Archive for the ‘சலாவுத்தீன்’ category

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓகஸ்ட் 23, 2010

மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிட்டு மதானையைப் பிடித்துக் கொண்டன தமுமுக: தமுமுகவினர் முன்பு காஷ்மீர் பிரச்சினைக்கு, சென்னையில் ஆர்பாட்டம் நடத்தினர். இப்பொழுதுகூட, தீவிரவாதி-ஜிஹாதிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு அப்பாவி பெண்மணிகளை – தாய்-மகள் என்றுகூட பார்க்காமல் (ஜரினா மற்றும் ஷகிலா) சுட்டுக் கொன்றுள்ளனர்[1]. முன்பு கல்லெடித்து கலாட்டா செய்தனர் அந்த தீவிரவாதிகள், இப்பொழுது கடைக்காரர்களே கல்லடித்து அவர்களை விரட்டுகின்றனர்[2]. எனெனில், அவர்களுக்கு அந்த அளவிற்கு வெறுப்பு வந்து விட்டது[3] போலும்! ஆக அந்த பிரச்சினை சரி வராது என்று நினைத்து, கோயம்புத்தூருக்குச் சென்று, தமுமுக ஆர்பாட்டம் செய்துள்ளனர் போலும்.

கேரள போலீஸார் எப்பொழுதும் தீவிரவாதிகளுக்கே உதவிக் கொண்டிருக்கவேண்டுமா? கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மதானியை பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடகப் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறக் கழகத்தினர் இன்று கோவையில், நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்[4]. தமுமுகவின் கோவை மாவட்டத் தலைவர் பர்கத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கர்நாடக போலீஸாருக்குத் துணைபோன கேரள போலீஸாரை அவர்கள் கடுமையாக விமர்சித்தினர்[5]. மாவட்ட செயலர் ரபீக், பொருளாளர் அகமது கபீர் முன்னிலை வகித்தனர். ஏற்கெனெவே, கேரள போலீஸார், அவ்வாறு உதவி செய்துததன், ரொம்ப நல்லபேரை வாங்கிக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சாதிக்[6], மாநில துணைச் செயலர் செய்யது பேசியதாவது[7]: “கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட கேரளாவை சேர்ந்த நசீர் கொடுத்த வாக்குமூலத்தில், மதானி 31வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர், கேரள சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பில் இருந்தார். அவர் எங்கெல்லாம் சென்றார் என கேரள போலீசாருக்கு தெரியும்.இப்படி இருக்கும் போது, 31வது குற்றவாளியாக இருக்க முடியுமா? மதானி கைது மூலம் வேறு யாரையோ சிக்க வைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது. மதானியை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார், மலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா பெரும்புள்ளிகளை கைது செய்யாதது ஏன்?கேரள போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி குண்டு வைத்திருக்க முடியும். எனவே கேரள போலீசாரையும் இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக விசாரிக்க வேண்டும்”.

முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்டால்தான் முஸ்லீம்களுக்கு உரிமைகள் கிடைக்கும்: “தவிர கர்நாடக அரசையும் மத்திய போலீசார் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும், முஸ்லிம்களை கைது செய்து, தீவிர விசாரணைக்கு பின் விடுவிக்கின்றனர்.மத்திய உளவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்., பற்றுள்ளவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். முஸ்லிம்களாகிய நமக்குரிய உரிமைகள் கிடைக்க, நாம் இந்தியாவை ஆள வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது[8]. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மதானியை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்”, இவ்வாறு செய்யது பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் மொய்தீன் சேட் நன்றி கூறினார்

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[9]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா உளவுப் படைகளைவிட தமுமுகவிற்கு உண்மை தெரியும் போல இருக்கிறது: பெங்களூர் குண்டுவெடிப்பில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நசீர் என்பவர் அளித்த தகவலின் பேரில் மதானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அத்தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை என்றும், வேறு பலமான ஆதாரங்கள் இல்லாததாலும் மதானியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதாவது, போலீஸார் ஒன்றுமே இல்லாமல் கைது செய்துள்ளனராம்! அப்பொழுது, நஸீரையும் விட்டு விடாலாமே? மற்ற கைது செய்யப்பட்டுள்ள, எல்லா தீவிரவாதிகளையும் விட்டுவிடலாமே?

