Archive for the ‘சாகுல்’ category

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

ஆதிலா பானு கொலையை விசாரிக்க சென்னைக்கு வந்த மலேசிய போலீஸ்!

நவம்பர் 20, 2010

ஆதிலா பானு கொலையை விசாரிக்க சென்னைக்கு வந்த மலேசிய போலீஸ்!

பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்[1]: ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை விசாரணையில், ஆதிலாபானுவை கொலை செய்ததற்கான நோக்கம் குறித்து உறுதிபடுத்த முடியாத நிலையில், வழக்கில் “சந்தேகமான முக்கிய நபர்கள்” மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. [அப்படி அவர்கள் சென்றிருந்தால், நிச்சயமாக அவர்கள் யார் என்பதனை அறியலாமே]. மேலும் ஆதிலாபானுவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாததால், குற்றவாளிகளின் கொலை நோக்கத்தை உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில், மலேசியாவிற்கு தப்பி சென்ற நபர்களை வரவழைப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். “கொலை குற்றவாளிகளை ஓரிரு தினங்களில் பிடித்து, உண்மையான காரணங்களை கண்டுபிடித்துவிடுவோம்’ என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை, கைது முதலியன[2]; சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[3]. ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. யார் அந்த சுந்தரி, சுந்தரி திரும்பி வந்ததளா, போன்ற விஷயங்களைப் பற்றியும் “கப்சிப்” தான். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இப்படி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” எனும்போது, அவர்களை ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை[5].

இந்த கேள்விகளுக்கு என்ன பதில்? எனது இரண்டாவது கட்டுரையில், சில கேள்விகளை எழுப்பியிந்தேன்[6].

 

*         மலேசியாவிற்கு தப்பி ஓடிய “சந்தேகமான முக்கிய நபர்கள்” யார்?

*         அடிக்கடி போனில் பேசியுள்ள திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் யார்?

*         போலீசார் தயாரித்துள்ள மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலில் உல்லவர்கள் யார்?

*         ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்கள், என்ரால், யார் அவர்கள்?

*         அவருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய பலர் யார்?

*         சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பிய  குறிப்பிட்ட நபர் யார்?

*         வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் யார் பெயரில் உள்ளன?

*         அவற்றை யார் வாடகைக்கு எடுத்துள்ளனர்?

*         அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் என்றால், யார்-யார் கடன் வாங்கியுள்ளனர்?

*         விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார் – அந்த “தொடர்புள்ள சிலர்” யார்?

*          எதிர்ப்பு தெரிவித்தனர் சாத்தான்குளத்தினர் யார்?

*         இப்பொழுது ஏன் அவர்கள் மௌனமாக இருக்கிறார்ள்?

*         மேற்குறிப்பிடப்பட்ட – ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்கள்”, “சிலர்” “பலர்”,…………………………..அவர்களில் இவர்களும் இருக்கிறார்களா?

ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம்[7]: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த ராமநாதபுரம் பெண் ஆதிலாபானு கொலை வழக்கில், அவர் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதாலும், குற்றாவாளிகள் – சாகுல், முகமது ஹர்ஷத், மணிகண்டன் முதலியோர் போலி பெயர்களில் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாலும், இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய மற்றும் மேற்கொண்டு விவரங்களை அறிய அந்நாட்டு போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்[8]. ராமநாதபுரம் மாவட்டம் குப்பன்வலசையை சேர்ந்த முத்துச்சாமியை, சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு (24) காதலித்து திருமணம் செய்தார். மதம் மாறிய முத்துச்சாமி தனது பெயரை அகமது என மாற்றிக்கொண்டார். முத்துசாமி ஆதிலா பானுவை காதலித்ததற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அகமது ஆனவுடன் முகமது மலர்ந்து அமையாகினர்[9]. வேலைக்காக மலேசியா சென்ற முத்துச்சாமி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார். தாய் ஹம்சத் நிஷாவை பார்ப்பதற்காக ஆதிலாபானு அடிக்கடி இந்தியா வந்து சென்றார். ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள வீட்டிலிருந்த இவர், கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான நிலையில், மதுரை வாடிப்பட்டி அருகே கால்வாயில் உடல்கள் கிடந்தது.

மலேசியப் பத்திரிக்கைகள் கொடுக்கும் விவரங்கள்[10]: இங்கு தமிழகத்தில் நாளிதழ்கள் ஒரளவிற்கே செய்திகளைக்கொடுக்கும் நிலையில், மலேசிய நாளிதழ்கள் சிறிது அதிகமாகவே விவரங்களை அளிக்கின்றன. மொத்தம் 20க்கும் மேலானவர்கள், இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். அதில் மூவர் மலேசியாவிற்கே தப்பித்து வந்துவிட்டனர். நவம்பர் 12ம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அவர்கள் சென்றுள்ளனர். அம்மூவரில் ஒருவன், ஏற்கெனெவே மலேசிய பிரஜையாக இருக்கிறான்[11], ஏனெனில் அவனிடம் மலேசிய நாட்டு அடையாள அட்டை இருந்தது. சாத்தான்குளத்து பஞ்சாயத்தினர், இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் மிரட்டிவந்ததாக தெரிகிறது[12]. இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள ரூ.2.5 லட்சம் பணம் கேட்டதாக போலீஸாருக்குத் தெரிகிறது[13]. ஆனால், அக்குடும்பம் அப்பணத்தைக் கொடுக்க மறுத்துள்ளது[14]. மேலும் போலீஸ் விசாரணையில் தெரிந்ததாவது, முத்துசாமி என்கின்ற அகமது தன்னுடைய மனைவி-மக்களுடன் அங்கு வாழ வேண்டுமானால், அப்பணத்தைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று மிரட்டியதாகத் தெரிகிறது[15]. செவ்வாய்கிழமை (16-11-2010) அன்று பி.ஆர், லட்சுமணன், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் பெர்ணாமாவிற்குச் சொன்னதாவது[16], “பணத்திற்காக கொலைசெய்யும் கொலையாளிகள் மூலம் தான் இக்கொலை நடத்தப்பட்டுள்ளாத நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர்கள் உபயோகப்படுத்திய ஸ்கார்பியோ வண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளோம்”. வெளிநாட்டுப் பத்திரிக்கைகளுக்கு, நம்மாட்கள் அதிகமாகவே விவரங்களைக் கொடுப்பார்கள் போலும்!

