபு பக்கர் அல்-பாக்தாதி [Abu Bakr al-Baghdadi] என்பவன் இஸ்லாமிய அரசுக்கு [the land of Islamic State of Iraq and Syria (ISIS)] குடியேறி, அந்நாட்டிற்காகப் போராடுமாறு அழைப்பு விடுத்தான். +2 படித்து கடைகள் மற்றும் ஆடையுற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த சுபஹனி ஹாஜா மொஹிதீன் [Subahani Haja Moideen] இதற்கு ஈர்க்கப்பட்டான். திருமணமாகியும், இணைதளத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். ஸ்வீடன் நாட்டு பெண் ஒருத்தி உம்ரா / ஹ்ஜ் யாத்திரை செய்வது எப்படி என்று சந்தேகம் கேட்டபோது, அவளுடன் நண்பன் ஆனான். அதாவது “ஹஜ்-யாத்திரை” செல்வது என்பது “மோசுலுகுச் செல்வது” என்பது போன்ற பரிபாஷைகளை வைத்துள்ளனர் போலும். மேலும் பெண்களை வைத்து ஆட்களைப் பிடிப்பதும், செக்ஸ்-தூண்டில் போட்டு பிடிக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இதே போல அபு நைஸா அல்-மக்ரபி [Abu Naisha al Maghrabi] மற்றும் அபு அல்-ஸ்வீடி [Abu al-Swedi] என்ற பெண்களுடன் தொடர்பு துரித தொடர்பு சேவை மூலம் [instant messaging app Telegram] கிடைத்தது. துருக்கிக்கு வந்து விட்டால், அங்கிருந்து ஐசிஸ் நாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்வதாகவும், அங்கு அவனுக்கு சகல வசதிகளுடன் வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தனர்.

ஹஜ் யாத்திரை செல்கிறேன் என்று மோசுலுக்குச் சென்றது: அதன்படியே, மொஹித்தீன் தனது வீட்டை ரூ.18 லட்சங்களுக்கு விற்ருவிட்டு, இஸ்தான்புல்லிற்கு பறந்தான். வீட்டில் ஹஜ் யாத்திரைக்கு செல்வதாக கூறிக்கொண்டான். தாய்-மனை எல்லோரும் சந்தோஷமாகத்தான் அனுப்பி வைத்தனர் போலும்! இஸ்தாபுல்லில் ஒரு வீட்டில் தங்க வைத்தபோது, தன்னைப் போன்று மொரோக்கோ, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வந்தவர்களை சந்தித்தான். அங்கிருந்து துருக்கி சிரியா எல்லையில் இருக்கும், ரக்தாத் பகுதியில் உள்ள டெல் அபயது [Tell Abyad on Turkey-Syria border in Raqqa] என்ற நகரத்தை அடைந்தனர். அவர்களுக்கு இஸ்லாம், ஜிஹாத், போர்முறை முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட்டது. பயிற்சியும் அளிக்கப்பட்டது. பிறகு, சிரிய படைகளுடன் போரிட அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போரில் குண்டு போட்டபோது, தன்னுடன் இருந்த இருவர் கருகி உயிரிழந்தனர். இதைக் கண்டதும், மொஹித்தீன் அலறிவிட்டான். சாவின் கொடூரம், போரின் பயங்கரம் முதலியவற்றை புரிந்து கொண்டான். இதனால் தான் அவன் திரும்பி ஓடி வந்து விட்டான் என்று கூறப்படுகிறது.

மோசுல்லுச் சென்று திரும்பியவன் “ஹாஜா” எப்படி ஆவான்?: சுபஹனி ஹாஜா மொஹிதீன் என்று குறிப்பிடுவதே கேவலமானது, மோசமானது கூட, ஏனெனில், அவன் ஹஜ்ஜிற்கு சென்று திரும்பவில்லை. அதனால் அவனை “ஹாஜா” என்று சொல்வதே தவறு. மோசுலுக்குத்தான் சென்று திரும்பியிருக்கிறான். திரும்பி ஓடி வந்தான் என்பதைவிட, அவன், வேறொரு காரணத்திற்காகத்தான் வந்துள்ளான் என்பது தெரிகிறது. ஏனெனில், அவன் தொடர்ந்து, ஐசிஸுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு தீவிரவாதத்திற்காக வேலைசெய்து வந்தது, அவன் “டபுள்-ஏஜென்ட்” அல்லது ஐசிஸ்-உளவாளி என்ற முறையில் செயல்படுவதாக தெரிய வந்தது. ஒருவன் எப்படி இருந்தாலும், ஐசிஸுக்கு உதவுகிறான் என்றால் அவனை, பட்டியிலில் வைத்துக் கொண்டு கவனிக்கப்படுவார்கள். தீவிரவாதியாகி விட்டப் பிறகு, அத்தொழிலில் ஈடுபடமாட்டான் என்பதெல்லாம் மாயை. ஆகவே, இந்திய தூதரகம், ஐ.பி, முதலியவற்றை ஏமாற்றவே அத்தகைய பொய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவனைப் போன்று, இன்னும் ஏத்தனை உளவாளிகள், ஐசிஸ் ஏஜென்டுகள் உள்ளனர் என்று தெரியவில்லை.

தமிழக போலீஸாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஆச்சரியமாக உள்ளது: மேலும் தமிழக போலிஸார் அவன் சிரியாவில் போரிடவில்லை என்றெல்லாம் வக்காலத்து வாங்கியதும் வியப்பாக இருந்தது[1]. ஒருவேளை, வழக்கம் போல தீவிரவாதத்தில் கூட “செக்யூலரிஸ” முறைகளை கையாளுகிறார்கள் போலும். சென்னையிலேயே ஐசிஸ்காரகள் பிடிப்பட்ட பிறகு, மெத்தனமாக இருப்பதும் வேடிக்கைதான். இஸ்தான்புல் இந்திய தூதரகத்தில் கூட மொஹித்தீன் பொய் சொல்லியிருக்கிறான். தான் ஒரு சுற்றுலா பயணி என்றும், பாஸ்போர்ட் மற்றும் உடமைகள் காணாமல் போய்விட்டன என்று கூறிக் கொண்டு, திரும்பிச் செல்ல அவசர சான்றிதழ் பெறுறுள்ளான்[2]. இதன்படிதான் செப்டம்பர் 22, 2015 அன்று மும்பைக்கு வந்து, கடையநல்லூருக்குச் சென்றுள்ளான். ஐ.பி இவ்வாறான “அவசர சான்றிதழுடன்” திரும்பிவரும் நபர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையும் விட்டது. ஆனால், தமிழக போலீஸ் உயரதிகாரிகள், அவன் சிரியாவுக்குச் சென்று திரும்பியது எல்லாம் தெரியாது என்று சாதிக்கின்றனர்[3]. இஸ்தான்புல் தூதரகம் கூட தமிழக போலீஸாருக்கு விவரங்களை அனுப்பியிருக்கலாம்.