தாவூத் ஜிலானி சொல்வர்டு பொய்யா, நஸீர் சொல்வர்து பொய்யா? தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[10].  நஸீர் சொல்லியுள்ள இடங்களுக்குத்தான், இப்பொழுது மௌலானா மைதானியை அழைத்துச் சென்றுள்ளனர்[11]. இதையும் மறுக்க முடியுமா?


[1] http://www.ndtv.com/article/india/zareena-19-and-mother-killed-by-militants-in-kashmir-46663

[2] http://timesofindia.indiatimes.com/india/Protestors-in-Kashmir-face-stones-their-own-bitter-pill/articleshow/6420878.cms

[3] http://www.dnaindia.com/india/report_kashmir-stone-pelters-get-a-taste-of-their-own-medicine_1427515

[4] தினமணி, மதானி கைது: கோவையில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்; First Published : 23 Aug 2010 04:26:06 PM IST; Last Updated : 23 Aug 2010 04:28:31 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=…………….SectionName=Latest

[5] Demonstration in Tamil Nadu condemning Kerala and Karnataka govts on Madani’s arrest; Published: Monday, Aug 23, 2010, 15:30 IST; Agency: PTI
http://www.dnaindia.com/india/report_demonstration-in-tamil-nadu-condemning-kerala-and-karnataka-govts-on-madani-s-arrest_1427524

[6] http://www.indiatalkies.com/2010/08/activists-muslim-voluntary-forum-protest-madanis-arrest-karnataka-police.html

[7] தினமலர், இந்தியாவை நாம் ஆளும் போது தான் நமக்குரிய உரிமைகள் கிடைக்கும்: .மு.மு.., மாநில துணை செயலர், ஆகஸ்ட் 23, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=68650

[8] ஜிஹாதி மொழி பேசப்படிகிறது இங்கு, அதாவது, காஃபிர்கள் ஆளும் நாட்டில் மோமின்களுக்கு உரிமைகள் கிடைக்காது, அதனால், இந்தியாவை முஸ்லீம்கள் ஆளவேண்டும், என்ற கருத்து வைக்கப்படுகிறது. முஸ்லீம்கள் எப்படி, எவ்வாறு மறுபடியும் ஆளமுடியும், ஆள்வார்கள் என்று மற்றவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும்.

[9] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[10] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

[11] Dajjiworld, Madani in Madikeri, IB team Coming,  Sunday, August 22, 2010 11:16:15 AM (IST) ,

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=83862&n_tit=Madani+in+Madikeri%2C+IB+team+Coming+

யார் இந்த தடியன்டவிடே நசீர்?

ஓகஸ்ட் 23, 2010

யார் இந்த தடியன்டவிடே நசீர்?

தடியன்டவிடே நசீர் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதியாவான். தென்னிந்தியாவின் லஸ்கர்-இ-தொய்பா தலைவன் என்று கருதப்படுகிறான். இவனுடைய விவரங்கள் இதோ[1]:

