Archive for the ‘சுன்னி வாரியம்’ category
ஏப்ரல் 7, 2013
பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?
இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:
- அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
- அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
- அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
- ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
- எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
- பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
- ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.
இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].
அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7]. “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர். இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].
அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.
“இஸ்லாமிஸ்டுகள்” மற்றும் “செக்யூலரிஸ்டுகள்”: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.
இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:
- 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
- · முஸ்லீம்களின் வெறியாட்டம் – பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
- “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].
வேதபிரகாஷ்
07-04-2013
[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.
[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”
பிரிவுகள்: ஃபத்வா, அரசு நிதி, அரேபியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அஹமதியா, அஹ்மதியா, இணைதள ஜிஹாத், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, ஈத், உலமா வாரியம், உலமாக்கள், கதறல், கற்பழிப்பு, கலவரங்கள், கலவரம், கள்ள நோட்டுகள், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, குரூரம், கொடூரம், சண்டை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சிலை வழிபாடு, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, போர், போர் குற்றம், யுத்த பலிகள், யுத்தம்
Tags: அஹ்மதியா, இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குரூரம், குற்றம், கைதியா, கொடூரம், சண்டை, சுன்னி, செக்யூலரிஸ ஜீவி, செக்யூலரிஸம், செக்யூலார் அரசாங்கம், பங்களாதேசம், பங்காபந்து, போரா, போர், மிதிக்கும் இஸ்லாம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் பெண்கள், முஸ்லீம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வேலை, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், யுத்தம், லெப்பை, ஷியா
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 18, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!
முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2].
முல்லா முலாயம் பேசும் போது கலாட்டா செய்து கத்திய முஸ்லீம்கள்: முல்லா முலாயம் பேச ஆரம்பித்தபோது, வெளிப்படையாக, ராஜா பையாவிற்கு (Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya) எதிராக கோஷங்களை முஸ்லீம் இட்டனர், “அவனை பொறுப்பிலிருந்து விலக்கினால் மட்டும் போறாது, கைது செய்து சிறைல் போடு”, என்று கத்தினர். அதுமட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிரான அரசு ஒழிக என்றும் கோஷமிட்டனர். இவ்வளவும், முலாயம் பேசும் போது, இடை-இடையே நிகழ்ந்ததன. உலேமா-இ-ஹிந்த் ஆட்கள் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது[3]. இறுதியில், ஜமைத் உலாமா ஹிந்தின் பெரிய தலைவரே வந்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது! ஆனால், முல்லா முலாயம் அதை லட்சியம் செய்யவில்லை. நிருபர்கள் கேட்டபோதும், விமர்சிக்கவில்லை[4]. அதாவது முஸ்லீம்கள் என்னத் திட்டினாலும், வசவு பாடினாலும், இந்த ஜென்மங்களுக்கு ரோஷம், மானம், சூடு, சொரணை எதுவும் வராது என்று மெய்ப்பித்திருக்கிறார். உபியில் முஸ்லீம்கள் 20% உள்ளனர்[5], அவர்கள் லோக்-சபா தேர்தலில் முக்கியமான ஓட்டுவங்கியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
“நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்ற முஸ்லீமும், காலில் விழும் யாதவும்: மௌலானா அர்ஷத் மதானி, ஜமைத் உலாமா ஹிந்த் இயக்கத்தின் தலைவர் பேசுகையில்[6], “முலாயத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறாம்திருப்பினும் அவரது வார்த்தைகள் காரியங்களாக மாற பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் அரசியலுடன் எந்த சம்பதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்று தமக்கேயுரிய முஸ்லீம் பாணியில் கூறியுள்ளார்.
“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.
இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[7], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[8]. |
अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’ |
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ |
“என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ” |
முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது, இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருதாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.
© வேதபிரகாஷ்
18-03-2013
[3] Mulayam was in the midst of his speech when a group of Jamiat workers started raising slogans asking for former Cabinet Minister Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya’s arrest in the recent murder of a Deputy SP Zia-ul-Haq. The slain police official’s wife has named Raja as the main accused in the murder case. Senior Jamiat leaders faced a tough time trying to control the agitated workers. They were demanding that Raja Bhaiyya should be arrested immediately, and that dropping him from the ministry was not enough.
பிரிவுகள்: 2014, ஃபத்வா, அடி, அடி உதை, அடிமை, அடையாளம், அரசு நிதி, அல்லா, அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆஸம் கான், இட ஒதுக்கீடு, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இமாம், இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உபி, ஓட்டு, ஓட்டுவங்கி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குண்டா, குல்லா, குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், சஞ்சய், சட்டசபை, சமரசப்பேச்சு, சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலித், தலித் முஸ்லீம், தேர்தல், தொப்பி, தொழுகை, நேரு, மனித நேயம், மறைப்பு, முல்லாயம், மேனகா, யாதவ், ராகுல்
Tags: ஓட்டு, ஓட்டு வங்கி, குண்டா, கூட்டணி, கொலை, கொலை வழக்கு, கொலை வெறியாட்டம், சஞ்சய், சிங், சோனியா, ஜாவித் உஸ்மானி, தியாகம், தில்லி, தில்லி இமாம், தேர்தல், நேரு, புகாரி, பேனி, பேனி பிரசாத், பையா, முல்லா, முல்லாயம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டுவங்கி, மேனகா, மௌலானா அஹமது ஷா புகாரி, யாதவ், ராகுல், ராஜா பையா, ராஜினாமா, ராஹுல்
Comments: 6 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 12, 2012
மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால் மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன. அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.
- காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
- குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
- அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
- அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர். அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8]. மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12]. இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].
ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்! |
உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?
[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]
© வேதபிரகாஷ்
12-08-2012
[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.
[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.
[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.
[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.
[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.
“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.
http://www.thehindu.com/news/national/article3754980.ece
பிரிவுகள்: ஃபத்வா, அசாம், அச்சம், அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அத்வானி, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல் விபச்சாரம், அரசு நிதி, அலி, அல்லா, அழுக்கு, இட ஒதுக்கீடு, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்துக்கள், இமாம், இஸ்லாம், உருது மொழி, உள்ளே நுழைவது, ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், குரூரம், குல்லா, கூட்டணி, சரீயத், சரீயத் சட்டம், சிட்டகாங், சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலார் அரசாங்கம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தடியடி, தடை, துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தூண்டு, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், பிஜேபி, மதவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்தனம், முஹம்மது, வங்காள தேசம், வங்காள மொழி, ஷியா, SMS
Tags: ஃபத்வா, அசாம், அடிதடி, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதானம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காஷ்மீரம், கௌஹாத்தி, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜிஹாத், தள்ளுமுள்ளு, பர்மா, பாகிஸ்தான், பிரார்த்தனை, போடோ, மியன்மார், மும்பை, முல்லா, முஸ்லீம்கள், மேடை, மௌலானால், Burma, fanaticism, foreign, fundamentalism, riot, SMs
Comments: 13 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 11, 2012
ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால் மும்பையில் ஆஜாத் மைதானத்தில் நடத்தப் பட்ட ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1]. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.

மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக் காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.

ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[2].

3 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[3].
கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர். அவர்களின் அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[4]. 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[5]. இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[6].
[புகைப்படங்கள் மற்ற இணைத்தளங்களினின்று எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளன – நன்றி]
© வேதபிரகாஷ்
11-08-2012
பிரிவுகள்: அல்லா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உருது மொழி, உள்துறை அமைச்சகம், உள்ளே நுழைவது, ஊரடங்கு உத்தரவு, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரஸ், கொடி, சன்னி, சன்னி ஜமைதுல் உல்மா, சிமி, சிறுபான்மையினர், சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, பழமைவாதம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் தன்மை, ராஸா அகடெமி
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதானம், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், சன்னி ஜமைதுல் உல்மா, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தீ வைப்பு, பர்மா, பெஸ்ட், மயன்மார், முஜாஹித்தீன், மும்பை, முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ராஸா அகடெமி, CST ரெயில்வே டெர்மினல்
Comments: 9 பின்னூட்டங்கள்
மார்ச் 14, 2011
ஷியா முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமாம்!
ஷியா முஸ்லீம்களின் மாநாடு: உத்திரபிரதேசத்தில் லக்னௌவில் சுல்தான்–உல்- மதாரிஸ்[Sultan-ul-Madaris] என்ற இரண்டு நாள் கூடுதல் மற்றும் மாநாடு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் [12-03-2011 மற்றும் 13-03-2011] நடந்தது. இதில் பல மாநிலங்களிலிருந்து வந்த ஷியா முஸ்லீம்கள் கலந்து கொண்டார்கள். தங்களது முஸ்லீம் சட்ட அமைப்பு, சமூக பிரச்சினைகள்[1] – பலதார/முறை திருமணம்[2], பெண்சிசு கொலை[3], வரதட்சிணை / மஹர், பெண்களைக் கொடுமைப் படுத்துதல்[4], சமூக தீர்திருத்தம்[5] – தவிர ஷியா முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். 2012ல் உத்திர பிரதேசத்தில் நடக்கவுள்ள தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தான் இத்தகைய மாநாட்டைக் கூட்டியுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது[6]. தில்லியில் உள்ள அரசியல்வாதிகள் சிறுபான்மையினர் என்றாலே சுன்னி முஸ்லீம்கள் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள் போல இருக்கிறது. வருகின்ற தேர்தலில் நாங்கள் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்கின்றார் அவர்களது தலைவர்களில் ஒருவர்[7].
ஷியா முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்! 50 கோடி[8] [இது 5 கோடி என்றிருக்க வேண்டும்] ஷியா முஸ்லீம்கள் இந்தியாவில் இருந்தாலும், இதுவரை மத்திய மற்றும் மாநில அரசுகளில் ஷியா முஸ்லீம்களுக்கு தகுந்த இடம் கொடுக்கப்படவில்லை. அகில இந்திய முஸ்லீம் தனிசட்டம் போர்ட் [All India Muslim Personal Law Board (AIMPLB)]. போல அகில இந்திய ஷியா முஸ்லீம் தனிசட்டம் போர்ட் [All-India Shia Personal Law Board (AISPLB)] 1972ல் உருவாக்கப் பட்டு, 2005லிருந்து அதே மாதிரி நடத்தப் பட்டு வருகின்றது. அகில இந்திய முஸ்லீம் தனிசட்டம் போர்ட் ஷியா மக்களை கவனிக்காமல் ஒதுக்குகிறது என்றும் குற்றஞ்சாட்டினர்[9]. சுதந்திரம் கிடைத்ததிலிருந்து, ஷியாக்கள் ராஜ்ய சபா, லோக் சபா மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு, தேர்தல் இல்லாமல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவேண்டும் என்று கேட்டு வருகின்றனர்[10]. அதுதவிர ஷியா முஸ்லீம்களின் பலன்கள் அவர்களுக்குக் கொடுக்கப் படாமல், மற்றவர்கள் அனுபவித்து வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியது[11].
