Archive for the ‘சொந்தமண்ணின் ஜிஹாதி’ category
மே 31, 2019
ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.


ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
31-05-2019

[1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்பு– சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26
[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf
[3] தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM
[4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf
பிரிவுகள்: அழுக்கு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழம், உளவாளி, உளவு, உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், கிருத்துவர், கிருஸ்துவர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சிறுபான்மையினர், சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்
Tags: இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாம் ஜிஹாதி, ஈழ குண்டுவெடிப்பு, ஈழ ஜிஹாதி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், காஷ்மீர், கேரள ஜிஹாதி, கேரளா, சர்ச், சிரியா, சூபி-ஜிஹாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தவ்ஹீத் ஜமாத், நாசவேலை, பெங்களூரு, ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு, ஶ்ரீலங்க ஜிஹாதி, ஶ்ரீலங்கை ஜிஹாதி
Comments: Be the first to comment
ஜூலை 13, 2017
அப்பாவி அமர்நாத் யாத்திரிகர்களை சுட்டுக் கொன்ற லஸ்கர்-இஸ்லாமிய தீவிரவாதிகள் (1)

10-07-2017 திங்கட்கிழமை அன்று குஜராத்திலிருந்து வந்த யாத்திரிகர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்து வருகிறார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும் இப்பயணத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த 2017 ஆண்டின் யாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாள்களாகத் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்திருப்பதாலும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் 10-07-2017 அன்று ஜிஹாதி-இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு பேரூந்தை மடக்கி சுட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர், சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூட்டில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் படுகொலை, 21 பேர் படுகாயம்: அமர்நாத் யாத்திரை முடிந்து, வைஷ்ணவ தேவி வழிபாடு செய்து திரும்பும் போது, பஇக்கில் வந்த நான்கு பேர் வழிமறித்தனர். டிரைவர் முதலி நிறுத்த யத்தனித்த போது, சுட ஆரம்பித்ததால், வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். பிறகு போலீஸ் க்ஷ்செக்போஸ்டில் வந்து நிறுத்தினார். ஸ்ரீநகரில் காஷ்மீர் பகுதியின் காவல்துறை தலைமையதிகாரி முனீர்கானின் கருத்துப்படி, அனந்த்நாகில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என்றாலும், இதற்கு சூத்திரதாரி, பாகிஸ்தான் தீவிரவாதி அபு இஸ்மாயில்[1]. யாத்திரிகர்களை சுட்ட தீவிரவாதிகள் நான்கு பேர், அதில் இருவர் பாகிஸ்தானியர் மற்ற இருவர் உள்ளூர் தீவிரவாதிக்கள் என்று உளவுத்துறை கூறுகிறது. அபு இஸ்மாயில்,, லஸ்கர்-இ-தொய்பாவின் தளபதி ஆவான்[2]. மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டுவிட்டு சென்றதால், அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்[3].இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் என தெரியவந்து இருக்கிறது[4].

பொறுப்பேற்ற லஷ்கர்–இ–தொய்பா தளபதி அபு இஸ்மாயில்[5]: அபு இஸ்மாயில் வேலை செய்து வருவதை உள்ளூர்வாசிகள் அறிவர். [6]. இருப்பினும், உள்ளூர்வாசிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து, மறைத்து வருவதால், உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதையடுத்து, அபு இஸ்மாயிலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது[7]. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அபு இஸ்மாயில் ஓராண்டுக்கு முன்பே தெற்கு காஷ்மீரில் தனது தளத்தை உருவாக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முசபராபாதில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும், உள்ளூர்வாசிகள் ஆதாரவாலும், அப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாலும், அவர்களைப் பிடிக்க கடினமாக இருக்கிறது. இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்களுக்குள் வரும் போதுதான், மோதல் ஏற்படும் போது, அவர்கள் கொல்லப்படுகின்றனர். அதுவரை அவர்கள் தீவிரவாத செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்கள்[8].

கொல்லப்பட்ட யாத்திரிகர்களின் பரிதாபகரமான நிலை, உறவினர்கள் கொடுத்த தகவல்கள்: தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுனர் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர். மாவட்ட மருத்துவமனை, காயமடைந்த யாத்ரீகர்களால் நிறைந்திருந்தது. சுமார் 16 பேர் இருந்தார்கள். சிலர் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் இருந்தார்கள். சிலருக்கு வெட்டு மற்றும் சிராய்ப்புக் காயங்கள். அவர்களில், பஸ் உரிமையாளர் ஹர்ஷும் ஒருவர். “5-6 துப்பாக்கிதாரிகள் எங்கள் பஸ் முன் வந்து கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். “சரமாரியாக கற்களையும் வீசினார்கள். பஸ்ஸை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னேன்”[9]. ஹர்ஷும், பெரும்பலான யாத்ரீகர்களும், குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஹிமாலய மலையில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்கு 08-07-2017 அன்று சென்றுவிட்டு, ஜம்மு அருகே உள்ள வைஷ்ணவதேவி கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். ஷ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை 10-07-2017 இரவு 8 மணிக்குப் பிறகு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்தார். அவரது இரு சகோதரிகளும் அவருடன் பயணித்தார்கள். “எனக்கு அருகில் அமர்ந்திருத்த என் சகோதரி, இருக்கையிலேயே இறந்துவிட்டார். எனக்குப் பின்னால் இருந்தவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் மட்டும் தப்பிவிட்டேன்”.

அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்கள்; மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், கால்களில் லேசாக காயமடைந்திருந்தார். “எனக்கு காயம் சிறிதுதான். ஆனால் என் சோகம் பெரியது. இந்தத் தாக்குதலில் எனது உறவினரை இழந்துவிட்டேன்”. மருத்துவமனை ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோதே, போலீசார் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களது ஆடை, போர்வைகளில் ரத்தக்கறையாக இருந்தது. போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸுகள் எடுத்துச் சென்று கொண்டிருந்தன. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தார்கள். அனந்த்நாக் நகர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதைப் போல் இருந்தது. அப்பாவி மக்கள் இவ்வாறு கொலைசெய்யப் படுவதை, இஸ்லாமியர், தமது ஜிஹாத்துவம் பெயரில் நியாயப்படுத்துகிறார்கள். இன்றுவரையில், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், நேரிடையாக கண்டிக்காமல், தாக்குதல் “காஷ்மீரியத்திற்கு” எதிரானது என்று தான் சொல்வதை கவனிக்க வேண்டும்.

“காஷ்மீரியத்” ஏன் இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளது?: “காஷ்மீயத்” என்கின்ற காஷ்மீரத் தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு என்றால், இந்துக்களுக்கு எதிராக ஏன், எப்படி, எவ்வாறு இஸ்லாம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், பதில் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள். எல்லோருமே ம்,அதம் மாற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தைத் தான், மறைமுகமாக சொல்லி வருகிறார்கள். “ஆஜாத் காஷ்மீர்” போர்வையில் இந்த மனிதத்தன்மையற்ற கொலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்துக்களின் மக்கட்தொகை அடியோடு குறைந்து விட்டது. 1980களிலிருந்து வளர்ந்து வரும் தீவிரவாதத்தினால் லட்சக்கணக்கான இந்துக்கள் வெளியேறி விட்டனர், அவர்கள் தில்லியில் கூடாரங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதைப்பற்றியெல்லாம், மிகச்சிலரே எடுத்துக் காட்டிப் பேசி வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
12-07-2017

[1] http://www.bbc.com/tamil/40571715
[2] Times of India, Two Pakistanis among 4 terrorists involved in attack on Amarnath pilgrims: Government, PTI | Updated: Jul 12, 2017, 11:36 PM IST.
[3] http://timesofindia.indiatimes.com/india/two-pakistanis-among-4-terrorists-involved-in-terror-attack-on-amarnath-pilgrims-government/articleshow/59565360.cms
[4] தினத்தந்தி, அமர்நாத் தாக்குதலுக்கு காரணமான அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை, ஜூலை 12, 2017, 12:40 PM
[5] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP. Meanwhile LeT issued a statement early morning on Tuesday, condemning the attacks and calling it “reprehensible and unIslamic.” “Islam does not allow violence against any faith. We strongly condemn such acts,” the outfit’s spokesperson Abdullah Ghaznavi said in a statement. While LeT still remains primary suspects in the case, the outfit’s denial in Monday’s attacks is the first of its kind. The outfit, which previously has also attacked Amarnath pilgrims, has never earlier issued a denial.
[6] http://www.dailythanthi.com/News/India/2017/07/12124001/Amarnath-terror-strike-Hunt-on-for-LeT-commander-Abu.vpf
[7] தினமலர், யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்., பயங்கரவாதி, பதிவு செய்த நாள்: ஜூலை.11, 2017.15:17
http://www.dinamalar.com/news_detail.asp?id=1809899
[8] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP.