பெயர் தடியன்டவிடே நசீர்  / ஹாஜி / உம்மர் ஹாஜி / காலித் முதலியன[2].
பிறந்த தேதி ஏப்ரல் 23, 1977.
பிறந்த நாடு இந்தியா
படிப்பு ஒன்பதாவது பாஸ், ஏ.ஸி. மெகானிகல் சான்றிதழ் பெற்றுள்ளான்[3].
பெற்றோர் அப்துல் மஜீத் கம்படவிடா, கதீஜா
மொழிகள் தெரிந்தது மலையாளம், அரேபிக், ஹிந்தி, உருது.
அரசியல் சார்பு மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் (PDP), மற்றும் PDPயின் ரகசிய அமைப்பான, மஜ்லிச்துல் முஸ்லிமீன் என்பதன் தீவிரமான அங்கத்தினன்[4].
நாடுகள் சென்றுள்ளது சௌதி அரேபியா, பங்களாதேசம்
உடல் அமைப்பு உயரம் – 5’10”, ஒல்லியான உடம்பு, மாநிறம், நீண்ட முகம், கூர்மையான மூக்கு, இடது கால் முட்டிக்கு கீழ் ஒரு பெரிய மச்சம், இடது நெற்றியில் ஒரு தழும்பு அடையாளம்
அவன் ஒப்புக் கொண்டுள்ளது விவரங்களை, கீழே காணவும்:
thadiyantavide-nazeer

thadiyantavide-nazeer
T-Naseer-LeT

T-Naseer-LeT

“தீவிரவாதம், வட இந்தியாவை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தென்னிந்தியாவில் குறைவாகவே உள்ளது. வட இந்தியாவில் “தங்கி “வேலைசெய்ய” 26 இடங்கள் உள்ளன[5], அவை பாகிஸ்தானின் ஆணைகளை எதிர்பார்த்து வேலை செய்கின்றன. ஒரேயொரு ஆணை போதும், உடனே அவர் செயல்பட்டு தாக்குதலில் ஈடுபட தயாராக உள்ளார்கள். இப்பொழுது, தென்னிந்தியாவில் மூன்று குழுக்கள் உள்ளன.

“பங்களூரு குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, உடனடியாக, நான் பங்களாதேசத்திற்குத் தப்பிச் சென்று விட்டேன். சிட்டகாங்கில் உள்ள என்னுடைய சகளையுடன் மறைவாகத் தங்கிவிட்டேன். 2008ல், என்னுடைய லஸ்கர் தலைவர்களின் ஆணையின்படியே, அவ்வாறு செய்தேன்.

“அப்பொழுது, பாகிஸ்தானின் குடிமகன் மற்றும் லஸ்கர் வேலையாள், சம்சுதீனிடமிருந்துதான் லஸ்கரின், இந்தியாவில் தங்கி வேலைசெய்ய 26 இடங்கள் உள்ளன கேள்விப்பட்டேன். பெங்களூரு வெடிகுண்டு வேல்கையின் போது, நாங்கள் எப்பொழுதும் லஸ்கர் ஆட்களுடன் நேரிடையாக பேசியது கிடையாது. எங்களுடைய எஜமானன்களுடன் / பாஸ்களுடன், சர்ஃபாஸ் நவாஜ் என்பவன் மூலம் தான் பேசிவந்தோம். அவன் அந்நேரத்தில் மஸ்கட்டில் இருந்தான்.

“காஷ்மீரத்தில் லஸ்கர் கேம்பின் மீது தாக்குதல் நடந்த பிறகு, நவாஜ் என்னுடன் தொடர்பு கொண்டான். அதில் கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உடனடியாக, நாங்கள் மும்பைக்குப் போனோம். அங்கிருந்து, நவாஜின் உதவியோடு, இந்தியாவை விட்டு வெளியேர உதவி கோரினோம்.

“ஜைல்தீன் என்பவனுடன் தொடர்பு கொள்ளுமாறு அவன் பணித்தான். அந்த ஏஜென்ட் நாங்கள் எல்லைகளைத்தாண்டி, பங்களாதேசத்திற்குள் நுழைய உதவிவான், என்றான். அதற்காக ரூ.3000/- நாங்கள் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னான்.

