அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (2)?
முஸ்லிம்களுக்காக நாத்திக கரு மற்றும் ஆத்திக ஜெயா காபிகளின் நாடகங்கள்: இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனே நிறைவேற்றாமல், அதை தள்ளிப்போடும்விதமாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை அனுப்பி உள்ளதாகவும், தமிழக அரசு இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களை ஏமாற்றுவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்[1]. அதாவது நாத்திக கருவான, காபிர் மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம். ‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான்’ என, கருணாநிதி கூறியதற்கு, நாகர்கோவில், பிரசாரத்தில் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ”கருணாநிதியின் பேச்சை, இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு, தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல,” என்றும் தெரிவித்தார்[2]. அதாவது ஆத்திக ஜெயா காபிர், மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம்.
காபிர்களின் வாதங்களும், மோமின்களின் மௌனமும்: ‘முஸ்லிம்களுக்கு கன்னியாகுமரி அ.தி.மு.க., வேட்பாளர், ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில், பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பேசியதாவது: சிறுபான்மையினருக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு வருகின்றன. உலமாக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்தி உள்ளோம்[3]. முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான் என, கருணாநிதி கூறி உள்ளார். 2006ல், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து, அதில் சமூக மற்றும் கல்வியில், பின் தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை, முதன் முதலாக சேர்த்ததே, அ.தி.மு.க., அரசு தான்[4]. இதுதான் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டிற்கு, அடித்தளமாக, வித்தாக அமைந்தது. கருணாநிதி, தன் கேள்வி-பதில் அறிக்கையில், ‘இட ஒதுக்கீடு சதவீதத்தை, அதிகப்படுத்த வேண்டும் என, முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதைப்பற்றி உண்மையிலே அக்கறை இருந்தால், அந்த கோப்பினை, உடனே வரவழைத்து, ஆணை பிறப்பித்திருக்கலாம்’ எனக் கூறியிருக்கிறார். இப்படித்தான், அவர் ஆணை பிறப்பித்தாரா? நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில், திருத்தி அமைக்கப்பட்ட, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட, ஆய்வு எல்லையில், அ.தி.மு.க., அரசு, 2006ல் தெரிவித்த, இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை, கருணாநிதி, ஏன் வார்த்தை மாற்றாமல் சேர்த்தார்? தி.மு.க., 2006ல் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டதை போல, உடனே அதற்குரிய சட்டத்தை இயற்ற வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை? எதற்காக, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை, அவர் கேட்டார்?
எந்த இட ஒதுக்கீடு குறித்தும், எந்த அரசும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது: ஏனெனில், சட்டப்படி, அவ்வாறு தான் செய்ய முடியும். மண்டல் கமிஷன் வழக்கில், 1990ல், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பின் அடிப்படையில், எந்த இட ஒதுக்கீடு குறித்தும், எந்த அரசும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பிறகே, அதை நடைமுறைப்படுத்த முடியும்.அதே அடிப்படையில், தற்போது, இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற, முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்[5].
முஸ்லிம்களுக்குள் சண்டை ஏன்?: இதற்குள் “பேஸ்புக்கில்” ஒரு முஸ்லிம், எப்படி முஸ்லிம்கள் அளிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வெற்றிப் பெறவேண்டும் என்று விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அவர் கொடுத்துள்ளதாவது, “நமக்குள் எந்த பகையும் போட்டியும் இல்லாமல் பல இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள் ..அல்ஹம்துலில்லஹ் …ஆனால் இவர்களை வீழ்த்துவதற்கு பாஜகவை விட வேகமாக செயல்படும் ஒரு ஜமாஅத் இருப்பதை நினைத்து மனது கவலையளிக்கிறது ….முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியில் நம் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரித்து விடக் கூடாது! அவர்களின் வெற்றிக்கு நாம் எந்த வகையிலும் முட்டுக்கட்டைகளாக இருந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எங்கே? அமைப்புகள் வேறாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தில் சார்பாக ஓர் குரல் இந்திய பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று தாம் போட்டியிட இருந்த தொகுதியை விட்டுக் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சி எங்கே? வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் போட்டியிடுவதால்! சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியில் இருந்து விலகிக் கொண்டது! இராமநாதபுரம் தொகுதியில் சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியிடுவதால் மனித நேய மக்கள் கட்சி விட்டுக் கொடுத்தது குறிப்பிடதக்கது!
இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க – விற்க்கு ஓட்டு இல்லையே அ.தி.மு.க–விற்க்கு வேட்டுவைப்போம்: இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க -விற்க்கு ஓட்டு இல்லையே அ.தி.மு.க-விற்க்கு வேட்டு வைப்போம் என்று பகீரங்க அறைக் கூவல் விடுத்த (இடஒதுக்கீடு கொடுக்காத நிலையில் அ.தி.மு.க-விற்க்கு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு கொடுத்துள்ளது) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எங்கே?? சமுதாய மக்களே உங்கள் கற்ப்பனைக்கே விட்டு விடுகிறேன்! மதிப்பிற்குரிய சகோதரர் பிஜெ அவர்கள் தான் செய்வது விதண்டவாத அரசியல் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்[6]. இந்த சுயநல முடிவால் வரவிருக்கும் தேர்தலின் மூலம் 3-4 முஸ்லிம் MPகளின் பிரதிநிதித்துவம் கூட பாதிக்கப்படும் நிலை தானேவரும் இதையாவது கருத்தில் கொண்டீர்களா? உதாரனத்திற்க்கு மயிலாடுதுறையில் காங்கிரஸ் பிஜேபி எல்லாம் ஒரு நியாயமான அளவில் ஓட்டை பிரிக்கும் அங்கே ஒரு தனி சக்தியா இருக்கும் முஸ்லீம்களின் ஓட்டினாலும் திமுகவின் ஓட்டினாலும் வெற்றி பெற இருக்கும் நம் முஸ்லீம் பிரதிநிதி
முஸ்லிம்கள் ஓட்டு சிதறக் கூடாது: உங்கள் சொல்லை வேதவாக்காக கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் சிதறும் ஓட்டால் தோல்வியடைய வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? இதை நிலை தான் வேலூர், பாண்டிச்சேரி மத்திய சென்னையிலும் (முஸ்லிம் நின்றால்) ஏற்பட வேண்டுமா? மொத்தத்தில் ஒரு முஸ்லிம் கூட வெற்றி பெறாமல் போக தான் இந்த தான்தோன்றி தனமான முடிவு … ஆனால் இன்றைய முடிவு யாருக்கும் உதவாது மாறாக நம்மை நாம் தான் காட்டிகொடுக்கும் வேலையை செய்கிறோம் என்பதை வருத்ததுடன் உங்களின் நலம் விரும்பு ஆயிரக்கனகானவர்களில் ஒருவராக சொல்லி கொள்ள விரும்புகிறோம். மமக எந்த நிலைப்பாடு எடுத்தாலும் ,சமுதாய நன்மையைப்பற்றி சிந்திக்காமல் அதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதற்காகவே அதிமுகவை ஆதரித்துள்ளார். வரும் செவ்வாய் அன்று அவசர மாநில செயற்குழுவில் த.த.ஜ முடிவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்[7], என்று முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி[8], 1. வடசென்னை தொகுதியில் நிஜாம் முகைதீன், 2. திருநெல்வேலி தொகுதியில் நெல்லை முபாரக், 3. ராமநாதபுரம் தொகுதியில் நூர் ஜியாவுதீன், போட்டியிடுகின்றனர்[9]. இந்துக்களுக்கு, இந்த புத்தி வருமா?
முஸ்லிம்களில் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அப்பிரச்சினை தீர்க்க வேண்டியதாக உள்ளது. இக்காலத்தில், அவ்வாறு குறிப்பிட்ட முஸ்ம்களினால் படிக்க முடியவில்லை என்றால், அது இந்துக்களைப் போன்ற ஏழ்மை என்றாக இருந்தால், பொருளாதார ரீதியில், எல்லோருக்கும் கல்வி கொடுக்கப் படவேண்டும். ஆனால், அதில் பொதுவான கல்விமுறை விடுத்து, மதரீதியில் கல்வி அளிப்போம் என்றால், அங்கு பிரச்சினை வருகிறது. இக்காலத்தில், ஆங்கிலத்தில் படிப்பது அல்லது குறிப்பிட்ட தொழிலுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பைப் படிப்பது என்ற போக்கு உள்ளது. அந்த வகையில் எல்லோரும் படிப்பதை யாரும் தடுக்க முடியாது. பிரச்சினை இவ்வாறாக இருந்தால், அரசு அதனை சரிசெய்தாக வேண்டும்.
வேதபிரகாஷ்
10-03-2014
[1] தினமணி, முஸ்லிம்களுக்கானஇடஒதுக்கீடு: கருணாநிதிபுகாருக்குஜெயலலிதாபதில், By dn, நாகர்கோவில், First Published : 10 March 2014 12:50 AM IST
[2] தினமலர், மக்கள்ஏமாளிகள்அல்ல: கருணாநிதிக்குஜெ., பதில், சென்னை, மார்ச்.10, 2014.
[3]http://www.dinamani.com/tamilnadu/2014/03/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2099998.ece
அண்மைய பின்னூட்டங்கள்