Archive for the ‘சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த்’ category

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

ஜூன் 22, 2010

காங்கிரஸ், முஸ்லீம்கள், இந்தியா, பிரச்சினைகள்.

சுதந்திரத்தின் முன்னும், பின்னும் காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களை அளவிற்கு அதிகமாக கொஞ்சி, கெஞ்சி, செல்லம் கொடுத்து, சீரழந்துதான் மிச்சம். அதுமட்டுமல்லாது, நாட்டையே இரண்டாகப் பிளந்து, பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்தது. “சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்”, என்று முகமது அலி ஜின்னா எகத்தாளத்துடன் கூறிக்கொண்டார். ஆனால், காந்திஜியோ லட்சக்கணக்கான இந்துக்கள் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்டதைத் தடுக்க முடியவில்லை.

முஸ்லீம் நாடாக பாகிஸ்தான் உள்ள இந்துக்களையும் அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. அதனை கேட்க எந்த இந்திய அரசியக் கட்சிக்கும் யோக்கியதை இல்லை, உணர்வுல் இல்லை. மதத்தால் ஒன்றாக இருக்கமுடியாத பாகிஸ்தான் இரண்டாகியது. ஆனால், விடுதலைக்காக உதவிய இந்தியாவிற்கே எதிராகத்தான் பங்களாதேசம் செயல்பட்டு வந்துக் கொண்டிருக்கிறது.

செக்யூலரிஸம் வந்து முஸ்லீம்களின் வெறித்தனத்தை, அடிப்படைவாதத்தை, ஏன் தீவிரவாதத்தைக்கூட அதிகமாகவே வளர்த்தது. இன்று தேசிய ஜிஹாதி தீவிரவாதம் உள்ளதாக இந்தியா பெருமைப் பட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு, முஸ்லீம்களை ஓட்டுவங்கிகளாக மாற்றி, அவர்களின் வெறியை இன்னும் வளர்க்கத்தான் செய்தது.

இந்ந்திலையில், காங்கிரஸைத் தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகள் மிரட்டி வருவது ஆச்சரியமாக உள்ளது. முன்பு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை “ஜிஹாதி” விஷயத்தில் மிரட்டினர். இப்பொழுது, வெளிப்படையாக, இவ்வாறு மிரட்டியுள்ளது, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.

சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23986

ராமநாதபுரம்:””முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,” என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,””அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,” என , பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.

இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
திவு செய்த நாள் : ஜூலை 07,2010,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34630

புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. அதில், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, தீர்மானம் போடப்பட்டது.இந்த தீர்மானங்களை விளக்கியும் இட ஒதுக்கீட்டை விரைந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!

ஏப்ரல் 5, 2010

நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!

இடம்: ஆங்கன்பத்ரி, எல்லைப்பகுதி Aanganpathri (Line of Control)

சீதோஷ்ணாநிலை: பூஜ்யத்திற்கும் கீழாக Sub-zero temperature,

பருவநிலை: பனி பொழிந்துக் கொண்டிருக்கிறது massive snowfall and

காற்று: மிகவும் அதிகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. high velocity winds

இதெல்லாம் ஹவல்தார் எம். குமார் வேலு என்பவருக்கு முற்றிலும் புதியமானவை, அந்நியமானவை!

ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.

ஆனால் இன்று அவர் எல்லாவற்றையும் சந்தித்து 12 அடி ஆழமான பனி,  10,500 அடி உயரம், பயங்கரமான எல்லைப் பகுதி, விடியற்காலை 4 மணி – இவை எல்லாவற்றையும் பொறுட்படுத்தாமல், காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த குமார் வேலு சொல்கிறார்: “நான் இறப்பேனே தவிர, ஒரு தீவிரவாதியையும் உள்ளே நுழைய விடமாட்டேன்!”

“எல்லையில் சுமார் 42 தீவிரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. 34 பாகிஸ்தான் ஆக்கிரமில் உள்ள பகுதியில் உள்ளன”, என்கிறார் மற்றொரு வீரர் – குர்தீப் சிங். இவர் பிரிகடைர் ஜெனரல் (brigadier general of staff (BGS) of the Jammu based 16 Corps) ஆவார்.

இந்நிலையில் தான், நேற்று (04-04-2010, இரண்டு தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து உள்ளே திருட்டுத் தனமாக நுழைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அத்தகைய பாகிஸ்தானுடன் தான், சானியா மணம் புரிந்து கொள்ளத் துடிக்கிறாள். ஆனால், அதே தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் கேட்கிறான், “சானியா, யாரை மணந்தால் என்ன?” என்று. இங்குதான் அந்த மர்மம், துரோகம், கழுத்தரப்புத் தன்மை………………..முதலியவை எல்லாமே உள்ளன.

யார் தியாகி, யார் வீரர், யார் போராளி?

அப்படி சொல்லிக் கொண்டு அலையும் கூட்டங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

ஜம்மு-காஷ்மீரத்தை முன்னேற்றும் இஸ்லாமியர்கள்!

ஏப்ரல் 2, 2010
ஜம்மு-காஷ்மீரத்தை முன்னேற்றும் இஸ்லாமியர்கள்!
காஷ்மீரில் குண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு : 500 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு
ஏப்ரல் 03,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

முன்னேற்றம், வளர்ச்சி-முதலியவற்றை சீரழிக்கும் ஜிஹாதித் தீவிரவாதிகள்:  2003-2004 ஆண்டுகளில் வடக்கு ரெயில்வேயின் இஞ்சினியரின் சகோதரரை புல்வாமா என்ர இடத்திலிருந்து கடத்திச் சென்றனர், பிறகு கொன்று விட்டனர்.  2005ல் நுயான் (பட்போரா Nuyan, Batpora) என்ற இடத்திற்கு அருகில் கட்டுமானப்பணிகளை காத்து நின்றிருந்த வீரர்களைக் கொன்று குவித்தனர். குறைந்தப் பட்சம் நான்கு வீரர்கள் இறந்தனராம்! [செய்தி அவ்வாறு கூறுகிறது]. பிறகு இந்தியா எதற்கு கோடிக்கணக்கில் இந்தியர்கள் கட்டும் வரிப்பணத்தை அங்கு தாராளமாகக் கொட்டி, இப்படி அழிவை, சாவுகள, கொலைகளை, குண்டு வெடிப்புகளை பதிலுக்கு வாங்க வேண்டும்? மற்ற முஸ்லீம்கள் ஏன் மௌனம் காக்கின்றனர்? அதுமட்டுமல்லாது, தென்னிந்தியாவிலிருந்தே அத்தகைய தீவிரவாதிகளை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து அனுப்புகின்றனரே? பிறகு முஸ்லீம்களின் எண்ணம் தான் என்ன?

ஸ்ரீநகர் : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இருந்தாலும், பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் இல்லை.  அதே நேரத்தில், இந்திய பகுதிக்குள் ஊடுருவ, எல்லைக்கு அப்பால் 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


வியாழக்கிழமை இரவு வெடிக்கப் பட்ட தண்டவாளத்தை சரி செய்வதில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!

வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிப்பது; செயற்திறன் அதிகரிக்கப்பட்ட வெடிக்கும் கருவி [Improvised Explosive Device (IED)] உபயோகப்படுத்தப் பட்டுள்ளது, இந்த குண்டு வெடிப்பில் யாரும் பாதிக்கப் படாதது………………..முதலியன அத்தகைய ஈவு-இரக்கமற்ற ஜிஹாதி அரக்கர்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றன. மக்னீஸியம்-ஸ்டீல் அதாவது மக்னீஸியம் கலந்த உலோகக்கலவையால் ஆன இரும்பினால் செய்யப்பட்ட அந்த பாகம் திறமையாக அறுப்பப்பட்ட விதம் [The way the magnesium steel has been cut, it has to be a regular high explosive detonation] கைதேர்ந்த குண்டு தயாரிப்பாளர்களைக் காட்டுகிறது.

