Archive for the ‘சின்னம்’ category

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

மார்ச் 26, 2013

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

Sanjaya with long beard - a sufi looking

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.

மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

Sanjaya with long beard sufi look

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.

முஸ்லீம்இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

Sanja with different look prompting Yasar Arafat

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.

முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

Sanjay with beard and all

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.

பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

Sanja coming to court

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.

Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”!

Sanjay Dutt worshipping in a Karnataka temple

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

Sanjay-Dutt with Tilak

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.

Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான்.
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.”
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான்.
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term.
 As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான்.
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6].

Sanjay with saffron shawl

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.

போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்

Sanjay-Dutt-after-paying-obeisance-at-Golden-Temple-in-Amritsar

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

sanjay-dutt-at Ajmir dargah posing as Muslim

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!

© வேதபிரகாஷ்

24-03-2013


[1] Zaibunnisa Kadri, who acted as a conduit for the arms without express realisation of the contents of the package, were charged under the more rigorous provision.

Read more at:http://indiatoday.intoday.in/video/zaibunnisa-kadri-sanjay-dutt-1993-mumbai-blasts-anees-ibrahim-abu-salem/1/259373.html

[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”

[10] Sanjay Dutt is a big man. He has sources. What do we have? I don’t even have money to pay the lawyer any more. Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer.

http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307Sanjay_dutt_CS.asp

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

மார்ச் 22, 2013

மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு

லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு  மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.

வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள்  நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


மும்பை மாபியா தலைவன் என்னைக் கொலை செய்ய இரண்டு ஆட்களை அனுப்பியுள்ளானாம், அதனால் நான் இந்தியாவிற்கு வரவில்லை!

ஜனவரி 21, 2012

மும்பை மாபியா தலைவன் என்னைக் கொலை செய்ய இரண்டு ஆட்களை அனுப்பியுள்ளானாம், அதனால் நான் இந்தியாவிற்கு வரவில்லை!

ருஷ்டியின் வருகையும், முஸ்லீம்களின் எதிர்ப்பும்: பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டியை இந்தியாவுக்குள் விடக் கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளதால் அவர் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு சத்தமில்லாமல் வந்து செல்லவிருக்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் ஊதி பார்த்தன. பிரபல பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி வரும் 20 முதல் 24ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று செய்து வந்ததும், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான “தாரூல் உலூம் தியோபான்ட்” பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பியது. பிரமரும், சோனியாவும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாருல் உலூம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தலைவர் மௌலானா முப்தி அபுல் காசிம் நொமானி தெரிவித்துள்ளார்[1]. மேலும் சல்மான்ருஷ்டி மீது செருப்பு வீசினால் ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்று மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது (தலைக்கே சன்மானம் அறிவித்துள்ளபோது செருப்பு வீசுவதற்கு என்ன பணம் கொடுப்பது?). ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அறிவித்தவாறு ருஷ்டி இலக்கிய விழாவில் கலந்து கொள்வார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பலதடவை வந்து சென்றுள்ளபோது, இப்பொழுது ஏன் ஆர்பாட்டம்? கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த ருஷ்டியின் “சேட்டனிக் வெர்சஸ்” (சாத்தானின் வேத வாக்கியங்கள்) என்ற நூல் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வை அவமதித்ததற்காக அவருக்கு எதிராக பத்வா கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு அவர் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு வந்து சென்றார். கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அவர் ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் வழக்கமாக உள்ளபோது, இந்தாண்டு ஏன், அதனை பிரச்சினையாக்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை. தெரியாமல் என்ன, உபியில் தேர்தல் நடக்கிறதே, எத்தனை தொகுதிகளில் 30% மேலாக முஸ்லீம்கள் உள்ளனர், பிறகு ஓட்டு பெரிதா, இலக்கியம் பெரிதா?

ஓட்டுவங்கி அரசியல் செய்யும் சோனியா-காங்கிரஸ்: உத்தர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் ருஷ்டி விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஷீத் மசூத் கூறுகையில், “முஸ்லிம்கள் ருஷ்டியை மன்னிக்கக் கூடாது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கும்போது அவரது வருகை பிரச்சனையைக் கிளப்பும். அதனால் ஜெய்ப்பூர் விழாவை ரத்து செய்ய வேண்டும்”, என்றார். பயந்து போன, பாஜக துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “தேர்தல் நேரத்தில் ருஷ்டி வருவது சரியல்ல. அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விசா வழங்குவது உகந்ததன்று“, என்று பாட்டு பாடியுள்ளார். ருஷ்டி வருகையை தடை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகமது ஹசன் தெரிவித்துள்ளார் அவர் வருவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து தெரிவித்துள்ளார்.  அதெப்படி சொல்லிவைத்தால் போல மற்ற கட்சிகளில் மட்டும், முஸ்லீம்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், ஆனால், காங்கிரஸில் அமைச்சர்களே வந்து விடுகிறார்கள்!