பாகிஸ்தானில் வாழ முடியாத ஷியாக்களுக்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டுமாம்[12]: இஸ்லாமில் ஷியா மற்றும் சுன்னி என்ற இரண்டு பிரிவினர்கள் உள்ளார்கள் என்று மற்றவர்களுக்கு, குறிப்பாக பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்த இரண்டு பிரிவுகள் மட்டுமல்லாது, போரா, அஹ்மதியா, காதியான் என்று பல பிரிவுகள் இருக்கின்றன. பொதுவாக சுன்னி முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் இடங்களில், நாடுகளில், ஷியா முஸ்லீம்கள் இரண்டாம் தர மக்களாக நடத்தப் படுவர். ஏனெனில், இறையியல் ரீதியில் அவர்களுக்குள் வேறுபாடு உள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் அதிகமாக தாக்கப் பட்டு வர்கிறர்கள். அவர்களது மசூதிகளில் அடிக்கடி குண்டுகள் வெடிக்கப் பட்டு, ஷியா முஸ்லீம்கள் கொல்லப் படுகின்றனர். இந்நிலையில் தான், பாகிஸ்தானில் வாழ முடியாத ஷியாக்களுக்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்!
சுன்னி முஸ்லீம்கள் ஏன் மற்ற முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துகிறர்கள்? இஸ்லாம் என்றாலே ஒன்றுதான், எந்த வேற்றுமையும் கிடையாது, எல்லோருக்கும் சம உரிமை என்றெல்லாம் தம்பட்டம் அடித்து வரும் நிலையில், ஷியாக்கள் ஏன் இப்படி வெளிப்படையாக சுன்னிகளின் மீது குற்றஞ்சாட்ட வேண்டும்? முஸ்லீம்களின் பிரிவுகளுக்குள் ஒற்றுமையில்லாத நிலையில், முஸ்லீம்கள் ஏன் ஒற்றுமை, சமத்துவம் என்றெல்லாம் பேசி மற்றவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டும்? பாகிஸ்தானில் ஷியா, அஹ்மதியா, மற்ற முஸ்லீம்கள் கொடுமைப் படுத்தப் படுகின்றனர். அவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்று அறிவிக்கப் பட்டு, சுன்னிகள் அவர்களது மசூதிகளையும் இடித்து வந்துள்ளார்கள். அப்படி ஊடி வந்த முஸ்லீம்கலள் தான், தில்லியில் தாமரைப்பூ வடிவத்தில் கோவிலை கட்டியுள்ளார்கள். பஞ்சாபில் அஹ்மதியா முஸ்லீம்கள் தஞ்சம் அடைந்துள்ளர்கள். ஒருவேளை, அதே போல, பாகிஸ்தானிலிருந்து ஷியா முஸ்லீம்கள் விரட்டப் படுவார்கள் போலும். ஆகையால்தான், இத்தகைய கோரிக்கையை வைத்துள்ளார்கள் போலும்!
வேதபிரகாஷ்
14-03-2011
[7] “Minority to Lucknow and Delhi leaders has so far meant only Sunni community. Two crores Shias spread across the state and five crores in the country have mattered little for political masters. This consistent neglect has played havoc with the socio-economic status and the community has slipped to the bottom of the rung,” said Shia board spokesperson Yasoob Abbas. “We may not have the right numbers to ensure victory for a candidate but Shias can certainly emerge as potential game-changers in the election and UP election 2012 can be our first experiment. “And we can swing votes better than fledgling outfits like Peace Party,” another member AISPLB said under condition of anonymity .
http://timesofindia.indiatimes.com/city/lucknow/TNNMm-1-sultimShia-board-eyes-active/articleshow/7696889.cms
[8] about 50 crore Shia Muslims resided in India, but there was no Shia representative in Central and state governments, neither did they hold any post in higher services as well as in boards.இந்தியன் எக்ஸ்பிரஸ் நிச்சயமமக இந்த எண்ணிக்கையை தவறாகக் கொடுத்துள்ளது.
[10] “Reservation for Shias in Rajya Sabha and Lok Sabha seats being filled through nomination has been demanded in the convention. It was also demanded that law should be framed to give reservation to Shias in elections in accordance with their population,” the chairman said.
பிரிவுகள்: சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வாரியம், முஸ்லீம் சட்டம், ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி
Tags: அஹ்மதியா, இடஒதுக்கீடு, காதியான், சுன்னி, போரா, லெப்பை, ஷியா
Comments: 1 பின்னூட்டம்
ஜூன் 24, 2010
முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Breastfeed-fatwa-for-women
செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார்.

