Archive for the ‘சிந்து’ category

பாகிஸ்தானில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர், ஜின்னா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது!

ஜூன் 16, 2013

பாகிஸ்தானில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர், ஜின்னா வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது!

Jinnah smoking pipe

இந்தியாவில் ஜின்னா வீடு பத்திரமாக உள்ளது: முன்பு மும்பையில் இருந்த ஜின்னாவின் வீட்டை பராமரிக்கும் விஷயத்தில் பிரச்சினைய உண்டாக்கியது பாகிஸ்தான் அரசு. எங்களுக்கே தந்துவிட வேண்டும் என்ற ரீதியில் வாதிட்டது. தீனா வாடியா என்ற ஜின்னாவின் மகள் சட்டரீதியாக அணுகினார். ஜின்னா ஒரு கோஜா ஷியா என்பதால், இந்து சட்டம் செல்லுபடியாகும்[1]. என்றுக்கூட வாதிட்டார்[2]. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஜின்னா தங்கியிருந்த விடுதியை, ஜிஹாதிகள் குண்டு வைத்து தகர்த்து விட்டனர் என்று வருத்தப் பட்டுக் கொள்வது போல செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. பாகிஸ்தனியர்களுக் பெரும்பாலோர் ஜின்னாவை ஒரு துரோகி என்று தான் நினைக்கின்றனர்[3]. 2003ல் இந்த வீடு ஐ.சி.சி.எஸ்.ஆர் என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது[4]. லட்சங்கள் செலவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

Jinnah-with-Dogs

ஜின்னா தங்கியிருந்த விடுதி பாகிஸ்தானில் தகர்க்கப்பட்டதாம்: “பாகிஸ்தானின் தந்தை” எனப் போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை 15-06-2013 அன்று வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்[5]. பாகிஸ்தானின் தென் மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜின்னாவின் வீடு 121 ஆண்டு கால பழமை வாய்ந்தது. தலைநகர் குவெட்டாவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வீட்டை – ஷியாரத் ரெசிடென்ஸி என்னும் தங்கும் விடுதி – பயங்கரவாதிகள் சனிக்கிழமை அதிகாலை முற்றுகையிட்டனர். சக்தி வாய்ந்த நான்கு குண்டுகளை வெடிக்க வைத்து வீட்டின் முகப்புப் பகுதியைத் தகர்த்த பயங்கரவாதிகள் அதையடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் ஜின்னாவின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது.

jinnah_and_dina and dogs

தேசிய சின்னம் அழிந்து விட்டதாம்: வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர். ஆனாலும் வீட்டிலுள்ள அரிய நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட மரச்சாமான்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தீக்கிரையாகின. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜின்னா, தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை இந்த வீட்டில்தான் கழித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த வீடு தேசியச் சின்னமாக [Quaid-e-Azam residency] அறிவிக்கப்பட்டது[6]. மூத்த அரச அதிகாரி ஒருவர் இதில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

 

கல்லூரி மாணவிகள் குண்டு வைத்து கொலை:  பாகிஸ்தானின் குவெட்டா நகரில் சர்தார் பகதூர் கான் பெண்கள் பல்கலைக்கழகம் உள்ளது. நேற்று மாலையில் ஏராளமான மாணவிகளும், ஆசிரியர்களும் வீட்டுக்கு செல்ல கல்லூரி வளாகத்தில் இருந்த பஸ்ஸில் காத்திருந்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது[7]. இந்த சம்பவங்களில் 12 கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[8]. இச்சம்பவத்தில் ஏராளமான பெண்களுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள போலன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்குள்ளே சில தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது, பலுசிஸ்தான் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கு இருந்தனர். தீவிரவாதிகள் சுட்டதில் குவெட்டா துணை கமிஷனர் அப்துல் மன்சூர் காகர் இறந்தார். மக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். சில தீவிரவாதிகள் மருத்துவமனையின் மாடியில் நின்று கொண்டு மருத்துவமனைக்கு வருபவர்களை நோக்கி சுட்டனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை[9].