சுபஹனி மொஹிதீனின் பாரிஸ் குண்டுவெடிப்பவர்களின் தொடர்புகள்: தமிழக முஸ்லிம் இளைஞனுக்கும் பாரிஸ் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் திடுக்கிட வைக்கின்றன. ஆனால், அவனை, தமிழகத்தில் பெற்றோர், உற்றோர், மற்றோர் போற்றி வளர்ந்துள்ளனர் என்பது, அவர்களது ஜிஹாதி மனப்பாங்கைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒருவேளை இவர்கள் தமது அரசியல், பணம், செல்வாக்கு வைத்து, இவனது நடவடிக்கைகளை மறைத்திருப்பார்கள் போலும்! அதனால் தான், தமிழக போலீஸார் தமக்கு தெரியாது என்கிறார்கள். ஐசிஸ் இஸ்லாத்திற்கு எதிரி என்று சில நேரங்களில் சில முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அவர்கள் ஆதரவு கொடுப்பது தான் அதிகமாக உள்ளது என்பது, இத்தகைய ஒத்துழைப்புகளில் வெளிப்படுகிறது. திருநெல்வேலி, கடைய நல்லூரில் கைதான, மொஹிதீம் தனக்கு பாரிஸ் குண்டுவெடிப்பில் பங்கு கொண்ட அப்துல் அஹமது அபாவைத் [Abdelhamid Abaaoud], ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி [Omar Ismail Mostefei] மற்றும் சலாஹ் அப்சலாம் [Salah Abdeslam] முதலியோரை சந்தித்துள்ளதாக ஒப்புக் கொண்டான்[4]. அப்துல் அஹமது அபாவைத் நவம்பர் 2015ல் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். சலாஹ் அப்சலாம் மார்ச் 2016ல், மோலன்பெக், பெல்ஜியத்தில் [Molenbeek, Belgium] பிடிபட்டு, பாரிஸ் போலீஸ் காவலில் உள்ளான். ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி பற்றிய விவரங்களை சொல்ல அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது. வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை.
© வேதபிரகாஷ்
26-10-2016

[1] Police officers from Tamil Nadu said Moideen did not take part in any armed conflict either in Mosul or Raqqa, because he was physically inept and also because he questioned IS strategies.
http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839
[2] At the Indian embassy, Moideen, too, pretended to be an Indian tourist who had lost his passport and luggage. The Indian embassy, after checking his background, issued him an Emergency Certificate that allowed him to travel back. He returned on September 22 to Mumbai and headed to his village in Kadayanallur in Tamil Nadu’s Tirunelveli district. Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839
[3] Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839
[4] DNA-Daily News & Analysis, ‘Indian ISIS operative Subahani Haja Moideen knew Paris bombing accused, Sun, 23 Oct 2016-03:30pm , PTI.
பிரிவுகள்: அழிவு, இந்தியா, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், கடையநல்லூர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சுபஹனி மொய்தீன், சுபஹனி மொஹித்தீன், ஜமாத், ஜிஹாதி, மொய்தீன், மொஹித்தீன், Uncategorized
Tags: இஸ்லாம், இஸ்லாம் ஜிஹாதி, உம்ரா, ஐசில், ஐசிஸ், கடையநல்லூர், சுபஹனி, சென்னை, ஜிஹாத், தமிழ்நாடு, திருநெல்வேலி, துருக்கி, மும்பை, மொய்தீன், மொஹித்தீன், மோசுல், ஹஜ், ஹாஜா, ஹாஜா மொய்தீன்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 13, 2016
ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

கோயம்புத்தூர் தமிழ்நாடு–கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர் என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].
© வேதபிரகாஷ்
13-10-2016

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.
[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home
[3] விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).
[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.
[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.
[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art
[7] மாலைமலர், ஐ.எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09
[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf
[9] தினமணி, ஐ.எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM
[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478
[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST
[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf
பிரிவுகள்: செல்போன், ஜமாத், ஜாகிர் நாயக், ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ் ஜிஹாதி, தீவிரவாதம், தீவிரவாதி, துபாய், துப்பாக்கி, துருக்கி, Uncategorized
Tags: இணைதள ஜிஹாத், இஸ்தான்புல், இஸ்லாம் ஜிஹாதி, எர்ணாகுளம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐசில், ஐசிஸ், கடையநல்லூர், குண்டு, கோயம்புத்தூர், சிரியா, ஜிஹாதி, துருக்கி, பேஸ்புக், மொசூல், ரசாயனம், விசா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன? ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

இசுலாமியத் தீவிரவாதம் என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST
[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html
[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அமைதி டிவி, அரேபியா, அல் - உம்மா, அல் - கொய்தா, அல்லா, அல்லா பெயர், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சவுதி, சவுதி அரேபியா, சிமி, சிரியா, சுன்னத், சுன்னத் ஜமாஅத், சுன்னத் ஜமாத், சுன்னி, சூபி, சூபித்துவம், ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜவாஹிருல்லா, ஜாகிர் நாயக், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், பீஸ் டிவி, Uncategorized
Tags: அமைதி டிவி, இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குரான், கொலை, சுன்னி, செக்யூலரிஸம், ஜாகிர் நாயக், ஜிஹாத், தாலிபான், பரவும் தீவிரவாதம், பீஸ் டிவி, மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர். 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].
- மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
- எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
- மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
- ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
- மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
- இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
- ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
- வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
- ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
- முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
- இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி
இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது, பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:
சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்
ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்! |
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610
[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST
[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html
[5] http://adiraipirai.in/?p=26723
[6] http://adiraipirai.in/?p=26767
[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அல் - உம்மா, அல் - காய்தா, அல்லா, இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இராக், இரான், இறைதூதர், இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், கிலாபத், கிலாபத் இயக்கம், சவுதி, சவுதி அரேபியா, சூபித்துவம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜாகிர் நாயக், Uncategorized
Tags: ஆதரவு, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், எதிர்ப்பு, எஸ்.டி.பி.ஐ, காபிர், காஷ்மீரம், குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சென்னை, சேப்பாக்கம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முஜாஹித்தீன், முரண்பாடு, முஸ்லிம், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

