Archive for the ‘சவுதி அரேபியா’ category
நவம்பர் 5, 2017
பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு, மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (1)!

எஸ்.எப்.ஐ.யின் தடைக்குப் பிறகு உருவாகிய பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா: பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும். ஜூலை 2010ல் டி. ஜோசப் என்ற ஒரு விரிவுரையாளரின் கையை இந்த PFI இயக்கத்தைச் சேர்ந்த ஆள் வெட்டியபோது[1] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம். எர்ணாகுளத்தில், நியூமேன் கல்கூரியின் விரிவுரையாளர், பரீட்சை கேள்விதாளில், மொஹம்மதுவைப் பற்றிய ஒரு வினாகுறித்து, அவரின் கை வெட்டப்பட்டது. ஒரு முஸ்லிம், கிருத்துவனின் கையை வெட்டினான் என்ற நிலையில், அது செக்யூலரிஸ போதையில் அமுக்கி வாசிக்கப் பட்டு, அக்குரூர செயல் மறந்து விட்டது எனலாம். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[2]. தடை செய்யப்படும் போது, வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுவதால், இவ்வாறு வேறு பெயர்களில் இயக்கங்களை ஆரம்பித்து, பதிவு செய்து கொண்டு, வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து வேலைகளை ஆரம்பித்து விடுகின்றனர். இவ்வியக்கத்தினரின் இடங்களை சோதனையிடும் போது, தலிபான் போன்ற இயக்கத்தினரின் தீவிரவாத இயக்கத்தினரின் நூல்கள், செயல்முறை கையேடுகள், பயிற்சிப் புத்தகங்கள், முதலியவை சிக்குவதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன[3]. அதற்கேற்றபடி, அவர்களின் வன்முறை காரியங்களும் இருந்து வருகின்றன. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.

தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடும் பி.எப்.ஐ–காரர்கள்: ஆளும் கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றுவருவதால், அரசியல் ஆதரவும் அதிகமாகவே இருந்து வருகிறது. கேரளாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாக உள்ளதாலும், அவர்கள் பல அரசு துறைகளில் அதிகாரத்தில் உள்ளதாலும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறையாளர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அத்தகைய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுதான், தமிழகத்திலும் காணப்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[4], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[5], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[6]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன.

பி.எப்.ஐ. உறுப்பினர்கள், ஆறு பேர் கைது: கேரளாவில், லவ் ஜிஹாத் பிரச்சினையே, முஸ்லிம்கள், கிருத்துவ பெண்களை வலைவீசி மதம் மாற்றி, ஐசிஸ் வேலை நிமித்தமாக சிரியாவிற்கு கடத்தி சென்றபோது தான், முற்றியது. இன்று, நீதிமன்றத்திலேயே, விசாரிக்கப் பட்டு வரும் வழக்காகி விட்டது. கேரளாவிலிருந்து, தொடர்ந்து ஐசிஸ்க்கு ஆள் சேர்க்கப் படுவது, சிரியாவிற்குச் சென்று போராடுவது, இறந்தபோது, வாட்ஸ்-அப்பில் செய்தி வருவது என்பது வழக்காமாகி விட்டது. அந்நிலையில் தான், இப்பொழுதைய கைது செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. ஐசிஸ் தொடர்புள்ளாதாக, மிதிலாஷ் முன்டேரி, ரஸாக் மற்றும் ரஷீத் முன்டேரி என்ற மூவரும் பல வாரங்களாகக் [மூன்று மாதங்களாக] கண்காணிக்கப் பட்டு, புதன் கிழமை, 25-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[7]. சிரியா எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது, துருக்கி போலீஸாரல் பிடிபட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப் பட்டனர்[8]. கண்ணூர் டி.எஸ்.பி, பி.பி.சதானந்தம் இதனை உறுதி செய்துள்ளார். இருப்பினும், வழக்கம் போல, கண்ணூர் பி.எப்.ஐ தலைவர், நௌபா அவர்கள் தங்களது இயக்கத்தில் இல்லை என்று மறுத்தார். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார். ஆனால், அவர்கள் மூன்று மாதங்கள், இஸ்தான்புல்லில் பயிற்சி பெற்றுள்ளதை எடுத்துக் காட்டுகின்றனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸஜீர் மங்கலசேரி அப்துல்லா ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவனும் பி.எப்.ஐ ஆள் தான். தவிர பி.எப்.ஐ. உறுப்பினர்களான ஸஜில், ரிஸால் மற்றும் ஷமீர் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். மன்ஸித் மற்றும் சஃபான், கண்ணூரில் ஒளிந்திருந்த போது, என்.ஐ.ஏவால் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் துருக்கி முதலிய அரசு விவரங்கள் மூலம், இவை உறுதி செய்யப்படுகின்றன. மேலும், இறந்தவுடன், வாட்ஸ்-அப்பில், பெற்றோர்களுக்கு தங்கள் மகன் கொல்லப் பட்ட செய்தி வருகிறது என்பதும் அறிந்த விசயமாகி விட்டது.

ஐசிஸிக்கு ஆள் சேர்க்கும் தலிபான் ஹம்ஸா: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[9]. உள்ளூரில் அத்தகைய பெயர்களில் பிரபலமாகியுள்ளான். உள்ளூர் முகமதியர்களுக்கு அவன், ஐசிஸிக்கு ஆள்-சேர்ப்பு செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து தான் இருக்கிறது. அல் அன்ஸார் என்ற இடத்தில், பஹ்ரைனில் வேலை பார்த்த இவனுக்கு வளைகுடா நாடுகளில் தொடர்புகள் இருக்கின்றன. அல் அன்ஸார் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் இடமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த அல் அன்ஸார் வழியையும் கேரள ஜிஹாதிகள் ஐசிஸில் சேர உபயோகப் படுத்தி வந்துள்ளனர். மகன்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும், பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது அவ்வாறு வற்புருத்தப் படுகிறார்கள் அல்லது அத்தகைய நிர்பந்தம் எப்படி, எவ்வாறு, ஏன், எவர்களால் ஏற்படுகிறது என்று ஆராய வேண்டியுள்ளது.

மேலும் கைதுகள், பி.எப்.ஐயின் தொடர்புகள் ஊர்ஜிதம் ஆதல்: பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. ஐசிஸ் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியை, ராஜ்ஜியத்தை முகமதியர் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிரியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழித்து மண்ணோடு மண்ணாக்கிய நிலையைத் தான் உண்டாக்கியிருக்கிறார்கள். பெரிய-பெரிய கட்டிடங்கள்:, குடியிருப்புகள் அனைத்தையும், உடைத்து நாசமாக்கி தூள்-தூளாக்கியுள்ளார்கள். இனி அந்நகரங்களை, ஊர்களை உயிர்ப்பிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. இதனை, அவர்கள் சாதனை என்றா சொல்லிக் கொள்ள முடியும்?
© வேதபிரகாஷ்
04-11-2017

[1] The PFI had come on the national radar after its activists chopped off the palm of a lecturer in Ernakulum district’s Newman College on July 4,2010, for alleged blasphemy in preparation of examination papers.
https://islamindia.wordpress.com/2014/02/19/popular-front-of-india-cadre-clash-with-police-leading-to-riot-like-condition/
[2] According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.
[3] போலீசார், நேற்று முன்தினம் (11-07-2010), இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும், தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார். முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும் கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159
[4] http://news.outlookindia.com/items.aspx?artid=769976
[5] http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html
[6] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/
[7] TheNewsMinute, 3 PFI members booked for alleged ISIS links: Govt case against group grows stronger, Thursday, October, 2017. 12:54.IST
[8] http://www.thenewsminute.com/article/3-pfi-members-booked-alleged-isis-links-govt-case-against-group-grows-stronger-70586
[9] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.
https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இரட்டை வேடம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, எஸ்.டி.பி.ஐ, எஸ்டிபிஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், கண்ணூர், காதல் ஜிஹாத், கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரளா, சத்திய சரணி, சத்திய சரனி, சலாபிசம், சலாபிஸம், சவுதி, சவுதி அரேபியா, ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜைனபா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, ஹம்ஸா, ஹம்ஸா தலிபான்
Tags: இஸ்லாம், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், கண்ணூர், காதல், சத்திய சரணி, சத்திய சரனி, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தலிபான் ஹம்ஸா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, ஹம்ஸா
Comments: Be the first to comment
பிப்ரவரி 26, 2017
ஐ.எஸ்.சில் ஆள்–சேர்ப்பதற்கான சதி–திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

சென்னையில் ஐஎஸ்.தீவிரவாதிகளின் திட்டங்கள்: சிரியா மற்றும் ஈரானை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக நாடுகள் பல வற்றில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உலக நாடுகளில் உள்ள இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உளவுத் துறை, மாநில போலீசாருடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2016 ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன், ஜமீல் முகமது என்பவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிர வாத இயக்கும் காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது[1]. அதாவது, ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னையிலேயே இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு, ஜல்லிக்க்கட்டு, சசிகலா விவகாரங்களில் இவை மறைக்கப்படுகின்றன.

