அல்–உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!
அல்–உம்மா கும்பல் தாக்கியது[1]: என்று தலைப்பிட்டு தி இந்து செய்தி வெளியிட்டது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[2]. அந்த கைதிகளை அறைக் குள் அடைத்த போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர்[3]. காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி புழல் சிறைக்கு விரைந்து வந்தார்[4]. அவர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் கைதிகள் பிடித்து வைத்துள்ள 2 காவலர்களை விடுவிக்க அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரவு அந்த காவலர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்[5]. பிறகு சிறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது[6].
புழல் சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை: டி.ஐ.ஜி. ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புழல் சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க 1 டி.ஐ.ஜி, 3 சூப்பிரண்டுகள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன், 81 துணை வார்டன்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் சிறை வார்டன் முத்துமணி, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஸ்டான்லி ஆஸ்பத்திரி ஐ.சி.யு. வார்டில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[7]. கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8]. ;போலீஸாரின் மனைவி, மக்கள், உறவினர் சிறைச்சாலை முன்பு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டி ஆர்பாட்டம் செய்தனர்[9].
அல்–உம்மா தீவிரவாதிகள் கலவரத்தில் இறங்கியது ஏன்?: ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். 25-09-2015 அன்று, புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது.
அல்–உம்மா தீவிரவாதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்[10]: குறிப்பிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் சேர்ந்திருந்தால், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதனால், அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. கலவரத்திற்கு காரணமான –
- போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin], வேலூர் சிறைக்கும்,
- பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], மதுரை சிறைக்கும்,
- பிலால் மாலிக் [Bilal Malik], கடலூர் சிறைக்கும்,
- காஜா மொய்தீன் [Khaja Moideen], சேலம் சிறைக்கும்,
- முன்னா [Munna alias Mohammed Rafiq] கோவை சிறைக்கும்,
- கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip], திருச்சி சிறைக்கும் மாற்றி,
சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்[11]. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் 26-09-2015 அன்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 26-09-2015 அன்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார்[12]. அதாவது அவனுக்கு எந்த அளவுக்கு கொழுப்பு, ஆணவம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்[13]. ஏற்கெனவே போலீஸாரைத் தாக்கி, கலவரம் செய்ததலினால், சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிக்கு, ஏன் இவர்கள் இவ்வாறு தாஜா செய்ய வேண்டும்? சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா? இந்நிலையில் பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகமது ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
© வேதபிரகாஷ்
27-09-2015
[1] S. Vijayakumar, Al Umma cadre attack jail officials in Puzhal prison, The Hindu, September.26, 2015, Updated: September 26, 2015 13:59 IST.
[2] தினகரன், புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம், பதிவு செய்த நேரம்: 2015-09-25 21:08:54.
[3] தினமலர், புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம், செப்டம்பர்.26, 2015. 03.11.
[4] http://www.thehindu.com/news/cities/chennai/al-umma-cadre-attack-jail-officials-in-puzhal-prison/article7690955.ece
[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350503
[6] https://www.youtube.com/watch?v=rczOrMOMIBU
[7] http://www.dailythanthi.com/News/State/2015/09/26110857/6-prisoners-were-transferred-to-another-prison.vpf
[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7694509.ece
[9] Policemen’s wives protest– Furious over the attack on the warders, the family members of prison staff staged a protest near Puzhal prison demanding that security for the personnel be stepped up. The police pacified them and they dispersed only after officers assured them that the necessary measures will be taken to ensure their safety. http://www.thehindu.com/news/cities/chennai/shortage-of-personnel-hits-security-at-puzhal-prison/article7693585.ece?ref=relatedNews
[10] Viveka Narayanan, 6 Al-Umma cadre sent to different jails, The Hindu, September.27, 2015; Updated: September 27, 2015 08:06 IST
[11] http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews
[12] தினமலர், சிக்கன் பிரியாணி கேட்டு போலீஸ் பக்ருதீன் கலாட்டா, செப்டம்பர்.27, 2015.08.33.
அண்மைய பின்னூட்டங்கள்