தேசிய புலனாய்வு துறை படிப்படியாக ஆதாரங்களைக் கொண்டு ஜாகிர் நாயக்கின் நிறுவனங்களை சோதித்தது, ஆவணங்களைக் கைப்பற்றியது மற்றும் மீது வழக்கு தொடுத்தது.
ஒரே நேரத்தில் 12 இடங்களில் நடந்த சோதனைகள்: இதைத்தொடர்ந்து மும்பையில் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான பைகுல்லா, டோங்கிரி, பைதோனி உட்பட [Byculla, the IRF’s offices in Dongri and Pydhonie] 10க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை 19-11-2016 அன்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[1]. தவிர கேரளாவில் உள்ள சில அமைப்புகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் குற்றத்தை நிரூபிக்க உதவும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது[2]. முன்னதாக ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் சிலரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்[3]. இதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது[4]. ஐ.ஆர்.எப், டாக்யார்ட் ரோடில் நடத்தி வரும் “அனைத்துலக இஸ்லாமிய பள்ள்ளி”யை [Islamic International School (IIS)] அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[5]. மஹாராஷ்ட்ர மாநில்ல கல்வி மந்திரி, சட்டப்படி, இதற்கானவை செய்யப்படும் எட்ன்று அறிவித்தார்[6].
19-11-2016 அன்று வெளியிட்ட என்.ஐ.ஏ.வின் அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் கீழுள்ள 3 (3) பிரிவின் கீழ் இந்திய அரசு ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷன், தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. அப்துல் கரீம் நாயக் என்பவரின் மகனான, ஜாகிர் நாயக் மேற்குறிப்பிடப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் தீவிரவாதிகளைத் தூண்டி விட்டு, இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களிடம் வெறுப்பு, துவேசம் தூண்டும் வகையில், பல இடங்களில், பேசியும், சொற்பொழிவாற்றியும், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் படி செய்து வருவதாக ஆதாரப் பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய செயல்கள் இந்திய அரசுக்கு பிடிக்காமல் இருப்பதுடன், பொது அமைதிக்கு ஊறுவிளைவித்து, பலவித நம்பிக்கையாளர்களிடையே வெறுப்பை வளர்க்கும் விதாமக இருப்பதாக கருதுகிறது[7].
குற்றத்தின் தன்மை மற்றும் அதன் உலகளவில் உண்டாக்கும் விளைவுகளை கருதி இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது: குற்றத்தின் தன்மை மற்றும் அதன் உலகளவில் உண்டாக்கும் விளைவுகளை கருதி, இந்திய அரசு அதனால் தான், உள்துறி அமைச்சகத்தின் ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷனை தடை செய்தது. அதன்படி தேசிய புலானாய்வு ஏஜென்சியை, இவ்வழக்கை எடுத்துக் கொண்டு நடத்துமாறு ஆணையிட்டது. அதன்படியே 18/11/2016 அன்று, FIR No. 05/2016 dated 18/11/2016 பதிவு செய்யப்பட்டு, பிரிவுகள் 153A of IPC மற்றும் பிரிவுகள் 10, 13 and 18 சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் படி மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது[8].
சோதனைகளில் தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இந்த சோதனைகளில் பங்கு கொண்டனர்: தேசிய புலானாய்வு ஏஜென்சி அதன்படியே இஸ்லாமிக் ரெசெர்ச் பவுண்டேசனின் 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையிட்டு, சட்டமீறல்களை எடுத்துக் காட்டும் ஆவணங்கள், கோப்புகள், மின்னணு தகவல் சேமிக்கும் கருவிகள், ஜாகிர் நாயக் மற்றும் ஐ.ஆர்.எப்பின் சொத்துகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்கள் முதலியனவும் கைப்பற்றப்பட்டன. தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இந்த சோதனைகளில் பங்கு கொண்டனர். சோதனை நடந்து கொண்டிருக்கின்றன[9].
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால், ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வரவேண்டும் அல்லது கொண்டுவரப்பட வேண்டும்: ஜாகிர் நாயக் இந்த நடவடிக்கைகளை அறிந்திருப்பார். இனி, ஒன்று சட்டப்படி அணுக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தியாவும், ஜாகிர் நாயக் தங்கியுள்ள நாட்டை அறிந்ததும், முறைப்படி அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த, உரியன செய்யப்படும். அவ்வாறு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டால், கைது செய்யப் பட்டு, நடவடிக்கைகள் தொடரப்படும். இந்திய சட்டங்களை மீறியுள்ள நிலையில், ஜாகிர் நாயக் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டால் தான், சட்டப்படி நடவடிக்கை எடுக்க் முடியும். இல்லையென்றால், தாவூத் இப்ராஹிம், ஹாவிஸ் சையது வழக்குகள் மாதிரி ஆகி விடும். ஏனெனில், அவர்கள் அயல்நாடுகளில் இருக்கும் வரை, இந்தியா ஒன்று செய்ய முடியாது. ஒத்துழைக்கிறேன் என்று சொன்னதால், முறை அவ்வாறு இருக்கும், இல்லையென்றால், இந்திய அரசாங்கம் வேறு வழிகளை ஆராய வேண்டியிருக்கும்.