http://www.news18.com/news/india/amarnath-yatra-terror-attack-abu-ismail-the-man-who-could-be-let-boss-in-cross-hairs-1457911.html
[9] http://www.bbc.com/tamil/india-40565476
பிரிவுகள்: 786, ஃபிதாயீன், அழிவு, சலாபிசம், சலாபிஸம், சாவு, சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜமாத்-உத்-தாவா, ஜமாத்-உல்-தாவா, ஜிஹாதி, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, தாலிபான், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகள், Uncategorized
Tags: ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தீவிரவாதம், தீவிரவாதி, பயங்கரவாதம், லஸ்கர்-இ-டொய்பா, லஸ்கர்-இ-தொய்பா
Comments: Be the first to comment
ஜூன் 25, 2017
ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – இளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2)

இளம்பெண்களின் மீது ஏன் குறி வைக்கப் படுகிறது?: இந்தியாவில் கேரளாவிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இந்து இளம்பெண்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்து தீவிரவாதப் பணிகளுக்குப் பயன்படுத்தவென்றே ஒரு கும்பல் இந்தியா வந்திறங்கியிருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அஜண்டாவே; குடும்பத்தின் போதிய அரவணைப்பின்றி அனாதையாக தன்னை உணரக் கூடிய இந்து இளம்பெண்களை அடையாளம் கண்டு அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக மூளைச் சலவை செய்து தங்களது நாசவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும். இதற்கென அவர்களது தலைமை அவர்களுக்கு ரேட் கார்டு ஒன்றையும் தயாரித்துத் தந்திருக்கிறது. அதிகமான இளம்பெண்களை மதமாற்றம் செய்து அரேபிய நாடுகளுக்கும், சிரியாவுக்கும் அனுப்பும் ஏஜண்டுகளுக்கு போனஸ், இன்செண்டிவ் எல்லாம் உண்டாம். அதாவது, பெண்கள் சுலபமாக மூளைச்சலவை செய்ய முடிகிறது. அவர்கள், தீவிரவாதத்திற்கு,குறிப்பாக தற்கொலை குண்டாக மாற எளிதில் தயாராகிறர்கள். மேலும், தீவிரவாதிகள் தங்களது காமப்பசிக்கும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இவற்றைப் பற்றி, முந்தைய பதிவுகளில் விளக்கப் பட்டுள்ளன.

மதம் மாற்ற விலைப்பட்டியல் வைத்துள்ளார்கள்: இந்துப் பெண்களை அவர்கள் சார்ந்துள்ள மதம், ஜாதி, உள் ஜாதி எனப் பகுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயித்திருக்கிறார்கள்[1]. அதிர்ச்சி தரும் அந்த ரேட் கார்டுகள் தெரிவிக்கும் விவரங்களைக் கண்டால் அதில் இருக்கும் பயங்கரத் தன்மை விளங்கும்…
- இந்து பிராமணப் பெண்ணுக்கு – 5 லட்சம் ரூபாய்கள்
- இந்து சத்ரியப் பெண்ணுக்கு – 4. 5 லட்சம் ரூபாய்கள்
- இந்து (OBC, SC, ST, NT) – 2 லட்சம் ரூபாய்கள்
- ஜெயின் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு- 3 லட்சம் ரூபாய்கள்
- குஜராத்தி பிராமணப் பெண்ணுக்கு- 6 லட்சம் ரூபாய்கள்
- குஜராத்தி ( கட்ச் பெண்ணுக்கு) – 3 லட்சம் ரூபாய்கள்
- பஞ்சாபி சீக்கியப் பெண்ணுக்கு- 7 லட்சம் ரூபாய்கள்
- பஞ்சாபி இந்துப் பெண்ணுக்கு – 6 லட்சம் ரூபாய்கள்
- ரோமன் கத்தோலில் கிறிஸ்தவப் பெண்ணுக்கு – 4 லட்சம் ரூபாய்கள்
|

என்று அவர்களது விலைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி இந்தியப் பெண்களை மதமாற்றம் செய்ய ISIS அமைப்பு முஸ்லீம் கலிபாக்கள் மூலம் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதற்கு முன்னேற்பாடாக இந்தியாவெங்கும் அவர்களது ஏஜண்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்கிறது Times Now செய்தி[2]. ஆனால் இதை மறுக்கும் ஊடகங்களும் நம்மிடையே உள்ளன. இதில் வேடிக்கை அல்லது ஒற்றுமை என்னவென்றால், 2015ல், “டெக்கான் குரோனிகலில்” லவ்-ஜிஹாத் பற்றிய செய்தியில், இதே கணக்கு காணப்பட்டது[3]. அதற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்று விசாரிக்க வேண்டும். “சனாதன் சன்ஸ்தா” வெளியிட்ட புத்தகத்தில் அவ்விவரங்கள் காணப்பட்டன[4]. இருப்பினும், கேரள உயர்நீதி மன்றத்தில், “லவ்-ஜிஹாத்” வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன; போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். உண்மையில் பெண்ணுருமை பேசும் யாரும், இப்பிரச்சினைப் பற்றி விவாதிக்காமல் இருப்பதும் பற்பல கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புகின்றன.