“ஹவுராவிற்குச் சென்றதும் ஜைல்தீனைத் தொடர்பு கொண்டோம். அவன் எங்களை, இந்திய-பங்களாதேச எல்லையில் உள்ள பங்கப்புர என்ற இடத்திற்கு வருமாறு பணித்தான். அந்த இடதிற்கு பேருந்தில் சென்றோம். அங்கிருந்து, படகில் பங்களாதேசத்தில் நுழைந்தோம். அங்கிருந்த இருவரிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம்.

“நாங்கள் அவர்களுடன் செல்வதற்கு முன்பு, சிறிது குழப்பம் ஏற்பட்டது. அவர்கள், எங்களிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். பிறகு ஜைல்தீன் பெயரைக் குறிப்பிடவேண்டாம் என்று சொல்லப்பட்டது. இரண்டு நாட்களுக்கு, ஒரு குடிசையில் வைக்கப்பட்டு, பிறகு, பேரூந்து மூலம் டாக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டோம்.

“டாக்கா பேருந்து நிலையத்தில் சலீம் என்ற மற்றொரு லஸ்கர் ஆளை சந்தித்தோம். அங்கிருந்து கடற்கரையிலுள்ள காக்ஸ் பஜார் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இந்த காலக்கட்டத்தில், குறைந்த பட்சம் 11 முறை, நாங்கள் எங்களது ஓட்டல்களை மாற்ற வேண்டியிருந்தது.

“அதே நேரத்தில், மறுபடியும் குழப்பம் ஏற்பட்டது, ஏனெனில், அந்நேரத்தில் மும்பையில் வெடிகுண்டு மற்றும் 26/11 தாக்குதல் ஏற்பட்டிருந்தது. பங்களாதேச போலீஸ் சலீமைத்தேட ஆரம்பித்தது. அவ்வாறே, போலீஸ் அவனைப் பிடித்து, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டான். நாங்கள் பாகிஸ்தானிற்கு அனுப்பப்படமாட்டோம் என்று சொல்லப்பட்டது. பாகிஸ்தானில் இருந்த லஸ்கர், நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு நிரந்தரமாக சென்றுவிட்டு, அங்கிருந்து, எங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்றது. அப்பொழுது நான் நவாஜை தொடர்பு கொண்ட்டேன், அவனும் எனக்கு பணத்தை அனுப்பிவைத்தான்.

“பிறகு ஆஸிஃப் என்ற கூட்டாளியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவன் எங்களுக்கு ஒரு ஈ-மெயில் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்தான். அதன்மூலம், வேண்டியபோது, நவாஜை தொடர்பு கொண்டால், அவன் பணத்தை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பான் என்றான்.

“அவ்வாறே, நாங்கள் தொடர்பு கொண்டோம், பணம் வந்தது. ரூ.70,000/- ஹவாலா[6] மூலம் கிடைத்தப் பணம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, அதை வைத்துக் கொண்டு, வளைகுடாவில் எங்களது, அடித்தளத்தை அமைத்தோம்.

“பிறகு, ஒரு ஏஜென்டை அணுகி, துபாய்க்குச் செல்ல விசா ஏற்பாடு செய்துத் தருமாறு கோரினோம். அப்பொழுதுதான், எங்களை பங்களாதேச துப்பறிவாளிகள் கண்டுபிடுத்து, இந்தியாவினுடன் ஒப்படைத்தனர்”, என்று கூறி முடித்ததாக உள்ளது.

