Archive for the ‘சிற்பம்’ category

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


இஸ்லாமியரை தேர்வெழுத அனுமதிக்காத தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்றம் அபராதம்!

பிப்ரவரி 10, 2011

இஸ்லாமியரை தேர்வெழுத அனுமதிக்காத தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்றம்!

சமஸ்கிருதம் தெரியாத முஸ்லீமின் மனு நிராகரிக்கப் பட்டது[1]: தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத இஸ்லாமியர் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அந்த துறைக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நல்ல முகமது என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, தொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்’, `கியுரேட்டர்’ (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நான் அந்த 4 பதவிகளுக்குமே விண்ணப்பித்தேன். குறிப்பாக கியுரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் தேர்வு எழுதமுடியாதவாறு எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கியுரேட்டர் பதவிக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், நான் இந்து மதத்தினர் அல்லாததால் மற்ற 3 பதவிகள் அளிக்க முடியாது என்றும் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதற்கான உத்தரவை கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் தான் நிராகதரித்தோம். கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.

நீதிபதியின் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “தொல்லியல்துறை என்பது இந்து சமய துறையல்ல. அதில் சில பணிகளுக்கு மட்டும் தான் இந்து சமயத்தினராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. ஆகையால் தொல்லியல்துறையில் பணிகளுக்கு இந்துக்கள் தான் சேர வேண்டும் என்று மததத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது. கியுரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றால் அதை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விண்ணப்பித்த பிறகு அந்தக் காரணத்தை காட்டி நிராகரிப்பது முறையன்று. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் பிரதிவாதிகள் வழங்க வேண்டும், என்று அவர் அதில் கூறியிருந்தார். [ரூ.5,000/- என்றிருக்க வேண்டும்]

உருது / அரேபிக் தெரிந்த இந்துவிற்கு முஸ்லீம்கள் அதே மாதிரியான வேலை கொடுப்பார்களா? மசூதிகள், மதரஸாக்கள், முஸ்லீம் கட்டிடக் கலை, போன்ற துறைகள், முஸ்லீம் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில், உருது / அரேபிக் மொழி தெரிந்திருந்தால் மட்டும், வேலை கொடுத்துவிடுவார்களா? சென்னை நியூ காலேஜில் எப்படி படிப்படியாக இந்துக்கள் வேலைக்கு அமர்த்துவதை நிறுத்திவிட்டார்கள் என்பதனை, அங்கு வேலைசெய்த் இந்துக்களுக்குத் தான் தெரியும். உள்ள இந்துக்கள் வேலையிலிருந்து சென்ற பிறகு, ஓய்வு பெற்றப் பிறகு, அந்த இடங்களுகு முஸ்லீம்களாகப் பார்த்துதான் வேலைக்கு வைக்கிறார்கள். ஏதாவது, ஒரு இந்து ஒருவேளை வந்து விட்டால், அவருடன், மற்றவர்கள் ஒத்துழைக்க மாட்டடர்கள். அவரே வேறு இடத்தில் வேலைத் தேடிக்கொண்டு சென்றுவிடுவார் அல்லது செல்லுமாறு செய்யப்படும். இதுதான் உண்மை. ஆதிசங்கரர் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பல முஸ்லீம்கள், கிருத்துவர்கள் உள்ளார்கள், ஏன், வேந்தராகவே முஸ்லீம்கள் உள்ளனர். அதுமாதிரி, அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்திற்கு, ஒரு இந்து வேந்தராக முடியுமா? இதைத்தான் கனம் நீதிபதி அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

