ரஷ்யாவில் ஜிஹாதிகளின் தீவிரவாதச் செயல்கள் – செசன்ய தீவிரவாதிகளினால் ரஷ்யா படும் பாடு!
ரஷ்யஜிஹாதிகளும், இஸ்லாமியத்தீவிரவாதமும்: அமெரிக்க ஜிஹாதிகளுக்குப் பிறகு, இப்பொழுது ரஷ்ய ஜிஹாதிகளும் பேசப்படுகிறார்கள். 2011ற்குப் பிறகு, அமெரிக்கா சொர்னேவ் சகோதரர்களைப் பற்றி எச்சரித்துள்ளதாக உளவுத்துறை கூறுகிறது[1]. இப்பொழுது ரஷ்யாவை எச்சரித்துள்ளது. ஆனால், சொர்னேவைப் பற்றி முன்னமே ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது[2].எப்படியும் இரு நாடுகளும் தீவிரவாததைத் தொடர்ந்து சந்திக்க வேண்டியுள்ளது. ரஷ்யாவைப் பொறுத்த வரைக்கும், ஜிஹாதிகள் செசன்யா வழியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர்.
செசன்ய தீவிரவாதிகள், 1994லிருந்து ரஷ்யாவில் நடத்தப் பட்ட பல தீவிரவாதங்களுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
- அதில் மிக்கவும் பயங்கரமானது, 2004ல் சுமார் 30 செசன்ய தீவிரவாதிகள் 1,128 மக்களை பேஸியன் பள்ளியில் (Beslan’s secondary school in North Ossetia) பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, தண்ணீர், உணவு இல்லாமல் 50 மணி நேரம் வாட்டி எடுத்தனர். மூன்று நாட்களில் 334 மக்களைக் கொன்றனர், அதில் 186 பேர் சிறுவர்கள் / குழந்தைகள். சமில் பஸேவ் (Shamil Basayev) என்பவன் பொறுப்பேற்றான்[3].
- 2002ல் துப்ரோவ்கா சினிமா தியேட்டரில் சுமார் 40 செசன்ய தீவிரவாதிகள் புகுந்து பார்வையாளர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். வேறு வழியில்லாமல், நச்சு வாயுவை உள்ளே விட்டதால், தீவிவாதிகளோடு சேர்ந்து 130 பேர் இறக்க நேர்ந்தது.
- 2006ல் இவன் கொல்லப்பட்டாலும், சுமார் 15 திவிரவாத செயல்களுக்கு அவன் பொறுப்பேற்றான்.
- சமில் பஸேவ் (Shamil Basayev) இறந்த பிறகு, டோகு உம்ரோவ் (Doku Umarov ) என்பவன் ஜிஹாதி வேலைகளை செய்து வருகிறான், என்று ரஷ்ய உளவுத்துறைக் கூறுகின்றது.[4]
- ஆகஸ்ட் 13, 2007ல் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை தாக்கி 60 மக்களை காயப்படுத்தினர்.
- ஜனவரி 24, 2011 அன்று மாஸ்கோ விமானநிலையத்தில் தாக்குதல் நடத்தியதில் 36 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்[5].
சோவியத் யூனியன் – USSR உடைந்த பிறகுதான், இந்த செசன்ய இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா சோவியத் யூனியன் உடைய அதை பிரயோகித்துள்ளது என்றும் தெரிகிறது. அல்-கைதா, தலிபான் தொடர்புகளும் இதில் காணப்படுகின்றன.
சொர்னேவ் சகோதர்களின் ஜிஹாதி தொடர்புகள் அதிகமாக சந்தேகிக்கப் படுகின்றன: அமெரிக்காவின் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடைபெற்ற வெடிவிபத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செசன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்தனர் என்றும் செய்திகள் வெளியான. இந்தநிலையில் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும், கைது செய்துள்ளனர். இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[6].