 

ஜிஹாதிகளின் தாக்குதலில் கல்லூரி மாணவிகளும், ஜின்னா வீடும் ஏன்?: தலிபன்களைப் பொறுத்தவரைக்கும் பெண்கள் படிக்கக்கூடாது, பர்தாவில் கட்டுண்டுக் கிடக்க வேண்ண்ட்டும். அதே போல சின்னங்கள், அடையாளங்கள், உருவங்கள் என்று இஸ்லாத்தில் எதுவும் இருக்கக் கூடாது. எனவே, ஜின்னா வீட்டை இடித்ததில் ஒன்றும் வியப்பில்லை. முஹமது நபியின் மசூதியே இடிக்கப்பட்டது. அவரது கல்லறையும் அழிக்கப்பட்டது. இதெல்லாம் அடிப்படைவாத இஸ்லாத்தின் தீவிரவாத வெளிப்பாடுகளே. இரட்டைவேட்டம் போடுவதில் முஸ்லிம்கள் கெட்டிக்காரர்கள் தாம். ஓருபக்கம் போட்டோ எடுக்கக்கூடாது என்பர், மறுபக்கம் போட்டோக்கள் எடுப்பர்; நாய்களை வைத்துக் கொள்ளக்கூடாது ஏன்பர், ஆனால் மறுபக்கம் வைத்துக் கொண்டிருப்பர். குட்டிக்கக்கூடாது என்பர், குடிப்பர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்[10].

 

வேதபிரகாஷ்

© 16-06-2013


[1] Recently Dina Wadia has been involved in litigation regarding Jinnah House claiming that Hindu Law is applicable to Jinnah as he was a Khoja Shia

[4] The house of Mohammad Ali Jinnah, the founder of Pakistan, at Malabar Hill in Mumbai has been handed over to the Indian Council for Cultural Relations and part of it will be used for cultural activities, the Rajya Sabha was informed on Thursday. “The property has since been renamed ICCR Mumbai branch office,” Minister of State for External Affairs Digvijay Singh told the House in a written reply. He said the proposal was to have a small auditorium, library, reading room, seminar room and an arts gallery in the house, which successive Pakistani governments over the years have been asking for the purpose of a consulate in the metropolis.

[10] Katherine Pratt Ewing (Ed.), Shariat and ambiguity in South Asian Islam, University of California Press, USA,1988.

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – பெண்கள், திருநங்கைகள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா?

PAK-election women - 42 percentபலத்த பாதுகாப்பில் தேர்தல் நடந்தது[1]: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[2], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் இன்று 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டனர்[3]. 73,000 ஓட்டு சாவடிகள் உள்ளன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் இருந்தனர். ஒருவேளை, சில தொகுதிகளில், ஓட்டுப் போடுபவரைவிட இவர்கள் அதிகமாக இருந்தார்களோ என்னமோ?

PAK-election women canvass2பெண்கள், போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா: இந்நிலையில் பெண்கள் போட்டியிடலாமா, ஓட்டுப் போடலாமா, கூடாதா என்ற பிரச்சினையைக் கிளப்பினார்கள். மலோலா சுடப்பட்ட பிறகு, பெண்கள் வெளியில் வருவதற்கு பயப்பட்டார்கள். வரிஸ்தானில் பெண்கள் ஓட்டுப் போடக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரிக்கப்பட்டனர்[4]. இதனால், ஓட்டுப் போட பெண்கள் வெளியே வருவதற்கு உரிய பாதுகாப்பு செய்யப்பட வேண்டியிருந்தது[5]. அவர்கள் ஓட்டுப் போடுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்[6]. இருப்பினும், மற்ற நாடுகளைப் போல தைரியமாக அல்லது சுதந்திரமாக வெளியே வந்து ஓட்டுப் போட இன்னும் சில காலம் ஆகும்[7]. இந்நிலையில் எழுத படிக்கத் தெரியாத ஒரு பெண் ஓட்டளித்திருப்பது பாராட்டப்படுகிறது[8]. முதன் முறையாக பாதம் ஜரி என்ற பெண்மணி பிராதான கவுன்சில் சீட்டிற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்[9].

PAK-election women canvassing

கராச்சி பாகிஸ்தான் இல்லை: கராச்சியில், இம்ரான் கானை ஆதரித்து பல இளம் பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், ஓட்டு சேகரிக்க கொடிகளை, படங்களை ஏந்தி சென்றார்கள். அவர்களைப் பார்த்தால், இந்திய பெண்களைப் போன்றுதான் இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் மற்ற நகரங்களில் பெண்கள் வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. முன்பு, பெனாசிர் புட்டோ பிரதம மந்திரியாக இருந்தார் என்பதனை மறந்து அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவருக்கு ஏற்பட்ட கதி தான், உங்களுக்கும் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள்.

PAK-election women voters

பெண்கள்ஓட்டுரிமை, வாக்களிப்பு, முதலியபிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[10]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[11]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 46% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[12].

