வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? எதிர்கட்சிகள் பொய்மையுடன் வேலை செய்வது ஏன் [2]
உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அளவுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கியுள்ளது, எஸ்.சிக்களுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் துரோகம் எனலாம். அவர் முஸ்லீமாக மாறி, அவர்களுக்கே உழைக்கலாம், எஸ்.சிக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
தமுமுக–வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்தது [18-02-2020]: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பல்வேறு அரசியல் அமைப்புகளும் போராடிவரும் நிலையில் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது[1]. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்திலிருந்து பேரணியாக சென்ற தமுமுக-வினர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டின் முன் மோடி அமித்ஷா ஆகியோரின் படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[2]. இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கப் பட்டது என்பது எல்லாம் தெரியவில்லை.
14-02-2020 லிருந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால், எப்படி?: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்[3]. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் ஸ்டைலில், தமிழில் கோஷங்கள் இட்டு, ராப் பாடினர்[4]. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். 7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
சிறுவர்கள், பெண்களை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்வது: முஸ்லிம்கள் பொதுவாக பெண்களை பர்கா உடுத்த வைத்து, வீட்டிற்குள் அடைத்து தான் வைத்திருக்கிறார்கள். சில பெண்கள் தாம், வெளியே வந்து மால்களுக்கு, கடைகளுக்கு வந்து செல்கிறார்கள். அந்நிலையில். பெண்களை வெளியே அழைத்து ஆர்பாட்டம் செய்ய வைத்தது, அவர்களுக்கு உத்வேகமாக இருந்தது போலும். உணர்ச்சிப்பூர்வமாக, ஆவேசமாகக் கத்துகிறார்கள். தண்ணீர், உணவு எல்லாம் சரியாகக் கிடைக்கப் பெறுவதால், ஜாலியாக வந்து உட்கார்ந்து கொண்டு, பொழுது போக்குகிறார்கள். போராட்டம் செய்ன்றனர். ஆனால், இதெல்லாம் பாலஸ்தீனம்-காஷ்மீரம் திட்டம், வழிமுறை, அரசை எதிர்ப்பது, போலீஸாரை மதிக்காமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பது தெரிகிறது. தொடர்ந்து, ஊடக-செய்திகளை கவனித்து வருவர்கள், இதையெல்லாம், சுலபமாகக் கண்டு கொள்கிறார்கள். அப்பொழுடு தான், அவர்களுக்கு, முஸ்லிம்கள் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள் என்று தெரிந்து விட்டது. முதல் அமைச்சர் சட்டசபையில் பேசியதற்கு, “வண்ணாரப்பேட்டையிலிருந்து ஒரு சாமானியன்” என்று, விகடன் வக்காலத்து வாங்கி இருப்பது, அப்பட்டமான, முஸ்லிம்-ஆதரவு என்பது தெரிந்தது[5]. ஏனெனில், இந்த அளவுக்கு, யாரும் அத்தகைய அரசு-எதிர்ப்பு, பொய்மை கலந்த விசயங்களின் தொகுப்பை யாரும் வெளியிட முடியாது. முஸ்லிம்களின் மௌத் பீஸ் என்பார்களே, அப்படி செயல்பட்டுள்ளது[6].

முஸ்லிம் அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டு ஆர்பாட்டத்தை நடத்துவது.

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன. உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை செருப்பால் அடிப்பது.

மாநில அரசை எதிர்க்கிறேன் என்று மத்திய அரசை எதிர்ப்பது, மோடியை வசைப் பாடுவது முதலியன.

உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு பதிலாக படத்தை எரிப்பது
எல்லாமே நகல் போன்று தான் காணப்படுகின்றது: இப்போராட்டம், ஏதோ ஏற்கெனவே தெரிந்த பாடலை வேறு விதமாக பாடும் போது, இதை எங்கேயோ கெட்டது போல உள்ளதே, ஏற்கெனவே கேட்டு விட்டோமே, என்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆமாம், ஜே.என்.யூ, அலிகர் முஸ்லிம் பல்கலை, கன்னூர் IHC, ஹைதராபாத், பெங்களூரு என்று பார்த்தவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, இதில் உள்ள உற்றுமையை காண முடியும். அது தான் முஸ்லிம்களின் ஏற்பாடு, ஆதாவு, ஆசியல் முதலியன. இங்கு, தமிழகத்தில் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று வெளிப்படையாக உள்ளதால், அப்பிரச்சினையே இல்லை. பிறகு, தமிழக முஸ்லிம்களுக்கு, இதில் என்ன அத்தகைய அக்கரை என்ற கேள்வி எழுகின்றது. விகடன் மற்றும் அதன் நிருபர்கள், ஏதோ ஒடு மொத்தமாக, இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போல, செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது அந்த அளவிற்கு, முஸ்லிம்களின் ஊடக பலம் உள்ளது என்று தெரிகிறது. பிபி.தமிழ், ஐ.இ.தமிழ், தி.இந்து என்று எல்லாமே இவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் வழக்கம் போல எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் ஊடகக்காரர்கள் எண்ணுகின்றது போல அல்ல திட்டம் போடுவது போல, எந்த கலவரமும் நடக்கவில்லை. ஆனால், முஸ்லிம்களும், எதிர்கட்சியினரும், தூண்டிவிட்டி, மோடி, அமித் ஷா, பழனிச்சாமி, பன்னீர்செல்வம் முதலியோர்களின் படங்களை எரித்து, மத்திய மாநில அரசுகளை வன்மையாக விமரித்து, ஆர்பாட்டம்-போராட்டம் என்று கலாட்டா செய்து வருகின்றனர். எல்லாமே சட்டமீறல்கள் என்று தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முஸ்லிம்களுக்கும் அலுத்து போன நிலை ஏற்பட்டுள்ளது.
© வேதபிரகாஷ்
21-02-2020
[1] நக்கீரன், முதல்வர் வீட்டை முற்றுகையிட தமுமுக நடத்திய பேரணி.! (படங்கள்), Published on 19/12/2019 (15:23) | Edited on 19/12/2019 (15:35)., குமரேஷ்
[2] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tmmk-protest
[3] ஐ.இ.தமிழ், ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள் – சென்னை சிஏ.ஏ. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ், WebDeskFebruary 20, 2020 03:43:52 pm
[4] https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/
[5] விகடன், சட்டமன்றத்தில் கொந்தளித்த எடப்பாடிக்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து ஒரு சாமானியனின் கடிதம்!, ர.முகமது இல்யாஸ் Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.
[6] https://www.vikatan.com/news/politics/a-letter-to-edappadi-palanisamy-from-a-common-man-on-caa-protests
அண்மைய பின்னூட்டங்கள்