Archive for the ‘ஜமாதே-இ-முஸ்தபா’ category

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?

மே 12, 2013

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?

PAK candidatesகடந்த நாட்களில் குண்டுவெடிப்பு, வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது[1]. தலிபான்கள் தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதனாமது, பெண்கள் ஓட்டுப் போடக்கூடாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள், பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், பெண்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்[2]. பாகிஸ்தானின் 14வது தேசிய மற்றும் மாகாண தேர்தல் நடந்துள்ளது. 372 கீழ்சபை மற்றும் 728 தேசிய அசெம்பிளி என்று சேர்ந்து தேர்தல் நடக்கின்றது. இன்னும் மக்கள் தெளிவாக வாக்களிக்கவில்லை என்கிறார்கள். ஏனெனில் யாருக்கும் அதிக இடங்கள் கிடைக்கவில்லை[3].

PAK-2013 constituenciesநவாஸ்செரிப்கட்சிமுன்னணியில்இருக்கின்றது: பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் செரிப் கட்சி முன்னணியில் இருந்து, ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது[4]. இப்பொழுதுள்ள நிலவரங்களின் படி, பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தனிக்கட்சி என்றுள்ளது[5]. இம்ரான் கான் பரிதாப அலையில் ஒருவேளை முன்னணியில் வருவார் என்று நினைத்தார்கள், ஆனால், நடக்கவில்லை[6].

PAK-2013 election position2கட்சிகளின் நிலவரம்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) [Pakistan Muslim League-Nawaz (PML-N)], பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் [Pakistan Tehreek-i-Insaf (PTI)] மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan Peoples party (PPP)] என்பவைதான் பிரதான கட்சிகளாக இருக்கின்றன.

கட்சியின் பெயர்

தலைவர் / பிரதம மந்திரி வேட்பாளர்

ஆங்கிலத்தில்

கிடைத்துள்ள இடங்கள்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) நவாஸ் செரிப்பின் கட்சி Pakistan Muslim League-Nawaz (PML-N)[7]

120

தெஹ்ரீக்-இ-இன்சாப் இம்ரான் கான் Pakistan Tehreek-i-Insaf (PTI)[8]

30

பாகிஸ்தான் மக்கள் கட்சி யூசுப் ராஜா ஜிலானி,ஆளும் கட்சி Pakistan Peoples party (PPP)[9]

35

Nawaz Sherrif - next PMநவாஸ் செரிப் மறுபடியும் பிரதமர் ஆகிறார்: 13 ஆண்டுகள் கழித்து, நவாஸ் செரிப், முன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆகிறார்[10]. 1990 மற்றும் 1997ல் பிரதமராக இருந்தார், ஆனால், இருமுறைகளிலும், குலாம் இஸாக் கான் மற்றும் பெர்வீஸ் முசாரப் என்கின்ற ஜனாதிபதிகளினால் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டார்[11].

Age-wise-Voter-list-2013-Elections-Pakistanஇம்ரான் கானின் கிரிக்கெட் கவர்ச்சி வேலை செய்யவில்லை: இம்ரான் கானின் கிரிக்கெட் பேச்சு, மற்றவர்களைப் பற்றித் தாக்கிப் பேசிய பேச்சு, பரிதாப அலை எதுவும் வேலை செய்யவில்லை என்று தெரிகிறது[12]. கூட்டங்களில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வதில், தனக்கு நிகர் தாந்தான் என்ற ரீதியில் பேசி வந்தார். இந்தியாவில் அம்பயர்கள் தனக்கு எதிராக அல்லது சாதகமாக இல்லை என்றாலும், தான் வென்றாதாகக் கூறிக் கொண்டார். எனினும் நிறைய இடங்களைப் பிடிக்கவில்லை. இதனால், எதிர்கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவோம் என்று கட்சியினர் கூறியிருக்கிறார்கள்[13].

PAK Election 2013 Islamicமக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைகளாகவே உள்ளன: ஓட்டு போட்டவர்களின் சதவீதம் 50 முதல் 60 வரை இருக்கிறது[14]. பொது மக்களைக் கேட்டால், அவர்களும் தண்ணீர், மின்சாரம், வேலை வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்று தான் பேசுகிறார்கள், அதாவது பொருளாதாரப் பிரச்சினைகள் தாம் முக்கியமாக இருக்கின்றன[15].

Paki women vote

பெண்கள் வந்து ஓட்டுப் போட்டது

PAKI women vote with faith or fear

© வேதபிரகாஷ்

12-05-2013


[7] Pakistan Muslim League (N) – Although, the party claims to be the extension of the All India Muslim League under the leadership of Mohammad Ali Jinnah that led the Muslims of sub-continent India to establish Pakistan, a separate country for the Indian Muslim but due to almost a dozen parties under the same name it is a bit difficult to confirm the claim.