இஸ்லாம் பெயரில் பாகிஸ்தானின் அணுகுமுறை: காஷ்மீரில் தொடர்ந்து சதி வேலைகள் மற்றும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த, பயங்கரவாதிகளை இந்திய பகுதிக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.கடந்த ஆறு நாட்களில் மட்டும், ரஜவ்ரி மாவட்டத்தில் இந்திய பகுதிக்குள் ஊடுருவிய 13 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலும் 500 பயங்கரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ காத்திருப்பதாக உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதனால், 742 கி.மீ., நீளம் கொண்ட பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் ராணுவத்தினர் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அழிப்பதுதான் இஸ்லாமா-அமைதியா? இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், அதாவது ஸ்ரீநகரில் இருந்து 43.6 கி.மீ., தூரத்தில் உள்ள கால்பக் அருகே, குண்டுகளை வைத்து ரயில் தண்டவாளத்தை பயங்கரவாதிகள் தகர்த்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில், இரண்டு அடி நீளத்திற்கு ரயில் தண்டவாளம் பெயர்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.காஷ்மீரின் சில பகுதிகளில் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை பார்வையிடுவதற்காக உயர் அதிகாரிகள் அங்கு செல்ல இருந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இருந்தாலும், குண்டு வெடிப்பால் பெரிய அளவில் ரயில் பாதை பாதிக்கப்படாததால், உடனடியாக சரி செய்யப்பட்டது. நேற்று காலைக்குள் பாதை சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியது.

இது தொடர்பாக புல்வாமா மாவட்ட போலீஸ் அதிகாரி கிபாயத் ஹைதர் கூறுகையில், ”குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது தொடர் பான விசாரணை துவங்கிவிட்டது. வெடித்தது சாதாரண குண்டே. அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. குண்டு வெடித்த இடத்திலிருந்து சில ஒயர்களைக் கைப்பற்றியுள்ளோம். இருந்தாலும், என்ன வகையான வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும்,” என்றார்.

வடக்கு ரயில்வேயின் பிராந்திய தலைமை மேலாளர் ஒபிந்தர் சிங் கூறுகையில், ”ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், ஸ்ரீநகர் – குவாசிகுந்த் இடையே இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. உடன் பாதை சீரமைக்கப்பட்டு, இன்று (நேற்று) காலை 10.05 மணிக்கு ரயில் போக்குவரத்து துவங்கிவிட்டது,” என்றார்.

ஜிஹாதிகல்/ இஸ்லாம் தீவிரவாதிகள் ஏன் தண்டவாளங்களைப் போடக்கூடாது? காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், ஆனந்த்நாக் மற்றும் பத்காம் இடையே 2008 அக்டோபர் 11ல் ரயில் போக்குவரத்து துவங்கியது. பின்னர் இந்தப் போக்குவரத்து, 2009 பிப்ரவரி 14ல் பத்காம் மற்றும் பாரமுல்லா வரை நீட்டிக்கப்பட்டது. 2009 அக்டோபர் 28ல் ஆனந்த்நாக் முதல் குவாசிகுந்த் வரை நீட்டிக்கப்பட்டது.குவாசிகுந்த் – பாரமுல்லா, குவாசிகுந்த் – பத்காம், ஸ்ரீநகர் – பாரமுல்லா, பாரமுல்லா – பத்காம் மற்றும் ஸ்ரீநகர் – குவாசிகுந்த் இடையே தினமும் இரு முறை ஐந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

மார்ச் 20, 2010

தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ஹுஸைன் ராணா, ஃபாத்திமா ரோஸ்: இந்தியாவிற்கு எதிரான புதிய அமெரிக்க-ஜிஹாத் கூட்டு – I

வேத பிரகாஷ்

அமெரிக்கா ஜிஹாதை எதிர்கொள்ளும் முறை: அமெரிக்க ஜிஹாதிகள் மிகவும் கைத் தேர்ந்தவர்கள். அழகானவர்கள் (வெள்ளைத் தோலினர்)[1], படித்தவர்கள், ஆங்கிலம் பேசுபவர்கள், நாகரிகமானவர்கள்………………. அவர்களைப் பற்றி சாதாரணமாக இந்தியர்கள் இன்னும் அறிந்து கொண்டதில்லை. எப்படி அமெரிக்க அதிகாரிகள் போதை மருந்து சக்கரவர்த்திகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அதேபோல, தாலிபான், ஜிஹாத் முதலிய கூட்டத்தாரிடமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள். அனுபவித்து வருகிறார்கள். இது கிஸ்ஸிஞ்சர் காலத்திலிருந்தே தொடர்கிறது. ஆனால், பொருளாதார வீழ்ச்சிற்குப் பிறகு அத்தகைய “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” என்ற பரிசோதனையை மற்றவர்களுக்குத் தள்ளிவிடப் பார்க்கிறது (outsourcing terror handling). அதற்கும் இந்தியாதான் உதவுகிறது.

Humar-hammaami-christian-turned-jihadi

Humar-hammaami-christian-turned-jihadi

அமெரிக்க ஜிஹாத் இந்தியாவை நோக்கித் திரும்பியது 9/11 – 26/11 ஆனக் கதை: 9/11 ற்குப் பிறகு ஒபாமா பதவியேற்றதும் “தீவிரவாதத்திற்கு எதிரானா போர்” (The War against Terror) என்ற கூக்குரல் மற்ற நாடுகளின்மீது திணித்து, குறிப்பாக இந்தியா மீது குறிவைத்து நடத்தப் படுகிறது. எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்கா இந்தியாவைப் பணிய வைக்க முயல்கிறதோ அதே ரீதியில் இந்தியாவை அனைத்துலக ஜிஹாதி-வலையில் இந்தியாவைச் சிக்கவைத்து இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள சதி செய்து வருகிறது. இதில்தான் பாகிஸ்தானையும் இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட ஊக்குவிக்கிறது. குறிப்பாக மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அமெரிக்கர்களின் ஜிஹாதிகளுடனான தொடர்பு பலதடவை வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹித்தீன் ஈ-மெயில் அனுப்ப அந்த மும்பை அமெரிக்கன் உதவியுள்ளான். அவன் கிருத்துவ பாதிரி, யூதர்களின் நண்பன்……..என்றெல்லாம் குறிப்பிடப்பட்டான். ஆனால், ஏன் ஜிஹாதிகளுக்கு உதவினான் என்பதனை அமுக்கிவிட்டனர். விஷயம் தெரிந்ததும் அவனை அமெரிக்காவிற்கே எடுத்துச் செல்லப்பட்டான்.  அப்பொழுது இந்தியா தாராளமாக அவனை விடமுடியாது என்று சொல்லியிருக்கலாம். “வேண்டுமானால் நீ இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்து”, என்று சொல்லியிருக்கலாம். ஏனெனில் அப்பொழுது சட்டப்படி அவன் குற்றத்தில் ஈடுபட்டது இந்திய மண்ணில்தான். ஆனால் கிருத்துவ-இஸ்லாமியக் கூட்டு சதியால் அவன் “நாடு கடத்தப் பட்டான்”.