தமிழகத்தில் ஜாகிர் நாயக் எதிர்ப்பு–ஆதரவு: ஜாகிர் நாயக்கை பொதுவாக இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஒசமா பின் லேடனை ஆதரித்தது, எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்றது போன்ற விவகாரங்களூக்காக நாயக் தனிமைப் படுத்தப் பட்டாலும், உள்ளூர எல்லா முஸ்லிம்களும் ஆதரித்துதான் வந்தனர். இந்தியாவில் நடத்தப் பட்ட கூட்டங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தன. சென்னையில், கிருஷ்ணா கார்டன்ஸ் (திருமங்கலம்), காமராஜர் அரங்கம், இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகம் (ஈஞ்சம்பாக்கம்) என்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இந்துக்களுக்கு குறி வைத்து, அவர்களை வேண்டி, நட்புரீதியில் “வற்புறுத்தி” கலந்து கொள்ள செய்தனர். அந்த கூட்டங்கள் முஸ்லிம்களுக்குட்தான் பிரமிப்பாக இருந்தது. தமிழக முஸ்லிம் இயக்கத்தினரின் தலைவர்களுக்கு புளியைக் கரைத்தது. பொறாமையாகக் கூட இருந்தது, நல்ல வேளை, தமிழில் பேசவில்லை என்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டனர். இருப்பினும், தமிழில் அவரது ஆதரவாளர்கள் நாயக்கின் புத்தகங்கள் வெளியிட்டனர்.

பீஸ் டிவி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது (09-07-2016): நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த ஜூலை 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப் பட்டன. வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது[1]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது[2]. நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது[3]. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

பீஸ் டிவியை அடுத்து, பீஸ் மொபைல் போன்களுக்குக்கும் தடை (14-07-2016): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது. ‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார். ‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது[4]. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஆனால், ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஆர்பாட்டம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மீது மகாராஷ்டிர அரசும், மத்திய பாஜக அரசும் கடுமையான அவதூறு பரப்பி வருவதாகவும்[5], இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து நாளை (ஜூலை 16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாகி தெரிவித்துள்ளார்[6].

உலகத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாத, ஜிஹாத் தீவிரவாத செயல்கள் என்ன நடந்தாலும் போராட்டம்–ஆர்பாட்டம் இல்லை: 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மொஹம்மது லுஹ்வாஸ் ஃபூலெல் (31) என்ற முஸ்லிம் பாரிசில் லாரியை வெறித்தனமாக மக்கள் கூட்டத்தினுள் ஓட்டிச் சென்று ஒரு முஸ்லிம் குழந்தைக்களையும் சேர்த்து 84 பேரைக் கொன்றுள்ளான். குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடான, துருக்கியில் நடந்துள்ள ராணுவப் புரட்சியில் 100க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டு தீவிரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தோர் பலர் மருத்துமனைக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். கேரளாவில் இளம் வயது முச்லிம் ஆண்கள்-பெண்கள் ஐஎஸ்சில் சேர்ந்து விட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உம், அவர்கள் அசையவில்லை.

ஜாகிர் நாயக்கை ஆதரித்து நடத்திய போராட்டம் (16-07-2016): இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சென்னையில், “ஜாகிர் நாயக்கை தீவிரவாதி போன்று சித்திரப்பதை” கண்டித்து 500 பேர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்[7]. இப்பொழுதுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [Indian Union Muslim League (IUML)], தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK)] மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி [the Social Democratic Party of India] முதலியன இந்த எதிர்ப்பு-போராட்டத்தில் பக்குக் கொண்டுள்ளன. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது[8].

ஜாகீர் நாயக் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை: தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது[9]: “உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார். எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது[10]. ஆனால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று குறிப்பிடவில்லை.
© வேதபிரகாஷ்
17-07-2016
[1] தினத்தந்தி, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’யை வங்கதேசம் தடை செய்தது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10,2016, 3:55 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10, 2016, 3:55 PM IST.
[2] http://www.dailythanthi.com/News/World/2016/07/10155526/Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV.vpf
[3] தி.இந்து, மத போதகர் ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு, Published: July 14, 2016 21:21 ISTUpdated: July 15, 2016 10:22 IST
[4] http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article8850254.ece
[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாகிர் நாயக் மீது அவதூறு… தமிழக இஸ்லாமிய அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்– வீடியோ, By: Jayachitra, Published: Friday, July 15, 2016, 15:05 [IST].
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/muslim-organisations-protest-258114.html
[7] The News minute, Islamic groups protest in Chennai, demand govt cease portraying Zakir Naik as terrorist, TNM Staff| Saturday, July 16, 2016 – 13:57
[8] தினத்தந்தி, ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST
[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/17002835/Islamic-groups-protest-in-Chennai-demand-govt-cease.vpf
[10] நியூஸ்.7.செனல், மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் ஆர்பாட்டம், July 16, 2016.
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அமைதி டிவி, அரேபியா, அல் - உம்மா, அல் - கொய்தா, அல் ஹதீஸ், அல்லா, அல்லா பெயர், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இறை தூதர், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐஸில், காஃபிர், காஃபிர்கள், சவுதி, சவுதி அரேபியா, ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜவாஹிருல்லா, ஜாகிர் நாயக், ஜிஹாதித்தனம், ஜிஹாத், டாக்கா, டாக்கா தாக்குதல், தமிழ் முஸ்லிம், பீஸ் டிவி, முஸ்லிம், வங்காள தேசம், வங்காளதேசம், வங்காளம், விளம்பரம், வெடிகுண்டு, ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized
Tags: அமைதி டிவி, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சேப்பாக்கம், ஜாகிர் நாயக், ஜிஹாத், தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு, தாலிபான், பீஸ் டிவி, முஸ்லிம்கள், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், வங்கதேசம், ஷியா
Comments: Be the first to comment
பிப்ரவரி 4, 2016
தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது, ஒரே பெஞ்சில் உட்காரக் கூடாது – இஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமா, இல்லையா?

தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது?: தர்காவுக்குள் நுழைய பெண்கள் அனுமதி கோருவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குரு உமர் அகமது இலியாசி தெரிவித்துள்ளார்[1]. பெண்கள் வீட்டில் தொழுகலாம். ஆனால் சமாதி மற்றும் தர்காவுக்கு வர அவர்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை என்றார்[2]. ஆனால், டாக்டர் ஜீனத் சவுகத் அலி கூறுவதாவது,[3] “இஸ்லாமிய மதநூல்களில் எங்குமே பெண்கள் சமாதிகளுக்குச் செல்லக் கூடாது என்றில்லை.மொஹம்மது நபியே சமாதிகளுக்கு செறுள்ளது மட்டுமல்லாது, மற்றவர்களையும் ஆண்-பெண் வித்தியாசம் பாராட்டாமல் செல்லுமாறு பணித்தார். இஸ்லாத்தில் ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன……நபி சொல்லும் இரண்டு காரணங்கள் – இறைப்பை நினைப்பூட்டுகிறது மற்றும் இறந்தவர்களுக்காக தொழுகின்றோம். நபியின் மனைவியான ஹஜரத் ஆயிஸா சித்திக், தனது சகோதரரான அப்த் அர்-ரஹ்மானின் சமாதிக்கும், நபியின் மகளான ஹஜரத் பாத்திமா ஜெஹ்ரா தனது மாமாவான ஹஜரத் ஹம்ஜாவின் சமாதிக்கும் செல்லும் வகத்தைக் கொண்டிருந்தனர்”. இவர் உரையாடல், சமரசம் மற்றும் பாலியில் நீதி முதலியவற்றிற்கான உலக இஸ்லாமிய படிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்[4].

சபரிமலை தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்தது ஏன்?: மும்பையில் உள்ள, ஹாஜி அலி தர்காவில், பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மும்பை ஐகோர்ட், சபரிமலை வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட முடிவு செய்து உள்ளது[5]. இந்திய நீதிமன்ரங்களில், பென்களைப் பொறுத்த வழக்குகள் இவ்வாறு சேர்த்து விசாரிக்கும், நீதி வழங்கும் போக்கில் இருந்ததில்லை. குறிப்பாக ஷாபானு வழக்கு, அதன் தீவிரத்தன்மை, ராஜிவ்காந்தி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முதலியவை எல்லாம் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் எப்பொழுதுமே, தங்களுக்கு தங்களது ஷரீயத் சட்டம் தான் செல்லுமே தவிர மற்ற சட்டங்கள் செல்லாது என்று அடிப்படைவாததுடன் இருந்து வருகின்றனர். இதனால் தான் ஷாபானு என்ற அந்த வயது முதிர்ந்த பெண்மணியே கஷ்டப்பட நேர்ந்தது. ஆகையால், சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதும், தர்காவுக்குள் நுழைவதும் ஒரே பிரச்சினையாகக் கருதுவது, செக்யூலரிஸ முரண்பாடே ஆகும். என்னத்தான் பேசினாலும், இந்தியாவில் சட்டதிட்டங்கள், நீதிமுறைகள், நீதிமன்ற நியதிகள் முதலியவை செக்யூலரிஸ மயமாக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கு முஸ்லிம்கள் என்றுமே ஒத்துப் போனதில்லை. எனவே, நீதிபதி தப்பித்துக் கொள்ளவே அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.

பெண்களின் உரிமைகள் எவ்வாறு விவாதிக்கப்பட போகின்றன?: மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநில தலைநகர் மும்பையில், புகழ் பெற்ற, ஹாஜி அலி தர்கா உள்ளது; இங்கு, ‘பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அவர்களும் தர்காவைக் காண அனுமதிக்க வேண்டும்’ என, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, மும்பை ஐகோர்ட், இதேபோல, சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு உள்ளதால், அதன் தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்து, விசாரணையை, பிப்., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது[6]. 03-02-2016 அன்று, மாநில அரசின் பதிலை தாக்கல் செய்யும்படி, அட்டர்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபரி மலையில், பெண்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், பிப்., 8ல், தீர்ப்பு வழங்க உள்ளது. மும்பையை சேர்ந்த வழக்கறிஞரும் மத்திய வக்பு கவுன்சில் உறுப்பினருமான எஜாஸ் அப்பாஸ் நக்வி தடை குறித்து கூறும் போது,” நாடு முழுவதும் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லையெனில் வரவேற்கப்படும் ஒன்றாக அது இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் ஏன் அறங்காவலராக நியமிக்கப்படகூடாது? ஏன் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை? மேற்கத்திய நாடுகளில் இது போன்று இல்லை” என தெரிவித்தார்[7].

“ஆணும்–பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளன” ஆனால், ஒரே பெஞ்சில் ஆண்களுடன் உட்காரக்கூடாது: முஸ்லிம்கள் தங்களது மதத்தில் நடக்கும் பாலியல் மீறல்கள், தொந்தரவுகள் மற்றும் வக்கிரங்களைப் பற்றி, பொதுவாக வெளியில் சொல்வதில்லை. ஏதாவது, அங்கும்-இங்கும் செய்திகள் வந்தாலும், அவை அத்துடன் முடிந்து விடுகின்றன. அதற்கு மேல் என்ன நடந்தது என்பதெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக விளம்பரம் இல்லாமல், நீதிமன்றங்களுக்கு செல்லாத முறையில், அவர்களுக்குள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், சமீபத்தில், கேரளாவில், முஸ்லிம்களைப்பற்றிய விவாதங்கள் பல வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, பரூக்கிக் கல்லூரியில், மாணவ-மாணவிகள், ஒரே பெஞ்சில் சேர்ந்து உட்காரக்கூடாது, தனித்தனியாகத்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள கல்வி அமைச்சர் அப்டு ரப் [Kerala education minister Abdu Rabb] சொன்னது பிரச்சினையாகியது[8]. அப்படி உட்கார்ந்து கொண்டால், என்ன ஒட்டிக் கொள்ளும் அல்லது தீட்டு ஏற்படும் என்றேல்லாம், எந்த முற்போக்குவாதியோ, நாத்திகவாதியோ. கம்யூனிஸவாதியோ கேட்கவில்லை. சமூகவளைதளங்களில் சில கமென்டுகள் வந்தன[9], அதோடு சரி! “ஆணும்-பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளன” என்றெல்லாம் பெருமையாக அடித்துப் பேசுவர். ஆனால், நடக்கும் விசயங்கள் வேறு மாதிரியாகத்தான் இருந்து வருகின்றன. இருப்பினும் எதிர்பார்த்தபடி, அந்த “பால்-நீதி” (Gender Justice), “சமத்துவ நீதி” பிரச்சினை (Equity, equality of justice), அமுங்கி விட்டது. ஆனால், அதன் பின்னணில்யில், அதிகமான பிரச்சினைகள் இருக்கும் என்று தெரிகிறது.

பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது”: இந்நிலையில், அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர் [Aboobacker Musliyar], கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், பல மதரஸாக்கள், கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவர், “பால்-சமத்துவம் என்பது நிஜமல்ல, பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது. பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக மாட்டார்கள். ஆபத்து நேரங்களில் அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. பெண் மருத்துவர்கள் பொது மருத்துவம் அல்லது குழந்தை மருத்துவத்தில் சிறக்கலாமே தவிர, பெரிய அறுவை சிகிச்சை வல்லுனராக முடியாது[10]. அதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை”, என்ற கருத்தை வெளியிட்டார்[11]. இதனால், பெருத்த சர்ச்சை ஏற்பட்டது. இருப்பினும், ஊடகங்கள், ஒருதடவை, செய்தியாக அறிவித்து, பிரசுரித்து அமைதியாகி விட்டன. ஆனால், அது வேறு வகையில், கிளர்ந்தெழுந்தது. “அபூபக்கர் முசலியார் பெண்களுக்காக பல கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கிறார், பெந்கல்வியை ஆதரிக்கிறார், அவற்றையெல்லாம் நானே சென்று பார்த்திருக்கிறேன், ஆனால், அவர், ஏன் அப்படி சொன்னார் என்பது எனக்கு திகைப்பாக இருக்கிறது”, திரும்ப-திரும்ப “நியூஸ்-எக்ஸில்” சொல்லிக் கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவர் ஏன் அப்படி சொன்னார், என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை!
வேதபிரகாஷ்
03-02-12016
[1] http://www.athirvu.com/newsdetail/6787.html
[2] http://tamil.oneindia.com/news/india/muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah-245575.html
[3] The graves, she said quoting Prophet Muhammad, should be frequented by men and women for two reasons: one, it reminds them of death and two, they can pray for the people buried there. Citing instances, she said, “Prophet Muhammad’s wife Hazrat Ayesha Siddiqua used to visit the grave of her brother Abd ar-Rahman. Also, Hazrat Fatima Zehra, the Prophet’s daughter, used to visit the grave of her uncle Hazrat Hamza regularly.
http://www.firstpost.com/living/men-can-visit-graveyards-why-not-us-ask-muslim-women-2606368.html
[4] She is also the founder-director general of The World Institute of Islamic Studies for Dialogue, Organisation of Mediation and Gender Justice.
[5] தினமலர், ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு அனுமதி?, ஜனவரி.18, 2016.22:11.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1436166
[7] http://www.dailythanthi.com/News/India/2016/01/29104437/Muslim-women-stage-protest-demand-entry-into-Mumbais.vpf
[8] http://www.hindustantimes.com/india/boys-girls-shouldn-t-sit-on-same-benches-in-class-kerala-minister/story-eqVy6zH7h0QEN5m5snr79L.html
[9] http://www.dnaindia.com/india/report-social-media-reacts-strongly-to-kerala-education-minister-s-comments-2146737
[10] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/
[11] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/
பிரிவுகள்: இசை, இமாம், இமாம் அலி, இறைவன், கர்பலா, சட்டம், சமாதி, சவூதி அரேபியா, சுன்னி, ஜமாத், ஜாகியா சொமன், ஜீனத் சவுகத் அலி, தர்கா
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாம், சமாதி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜாகியா சொமன், ஜீனத் சவுகத் அலி, தர்கா, பப்டு ரப், முகமதியர், முஸ்லீம்கள்
Comments: Be the first to comment
நவம்பர் 26, 2015
தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (1)!

அதிரை – உபயம் – நன்றி
திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் (நவம்பர். 2015): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது என்று பெயரைக் குறிப்பிடாமல் இருக்கும்போது, “ரோஷன் மஹாலில் நடைபெற்றது” என்கிறது விகடன்[1]. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், பொது செயலாளராக கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், பொருளாளராக எம்.எஸ்.ஏ.ஷாஜகான் ஆகியோர் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்[2]. மேலும், முதன்மை துணை தலைவராக எம். அப்துல் ரகுமான் தேர்வு செய்யப்பட்டார்[3]. காதர் மொஹித்தீன் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒன்றுதான் குறிப்பிடுகிறது[4]. அதாவது தேர்தல் எல்லாம் இல்லை, “ஒரு மனதாகத்” தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்!

IUML conference, Trichy entrance 24-11-2015. stage
முஸ்லிம் லீக்கின் பிரிவுகள், அவற்றின் தலைவர்கள்: முஸ்லிம் லீக், முச்லிம்கள் வைத்துள்ள வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதியாளர்கள் என்று பலரிடம் உறவுகளை வைத்துள்ளது. அவர்களிடமிருந்து நிதியுதவியும் பெறுகிறது. இது தவிர, –
1. துணை தலைவர்கள்,
2. மாநில செயலாளர்கள்,
3. துணை செயலாளர்கள்,
4. சார்பு அணிகள்,
5. மாநில இணை செயலாளர்கள்,
6. முஸ்லிம் மாணவர் பேரவை, |
7. சுதந்திர தொழிலாளர் யூனியன்,
8. மகளிர் லீக்,
9. மின்னணு ஊடக பிரிவு,
10. கவுரவ ஆலோசகர்கள்,
11. தலைமை நிலைய பேச்சாளர்கள்,
12. தலைமை நிலைய பாடகர்கள் |
முதலியோர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அளவில் அணுகுமுறை, திட்டம், செயல்பாடு முதலியவற்றுடன் வேலைசெய்கிறது முஸ்லிம் லீக். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது, ஊடகக்காரர்கள் அணுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது[6]. இது தொடர்பாக திருச்சியில் நடந்த கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்[7]:

