முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!
ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன? ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.
தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.
இசுலாமியத் தீவிரவாதம் என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016
[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST
[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html
[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
அண்மைய பின்னூட்டங்கள்