American-jihadi-Boyd

American-jihadi-Boyd

அமெரிக்க ஜிஹாதிகள் தீடீரென்று மற்ற நாடுகளில் பிடிபடுவது: அமெரிக்க ஜிஹாதிகள் இப்பொழுது உலகமெல்லாம் பரவியிர்ப்பது தெரிகிறது[2], ஏனனனில் அவர்கள் பல நாடுகளில் பிடிபடுகிறர்கள்! பாய்ட் (Boyd)[3], என்பவன் ஜூலை 27, 2009 அன்று கைது செய்யப் பட்டான். அவன் மற்றும் அவனது ஏழு கூட்டாளிகள் இஸ்ரேல், ஜோர்டான், கொஸொவோ, பாகிஸ்தான் போண்ர நாடுகளில் தீவிரமான ஜிஹாதை பரிந்துரைக்கும் கோஷ்டிகளாக செயல்பட்டபோது பிடிக்கப் பட்டனர். பாய்ட் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ரவன், அல்-குவைய்தாவுடன் சம்பந்தப் பட்டுள்ளவன். இதுவரையில் பிடிபட்டுள்ள அமெரிக்க ஜிஹாதிகள்:

Najibullaah-zazi-Newyork

Najibullaah-zazi-Newyork

  • அப்துல்லாகிம் முஜாஹித்தீன் முஹம்மது (Abdulhakim Mujahid Muhammad) – ஜூன் 1, 2009 அன்று லிட்டில் ஆர்க் என்ற ராணுவ பயிற்சி நிலையத்தில் (military recruiting center in Little Rock, Ark) ராணுவ வீரர்களாக இருந்த ஒருவன், மற்றொருவன் பிடிபட்டபோது கொல்லப்பட்டான். இருவரும் மதம் மாறிய முஸ்லீம்கள்.
  • ஐந்து அமெரிக்கர்கள் டிசம்பர் 2009ல் பாகிஸ்தானில் பிடிபட்டனர். இவர்கள் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படைக்கு எதிராக செயல்பட்ட ஜிஹாதிகள்.
  • நான்கு அமெரிக்க முஸ்லீம்கள் மற்றும் ஒன்று ஹைதி முஸ்லிம் மே 2009ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புரோன்க்ஸ் (two synagogues in the Bronx) என்ற இடத்திலுள்ள இரண்டு யூத வழிபாட்டு ஸ்தலங்களைத் தாக்கத் திட்டமிட்டதற்கும், நியூ பர்க் என்ற ராணுவ பயிற்சி மைத்தில் (military base in Newburgh, N.Y.) விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றபோதும் பிடிபட்டனர்.
  • டேவிட் ஹெட்லி இல்லினாயிஸில் அக்டோபர் 2009ல் டென்மார்க்கில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதற்காக பிடிபட்டான். பிறகு அவனுடைய மும்பை தொடர்பும் தெரிய வந்தது.
Nidal-hassan-Malik-fort-hood

Nidal-hassan-Malik-fort-hood

அமெரிக்க-ஜிஹாதி பயங்கரத்தை மறைக்க உள்-நாட்டு ஜிஹாதி உருவாக்கம் முதலியவைத் தோற்றுவிக்கப்பட்டன/படுகின்றன: இத்தகைய உலக கிருத்துவ-இஸ்லாமிய, யூத-இஸ்லாமிய, இஸ்லாமிய-யூத, இஸ்லாமிய-கிருத்துவ வெறியாட்டங்களைத் திசைத் திருப்ப இந்தியர்களை ஏமாற்ற இந்த சக்திகள் செயல்படுவது தெரிகிறது. அனைத்துலக தீவிரவாதத்தில் அகப்பட்டுத் தவிப்பது இந்தியா. அதற்குக் காரணம் முஸ்லீம்கள்தான். உள்ளூர் முஸ்லீம்களும் உண்மை அறிந்தும், அறியாமலும் அதற்கு துணை போகின்றனர். இதற்குதான் காஷ்மீர், லவ்-ஜிஹாத், ஜிஹாத், ஜாஹிர் நாயக்[4], பெரியார்தாசன்[5], ராம-ஜன்ம பூமி, நஸ்லிமா தஸ்.ரீன், ஹுஸைன்[6], பர்தா, உருது, சச்சார் அறிக்கை[7], பெண்கள் மசோதா[8]………….. முதலிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு குழப்புவர், தீ வைப்பர், கலவரம் செய்வர், …………..சட்ட-ஒழுங்குப் பிரச்சினையாக்கி விளம்பரம் பெறுவர். சிதம்பரம், கருணாநிதி, முலாயம், லல்லு போன்ற கைக்கூலிகள் போன்ற தன்மையுடையவர்களும், குல்லா மாட்டிக் கஞ்சி குடிப்பவர்களும் துணைபோவர். உண்மையில் முஸ்லீம்களே அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் உன்மை அவர்களுக்கு விளங்கும். அதுமட்டுமல்ல உண்மையான முஸ்லீம் களுக்குத் தெரியும் அவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானவை, எதிரானவை என்று. ஆனால் ஜிஹாத் என்ற வெறி வரும்போது கண்களை, அறிவை மூடிவிடுகிறது.

bin-laden-of-Internet-cyber-jihad

bin-laden-of-Internet-cyber-jihad

அமெரிக்க-இஸ்லாம் மற்றும் தாலிபனுடையத் தொடர்பு: ஜாஹிர் நாயக் போன்றவர்கள் இத்தகைய நவீனப் பூச்சு பூசப்பட்ட படித்த, நாகரிகமான, ஆங்கிலம் பேசும் இஸ்லாம் அடிப்படைவாத, தீவிரவாத, தாலிபன்களுடைய சித்தாந்த ஆதாரவாளர்கள் எனலாம். ஆனால் அத்தகைய அமெரிக்கர்களை அமெரிக்கப் பெயர்கள் அல்லது இந்தியப் பெயர்களில் குறிப்பிடப் பட்டு ஜிஹாதி அடையாளத்தை ஊடகங்கள் மறைக்கின்றன. தாவூத் ஜிகானி அமெரீகன், தஹவ்வூர் ஹுஸை ரானா கனடியன், ஜிஹாதி ரோஸ் அமெரிக்க நாட்டவள், அந்தக் காதலி அல்லது மனைவி மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவள்…………………என்றெல்லாம் குறிப்பிட்டு இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், ஹிஹாதி-குண்டு குரூரங்களை மறைக்கப் பார்க்கிறர்கள். இவ்வாறாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் (Liberalization, Globalization and Privatization) தாலிபனைஸேஷன் (Talibanization), (American seculaization), இஸ்லாமைஸேஷன் (Islamization), ஒபாமைஸேஷன் (Obamization), ஒஸாமைஸேஷன் (Osamization) முதலிய வழிகளில் செயல்படுகின்றன.

வேதபிரகாஷ்

© 21-03-2010


[1] இந்தியர்களுக்கு கூலிமனத்தன்மை (coolie mentality) / அடிமைத் தன்மை (slavish mindset) உள்ளது என்பது இந்த மனப்பாங்கில் வெளிப்படும். அதாவது வெள்ளைநிறத்தவனுக்கு அடிபணிய வேண்டும் அவன் சொல்வதைக் கேட்கவேண்டும் என்ற தன்மை.

 

[2] http://www.csmonitor.com/World/Asia-South-Central/2010/0317/Five-Americans-arrested-in-Pakistan-plead-not-guilty-to-terrorism-charges

http://www.csmonitor.com/USA/2010/0312/Jihad-Jane-joins-growing-list-of-American-terror-suspects

[3] http://www.csmonitor.com/CSM-Photo-Galleries/Lists/American-Jihadis

[4] இனிப்புத் தடவப் பட்ட கசப்புப் போன்ற பேச்சாளர். இனிக்கப் பேசி ஜிஹாதி வெறியூட்டுவதில் வல்லவன். வார்த்தைகளால் ஜிஹாத் போராட்டம் நடத்து,ம் இவனுக்கும் தாலிபானுக்கும் எத்தகைய வித்தியாசமும் இல்லை. இன்றைய அமெரிக்க ஜிஹாதிகளுக்கு இவனே காரணம் எனலாம்.