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினரால் ஆபத்தாம் – கூறுவது உள்துறை-சிதம்பரம்: இந்நிலையில் சல்மான் ருஷ்டி உயிருக்கு சிமி இயக்கத்தை சேர்ந்தவர்களால் திடீர் ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது[2]. ஆஹா, சிதம்பரம் தான் என்னமாய் வேலை செய்கிறார்? சிமி இயக்க தலைவர்களின் நடவடிக்கையை கண்காணித்த பிறகே இந்த உத்தரவை உள்துறை வெளியிட்டுள்ளது[3]. அதாவது, அந்த அளவிற்கு, அவாது திறமை உள்ளது. தடை செய்த பிறகும், அவர்கள் வேலை செய்வார்களாம், சிதம்பரம் பார்த்துக் கொண்டே இருப்பாராம்! மேலும் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் அங்கு பெண்களை கற்பழித்துக் கொண்டிருப்பதையும், கற்பழித்துக் கொலை செய்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருப்பார்களாம்!

கெலாட்டின் கலாட்டா, சிதம்பரத்தின் சில்மிஷம்: சிதம்பரத்தைச் சந்தித்த பிறகு கெஹ்லாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருகிறாரா, இல்லையா என்ற அதிகாரப்பூர்வமான தகவல்கள் என்னிடம் இல்லை. ஆனால் அவர் வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களுடன் எனது தலைமைச் செயலாளர் தொடர்பில் உள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை எந்த மாநில அரசும் விரும்பாது. எனவே, இது குறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளேன்”, என்றார்[4]. சல்மான் ருஷ்டி இந்தியா வருவது தொடர்பாக குழப்பம் நீடிக்கிறது[5]. இந்நிலையில் சல்மான் ருஷ்டி இலக்கிய விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிற நிகழ்ச்சிகளில் மட்டும் சத்தமில்லாமல் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது[6].  சல்மான் ருஷ்டி 20.1.2012 அன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்க உள்ள இலக்கிய விழாவுக்கு வருகை தர உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து சல்மான் ருஷ்டி தங்கம் இடம் மற்றும் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சல்மான் ருஷ்டி ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளவில்லை.

ருஷ்டி வரவில்லையாம்! இஸ்லாம் அடிப்படைவாதிகளால் ஆபத்து என்றால், இந்திய அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்றுதான் மற்றவர்கள் நினைத்துக் கொள்வர்கள், கேட்கவும் செய்வார்கள். இந்தியாவில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

“Very sad not to be at jaipur. I was told bombay mafia don issued weapons to 2 hitmen to “eliminate” me. Will do video link instead. Damn”[7].

இதற்கிடையே ருஷ்டி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,இந்திய வருகையையொட்டி நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன். இதன் மூலம் மாநில நிர்வாகத்துக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்பதால், அமைதியாக இருந்தேன்[8]. ஜெயப்பூருக்கு வர முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. மும்பை மாபியா டான் 2 அடியாட்களிடம் ஆயுதங்கள் கொடுத்து நான் இந்தியா வந்தால் என்னைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளாராம்[9]. அதனால் நான் விழாவுக்கு வரவில்லை என்னுடைய வருகையால் சக எழுத்தாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், இந்தவிழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்துள்ளேன்”, என்று தெரிவித்துள்ளார்[10].

ஜிலானியும், ருஷ்டியும் – இஸ்லாம் அடிப்படைவாதம் வேலை செய்யும் விதம்: இந்திய-விரோதிகள் தலைநகரில் மாநாடு நடத்த அனுமதி தருகிறார்கள், பாதுகாப்புத் தருகிறார்கள். அருந்ததி ராய் போன்ற தேசவிரோதிகளும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை கைது செய்கிறார்கள். பிறகு, ருஷ்டி விஷயத்தில் மட்டும் ஏன் வேறுவிதமாக நடந்து கொள்ள வேண்டும்? இது செக்யூலரிஸாமா? மதவாதமா, பிறகு யாரை அப்படி வளர்த்து வருகிறார்கள்? முஸ்லீம் அமைப்புகள் ஏன் ஜிலானியை எதிர்க்கவில்லை? ருஷ்டியும் முஸ்லீம், ஜிலானியும் முஸ்லீம் என்றால், இந்தியர்களாக இருக்கும் நிலையில், முஸ்லீம்கள், இருவரையும் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், ருஷ்டியை கொலையும் செய்வோம், ஆனால், ஜிலானி விஷயத்தில் வாயை மூடிக் கொண்டிருப்போம் என்றால், அது என்ன “யிஸம்”?

