தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (1)!

அதிரை – உபயம் – நன்றி
திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் (நவம்பர். 2015): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது என்று பெயரைக் குறிப்பிடாமல் இருக்கும்போது, “ரோஷன் மஹாலில் நடைபெற்றது” என்கிறது விகடன்[1]. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன், பொது செயலாளராக கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், பொருளாளராக எம்.எஸ்.ஏ.ஷாஜகான் ஆகியோர் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்[2]. மேலும், முதன்மை துணை தலைவராக எம். அப்துல் ரகுமான் தேர்வு செய்யப்பட்டார்[3]. காதர் மொஹித்தீன் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒன்றுதான் குறிப்பிடுகிறது[4]. அதாவது தேர்தல் எல்லாம் இல்லை, “ஒரு மனதாகத்” தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்!

IUML conference, Trichy entrance 24-11-2015. stage
முஸ்லிம் லீக்கின் பிரிவுகள், அவற்றின் தலைவர்கள்: முஸ்லிம் லீக், முச்லிம்கள் வைத்துள்ள வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதியாளர்கள் என்று பலரிடம் உறவுகளை வைத்துள்ளது. அவர்களிடமிருந்து நிதியுதவியும் பெறுகிறது. இது தவிர, –
1. துணை தலைவர்கள்,
2. மாநில செயலாளர்கள், 3. துணை செயலாளர்கள், 4. சார்பு அணிகள், 5. மாநில இணை செயலாளர்கள், 6. முஸ்லிம் மாணவர் பேரவை, |
7. சுதந்திர தொழிலாளர் யூனியன்,
8. மகளிர் லீக், 9. மின்னணு ஊடக பிரிவு, 10. கவுரவ ஆலோசகர்கள், 11. தலைமை நிலைய பேச்சாளர்கள், 12. தலைமை நிலைய பாடகர்கள் |
முதலியோர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அளவில் அணுகுமுறை, திட்டம், செயல்பாடு முதலியவற்றுடன் வேலைசெய்கிறது முஸ்லிம் லீக். மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது, ஊடகக்காரர்கள் அணுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது[6]. இது தொடர்பாக திருச்சியில் நடந்த கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்[7]:

IUML conference, Trichy entrance 24-11-2015. audience
ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!: முஸ்லிம் லீக்கைப் பொறுத்த வரையில், திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தான் எம்.எல்.ஏ, எம்.பி மற்ற பதவிகளை பெற்று வருகிறது. ஜெயலலிதா, தமிழக அரசை தனது கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் தனது கட்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். ஆனால், அவர் ஆட்சி செய்யும் அரசின் கட்டுப்பாடு அவரிடம் இல்லை. அவரது பிடியில் இருந்து அரசு தளர்ந்து விட்டது என்பதைவிட, தொலைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் யாரும் அரசு கட்டுப்பாட்டில் இல்லை, என்றெல்லாம் விமர்சித்தார்[8]. | இப்படியெல்லாம் பேசுவது, ஜெயலலிதா-விரோத பேச்சாலரசு-விரோத பேச்சா என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டில் “கட்சி” உள்ளது ஆனால் “அரசு” இல்லை என்றால், வேடிக்கைதான்! மழை பெய்ந்து ஓய்ந்தது போலத்தான்! போயஸ் கார்டனில் மழை நீர் நுழையவில்லை, ஆனால், கோபாலபுரத்தில் நுழைந்த மர்மம் போலும்! |
ஆனால், காயிதே மில்லத் சமாதிக்கு வந்து துணியைப் போர்த்தும் போது, கருணாநிதி – ஜெயலலிதா இருவருக்கும் தான், கூட இருந்து பிடித்துக் கொள்கிறார்கள்! அவர்களும் குல்லா போடுவதும், தலையில் முக்காடு போடுவதிலிம் குறைச்சல் இல்லை!

Jeyalalita at Quade millat tomb
அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, திமுக தலைமையிலான அணி: பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளதோடு, தேர்தல் முடிவு, ஜனநாயக இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அருமையான பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பங்கு பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது. | பிஹார் உதாரணத்தைப் பின்பற்றுவோம் என்றால், ஊழல் கட்சிகளோடு கூட்டு வைத்துக் கொள்வோம் என்றாகிறது. அப்படியென்றால், திமுகவோடு கூட்டு வைத்துக் கொள்வது, சாலப் பொறுத்தமானதே! சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் எப்படியுள்ளன, எவ்வாறு செயல்படுகின்றன என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான்! முஸ்லிம் லீக், “சமய சார்பற்ற” என்று பேசுவதும் வேடிக்கைதான்! |

IUML conference, Trichy entrance 24-11-2015 -press briefed
அரசியலாக்கப்படும் வெள்ளச் சேதம்: தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல்…: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடமைகளை இழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் பங்கேற்கிறது. மத்திய மாநில அரசுகள் தங்களின் மெத்தன போக்கை கைவிட்டு அவதியுற்றுள்ள மக்கள் அனைவருக்கும் நிவாரண பணியை போர்க்காள அடிப்படையில் விரைவுபடுத்திட வேண்டுகோள் விடுக்கிறது. இதுவரை ஏற்பட்ட சேதம் ரூபாய் 8,481 கோடி என்றும் முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் முதற்கட்டமாக ரூபாய் 939 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த இழப்பீடு கணக்கீடும் மத்திய அரசிடம் முதல்வர் விடுத்த தொகையும், மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரணமும் மிகவும் குறைவு ஆகும். பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுடைய நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
© வேதபிரகாஷ்
26-11-2015
[1] http://www.vikatan.com/news/tamilnadu/55536-.art
[2] வெப்துனியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக காதர்மொய்தீன் மீண்டும் தேர்வு, Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (05:20 IST)
[3] தினத்தந்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு, மாற்றம் செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , நவம்பர் 26,2015, 2:13 AM IST.
[4] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/kader-moideen-re-elected-as-president-of-the-indian-union-muslim-league-115112500010_1.html
[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/26021349/Indian-Union-Muslim-League-the-partys-Tamil-Nadu-state.vpf
[6] தமிழ்.ஒன்.இந்தியா, அதிமுகவை வீழ்த்த சட்டமன்ற தேர்தலில் திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடரும், Posted by: Chakra, Published: Wednesday, November 25, 2015, 13:22 [IST].
[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/iuml-urges-opposition-come-under-dmk-alliance-defeat-aiadmk-240684.html
[8] விகடன், ஜெயலலிதா தமிழக அரசை கட்டுப்பாட்டில் வைக்க தவறிவிட்டார்: காதர்மொய்தீன் குற்றச்சாட்டு!, Posted Date : 21:18 (24/11/2015); Last updated : 21:18 (24/11/2015).
அண்மைய பின்னூட்டங்கள்