ஏப்ரல் 3, 2017
பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மத–காப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை. பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.
© வேதபிரகாஷ்
03-04-2017

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.
[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.
[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused
[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.
[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html
[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.
http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.
[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html
[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT
[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html
[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
பிரிவுகள்: 786, ஃபிதாயீன், அடி உதை, அடி வைத்தியம், அடிப்பது, அஹம்மதியா, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, குத்து வைத்தியம், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைவெறி, சன்னி, சலாபிசம், சலாபிஸம், சிரச்சேதம், சுத்தம், சுத்தி, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூடு, சூடு வைப்பது, சூபி, சூபித்துவம், ஜிஹாதி, ஜிஹாத், ஜோதிடம், தர்கா, தீய சக்திகளை விரட்டுவது, நரபலி, நிர்வாண வைத்தியம், பலி, பலிக்கடா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான், பைத்தியம், மசூதி, மசூதி இடிப்பு, மசூதி எரிப்பு, மசூதி சாவு, மந்திரக் கட்டை அவிழ்த்தல், மந்திரத் தொழிலில், மந்திரம், மாயை, முனி, முஸ்லிம் சாமி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம்-சோதிடம், முஸ்லிம்-மாந்திரிகம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் நரபலிகள், ரத்தக் காட்டேரி, ரத்தக் காட்டேரிகள், ரத்தம், ரத்தம் குடித்தல், வன்முறை, வாஹாபி, வாஹாபி இயக்கம், விமானம், வியாபாரம், வெடிகுண்டு, ஷியா, Uncategorized
Tags: அடி வைத்தியம், இஸ்லாம், கருப்பு ஆடு, சுடு வைத்தியம், சுடுதல், சூடு, சூனியம், தர்கா, தர்கா கூத்துகள், நரபலி, பலி, பில்லி, பைத்தியம், மந்திரம், மாந்திரீக நரபலிகள், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள், ரத்தம், வைத்தியம்
Comments: Be the first to comment
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
நவம்பர் 4, 2011
பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

பாகிஸ்தானில் பக்ரீத் மிருகவதை எதிர்த்துப் பிரச்சாரம்: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்[1]. பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுக்கும், “குர்பானி’ என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந்தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.

மிதவாதி முஸ்லீம்களின் கோரிக்கை: முஸ்லீம்களில் தாராள மனப்பாங்குடன், திறந்த மனத்துடன், மிதவாதிகளாக் இருக்கும் முஸ்லீம்கள் அத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், மிருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான்[2] இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில்[3] எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.

கடவுளின் படைப்புகளான மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது: கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்[4].

வெள்ளம் போது செய்யப்பட்ட பிரச்சாரம் (2010): இந்தாண்டு 2010 ஒரு ஆடு வாங்குங்கள். அதை, “குர்பானி’ கொடுப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தில் தங்கள் கால்நடைகளை இழந்த கிராமத்தவருக்கு அதை தானமாகக் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்[5].

மாமிச உணவு கிடைக்கும் விதம், அதனால் வரும் உபாதைகள்: மாமிசத்தைத் தின்பதமனால் யயிற்றுகப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, ஈத் நாட்களில், மருத்துவ மனைகளில் முஸ்லீம்கள் அனுமதிக்கப் படுவதும் அதிகமாகிறது[6] அதுமட்டுமல்லாமல், பொதுவாக “ஹலால்” மாமிசம் முறையாக மிருக்லங்களைக் கொன்று எடுத்தாலும், பலமுறை, அம்மிருகங்கள் எப்படி கிடைக்கின்றன, எவ்வாறு உள்ளன என்று முஸ்லீம்களுக்குத் தெரிவதில்லை[7]. அதிகமாக மாமிசம் சாப்பிடுவதும் ஆரோக்யத்திற்கு நல்லதில்லை. அதனால் இருதயநோய்கள் வருவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன[8].