மைலாப்பூரில் வாழ்ந்த ஐஎஸ் தீவிரவாதி: இக்பால் என்ற வாலிபருடன் ஜமீல் கான் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது[2]. இக்பால் ஐ.எஸ்.இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து நிதி திரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[3]. அந்தவகையில் இக்பால், ஜமீல் முகமதுவிடம் ரூ.65 ஆயிரம் பணம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[4]. இதையடுத்து ராஜஸ்தான் போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் இக்பாலை தேடி வந்தனர். இந்தநிலையில் இக்பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 06-02-2017 அன்று தங்க கடத்தலில் சிக்கினார். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சென்னையில் இக்பாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராஜஸ்தான் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். பின்னர் புழல் சிறையில் இருந்த இக்பாலை ராஜஸ்தான் மாநில நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்று முறைப்படி 13-02-2017 அன்று கைது செய்தனர்.

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010
ஐ.எஸ்.தீவிரவாதியான ஜமீல் முகமதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் இக்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இக்பால் நீண்ட நாட்களாகவே ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக சென்னை மக்கள், ஐஎஸ் எரிமலை மீது உட்கார்ந் திருக்கின்றனர், இந்த வெறியர்கள், என்றைக்கு குண்டு வைப்பர்களோ, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை.

சிரியாவுக்கு செல்ல முடியாது மொஹம்மது இக்பால்: முகமது இக்பாலிடம் 22-02-2017 அன்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது[5]: “முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை செலுத்தியுள்ளார்”[6]. இவ்வளவவுதான், தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. ஜல்லிக் கட்டு விவகாரத்தில், முஸ்லிம்கள் கலாட்டா செய்தது, இத்தகைய விவகாரங்களை மறைக்கத்தானா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஓருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுப்பதை விட, அவனது கூட்டாளிகள் யார், எப்பொழுது கைது செய்யப் பட்டார்கள் போன்ற விவகாரங்களைக் கொடுக்கலாம். என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டவர்களின் விவகாரங்கள், அவர்கள் செய்த குற்றம் முதலியவற்றை தனது இணைதளத்தில், தினமும் வெளியிட்டு வருகிறது.
© வேதபிரகாஷ்
26-02-2017

[1] The Hindu, Mylapore resident has IS links, Chennai, February 22, 2017 01:18 IST; Updated: February 22, 2017 01:18 IST.
[2] A resident of Mylapore, who was arrested by intelligence agencies in Rajasthan last month January 2017, has revealed during interrogation that he had links with the Islamic State. A senior officer of the city police said Mohammed Iqbal (32), a resident of Bazaar Street, was arrested based on a tip-off obtained from the Rajasthan Anti-Terrorist Squad.
http://www.thehindu.com/news/cities/chennai/mylapore-resident-has-is-links/article17343462.ece
[3] சென்னை.ஆன்.லைன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய சென்னை வாலிபர் கைது, February 21, 2017, Chennai.
[4] http://www.chennaionline.com/article/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
[5] தினகரன், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை, 2017-02-23@ 00:04:40
[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=282040
பிரிவுகள்: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அபு பகர் அல்-பாக்தாதி, அமைதி, அல்லா, ஆயுதப்படை, இக்பால், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இரண்டாம்மனைவி, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கன்னட ஜிஹாதி, கிக் மெஸஞ்சர், கிலாபத், கிலாபத் இயக்கம், கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், சவுதி அரேபியா, சிரியா, செல்போன், சைனா மொபைல், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, டுனிசியா, டெலிகிராம், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, நிதி, நிதியுதவி, பர்மா பஜார், மண்ணடி, முகமது இக்பால், முஹமது இக்பால், மொஹம்மது இக்பால்
Tags: இக்பால், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், கிக் மெஸஞ்சர், சீனப் பொருள், சைனா மொபைல், நிதி, நிதியுதவி, பர்மா பஜார், மண்ணடி, முகமது இக்பால், முஹமது இக்பால், மைலாப்பூர், மொஹம்மது இக்பால்
Comments: Be the first to comment
நவம்பர் 20, 2016
தேசிய புலனாய்வு துறை படிப்படியாக ஆதாரங்களைக் கொண்டு ஜாகிர் நாயக்கின் நிறுவனங்களை சோதித்தது, ஆவணங்களைக் கைப்பற்றியது மற்றும் மீது வழக்கு தொடுத்தது.

ஒரே நேரத்தில் 12 இடங்களில் நடந்த சோதனைகள்: இதைத்தொடர்ந்து மும்பையில் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான பைகுல்லா, டோங்கிரி, பைதோனி உட்பட [Byculla, the IRF’s offices in Dongri and Pydhonie] 10க்கும் மேற்பட்ட இடங்களில் சனிக்கிழமை 19-11-2016 அன்று தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்[1]. தவிர கேரளாவில் உள்ள சில அமைப்புகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் குற்றத்தை நிரூபிக்க உதவும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது[2]. முன்னதாக ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் சிலரை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்[3]. இதனால் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜாகிர் நாயக் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது[4]. ஐ.ஆர்.எப், டாக்யார்ட் ரோடில் நடத்தி வரும் “அனைத்துலக இஸ்லாமிய பள்ள்ளி”யை [Islamic International School (IIS)] அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது[5]. மஹாராஷ்ட்ர மாநில்ல கல்வி மந்திரி, சட்டப்படி, இதற்கானவை செய்யப்படும் எட்ன்று அறிவித்தார்[6].

19-11-2016 அன்று வெளியிட்ட என்.ஐ.ஏ.வின் அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் கீழுள்ள 3 (3) பிரிவின் கீழ் இந்திய அரசு ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷன், தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. அப்துல் கரீம் நாயக் என்பவரின் மகனான, ஜாகிர் நாயக் மேற்குறிப்பிடப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு, முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் தீவிரவாதிகளைத் தூண்டி விட்டு, இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களிடம் வெறுப்பு, துவேசம் தூண்டும் வகையில், பல இடங்களில், பேசியும், சொற்பொழிவாற்றியும், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் படி செய்து வருவதாக ஆதாரப் பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய செயல்கள் இந்திய அரசுக்கு பிடிக்காமல் இருப்பதுடன், பொது அமைதிக்கு ஊறுவிளைவித்து, பலவித நம்பிக்கையாளர்களிடையே வெறுப்பை வளர்க்கும் விதாமக இருப்பதாக கருதுகிறது[7].