ஐசிஸ் பயங்கரவாதம், தீவிரவாதங்களை சுலபமாக கருத முடியாது: இந்தியாவில் முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்க இது போன்ற செய்திகளை சில ஊடகங்கள் வலிந்து உருவாக்கி மக்களிடையே திணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது. இந்த ரம்ஜான் காலத்தில் 2017ல் அளவுக்கு அதிகமான ஜிஹாதி தீவிரவாதம், உலகம் எங்கும் அரங்கேறியுள்ளது. அப்பாவி மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது எனும்படியான கண்டனங்களும் எழாமல் இல்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே அதற்கேற்ப பாதிக்கப் பட்ட பெண்ணின் அம்மாவே புகார் அளிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று நேற்று வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கலிபாக்கள் நிர்ணயித்த அந்த ரேட் கார்டு ஆதாரமும் வெளியாகியிருக்கிறது. இவற்றை எல்லாம் அத்தனை சீக்கிரம் கற்பனைக் கட்டுக் கதை என்று புறம் தள்ளி விட முடியாது. உண்மையில் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? மதத்தின் பெயரால் பிரிவினையைத் தூண்டும் முயற்சியா? அல்லது இந்துப் பெண்களை சந்தை அடிமைகளாக ஆக்குவதின் மூலம் இந்துக் கலாச்சாரத்தை இழிவு படுத்தும் முயற்சியா? இந்த விசயத்தில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் இந்தியப் பெண்களின் முதல் தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மட்டுமே[5].

இச்செய்தி வரும் நேரத்தில் காசர்கோடு முஸ்லிம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக “வாட்ஸ்–அப்பில்” செய்தி: “வாட்ஸ்-அப்பில்” வருவதையெல்லாம் செய்தியாக்கி விடுகிறார்கள் என்று கிண்டலடிப்பவர்களை, இதையும் பொய் என்று சொல்வார்களா? ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற இந்த இளைஞர் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் மூலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பி.சி.அப்துல் ரகுமானுக்கு வந்துள்ளது. தகவலுடன் கூடிய இந்தப் படத்தை, ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக நம்பப்படும், காசர்கோடு மாவட்டத்தின் மற்றொரு இளைஞர் அனுப்பியுள்ளார். ஷாஜீர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான எவ்வித விவரமும் அத்தகவலில் இல்லை என அப்துல் ரகுமான் கூறினார். இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “எங்களுக்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை” என்றனர்[7]. ஆனால், பெற்றவர்களுக்குத் தெரிந்து விடுகிறதே? தமது மகன், மகள் என்று பரிகொடுப்பவர்கள், இதையெல்லாம் கட்டுக்கதை என்று அமைதியாக இருந்துவிடுவதில்லயே? பிணம் வரத்தான் செய்கிறது, அடக்கம் செய்கின்றனர், வருந்துகின்றனர். ஆனால், தீவிரவாதத்தில் சேராதே என்று சொல்லாமல் இருப்பது திகைப்படையச் செய்கின்றது.
© வேதபிரகாஷ்
25-06-2017

[1] தினமணி, இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By கார்த்திகா வாசுதேவன், Published on : 24th June 2017 05:56 PM.
[2] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–1.html
[3] The rate card that they have attributed to the forum reads, “The boy will get Rs 7 lakh for marrying a Sikh girl, Rs 6 lakh for Punjabi and Gujarati Brahmin girls, Rs 5 lakh for a Brahmin girl, Rs 4.5 lakh for a Kshatriya girl, Rs 3 lakh for Gujarati Kacchi, Jain and Marwadi girls, Rs 2 lakh for a backward class girl and Rs 1.5 lakh for a Buddhist girl.”
http://www.deccanchronicle.com/150926/nation-current-affairs/article/youth-paid-love-jihad-book
[4] While claims of love jihad by right-wing organisations have attracted a lot of flak from various sections of society, Sanatan Sanstha, in 2011, had published a book on the controversial issue. It has also produced a ‘rate card’, on the basis of which Muslim boys are supposedly paid money to marry Hindu girls. The book claims the cash reward differs on the basis of caste and region. For example, the organisation claims that a Muslim youth marrying a Sikh girl is paid the highest amount while the one marrying a Buddhist girl gets the lowest. However, the source of Sanatan’s claims is dubious. In the book, Sanatan has claimed that the rate card was announced by the ‘Muslim Youth Form’. When contacted, a Sanatan spokesperson claimed it was taken from the website of the forum. However, this newspaper did not find any such website.
DECCAN CHRONICLE, Youth paid for love jihad: Book, SHRUTI GANAPATYE, Published Sep 26, 2015, 11:04 am IST; Updated Jan 10, 2016, 8:38 am IST |
[4] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–2.html
[5] தி.இந்து.தமிழ், ஐ.எஸ்.ஸில் இணைந்த கேரள இளைஞர் பலி?, Published: June 21, 2017 09:39 ISTUpdated: June 21, 2017 09:40 IST
[5]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9731735.ece
பிரிவுகள்: இணைதள ஜிஹாத், உருது ஜிஹாதி, கலவரம், கலாட்டா, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காசர்கோடு, காஜா ரோடு, காஜா ரோட், காதல் ஜிஹாத், காஸா ரோடு, காஸா ரோட், கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், செக்ஸ்-ஜிஹாத், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, மலையாள ஜிஹாதி, மின்னணு ஜிஹாதி, மின்னணு ஜிஹாத், லவ் ஜிஹாத், லவ்ஜிஹாத்
Tags: இஸ்லாம், காஜா ரோடு, காஜா ரோட், காஸர் ரோட், காஸா ரோடு, காஸா ரோட், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாதின் ஆயுதங்கள், ஜிஹாத், பெண்
Comments: Be the first to comment
மே 25, 2013
“அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று கத்தி, நடுத்தெருவில் கோடலியால் வெட்டிக் கொன்ற தீவிரவாதிகள்!
