குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி – முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம்!
2013-2014 ஆண்டுகளில் இம்மாதிரியான தமாஷாக்கள் அதிகமாகவே இருக்கும்[1]: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[2]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது, என்று குறிப்பிட்டு இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். “திராவிடர்களே” இப்படியென்றால், “ஆரியர்களுக்கு” சொல்லித்தரவா வேண்டும். இதோ போட்டி ஆரம்பித்துவிட்டது. சொல்லிவைத்தால் மாதிரி, குல்லா விவகாரம் தலையெடுத்து விட்டது.
பாகிஸ்தானில் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா – வியாபாரம்: குல்லா போடுவதில், “தி ஹிந்து” போன்ற செக்யூலரிஸ ஊடகங்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. ரம்ஜான் மாலையில் “ஈத்-கா-சாந்த்”ன் ஒளி பரவ ஆரம்பித்து விட்டதாம், வர்ணித்திருக்கிறது[3]. இந்த “தி ஹிந்து”, என்டி-டிவியுடன் கூட்டு வைத்து செக்யூலரிஸத்தைப் பிழிந்து, ஊறவைத்து, ஊற்றிக் கொடுத்து போதையை ஏற்றி வருகிறது. இதற்கு பாகிஸ்தானில் வேறு கூட்டு – ஆமாம் என்டி-டிவி-பாகிஸ்தான். அமீர் லிகாயத் ஹுஸைன் தமாஷா பாகிஸ்தான் டிவி சரித்திரத்திலேயே மிகப்பெரிய வெற்றி நிகழ்சியாகும் என்ற செய்திகளை அள்ளி வீசியுள்ளது[4]. போதா குறைக்கு குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைகளைக் கூட தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்[5]. இதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறாதஆ இல்ல்லஈயா என்று நமது தமிழ்நாட்டு முஸ்லிம் பண்டிதர்கள் தாம் விவாதித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சரி, இந்தியாவில் குல்லா போடாமல் இருப்பார்களா? இந்திய டிவிகளும் இந்த வியாபாரத்தைச் செய்துள்ளது, செய்து வருக்கிறது[6].
இந்ந்தியாவிலும் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா — அரசியல் – வியாபாரம்: 09-08-2013 அன்று ராஸா மூரத் என்ற நடிகர், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சௌகானுடன் குல்லா போட்டுக் கொண்டு காட்சியளித்தார். போபாலில் ஈத்கா நிகழ்சியில் சௌகானும் குல்லா போட்டுக் கொண்டிருந்தார்[7]. அப்பொழுது ராஸா மூரத் இவரைப் பார்த்து மற்ற முதல்வர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்”, என்று பேசினார்[8]. குறிப்பாக நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார்[9]. அதாவது குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி என்பது போல முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம் விசித்திரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் குல்லா போட்டு ஏன் பிஜேபிக்காரகளை குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.
காங்கிரஸ்காரர்கள் தாம் குல்லா போட்டுக் கொள்ளவும், போடவும் தயாராக்க இருக்கிறார்களே? குல்லா போட்ட பிறகு கஞ்சி குடிக்க வேண்டாமா? என்ன, கஞ்சியா, இங்கு ஜெயலலிதா பைவ்—ஸ்டார் ஹோடல் தமாஷாவையும் மிஞ்சும் வகையில் உணவு வகைகள் இருக்கின்றன.
ரம்ஜான் – ஈத் செக்யூலரிஸ உணவு வகைகள்: வழக்கம் போல ஈத் தமாஷாக்கள் இல்லைகளை மீறிவிட்டன எனலாம். டிவி-செனல்கள் எல்லாம் இப்படி விதவிதமான சமையல்கள் செய்யப்படுகின்றன, உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன என்றெல்லாம் விவரித்தனர். ஹலீம், ஷீர்-குர்மா, சேவை என்று வர்ணனைகள்[10]. ஆனால், அவ்வுணவு எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்று விவரமாகக் காண்பிக்கப் படவில்லை. குறிப்பாக ஆடு-மாடு-கோழி வகையற்றாக்கள் எப்படி கொல்லப்பட்டு, அறுத்து, உரித்து, பிரித்து, வெட்டி சமைக்கிறார்கள் என்பதனை காண்பிக்கவில்லை.
இப்படி அறுக்காமல், எப்படி கிடைக்கும்.
ஐந்து உடல்கள் அனுப்பப்பட்டன, என்று புலம்பிக் கொண்டிருந்த ஊடகங்கள், ஒரே நாளில் மாறிவிட்டதும் செக்யூலரிஸம் போலும். இதுவும் செக்யூலரிஸம் வகையில் நாளைக்கு விவாதிக்கப்படலாம். குல்லா போட்டால்தான் செக்யூலார்வாதி, என்றாகி விட்டப் பிறகு, நாளைக்கு கஞ்சி குடித்தால் தான் அந்த சான்றிதழை நாங்கள் கொடுப்போம், லுங்கி கட்டினால் தான் ஒப்புக் கொள்வோம், மாட்டிறைச்சி தின்றல் தான் உண்மையான செக்யூலார்வாதி, சுன்னத் செய்து கொண்டால் 100% செக்யூலர்வாதி,……………என்றெல்லாம் விளக்கம் கொடுப்பார்களோ?