குற்றத்தின் தன்மை மற்றும் அதன் உலகளவில் உண்டாக்கும் விளைவுகளை கருதி இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது: குற்றத்தின் தன்மை மற்றும் அதன் உலகளவில் உண்டாக்கும் விளைவுகளை கருதி, இந்திய அரசு அதனால் தான், உள்துறி அமைச்சகத்தின் ஆணை எண். Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 மூலம் ஐ.ஆர்.எப். பவுண்டேஷனை தடை செய்தது. அதன்படி தேசிய புலானாய்வு ஏஜென்சியை, இவ்வழக்கை எடுத்துக் கொண்டு நடத்துமாறு ஆணையிட்டது. அதன்படியே 18/11/2016 அன்று, FIR No. 05/2016 dated 18/11/2016 பதிவு செய்யப்பட்டு, பிரிவுகள் 153A of IPC மற்றும் பிரிவுகள் 10, 13 and 18 சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் வேலைகளை தடுக்கும் சட்டம் 1967ன் படி மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது[8].

சோதனைகளில் தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இந்த சோதனைகளில் பங்கு கொண்டனர்: தேசிய புலானாய்வு ஏஜென்சி அதன்படியே இஸ்லாமிக் ரெசெர்ச் பவுண்டேசனின் 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையிட்டு, சட்டமீறல்களை எடுத்துக் காட்டும் ஆவணங்கள், கோப்புகள், மின்னணு தகவல் சேமிக்கும் கருவிகள், ஜாகிர் நாயக் மற்றும் ஐ.ஆர்.எப்பின் சொத்துகள் முதலியவற்றைப் பற்றிய விவரங்கள் முதலியனவும் கைப்பற்றப்பட்டன. தகவல் தொழிற்நுட்ப வல்லுனர்களும் இந்த சோதனைகளில் பங்கு கொண்டனர். சோதனை நடந்து கொண்டிருக்கின்றன[9].

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால், ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வரவேண்டும் அல்லது கொண்டுவரப்பட வேண்டும்: ஜாகிர் நாயக் இந்த நடவடிக்கைகளை அறிந்திருப்பார். இனி, ஒன்று சட்டப்படி அணுக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தியாவும், ஜாகிர் நாயக் தங்கியுள்ள நாட்டை அறிந்ததும், முறைப்படி அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த, உரியன செய்யப்படும். அவ்வாறு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டால், கைது செய்யப் பட்டு, நடவடிக்கைகள் தொடரப்படும். இந்திய சட்டங்களை மீறியுள்ள நிலையில், ஜாகிர் நாயக் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டால் தான், சட்டப்படி நடவடிக்கை எடுக்க் முடியும். இல்லையென்றால், தாவூத் இப்ராஹிம், ஹாவிஸ் சையது வழக்குகள் மாதிரி ஆகி விடும். ஏனெனில், அவர்கள் அயல்நாடுகளில் இருக்கும் வரை, இந்தியா ஒன்று செய்ய முடியாது. ஒத்துழைக்கிறேன் என்று சொன்னதால், முறை அவ்வாறு இருக்கும், இல்லையென்றால், இந்திய அரசாங்கம் வேறு வழிகளை ஆராய வேண்டியிருக்கும்.

இந்தியா பொருளாதார வீழ்ச்சி, நிதிப்பிரச்சினைகள் முதலிய நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது: ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா என்று எல்லா நாடுகளும், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. அமெரிக்காவில், தலைமை மாறியுள்ளதால், உலக நாடுகள், எந்த வழியிலும், தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப் படக் கூடாது என்று கண்காணித்து வருகிறது. அந்நிலையில், இந்தியா இன்னும் மென்மையான தாக்குதலுக்கு உட்பட ஏதுவாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். அதனால், இந்தியா மூலமாகவும் தீவிரவாதிகள் செயல்படக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றன. ஆனால், அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து வரும் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகளாக மாறி குறிகளைத் தாக்கி வருகிறார்கள் என்று தொடர்ந்து அறியப்பட்டால், தீவிரவாதம் வளர்க்கும் நாடுகளில் இந்தியாவும் சேர்க்கப் படும். அந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவுக்கு பாதிக்கப் படும். அத்தகைய நிலை உண்டாக்க வேண்டும் என்றுதான், தீவிரவாத அமைப்புகள் கங்கனம் கட்டிக் கொண்டு பலவழிகளில் செயல் பட்டு வருகின்றன. ஆகவே, இந்தியா, இத்தகைய இக்கட்டான நிலைகளிலிருந்து மீள வேண்டுமானால், தீவிரவாதத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டியுள்ளது.
© வேதபிரகாஷ்
20-11-2016

[1] The Hindu, Zakir Naik faces NIA heat, premises searched, Novemver 20, 2016; Updated: November 20, 2016 02:22 IST
[2] http://www.thehindu.com/news/national/nia-books-zakir-naik-for-terror-searches-irf-premises/article9365570.ece
[3] தினமலர், ஜாகிர் நாயக் மீதுஎன்.ஐ.ஏ., வழக்கு, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 19,2016, 22:20 AM IST;
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1652459
[5] Times of India, Maharashtra to take over Zakir Naik’s school, Prafulla Marpakwar & Mohammed Wajihuddin| TNN | Updated: Nov 17, 2016, 08.44 AM IST
[6] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Maharashtra-to-soon-take-over-Zakir-Naiks-school/articleshow/55467137.cms
[7] The Government of India, Ministry of Home Affairs vide its Order F. No. 11034/17/2016-IS-VI & S.O.3460 (E) dated 17/11/2016 has declared the Islamic Research Foundation (IRF) as an unlawful association under sub-section (3) of Section 3 of the Unlawful Activities (Prevention) Act, 1967. Credible information has revealed that Dr. Zakir Abdul Karim Naik, S/o Abdul Karim Naik, the President of IRF and his associates have been promoting enmity and hatred between different religious groups in India through his public speeches and lectures on various platforms, and inciting Muslim youths and terrorists in India and abroad to commit unlawful activities and terrorist acts. These activities of Dr. Zakir Abdul Karim Naik and his associates are causing disaffection against the Govt. and are prejudicial to the maintenance of harmony among various communities and likely to disturb the public tranquillity.
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/356_1_PressRelease_19_11_2016_new.pdf
[8] 2. Considering the gravity of the offence and its international ramification, MHA vide its order No. 11011/34/2016-IS-IV dated 18/11/2016 directed the National Investigation Agency, to register a suo motu case and investigate the matter. Accordingly, on 18/11/2016, a case vide FIR No. 05/2016 dated 18/11/2016 under section 153A of IPC and sections 10, 13 and 18 of Unlawful Activities (Prevention) Act, 1967 has been registered at Police Station, NIA, Mumbai Branch.
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/356_1_PressRelease_19_11_2016_new.pdf
[9] 3. Subsequently, on 19/11/2016, 09 NIA teams conducted raid and search operation at 12 premises connected to Islamic Research Foundation (IRF) in Mumbai simultaneously and seized incriminating documents / files, electronic storage devices and about Rs.12 lakh in cash. The recovered documents relate to various activities including financial transactions and property details of Zakir Naik and IRF. To assist the search teams, a team of IT experts has been sent from NIA HQ Delhi to Mumbai. The searches are still going-on and are likely to continue till late in the night.
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/356_1_PressRelease_19_11_2016_new.pdf
பிரிவுகள்: குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சவுதி அரேபியா, சவூதி அரேபியா, சேதம், ஜகிர், ஜாகிர் நாயக், ஜாகீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, தற்கொலை, தற்கொலை குண்டு வெடிப்பு, Uncategorized
Tags: அமெரிக்கா, இஸ்லாமயமாக்கல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், ஜாகிர், ஜாகிர் நாயக், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், மதம்
Comments: Be the first to comment
நவம்பர் 16, 2016
ஜாகிர் நாயக்கின் “இஸ்லாமிய ஆராய்ச்சி இயக்கம்” சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது!
பங்களாதேச தீவிரவாத கொலைகள் மூலம் ஜாகிர் நாயக்கின் ஜிஹாதி தூண்டுதல் பிரச்சாரம் வெளிப்பட்டது: ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி 2016 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார்[1]. இதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்[2]. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.
உள்நாட்டு ஜிஹாதிகளை ஊக்குவித்து தீவிரவாதத்தை வளர்க்கிறது என்பதும் தெரிய வந்தது: மும்பை, ஹைதராபாத், கேரளா, சென்னை / தமிழகம், போன்ற இடங்களில் கைதான முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத – ஐசிஸ் தொடர்புகளும் ஜாகிர் நாயக்கின் தீவிரவாத ஊக்குதல் எடுத்துக் காட்டியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறேன் என்ற போர்வையில், தீவிரவாத-பயங்கரவாதத்தையே நாயக் தூண்டி விட்டுள்ளது உறுதியானது. இதனால், ஜாகீர் நாயக் “இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்” (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] கல்வி அறக்கட்டளை, ‘பீஸ் டிவி’ [Peace TV] ஆகியவற்றை நிறுவி, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது[3].
மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[4]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[5]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை [Foreign Contribution (Regulation) Act (FCRA)] மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[6]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[7]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[8]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப்படுத்தப்படுவதாக உறுதியானது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து மத்திய அரசு தடை செய்ய தீர்மானித்தது: இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு [Unlawful Activities Prevention Act (UAPA)] கீழ் ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது[9]. மேலே கூறப்பட்டுள்ள விவகாரங்களை முறைப்படி ஆய்ந்து, ஆவணங்கள் முதலியவற்றை சர்பார்த்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்து, அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-11-2016 அன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[10]. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக் மேல் முறையீடு செய்யலாம் என்று “தி இந்து” ஆலோசனை செய்தி வெளியிட்டுள்ளது: ஐ.ஆர்.எப்பை தடை செய்ய பாராளுமன்ற அனுமதி தேவைப்படுகிறது, அதற்குப் பிறகு அரசு கெஜட்டில் முறைப்படி “தடை செய்யப்பட்ட இயக்கம்” என்று அறிவிக்கப் படும்[11]. இதை எதிர்த்து டிரிப்யூனல் [Tribunal] மூலம் மேல்முறையீடு செய்யலாம்[12] என்றெல்லாம் “தி இந்து” விவரிக்கிறது. அதாவது, நடந்துள்ள தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், உயிரிழந்த அப்பாவி மக்கள், அவர்களின் மனைவி-மக்கள், உறவினர்கள் முதலியோரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப் படாமல், ஜாகிர் நாயக் சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லும் ரீதியில் செய்திகளை வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. அரசுக்கு இதெல்லாம் தெரியாமலா நடவடிக்கை எடுத்துள்ளது? இத்தகைய செய்திகளும் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக உள்ளது.
ஊடகங்கள் தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்று ஏல் ஆலோசனை சொல்லக் கூடாது?: அதற்கு பதிலாக, சட்டப்படி, நடவடிக்கை எப்படி எடுக்கப்பட வேண்டும், இத்தகைய தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆல்லோசனை கூறி, செய்திகளை வெளியிடலாமே? அவ்வாறு வெளியிட நிருபர்களுக்கு தெரியவில்லையா அல்லது “தி இந்து” அவ்வாறெல்லாம், நாட்டுக்கு, இளைஞர்களுக்கு நல்லது செய்யும் விசயங்களை வெளியிட வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளதா? கனடா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும், மேல்முறையீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே? அந்த நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களையெல்லாம் விட, “தி இந்து” நிருபர்கள் பெரிய சட்ட ஆலோசகர்கள் ஆகி விட்டார்கள் போலும். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வதை விடுத்து, இவ்வாறு சித்தாந்த ரீதியில் வேலை செய்வது தான். “தி இந்துவின்” முகமூடியை அவ்வப்போது, திறந்து காட்ட வைக்கிறது.
© வேதபிரகாஷ்
16-11-2016