[5] நிச்சயமாக இந்த ஆள் தமிழ், தமிழர், பகுத்தறிவுவாதிகள், தலித்துகள், பௌத்தர்கள்..எல்லோரையும் ஏமாற்றிய எத்தன்; அது மட்டுமல்லாது பெரியார், அம்பேத்கார், புத்தர்.முதலியோரையும் ஏமாற்றிய பெரிய இறையியல் மோசடி பேர்வழி எனலாம்.

[6] இந்துமத கடவுளர்களை மட்டும் நிர்வாணமாக சித்திரங்கள் வரைந்து புகழ் பெறும், இஸ்லாமிய சித்திர-விபச்சாரி. மற்ற கடவுளர்களை நிர்வாணமாக வரைய தைரியமில்லை.

[7] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்பதும், அதற்கு காஃபிர்களின் துணைத் தேடுவதும் வேடிக்கையே!

[8] சாதி இல்லை என்று முஸ்லீம்கள் சாதி அடிப்படையில் பெண்களுக்கும் உள்-ஒதுக்கீடு அதுவும், கஃபிர்கள் கேட்கிம்போது மௌனம் காப்பதும் இஸ்லாமிய அதிசயமே!

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

மார்ச் 14, 2010

காஷ்மீர இஸ்லாத்தின் நிஜ-உருவம் வெளிப்படுகிறது – I

வேதபிரகாஷ்

“காஷ்மீர” அடை-மொழிகளில் உலா வரும் இந்திய-விரோத சித்தாந்தங்கள்: “காஷ்மீரியத்” என்ற போர்வையில், முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், ஏதோ ஒரு அமைதியான, ஒட்டுமொத்த காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றைப் பேணிக் காப்பது போலவும், பாதுகாக்கத் துடிப்பது போலவும் நடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியவர்களின் உண்மையான முகம் பலமுறை தெரிந்தாலும் மற்ற இந்தியர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது, “இவையெல்லாம் எங்கோ தூரத்தில் நடக்கின்றன, ஆகையால் அவற்றை நாம் அறிந்து கொண்டு என்ன செய்ய”, என்ற நிலையிலும் இருக்கலாம்[1]. ஆனால், எப்படி அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரது நோக்கம் வெளிப்படுகிறது என்பதனைப் புரிந்துகொள்ள இன்னொமொரு முக்கியமான விஷயம் வெளிப்படுகிறது.

காஷ்மீரப் பெண்களும், சொத்துகளும், சொத்துரிமைகளும்: இப்பொழுதையப் பிரச்சினையே இதுதான். முன்பே எடுத்துக் காட்டியபடி, காஷ்மீர இஸ்லாம் உலக மற்றும் இந்திய வீர-சைவத்தை முழுங்கியது, அழித்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2]. அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….[3]

அமர்நாத் யாத்திரிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலமும், அதை இஸ்லாம் எதிர்த்த நிலையும்: சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, அமர்நாத் யாத்திரிகர்களுக்கு அளிக்கப் பட்ட நிலத்தின் விஷயமாக முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மிகவும் கடுமையாக, கொடுமையாக எதிர்த்தனர், கலவரம் செய்தனர். செக்யூலரிஸ-சமதர்ம-சமத்துவ பேர்வழிகள்-சிதாந்திகள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதிலும் பொத்திக் கொண்டிருந்தன. மற்ற நேரங்களில் ஊலையிடும் இந்த நரிக்கூட்டங்கள், நாக்குகளில் நரம்பில்லாமல், மனங்களிலே நமைத்துக் கொண்டிருந்தன. அதாவது, லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவின. அப்பொழுது கொதிப்படைந்த இந்துக்கள் முதல் முறையாக வீதிகளுக்கு வந்தனர். சாலைகளை மறித்து போராடினர். அரசாங்கம், அந்த போலி-மனித உரிமைக் கூட்டங்கள், சித்தாந்த நரிக்கூட்டங்கள் திகைத்தன. என்ன இது, இந்த காஃபிர் கூட்ட்டத்திற்கு இவ்வளவு தைரியமா என கொக்கரித்தன.

அமைதி அரக்கன் அப்துல்லா முதல் அந்தக் கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டி வரை, வேடமிட்டு நடித்தனர். அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோரோ வேறு விதமாக பேசினர்! எதுவும் எடுபடாமல் போகவே, தங்களுக்கு மருந்துகள் கூடக் கிடைக்கவில்லை என அலற ஆரம்பித்தனர்! உடனே எழும்பிவிட்டது அந்த அருந்ததி ராய் என்ற பலத்தாரப் புரட்சி[4] வீராங்கனை!! ஆனால், வெட்கமற்ற அவள் வேசித்தன பேச்சு என்னவென்றால், அந்த முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், முதலியோருக்கு ஆதரவாகப் பேசியதுதான். அவளுக்கு அதே காஷ்மீரத்தின் இந்துக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலையிலை! அப்பொழுதுகூட – அதாவது லட்சக் கணக்கான யாத்திரிகர்களின் வசதிக்காக செய்யப்படும் நிரந்தரமற்ற தங்குமிடங்கள், கழிப்பிடங்கள், குளியலறைகள் முதலியவற்றைக் கட்டக் கூடாது என்று அரக்கத்தனமாக தங்களது குரூரத்தைக் காட்டி முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், கருவியது கூட அவளுக்குப் புரியவில்லை!

காஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்படும் மசோதா: காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[5]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிடனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்! அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால்…………………………………….

பெண்கள் தினத்தன்று பெண்களின் உரிமைஅளைப் பரிக்கக் கள்ளத்தனமாக நுழைக்கப்பட்ட மசோதா: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமன் பல்லா என்ற நிதியமைச்சர் கூறியதாவத்கு, “பெண்கள் மசோதாவைப் பற்றி நாங்கள் எங்களது நிலையை ஏற்கெனவவ தெரியப்படுத்திவிட்டோம். ராஜ்ய சபாவில் அது நிறைவேறியது அறிந்ததே”, என்று பொதுவாகப் பேசி தப்பித்துக் கொள்ள பார்த்தது நன்றகவே தெரிந்தது. மேலவையில் அம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதால், கீழவையில் அதைப் பற்றி விவாதிக்கமுடியவில்லை என்று நிஜாமுத்தீன் பட்[6] என்ற PDP ஆள் எடுத்துக் காட்டியது வேடிக்கைதான்! ஆகவே ஹர்ஷ தேவ் சிங் என்ற உறுப்பினர், அந்த கள்ளத்தனத்தை எடுத்துக் காடியதும்[7], எல்லொரும் மௌனிகளாகி விட்டனர்!

NOT IN TUNE: Bill will end permanent resident status of  women who marry outside the state.