வேதபிரகாஷ்

21-01-2012


தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

ஜூன் 6, 2010

தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

முஸ்லீம்கள் ஏதாவது ஒரு விஷயம், பிரச்சினை, பொருள், சின்னம்………….தங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால், அது எத்தகைய இஸ்லாம்-விரோதமாக இருந்தாலும் அமைதியாக இருந்து விடுவர். அதே விஷயம், பிரச்சினை, பொருள்………….இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறது என்று, இன்னொரு இடத்தில் பயங்கரமாக விளக்கி, இமாந்தாரர்களை மிரட்டுவர். இத்தகைய இருநிலைகள் ஏன் என்று தெரியவில்லை.

மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம்: சென்னை 05-06-2010 – ஞாயிற்றுக் கிழமை: காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாளை முன் னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு வந்த  கருணாநிதி, மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன்  ஸ்டாலின், அமைச்சர்கள் உடனிருந்தனர். காலை 11 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கட் சிப் பிரமுகர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலர் அன்வர்ராஜா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச் சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

திராவிட நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆரூண் எம்.பி., உள் ளிட்ட காங்கிரசாருடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் கட்சியினருடன், காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், முன் னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, பொதுச்செயலர் ஜகிருதீன் அகமது உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இஸ்லாமியருக்கு திருமாவின் அறிவுரை:  இந் நிலையில்  தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர்.

திருமா-முல்லா-2010

திருமா-முல்லா-2010

அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்!

மார்ச் 4, 2010

ஆப்கானிஸ்தானில் தலிபானின் இந்தியர்களை குறிவைத்து தாக்குதல், படுகொலைகள், முதலியன

இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல்[1]: பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதியே திறனற்று இருக்கும் நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை குறிவைத்து தாக்கினார் என்ற விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும், “இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர்”, என்று குறிவைத்துத்தான் வந்துள்ளனர், என்றெல்லாம் உள்ளன. ஆகவே, இனி ஆப்கானிஸ்தானில்ற்குச் சென்று வேலை செய்வோம் என்று இந்தியர்கள் செல்லவேண்டியதில்லை, சாகத்தேவையில்லை. கோடிக்கணக்கில் கொட்டி முஸ்லீம்களின் ஆதரவு பெறுகிறோம் என்று இந்த கேடுகெட்ட சோனியா அரசு நாடகமும் தேவையில்லை.

இந்திய முஸ்லீம்கள் தலிபானை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை: புனரைப்பு வேலை என்று சரான்ஜு டெல்ராம் நெடுஞ்சாலை, பல அணைக் கட்டுகள், மின் திட்டங்கள் போன்ற பணிகளுக்காக இந்தியப் படையினரும், இந்திய இன்ஜினியர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை தாலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி கடத்துவதும், கொடூரமாகக் கொலை செய்து உடலை “காபிர்களுக்கு இதுதான் கதி” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் அனுப்புவது தெரிந்தவிஷயமே.

தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமுமுக ஆர்பாட்டம் / சாலைமறியல் நடத்தவில்லை: இந்தியர்களுக்கும் ஆசைவிடவில்லை. அயல்நாடு சென்றால் சம்பாதிக்கலாம் என்று செல்கின்றனர், ஆனால், பலிக்கடா போல சாகின்றனர். கேரளாவைச் சேர்ந்த டிரைவர் மணியப்பன், ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினியர் சூரியநாராயணா ஏப்ரல் 29, 2006ல் தலையறுத்து கொலைசெய்ததை இந்திய முஸ்லீம்கள் தடுக்கவில்லை[2]. ஆப்கனில் இத்தாலி பேக்கரி நிறுவனத்தில் வேலை செய்த கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த சைமனை தாலிபான்கள் கடத்திச் சென்றபோது, விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்ளவில்லை. கை வெட்டப்பட்டப்பிணமாக கண்டெடுக்கப் பட்டபோதும் முஸ்லீம்கள் கண்டுகொள்ளவில்லை.  ஆப்கனின் நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லை சாலை நிர்மாணப் படையின் இன்ஜினியரான கிருஷ்ணகிரி, கே.திப்பனப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தசாமி, இன்னொரு இன்ஜினியரான காசியைச் சேர்ந்த மகேந்திர பிரதாப் சிங் ஆகியோர் தாலிபான்களின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டபோதும் மூச்சுபேச்சு இல்லை. தமுமுக எந்த போராட்டமும் நடத்தவில்லை. இருப்பினும், விடாப்பிடியாக, ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் முஸ்லீம்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று இந்தியா நினைப்பது மடத்தனமானது. கர்ஸாய் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளார், முஸ்லீம் எனும்போது, நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு தருவோம் என்று.