[1] தினமணி, ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அமைச்சரவை முடிவு, By DIN | Published on : 16th November 2016 02:44 AM
[2]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை !, By: Karthikeyan, Updated: Wednesday, November 16, 2016, 0:27 [IST]
[4] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.
http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[5] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST
[6] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html
[7] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html
[8] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[9] மாலைமலர், மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை, பதிவு: நவம்பர் 16, 2016 03:55
[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/16035525/1051018/Government-bans-controversial-preacher-Zakir-Naiks.vpf
[11] The Hindu, Centre bans Zakir Naik’s NGO, calls it ‘unlawful’, New Delih, November 15, 2016
[12] Banning any organisation under the Unlawful Activities Prevention Act (UAPA) requires an approval by the Cabinet, and a Gazette notification will follow soon. A Tribunal will be set up where Dr. Naik could challenge the ban on his NGO.
http://www.thehindu.com/news/national/zakir-naiks-ngo-banned-for-5-years/article9349724.ece
பிரிவுகள்: ஃபத்வா, அமைதி, அமைதி டிவி, அமைதி தூதுவர், அரேபியா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இறைதூதர், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், குண்டு தயாரிப்பு, குண்டுவெடிப்பு, சட்டமீறல், சட்டம், சவுதி, சவுதி அரேபியா, ஜாகீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, Uncategorized
Tags: அமைதி, அமைதி டிவி, இஸ்லாம், சென்னை, ஜாகிர், ஜாகிர் நாயக், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாத், தீய சக்திகள், தீவிரவாதம், தீவிரவாதி, பங்களாதேசம், மதம், மும்பை, ரஹீல் செயிக், ரோஹன் இம்தியாஸ், ஹாவிஸ் சயீது, ஹாவிஸ் சையீத்
Comments: 1 பின்னூட்டம்
ஒக்ரோபர் 29, 2016
ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

காபாவைக் காப்பவர்கள் யார்?: மெக்காவில் உள்ள காபா, மெதினா முதலியவற்றை இன்று சவுதி அரேபியா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருவதால், இஸ்லாத்தையே தான்தான் காக்கிறது என்பது போல காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இரானுக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணத்தின் போதும், இந்த வேறுபாடு, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். இரான் முஸ்லிம்கள் பெரும்பாலோர் ஷியா என்பதினால், ஷியா-எதிர்ப்பு மூலம் வெளிப்படும், ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தினர், இயக்கங்கள் முதலியற்றில் அதிகமாக இருப்பது சுன்னிகள் தாம். இதனால் தான், ஐசில் ஜிஹாதிகள் கூட ஷியாக்களைத் தாக்கிக் கொன்று வருகின்றனர். ஒருபக்கம் சுன்னி-ஷியா வித்தியாசம் இருந்தாலும், இவற்றுடன், போராளிகள்-தீவிரவாதிகள் சண்டையும், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு முதலியனவும் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அமெரிக்கா இரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஷாவின் ஆட்சி தூக்கியெரியப் பட்டப் பிறகு, அமெரிக்க விரோத கொள்கை பின்பற்ரப்பட்டு வருகின்றது.

27-10-2016 வியாழக்கிழமை அன்று ஹௌத் போராளிகள் தாக்கினரா?: ஏவுகணையை வீசி தாக்குதல் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை [Houthi rebels] ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு 2015 மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன[1]. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு தெற்கில் உள்ள அல்-தைப் [al-Taif] குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து 27-10-2016 வியாழக்கிழமை அன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்[2] என்று செய்திகள் வந்துள்ளன. இந்த ஏவுகணைகள் சி-802 என்ற [Chinese C-802] சைனாவின் கப்பல் தடுப்பு ஏவுகணையின் சிறந்த வகையைச் சேர்ந்ததாகும். சைனாவின் ஏவுகணைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

ஹௌத் என்ற போராளிகள் யார்?: ஹௌத் என்ற போராளிகள் “அன்சார் அல்லா”, கடவுளை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஷியைத் பிரிவைச் சேர்ந்த ஜெயித் குலத்தைச் சேர்ந்தவர்கள்[3]. சுன்னி முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் சில இறையியல் வித்தியாசங்கள் உள்ளன. 1960களிலிருந்தே, சவுதி அரேபியா, ஏமனின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. அமெரிக்க-சவுதி அடக்குமுறைகளினால் சுமார் 10,000 மக்கள் இறக்க நேர்ந்துள்ளது. அதில் 4,100 சாதாரண குடிமக்கள் ஆவர். தவிர, 3.2 மில்லியன் / 32,00,000, 32 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வியாதி போன்றவற்றாலும் பாதிப்புள்ளது[4]. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்க இங்கு நடந்துள்ளவற்றிற்கு பொறுப்பேற்பதானால், அமெரிக்கா முதலில் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்[5]. சவுதிக்கு ஆதரவு கொடுப்பதையும், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[6].