maulana_madani_aggrressive

maulana_madani_aggrressive
T-Naseer-LeT

T-Naseer-LeT
soofiya_madani_14.12.09

soofiya_madani_14.12.09

கேரள போலீஸார் தடியன்டவிடே நசீருக்கு உதவுவது ஏன்? அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, கேரள போலீஸார் நடத்தும் விதத்தைக் கண்டு, அதிகமான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதன்படியே, ஐ.பி மற்றும் ராவின் உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரத்திடம் இதைப் பற்றி சொல்லியுள்ளனர். கேரள போலீஸ் துறையிலுள்ள, சில கருப்பு ஆடுகள் நஸீருக்கு உதவுகின்றன அன்று அவர்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்[7]. அதன்படியே, உள்துறை அமைசகம் கேரள அரசை விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நஸிரின் முகத்தை மறைக்காமல் இருப்பது, ஊடகக்காரர்கள் அவனது போகும் இடங்களை அறிந்து கொள்வது, அவனுடன் பேச எத்தனிப்பது………..முதலியன நடக்கும் விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கேரள போலீஸாரை சந்தேகிக்கும் மத்திய புலனாய்வுத்துறை: “மதானிக்கு எதிராக தான் எந்த குற்றச்சாட்டையும் சொல்லவிலை என்று ஊடகக்காரர்களுக்கு கடந்த ஜூன் மாதத்தில் தடியன்டவிடே நசீர் சொல்லியிருப்பது பொய். அவன் மதானியுடனான தனது தொடர்பை தேசிய புலனாய்வுதுறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். ஆகவே, அந்நிலையில் எல்லாம் நஸீருடைய முகம் தெரியாதபோது, கொச்சியில் தெரியும்போது, கேரள போலீஸாரின் மீது சந்தேகம் ஏற்படுகிறது”, என்று மத்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. ஈ.கே.நாயனார் கொலைமுயற்சி, பேங்களூரு தொடர்குண்டு, கோழிக்கோடு இரட்டைக்குண்டு வெடிப்பு, மற்றும் தமிழக பஸ் எரிப்பு என்று பல வழக்குகளில் இவன் சம்பந்தப்பட்டுள்ளான் என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர்[8].

தாவூத் ஜிலானியுடன் சம்பந்தப்பட்டுள்ள தடியன்டவிடே நசீர்: தடியன்டவிடே நசீர் லஸ்கர் தீவிரவாதி மட்டுமல்லது தாவூத் ஜீலானி என்கின்ற டேவிட் ஹெட்மேன் கோல்மென் என்ற தீவிரவாதியுடனும் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் பங்களாதேசத்தின் உடனடி நடவடிக்கை போலீஸார், எஃப்.பி.ஐ கொடுத்த தகவலின்படித்தான், அந்த மூன்று லஸ்கர்-சந்தேகத் தீவிரவாதிகளை பிடிக்கச் சொன்னது[9].  அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும், வழக்குகள் நடக்கும்போது, குற்றவாளிகளைப் பற்றிய விவரங்கள் வெளிவர விரும்புவதில்லை, ஏனெனில், அங்குள்ள நிலைப்படி, குற்றவாளிகள், அப்படி வெளிவரும் விவரங்களை வைத்துக் கொண்டு, வழக்குகளை தமக்குச் சாதகமாக்கி விடுவர்; சாட்சிகளை கலைத்து / மாற்றி விடுவர், அல்லது பாதகமான ஆட்கள் வெளியேற்றப்படுவர் அல்லது நீக்கப்படுவர்.


[1] பெங்களுரு போலீஸார் தயாரித்துள்ள “டோசியர்” மீது ஆதாரமான விவரங்கள், தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன.

[2] பாஸ்போர்ட்டுகளில், இப்படி பல பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான, அதாவது, அப்படி பல பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்துள்ளான். இதற்காக ஆவன செய்வதெல்லாம், முஸ்லீம்கள் வைத்துள்ள சுற்றுப்பயண உதவி மையங்கள் (டிராவல் ஏஜென்டுகள்) தாம்.

[3] தீவிரவதிகளுக்கு படிப்பைத் தவிர, இப்படி பல தொழிற்துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது, ஏனெனில், நுணுக்கமான ஆயுதங்கள், கருவிகள் முதலியவற்றை அவர்கள், தங்களது தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியுள்ளது, அவற்றை கையாள வேண்டியுள்ளது. ஒன்று, இதற்காகவே, பொறியியல் படுப்புக் கூட படிக்கிறார்கள் அல்லது பொறியியல் படித்தவர்கள், இந்த வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

[4] வங்கி கணக்குகள், இதர ஆவணங்கள், இந்த தொடர்பைக் காட்டியுள்ளன.

