Archive for the ‘சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம்’ category

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

மே 31, 2019

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்புஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம்ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

Terror threat remains in Lamka 01-05-2019

எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.

29-04-2019 Lankan blast link with Kerala.3

30-04-2019 Kerala Lanka terror link

ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

Terror suspects sarched in TN following Lankan blast 02-05-2019

Lankan bombers in Bangalore, alert, 05-05-2019

பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
IS inked searched in and seizedTN by NIA 21-05-2019

Lankan bombers tained in Kashmir, 05-05-2019

ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

29-04-2019 LLankan blast link wit Kerala

Sri Lankan terrorists instigated by the TN counterparts- Buddhist priest accused

இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

IS inked arrested fromTN by NIA 22-05-2019

NIA arrests Faizal from Kerala 09-05-2019

31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

31-05-2019

IS claim that they opened a branch in India 15-05-2019

[1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்புசென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26

[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf

[3]  தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM

[4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf

“அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று கத்தி, நடுத்தெருவில் கோடலியால் வெட்டிக் கொன்ற தீவிரவாதிகள்!

மே 25, 2013

“அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று கத்தி, நடுத்தெருவில் கோடலியால் வெட்டிக் கொன்ற தீவிரவாதிகள்!

London terrorist Woowich2005ற்குப் பிறக்கும் நடக்கும் தீவிரவாதச் செயல்: ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். 2005 தாக்குதலுக்குப் பிறகு, சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமிஸ்டுகளின் தாக்குதல் என்று அறியப்படுவதாக லண்டன் போலீஸார் கூறியுள்ளனர்[1]. அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவம், ஆப்கன் மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து, 2005ம் ஆண்டு, பிரிட்டனில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐடிவியில் கட்டப்பட்ட வீடியோவில்[2], ரத்தக்கறைப் படிந்த கைகள், ஒரு கையில் கோடாலியுடன், அந்த தீவிரவாதி பேசுவது பயங்கரமாகத் தான் இருந்தது, “அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்”, என்று வெறிபிடித்தவன் போல பேசினான்.

London terrorist speaking with axe and bloodநடுத்தெருவில் கழுத்தை வெட்டிய தீவிரவாதிகள்: பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை, இரு இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். சாலையில் பலர் சென்று கொண்டிருந்த நிலையில், காரில் இருந்த ராணுவ வீரர், என்ன, ஏது என கேட்கும் போதே, அவரை கீழே இழுத்து போட்ட அந்த நபர்கள், ஆட்டின் கழுத்தை நறுக்குவது போல, வீரரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3].  லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்றுள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர்[4]. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்[5].

London terrorist speaking with axe and blood2“அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் வேலையா என்ற சந்தேகம்: இங்கிலாந்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஆராய்ந்தால், ஐந்தில் ஒருவர் “அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் உறுப்பைனராக இருப்பது தெரிய வருகிறது[6]. அதுமட்டுமல்லாது, அத்தகைய குற்றங்கள் புரிந்து தண்டனைக்குள்ளானவர்களும் அந்த இயக்கரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்[7]. இன்று இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் செய்தித்துறை வல்லுனர்கள் உள்ளூர் தீவிரவாதம், உள்ளூரில் வளர்ந்த தீவிரவாதம், உள்ளூரில் வளர்த்து விட்ட தீவிரவாதம், என்று “இந்திய முஜாஹித்தீன்” போன்ற இயக்கங்களைக் குறிப்பிட்டு வருகின்றனர். எனவே அவ்வாறு பார்க்கும் போது, இது இங்கிலாந்தின் உள்ளூர் தீவிரவாதம் எனலாம். “அல்-முஹாஜிரோன்” முதலில் சவுதி அரேபிடயாவில் 1983ல் ஒமர் பக்ரி முஹம்மது என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் 1986ல் அதற்கு அங்கு தடைவிதிக்கப் பட்டவுடன், பக்ரி இங்கிலாந்துக்கு ஓடி வந்துவிட்டார்[8]. ஹிஜ் உத்-தஹ்ரீர் என்ற சர்ச்சைக்குரிய இயக்கத்தில் 1996ல் சேர்ந்தார், ஆனால், அது தனக்கேற்ற வகையில் தீவிரமாக செயல்படுவதில்லை என்று “அல்-முஹாஜிரோன்” என்ற தனது இயக்கத்தை ஆரம்பித்தார்[9]. இதற்கு தலைவராக அவரும், சௌத்ரி என்பார் துணைத்தலைவருமாக உள்ளனர். 11/9ற்குப் பிறகு “மிகச்சிறந்த 19” என்ற கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து, அதில் ஜூலை 7 வெடிகுண்டு போட்டவர்களை “அபாரமான தீரர் 4” என்று போற்றிப் புகழ்ந்தார்[10]. அதாவது, அவ்வாறு உள்ளூர் தீவிரவாதத்தை வளர்த்தார்.