ஏவுகணைகளை உபயோகிப்பதாக ஹௌதி போராளிகளின் மீது குற்றச்சாற்று: ஜூலை 14, 2006 அன்று C-802 ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ஏவுகணை கப்பலைத் தாக்கி [Israeli missile ship INS Hanit] சேதத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவு கூற வேண்டும். முதலில் சைனாவின் ஏவுகணைகள் எப்படி, இப்பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளிடம் வருகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு உபயோகமாக அவை உபயோகப்படுத்தப்படுகின்றன என்றால், அமெரிக்கா அதை எதிர்ப்பதில்லை என்பதும் வியப்பான விசயமே. ஆயுத உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும். சைனா போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டுதான் வருகின்றன, அவை, ஜிஹாதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி, உலகத்தில் எல்லை சண்டைகள், உள்நாட்டு போர்கள், ஜிஹாதி தாக்குதல்கள், ஐசில் போன்ற குரூர கொலைகள்-ஆக்கிரமிப்புகள் முதலியன இருக்கும் வரை, இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லோரும் தமது தீவிரவாதத்தை விட்டுவிட்டால், அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி தொழிஸ்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலை உண்டாகும்!

ஹௌதி போராளிகள் குறி வைத்தது மெக்காவா இல்லையா?: ஹௌதி போராளிகள் தாங்கள் மெக்காவைத் தாக்க ஏழுகணைகளை உபயோகித்தனர் என்ற செய்தியை மறுத்துள்ளனர்[7]. இரானும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்துள்ளது. மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் [40 miles] தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. சவுதி அரேபியா அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளை [U.S.-made, surface-to-air Patriot missile batteries] உபயோகித்தனர். இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது[9]. மொஹம்மது அல்-பெகைதி [Mohammed al-Bekheity] என்ற ஹௌதி தலைவர், “நாங்கள் மெக்காவுக்கு குறிவைக்கவில்லை. நாங்கள் மக்கம் மற்றும் புனித இடங்களை தாக்குவதில்லை,” என்றார்[10]. இதைப் பற்றி இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது[11].

ஏமனின் இரானிய எதிர்ப்பு: யாமெனி பிரத மந்திரி அஹமது ஒபெய்த் பின் இத்தகைய தாக்குதலை ஊக்குவிக்க இரானின் மீது குற்றஞ்சாற்றியுள்ளார். “ஏமனில் மார்ச்.26, 2015 அன்று யுத்தம் ஆரம்பித்தது. ஹௌதி போராளிகள் தங்களது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் அரசிற்கு விரோதமாக போரில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரான் அல்லது பெய்ரூட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது,” என்று பின் தகர் பிரெஞ்சு தூதுவர் ஏமன் கிரிஸ்டியன் திஸ்தியை சந்தித்தபோது கூறினார். இரானின் புரட்சி பாதுகாப்புப் படை [Iranian Revolutionary Guard Corps (IRGC)] மற்றும் ஹிஜ்புல் [Hezbollah] இவ்வாறு செயல்படுவது, அரசியல் திட்டத்தை இவ்வாறு புரட்சியாளர்களின் மூலம் தீர்த்துக் கொள்வதாகத் தெரிகிறது.

இரான் நீர்போக்குவரத்து பாதைகளை பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செல்லுத்த விரும்புகிறாதா?: இரான் பப் அல்-மன்டப் குடாவை [Bab al Mandab Strait] தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வரவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. ஏனெனில், அதனை பிடித்து விட்டால், சூயஸ் கால்வாயை ஆதிக்கம் செய்யும் நிலை வந்துவிடும்[12]. ஹோர்மூஸ் கால்வாயையும் [Strait of Hormuz] பிடித்து விட்டால், அரேபிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்களை இரன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்[13]. அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா பரஸ்பர உடன்படிக்கை 1945லிருந்து 71 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இத்தகைய நீர்வழி ஆதிக்கத்தின் மூலம், இரான் அந்த ஒப்பந்தத்தை வலுவிழக்கத்தான் திட்டம் தீட்டுகிறது என்று அமெரிக்கா குறை கூறுகிறது[14]. இரான் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத்தை உபயோகப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் குறைகூறுகிறது.
© வேதபிரகாஷ்
29-10-2016

[1] மாலைமலர், மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு, பதிவு: அக்டோபர் 28, 2016 11:08
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/28110835/1047538/Saudi-Arabia-says-Yemen-rebels-fire-missile-toward.vpf
[3] The Houthis, known as Ansar Allah, or “Supporters of God” (who doesn’t claim to be that in the Middle East?), belong to the Zaydi sect, and are Shia-lite, maintaining some theological similarities with Sunnis.
[4] As a result of Washington’s support for Saudi ruthlessness, Yemen has suffered desperately. Roughly 10,000 people, including some 4100 civilians, have died, 3.2 million people (12 percent of the population) have been displaced, pestilence (in the form of Cholera) has hit the capital, and famine approaches, with more than half the population “food insecure,” according to the UN World Food Program. Eight in ten people need some outside aid.
http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop
[5] CATO Institute, America Should Quit Saudi Arabia’s War in Yemen: the Senseless Killing Must Stop, By Doug Bandow, This article appeared in “Forbes” on October 25, 2016.
[6] http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop
[7] The Washington times, Iran’s proxy missile attacks- The Islamic regime seeks control of Middle East waterways, By James A. Lyons – – Tuesday, October 25, 2016
[8] தமிழ்.ஒன்.இந்தியா, மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்– தடுத்து அழித்த செளதி அரேபியா, By: Amudhavalli, Updated: Friday, October 28, 2016, 20:58 [IST]
[9] http://tamil.oneindia.com/news/international/yemeni-rebels-attack-holy-mecca-265932.html
[10] Mohammed al-Bekheity, a Houthi leader, denied that the missile targeted Mecca. “We do not target civilians and, in turn, we would not target holy areas,” he said.
http://www.aljazeera.com/news/2016/10/yemens-houthis-accused-firing-missile-mecca-161028132859767.html
[11] Al-Jazeera, Yemen’s Houthis accused of firing missiles at Mecca, October.28.11.40 pm
[12] http://www.washingtontimes.com/news/2016/oct/25/irans-proxy-missile-attacks/
[13] IBTimes, Yemen Rebels Target Saudi Holy City Of Makkah; Missile Intercepted And Destroyed, by Marcy Kreiter, 10/27/16 AT 8:48 PM.
[14] http://www.ibtimes.com/yemen-rebels-target-saudi-holy-city-makkah-missile-intercepted-destroyed-2438403
பிரிவுகள்: அன்சாரி, அன்சார், அப்துல்லா, அமைதி, அரேபியா, அலி, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்லா, இமாம் அலி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், காபா, காபிர், குடியேறுதல், குண்டு தயாரிப்பு, குண்டுவெடிப்பு, சலாபிசம், சலாபிஸம், சவுதி, சவுதி அரேபியா, சவூதி அரேபியா, Uncategorized
Tags: அன்சாரி, அன்சார், இராக், இரான், இஸ்லாம், ஏமன், சவுதி, சவுதி அரேபியா, சூடான், ஜிஹாத், ஜோர்டான், துருக்கி, மெக்கா, மெதினா, ஹௌதி
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன? ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

