மைசூர் மஹாராஜாவும், திப்பு சுல்தானும்: திப்பு சுல்தான் உடையாரிடமிருந்து அரசை அபகரித்துக் கொண்டான். தானாக எந்த அரசையும் உருவாக்கிவிடவில்லை. அப்பொழுது, கர்நாடகம் “மைசூர்” கலாச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. “மைசூர் மஹாராஜா” என்று ஒரு மதிப்பு இருந்தது. “நீ என்ன பெரிய மைசூர் மஹாராஜாவா?” என்று சாதாரண மக்கள் கேட்கும் அளவுக்கு அவர் இருந்தார். கலை, விஞ்ஞானம், இசை போன்றவை ஆதரிக்கப்பட்டன. இதனால், “மைசூர்” என்ற அடைமொழியுடன் பல வார்த்தைகள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இசை, கலை என்று பல உருவாகின. சமையலைப் பொறுத்த வரையில் மைசூர் பாகு, மைசூர் ரசம், மைசூர் போண்டா, மைசூர் பகோடா, என்று அன்றும், மைசூர் சந்தன சோப், மைசூர்பா என்று இன்றும் பல தோன்றின. கர்நாடக சங்கீதம், இசை என்ற வழக்கும் உருவாகின. கலைஞர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், என்று பலரும் மைசூர் அரசால் ஆதரிக்கப்பட்டனர். ஆனால், திப்புவின் ஆட்சியில் பாரசீகத் திணிப்பு இவற்றை தடுத்தது. ஜிஹாதி மதவெறியில் அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பது மட்டில், அவன் இந்திய தேசியவாதியாகி விட முடியாது. தன்னுடைய வாழ்விற்காக அவன் பலவழிகளைக் கையாண்டான். பிரான்ஸ், இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டதும் அதற்காகத்தான். ஜிஹாத் மூலம் இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று தனது கடிதங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.
“கத்தி அல்லது குல்லா” மற்றும் “திப்புவின் கத்தி”: “கத்தி அல்லது குல்லா” என்ற கொள்கையைத்தான் கடைபிடித்தான்[1]. ஆனால், முஸ்லிம் ஆசிரியர்கள் அவற்றை வேறுவிதமாக திரித்து விளக்கம் கொடுத்து, அவனை “ஆங்கிலேருக்கு எதிரான போராளி” போன்று சித்தரிக்கின்றனர்[2]. “கத்தி” என்றால் கத்தி முனையில் மதமாற்றம், அதாவது, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள் அல்லது செத்து மடி”, என்ற குரூரமான கொள்கையைக் கடைபிடித்தான். அதனால் “கத்தி” என்றால், “இந்துக்களுக்கு சாவு” என்ற பொருளாகியது. அதனால் தான் “திப்புவின் கத்தி” (The sword of Tipu Sultan) என்றபோது, அவர்கள் அதனை எதிர்த்தனர். ஏனெனில், அது அவர்களின் மதம், கலாச்சாரம் மற்றும் தேசிய கௌரவத்தை இழிவுபடுத்துவதாக இருந்தது. ஆனால், மல்லையா போன்றவர்கள் அதனை ஆதரிக்க முயன்றனர். கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், அப்பொழுதைய கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[3].
“திப்பு” மற்றும் “திப்புவின் கத்தி” – தீயசக்திகளின் சின்னங்கள்: கர்நாடகா மற்றும் கேரள கடற்கரையில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றும், மதமாற்றம் செய்தும், குரூரங்களை செய்ததால், திப்பு ஒரு தீயசக்தி, துர்தேவதை (evil force), விலக்கப்பட வேண்டியது ஒன்று, “சபிக்கப்பட்ட பெயர்” (cursed name) என்ற விதத்தில் கருதப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் கூட அப்பெயரை தங்களது குழந்தைகளுக்கு வைப்பதில்லை. அவர்களது பாஷையில் சொல்வதானால், இரண்டுமே “சைத்தானின் சின்னங்கள்” ஆகும்[4]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது கர்நாடகாவில் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அத்தகைய தீய சக்தி, தீய சின்னங்களை வைத்து ஆதாயம் தேட பார்க்கின்றன. ஆனால், இவற்றைப் பின்பற்றியவர்கள் அழிவைத்தான் தேடினர்.