மோடியை பாராட்டிய முஸ்லீம் வேந்தர் ஏன் மிரட்டப்படவேண்டும்? இன்றுவரை, தியோபந்த் பல்கலைக் கழக துணை வேந்தர், மோடி பற்றி ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக, முஸ்லீம்கள் தமகுள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள். இதோ, இதை எழுதும் போது, இங்கு துப்பாக்கி சூடு[2] நடப்பதாக செய்தி[3] வந்துக் கொண்டிருக்கிறது! இதற்கு நீதிபதி என்ன விளக்கம் அளிப்பார்? முஸ்லீம் முஸ்லீமாஅ இல்லாமல், இந்தியனாக செயல்படுவான் என்ற உத்திரவாதம் கிடைக்கும் வரை அல்லது அதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கும் வரை, இந்தியர்கள் இத்தகைய அனுபவ்ங்களைத் தொடர்ந்துப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான், தாமஸ் கேட்கிறார், எத்தனையோ கிரிமினல்கள் எல்லோரும் அமைச்சர்களாக, எம்.பிகளாக உள்ளார்களே, நான் இருக்கக் கூடாதா, என்று! அதாவது, எதர்கெல்லாம், எப்படி ஒப்புமை செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் பொய் விட்டது.

ஆர்வமா, வேறு நோக்கமா என்பதை காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்: என்னத்தான் பாரசீக மொழி தெரிந்திருந்தும், ஏ.ஏ.எஸ்.ரிஸ்வி போன்ற பண்டிதருடன் இருந்தாலும், இர்ஃபான் ஹபீப் முதலியவர்கள் நண்பர்களாக இருந்தாலும், எஃப்.ஜே.ஏ. ஃபிளின் என்ற ஆஸ்திரேலிய முனைவர்-ஆராய்ச்சியாளர், இந்திய தொல்துறை பொருட்களை திருடித்தான் சென்றார்[4]. அவர்கூட, தனக்கு இந்தியாவில் எல்லா உரிமைகளும் உண்டு என்றுதான் உள்ளே நுழைந்தார். ஆனால், கடைசியில் தனது நிலைமை, தகுதி, சலுகை முதலியவற்றை துர்பிரயோகம் செய்து, பல தொல்பொருட்களை கடத்திச் சென்றார். அதே மாதிரி எத்தனை தொல்துறை அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப் பட்டன, உடைக்கப் பட்டன, அழிக்கப் பட்டன என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆக, இங்கு முஸ்லீம், கிருத்துவர் என்று மற்றவர்கள் பார்ப்பதில்லை, ஆனால், சமயம் வரும்போது, அவர்கள் அவ்வாறே செயல்படுவதால் தான், அத்தகைய எண்ணம் வருகிறது. இங்கு கூட, அந்த மனுதாரர், உண்மையிலேயே ஆர்வத்துடன் அந்த வேலைக்கு வருவதாகத் தெரியவில்லை, ஏதோ உள்நோக்கத்துடந்தான் வந்துள்ளார். இப்பொழுதே, இப்படி பிரச்சினை செய்பவர், நாளைக்கு, உள்ளே நுழைந்து விட்டால், என்ன செய்வாரோ?

வேதபிரகாஷ்

10-02-2011


[2] A meeting on the fate of Ghulam Mohammad Vastanvi, the newly elected vice-chancellor of the Darul Uloom Deoband, turned violent as gun-toting men gate crashed the gathering on Tuesday. The meeting, held in Deoband’s Abulmali locality at the house of one Haji Riyaz Mahmood, was convened by Arif Siddiqui, the local president of a Jamiat-Ulema-i-Hind faction. It also included supporters of Rashtriya Lok Dal MP Mahmood Madani.  The men, who are supporters of Vastanvi, fired in the air indiscriminately to intimidate the students of the Islamic seminary and local Muslim leaders who were present. Taslim Qureshi, an eye witness, said at least 10 of them were carrying guns. “About 20 people entered the house and began threatening those present. Soon, about 10 more gun-toting men joined them and opened fire,” he said. The men are allegedly followers of Maviya Ali, the former state secretary of the Samajwadi Party. Ali was suspended from the party last week. “We have registered cases against four persons under Section 307 for attempt to murder,” a police officer said.

[4] இதைப் பற்றிய என்னுடைய பதிவுகள் ஆங்கிலத்தில் உள்ளன. கூகுள் தேடலில் கண்டு படித்து கொள்ளலாம்.