நித்யானந்தா, ரஞ்சிதா விஷயங்களில் உள்ள ஆர்வம் இதில் இல்லை: காபூலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இந்தியர்களைக் குறிவைத்துத்தான் வந்துள்ளனர் என்றும், அந்த இந்தியர்கள் யார் என்று தெரிந்து கொண்டுதான் வந்தனர் என்றும், வாஷிங்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது. காபூலில் உள்ள இரண்டு ஓட்டல்களில் சமீபத்தில் பயங்கரவாதிகள் புகுந்து குண்டு வீசித்துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றனர். இவர்களில் ஆறு பேர் இந்தியர்கள்; ஒருவர் இத்தாலியர்; ஒருவர் பிரான்ஸ் நாட்டின் சினிமா தயாரிப்பாளர்; மூன்று ஆப்கன் போலீஸ் அதிகாரிகள்; பொதுமக்கள் நால்வர், ஒரு அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து ஆப்கன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக, “தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கூறியிருப்பதாவது: காபூலில் தாக்குதல் நடத்த வந்தவர்களில், நான்கு பேர், பெண்களைப் போல பர்தா அணிந்தபடி அதற்குள் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். அவர்களில் ஒருவன், வெடிபொருட்கள் நிறைந்த வேனுக்குள் மறைந்து கொண்டான். மற்ற மூவரும் இரண்டு ஓட்டல்களில் புகுந்துள்ளனர்.ஆப்கன் புலனாய்வுப் பிரிவு செய்தித் தொடர்பாளர் சயீது அன்சாரி கூறுகையில், “சம்பவம் நடக்கத் தொடங்கிய பின், ஆப்கன் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அசோசியேட்டட் பிரஸ்சுக்கு போன் செய்து சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வந்தவர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யோடு தொடர்புடைய லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்தவுடன், “எங்கே அந்த இந்திய இயக்குனர்?’ என்று கத்தியபடி வந்தனர். மற்ற இருவரும் இந்தியர்களைத்தான் தேடினர். அவர்கள் தலிபான்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தியர்களைத் தெரிய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காபூலிலுள்ள அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், ஆப்கன் தலிபான்களின் ஒரு பிரிவான ஹக்கானி பிரிவுதான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஏற்கனவே, காபூலிலுள்ள இந்தியத் தூதகரத்தை 2008ல் தாக்கியது அவன் குரூப்தான் என்று இந்தியாவும் ஆப்கனும் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளன.ஹக்கானி தலிபான்கள், பாகிஸ்தானின் வடக்கு வாசிரிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர். லஷ்கருக்கும், தலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதை, பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் முகமது சாத் உறுதிப்படுத்தியுள்ளார். ஹக்கானி பிரிவில் லஷ்கர் பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

2003லிருந்து 2011 வரை ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் முதலியன[3]

2011

May 10, 2011: Afghanistan National Intelligence Agency spokesperson Lutfullah Mashal said that Inter-Services ISI hired two persons, identified as Sher Zamin and Khan Zamin, to kill the Indian Consul General of Jalalabad province.

2010

December 16, 2010: Indian embassy in Kabul and four consulates in Afghanistan have been put on high alert following intelligence inputs that the Taliban militants may be preparing for a strike at Indian establishments.

October 11, 2010: Two Indian nationals were killed in a missile attack launched by the Taliban militants on an Indian NGO’s office in Kunar province of Afghanistan. Qari Omar Haqqani, a spokesperson for the Afghan Taliban, told reporters from an undisclosed location that the militants had attacked the office of the Indian NGO with missiles in which three people, including two Indian workers, were killed. The nationality of the third person who died in the attack is yet to be ascertained.