[5] அவை “powerful sleeper cells” என்று குறிப்பிடப்படுகின்றன. அங்கு அவர்களுக்கு மற்றும் தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு வேண்டியவை அனைத்தும் இருக்கும்.

[6] ஹவாலா பணம் எப்படி தீவிரவாத-பயங்கரவாத-நாசச்செயல்களுக்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முஸ்லீம்கள், இதனை மிகவும் சாமர்த்தியமாக உபயோகித்து, ஒன்று தங்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர், இரண்டு மணத்தைப் பற்றிய போக்குவரத்து, எந்த கணக்கிலும் வராமல் இருப்பதால், எந்த வரியையும் அவர்கள் செல்லுத்துவதில்லை.

[7] Arjun Raghunath, Black sheep among cops shielding LeT man Nazeer, Express News Service,First Published : 25 Jun 2010 03:01:37 AM IST; Last Updated : 25 Jun 2010 07:53:38 AM IST,

http://expressbuzz.com/topic/black-sheep-among-cops-shielding-let-man-nazeer/184388.html

[8] http://www.asianetindia.com/news/kerala-seeks-custody-thadiyantavide-naseer_106730.html

[9] http://www.asianetindia.com/news/arrest-naseer-accomplice-registered-meghalaya_106626.html

யார் இந்த அப்துல் நாசர் மதானி?

ஓகஸ்ட் 19, 2010

யார் இந்த அப்துல் நாசர் மதானி?

தேதிகள் வாழ்க்கை நிகழ்வுகள்
ஜனவரி, 18, 1966 சாஸ்தம்கொட்ட, கொல்லம் என்ற இடத்தில் அப்துல் நாசர் பிறந்தது.
1986-88 இஸ்லாமிய கல்வி கற்று, “மதானி” ஆதல். மதனி என்பது இஸ்லாமிய பட்டப்படிப்பு ஆகும்.
1988-92 ஆர்.எஸ்.எஸ் மற்ற இந்து இயக்கங்களுடன் சண்டை, அடிதடி முதலியன.
ஆகஸ்ட். 6, 1992 குண்டுவெடிப்பில் காலை இழந்தது.
டிசம்பர் 11, 1992 இஸ்லாமிக் சேவக் சங் ஆரம்பித்தான்
பிப்ரவரி 14, 1998 கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு. 58 பேர் பலி, 200க்கும் மேல் காயம், அத்வானியைக் கொல்லத்தான் இந்த குண்டுவெடிப்பு என்று கருதப்பட்டது. தாமதமாக வந்ததால் அத்வானி தப்பித்தார்.
ஏப்ரல். 8, 1998 ஈ. கே. நயினார் இவனை கைது செய்து தமிழக போலீஸாருக்கு ஒப்படைத்தல்
செப்டம்பர் 9, 2005 கலமஸரி (கொச்சிக்குத் தொலைவில்) என்ற இடத்தில் தமிழக பேருந்து எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் சிறையில் மதானி துன்புறுத்தப்பட்டதாக, தமிழகத்தைப் பழிவாங்க இவ்வாறு செய்யப்பட்டது. இதற்கு அவனுடைய மனைவியே காரணம் என்று சொல்லப்பட்டது.
மார்ச். 16, 2006 காங்கிரஸ் கூட்டில் இருந்த UDF மதானி உடல்நல குறைவாக இருப்பதனால் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட். 1, 2007 மதானி தமிழக கோர்ர்ட்டினால், தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டான்.
அக்டோபர். 7-11, 2008 கேரளாவைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் காஷ்மீரத்தில் கொல்லப்பட்டனர். இதில் துப்பறிந்து, விசாரித்தபோதுதான், மதானி மற்றும் சூஃபியா முதலியோரது பங்கு வெளிப்பட்டது
மார்ச். 21, 2009 பினாராய் விஜயன் என்ற CPI(M) கட்சியின் நிர்வாகி, மதனியுடன் மேடையில் சரிசமமாக உட்கார்ந்து பேசினார்கள். இதனால், கேரள அரசியலின் போலித்தனம் வெளிப்பட்டது.
மார்ச். 25, 2009 அச்சுதானந்தன், முதலமைச்சர் மதானி தம்பதியரின் தீவிரவாதத் தொடர்பு பற்றி விசாரிக்கப்படும் என்று அறிவித்தாலும், உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாது என்று சொல்லுதல்.
ஏப்ரல்.1, 2009 கொச்சியில், அலுவா என்ற இடத்தில் உள்ள நீதிமன்றம், பேருந்து எரிப்பு வழக்கில் சூஃபியாவை விசாரிக்கும்படி ஆணையிட்டது.
Madhani-Sufia-Salahudin-Omar