தோற்றுப்போன மசோதாவையே மறுபடியும் எடுத்து வரும் மர்மம், கள்ளத்தனம், நரித்தனம்: இதே மசோதா 2004ல் “எதிரிகள் என்று நடித்து வரும்” அந்த இரண்டு நரிக்கூட்டங்களும் (arch rivals National Conference and the PDP)  சேர்ந்து கொண்டு அறிமுகப்படுத்தியது[8]. ஆனால் பிறகு, அம்மசோதாவின் உள்-நோக்கத்தை எடுத்துக் காட்டியதும் சட்ட சபையில் தோல்வியடந்தது.    மறுபடியும் அத்தகைய தோல்வியடைந்த மசோதாவை அப்துல்லா கோஷ்டியினர் ஆதரிப்பார்கள் என்ற நோக்கில் நுழைத்துள்ளனர். ஜம்மு வழக்கறிஞர் சங்கம் / Jammu Bar Association எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, எப்படி ஒரு 2002 நீதிமன்ற தீர்ப்பு அத்தகைய பாரபட்சத்தன்மைய எடுத்துக் காட்டி, பெண்ணின் குடியுரிமையை காக்க அளித்துள்ளது என்பதனையும் எடுத்துக் காட்டப்பட்டது. ஆகவே, இம்மசோதா அந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதும், முரண்பாடானதும் ஆகும். ஒரு பெண் தன் குடியுரிமை இழக்கிறாள் என்றால் அவள் ஓட்டுரிமை மற்ற எல்ல உரிமைகளையும் இழக்கிறாள் என்பதாகிறது! அதாவது, ஜம்மு-காஷ்மீர் “தனிநாடு” போல ஆகிறது! இங்கும்தான் வெளிப்படுகிறது, அவர்களின் நரித்தனம்!

சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது: சமன்லால் குப்தா என்ற பிஜேபி உறுப்பினர், “இது பெண்களுக்கு எதிரானது. காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்பது ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணின் பெண்மகளின் மூதாதையரது நிலம்,சொத்து, வேலை முதலிவற்றின் மீதான அவர்களது பாரம்பர உரிமைகளை மறுக்கும் விதமாக உள்ளது”, என்று எடுத்துக் காட்டினார். அரசியல்வாதிகள் என்னபேசினாலும், முஸ்லீம்கள் “இந்தியர்கள்” என்ற நிலையில் பேசுவதில்லை என்பது எல்லொருக்கும் தெரியும், அதுவும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டால் தேவையே இல்லை, உடனே உலகமே அவர்களுக்கு எதிராகத் திரண்டு விடும். ஆகவே இந்நிலையில் நிச்சயமாக அந்த குரூர முகமதிய-இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், ஜிஹாதிகள், சரீயத்தை மறைமுகமாக எடுத்து வரச் செய்யும் சதிதான் இது என வெளிப்படையாகவே தெரிகின்றது!

பார்ப்போம், என்ன நடக்கும் என்று!

வேதபிரகாஷ்

14-03-2010


[1] ஆனால் கருணாநிதியே அவ்வாறு இல்லை, தனது பாராட்டுவிழாவில், பிரிவினையைப் பற்றி பேசும்போது, அவரது கள்ளத்தனமும் வெளிப்படுகிறது என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்,. அதாவது, இந்தியாவை எதிர்த்து க் செயல்படும்போது, நாங்கள் எப்படி அந்நியோன்னமாக கூடி வேலை செய்கிறோம் என்று அவரே சொல்லிய்ருப்பதையும் நினை கூரவேண்டும்!

[2] காஷ்மீர சைவம் மட்டுமல்ல, அங்கிருந்த கோவில்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அழித்தது தான் இஸ்லாம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள்தாம் எதோ கலைக்காவலர்கள் என்றெல்லாம் வேடமிட்டுக் கொண்டு அலைகிறர்கள், திரிகிறார்கள். அவர்களுக்கு உலகளவில் பட்டங்கள் கொடுக்கப் பட்டு அவர்களது குரூர முகங்களை அழகு படுத்துகிறார்கள்!

[3] இதைப் பற்றி படித்தவன், பண்பாளன், நீதிமான், நியாயவான், தர்மவான், கனவான்…………..என்றெல்லாம் கூறித்திரியும் கூட்டங்களும் எழுதில்லை, பேசுவதில்லை, மூச்சுக் கூட விடுவதில்லை!

[4] இது ஏதோ அவளைப் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல, இன்றளவில் அவள் இந்திய நாட்டிற்கு எதிராக மாவோயிஸ்டுக்களுக்குப் பேச உரிமையளிக்கப் பட்டுள்ள “இந்திய-பிரஜ உரிமைக் கொண்ட பெண்” தான் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும், முகத்தில் பொட்டுக் கூட வைத்துக் கொண்டு, இல்லை சமயத்தில் சேலைக் கட்டிக்கொண்டு “இந்து வேடம்” போடும் பெண்-ஏமாற்று-வர்க்கத்தில் ஒரு ஜீவன்!

[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[6] வெட்கங்கெட்ட இந்த மதமாறிகளுக்கு இன்னும் இந்த அடையாளங்கள் – பட், சௌத்ரி, படேல், நாயக்………………..தேவைப் படுகின்றன. ஆனால் மற்ற நேரங்களில் ஏதோ இஸ்லாத்தையே பேத்து-எடுத்து வந்தவர்கள் மாதிரி பேசுவார்கள், நடிப்பார்கள்! அந்த “ஜஹிர் நாயக்” கூட இதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறான்!

[7] http://beta.thehindu.com/news/states/other-states/article244309.ece

http://beta.thehindu.com/news/states/article244131.ece

http://www.ndtv.com/news/india/protest-in-jk-over-anti-women-bill-17646.php

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

[8] Pawan Bali / CNN-IBN, J-K bill discriminates against women, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://ibnlive.in.com/news/jk-bill-discriminates-against-women/111426-37.html

லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!

பிப்ரவரி 18, 2010

லஸ்கர் தீவிரவாதத் தலைவன் இந்தியாவுடன் பேசத் தயாராம்!

26/11 தீவிரவாதத் தாக்குதல் முதலிவற்றிற்கு காரணமான லச்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன், ஹாவிட்ஸ் சய்யித் ஜம்மு-காஷ்மீரம் விஷயமாகத் தான் இந்தியாவுடன் பேசத் தயாராக உள்ளேன் என்கிறானாம்! “இந்தியாவின் மீது ஜிஹாத், காஃபிகளை ஒழிப்போம், காஷ்மீர்-ஹைதராபாத்-ஜுனாகத் முதலியவற்றை விடுவிப்போம்…………..என்று கத்திக் கொண்டிருந்த” அல் ஜஸிரா தொலைக்காட்சியில் குரல் / தொணி திடீரென்று மாறியதாம்!

Hafeez-Saeed-Mumbai-ரத்தம்

Hafeez-Saeed-Mumbai-ரத்தம்

“நாங்கள் உரையாடலுக்கு என்றுமே மறுக்கவில்லை. எங்களுக்கு எதிராக அத்தகையப் பிரச்சாரம் நடக்கிறது. நாங்கள் இப்பொழுதுமே உரையாடலுக்குத் தயாராக உள்ளோம்”, என்றானாம் ஹாவிட்ஸ் சய்யித்!

ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்

ஜிஹாதியின் ஆக்ரோஷ முகம்

மொஹம்மது அஜ்மல் கஸாப், ஜமாத்-உத்-தாவாவின் தலைவன் ஹாவிட்ஸ் சய்யீதை 26/11 மூன்று நாள் தாக்குதல், குண்டு வெடிப்புகள், அப்பாவி இந்தியர்களின் பலி அனைத்திற்கும் அவனா காரனம் என்று குற்றாஞ்சாட்டியுள்ளான். ஆனால் வேடிக்கையென்னவென்றால், தனக்கு ச்டம்பந்தம் இல்லையென்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டானாம், அவர்களும் அதை ஒப்புக்கொண்டு விட்டுவிட்டார்களாம்!