al-Muhajiroun head Mohammed Bakriவெட்டிய தீவிரவாதிகள் பிடிப்பட்டது: நடப்பது சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என, அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கருதினர். ஆனால், கழுத்தறுக்கப்பட்ட ராணுவ வீரர், ரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்ததும், அலறினர். முதலுதவி ; இங்கிரிட் லோயா – கென்னட் என்ற பெண், ஓடிச் சென்று, கழுத்தறுபட்ட ராணுவ வீரரை தூக்கி, மடியில் கிடத்தி, உயிரைக் காப்பாற்ற, முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார். இதனால், கோபம் கொண்ட அந்த இரு இளைஞர்களும், அவளை தாக்க முற்பட்டனர். ரத்தம் சொட்டும் கத்திகளுடன், அவர்கள், அந்தப் பெண்ணை அணுகினர். அவர்களைக் கண்ட, இங்கிரிட் லோயா, “நீங்கள் செய்தது படுகொலை; எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” என, கோபமாக கேட்டார். “இவன், ஆப்கன் சென்று, அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்தவன். அவனை பழிவாங்கவே இவ்வாறு செய்தோம். பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண் அல்லா………. ,” என, கத்தினர்[11]. இவ்வாறு, லோயாவுக்கும், பயங்கரவாதிகள் இருவருக்கும், கோபாவேசமாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, தைரியம் அடைந்த சிலர், அந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில், சிலர், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சுற்றி வளைத்தவர்களை நோக்கி, ரிவால்வரை நீட்டிய இளைஞர்கள், சுட்டு விடுவதாக மிரட்டினர். தகவல் அறிந்து, அங்கு வந்த போலீசார், நிலைமையை சட்டென புரிந்து, ரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்றிருந்த இரு இளைஞர்களையும், காலில் சுட்டு, கீழே வீழ்த்தினர். உடனடியாக பாய்ந்து, கை விலங்கிட்டு, அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர். ஏராளமான ரத்தம் வெளியேறியதால், கழுத்தறுபட்ட ராணுவ வீரர், அந்த இடத்திலேயே இறந்தார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், படுகாயமடைந்த பயங்கரவாதிகள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Anjem Choudary with mike deuty of al-muhajiroonடேவிட் கேமரூன் நாடு திரும்பினார்: பிரதமர் திரும்பினார், சம்பவம் பற்றி அறிந்ததும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, லண்டன் திரும்பினார். “கோப்ரா’ என்ற பெயரிலான, உயர் மட்ட அவசர நிலை கூட்டத்தைக் கூட்டி, நிலைமை குறித்து விவாதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ராணுவ முகாம்களுக்கும், ராணுவ கட்டடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது; மசூதிகள் மற்றும் முஸ்லிம்கள் கூடும் இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. “ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது, பயங்கரவாத தாக்குதல் சம்பவம்’ என, பிரதமர், டேவிட் கேமரூன் அறிவித்ததும், லண்டனில் சில இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்தவர் மற்றும், பதிலுக்குப் பதில், வன்முறையில் ஈடுபட திட்டமிட்ட மற்றொருவர் என, இருவர் கைது செய்யப்பட்டனர்.