இசுலாமியத் தீவிரவாதம் என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST
[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html
[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அமைதி டிவி, அரேபியா, அல் - உம்மா, அல் - கொய்தா, அல்லா, அல்லா பெயர், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சவுதி, சவுதி அரேபியா, சிமி, சிரியா, சுன்னத், சுன்னத் ஜமாஅத், சுன்னத் ஜமாத், சுன்னி, சூபி, சூபித்துவம், ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜவாஹிருல்லா, ஜாகிர் நாயக், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், பீஸ் டிவி, Uncategorized
Tags: அமைதி டிவி, இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குரான், கொலை, சுன்னி, செக்யூலரிஸம், ஜாகிர் நாயக், ஜிஹாத், தாலிபான், பரவும் தீவிரவாதம், பீஸ் டிவி, மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர். 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].
- மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
- எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
- மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
- ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
- மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
- இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
- ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
- வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
- ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
- முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
- இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி
இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது, பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:
சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்
ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்! |
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610
[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST
[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html
[5] http://adiraipirai.in/?p=26723
[6] http://adiraipirai.in/?p=26767
[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அல் - உம்மா, அல் - காய்தா, அல்லா, இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இராக், இரான், இறைதூதர், இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், கிலாபத், கிலாபத் இயக்கம், சவுதி, சவுதி அரேபியா, சூபித்துவம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜாகிர் நாயக், Uncategorized
Tags: ஆதரவு, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், எதிர்ப்பு, எஸ்.டி.பி.ஐ, காபிர், காஷ்மீரம், குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சென்னை, சேப்பாக்கம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முஜாஹித்தீன், முரண்பாடு, முஸ்லிம், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

தமிழகத்தில் ஜாகிர் நாயக் எதிர்ப்பு–ஆதரவு: ஜாகிர் நாயக்கை பொதுவாக இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஒசமா பின் லேடனை ஆதரித்தது, எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்றது போன்ற விவகாரங்களூக்காக நாயக் தனிமைப் படுத்தப் பட்டாலும், உள்ளூர எல்லா முஸ்லிம்களும் ஆதரித்துதான் வந்தனர். இந்தியாவில் நடத்தப் பட்ட கூட்டங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தன. சென்னையில், கிருஷ்ணா கார்டன்ஸ் (திருமங்கலம்), காமராஜர் அரங்கம், இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகம் (ஈஞ்சம்பாக்கம்) என்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இந்துக்களுக்கு குறி வைத்து, அவர்களை வேண்டி, நட்புரீதியில் “வற்புறுத்தி” கலந்து கொள்ள செய்தனர். அந்த கூட்டங்கள் முஸ்லிம்களுக்குட்தான் பிரமிப்பாக இருந்தது. தமிழக முஸ்லிம் இயக்கத்தினரின் தலைவர்களுக்கு புளியைக் கரைத்தது. பொறாமையாகக் கூட இருந்தது, நல்ல வேளை, தமிழில் பேசவில்லை என்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டனர். இருப்பினும், தமிழில் அவரது ஆதரவாளர்கள் நாயக்கின் புத்தகங்கள் வெளியிட்டனர்.

பீஸ் டிவி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது (09-07-2016): நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த ஜூலை 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப் பட்டன. வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது[1]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது[2]. நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது[3]. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

பீஸ் டிவியை அடுத்து, பீஸ் மொபைல் போன்களுக்குக்கும் தடை (14-07-2016): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது. ‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார். ‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது[4]. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஆனால், ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஆர்பாட்டம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மீது மகாராஷ்டிர அரசும், மத்திய பாஜக அரசும் கடுமையான அவதூறு பரப்பி வருவதாகவும்[5], இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து நாளை (ஜூலை 16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாகி தெரிவித்துள்ளார்[6].

உலகத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாத, ஜிஹாத் தீவிரவாத செயல்கள் என்ன நடந்தாலும் போராட்டம்–ஆர்பாட்டம் இல்லை: 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மொஹம்மது லுஹ்வாஸ் ஃபூலெல் (31) என்ற முஸ்லிம் பாரிசில் லாரியை வெறித்தனமாக மக்கள் கூட்டத்தினுள் ஓட்டிச் சென்று ஒரு முஸ்லிம் குழந்தைக்களையும் சேர்த்து 84 பேரைக் கொன்றுள்ளான். குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடான, துருக்கியில் நடந்துள்ள ராணுவப் புரட்சியில் 100க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டு தீவிரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தோர் பலர் மருத்துமனைக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். கேரளாவில் இளம் வயது முச்லிம் ஆண்கள்-பெண்கள் ஐஎஸ்சில் சேர்ந்து விட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உம், அவர்கள் அசையவில்லை.

ஜாகிர் நாயக்கை ஆதரித்து நடத்திய போராட்டம் (16-07-2016): இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சென்னையில், “ஜாகிர் நாயக்கை தீவிரவாதி போன்று சித்திரப்பதை” கண்டித்து 500 பேர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்[7]. இப்பொழுதுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [Indian Union Muslim League (IUML)], தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK)] மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி [the Social Democratic Party of India] முதலியன இந்த எதிர்ப்பு-போராட்டத்தில் பக்குக் கொண்டுள்ளன. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது[8].

ஜாகீர் நாயக் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை: தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது[9]: “உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார். எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது[10]. ஆனால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று குறிப்பிடவில்லை.
© வேதபிரகாஷ்
17-07-2016
[1] தினத்தந்தி, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’யை வங்கதேசம் தடை செய்தது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10,2016, 3:55 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10, 2016, 3:55 PM IST.
[2] http://www.dailythanthi.com/News/World/2016/07/10155526/Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV.vpf
[3] தி.இந்து, மத போதகர் ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு, Published: July 14, 2016 21:21 ISTUpdated: July 15, 2016 10:22 IST
[4] http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article8850254.ece
[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாகிர் நாயக் மீது அவதூறு… தமிழக இஸ்லாமிய அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்– வீடியோ, By: Jayachitra, Published: Friday, July 15, 2016, 15:05 [IST].
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/muslim-organisations-protest-258114.html
[7] The News minute, Islamic groups protest in Chennai, demand govt cease portraying Zakir Naik as terrorist, TNM Staff| Saturday, July 16, 2016 – 13:57
[8] தினத்தந்தி, ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST
[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/17002835/Islamic-groups-protest-in-Chennai-demand-govt-cease.vpf
[10] நியூஸ்.7.செனல், மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் ஆர்பாட்டம், July 16, 2016.
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அமைதி டிவி, அரேபியா, அல் - உம்மா, அல் - கொய்தா, அல் ஹதீஸ், அல்லா, அல்லா பெயர், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இறை தூதர், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐஸில், காஃபிர், காஃபிர்கள், சவுதி, சவுதி அரேபியா, ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜவாஹிருல்லா, ஜாகிர் நாயக், ஜிஹாதித்தனம், ஜிஹாத், டாக்கா, டாக்கா தாக்குதல், தமிழ் முஸ்லிம், பீஸ் டிவி, முஸ்லிம், வங்காள தேசம், வங்காளதேசம், வங்காளம், விளம்பரம், வெடிகுண்டு, ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized
Tags: அமைதி டிவி, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சேப்பாக்கம், ஜாகிர் நாயக், ஜிஹாத், தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு, தாலிபான், பீஸ் டிவி, முஸ்லிம்கள், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், வங்கதேசம், ஷியா
Comments: Be the first to comment
பிப்ரவரி 6, 2016
பட்கல் குடும்பமும், அர்மார் குடும்பமும்: வெடிகுண்டு தயாரிப்பும், ஐசிஸ் தொடர்புகளும் – இந்தியாவுக்கு எதிராக செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதம், ஜிஹாதித்துவம் முதலியன!