இந்திய முஸ்லீம்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பாகிஸ்தான் முஸ்லீம்கள் இப்படி பிரச்சாரம் முன்றாண்டுகளாக செய்து வருகின்ற நிலையில், இந்திய முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலைப்பூக்களில் / இணைத்தளங்களில் தமது சக்தியைத் திரட்டி, இரவு-பகலாக மற்ற விஷயங்களுக்கு பிரச்சாரம் செய்து வரும் முஸ்லீம்கள் இதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை!
வேதபிரகாஷ்
04-11-2011
[5] Last year, an animal activist organisation, which is now almost defunct, had run a campaign asking people to “save” an animal instead of “sacrificing it” after the devastating floods that left over a million animals dead in Pakistan. “Buy a goat – and this year, instead of sacrificing it, send it back to a village to replace what was lost and help people back onto their feet. Goats can provide an ongoing income for families through the sale of milk, ghee, meat and kids, as well as supplement their own diet and agriculture,” was the appeal from the Karachi-based organisation. www.pakistaniat.com
[8] Eating too much eat is not good for your health either. Studies upon studies have revealed to us that eating red meat in excess increases our risks of developing cardiovascular diseases and developing cancer. We are only about five percent of the world’s population yet we grow and kill an astonishing 10 billion animals a year – more than 15 percent of the world’s total. http://www.nytimes.com/2008/01/27/weekinreview/27bittman.html.
பிரிவுகள்: ஈத், ஒட்டக பால், கசாப்புக்காரத்தனம், காஃபிர், குரான், குரூரம், கொலை, சித்திரவதை, சுத்தம், சுன்னி, சூஃபி, ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், தூய்மை, பக்ரீத், பலி, பலிக்கடா, பாகிஸ்தான், ரத்தம், வங்காள தேசம், வதை, ஷியா, ஹராம், ஹலால்
Tags: அசுத்தம், ஆடு, ஈத், ஒட்டகம், கொலை, சடங்கு, சுத்தம், ஜஹலால், பக்ரீத், பச்டு, பலி, மாமிசம், மிருகச்ம், ரத்தம், வதை, ஹராம்
Comments: 9 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 26, 2011
பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?
முஸ்லீம் முஸ்லீமைத்தான் ஆதரிப்பேன் என்றால், அவர்கள் தனியாக இருந்து விடலாமே: உண்மையைச் சொன்னால் முஸ்லீமுக்கு பொத்துக் கொண்டு கோபம் வரும், ஆனால் முஸ்லீம் என்றாலும், அடிப்படைவாதி என்றாலும், ஏன் தீவிரவாதி என்றே குறிப்பிட்டாலும், முஸ்லீம் என்றால், முஸ்லீமுக்குத்தான் ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, முன்னர் அலி சகோதரர்கள், “ஒரு மிகவும் கேடுகெட்ட மோசனான ஆள் முஸ்லீமாக இருந்தால், அவனுக்கு மரியாதை செய்வோமே தவிர, காந்தியை மகாத்மா என்று மதிக்க மாட்டோம்”, ஏனென்றால், அவர் ஒரு காஃபிர்”, என்று பொருள்பட சொன்னதை இங்கு நினைவு கூர்தல் வேண்டும்[1]. அதை நன்றாக அறிந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர், அலி சகோதரர்களை தனது வீட்டில் விருந்தினர்களாகத் தங்க வைத்துக் கொண்டபோது, “இந்தியா வேண்டுமானால், காந்தியை பெருமையாக மதிக்கலாம், ஆனால் இந்த காந்தி இவர்களது ஜேபிக்குள் அடக்கம்”, என்றார். முஹமது அலியின் பேச்சைக் கேட்டு அம்பேத்கரே வியந்து அதனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்[2].

காஃபிர்-மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[3] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[4].

முஸ்லீம் மனதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்: அம்மாதிரித்தான் தேவையில்லாமல் இந்தியா ஆப்கானிஸ்தானிற்கு பலவழிகளில் கோடிகளில் பணம், மற்ற உதவிகளை செய்து வருகிறது. ஆனால், அங்கு வேலை செய்து உதவும் இந்தியர்களைக் கொன்று வருவதுதான் முஸ்லீம்களாகிய ஆப்கானிஸ்தானியர் செய்து வருகின்றனர். தாலிபான்கள் இருந்து மற்ற உலக மகா பிரத்தி பெற்ற ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் முதலியோர் உண்மையில் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் அந்த நன்றி கெட்ட பொம்மை பிரதம மந்திரி கூறுகிறார், “போர் என்று வந்து விட்டால், நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு அளிப்போம்”, வீராப்பாக சொல்லியிருக்கிறார். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடுமோ, பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால், நாங்கள் எங்கள் சகோதரன் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கர்ஸாயின் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சீனாவின் துரோகத்தனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாக்.மீது படையெடுத்தால்: இந்தியா-அமெரிக்காவிற்கு கர்சாய் எச்சரிக்கை[5]: தலிபான்களிடம் சிக்கி சீரழிந்த ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கப் படையினர், ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தலிபான்களை வேட்டையாடி வருகின்றனர். கூடவே பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி வரும் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளுடனும் மோதி வருகின்றன. சீரழிந்து போய் விட்ட ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்பும் முக்கியப் பணியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானை தத்தெடுத்துக் கொண்டது போல பல ஆயிரம் கோடி பணத்தை இறைத்து ஆப்கானிஸ்தானில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா[6]. இந்த நிலையில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு நாடோ பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவாக இருப்போம் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் அதிரடியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அல்லது வேறு நாடுகளுடன் சண்டை மூளக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு வேளை நாளையே பாகிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவாக இருப்போம். காரணம், பாகிஸ்தான் எங்களது சகோதரன்.