2005ற்குப் பிறக்கும் நடக்கும் தீவிரவாதச் செயல்: ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். 2005 தாக்குதலுக்குப் பிறகு, சந்தேகிக்கப்பட்ட இஸ்லாமிஸ்டுகளின் தாக்குதல் என்று அறியப்படுவதாக லண்டன் போலீஸார் கூறியுள்ளனர்[1]. அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவம், ஆப்கன் மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து, 2005ம் ஆண்டு, பிரிட்டனில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐடிவியில் கட்டப்பட்ட வீடியோவில்[2], ரத்தக்கறைப் படிந்த கைகள், ஒரு கையில் கோடாலியுடன், அந்த தீவிரவாதி பேசுவது பயங்கரமாகத் தான் இருந்தது, “அல்லாஹு அக்பர்! நாங்கள் அல்லாவின் மீது ஆணையிட்டுக் கூறுகிறாம். உங்களுடனான யுத்தத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்”, என்று வெறிபிடித்தவன் போல பேசினான்.
நடுத்தெருவில் கழுத்தை வெட்டிய தீவிரவாதிகள்: பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை, இரு இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். சாலையில் பலர் சென்று கொண்டிருந்த நிலையில், காரில் இருந்த ராணுவ வீரர், என்ன, ஏது என கேட்கும் போதே, அவரை கீழே இழுத்து போட்ட அந்த நபர்கள், ஆட்டின் கழுத்தை நறுக்குவது போல, வீரரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3]. லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்றுள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர்[4]. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்[5].
“அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் வேலையா என்ற சந்தேகம்: இங்கிலாந்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஆராய்ந்தால், ஐந்தில் ஒருவர் “அல்-முஹாஜிரோன்” என்ற இயக்கத்தின் உறுப்பைனராக இருப்பது தெரிய வருகிறது[6]. அதுமட்டுமல்லாது, அத்தகைய குற்றங்கள் புரிந்து தண்டனைக்குள்ளானவர்களும் அந்த இயக்கரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்[7]. இன்று இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் செய்தித்துறை வல்லுனர்கள் உள்ளூர் தீவிரவாதம், உள்ளூரில் வளர்ந்த தீவிரவாதம், உள்ளூரில் வளர்த்து விட்ட தீவிரவாதம், என்று “இந்திய முஜாஹித்தீன்” போன்ற இயக்கங்களைக் குறிப்பிட்டு வருகின்றனர். எனவே அவ்வாறு பார்க்கும் போது, இது இங்கிலாந்தின் உள்ளூர் தீவிரவாதம் எனலாம். “அல்-முஹாஜிரோன்” முதலில் சவுதி அரேபிடயாவில் 1983ல் ஒமர் பக்ரி முஹம்மது என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் 1986ல் அதற்கு அங்கு தடைவிதிக்கப் பட்டவுடன், பக்ரி இங்கிலாந்துக்கு ஓடி வந்துவிட்டார்[8]. ஹிஜ் உத்-தஹ்ரீர் என்ற சர்ச்சைக்குரிய இயக்கத்தில் 1996ல் சேர்ந்தார், ஆனால், அது தனக்கேற்ற வகையில் தீவிரமாக செயல்படுவதில்லை என்று “அல்-முஹாஜிரோன்” என்ற தனது இயக்கத்தை ஆரம்பித்தார்[9]. இதற்கு தலைவராக அவரும், சௌத்ரி என்பார் துணைத்தலைவருமாக உள்ளனர். 11/9ற்குப் பிறகு “மிகச்சிறந்த 19” என்ற கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து, அதில் ஜூலை 7 வெடிகுண்டு போட்டவர்களை “அபாரமான தீரர் 4” என்று போற்றிப் புகழ்ந்தார்[10]. அதாவது, அவ்வாறு உள்ளூர் தீவிரவாதத்தை வளர்த்தார்.