சுல்தான் அர்மார் கொலையுண்ட பிறகு, ஷபி அர்மார் தலைவனாகிறான்: காரணம், இவரது சகதோரர் சுல்தான் சிரியாவில் நடந்த சம்டையின்போது கொல்லப்பட்டு விட்டார். இதனால் ஷபி வசம் அனைத்துப் பொறுப்புகளும் வந்து சேர்ந்தன[1]. இந்தியா முழுவதும் ஐஎஸ் ஆமைப்புக்கு ஆட்களைத் திரட்டும் பணிக்காக பல்வேரு கிளைகளை உருவாக்கியவர் ஷபி. சமீபத்தில் இப்படிப்பட்ட ஆளெடுப்பு மையம் ஒன்றைக் கண்டுபிடித்தது உளவுப் பிரிவு. அதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மும்பையைச் சேர்ந்த முடாபிர் ஷேக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் அர்மார் பேசிய பேச்சையும் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளெடுப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அர்மார். இதன் மூலம் ஆளெடுப்புப் பணிகள் தங்கு தடையின்றி நடக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய அளவில், வலுவான அமைப்பாக ஐஎஸ்ஐஎஸ்ஸை உருவாக்குவதே இவர்களின் முக்கியப் பணியாக, நோக்கமாக இருந்துள்ளது. மேலும் தனது சகோதரர் உருவாக்கிய அன்சர் உல் தவாஹித் அமைப்பின் பெயரையும் கூட ஜுநுத் அல் கலீபா இ ஹிந்த் என்றும் மாற்றியுள்ளார் அர்மார். இதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் காட்டமான பார்வையிலிருந்து தப்ப முடியும் என்பது அவரது எண்ணம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு தவணைளாக ரூ. 6 லட்சம் வரை ஆளெடுக்கும் பணிக்காக செலவிட்டுள்ளாராம் அர்மார்[2].
அர்மார் குடும்பமும், பட்கல் குடும்பமும்: பட்கல் சகோதரர்கள் எப்படி இந்திய முஜாஹித்தீன் ஆரம்பித்து, குண்டுவெடிப்புகளை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றார்களோ, அதே போல அர்மார் சகோதரர்களும் ஜிஹாதிகளாக இருந்தார்கள். அவர்களைத் தேடிச் சென்ற என்டிடிவி மற்றும் டைம்ச்ஸ்-நௌ இருவிதமான விவரங்களைத் தருகின்றன. என்டிடிவி பற்றியதை மேலே பார்த்தோம். டைம்ஸ்-நௌ நிருபர்களும் அர்மார் குடும்பத்தைத் தேடி பட்கல் நகரத்திற்குச் செல்கின்றனர். முதலில் நயாயத் காலனியில் தங்கியிருந்ததாக அறிந்ததால் அங்கு சென்றனர். ஆனால், அங்கிருந்து அர்மார் குடும்பம் மதீனா காலனிக்குச் சென்று விட்டதாக அறிந்தனர். உடனே, மதினா காலனி, இரண்டாம் குறுக்குத் தெருவில் அக்குடும்பம் தங்கியிருந்த வீட்டை அடைகின்றனர். ஆனால், இப்பொழுது வேறு யாரோ தங்கியிருக்கின்றனர். அவர்கள், அர்மார் குடும்பம் இங்கு தங்கியிருந்தது, ஆனால், இப்பொழுது இல்லை, மேலும் அவர்களைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றனர்[3]. அதாவது பட்கல் குடும்பம் போல, இந்த அர்மார் குடும்பமும், வீடு மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதிலிருந்து, அக்குடும்பமே அவர்களுக்கு உடைந்தையாக இருக்கிறது என்று தெரிகிறது. பேட்டிகளில் மட்டும், தங்களது மகன்கள்-மகள்கம் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுபவர்கள், இதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், குடும்பத்தார், குறிப்பாக திருமணம் ஆனவர்கள், மனைவிக்குத் தெரியாமல், இத்தகைய வேலைகளில் ஈடுபட முடியாது. மனைவி அமைதியாக இருக்கிறாள் என்றால், ஒத்துழைக்கிறாள் என்றாகிறது.
இவர்கள் இப்படி இருக்கலாமா? – பெற்றோர்-மற்றோர் ஏன் கண்டுகொள்ளவில்லை?: ஷபி அர்மானுக்குப் பிறகு காலித் அஹமது அலி கான் அல்லது ரிஸ்வான் [Khalid Ahmed Ali Khalid alias Rizwan, 20] என்பவன் இரண்டாவது தளபதியாக இருக்கிறான். மல்வானி என்ற இடத்தைச் சேர்ந்த அயஸ் சுல்தான் என்பவனை மூளைசலவை செய்தத்தில் இவன் முக்கிய பங்கு வகித்திருக்கிறான். அயஸ் சுல்தான் இப்பொழுது காணாமல் போயிருக்கிறான். மொஹம்மது அலீம் [Mohd Aleem (23)] இந்திராநகரிலிருந்து [லக்னௌ, உபி] பிடிபட்டுள்ளவன் இணைதளத்தின் மூலம் ஆட்களை சேர்ப்பது தெரியவந்தது. இவன் வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்புக் என்று எல்லாவற்றிலும் புகுந்து, இளைஞர்களை மூளை சலவை செய்து ஐசிஸ் பக்கம் இழுத்து, சேர்த்துள்ளான்[4]. இது தவிர,
- மொஹம்மது நபீஸ் கான் ஹைதராபாத்
- மொஹம்மது ஷரீப் மௌந்தீன் கான் ஹைதராபாத்
- மொஹம்மது அப்சல் பெஙளூரு
என்று கைது செய்யப்பட்டனர்.
இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் “விஸ்வரூபம்“![5]: தமிழ்.ஒன்.இந்தியா, ரியாஸ் பட்கலுக்கு, நிறைய மரியாதைக் கொடுத்து எழுதியுள்ளது, “கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், யாரைக் கவர்ந்ததோ இல்லையோ, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்து விட்டதாம். இந்தப் படம், அல் கொய்தா அமைப்பின் இந்திய வருகையை அறிவிக்கும் படமாக அமைந்து விட்டதாகவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் கருதினார்களாம். குறிப்பாக கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய இப்படத்தை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான ரியாஸ் பத்கல் அதிகம் விரும்பிப் பார்த்தாராம். அவருக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது இந்தியக் கிளை குறித்த அறிவிப்பை அல் கொய்தா வெளியிட்டது. இருப்பினும் அந்த அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அல் கொய்தாவின் வருகைக்கு முன்பாகவே அதுகுறித்து குறிப்பிட்டுள்ளார் ரியாஸ். விஸ்வரூபம் படத்தை மேற்கோள் காட்டி இதைக் கூறியிருந்தார் ரியாஸ்”.
“இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டது” என்று விஸ்வரூபம் முன்னரே கணித்துவிட்டதாம்![6]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “ஒரு நேரத்தில் வலிமையான அமைப்பாக திகழ்ந்த இந்தியன் முஜாஹிதீன் தற்போது பிளவுபட்டு விட்டது. ஒரு பிரிவு அல் கொய்தாவுக்கும், இன்னொரு பிரிவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் ஆதரவாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி ரியாஸ் பத்கல், பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவில் இருந்த தனியால் என்ற தனது கூட்டாளியுடன் சாட் செய்துள்ளார். அப்போது தான் விஸ்வரூபம் படம் பார்த்ததாக கூறியுள்ளார் ரியாஸ். அதாவது மார்ச் 25ம் தேதி அப்படத்தைப் பார்த்ததாகவும், படத்தின் முடிவில், இந்தியாவுக்கு அல் கொய்தா வந்து விட்டது குறித்த வசனம் இடம் பெற்றதாகவும், அது உண்மைதான் என்றும், விரைவில் அது நடக்கப் போவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அன்றுதான் விஸ்வரூபம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது. தனது உரையாடலின்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள், பாகிஸ்தானில் உள்ளவர்களை விட சிறந்தவர்கள் என்றும் பாராட்டியுள்ளார் ரியாஸ்”.
ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள், பாகிஸ்தான் தலிபான்கள் என்று விமர்சித்த ரியாஸ் பட்கல்[7]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்கிறது, “அடி முட்டாள்கள் மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் குறித்தும், பாகிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள நிலவரம் குறித்தும் பேசியுள்ளார் பத்கல். இந்தியாவில் உள்ள நமது அமைப்பினர் அனைவரும் ஒன்று திரண்டு, நேட்டோ படையினருக்கு எதிராக, அல் கொய்தாவுக்கு ஆதரவாக தோள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் பத்கல். மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும். அல் கொய்தாவுடன் இணைய வேண்டும் என்றும் பத்கல் கூறியுள்ளார். அதேபோல தனது சகோதரரான யாசின் பத்கலுடன் (அவர் பின்னர் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விட்டார்) பேசிய பேச்சு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. யாசினுடன் நடந்த உரையாடலின்போது ஐஎஸ்ஐ அமைப்பினரை மோசடிக்காரர்கள் என்று காட்டமாக வர்ணித்துள்ளார் ரியாஸ் பத்கல். தன்னை ஐஎஸ்ஐ மோசமாக நடத்தியதாகவும், தான் அல் கொய்தாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருவதாகவும் ரியாஸ் கூறியுள்ளார். அதேபோல பாகிஸ்தான் தலிபான்களை அடி முட்டாள்கள் என்றும் அவர் வர்ணித்துள்ளார். 2013ம் ஆண்டு மே 11ம் தேதி தனது இந்திய அமைப்பினருடன் நடந்த பேச்சின்போது, பாகிஸ்தான் தலிபான்கள் அடி முட்டாள்களாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், இன்று காலை 5 குண்டுவெடிப்புகளை தெஹரிக் இ தலிபான்கள் நடத்தியுள்ளனர். இவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் முட்டாள்களாக உள்ளனர். அவர்களுடன் இணைய நான் விரும்பவில்லை. நான் அல் கொய்தாவுடன் இணையவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரியாஸ்”.
வேதபிரகாஷ்
06-02-12016
[1] http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html
[2] Read more at: http://tamil.oneindia.com/news/india/shafi-armar-26-years-old-he-sought-set-up-isis-module-every-indian-state-246067.html