பாகிஸ்தானை தாக்கினால் பதிலடி கொடுபோம் : ஹமித் கர்சாய்[7] ! பாகிஸ்தான் மீது யாராவது போர் தொடுத்தால் பாகிஸ்தான் மக்கள் ஆப்கானிஸ்தானின் உதவியைத்தான் நாடுவார்கள். அப்போது பாகிஸ்தானியர்களுக்கு உதவ, கை கொடுக்க நாங்கள் தயாராக இருப்போம். பாகிஸ்தானின் சகோதரர்கள் நாங்கள். 1979-80ல் ரஷ்யா எங்களை ஆக்கிரமித்தபோது பாகிஸ்தானியர்கள்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எங்களை சகோதரர்களாக கருதி எங்களுக்கு உதவினர் பாகிஸ்தானியர். தங்களது உள்ளங்களை மட்டுமல்லாமல் இல்லங்களையும் கொடுத்தவர்கள் அவர்கள். எங்களுக்கு உதவிய அவர்களுக்கு நாங்கள் துரோகம் இழைக்க முடியாது, ஏமாற்ற முடியாது. எனவே அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் எங்களது முழு ஆதரவும் பாகிஸ்தானுக்குத்தான் இருக்கும்[8].

பாகிஸ்தான் எங்களுக்கு துயரத்தை அளித்தாலும் அவர்கள் தாம் எங்களுக்கு சகோதரர்கள்: எங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகம் பல துயரங்களை இழைத்துள்ளது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களது சகோதரர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் நான் விளக்க விரும்புகிறேன். இதுதிடீரென நடந்த ஒப்பந்தம் அல்ல, பல காலமாகவே பேசப்பட்டு வந்த ஒன்றுதான். இதற்கும், பாகிஸ்தானுடனான எங்களது உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் கர்ஸாய். கர்ஸாயின் இந்தக் கருத்து அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹக்கானி தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது. ஆனால் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதற்காக அமெரிக்காவுடன் நேரடி மோதலிலும் ஈடுபட அது தயாராக உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அமெரிக்கா படைகளைக் குவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தானும் தனது பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையில் கர்ஸாயின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

பாம்புகளை தோட்டத்தில் வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது[9]: பாம்புகள் என்றால் அவற்றின் தன்மை என்ன என்பது தெரிந்துதான் இருக்கும், அதிலும் கடிக்கும் பாம்புகள் எனும்போது, விளையாட்டாக இருக்கும் பாம்புகள் இல்லை. “பின் தோட்டத்தில் நச்சுப் பாம்புகளை வைத்துக் கொண்டு, அதிலும் அவை உங்களது அடுத்த வீட்டுக் காரர்களை கடிக்கும் நிலையில் இருக்கும்போது, நாம் சும்மா இருக்க முடியாது”, என்று ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்தபோது வெளிப்படையாகக் குறிப்பிட்டார்[10]. இருப்பினு பாம்புகளை அவர்கள் வைத்துள்\னர்[11]. பாம்புகள் என்று குறிப்பிட்டது ஜிஹாதிகள் தாம், தீவுரவாதிகள் தாம், பயங்கரவாதிகள் தாம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன[12]. கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஹக்கானி குழுவினரை ஒழிக்க, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார்[13]. நட்பு எனும்போது, நல்ல உறவு எனும்போது, அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும், நீ முட்டாள் மாதிரி எங்கலுக்கு உதவி செய்து கொண்டேயிரு, அவர்கள் விமானங்களைக் கடத்தினாலும் சரி, நமது எஞ்சினியர்களைக் கொன்றாலும் சரி, எல்லைகள் கடந்த தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பினாலும் சரி, இந்தியா உதவி செய்து கொண்டியிருக்கிறது என்றால், அதில் முட்டாள்தனம் இல்லை, ஏதோ சதி இருக்கிறது எனலாம்.

வேதபிரகாஷ்
26-10-2011
[1] “However pure Mr. Gandhi’s character may be, he must appear to me from the point of religion inferior to any Mussalman he be without character”
“Yes, according to my religion and creed, I do hold an adulterous and a fallen Mussalman to be better than Mr Gandhi”
[2] B. R. Ambedkar, Thoughts on Pakistan, Thacker & Co., Bombay, 1941, p.302.
[3] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.
[4] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.
[8] மேலே விளக்கியபடி, மோமின், மோமின் கூட சேர்ந்து காஃபிருக்கு எதிராகத்தான் ஜிஹாத்-போரை நடத்துவோம் என்று வெளிப்படையாக பேசும் முஸ்லீம்களுடம், ஏன் இன்னும் தாஜா செய்து கொண்டிருக்கிறார்கள்?
[10] US secretary of state Hillary Clinton on Friday warned Pakistan that it cannot keep “snakes in your backyard and expect them to only bite your neighbours”, a not so veiled reference to terror havens in its tribal areas. Then she pressed Islamabad to crackdown on Afghan insurgent Haqqani network holed up there.
பிரிவுகள்: அலி, அலி சகோதரர்கள், அழுக்கு, கிலாபத், கிலாபத் இயக்கம், சுத்தம், தீட்டு, தீண்டாமை, தூய்மை
Tags: அமினாபாத், அலி, அலி சகோதர்கள், அழுக்கு, ஆப்கானிஸ்தான், ஈ.வே.ராமசாமி நாயக்கர், கிலாபத், கிலாபத் இயக்கம், சுத்தம், தலிபான், தாலிபான், தீட்டு, தீண்டாமை, தூய்மை, தூய்மையானவன், தூய்மையில்லாதவன், பன்றி, லக்னௌ
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்