Madhani-Sufia-Salahudin-Omar

அப்துல் நாசர் மதானி 1965ம் ஆண்டு சாஸ்தாம்கோட்டா என்ற இடத்தில் கேரளாவில் பிறந்தான். இளம்வயதிலேயே, இஸ்லாம் அடிப்படைவாத எண்ணங்களுக்குட்பட்டு, சிமி போன்ற இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்தான். ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்-RSS) என்ற இந்து இயக்கத்தின்மீது தீராத வெறுப்புக் கொண்டான். அந்நேரத்தில், இந்துக்களை ஒன்றுசேர்க்க, அது மேற்கொண்ட முயற்சிகளும் இவனுக்குப் பிடிக்கவில்லை. தனது 20வது வயதிலேயே -1985 – தீப்பொரிக்கப் பேசுவதில் வல்லவன் ஆனான். தூய மலையாளத்தில் ஏற்றி-இறக்கி பேசுவதில் திறமையை வளர்த்துக் கொண்டான். அவனுடைய பேச்சுகளில், இளைஞர்கள் மயங்கினர்.

madani and umer mukthaar

madani and umer mukthaar

தனது 25வது வயதில், இஸ்லாமிக் சேவக் சங் (ISS) என்ற இயக்கத்தை, ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்-RSS) என்ற இந்து இயக்கத்திற்கு எதிராக 1990ல், என்று ஆரம்பித்தான். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் ஆதிக்கம் இல்லாத கேரளாவின் தெற்குப்பகுதிகளில், முஸ்லீம் இளைஞர்களிடம், இந்த இயக்கம் தாக்குதலை ஏற்படுத்தியது[1].

Maudany_arrest-drama-2010

Maudany_arrest-drama-2010

1992ல் ராமஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையில் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார்கள் அதனால் ஐ.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டது.

so-many-required-to-arrest-madani

so-many-required-to-arrest-madani

1994ல் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) என்ற கட்சியை ஆரம்பித்தான். முஸ்லீம்கள், தலித்துகள் மற்ற ஒடுக்கப்பட்டவர்களூக்கானக் கட்சி என்ற போர்வையில் இவ்வியக்கம் வேலை செய்ய ஆரம்பித்தது. யுனைடெட் டெமாக்ரெடிக் பார்ட் UDFயுடன் கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்த ஆரம்பித்தாலும், இவனுடைய தீவிரவாத பேச்சுகளைக் கண்டு, அரசியல்வாதிகள் தயங்கவே செய்தனர். ஜிஹாத் போர்வையில், தீவிரவாத எண்ணங்களை இளைஞர்களின் மனங்களில் ஊட்டியதை அவர்களால் கண்டுகொள்ள முடிந்தது.