[8] Pakistan Tehrik-e Insaf (PTI) – This party has gained considerable momentum over the last two years. Imran khan, once the hero of the Pakistan cricket who brought the 1992 champion trophy of the Cricket World Cup—established PTI in February 1996.

[9] Pakistan People’s Party- Since its inception in 1967, PPP in Pakistan’s recent history remained the only political party, having grass root level representation having liberal democratic norms. The charisma of its founding leader Zulfiqar Ali Bhutto based its manifesto on secularism and social equality, and ruled over the hearts and minds of the millions of Pakistanis for decades.

[11] Nawaz Sharif has remained prime minister two times in 1990 and 1997 but both of his government wre prematurely dismissed, once by then president Ghulam Ishaq Khan and then his second government was ousted in 1999 in a military coup by former military ruler Gen (r) Pervez Musharraf.

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

மார்ச் 22, 2013

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

Hijbul Mujahiddeen - Paki-terrorist group

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

Paki-terrorist arrested - militant of Al-barq

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா  (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

Haji Arafat Guest house - room No.301 arms stored

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

Kashmir terror

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

Indian flag burned

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8].  இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார்.  அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

Indian-flag-burned2

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2013


[7] NDTV has learnt that Liyakat Shah and his family, including his 18-year-old daughter flew from Karachi to Kathmandu and reached Sanauli post on the Indo-Nepal border on March 20. There, they informed the border police. However, instead of allowing them to proceed to Jammu and Kashmir as planned and promised, the Delhi Police arrested them.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[8]  Delhi Police seized an AK-56 assault rifle, two magazines with 30 cartridges each, and a hand grenade from a room of a guest house near the famous Jama Masjid mosque.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.

[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.

[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.

[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.

“இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

மார்ச் 3, 2013

இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்

Atrocities on Hindus - 2013

அப்பாவி இந்துக்கள் மீது தாக்குதல்கள்: 1971ல் நடந்த போர்க்குற்றங்களுக்காக, .டெலேவார் ஹொஸைன் சையிதீ என்ற தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமித் தலைவருக்குத் தூக்குத்தண்டனையளித்தப் பிறகு கலவரம் ஏற்பட்டதில் ஏற்படுத்தப்பட்டதில் நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் 28-03-2013 (வியாழக்கிழமை) அன்றுலிருந்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களாக இந்த கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Atrocities on Hindus -2- 2013

2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள்: 1971 குரூர-போர்க்குற்றங்களைப் போலவே, இப்பொழுதும் நடந்தேறியுள்ள திட்டமிட்டத் தாக்குதலிகளில்,  ஆயிரக்கணக்கான சிறுபான்மையினரின் வீடுகள், 150 வழிபாட்டு ஸ்தலங்கள் கடந்த இரு தினங்களில் தாக்கப்பட்டிருக்கின்றன, என்று பங்களாதேசத்தின் இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் பொது செயலாளர் மற்றும் வழக்கறிஞருமான ராணா தாஸ் குப்தா என்பவர் கூறியுள்ளார். இப்பொழுது, எந்த குற்றங்களுக்காக, டெலேவார் ஹொஸைன் சையிதீ குற்றஞ்சாட்டப் பட்டு, தண்டனைப் பெற்றுள்ளாரோ, அதே மாதிரியான குற்றங்கள், இன்றும் நடக்கின்றன, அதாவது 2013லும் தொடரும் 1971 மாதிரியான குரூரக்கொலைக்குற்றங்கள் என்று அவர் எடுத்துக் காட்டுகிறார்.

Atrocities on Hindus -3- 2013

இந்துக்கள் தாக்கப்பட்டுள்ள ஊர்கள் / இடங்கள்: சிட்டகாங், குல்னா, படிசால், நோவகாலி, கலிபந்தா, ரங்கப்பூர், சைல்ஹெட், தாகுர்காவ், பகேரெத் மற்றும்  சபைனவாப்கஞ்ச் முதலிய இடங்களிலுள்ள சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்டிருப்பதாக, சிட்டகாங் பிரஸ் கிளப்பில் நடந்த கூட்டத்தில் நிருபர்களுக்கு கூறினார். ஆனால், இந்திய ஊடகங்கள் மௌனியாக இருக்கின்றன.

Atrocities on Hindus -4- 2013

ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் – தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள்: ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிர் முதலிய இயக்கங்களின் குரூரக்கொடுமைகளுக்காகக் குற்றஞ்சாட்டினார். சத்கானியவில் நடந்த தாக்குதல்களுக்கு சோரோடி யூனியன் பரிஷத்தின் சேர்மேன் ரெஜைவுல் கரீம் மற்றும் பன்ஸ்காளியில் நடந்த தாக்குதல்களுக்கு முனிசிபல் கவுன்சிலர்களான அபு மற்றும் சலீம் முதலியோர் மீது குற்றஞ்சாட்டினார்.