இஸ்லாமிய-ஜிஹாத்-இந்தோனேசியாவில்-வெட்டப்பட்டத்தலைகள்

இஸ்லாமிய-ஜிஹாத்-இந்தோனேசியாவில்-வெட்டப்பட்டத்தலைகள்

ஆனால், ப்ரேர்னா ராய் என்ற செய்தியாளர் அல் ஜெஸீராவிடமிருந்து பெற்ற “இந்திய போலீஸாரின் கஸாப்பின் துப்பறியும் போது கிடைத்த விவரங்கள் அடங்கிய” வீடியோவை வெளியிட்டுள்ளாராம்!

http://english.aljazeera.net/news/asia/2010/02/2010217142020423937.html

வீடியோவை இங்கு பார்க்கலாம்.

ஜிஹாதின் உண்மை உருவத்தை அறியாமல், பேசுவதே போலித்தனமானது.

காஃபிர் என்று சொல்லிக் கொண்டு இந்துக்களைக் கொன்று குவித்தது, இடைக்காலத்தில் மட்டுமல்ல. அதற்குப் பிறகும், இப்பொழுதும் நடக்கிறது.

தலைவெட்டும்-ஜிஹாத்

தலைவெட்டும்-ஜிஹாத்

இந்திய செக்யூலார் ஊடகங்கள் அவற்றை முழுக்க மறைத்து விடுகின்றன. லட்சக் கணக்கான இந்துக்கள் தமது வீடுகளை மற்றும் சொத்துகளை விட்டுவிட்டு ஓடிவந்து அகதிகளாக டில்லியில் துணிவீடுகளில் வாழ்வது எதற்காக?

அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் பலர் இந்திய ராணுவத்தில் வேலை செய்கின்றனர். அவர்களில் பலர் காஷ்மீரத்தில், இந்திய எல்லைப்புறங்களில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் தெரியும் உண்மை என்னவென்று!

இந்திய வீரர்கள் அல்லது இந்தியர்கள் அதாவது இந்துக்கள் கொலைசெய்யப்பட்டால், அவர்களது ஆண் உறுப்பை அறுத்து அவர்களின் வாய்களில் சொருகியுள்ள நிலையில் பிணங்கள் கிடக்குமாம்! அதாவது, “நீங்கள் இதர்குதான் லாயக்கு”, என்ற ரீதியில் உணர்த்த அவ்வாறு செய்வார்களாம்!

இந்நிலையில்தான் பேசுகிறார்கள், சுயயாட்சி, மாநில சுயயாட்சி, காஷ்மீரத்திற்கு  முதலியவைப் பற்றி. வக்காலத்து வாங்குவது இத்தகைய பிரிவினைவாதிகளுக்குத் தான்!!

உறவுகளை வளர்க்க முயற்ச்சிக்கும்போதான குண்டுவெடிப்பு, துன்மார்க்கக் கொலைகள்!

பிப்ரவரி 14, 2010

உறவுகளை வளர்க்க முயற்ச்சிக்கும்போதான குண்டுவெடிப்பு, துன்மார்க்கக் கொலைகள்!

பேச்சு வார்த்தைகளுக்கு முன்பான இந்த குண்டுவெடிப்பு இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் பல இடங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்திய-பாகிஸ்தான் உறவுகளை புதுப்பிக்கவேண்டும், வளர்க்கவேண்டும் என்ற நிலையில் பாடுபடும்போது, இத்தகைய துன்மார்க்க குண்டுவெடிப்புக் கொலைகளை இந்திய முஸ்லீம்கள் கண்டிக்கவெஏண்டும். அத்தகைய தீவிரவாதிகளை ஆதரிக்கக்கூடாது.

“மன-உளைச்சலில் உள்ளேன்” – இப்படியும் ஒரு உள்-துறை அமைச்சர்: ஜிஹாத் பற்றி சொதப்பிய[1] தைரியமற்ற ஒரு உள்துறை அமைச்சரான சிதம்பரம் சொல்கிறாராம், “I am deeply distressed,”! – அதாவது “மனத்தளவில் நான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளேன் / மன உளைச்சலில் உள்ளேன்”. ஆமாம், நிச்சயமாக, சர்தார் பட்டேலின் இருக்கையில் இருந்து கொண்டு, இப்படி இந்தியர்களுக்கு துரோகம் செய்தால், “மனசாட்சி” குத்தத்தான் செய்யும்!  பிறகெதற்கு பதவி, பவிஷு, கோட்டு-சூட்டு எல்லாம், உதறிவிட்டு செல்லவேண்டியதுதானே? “புனேயில் குண்டு வெடிப்பு, அதில் 9 பேர் இறப்பு – நான்கு மேல்நாட்டவரையும் சேர்த்து! 50 பேர்களுக்கு மேலே காயம்!”, இந்த செய்தி கேட்டுதான் புலம்புகிறார்.

குண்டு வெடிப்புத் தொழிற்நுட்பம்[2]: நவம்பர் 26, 2008ற்குப் பிறகு மறுபடியும், ஒரு பெரிய குண்டு வெடிப்பு பூனேவில் நிகஷ்ந்துள்ளது. ஓஷோ ஆஸ்ரமத்திற்கு அருகில், வடக்குப் பிரதான அவின்யூவில் உள்ள பிரபலமான “ஜெர்மன் பேக்கரி”யில் சனிக்கிழமை மாலை 7.30ற்கு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அந்த குண்டானது ஒரு மாறுதல் செய்யப்பட்ட உள்-வெடிப்பு-தொழிற்நுட்மம் [Improvised explosive device (IED] மூலம், அம்மோனியன் நைட்ரேட், ஃபூயல் ஆயில் கலவையுடன் ஊக்குவிக்க RDX (as a booster) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய “இந்திய முஜாஹத்தீன்” தயாரிப்பு குண்டுகளைப் போலவே உள்ளது.

தாவூத் ஜிலானி வேவு பார்த்த இடம்தான் அது: இந்திய துப்பறிவாளர்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டி விட்டர்கள் – ஜூலை 25, 2008ல் ஓஷோ ஆஸ்ரமத்திற்கு செல்ல ஹேட்லி என்ற தாவூத் ஜிலானி[3] உள்ளே சென்று “தியானம் செய்ய” (!) அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டான். ஆனால், அவன் உண்மையில் உள்ளே சென்றானா இலையா என்று ஆஸ்சரமத்தார் தெரியாது என்று சொல்லிவிட்டனர். ஆனால் பக்கத்தில் இருப்பவைதாம் – அந்த “சபத் இல்லம்”  [The Chabad House (a Jewish Community Centre)] அதாவது யூதர்கள் வசிக்கும் இல்லம் மற்றும் பேக்கரி. இவையெல்லாம் அந்த லஸ்கரின் தாக்குதல் ஆட்டவணையில் இருந்தன, அது அக்டோபர் 2009லேயே இந்திய உளவுத்துறைக்கு அனைத்துலக நிறுவனங்கள் கொடுத்துள்ளன[4]! பிறகு, அந்த பேக்கரியில் குண்டு வெடித்ததில் என்ன ஆச்சரியம்?