இங்கிரிட் லோயாவுக்கு நன்றி: பயங்கரவாதிகளிடம் பேச்சு கொடுத்து, அவர்கள் தப்பாமல் தடுத்து நிறுத்திய, இங்கிரிட் லோயாவுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவரால் தான், மேலும் சில வீரர்கள் படுகொலையில் இருந்து தப்பினர் எனக் கூறி, நன்றி கூறினர். இது குறித்து லோயா கூறும் போது, “நான் முன்னர், நர்சாக பணியாற்றியுள்ளேன் என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டேன். என்னை அவர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்களுடன் கோபமாக பேசி, அவர்கள் கவனத்தை திசை திருப்பினேன். அவர்கள் வசம், ரிவால்வர் போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்த நான், அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ந்து பேச்சு கொடுத்தேன். இல்லையேல், அவர்கள் பலரை சுட்டுக் கொன்றிருப்பர்,” என்றார்.


[3] தினமலர், லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: பிரிட்டன் ராணுவ வீரரை கழுத்தறுத்து கொ;ன்ற பயங்கரவாதிகள் தினமலர்பதிவு செய்த நாள் : மே 24,2013,00:18 IST; http://www.dinamalar.com/news_detail.asp?id=719707

[6] A study shows that one in five terrorists convicted in Britain over more than a decade were either members of or had previous links to the extremist group al-Muhajiroun. Telegraph, London dated Saturday 25 May 2013

[8] Al-Muhajiroun was first founded by the hate cleric Omar Bakri Muhammad in Saudi Arabia in 1983 but was banned there three years later and Bakri fled to the UK.

http://www.telegraph.co.uk/news/uknews/terrorism-in-the-uk/10079827/Woolwich-attack-Al-Muhajiroun-linked-to-one-in-five-terrorist-convictions.html

[9] He first joined Hizb ut-Tahrir but left the controversial organisation in 1996, because it was not extreme enough for him, and he relaunched Al-Muhajiroun, along with his deputy Choudary.

http://www.telegraph.co.uk/news/uknews/terrorism-in-the-uk/10079827/Woolwich-attack-Al-Muhajiroun-linked-to-one-in-five-terrorist-convictions.html

[10] Bakri helped organise a seminar after the September 11 attacks in favour of the “Magnificent 19” and went on to call the July 7 bombers the “Fantastic Four”.

http://www.telegraph.co.uk/news/uknews/terrorism-in-the-uk/10079827/Woolwich-attack-Al-Muhajiroun-linked-to-one-in-five-terrorist-convictions.html

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

மார்ச் 1, 2013

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

Bangladesh - India

பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!

Bangladesh protesters against Capital punishment

ஜமாத்இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].

  • மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
  • பல கிராமங்களை கொள்ளையடித்தது
  • பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
  • அப்பவி மக்களைக் கொன்றது
  • பெண்களைக் கற்பழித்தது
  • இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
  • அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.

போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.

The peoples verdict -Giant hoardings demand the hanging of war criminals

கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

Supporters at Shabag square Bangladesh 2013

தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].

Bangladeshi- absconding Terrorists

தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

My jihad is bomb your country

இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

28-02-2013


[2] Prosecutors accused him of involvement in looting and burning villages, raping women and forcing members of religious minorities to convert to Islam during the war.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[4] “As judges of this tribunal, we firmly hold and believe in the doctrine that ‘justice in the future cannot be achieved unless injustice of the past is addressed,’ ” Justice A. T. M. Fazle Kabir commented in a written summary of the judgment.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.

[7] Just adjacent to the Bangbandhu medical college, and not far away from the Prime Minister’s residence, it has become home to thousands of students, doctors, artists, government officials and landless workers who have made it their abode amid chants of “phaansi” to traitors and “traitors go to Pakistan”.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2286185/Shahbag-Square-cheers-change-Dhakas-young-protesters-demand-ban-extremism-death-war-criminals.html?ito=feeds-newsxml

[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

ஓகஸ்ட் 14, 2012

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தே, ராஸா அகடெமி இந்த எதிர்ப்பு-போராட்டம் நடத்தியதோடல்லாமல், மற்றொரு கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பாகவே தங்களுக்கும், கடலவரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வேறு வெளியிட்டிருக்கிறது.