PPP celebrate 2008 elections danceபாகிஸ்தானில்தேர்தல்திருநங்கைகள்போட்டியிடலாமா, ஓட்டுப்போடலாமா, கூடாதா? முஸ்லிம் பெண்களுக்கே கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அலிகள் / ரதிருநங்கைகளுக்கு என்ன உரிமைகள் கொடுக்கப்படும் என்று பார்க்கும் போது, இம்முறை அதாவது முதல் முறையாக, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[13]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர். சென்ற தேர்தலில் பிபிபி வெற்றிபெற்றபோது, இவர்களை தாம் ஆடுவதிற்குப் பயன் படுத்திக் கொண்டனர்[14].

PPP celebrate 2008 elections

பாகிஸ்தானில் கூட சிலர் கார்ட்டூன்களை போட்டு தமாஷ் செய்கிறார்கள், ஒருவேளை இந்தியாவில் அவற்றை எதிர்ப்பார்களோ என்னமோ?

Ghous Ali Sha - cartoon Pak-ele-2013

© வேதபிரகாஷ்

11-05-2013


[11] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[14] அந்தகாலத்தில் சுல்தான்களின் ஹேரங்களில் / அந்தப்புரங்களில் இவர்களை வேலைக்கு வைப்பர். ஏனெனில் அவர்கள் உள்ளேயிருக்கும் பெண்களை பாதுகாத்துக் கொள்வர். அதே நேரத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

who will be next prime minister of pakistan 2013பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடக்கிறது: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[1], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டார்கள்[2]. 73,000 ஓட்டு சாவடிகள் இருந்தன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் என்று காவல் இருந்தார்கள்.

quaid-e-azam-and-liaquat-ali-khan-was-the-prime-minister-smokingபாகிஸ்தானில் எல்லா முஸ்லீம்களும் முஸ்லீம்கள் இல்லை: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தால், எல்லா முஸ்லீம்களும் அங்கு சரிசமமாக நடத்தப் படுவதில்லை, ஏன் முஸ்லீமாகக் கூட கருதப்படுவடில்லை. சுன்னி / சன்னி முஸ்லீம்கள் தாம் உயர்ந்தவகள், அதற்கடுத்து ஷியா முஸ்லீம்கள். ஆனால், அவர்களும் பலமுறைத் தாக்கப் பட்டுள்ளார்கள், அவர்கள் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. பிறகு அஹ்மதியா[3], காதியான், பஹாய் போன்றோர் முஸ்லீம்களே இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்[4]. முஸ்லீம்-அல்லாவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆக ஓட்டுரிமை அவர்களுக்கு இல்லை[5]. அஹ்மதியர் ஓட்டுரிமைப் பிரச்சினைப் பற்றி அமெரிக்காவே வக்காலத்து வாங்கியுள்ளது[6].

Veero Kolhiபெண்கள் ஓட்டுரிமை, வாக்களிப்பு,  முதலிய பிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[7]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[8]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 42% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[9].

Nawaz vs Imranஅடுத்த பிரதம மந்திரி யார்: அடுத்த பிரதம மந்திரி யார் என கெட்டதற்கு[10], “நான் தான், ஏனெனில் இம்ரன் கானுக்கு அத்தகைய வாய்ப்பு என்றும் இருந்ததில்லை” என்று மௌலானா பசல்-உர்-ரஹ்மான், அமீலர் ஜமைத்-உலேமா-இ-இஸ்லாம் என்ற இயக்கத்தின் தலைவர் கூறியிருக்கிறாராம்[11]. இருப்பினும் நவாஸ் செரிப் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Bindia Rana - transgender contest PAK-ele-2013முதல் முறையாக  திருநங்கை தேர்தலில் போட்டி: முதல் முறை, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[12]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர்.

© வேதபிரகாஷ்

11-05-2013


[8] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[10] Amir Jamiat Ulema-e-Islam (JUI-F), Maulana Fazl-ur-Rehman said on 08-05-2013 it was likely that he becomes the next prime minister of Pakistan but the Pakistan Tehreek-e-Insaf Chief Imran Khan neither had any such chance before nor now

பாகிஸ்தானில் இருந்த இந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்!

பிப்ரவரி 2, 2011

பாகிஸ்தானில் இருந்த இந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்!