IUML conference, Trichy entrance 24-11-2015. audience
ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!: முஸ்லிம் லீக்கைப் பொறுத்த வரையில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தான் எம்.எல்.ஏ, எம்.பி மற்ற பதவிகளை பெற்று வருகிறது. ஜெயலலிதா, தமிழக அரசை தனது கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் தனது கட்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். ஆனால், அவர் ஆட்சி செய்யும் அரசின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை. அவரது பிடியில் இருந்து அரசு தளர்ந்து விட்டது என்பதைவிட, தொலைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் யாரும் அரசு கட்டுப்பாட்டில் இல்லை, என்றெல்லாம் விமர்சித்தார்[8]. |
இப்படியெல்லாம் பேசுவது, ஜெயலலிதா-விரோத பேச்சாலரசு-விரோத பேச்சா என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டில் “கட்சி” உள்ளது ஆனால் “அரசு” இல்லை என்றால், வேடிக்கைதான்! மழை பெய்ந்து ஓய்ந்தது போலத்தான்! போயஸ் கார்டனில் மழை நீர் நுழையவில்லை, ஆனால், கோபாலபுரத்தில் நுழைந்த மர்மம் போலும்! |
ஆனால், காயிதே மில்லத் சமாதிக்கு வந்து துணியைப் போர்த்தும் போது, கருணாநிதி – ஜெயலலிதா இருவருக்கும் தான், கூட இருந்து பிடித்துக் கொள்கிறார்கள்! அவர்களும் குல்லா போடுவதும், தலையில் முக்காடு போடுவதிலிம் குறைச்சல் இல்லை!

Jeyalalita at Quade millat tomb
அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, திமுக தலைமையிலான அணி: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளதோடு, தேர்தல் முடிவு, ஜனநாயக இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அருமையான பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பங்கு பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது. |
பிஹார் உதாரணத்தைப் பின்பற்றுவோம் என்றால், ஊழல் கட்சிகளோடு கூட்டு வைத்துக் கொள்வோம் என்றாகிறது. அப்படியென்றால், திமுகவோடு கூட்டு வைத்துக் கொள்வது, சாலப் பொறுத்தமானதே! சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் எப்படியுள்ளன, எவ்வாறு செயல்படுகின்றன என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான்! முஸ்லிம் லீக், “சமய சார்பற்ற” என்று பேசுவதும் வேடிக்கைதான்! |

IUML conference, Trichy entrance 24-11-2015 -press briefed
அரசியலாக்கப்படும் வெள்ளச் சேதம்: தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல்…: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடமைகளை இழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் பங்கேற்கிறது. மத்திய மாநில அரசுகள் தங்களின் மெத்தன போக்கை கைவிட்டு அவதியுற்றுள்ள மக்கள் அனைவருக்கும் நிவாரண பணியை போர்க்காள அடிப்படையில் விரைவுபடுத்திட வேண்டுகோள் விடுக்கிறது. இதுவரை ஏற்பட்ட சேதம் ரூபாய் 8,481 கோடி என்றும் முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் முதற்கட்டமாக ரூபாய் 939 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இழப்பீடு கணக்கீடும் மத்திய அரசிடம் முதல்வர் விடுத்த தொகையும், மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரணமும் மிகவும் குறைவு ஆகும். பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுடைய நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
© வேதபிரகாஷ்
26-11-2015
[1] http://www.vikatan.com/news/tamilnadu/55536-.art
[2] வெப்துனியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக காதர்மொய்தீன் மீண்டும் தேர்வு, Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (05:20 IST)
[3] தினத்தந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு, மாற்றம் செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST.
[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/kader-moideen-re-elected-as-president-of-the-indian-union-muslim-league-115112500010_1.html
[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/26021349/Indian-Union-Muslim-League-the-partys-Tamil-Nadu-state.vpf
[6] தமிழ்.ஒன்.இந்தியா, அதிமுகவை வீழ்த்த சட்டமன்ற தேர்தலில் திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடரும், Posted by: Chakra, Published: Wednesday, November 25, 2015, 13:22 [IST].
[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/iuml-urges-opposition-come-under-dmk-alliance-defeat-aiadmk-240684.html
[8] விகடன், ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!, Posted Date : 21:18 (24/11/2015); Last updated : 21:18 (24/11/2015).
பிரிவுகள்: இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், கருணாநிதி, காதர் மொய்தின், காதர்மொய்தின், காயிதே மில்லத், கிலாபத், கிலாபத் இயக்கம், ஜமா அத், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜெயலலிதா
Tags: இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய லீக், இந்துக்கள், இஸ்லாம், கருணாநிதி, காதர் மொகிதீன், காதர் மொய்தீன், செக்யூலரிஸம், ஜெயலலிதா, முகமதியர், முஸ்லீம்கள்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 25, 2014
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

சென்னை முஸ்லிம்களின் ஜிஹாதி ஆதரவு இருக்கும் போது ஏன் ஜிஹாதி–எதிர்ப்பு இல்லை?: சாதாரணமாக தமிழக முஸ்லிம்கள் மற்ற விசயங்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களை சென்னைக்கு கூட்டி வந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். “கசாபை தூக்கில் போடாதே” என்று முன்னரும் தூக்கில் போட்ட பிறகும் அவனை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்பார்கள், ஆனால், முஸ்லிம்கள் இப்படி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்க மாட்டார்கள், தடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்விசயத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்களே ஏன் என்று தெரியவில்லை. “தீவிரவதிகளாக மாறும் பெண்கள்” என்று 05-10-2014 தேதியிட்ட தினத்தந்தியில் ஒரு கட்டுரை வெளியிட்டவுடன், “ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” என்ற முஸ்லிம் அமைப்பு, அதனை எதிர்த்து கண்டன கடிதத்தை அனுப்பியதாம். உடனே, 08-10-2014 அன்று, தினத்தந்தி, “கட்டுரையில் இடம் பெற்ற ஜிஹாத் பற்றிய தகவல் தவறானது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல”, என்று வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதாம். ஆனால், அதையும் விடாமல், “இதுபோன்ற தவறான அவதூறான செய்திகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் முஸ்லிம் விரோதபோக்கை பத்திரிக்கையில் தொடர்வீர்களானால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை வன்மையான கண்டனுத்துடன் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) எச்சரிக்கிறது”, என்று இன்னொரு கடிதத்தை 08-10-2014 அன்று அனுப்பியுள்ளது. அதாவது, அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்
“ஐமுமுக”வின் கடிதத்தின் நோக்கம் அலசப்படுகிறது: இந்தியாவில் அடிக்கடி கருத்து சுதந்திரம், எண்ணும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசப்படும், எழுதப்படும், விவாதிக்கப்படும். ஆனால், அந்த உரிமைகள், சுதந்திரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும், செய்பவர்களின் உரிமைகள், சுதந்திரங்களரென்ன, மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது இல்லை. “பாசிஸம்” என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது ஒருவர் தனது கருத்தை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கும் முறை அதுவாம். பிறகு அப்படி சொல்பவர்களே, அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே? இதென்ன, அந்த போதிக்கும் மகாத்மாக்களுக்குப் புரியாமலா இருக்கும்? இங்கும் “ஐமுமுக”வின் கடிதம் பல விசயங்களை வெளிப்படுத்துகிறது. தினத்தந்தி அல்லது இன்னொரு ஊடகம் எந்த செய்தியை வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதனை இவ்வாறு முடிவெடுக்க முடியுமா? அல்லது தினத்தந்தி ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு, பிறகு அது தவறு, பொய் என்று சொல்லி இருந்துவிட முடியுமா?