ராஸா அகெடமியின் மற்ற தேசிய விரோத செயல்கள் என்று கீழ்கண்டவை எடுத்துக் காட்டப்படுகின்றன:

  • Raza Academy’s president Yusuf Raza was involved in provoking the Muslims during 2007 riot in Bhivandi and killing 2 policemen by setting them on fire. He was arrested also in the incident.
  • Raza Academy issued a Fatwa to kill Mr. Charles Moor, journalist of London-based renowned daily ‘Telegraph’ under the charge that he insulted Prophet Mohammad. The press statement is available at the Academy’s website.
  • In January 2012, Mr. Salman Rushdie was to attend a book exhibition in Jaipur, Rajasthan. To oppose him, the Academy declared that ‘he who will slap him with a shoe will be given a reward of Rs.1 lakh’.

 

வாரணாசி / காசியில் குண்டு மறுபடியும் வெடித்ததில் ஒரு பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது, 35 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்

திசெம்பர் 8, 2010

வாரணாசி / காசியில் குண்டு மறுபடியும் வெடித்ததில் ஒரு பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது, 35 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்.

முஜாஜித்தீனின் ஜிஹாதி குண்டுக்கொலை வெறியாட்டம்: ஊடகங்களுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில், “அல் அர்பி” என்ற பெயரில் கையெழுத்திட்டு, மும்பையின் மலாட் என்ற இடத்திலிருந்து மொபைல் மூலமாக ஈ-மெயிலில் இந்திய முஜாஜித்தீன் தாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்[1]. அதாவது, கம்பூட்டரிலிருந்து மொபைலுக்கு மாறியுள்ளனர் ஜிஹாதிகள். அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது[2], “பாபரி மஸ்ஜித் முஸ்லீம்களுக்கு திரும்ப அளிக்கும் வரை இந்த தேதி இந்துக்களை பீடித்துக் கொண்டே இருக்கும்”.

இந்திய முஜாஜித்தீன்: இதனை உள்ளூர் தீவிரவாத கும்பல், சொந்தமண்ணின் ஜிஹாதி அல்லது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எது எப்படியாகிலும், வளர்த்த கடா முட்டுகின்ற கதையாகத்தான் உள்ளது. ஆமாம், இந்திய முஸ்லீம்கள் எல்லாம் நேரிடையாக அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்பதால்தான், இதனையிப்படி அழைக்கிறார்கள் போலும். ஆனால், விளைவு என்னமோ அத்தகைய அரேபிய தீவிரவாதம், பயங்கரவாத குரூரங்களைக் கொண்டு தான் இந்த வகையும் உள்ளது. போதை மருந்து உண்டவன் தாயையே, சகோதரியையே, ஏன் மகளைக்கூட  கற்பழிப்பானாம், அது போல இந்த வகையும், சொந்தங்களையே கொன்று குவித்து வருகிறது. இதை பச்சைத் தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம், என்றெல்லாம் சொல்லமல் இருப்பச்து நோக்கத்தக்க்கது.

 

இரண்டு வயது குழந்தை பரிதாபமாகக் கொல்லப்பட்டது: குண்டு வெடித்து சிதறிய துகள்கள் வயற்றில் குத்தியதால், குழந்தை பரிதாபமாகக் கொல்லப்பட்டது. பிஞ்சு உடல் தாங்குமா, அதைவிட, அந்த கோவாப் படுகொலைகள் போல, அந்த குழந்தையை, சுவரில் அடித்தே கொன்றிருக்கலாம். தொழிற்நுட்பம் மாறியதால் குண்டு வெடித்து கொல்கிறார்கள் போலும். இனியும் எத்தனை குழந்தைகளை அலியிடப்போகிறாறர்களோ தெரியவில்லை.