உயிருக்குப் பயந்து பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த பாராளுமன்ற உறுப்பினர்: பாகிஸ்தானில் இருந்த ஒரு இந்து பாராளுமன்ற உறுப்பினர், ஜிஹாதி / இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு பயந்து இந்தியாவிற்கு ஓடிவந்து விட்டாராம்! ஏனெனில், தொடர்ந்து ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் அவரை “கொன்றுவிடுவோம்”, என்று மிரட்டிக் கொண்டே இருந்தார்களாம். குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. தினமும் நரகம் தான்! வீட்டைவிட்டு வெளியிலேயே வரமுடியாத நிலை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும், அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை என்று நன்றாகத் தெரிகிறது[1]. அந்நாட்டு போலீஸாரோ, மனித உரிமைப் போராளிகளோ, மற்றவர்களோ கண்டுக் கொள்ளவில்லை. இல்லை நாளைக்கு, இருக்கும் ஒருசில பாதுகாப்பு காவலாளிகளுக்கு, அந்த ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், “அவரைக் கொன்று விடு”, என்று அல்லாவின் பெயரா ஆணையிட்டால், அவ்வாறே செய்தாலும் செய்துவிடுவர் போலும்! இதனால், “விட்டால் போதுமடா சாமி”, என்று இந்தியாவிற்கு எப்படியோ ஓடிவந்துவிட்டாராம். ஆனால், ஒருவேளை, இந்திய அரசாங்கம், அவரைப் பிடித்து பாகிஸ்தானிற்கே அனுப்பி வைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை! இல்லை பாகிஸ்தான் அவ்வாறு கேட்டுக் கொண்டால், சொல்லவே வேண்டாம், அடுத்த விமமனத்திலேயே ஏற்றி அனுப்பி வைத்து விடுவார்கள்., நம் நாட்டு வீரதீர பராக்கிரமசாலிகள்!

பாகிஸ்தானில் கொல்லப் படுகின்ற இந்துக்களை மறந்துவிட்டு, எகிப்திலிருந்து வரும் இந்தியர்களைப் பற்றி கவலைப் படுகிறார்களாம்: ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மாறாக எகிப்திலிருக்கும் இந்தியர்களைப் பற்றி ஊடகங்களில் மணிக்கணக்கில் அளந்து கொண்டிருக்கிறார்கள்! அந்த என்.டி.டி.வி, டைம்ஸ்-நௌ, ஹெட்-லைன்ஸ் டுடே …………முதலிய செனல்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், லைவ்வாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்படியென்ன அதில் முக்கியத்துவம்?

பாகிஸ்தானில் இந்துக்கள் படும் பாடு[2]: பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்கும்படி, அந்நாட்டு பார்லிமென்ட்டில் எம்.பி.,க்கள் கோரியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், 82 வயதான லக்மி சந்த் என்ற இந்து ஆன்மிக தலைவரை, கடத்தல்காரர்கள் கடத்திச் சென்று கணிசமான பணம் வசூலித்தனர். 66 வயதான பாகிஸ்தானிய இந்து எம்.எல்.ஏ., ராம்சிங் சோதோ என்பவர் அங்குள்ள சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து சமீபத்தில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்[3]. அதுமட்டுமல்லாது பலுசிஸ்தானில் உள்ள 27 இந்து குடும்பங்கள், அங்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியாமல், இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து, பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் விவாதித்தனர்.”பாகிஸ்தானில் வசிக்கும் மைனாரிட்டி மக்களுக்கு சமத்துவம் அளிக்கப்படும், என்ற 73ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் ஒழுங்காக பின்பற்றப்படுவதில்லை. பணத்துக்காக இந்துக்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்’ என, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் பல்வாஷா கான், நவாஸ் யூசூப் உள்ளிட்டோர் வற்புறுத்தினர்.

பாகிஸ்தானின் இந்து-விரோத கொடுமையான சட்டங்கள், கொடுமைகள், குரூரங்கள் முதலியன: ராம்சிங் சோதோ 2008ல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் [Pakistan Muslim League-Functional (PML-F)] சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னுடைய உயிக்கான அச்சுறுத்தல் கண்டு பயந்து, சிந்து மாகாண சட்டமன்றத்தின் சபாநாயகரான, நிஸார் அஹமது கோரோ என்பவரிடன் ராஜினாமா கொடுத்தனுப்பியுள்ளார். கேட்க வேண்டுமா, அவருடைய ரரஜினாம, உடனடியாக ஏற்க்கப்பட்டுவிட்டது என்று கராச்சி டைம்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது[4]. சிந்து மற்றும் பலூச்சிஸ்தான் மாவட்டங்களில் கணிசமான, இந்துக்கள், பிரிவினைக்குப் பிறகும் தங்கிவிட்டனர். ஆனால், இஸ்லாமிய தீவிரவாதம் ஓங்க-ஓங்க அவர்கள் அங்கு வாழ்வதே கடினமாகி விட்டது.