செப்டம்பர் 2011ல் மோடி குல்லா அணிய மறுத்த விவகாரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை வலியுறுத்தி, செப்டம்பர் 2011ல், மூன்று நாள் உண்ணாவிரதம் (சத்பாவனா) மேற்கொண்டார். குஜராத் மாநில இஸ்லாமிய இமாம்களும் மோடியை சந்தித்து உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்தினார்கள். பிரானா என்ற கிராமத்தை சேர்ந்த சையது இமாம் சகி சயீது என்ற மதக்குருவும் மோடியை வாழ்த்த சென்றார். அப்போது அவர் மோடியிடம் ஒரு குல்லாவை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் மோடி குல்லாவை அணிய மறுத்து விட்டார். சால்வை மட்டும் போடுங்கள் என்றார். இதனால் அந்த மதகுரு சால்வையை மட்டும் போட்டு விட்டு திரும்பினார்[11]. இதைப் பாராட்டி, சிவசேனா கட்சிப் பத்திரிகை, “சாம்னா’வில் வெளியிடப்பட்ட கட்டுரையில்[12], “முஸ்லிம் மத குரு அளித்த குல்லாவை அணிய மறுத்த, மோடிக்கு பாராட்டுக்கள். சிறுபான்மையின மக்களை, “தாஜா‘ செய்வதால் மட்டுமே, மதசார்பின்மையை நிரூபிக்க முடியும் என்றில்லை. இதை, காங்., கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். மோடி தற்போதைய பாதையில் தொடர்ந்தால், டில்லியில் அவர் பிரதமராகி, ராஜ்பாத்தில் வலம் வரும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை”, என, தெரிவிக்கப்பட்டுள்ளது[13]. இந்த குல்லா விவகாரம் பற்றி தமிழ் ஊடகங்களும் அள்ளிக் கொட்டின.
வேதபிரகாஷ்
© 09-08-2013
[1] https://islamindia.wordpress.com/2013/08/04/five-star-hotel-secular-government-kafirs-invitation-momin-gathering-how-possible/
[2]https://islamindia.wordpress.com/2010/08/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/
[3] The wait is finally over. After the fast, it is time for the feast. For one month the faithful followed a strict regime of fasting and prayers, but with the sighting of ‘Id-ka-Chand’, the festival, to which they look forward, has finally arrived. While ‘haleem’ was the flavour of the Ramzan month, it is time for ‘sheer-kurma’ and ‘sewiyan’.
[4] Aamir Liaquat Hussain’s show is the biggest success in the history of Pakistani TV –
http://www.ndtv.com/article/world/pakistan-tv-preachers-battle-for-ramzan-ratings-401242
[5] http://articles.washingtonpost.com/2013-08-05/national/41083624_1_babies-pakistan-divides-ramadan
[6] Television is all set to celebrate Eid with spectacular programs ranging from three-hour-long-episodes to celebrities roped in to celebrate and special movies through out the weekend.
http://entertainment.oneindia.in/television/news/2013/tv-channels-maha-programs-for-eid-weekend-116759.html
[7] http://www.indianexpress.com/news/shivraj-singh-chouhan-nitish-kumar-woo-minorities-with-skull-cap-this-eid/1153368/
[8] Murad standing alongside Chouhan, who had sported a skull cap while greeting the Muslims on the occasion of Eid al-Fitr, said the other chief ministers need to learn from the Madhya Pradesh chief minister that wearing a cap does not affect one’s religion. “I do not think much importance should be given to sporting a skull cap as wearing it does not mean anything much. It was time that Gujarat Chief Minister Narendra Modi learns some things from Chouhan and does not show his aversion to skull caps,” said Murad.
[9] http://ibnlive.in.com/news/raza-murad-takes-a-jibe-at-modi-praises-mp-cm-for-wearing-skull-cap/413005-37-64.html
[10] The wait is finally over. After the fast, it is time for the feast. For one month the faithful followed a strict regime of fasting and prayers, but with the sighting of ‘Id-ka-Chand’, the festival, to which they look forward, has finally arrived. While ‘haleem’ was the flavour of the Ramzan month, it is time for ‘sheer-kurma’ and ‘sewiyan’.
[11] மாலைமலர், நரேந்திரமோடிகுல்லாஅணியமறுத்ததால்சர்ச்சை, http://www.maalaimalar.com/2011/09/20112547/controversy-for-narendira-modi.html
[12]நக்கீரன், குல்லா விவகாரம் : மோடிக்கு சிவசேனை பாராட்டு, http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=61872
அண்மைய பின்னூட்டங்கள்