உள்ளூர் முஸ்லீம்கள் உதவுவது:  ஹேட்லி என்ற தாவூத் ஜிலானி மறுபடியும் ஓஷோ ஆஸ்ரமத்திற்கு மார்ச் 16, 2009 அன்று வந்திருக்கிறான். அப்பொழுது கொரேகாவ் பார்க்கில் “ஹோட்டல் சூய்ர வில்லா”வில் அறை எண். 202ல் தங்கியிருந்தான். மாலை 6.50ற்கு வந்து, அடுத்த நாள் காலை மார்ச் 17, 2009 அன்று சென்று விட்டான். அவன் செல்லும்போது ரூ. 1,248/- பணம் செல்லுதுகிறான். ஒரு தடவைக் கூட தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை. இந்த ஹோட்டலும் அந்த பேக்கரியின் அருகில் உள்ளது. பஸீர் செய்க் என்ற தாவூத்தின் நண்பர்[5] இல்லத்தில் கிடைத்த சூட்கேஸில்தான், ஒஷோ கொம்யூனின் அவனது பதிவு காகிதம் இருந்தது. இந்த குண்டு வெடிப்பு ஸஹஜாத் அஹ்மத் என்ற இந்தியன் முஜாஹத்தீன் “செய்வாளர்” (operative) முந்தினம் அஸம்கர் (உ.பி)ல் கைது செய்யப்பட்டப்பிறகு ஏற்பட்டது. அவன் விசரணையில் சொன்னதாவது, அயல்நாட்டினர்தாம் தமது குறி மற்றும் “காமன் வெல்த் விளையாட்டு இடங்கள்” தமது “தாக்குதல் அட்டவணையில்” உள்ளது என்றானாம். தாவூத் ஜிலானியின் இந்திய விஜயம், இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்றது, விடியோ-புகைப் படங்கள் எத்தது முதலிய விவரங்கள் ஏற்கெனவே விவரிக்கப்பட்டன[6]. பாதுகாப்புக் குறித்து இவர்களின் விவரங்கள் பல ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. விசாரணையும் “இன் கேமரா”வில் நடைபெறுகிறது[7].

லஸ்கர் தாவூத் ஜிலானிற்கு, $28,000 தீவிரதாக்குதலுக்குக் கொடுத்தது! லஸ்கர்-இ-தொய்பா (LeT) தாவூத் ஜிலானிக்கு $ 28,000 ( $ 3000 இந்திய ரூபாய்களில்) ஏப்ரல் மற்றும் ஜூலை 2008ல் இந்தியாவிற்கு சென்று வரவும், பல இடங்களில் நோட்டமிடவும்,  செலவிற்க்காக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது, தாஜ் ஹோட்டல் போன்று மாதிரியுடன் எப்படி அங்கு தக்குதல்கள் நடத்தவேண்டும் மற்றும் பூமியின் மீது நிலை நிறுத்தி இடத்தை அறியும் கருவிகளை உபயோகப் படுத்தவேண்டும் முதலியவற்றிலும் பயிற்ச்சி கொடுத்தது. இவ்விவரங்கள் எல்லாம் சிகாகோவில் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களைத் திறந்தபோது ஜுரிக்களுக்கு (Federal Grand Jury indictment) தெரியவந்ததாம்[8].

முஸ்லிம்களில், “இந்திய குடிமகன்கள்”, “தீவிரவாதிகள்” என்று பிரித்துப் பார்க்கப்பட / அடையாளங்காண வேண்டும்: தீவிரவாதிகள் எல்லாம் ஏன் முஸ்லீமாக இருக்கிறர்கள் அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கிறார்கள் என்றால், சில முஸ்லீம்களுக்கு கோவம் வருகிறது. ஆனால், பிடிக்கப்படும், அடையாளங்காணப்படும், தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை ஆராயிஉம் போது, அவர்கள் முஸ்லீம்களாக இருப்பது ஏன் என அவர்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும், உண்மையைச் சொல்லியாக வேண்டும். “இஸ்லாம்” நல்லது, ஆனால் அவ்வாறு தீவிரவாதம் செய்யும் முஸ்லீம்கள் செட்டவர்கள், கொடுமையானவர்கள், கொடுங்கோல துன்மார்க்கர்கள் என்றால் எப்படியென்று விளக்கவேண்டும். முஸ்லிம்களில், “இந்திய குடிமகன்கள்”, “தீவிரவாதிகள்” என்று பிரித்துப் பார்க்கப்பட / அடையாளங்காண வேண்டும். பிதற்றிய உள்துரை அமைச்சர் முதலில் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். சும்மா, மன உளைச்சலாகிவிட்டது என்ரு தப்பித்துக் கொள்ளமுடியாது. ஏனெனில், முண்டு வைத்துக் ம்ஜொல்லும் திவீரவாதிகள் அவ்வாறு மனிதர்களைக் கொல்லும்போது, பிணங்கள் சிதறும்போது, ரத்தம் பீய்ச்சியடிக்கும்போது, மனித உறுப்புகள் எல்லாதிசைகளிலும் சின்னா-பின்னபாக பறக்கும்போது,……………………அவர்கள் எந்த மன-உளைச்சல்களுக்கும் உள்ளாவதில்லை! மதத்தின் பெயரால் மூளைச்ச்சலவை செய்யப் பட்டாலும் தெளிவாக இருக்கிறர்கள், குண்டு வைப்பது பற்றி, காஃபிர்களைக் கொல்வது பற்றி. அந்ந்நிலையில், சிதம்பரம் போன்றவர்களும் ‘செக்யூலரிஸத்தால்” மூளைசலவை செய்யப் பட்டிருந்தால், “மன-உளைச்சல்”தான் வரும், ஏனெனில், நன்றாகவேத் தெரியும், “நீயும் அந்த தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு உன் மக்களையே நீ கொல்கிறாய்”: என்று!


[1] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, https://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[2] இது தாலிபான், லஸ்கர் முதலியோரின் எளிதில் கிடைக்கக் கூடிய ரசாயனப் பொருட்கள் அல்லது முஸ்லீம் “உதவியாளர்கள்” மூலம் கிடைக்கும் பொருட்களை வைத்து குண்டுகள் தயாரிக்கும் எளிதான தொழிற்நுட்பமாகும்.

[3] வேதபிரகாஷ், தாவூத் ஹெட்லியும், டேவிட் கோல்மென்னும், https://islamindia.wordpress.com/2009/12/10/தாவூத்-ஜிலானியும்-டேவி-ஹ/

[4] Raghvendra Rao , Ritu Sarin with Neeraj Chauhan, Almost as per Headley script? Near Osho, next to Jewish Chabad House, in Indian Express, for more details, see here:

http://www.indianexpress.com/news/almost-as-per-headley-script-near-osho-next-to-jewish-chabad-house/579510/

[5] இப்படி உள்ளுர் முஸ்லிம்கள் தீவிரவாதிகளுக்குத் தெரிந்தே உதவுவதுதான் அவர்களுடைய மதபோதனை மற்றும் மூளைச்சலவையைக் காட்டுகிறது. அதாவது, “இஸ்லாம்” பெயரால் ஆணையிட்டு இதை செய்யவேண்டும் என்றால் உடனே அவன் அதற்கு பணிகிறான் எனும்போது, அவன் மனிதர்களை, மனித இனத்தைப் பார்ப்பதில்லை, அந்த “தாருல்-இஸ்லாம்” என்றதைத்தான் பார்க்கிறான், “தாருல்-ஹராப்”பை அழிக்கப் பார்க்கிறான்.

[6] வேதபிரகாஷ், தாவூத் ஜிஜானி என்ற ஹெட்லியின் இந்தியாவின் மீதான தாக்குதல், https://islamindia.wordpress.com/2009/12/14/தாவூத்-ஜிலானி-என்ற-ஹெட்ல /

[7] வேதபிரகாஷ், தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ரானாவ்ன் ஆவணங்கள் மறைவதும், தோன்றுவதும், https://islamindia.wordpress.com/2009/12/20/தஹவூர்-ராணாவிநாவணங்க/

[8] https://islamindia.wordpress.com/2010/01/15/லஸ்கர்-தாவூத்-ஜிலானிற்கு/

கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை!