Atrocities on Hindus -5- 2013

உள்ளூர் முஸ்லீம் தலைவர்களே காரணம்: 2003ல் பன்ஸ்காளியில் சில்பாரா என்ற இடத்தில் 11 பேர் அடங்கிய ஒரு இந்து குடும்பத்தை உயிரோடு எரித்ததற்கும், மற்றும் பன்ஸ்காளியில் திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தியதற்கும், அமினுர் ரஹ்மான் சௌத்ரி என்பவர் மீது குற்றஞ்சாட்டினார். அதாவது பத்தாண்டு காலமாகியும் அக்கொலையாளிகள் அப்படியே வாழ்ந்து வருகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Atrocities on Hindus -6- 2013

அரசுக்கு வேண்டுகோள்: இத்தகைய கொடுமைகள் நடக்காமல் இருக்கவும், குற்றம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யவும், அவர்கள் மீது உரிய முறையில்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பலிகடா ஆனவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இடித்தழிக்கப்பட்ட வீடுகள்-கோவில்களைத் திரும்பக் கட்டிக் கொடுக்கவும் அரசாங்கத்தை இந்து-பௌத்த-கிருத்துவ ஐக்கிய பரிஷத்தின் சார்பில் கேட்டுக் கொண்டார்.

Atrocities on Hindus -7- 2013

சாம்பலாகிப் போன வீடுகள்: குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் மூன்று இரவுகளாக தூக்கம் இல்லாமல், என்ன நடக்குமோ என்று திறந்த வெளியில் ஆகாயத்தின் கீழ் உயிருக்குப் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”, என்று மினோதி ராணீ தாஸ் என்ற பெண்மணி கூக்குரலிட்டுக் கதறினார், “சந்தோஷமான குடும்பம் எங்களுக்கு இருந்தது, ஆனால் இப்பொழுது எங்களுக்கு எதுவுமே இல்லை, கூரையில்லை, உணவில்லை, சமைக்க இடமில்லை, பாத்திரம் இல்லை, எதுவும் இல்லை. இங்கிருப்பதெல்லாம் கொஞ்சம் சாம்பல் தான்”.

Atrocities on Hindus -8- 2013

பல இந்து குடும்பங்களின் கதி: மினோதி ராணீ தாஸ் மட்டுமல்ல, அவரைப்போல, சுற்றி வாழும் 76 இந்து குடும்பங்களின் கதிட்யும், இதே கதிதான். தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களோ செத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வீடுகள் சூரையாடப் பட்டு, எரியூட்டப்பட்டன. பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர். எல்லாம் முடிந்த பிறகு தான் போலீஸார் வந்து பார்வையிட்டனர்.

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்துக்கள் சாட்சி சொன்னதற்காக தாக்குதல் நடத்தப் பட்டனவாம்: சையதீ குற்றாஞ்சாட்டப்பட்டதற்கே, பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், அதனால் தான், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமி சத்ரா சிபிரரியக்கங்களைச் சேர்ந்த 250-300 பேர் அப்பகுதிகளில் வந்து அத்தகைய கொடிய செயல்களைச் செய்துள்ளனர். முகமூடிகளை அணிந்து கொண்டு, “சையதீக்கு ஏதாவது நேர்ந்தால், ஒவ்வொரு வீட்டையும் கொளுத்துவோம்”, என்று கத்திக் கொண்டே அடித்து நொறுக்கினர்.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புத் தரப்படவில்லை?: . தீர்ப்பை ஆதரித்து கோடிக்கணகான மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் செய்திகளை விளம்பரப்படுத்தியுள்ளார்கள். பிறகு கலவரத்தில் 42-45 மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றார்கள். ஆனால், பாதிக்கப் பட்ட இந்து குடும்பத்தவர் சாட்சி சொன்னதால் தான், சையதீக்கு தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், அவர்களுக்கு, அவர்கள் குடும்பங்களுக்கு மற்றும் இந்துக்களுக்கு ஏன் பாதுகாப்புக் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி எக்ஷழுகின்றது. மேலும் போலீஸார், எல்லாம் நடந்த பிறகு வந்தனர் என்பது, போலீஸாரும் முஸ்லீம்கள், அதனால், முஸ்லீம்கள் செய்ததை ஆதரித்தது போலாகிறது.