ஆதிலாவை கொலைசெய்ய ஏன் தீர்மானிக்க வேண்டும்? இது தொடர்பாக இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அவர் மூலம் கொலையாளிகள் குறித்து தகவல் கிடைத்தது. சாத்தான்குளத்தை சேர்ந்தவர்கள் தாம் இதில் சமந்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஆரம்பத்திலேயே ஆதிலா முத்துசாமியை காதலித்தது பிடிக்கவில்லை. கண்டித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர். அதனால்தான், முஸ்லீமாக மாறி, முத்துசாமி ஆதிலாவைத் திருமணம் செய்து கொண்டான். மலேசியாவிலேயே வேலை கிடைத்ததும், அங்கேயே தங்கிவிடலாம் என்றும் நினைத்தான். ஆனால், ஆதிலா அடிக்கடி தாயாரைப்பார்க்கிறேன் என்று ராமநாதபுரத்திற்கு சென்றுவந்தாள். அப்பொழுதுதான் சாத்தான்குளத்தினருடன் எதோ தொடர்பு அல்லது அவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட நபர்கள் இவளை குழந்தைகளுடன் தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளாதாகத் தெரிகிறது.

சாத்தன்குளத்து சாகுல் யார்?குறிப்பாக சாகுல் என்பவர் இந்த சம்பவத்தில் தலைமையேற்றதும், இவருக்கு உதவியாக ஜெயக்குமாரின் உறவினர் முனியசாமி, முகமது ஹர்ஷத், மணிகண்டன் முதலியோர் சேர்ந்து கொண்டனர்[17]. அவர்களது எவ்வாறு ஈடுபட்டனர் என்று தெரியவந்தது.  ஆனால், இவர்கள் யார், எப்படி ஆதிலாவுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று செய்தித்தாள் விளக்கவில்லை. குற்றவாளிகள் போலி பெயரில் மலேசியா தப்பிச்சென்றதும் உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் வாடிப்பட்டி, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் களமிறங்கினர். கொலை செய்யப்பட்ட மூவரும் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், மலேசிய போலீசார் சாகுலை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர். முனியசாமி சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

வேதபிரகாஷ்

© 20-11-2010

 


[1] தினமலர், பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம், நவம்பர் 15, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=126450

[2] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2), https://islamindia.wordpress.com/2010/11/15/1231-converted-hindu-deepening-mystery/

[4] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[5] ராமநாதபுரத்தின்  “பல முக்கிய நபர்கள்” என்பதனால் அவர்களை கண்ட்கொள்ளாமல் இருக்கபோகிறாற்களா? இது முந்தைய கற்பழிப்பு, நிர்வாண வீடியோ வழக்குப் போலத்தான் உள்ளது.

[6] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2), https://islamindia.wordpress.com/2010/11/15/1231-converted-hindu-deepening-mystery/

[7] தினமலர், ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம், நவம்பர் 19, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129702

[8] சென்ற மாதம் கூட, மலேசிய போலீஸ் மைக்கேல் சூசை என்பவனது கைரேககள் பதிவு செய்ய வந்தனர்.

http://www.thestar.com.my/news/story.asp?sec=nation&file=/2010/9/1/nation/20100901182614

[9] வேதபிரகாஷ், அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?, https://islamindia.wordpress.com/2010/11/12/1227-illicit-relation-murder-converted-hindu-betrayed/

[10] Three Indian nationals, who were part of 20 people quizzed in connection with the murder of a Malaysian woman and her two children last week, are believed to have slipped into Malaysia. Tamil Nadu police believe the trio, in their 30s, and from here, had left for Kuala Lumpur on Nov 12, via a Jet Airways flight. One of them is believed to be in possession of a Malaysian identity card and had stayed in Malaysia previously.

[12] According to police investigations, a gang had earlier demanded 250,000 Indian rupees (about RM17,000) from the victim’s family which refused to pay the money. Now, the police are piecing sketchy clues which had given a new twist to the murders. According to investigators, Adhila was ostracised by the village ‘panchayat’ (committee) for several years after she had married a man of a different religion. Thus, the money (250,000 Indian rupees) was ostensibly to settle the dispute so that she could return to her native village with her children.

[16] “We suspect these (killings) are the work of hired killers and have seized a Scorpio (four-wheel drive vehicle) which we suspect was used in the events leading to the murders,” Vadipatti police inspector P. R. Lakshmanan told Bernama on Tuesday.

http://www.dailymail.com.my/v2/index.php?option=com_content&view=article&id=424:trio-in-murder-probe-flee-to-malaysia&catid=45:crimes&Itemid=129

[17] தினமலர், ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம், நவம்பர் 19, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129702