Pathwa-issued-cleric
இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.

சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள்.

saudi-women-breastfeeding-men-drivers
ஏனெனில் ரத்தப்பந்தத்தைவிட, முலைப்பால் பந்தம் இஸ்லாத்தில் உயர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பெண்கள் ஆடவர்களுக்கு, அதிலும் அந்நியர்களுக்கு எப்படி முலைப்பால் கொடுப்பார்கள், கொடுக்கவேண்டும் ……………..என்றெல்லாம் விவரிக்கப் படவில்லை.

Saudi-woman-breastfeed
இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

Muslim-woman-driver
சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!

வளைகுடா நாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது.
சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம்.
பிரிவுகள்: ஃபத்வா, அடிமை, அல்லா, அல்லா பெயர், அல்வலீது பின் தலால், அழகிய இளம் பெண்கள், இஸ்லாம், உறவினர், உலமா வாரியம், உலமாக்கள், குரான், சரீயத், சரீயத் சட்டம், சவுதி, சவுதி அரேபியா, சவுதி மந்திரவாதி, சவூதி அரேபியா, சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, ஜிஹாத், நான்காம் மனைவி, நிகாப், நிக்கா, பகுப்பு, பணி, பர்கா, பர்தா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பெண், பெண்ணியம், பெண்ணுரிமை, மக்கா, மதினா, முலை, முலைப்பால், முலைப்பால் ஊட்டுவது, முலைப்பால் பந்தம், முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் உரிமை, முஸ்லிம் பெண்கள் மாநாடு, வேலை, ஷேக், ஹதீஸ், ஹேரம்
Tags: ஃபத்வா, அல்வலீது பின் தலால், அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உரிமை, ஓட்டு, கட்டுப்பாடு, காரோட்டி, காரோட்டு, கார், சவுதி அரேபியா, மறைப்பு, முலை, முலைப்பால், முலைப்பால் ஊட்டுவது, முலைப்பால் பந்தம், முஸ்லிம், முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம்கள், மூடு, மூடுதல், ஷரீயத், ஹதீஸ், ஹிஜாப்
Comments: 11 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்