தியசக்தி திப்பு அழிவை ஏற்படுத்தும் என்பது நிரூபனமானது: திப்பு சுல்தான் கத்தி [“Sword of Tipu Sultan”] என்ற தொலைக்காட்சி தொடரை தூர்தர்ஷனில் 1990ல் காண்பித்தனர், பிப்ரவரி 8. 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர்[5]. இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[6]. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது. கத்தியை வாங்கிய மல்லையாவும் திவாலா நிலையை அடைந்து, பல குடும்பங்களின் வாழ்க்கையினைக் கெடுத்தான். இப்பொழுதும், சித்தராமைய்யாவின் “திப்பு ஜெயந்தி” இரண்டு உயிர்பலிகளைக் கொண்டது. இன்னும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும்.
திப்புவின் ஜோதிட நம்பிக்கை: திப்புவுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருந்தது. இதனால், தனது அரசவையில் பிரத்யேகமாக ஜோதிடர்களை வைத்திருந்தான். அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தான். இவ்விதத்தில் தான் அவன் சில கோவில்களுக்கு மானியம் கொடுத்தது, பூஜை செய்தது போன்றவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. இந்துமதத்தின் மீதான மதிப்பு அல்லது உண்மையிலேயே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் 1790ற்குப் பிறகு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதால், அவனது அத்தகைய ஈடுபாடு அதிகமாகியது. சிருங்கேரி சங்கராச்சாரியுடனான தொடர்பும் இவ்வகையில் ஏற்பட்டது தான். அவருடைய காலில் விழுந்தான் என்றும் குறிப்புகள் உள்ளன[7]. இதையெல்லாம், ஆசாரமான முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?
ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி: ஔரங்கசீப் கூட கோவில்களுக்கு மானிய வழங்கினான் என்று சில சரித்திராசிரியர்கள் எழுதுகிறார்கள். இதெல்லாம், இக்கால கருணாநிதி போன்றது. அவரும் தங்களால் தான் திருவாரூர் ஆழித்தேர் ஓடியது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில் அந்த ஆளின் இந்து-விரோதத்தை எல்லோரும் அறிவர். அவர் காலத்திலும் சில கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடந்தது. அதாவது முதலமைச்சர் என்ற ரீதியில், இந்து அறநிலைத் துறையின் கீழ் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதால், அழைப்பு இதழ்களில் முதல் பக்கத்திலேயே, கருணாநிதியின் புகைப்படம் தான் போடப்பட்டது. இதெல்லாம் சாதாரண விசயம். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும், அவை தானாக நடந்திருக்கும். அதாவது பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதினால், அரசு ஆதரவு இருந்தாலும், இல்லாமலிருந்தாலும், காலக்கிரமப்படி நடக்கவேண்டிய கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். கருணாநிதிக்கும் ஜோதிட நம்பிக்கை உள்ளது. ஆகவே, இவர்கள் (ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி) கோவில்களுக்கு மானியம் கொடுத்தது அந்த ரீதியில் தான்! இனி திப்பு விவகாரத்தை விவரரமாகப் பார்ப்போம்.
© வேதபிரகாஷ்
13-11-2015
[1] Tipu Sultan’s notorious jihâd – Islamic war-slogan – was SWORD (death) or CAP (Islamic honour, i.e. forcible conversion), a cruel option for a hapless Hindu population.
[2] Prof. B. Shaik Ali, International Relations of Tipu Sultan, Islamic Voice, Monthly, Vol 13-02 No:146 * FEBRUARY 1999/ RAMADAN 1419H ;email: editor@islamicvoice.com
http://islamicvoice.com/february.99/tippu.htm=
[3] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.
http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm
[4] If Tipu Sultan was a much-loved and respected Muslim ruler, as claimed by his present-day admirers, why is it that even Muslim do not name their children as Tipu, either in Mysore or in Malabar? Obviously, the name itself is a cursed name. Anyway, that is the belief in the entire West Coast and Mysore
[5] http://indiatoday.intoday.in/story/studio-fire-during-shooting-of-tele-serial-the-sword-of-tipu-sultan-kills-more-than-40/1/323127.html
[6] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html
[7] When the astrologers predicted an approaching malefic period from 1790 onwards and the combined forces of the British, the Nizam and the Marathas started surrounding Srirangapatanam, Tipu Sultan panicked and therefore did some good deeds – offering land-grants and even pujas and feeding Brahmin – mainly to ward off the evil effects and to get assistance from his Hindu subjects in his war efforts. He was reported to have even fallen prostrate before His Holiness Sringeri Shankaracharya and sought the latter’s pardon and blessings (Sakthan Thampuran by P. Raman Menon, and History of Mysore by Lewis Rice).
அண்மைய பின்னூட்டங்கள்