February 26, 2010: The Taliban militants on carried out coordinated suicide attacks at two hotels in Kabul, the capital city of Afghanistan, killing at least nine Indians, including two Major-rank Army officers. At least 10 others, including five Indian Army officers, were injured in the strike that killed eight others, including locals and nationals from other countries. The bombers, believed to be three in number, struck at the guest houses, particularly at Park Residence, rented out by the Indian Embassy for its staffers and those linked to India’s developmental work in Afghanistan.

2009

October 8, 2009: Targeting the Indian embassy in Kabul for the second time, a Taliban suicide bomber blew up an explosives-laden car outside the mission, killing 17 persons and injuring over 80, including three Indo-Tibetan Border Police (ITBP) soldiers. The embassy staff, however, was unhurt. The Taliban claimed responsibility for the attack and identified the bomber as Khalid, Al Jazeera TV channel said.

February 9, 2009: Simon Paramanathan, an Indian from Villupuram in Tamil Nadu held captive by militants in Afghanistan for nearly four months is dead, his family and the Ministry of External Affairs (MEA) said in New Delhi. Simon, employed in the Italian food chain Ciano International, was abducted in October 2008. The company had been negotiating with the captors belonging to an unnamed militant outfit, which had sought a ransom of USD 200000. However, the negotiations “to work out a reasonable ransom” reportedly failed to break the deadlock. An MEA official said in New Delhi that Afghanistan authorities informed that Simon died while in the custody of his abductors.

2008

December 24, 2008: A 38-year-old man from Tamil Nadu working with a food store attached to Italian soldiers deployed in Afghanistan, has been kidnapped by Afghan militants in Herath province, police said, according to Rediff. Simon, who hails from Kalakurichi Village in Villupuram District, was kidnapped by a group calling itself Mujahideen on October 13, 2008, police said. Simon was working with an Italian food store supplying food to its soldiers in Afghanistan. He was kidnapped along with two other company employees while they were delivering food at the International Security Assistance Force camp in Bagram air base, the sources said.

July 7, 2008: A suicide attack on the Indian Embassy in Kabul killed 41 persons and injured over 140. The killed included two senior diplomats, Political Counsellor V. Venkateswara Rao and Defence Adviser Brigadier Ravi Datt Mehta, and Indo-Tibetan Border Police (ITBP) staffers Ajai Pathaniya and Roop Singh.

June 5, 2008: An ITBP trooper was killed and four others injured in an attack by the Taliban in the south-west Province of Nimroz.

April 12, 2008: Two Indian nationals, M.P. Singh and C. Govindaswamy, personnel of the Indian Army’s Border Roads Organisation (BRO), were killed and seven persons, including five BRO personnel, sustained injuries in a suicide-bomb attack in the Nimroz Province.

January 3, 2008: In the first-ever suicide attack on Indians in the country, two ITBP soldiers were killed and five others injured in the Razai village of Nimroz Province.

December 15, 2007: Two bombs were lobbed into the Indian consulate in Jalalabad, capital of the Nangarhar province in Afghanistan. There was however, no casualty or damage.

2006

May 7, 2006: An explosion occurred near the Indian Consulate in the fourth police district of the western Herat Province. There were no casualties.

April 28, 2006: An Indian telecommunications engineer working for a Bahrain based firm in the Zabul Province, K Suryanarayana was abducted and subsequently beheaded after two days.

February 7, 2006: Bharat Kumar, an engineer working with a Turkish company, was killed in a bomb attack by the Taliban in the western province of Farah.

2005

November 19, 2005: Maniappan Kutty, a driver working with the BRO’s project of building the Zaranj-Delaram highway, was abducted and his decapitated body was found on a road between Zaranj, capital of Nimroz, and an area called Ghor Ghori, four days later.

2003

December 9, 2003: Two Indian engineers – P Murali and G Vardharai working on a road project in Zabul province were abducted. They were released on December 24 after intense negotiations by Afghan tribal leaders with the Taliban militia, which was demanding the release of 50 imprisoned militants in return for the Indian engineers.

November 8, 2003: An Indian telecommunications engineer working for the Afghan Wireless Company was shot dead.


[1] தினமலர், ,இந்தியர்களை குறிவைத்து தாக்குதல் காபூல் படுகொலை குறித்து தகவல்; மார்ச் 04,2010,00:00  IST; http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4971

[2] அடுத்த நாளில் மே 1, 2006 – காஷ்மீரில் 22 இந்துக்கள் கொலைசெய்யப்படுகின்றனர். இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.