பிப்ரவரி 3, 2010
கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை
பிப்ரவரி 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6489

Rapist-spared-raped-flogged

Rapist-spared-raped-flogged

கற்பழித்தனுக்கு-தண்டனையில்லை-16

கற்பழித்தனுக்கு-தண்டனையில்லை-16

http://edailystar.com/index.php?opt=view&page=15&date=2010-01-24

தி டெய்லி ஸ்டார் பக்கம்.15

டாகா : வங்க தேசத்தில் பெண் ஒருவரை கற்பழித்தவனுக்கு எவ்வித தண்டனையும் வழங்காமல், அதனால் பாதிக்கப்பட்டு, கர்ப்பமடைந்த பெண்ணுக்கு 101 கசையடி வழங்க தண்டனை வழங்கப்பட்டதாக, அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, வங்க தேச பத்திரிகையான “டெய்லி ஸ்டார்’ வெளியிட்டுள்ள செய்தி:வங்க தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் எனாமுல் மியா(20). இவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை, அடிக்கடி கிண்டல் செய்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல், மாதம், அந்த பெண்ணை எனாமுல் மியா கற்பழித்தார். இதை வெளியில் கூறினால், தனக்கு அவமானம் என்று கருதிய அந்த பெண், இச்சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவம் நடந்த சில மாதங்களில், அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின், அந்த பெண், கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால், அப்பெண்ணை திருமணம் செய்தவர், திருமணமான சில வாரங்களிலேயே விவாகரத்து செய்துவிட்டார்.இதையடுத்து, அந்த பெண்ணுக்கு கிராமத்தினர், 101 கசையடிகள் வழங்க தீர்ப்பு வழங்கினர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, கிராமத்தினர் நிர்ணயித்த அபராத தொகையை செலுத்த வேண்டும், இல்லையென்றால், அவர்கள் குடும்பம் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் என தண்டனை வழங்கினர். ஆனால், அந்த பெண்ணை கற்பழித்த எனாமுல் மியாவிற்கு, எவ்வித தண்டனையும் வழங்கவில்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Front page news and headlines today

ஐயோ!

குடியரசு விழாவிற்கு முன்பாக காஷ்மீரத்தில் ஆயுதங்கள் பறிமுதல்!

ஜனவரி 25, 2010

குடியரசு விழாவிற்கு முன்பாக காஷ்மீரத்தில் ஆயுதங்கள் பறிமுதல்!

ஆயுதங்கள் கண்டு பிடுப்பு, பறிமுதல்!: குடியரசுதின விழாவிற்கு முன்பாக, 24-01-2010 அன்று பரமுல்லாவில் செக்-ஈ-மமூஸா மற்றும் ரஜௌரி என்ற இடத்திலும் செய்த ரெய்டில் பாகிஸ்தானில் உற்பத்திச் செய்யபட்ட இரண்டு பதுங்கு-குழிக்குண்டுகள் கண்டுபிடிக்கும் கருவிகள், 13  குண்டுகள், 150 கையெரி குண்டுகள், 10 கிலோ RDX, முதலியன கண்டுபிடிக்கப்பட்டன [one UMG, four wireless sets, 26 spare batteries of wireless sets, 28 electric detonator circuits, two anti-tank mines, 13 motor shells, 51 AGL grenades, 57 hand grenades, 42 UBGL grenades, 32 improvised circuits, four charger box, 30 detonators, three AK ammunition boxes containing about 2,100 rounds of AK, six sim cards, two Sintax tanks and 10 kg of RDX.]! இவை இரண்டு தண்ணிர் டேங்கர்களில் மறைத்து எடுத்துவரப்படுள்ளன!

பாகிஸ்தான்-ஆயுதங்கள்-240110

பாகிஸ்தான்-ஆயுதங்கள்-240110
பாகி-ஆயுதங்கள்-240110

பாகி-ஆயுதங்கள்-240110

இவ்வாறு, எல்லையில் ஊடுருவல், உள்ளூரில் ரகளை, பாகிஸ்தானில் ஆவேசப் பேச்சுகள் முதலிய நிலைகளில் இந்தியாவின் மீது தாக்குதல்களை மெஏற்கொள்வது, ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டன! ஆனால், செக்யூலரிஸ இந்தியர்களைக் கேட்கவே வேண்டாம், பாகிஸ்தானின் விமான தலைவரை முழுபக்க அரசு விலம்பரங்களில் போட்டு மரியாதை செய்வர்! லட்சக்கணக்கில் இந்துக்கள் இறந்தாலும் கவலையில்லை, ஆனால் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டுவிட்டால், ஆர்பாட்டம், ரகளை, கலாட்டா! அதேமாதிரி எத்தனை இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டாலும் சுரணையில்லை, ஒரு முஸ்லிம் பெண் கற்பழிக்கப்பட்டல், அதுதான் முக்கியமான செய்தி!

எல்லைகளைத் தாண்டிய ஜிஹாதி தீவிரவாதம்: இதேமாதிரி கட்டுப்பாடு எல்லையிலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் பர்ஸா காடுகளிலும் three Pakistan-made pistols, five AK magazines, 286 rounds of AK rifles, two grenades and 12 electronic detonators முதலியவை பிடிபட்டுள்ளன!

அதிகாரத்தை எதிர்க்கும் மனப்பாங்கு: அதே நேரத்தில் பத்தன் என்ற நகரத்தில் பரிஹஸ்புர என்ற இடத்தில் உள்ள ஒரு போலீஸ் பாதுகாப்பு குடியிருப்பு (police camp)  அகற்றப்படவேண்டும் என்று முஸ்லிம்கள் தடையை மீறி ஊர்வலம் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதாவது போலிஸ், ராணுவம் முதலியவற்றை மதிக்கக்கூடாது என்ற மனத்தைப் பிரிவினைவாதிகள் மாற்றும் மனப்பாங்கைத் தீவிரவாதிகள் வளர்த்துள்ளனர்.

மற்ற முஸ்லிம்கள் ஏன் அறிவுரைத் தரக்கூடாது?: அத்தகைய பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், இந்திய-விரோதிகளுக்கு மற்ற முஸ்லிம்கள் ஏன் அறிவுரை சொல்லக்கூடாது? இப்படி கலவரங்கள், கொலைகள் முதலியன நடந்துகொண்டேயிருந்து, தினசரி வாழ்க்கை பாதிக்கும் நிலையில் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? “ஜிஹாதி” பேசிக்கொண்டே இப்படி “அமைதி”யில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், அதுதான் ‘அமைதியா”? கோடிகளில் இந்திய வரிப்பணம் இங்கு விரயமாகிறது! சட்ட-திட்டங்கள் என்றுவரும்போது, இந்திய சட்டங்கள் எதுவுமே இங்கு செல்லாது என்று விலக்கு அளிக்கபட்டுள்ளது. அந்நிலையில், காஷ்மீர மக்களின் இந்தியாவிற்கு என்ன பங்களிப்பு என்றால் “ஜிஹாதி தீவிரவாதம்”தான் எனும்போது……………!

மற்ற மாநிலங்கள் போல், இவர்களும் அமைதியாக இருந்தால், பல மின்னணு தொழிற்சாலைகள் அங்கு ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஏனெனில் அத்தகைய சீதோஷ்ணநிலை அங்குள்ளது. எனவே மக்கள் பிரிவினை-தீவிரவாதங்களை விடுத்து அமைதியை ஏற்படுத்தினால்தான், அயல்நாட்டவர் அமைதியுடன், அவ்வாறு அங்கு வந்து முதலீடு செய்யத் துணிவார்கள். இதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.