சுபைதா சொர்னேவ் – சொர்னேவ் சகோதர்களின் தாயார் ஜிஹாதி பற்றி பேசியது: பாஸ்டன் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சகோதரர்களின் தாயார் சுபைதா சொர்னேவ் (Zubeidat Tsarnaeva), அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளால், 18 மாதங்களுக்கு முன்னால் குறிக்கப்பட்ட தீவிரவாதிகளின் வரிசையில் இடம்பெற்றிருந்ததாகவும் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருவதால் தகவல்கள் வெளியிடப்படக்கூடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சுபையா தீவிரவாதிகளுடன் 2011ல் பேசிய உரையாடலை அமெரிக்கர்கள் பதிவு செய்துள்ளனர்[7]. ஒரு அலங்காரம் செய்யும் பெண்மணியாக வேலை செய்து எந்த சுபைதா, எப்படி ஜிஹாதித்துவத்தால் ஈர்க்கப்பட்டாள் என்பது புதிராக உள்ளது[8]. ஆயினும், அவர்களுடைய தாயார் இதனை மறுத்துள்ளார்[9]. அமெரிக்க ஊடகங்கள் இதைப் பற்றி முரண்பட்ட செய்திகளை[10] வெளியிட்டு வருகின்றன[11].
ரஷ்யா தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த விரும்புகிறது: பாஸ்டனில், செசன்ய தீவிரவாதிகளின் தொடர்பு சந்தேகிக்கப் படுவதாலும், ரஷ்யா அமெரிக்காவிற்கு தகவல்களைக் கொடுத்து உதவியுள்ளதாலும், ரஷ்யா தீவிரவாதிகளால் தாக்கப் படும் என்ற விஷயம் வந்துள்ளதால், ரஷ்யா ரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனால் தான், சந்தேகப்படும் முஸ்லிம்களை கவனித்து வருகின்றது. ரஷ்யக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட மாவட்ட அலுவலகத்தில் இருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்னால், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள், இந்த மசூதிக்கு வந்துசென்றுள்ளனர் என்ற தகவல்கள் மட்டும் கிடைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கட்ஜிமூரத் டொல்கதோவ் (Gadzhimurad Dolgatov) என்ற ஜிஹாதி, சொர்னேவ் சகோதர்களை ஜிஹாதி தாக்கத்தில் வைத்திருந்தான் எனத் தெரிகிறது[12].
இந்தியாவின்நிலை: இப்படி வல்லரசுகள் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளே ஜிஹாதிகளிடம் தவிக்கும் போது, செக்யூலார் இந்தியா என்ன செய்ய முடியும்? மேலும், முஸ்லீம்களிடம் தாஜா செய்து கொண்டு, ஓட்டு வங்கி அரசியலில் உழன்று வரும், இந்திய அரசியல்வாதிகளை, இதைப் பற்றியெல்லாம் பொறுட்படுத்துவதாகவே தெரியவில்லை. அதனால் தான் “இந்திய முஜாஹித்தீன்” என்று ஒஎயர் வைத்துக் கொண்டு, இந்தியாவிலேயே, குண்டுகள் வைத்து, அப்பாவி மக்களைக் கொன்ரு வருகின்றனர். நாளைக்கு இந்திய தலிபான், இந்திய அல்-கைதா என்றெல்லாம் தோன்றினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. அவற்றையும் ஆதரிக்க செக்யூலார்வாதிகள் தயாராக இருப்பார்கள்.
வேதபிரகாஷ்
29-04-2013
[1] http://articles.washingtonpost.com/2013-04-24/world/38791058_1_boston-marathon-database-national-counterterrorism-center
[2] http://voicerussia.com/2013_04_25/Boston-bombing-Russia-warned-FBI-advisors-warned-Obama-terror-continues/
[3] The most notorious attack shook the world in 2004, when over 30 Chechen terrorists captured 1,128 people as hostages in Beslan’s secondary school in North Ossetia, on the first day of the school year, September 1. For more than 50 hours, the hostages were held at gunpoint and denied water, food or medical help. The three-day siege left 334 people dead, 318 of them hostages, including 186 children. Chechen warlord Shamil Basayev claimed responsibility for the terrorist act.
[7] http://www.washingtontimes.com/news/2013/apr/27/dzhokhar-tsarnaevs-mother-terror-database-us-inves/?utm_source=RSS_Feed&utm_medium=RSS
[8] http://www.theaustralian.com.au/in-depth/boston-bombings/the-life-of-zubeidat-tsarnaeva-from-migrant-beautician-to-terrorism-matriarch/story-fni3117f-1226631360394
அண்மைய பின்னூட்டங்கள்