வெட்டிய தீவிரவாதிகள் பிடிப்பட்டது: நடப்பது சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என, அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கருதினர். ஆனால், கழுத்தறுக்கப்பட்ட ராணுவ வீரர், ரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்ததும், அலறினர். முதலுதவி ; இங்கிரிட் லோயா – கென்னட் என்ற பெண், ஓடிச் சென்று, கழுத்தறுபட்ட ராணுவ வீரரை தூக்கி, மடியில் கிடத்தி, உயிரைக் காப்பாற்ற, முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார். இதனால், கோபம் கொண்ட அந்த இரு இளைஞர்களும், அவளை தாக்க முற்பட்டனர். ரத்தம் சொட்டும் கத்திகளுடன், அவர்கள், அந்தப் பெண்ணை அணுகினர். அவர்களைக் கண்ட, இங்கிரிட் லோயா, “நீங்கள் செய்தது படுகொலை; எதற்காக இப்படிச் செய்தீர்கள்?” என, கோபமாக கேட்டார். “இவன், ஆப்கன் சென்று, அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்தவன். அவனை பழிவாங்கவே இவ்வாறு செய்தோம். பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண் அல்லா………. ,” என, கத்தினர்[11]. இவ்வாறு, லோயாவுக்கும், பயங்கரவாதிகள் இருவருக்கும், கோபாவேசமாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, தைரியம் அடைந்த சிலர், அந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில், சிலர், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சுற்றி வளைத்தவர்களை நோக்கி, ரிவால்வரை நீட்டிய இளைஞர்கள், சுட்டு விடுவதாக மிரட்டினர். தகவல் அறிந்து, அங்கு வந்த போலீசார், நிலைமையை சட்டென புரிந்து, ரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்றிருந்த இரு இளைஞர்களையும், காலில் சுட்டு, கீழே வீழ்த்தினர். உடனடியாக பாய்ந்து, கை விலங்கிட்டு, அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர். ஏராளமான ரத்தம் வெளியேறியதால், கழுத்தறுபட்ட ராணுவ வீரர், அந்த இடத்திலேயே இறந்தார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், படுகாயமடைந்த பயங்கரவாதிகள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டேவிட் கேமரூன் நாடு திரும்பினார்: பிரதமர் திரும்பினார், சம்பவம் பற்றி அறிந்ததும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, லண்டன் திரும்பினார். “கோப்ரா’ என்ற பெயரிலான, உயர் மட்ட அவசர நிலை கூட்டத்தைக் கூட்டி, நிலைமை குறித்து விவாதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ராணுவ முகாம்களுக்கும், ராணுவ கட்டடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது; மசூதிகள் மற்றும் முஸ்லிம்கள் கூடும் இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. “ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது, பயங்கரவாத தாக்குதல் சம்பவம்’ என, பிரதமர், டேவிட் கேமரூன் அறிவித்ததும், லண்டனில் சில இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்தவர் மற்றும், பதிலுக்குப் பதில், வன்முறையில் ஈடுபட திட்டமிட்ட மற்றொருவர் என, இருவர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிரிட் லோயாவுக்கு நன்றி: பயங்கரவாதிகளிடம் பேச்சு கொடுத்து, அவர்கள் தப்பாமல் தடுத்து நிறுத்திய, இங்கிரிட் லோயாவுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவரால் தான், மேலும் சில வீரர்கள் படுகொலையில் இருந்து தப்பினர் எனக் கூறி, நன்றி கூறினர். இது குறித்து லோயா கூறும் போது, “நான் முன்னர், நர்சாக பணியாற்றியுள்ளேன் என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டேன். என்னை அவர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்களுடன் கோபமாக பேசி, அவர்கள் கவனத்தை திசை திருப்பினேன். அவர்கள் வசம், ரிவால்வர் போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்த நான், அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ந்து பேச்சு கொடுத்தேன். இல்லையேல், அவர்கள் பலரை சுட்டுக் கொன்றிருப்பர்,” என்றார்.
[6] A study shows that one in five terrorists convicted in Britain over more than a decade were either members of or had previous links to the extremist group al-Muhajiroun. Telegraph, London dated Saturday 25 May 2013
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, 786, ஃபத்வா, அமைதி, அல்-முஹாஜிரோன், அவதூறு, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், சன்னி, சமரசப்பேச்சு, சுன்னி, சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், மதவிமர்சனம், மதவெறி, லண்டன்
Tags: அல்-முஹாஜிரோன்
Comments: 6 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 14, 2012
ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!
எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தே, ராஸா அகடெமி இந்த எதிர்ப்பு-போராட்டம் நடத்தியதோடல்லாமல், மற்றொரு கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பாகவே தங்களுக்கும், கடலவரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வேறு வெளியிட்டிருக்கிறது.
ராஸா அகெடமியின் மற்ற தேசிய விரோத செயல்கள் என்று கீழ்கண்டவை எடுத்துக் காட்டப்படுகின்றன:
- Raza Academy’s president Yusuf Raza was involved in provoking the Muslims during 2007 riot in Bhivandi and killing 2 policemen by setting them on fire. He was arrested also in the incident.
- Raza Academy issued a Fatwa to kill Mr. Charles Moor, journalist of London-based renowned daily ‘Telegraph’ under the charge that he insulted Prophet Mohammad. The press statement is available at the Academy’s website.