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு
மேலே குறிப்பிட்ட “ஐமுமுக”வின் கடிதத்தில் உள்ள சொற்றொடர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அவை கிழே கொடுக்கப் படுகின்றன?
- தவறான அவதூறான செய்திகள் – இந்தியாவில் ஏன் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் வெடிகுண்டு வெடிப்பு, கொலை முதலிய காரியங்களில் வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்களே. பர்த்வானில் கூட, ரெசூல் கரீம் வீட்டில் உள்ளூர் போலீஸ் தேடியபோது கிடைக்காத குண்டுகள்[1] என்.ஐ.ஏ தேடியபோது கிடைத்ததாமே? கிடைத்துள்ள ஒரு பென்-டிரைவில் குண்டுகள் எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் இருக்கின்றன[2]. மால்டா மாவட்டத்தில் பத்து நாட்களில் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன[3]. அந்த குண்டு தொழிற்சாலையில் 36 பேர் வேலை செய்துள்ளனர்[4]. முன்பே அந்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் குண்டுதயாரிப்பு முறைபற்றி விவரங்கள் கிடைத்திருக்கும்[5]. ஆனால், மாநில போலீஸார் அவற்றை அழித்து விட்டார்கள். அசாமில் பார்பேடா என்ற இடத்தில் ஆறு இளைஞர்கள் இவ்விசயத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்[6]. இவையெல்லாம் செய்திகளாக வந்துள்ளனவே, வந்துக் கொண்டிருக்கின்றனவே? அவையெல்லாம் தவறான செய்திகளா அல்லது அவதூறான செய்திகளா? காஷ்மீரத்தில் ஐசிஸ் கொடிகள் காட்டி, “நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவோம்”, என்று முழக்கமிடும் போது, மற்ற முஸ்லிம்கள் கண்டிக்கவில்லையேலொமர் அப்துல்லா மட்டும் அவர்கள் “முட்டாள்கள்” என்று சொல்லியிருக்கிறார், அதையும் அவதூறு என்று எச்சரிக்கப் படவில்லையே? அந்த “ஐசிஸ்”ஸுடன் சம்பந்தப் பட்டதுதானே “செக்ஸ் ஜிஹாத்” என்பதெல்லாம்.
- முஸ்லிம் விரோதபோக்கு – ஊடகங்களில் பெரும்பான்மையாக “இந்துவிரோத போக்கு” தான் காணப்படுகின்றது, ஆனால், இவர்கள் “முஸ்லிம் விரோதபோக்கு” உள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். இதற்கெல்லாம் யார் காரணம் என்று முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக நினைத்ததில்லை. ஆனால், முச்லிம்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், முச்லிம்களே ஆகமாட்டார்கள், இங்குதான் அவர்களுடைய பிரச்சினை உள்ளது. அவர்கள் தாம் மற்ற எல்லோரையும் தமக்கு எதிரிகளாக நினைக்கிறார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் தாம், இப்படி அவர்களை நினைக்கச் செய்கிறது. இது அவர்களுடைய இறையியல் மற்ரும் மனோரீதியிலாக நடக்கும் போராட்டம். அதற்கு ஜிஹாதி தான் தீர்ப்பு என்று அவர்கள் நினைத்து செயல்படும் போது, அவர்கள் தாம் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
- பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது – அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை பெரும்பாலும் ஆட்டி வைப்பவர்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்திகள். இவர்கள் தங்களது சித்தாந்தம் வலுப்பட, ஆதரவாக இருக்க, மற்ற சித்தாந்திகளை எதிர்க்க, தங்களது பத்திரிகா தர்மத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், “செக்யூலரிஸம்” போர்வையில், அவர்கள் உண்மையில், பாரபட்சமான செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றனர். செய்திகளை விலைக்கு வாங்குவது, ஊடகங்களில் செய்திகளை விதைப்பது, வளர்ப்பது, பரப்புவது…..போன்ற வேலைகளை தாராளமாக செய்து வருகிறார்கள். அதற்காக இப்பொழுது நவீன முறையில் “ஜேர்னலிஸ்ட்” பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களுடைய வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ எந்த செயல், இயக்கம் அல்லது தனிமனிதன் செயல்படுகிறானோ, அதற்கு எதிராக செயல்படும். இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும், “பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது” எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியிடுவது – ஒன்று உண்மையான செய்திகளை, ஒட்டு மொத்தமாக மனிதர்கள், பொதுவாக பாதிக்கப்படும் விசயங்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா போன்ற விசயங்களும் செய்திகளாக வரும். அதேபோல, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாதி போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, அத்தகைய செய்திகளும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுதவிர மேலே குறிப்பிடப் பட்டபடி, அவர்களுடைய வணிகங்கள்-வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ பாதிக்கப் பட்டால், அதை எதிர்க்கும் முறையில் பிரச்சார ரீதியில் செய்திகள் தோன்றும்.
- விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஏற்கெனவே விளைவுகள் மிகக்கடுமையாகி விட்டதால் தான், இந்தியர்கள் ஜிஹாதைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் மதரீதியில் பிரிக்கப் பட்டு, அது ஒன்றாக இருக்கமுடியாமல், இரண்டாக பிரிந்தும், முஸ்லிம்கள் உண்மையினை புரிந்து கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டியிருக்கிறார்கள். காஷ்மீர் மட்டுமல்லாது வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இதற்கு ஜிஹாதிகள் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கினர். இத்தனை குண்டுகள் வெடித்தும், மக்கள் இறந்தும், ரத்தம் பாய்ந்தும், மனித உறுப்புகள் சிதறியும்……அவர்கள் திருப்தியடையாமல், குண்டு தொழிற்சாலைல்கள் வைத்துக் கொண்டு, கடுமையான விளைவுகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கண்ண்டிக்காமல், “விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று மிரட்டுவதின் உள்நோக்கம் என்ன?
- வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை – எச்சரிக்கை ஜிஹாதிகளுக்கு இல்லாமல், அத்தகைய அபாயகரமான உண்மைகளை எடுத்துக் காட்டுபவர்களுக்கு ஏன் விடவேண்டும்? கண்டனமும் “இஸ்லாம் பெயரில்” நடக்கின்ற குற்றங்களை, தீவிரவாதங்களை நோக்கியில்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் மீது ஏன் தொடர்ந்து இருக்கவேண்டும்? அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்கரவாதம் போன்றவை ஏன் வன்மையுடன் இருக்கும் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும்? “வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை” என்பது இப்படித்தான் மிரட்டலாக இருக்க வேண்டுமா?