2007ல் நடந்த லால் மஸ்ஜித் நிகழ்விற்குப் பிறகு, இந்துக்கள் மீதான கொடுமைகள் அதிகமாகி விட்டன. தினமும் இந்துக்களின் மீது மிகவும் குரூரமான அடக்குமுறை, தாக்குதல்கள் முதலியன நடத்தப் படுகின்றன. குழந்தைகளைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதில் அலாதியான இன்பம் அவர்களுக்கு[5]; இந்துக்களை அடிப்பது-உதைப்பது அவர்களுக்கு வேடிக்கையான செயல்[6]. மாதம் 25 இந்து பெண்கள் கற்பழிக்கப் படுகிறர்கள் என்ற செய்தி வேறு[7]. பெண்களைக் கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதம் மாற்றி கல்யாணம் செய்து கொள்வதும் உண்டு[8]. 400-500 இந்து குடும்பங்கள், ஏற்கெனெவே, இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முயன்று வருகின்றன.

அடிப்படைவாத சுன்னி முஸ்லீம்கள் ஷியா, அஹ்மதியா, கிருத்துவர் மற்றும் இந்துக்களை விட்டுவைப்பதில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan People’s Party (PPP)], தாங்கள் சிறுபான்மையினரின் நண்பன் என்று எப்பொழுதாவது கூறிக்கொண்டாலும், அது அப்படியொன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உண்மையில் அரசாங்கத்தால் 1970 மற்றும் 1980களில் சிறுபான்மையினருக்கு எதிராக எடுத்துவரப்பட்டச் சட்டங்களே, இத்தகைய அடக்குமுறைக்குக் காரணம்[9]. அதாவது, இந்துக்களின் சொத்துக்களை, முஸ்லீம்கள் வேண்டும் என்றால் விற்றே ஆகவேண்டும், இல்லையென்றால், மிரட்டியாவது விற்க்க வைத்து விடுவர். அது தவிர, எப்பஒழுதும், மிரட்டி-மிரட்டியே பண கறப்பதும் கொடூர முஸ்லீம்களுக்கு வாடிக்கையான விஷயமாக இருந்து வந்துள்ளது[10].

சிதம்பரமும், பாகிஸ்தானும்: சிந்து மற்றும் பலுச்சிஸ்தானில் இந்துக்களுக்கு என்ன நேர்கிறது என்பதைப் பற்றிக் கவலைப் படவில்லை, ஆனால், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பைப் பற்றிய விவரங்களை[11] பகிர்ந்து கொள்ளலாம் என்கிறார்[12], இந்திய உள்துறை அமைச்சரான சிதம்பரம்! அதற்கு, பாகிஸ்தான் அமோக ஆதரவு தெரிவிக்கிறது[13], மகிழ்ச்சியுடன்! பேசாமல், சிதம்பரத்திற்கு சுன்னத் செய்து, பாகிஸ்தானிற்கே அனுப்பி வைத்து விடலாம் போலிருக்கிறது. ஹிந்து என்று பெயரை வைத்துக் கொண்டுள்ள நாளிதழைக் கேட்கவேண்டுமா, “Malik hails Chidambaram’s remarks on Samjhauta” என்று செய்தியை முதல் பக்கத்தில் வெளியிடுகின்றது! அத்தகைய பிரம்மிப்பான செய்தியைக் கொடுத்த பெண்மணி “Anita Joshua” அனிதா ஜோஸுவா!

© வேதபிரகாஷ்

02-02-2011


[1] An editorial in the Daily Times Wednesday (02-02-2011) said: “On Saturday (30-01-2011) the resignation of a Hindu member of the Sindh Assembly, Ram Singh Sodho, after reportedly receiving threats is alarming.”

[2] தினமலர், மைனாரிட்டி இந்துக்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்தல், பிப்ரவரி 01, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=178509

[4] Karachi Times, Hindu member of Pak Sindh Assembly flees to India for safety after getting life threats, Karachi News.Net, Sunday 30th January, 2011 (ANI)

http://www.karachinews.net/story/737908

[5] 3-year-old Hindu kidnapped in Pak’s Sindh, Press Trust of India, Updated: November 26, 2010 15:21 IST; http://www.ndtv.com/article/world/3-year-old-hindu-kidnapped-in-paks-sindh-68751

[9] New Indian Express, Hindu MP’s resignation alarming: Pakistan daily, dated 02-02-2011,

http://expressbuzz.com/topnews/hindu-mps-resignation-alarming-pakistan-daily/244459.html

[10] Incidents of kidnapping for ransom have seen an alarming rise during the last few months, forcing many families to abandon their homes and shift to India or other countries. (ANI)