- In January 2012, Mr. Salman Rushdie was to attend a book exhibition in Jaipur, Rajasthan. To oppose him, the Academy declared that ‘he who will slap him with a shoe will be given a reward of Rs.1 lakh’.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, ஃபேஸ்புக், அடி உதை, அடிப்படைவாதம், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இமாம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எரிப்பு, எஸ்.எம்.எஸ், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், குஜராத், கைது, கொடி, சிறுபான்மையினர், சுன்னி-ஷியா, சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தேச கொடி, தேச விரோதம், பிஜேபி, புத்தகம், புனிதப் போர், முஸ்லீம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்களில் சிறுபான்மையினர்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதானம், ஆயுதங்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், எரிபொருள், கத்தி, கற்கள், கலவரம், கல் எரிதல், குண்டு வெடிப்பு, ஜிஹாத், தீவைப்பு, பாட்டில், புனிதப்போர், மும்பை, முஸ்லீம்கள், ராஸா அகடெமி, ஹாக்கி கொம்பு
Comments: 12 பின்னூட்டங்கள்
நவம்பர் 12, 2011
மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!
நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.
கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].
இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?
நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10]. இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?
வேதபிரகாஷ்
11-11-2011
[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!
In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.
http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm
[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.
[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.
[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.
http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/
பிரிவுகள்: அபு சலீம், அபு ஜிண்டால், அரேபிய ஷேக்கு, அரேபியா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இமாம், இமாம் கவுன்சில், இரட்டை வேடம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உறவினர், கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், காஃபிர்கள், காந்தஹார், காஷ்மீர், குடும்ப திவிரவாதம், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், குல்லா, குல்ஷன்குமார், கொலை, கொலை வழக்கு, சவூதி அரேபியா, சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி-ஷியா, சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தியாகப் பலி, தியாகம், துபாய், துப்பாக்கி, நக்மா, பலுச்சிஸ்தான், பாகிஸ்தான், போதை, போதை மருந்து, மதகலவரம், மும்தாஜ், முஸ்லீம், ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி
Tags: அபாயம், இப்ராஹிம், கல்லறை, சமாதி, சாவு, தாவூத், தாவூத் இப்ராஹிம், பாதுகாப்பு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மும்பை
Comments: 3 பின்னூட்டங்கள்
திசெம்பர் 8, 2010
வாரணாசி / காசியில் குண்டு மறுபடியும் வெடித்ததில் ஒரு பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது, 35 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்.
முஜாஜித்தீனின் ஜிஹாதி குண்டுக்கொலை வெறியாட்டம்: ஊடகங்களுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில், “அல் அர்பி” என்ற பெயரில் கையெழுத்திட்டு, மும்பையின் மலாட் என்ற இடத்திலிருந்து மொபைல் மூலமாக ஈ-மெயிலில் இந்திய முஜாஜித்தீன் தாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்[1]. அதாவது, கம்பூட்டரிலிருந்து மொபைலுக்கு மாறியுள்ளனர் ஜிஹாதிகள். அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது[2], “பாபரி மஸ்ஜித் முஸ்லீம்களுக்கு திரும்ப அளிக்கும் வரை இந்த தேதி இந்துக்களை பீடித்துக் கொண்டே இருக்கும்”.
இந்திய முஜாஜித்தீன்: இதனை உள்ளூர் தீவிரவாத கும்பல், சொந்தமண்ணின் ஜிஹாதி அல்லது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எது எப்படியாகிலும், வளர்த்த கடா முட்டுகின்ற கதையாகத்தான் உள்ளது. ஆமாம், இந்திய முஸ்லீம்கள் எல்லாம் நேரிடையாக அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்பதால்தான், இதனையிப்படி அழைக்கிறார்கள் போலும். ஆனால், விளைவு என்னமோ அத்தகைய அரேபிய தீவிரவாதம், பயங்கரவாத குரூரங்களைக் கொண்டு தான் இந்த வகையும் உள்ளது. போதை மருந்து உண்டவன் தாயையே, சகோதரியையே, ஏன் மகளைக்கூட கற்பழிப்பானாம், அது போல இந்த வகையும், சொந்தங்களையே கொன்று குவித்து வருகிறது. இதை பச்சைத் தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம், என்றெல்லாம் சொல்லமல் இருப்பச்து நோக்கத்தக்க்கது.
இரண்டு வயது குழந்தை பரிதாபமாகக் கொல்லப்பட்டது: குண்டு வெடித்து சிதறிய துகள்கள் வயற்றில் குத்தியதால், குழந்தை பரிதாபமாகக் கொல்லப்பட்டது. பிஞ்சு உடல் தாங்குமா, அதைவிட, அந்த கோவாப் படுகொலைகள் போல, அந்த குழந்தையை, சுவரில் அடித்தே கொன்றிருக்கலாம். தொழிற்நுட்பம் மாறியதால் குண்டு வெடித்து கொல்கிறார்கள் போலும். இனியும் எத்தனை குழந்தைகளை அலியிடப்போகிறாறர்களோ தெரியவில்லை.