Bangladesh protesters against Capital punishment

இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது”: இதன் அர்த்தம் என்ன? 1947ல் இந்தியா மதரீதியில் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, பலகோடி இந்துக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர். ஏனெனில் அவர்களில் பலருக்கு அந்த விஷயமே தெரியாது. அதுபோல பங்களாதேசத்தில் தங்கி விட்ட இந்த பெண்மணி கூறுகிறார். மேலும், 1971ல் பங்களாதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு, நிலைமை சரியாகி விடும் என்று தொடர்ந்துத் தங்கியிருக்கலாம். ஆனால், பங்களாதேசமும் இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு, இஸ்லாம் மயமாக்கல் தொடர்ந்தபோது, இத்தகைய குரூரங்கள் தொடர்ந்தன. இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். கற்பழித்து மதமாற்றம் செய்தனர். தடுத்த, எதிர்த்த பெற்றோர்களையும் மதமாறும்படி வற்புறுத்தினர் அல்லது மறுத்தவர்களைக் கொன்றனர்.

 

© வேதபிரகாஷ்

03-03-2013

 

 

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

மார்ச் 3, 2013

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

Attacks on Hindus is similar to 1971

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

Hindu woman wails after her house looted and torched

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Bangladesh protesters against Capital punishment

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

Mulayam again poses as Mulla - hobnobbing with Muslims 2013

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

Taliban wanting Jihadi Bangla Muslims

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?

© வேதபிரகாஷ்

03-03-2013


 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

[6] Party vice-president Rahul Gandhi has convened a meeting of all general secretaries and central leaders in charge of states on March 6, leading to wide anticipation in the party quarters that some of them may get new assignments.http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Rahul-Gandhi-calls-general-secys-meeting/Article1-1020202.aspx

[10] Terming the riots in Bangladesh over a war crimes verdict as an internal matter of that country, External Affairs Minister Salman Khurshid on Friday said the government sitting in Dhaka is fully capable of handling this situation and that the law will take its own course. Khurshid said it is a very touchy political issue for some sections of the Bangladesh polity. http://www.indianexpress.com/videos/international/21/bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid—/15760

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

ஓகஸ்ட் 14, 2012

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தே, ராஸா அகடெமி இந்த எதிர்ப்பு-போராட்டம் நடத்தியதோடல்லாமல், மற்றொரு கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பாகவே தங்களுக்கும், கடலவரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வேறு வெளியிட்டிருக்கிறது.

ராஸா அகெடமியின் மற்ற தேசிய விரோத செயல்கள் என்று கீழ்கண்டவை எடுத்துக் காட்டப்படுகின்றன:

  • Raza Academy’s president Yusuf Raza was involved in provoking the Muslims during 2007 riot in Bhivandi and killing 2 policemen by setting them on fire. He was arrested also in the incident.
  • Raza Academy issued a Fatwa to kill Mr. Charles Moor, journalist of London-based renowned daily ‘Telegraph’ under the charge that he insulted Prophet Mohammad. The press statement is available at the Academy’s website.
  • In January 2012, Mr. Salman Rushdie was to attend a book exhibition in Jaipur, Rajasthan. To oppose him, the Academy declared that ‘he who will slap him with a shoe will be given a reward of Rs.1 lakh’.

 

மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

ஓகஸ்ட் 12, 2012

மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.  அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.

  • காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
  • குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
  • பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
  • அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
  • அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.  அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8].  மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].

ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்!

உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?

[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]

© வேதபிரகாஷ்

12-08-2012


[1] A senior officer said the probe, given to the Crime Branch later in the evening, was zeroing in on a group that came from Nehru Nagar. “This group could not enter Azad Maidan, and there were reports that it was the first flashpoint,” the officer told TOI.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.

[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.

[5] As news of a minor scuffle outside reached the dais, the organisers decided to wrap up with a dua (seeking of divine blessings) led by Maulana Moin Ashraf Qadri of Madrassa Jamia Qadriya, Grant Road.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.

[7] Several newspersons, including photographers Shriram Vernekar and Prashant Nakwe from The Times of India, were beaten up and Vernekar’s camera was broken. Cops were singled out for specially violent treatment.

http://timesofindia.indiatimes.com/india/Assam-riots-protesters-go-on-rampage-hold-Mumbai-hostage/articleshow/15455083.cms

[13] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2

[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.

[17] Farah Naqvi, Assam calls for a human response, The Hindu, August 6, 2012. http://www.thehindu.com/opinion/op-ed/article3731625.ece

[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.

“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.

http://www.thehindu.com/news/national/article3754980.ece

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ஓகஸ்ட் 11, 2012

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் நடத்தப் பட்ட ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1]. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.

மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக் காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.

ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[2].

3 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[3].

கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர். அவர்களின் அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[4]. 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[5].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[6].

[புகைப்படங்கள் மற்ற இணைத்தளங்களினின்று எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளன – நன்றி]

© வேதபிரகாஷ்

11-08-2012


[6] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2