இந்தியா பொருளாதார வீழ்ச்சி, நிதிப்பிரச்சினைகள் முதலிய நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது: ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா என்று எல்லா நாடுகளும், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. அமெரிக்காவில், தலைமை மாறியுள்ளதால், உலக நாடுகள், எந்த வழியிலும், தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப் படக் கூடாது என்று கண்காணித்து வருகிறது. அந்நிலையில், இந்தியா இன்னும் மென்மையான தாக்குதலுக்கு உட்பட ஏதுவாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். அதனால், இந்தியா மூலமாகவும் தீவிரவாதிகள் செயல்படக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. ஆனால், அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து வரும் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகளாக மாறி குறிகளைத் தாக்கி வருகிறார்கள் என்று தொடர்ந்து அறியப்பட்டால், தீவிரவாதம் வளர்க்கும் நாடுகளில் இந்தியாவும் சேர்க்கப் படும். அந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவுக்கு பாதிக்கப் படும். அத்தகைய நிலை உண்டாக்க வேண்டும் என்றுதான், தீவிரவாத அமைப்புகள் கங்கனம் கட்டிக் கொண்டு பலவழிகளில் செயல் பட்டு வருகின்றன. ஆகவே, இந்தியா, இத்தகைய இக்கட்டான நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
20-11-2016
[1] The Hindu, Zakir Naik faces NIA heat, premises searched, Novemver 20, 2016; Updated: November 20, 2016 02:22 IST
[2] http://www.thehindu.com/news/national/nia-books-zakir-naik-for-terror-searches-irf-premises/article9365570.ece
[3] தினமலர், ஜாகிர் நாயக் மீதுஎன்.ஐ.ஏ., வழக்கு, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 19,2016, 22:20 AM IST;
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1652459
[5] Times of India, Maharashtra to take over Zakir Naik’s school, Prafulla Marpakwar & Mohammed Wajihuddin| TNN | Updated: Nov 17, 2016, 08.44 AM IST
[6] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Maharashtra-to-soon-take-over-Zakir-Naiks-school/articleshow/55467137.cms
[7] The Government of India, Ministry of Home Affairs vide its Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 has declared the Islamic Research Foundation (IRF) as an unlawful association under sub-section (3) of Section 3 of the Unlawful Activities (Prevention) Act, 1967. Credible information has revealed that Dr. Zakir Abdul Karim Naik, S/o Abdul Karim Naik, the President of IRF and his associates have been promoting enmity and hatred between different religious groups in India through his public speeches and lectures on various platforms, and inciting Muslim youths and terrorists in India and abroad to commit unlawful activities and terrorist acts. These activities of Dr. Zakir Abdul Karim Naik and his associates are causing disaffection against the Govt. and are prejudicial to the maintenance of harmony among various communities and likely to disturb the public tranquillity.
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/356_1_PressRelease_19_11_2016_new.pdf
[8] 2. Considering the gravity of the offence and its international ramification, MHA vide its order No. 11011/34/2016-IS-IV dated 18/11/2016 directed the National Investigation Agency, to register a suo motu case and investigate the matter. Accordingly, on 18/11/2016, a case vide FIR No. 05/2016 dated 18/11/2016 under section 153A of IPC and sections 10, 13 and 18 of Unlawful Activities (Prevention) Act, 1967 has been registered at Police Station, NIA, Mumbai Branch.
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/356_1_PressRelease_19_11_2016_new.pdf
[9] 3. Subsequently, on 19/11/2016, 09 NIA teams conducted raid and search operation at 12 premises connected to Islamic Research Foundation (IRF) in Mumbai simultaneously and seized incriminating documents / files, electronic storage devices and about Rs.12 lakh in cash. The recovered documents relate to various activities including financial transactions and property details of Zakir Naik and IRF. To assist the search teams, a team of IT experts has been sent from NIA HQ Delhi to Mumbai. The searches are still going-on and are likely to continue till late in the night.
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/356_1_PressRelease_19_11_2016_new.pdf
அண்மைய பின்னூட்டங்கள்