வாரணாசியில் வெறியாட்டம்: இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களின் ஒன்றான வாரணாசியில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கங்கை ஆற்றின் கரையோரத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக “ஷீட்லா காட்” / தச-அஸ்வமேதகட் பகுதியில் சுமார் 5000 பக்தர்கள் வழக்கம்போல திரண்டிருந்தனர்[3].
ஆரத்தி எடுத்து, பக்தி பரவசத்தில் இருக்கும்போது குண்டு வெடிப்பு: ஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பக்தர்களிடையே பதற்றம் நிலவியது .வாரணாசியில் இன்று மாலை வழக்கம் போல ஆரத்தி நடக்கும் வேலையில், திடீரென்று கண்டு வெடித்ததில், 20 க்கும் மேற்மட்டவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தன்மை, உபயோகப்படுத்தப்பட்டுள்ள வெடிபொருள் விவரங்கள் முதலியன தெரியவில்லை என்றாலும், அங்கு, அவ்வேளையில், பிரார்த்தனை நேரத்தில் கண்டு வெடிப்பு நிகழ்த்தியுள்ளது, மிகவும் கூரூரமான மனித உருவிலுள்ள மிருகத்தின் மனத்தைக் காட்டுகிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், 7 அல்லது 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சேதங்கள் குறித்த முழுமையான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு மிகச்சிறிய குண்டுவெடிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டும், உள்ளூர் ஜிஹாதியும்: உள்ளூர் தீவிரவாத கும்பல், சொந்தமண்ணின் ஜிஹாதி அல்லது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் “உள்ளுக்குள் வெடித்து சிதறும் குண்டு” என்ற முறை இத்தீவிரவாதிகளால் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கும் அதேமுறையிலான குண்டுதான் உபயோகப்படுத்தப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2006ல் லஸ்கர் தீவிரவாதிகளால் குண்டுகள் வெடிக்கப்பட்டதில் குறைந்த அட்சம் 29 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்தனர். ஆனால் இந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. குண்டு வைத்தவன், அந்த பகுதிகளை நன்றாக அறிந்தவனாக இருக்கிறான். பலதடவை வந்து நோட்டமிட்டும் இருக்கிறான் என்றது நன்றாகவே தெரிகிறது. உள்ளூர் ஜிஹாதி என்றால் அப்படித்தான் இருப்பார்கள் போல இருக்கிறது. சன் டிவியின் ஊடக குண்டு வெடிப்பிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றும் ஆராய வேண்டியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் நடத்திய முஸ்லீம்கள் போராட்டம் / ஆர்பாட்டம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி சங் பரிவாரங்களால் இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இருந்த இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்டித் தரவேண்டும் என்றும் மசூதி இடிப்பில் தொடர்புடைய பாஜக தலைவர்களான எல்.கே. அத்வானி உள்ளிட்டவர்களைக் கைது செய்யக் கோரி ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. 06-12-2010 அன்று கோயம்புத்தூரில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமுமுக பொதுச் செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உயர் நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு வழக்கில் நியாயமான தீர்ப்பு விரைவில் வழங்கவேண்டும்[4]. இந்தப் பிரச்சனை தீரும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்று கூறினார்.
தீவிரவாதிகளை ஆதரித்து பேசுகின்றவவர்களுக்கு பாதுகாப்பு, மற்றவர்களுக்கு கைது: இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை வெற்றி தினமாக அறிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தமுமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இத்தகைய பாரபட்ச போக்கும் தீவிரவாத்தை ஊக்குவிக்கத்தான் செய்கிறது. அதாவது தங்களை ஒன்றும் செய்யமுடியாது என்ற எண்ணம் மனதில் வளர்கிறது. அமைதியாக வாழவேண்டும் என்றால், முஸ்லீம்கள் இத்தகைய ஆக்ரோசத்தன்மை, எதிர்ப்புத்தன்மை, எதிரித்தன்மை, விரோத மனப்பாங்கு முதலியவற்றை விடவேண்டும், இல்லையெனில், ஊடகங்கள் அயமுறுத்துவது போல, உண்மையிலேயயே ஆரஞ்சு தீவிரவாதம் வந்தாலும் வரலாம்.
வேதபிரகா
08-12-2010
[4] இவர்கள் எப்படி அந்த ஜிஹாதிகள் மாதிரியே, அதே வாந்த்தைகளை, மொழியை உபயோகிக்கின்றனர் என்அதை நோக்கத்தக்கது.
பிரிவுகள்: அல் அர்பி, உள்ளூர் தீவிரவாத கும்பல், சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், வளர்த்த கடா
Tags: அல் அர்பி, உள்ளூர் தீவிரவாத கும்பல், குண்டுக்கொலை, கொலை வெறியாட்டம், சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம், சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி வெறியாட்டம், வளர்த்த கடா
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்