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு – அல் – உம்மா – நன்றி “சதர்ன் ஜிஹாதி.காம்”
இந்திய முஸ்லிம்கள் மாறவேண்டும்: “தாருல்-இஸ்லாம் : தாருல்-ஹராப்” “மோமின்-காபிர்”,ளிறைவனால் வெளிப்படுத்தப் பட்ட புத்தகத்தைக் கொண்டவர்கள் – புத்தகங்கள் இல்லாதவர்கள்” ….என பற்பல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தான் இந்தியாவில் முஸ்லிம்-அல்லதவர்களை, குறிப்பாக இந்துக்களை அணுகி வருகின்றனர். இது நேர்-எதிர்மறை முறைகள், நல்லது-கெட்டது வழிகள், அறிவிக்கப்பட்ட-அறிவிக்கப்படாத தாக்குதல்கள் என்றபலமுறைகளில் நடந்து வருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்கள், இந்துக்களின் வீடுகளில் விசேஷங்கள் நடந்தால் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள், ஆனால், இப்பொழுது தவிர்த்து வருகிறார்கள். காரணம் அடிப்படவாத முஸ்லிம்கள், “இந்து வீடுகளுக்குச் செல்லக் கூடாது. சாத்தான்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது”, என்றேல்லாம் போதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்துக்கள் இதுமாதிரி சொல்வதில்லை, ஏன், அவர்களுக்கு அத்தகைய எண்ணமே தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஏழை முஸ்லிம்களைப் பார்த்தால் இரக்கப்படத்தான் செய்கிறார்கள், தானம் செய்கிறார்கள் (அதாவது அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்ப்பதில்லை).

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்
முஸ்லிம்கள் பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். முதலில் இந்த மனப்பாங்கை நீக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம், ஜிஹாதித்துவம் பேசும், ஊக்குவிக்கும், பரப்பு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்கானிௐகபட வேண்டும், அவர்கள் திருத்தப் படவேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி, சாந்தி முதலியவை வரும், கிடைக்கும், தொடரும். பர்த்வானில் குண்டுகள் வெடித்த ஒலி இப்பொழுதுதான் மம்தா பேனர்ஜிக்குக் கேட்டிருக்கிறதாம்[7], அதுபோல, இங்குள்ள முஸ்லிம்களுக்கும் கேட்டால்[8] சரிதான்! காந்தி யெயந்தி அன்று குண்டுவெடித்து ஆட்கள் செத்து, இவ்வளது சோதனைகள் நடந்து முடிந்த பிறகு, “தீவிரவாதிகள், தீவிரவாதிகள் தாம்”, என்று அம்மையார் 17-10-2014 அன்றுதான் ஒப்புக் கொண்டுள்ளார். சரி சென்னை முஸ்லிம்கள் எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?
© வேதபிரகாஷ்
25-10-2014
[1] Earlier, a senior Bengal police officer told The Telegraph that departmental proceedings would be initiated against the team that had searched Rezaul Karim’s house in Burdwan and returned empty-handed on October 8. In the same house, the NIA and the NSG had yesterday found 39 home-made bombs.
[2] …….the Bengal police had also recovered a pen drive from a house in the area, that had a recording of an instructor explaining in Urdu and Bangla how to make bombs, improvised explosive devices and hand grenades.
http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226
[3] http://www.ibtimes.co.in/third-blast-west-bengals-malda-district-10-days-611486
[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226
[5] On October 3, CID had detonated the 55 IEDs found in the Khagragarh blast site. October 5 itself, just three days after the Khagragarh IED explosions when all the samples had been destroyed by CID.
http://timesofindia.indiatimes.com/city/kolkata/Burdwan-39-bombs-detonated-explosives-samples-sent-for-testing/articleshow/44863732.cms
[6] http://indiatoday.intoday.in/story/burdwan-blast-nia-gets-custody-of-three-accused/1/395558.html
[7] http://www.telegraphindia.com/1141018/jsp/frontpage/story_18939287.jsp
[8] Left defenceless by the discovery of a cache of bombs that Bengal police had overlooked, chief minister Mamata Banerjee today said “terrorists are terrorists” and declared that “we do not have any problems with the NIA” which is probing the Burdwan blast.
பிரிவுகள்: எச்சரிக்கை, ஐமுமுக, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு சுன்னத் ஜமாத், திமுக, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தேச விரோதம், பட்கல், பர்த்வான், மிரட்டல்
Tags: இஸ்லாம் ஜிஹாதி, ஐ.எஸ்.ஐ, ஐமுமுக, குண்டு, குண்டுவெடிப்பு, சிமி, சைசிஸ், ஜிஹாதி குண்டு, தமிழகம், தமிழ்நாடு, திமுக, பாகிஸ்தான்
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்