வாரணாசியில் வெறியாட்டம்: இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களின் ஒன்றான வாரணாசியில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கங்கை ஆற்றின் கரையோரத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக “ஷீட்லா காட்” / தச-அஸ்வமேதகட் பகுதியில் சுமார் 5000 பக்தர்கள் வழக்கம்போல திரண்டிருந்தனர்[3].

ஆரத்தி எடுத்து, பக்தி பரவசத்தில் இருக்கும்போது குண்டு வெடிப்பு: ஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பக்தர்களிடையே பதற்றம் நிலவியது .வாரணாசியில் இன்று மாலை வழக்கம் போல ஆரத்தி நடக்கும் வேலையில், திடீரென்று கண்டு வெடித்ததில், 20 க்கும் மேற்மட்டவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தன்மை, உபயோகப்படுத்தப்பட்டுள்ள வெடிபொருள் விவரங்கள் முதலியன தெரியவில்லை என்றாலும், அங்கு, அவ்வேளையில், பிரார்த்தனை நேரத்தில் கண்டு வெடிப்பு நிகழ்த்தியுள்ளது, மிகவும் கூரூரமான மனித உருவிலுள்ள மிருகத்தின் மனத்தைக் காட்டுகிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், 7 அல்லது 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சேதங்கள் குறித்த முழுமையான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு மிகச்சிறிய குண்டுவெடிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டும், உள்ளூர் ஜிஹாதியும்: உள்ளூர் தீவிரவாத கும்பல், சொந்தமண்ணின் ஜிஹாதி அல்லது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் “உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு” என்ற முறை இத்தீவிரவாதிகளால் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கும் அதேமுறையிலான குண்டுதான் உபயோகப்படுத்தப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2006ல் லஸ்கர் தீவிரவாதிகளால் குண்டுகள் வெடிக்கப்பட்டதில் குறைந்த அட்சம் 29 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்தனர். ஆனால் இந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. குண்டு வைத்தவன், அந்த பகுதிகளை நன்றாக அறிந்தவனாக இருக்கிறான். பலதடவை வந்து நோட்டமிட்டும் இருக்கிறான் என்றது நன்றாகவே தெரிகிறது. உள்ளூர் ஜிஹாதி என்றால் அப்படித்தான் இருப்பார்கள் போல இருக்கிறது. சன் டிவியின் ஊடக குண்டு வெடிப்பிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றும் ஆராய வேண்டியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் நடத்திய முஸ்லீம்கள் போராட்டம் / ஆர்பாட்டம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி சங் பரிவாரங்களால் இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இருந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்டித் தரவேண்டும் என்றும் மசூதி இடிப்பில் தொடர்புடைய பாஜக தலைவர்களான எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்களைக் கைது செய்யக் கோரி ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. 06-12-2010 அன்று கோயம்புத்தூரில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமுமுக பொதுச் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உயர் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் நியாயமான தீர்ப்பு விரைவில் வழங்கவேண்டும்[4]. இந்தப் பிரச்சனை தீரும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்று கூறினார்.

தீவிரவாதிகளை ஆதரித்து பேசுகின்றவவர்களுக்கு பாதுகாப்பு, மற்றவர்களுக்கு கைது: இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை வெற்றி தினமாக அறிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தமுமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இத்தகைய பாரபட்ச போக்கும் தீவிரவாத்தை ஊக்குவிக்கத்தான் செய்கிறது. அதாவது தங்களை ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் மனதில் வளர்கிறது. அமைதியாக வாழவேண்டும் என்றால், முஸ்லீம்கள் இத்தகைய ஆக்ரோசத்தன்மை, எதிர்ப்புத்தன்மை, எதிரித்தன்மை, விரோத மனப்பாங்கு முதலியவற்றை விடவேண்டும், இல்லையெனில், ஊடகங்கள் அயமுறுத்துவது போல, உண்மையிலேயயே ஆரஞ்சு தீவிரவாதம் வந்தாலும் வரலாம்.

வேதபிரகா

08-12-2010


[4] இவர்கள் எப்படி அந்த ஜிஹாதிகள் மாதிரியே, அதே வாந்த்தைகளை, மொழியை உபயோகிக்கின்றனர் என்அதை நோக்கத்தக்கது.