[3] https://www.youtube.com/watch?v=NqWwt_6bvcE
[4] The official said that Mohd Aleem (23), the IS suspect arrested from the city’s Indira Nagar area on Friday, was also recruited through a social networking site. “IS modules, still out of reach of intelligence and security agencies, are trying to expand their base in the state, especially west UP, using the same method,” he said.
http://www.hindustantimes.com/india/tech-for-intake-terror-outfits-go-online-for-hiring-new-recruits/story-OMpZiqBqZOU8Kfb83TaJxM.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் “விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].
[6] http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html
[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளைக் கவர்ந்த கமல்ஹாசனின் “விஸ்வரூபம்“!, Posted by: Sutha, Published: Tuesday, May 19, 2015, 16:10 [IST].
பிரிவுகள்: அமோனியம், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், கிலாபத், சவுதி, சவுதி அரேபியா, சவூதி அரேபியா, ஜமாத்-உத்-தாவா, ஜம்மு-காஷ்மீர், ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தாலிபன் நீதிமன்றங்கள்
Tags: அன்சார்-உல்-தௌஹீத், அர்மார், இந்துக்கள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, பாகிஸ்தான், புனிதப்போர், முகமதியர், முஜாஹித்தீன், முதாபீர் ஷேக், ஷபி அர்மார்
Comments: Be the first to comment
திசெம்பர் 17, 2013
தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)
அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் பிஜேபிக்கு ஆதரவு கொடுப்பது[1]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[2]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
“பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமயிலான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள். டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய “வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை” என்ற பாத யாத்திரைக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 700-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. வீடுகள் தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும் போது மக்களின் பிரச்னைகள், கிராமங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பாத யாத்திரை வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[3]. |
“அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[4] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும்”, என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்[5]. பொதுவாகவே, முஸ்லிம்கள் தங்களது வட்டட்த்தில் இருந்து வெளியே வரமாட்டார்கள், வந்தால் இருபக்கத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். |
தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை, சதக்கத்துல்லா என்ற நபர் லீகை சார்ந்தவரும் அல்ல: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை – சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. |
1972ல் முகமது இஸ்மாயில் இறந்தபோது, திமுக இரண்டாக உடைந்தது, அதிமுக உருவானது. அதேபோல, “இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்” இரண்டாகி, “இந்திய தேசிய லீக்” [Indian National League (INL)] உருவானது. இவற்றிற்கு முறையே அப்துல் சமத் மற்றும் அப்துல் லத்தீப் தலைவர்களாக இருந்தனர். அப்துல் லத்தீப் கருணநிதிக்கு வேண்டியவராக இருந்தார். எப்படியாகிலும், இரண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு காலம் தள்ளின. எனவே, லீக் ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சி அல்லது குழுமம் என்று ஒப்புக்கொள்ள முடியாது. |
இந்த தகவல் அவரை பா.ஜ.க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை[8]மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது[9].
பாஜகவுக்கு ஆதரவு கடிதம் கொடுத்த “சதாம் என்.கே.எம். சதக்கத்துல்லா” எங்கள் ஆள் இல்லை: “சதாம் என்.கே.எம்.சதக்கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா.ஜ.க.,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. |
ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யலாமா, கூடாதா என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே தமிழக முஸ்லிம்கள் திராவிடக் கட்சிகளுக்குப் பிரிந்து தான் ஓட்டளிக்கின்றனர், ஆனால் பலன்களை மட்டும் அனுபவித்து வருகின்றனர். |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.
இது போன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன் படுத்துவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்: மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கிணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில்
ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 – ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர். |
ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் இவ்வாறு ஜமாத் போன்ற முறையில் தீர்மானம் செய்யலாம், ஆனால், எப்படி இந்தியக் கட்சிகளில் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றனரோ, அதே போல, தமிழக முஸ்லிம்களும் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல் கட்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். திராவிடக்கட்சிகளை ஆதரிக்கும் போது, அவ்வாறுதான் செய்து வருகிறார்கள். |
இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும். இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.” இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
சையது இக்பால், இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளரின் கடுமையான தாக்கு[10]: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு:
சத்தியம்டிவி: இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!! |
சையதுஇக்பால்அவர்கள்: நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ? பார்த்தது இல்லை. மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை. அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார். |
நரபலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்ககூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாது: அவரால் இல்லை நரபலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாது. அப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான். உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 %
இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன. அதனால், நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம். முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம். |
ஆக, பேரம் பேசி பாஜகவுடன் கூட்டு சேர முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள் என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது. ஆகவே, யாரை பிரதம மந்திரியாக்க வேண்டும் என்ற சக்தியே எங்களிடம் தான் உள்ளது என்று ஆணவத்துடன் இப்படி பேசுவது, மற்ற இந்தியர்களும் கவனிக்கத்தான் செய்வார்கள். கடவுளின் பெயரால், ஆளுக்கு ஆள் ௐஇளம்பி விட்டால், செக்யூலரிஸ நாட்டில், மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாதே! |
அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல், இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம்”, என்று கடுமையாக பதில் அளித்துள்ளார்[11].
வேதபிரகாஷ்
© 17-12-2013
[3] தினமணி,பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST
[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன். ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.
[9] முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ், முஸ்லிம்லீக்பெயரைக்களங்கப்படுத்துவோர்மீதுசட்டநடவடிக்கை: எச்சரிக்கை!, 16-12-2013, 2:16 PM
பிரிவுகள்: ஃபத்வா, அடையாளம், அப்துல்லா, அல் - உம்மா, இந்தியத் தன்மை, இஸ்லாமிய இறையியல், காஃபிர், காங்கிரஸ், காயிதே மில்லத், சவுதி, சவுதி அரேபியா, சையது இக்பால், ஜிஹாதி, திராவிட நாத்திகர்கள், பள்ளிவாசல், பிரசாரம், பிரச்சாரம், முஸ்லீம் தன்மை
Tags: ஃபத்வா, இந்திய யூனியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், கருணாநிதி, கூட்டணி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜெயலலிதா, தமிழகம், முஸ்லீம்கள்
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்