The-Madani-arrest-drama-2010

The-Madani-arrest-drama-2010

மாராட் என்ற கடற்க்கரைக் குப்பத்தில் மே 2, 2003 அன்று எட்டு மீனவர்கள் கொடுமையான முறையில் கழுத்துகள் வெட்டப்பட்டுக் கிடந்தனர். அத்தகைய கழுத்தறுக்கும் முறை, கைதேர்ந்தவர்களால் தான் முடியும் என்பது விசாரணை மற்றும் ஆய்வில் தெரியவந்தது. அப்பொழுதுதான், அது சாதாரணக் கொலையில்லை, பின்னணியில், ஏதோ விஷயம் இருக்கவேண்டும், என்று ஆய்ந்தபோதுதான் ஜிஹாதி தீவிரவாதம் வெளிப்பட்டது. அதாவது, அந்த எட்டு மீனவர்களும் இந்துக்கள், மேலும் அவர்கள் இந்துக்கள் என்பதினால்தான் அவ்வாறு குரூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்ற விஷயம் வெளிவந்தது[2]. மேலும், இதில் பி. கோயா என்ற தேசிய வளர்ச்சி முன்னணி (NDF) மற்றும் முந்தைய சிமி இயக்க உறுப்பினரின் சம்பந்தமும் வெளிப்பட்டது. ஆனால் என்.டி.எஃப் என்பது தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.எஸ் [ISS or Islamic Volunteer Service] இயக்கத்தினருக்கு ஒரு மறைப்பு இயக்கமாக உள்ளது என்று போலீஸாருக்குத் தெரியும் என்று அவர்களின் அறிக்கைக் குறிப்பிடுகிறது. நவம்பர் 2006ல், மறுபடியும் தடை செய்யப்பட்ட இந்த இயக்கங்கள் – மனித நீதி பாசறை (தமிழ்நாடு), ஃபோரம் ஃபார் டிக்னிடி (Karnataka Forum for Dignity) –எல்லாம், தமது முகமூடியை மாற்றிக்கொண்டு,  பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற பெயரில் தோன்றியது.

Madhani-drama-2010

Madhani-drama-2010

மார்ச் 1988ல், கோழிக்கோட்டில், அத்தகைய பேச்சு எல்லைகளைக் கடந்தபோது, கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்டு, கேரள போலீஸார் வசம் இருக்கும்போதுதான், தமிழக போலீஸார், கோயம்புத்தூர் குண்டு வெடிப்பிற்காக, இவனைத்தேடி வந்தது. கைதுசெய்யப்பட்ட இவன் 2007 வரை சிறையில் இருந்தான். கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளுக்கு, தீவிரவாத முஸ்லீம்களுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்தான் என்பது இவன்மீதானக் குற்றாச்சாட்டு. கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புகள், எல். கே. அத்வானி அங்கு ஒரு பொதுகூட்டத்திற்கு பேசவருவதார்கு முன்பு நடந்தது. ஆனால், சிறப்பு நீதிமன்றம் இவனை விடுவித்தது. ஆனால், அவன் மற்றும் அவன் மனைவிமீது, எர்ணகுளத்தில், ஒரு தமிழக போக்குவரத்து பேரூந்தை எரித்த வழக்கில் சம்பந்தப்பட்டதால், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

madanee-sufi-bomb

madanee-sufi-bomb

சூஃபியா டிசம்பர் 2009ல் கைது செய்யப்பட்டாள். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதி தடியந்தவிடே நஸீர் (Tadinyandavaeeda Naseer) கொடுத்த வாக்குமூலத்தில், மதானிக்கு பெங்களுர் குண்டுவெடிப்பிலும் சமந்தம் இருக்கிறது என்று சொன்னதாக உள்ளது[3].  இந்த நஸீர் ஏற்கெனவே ISSன் முக்கியமான உறுப்பினர் மற்றும் மதானியின் நம்பிக்கையானவன். பெங்களூர் குண்டுவெடிப்பிற்கு முன்பு கூடிபேசிய கூட்டத்தில், மதானி, அவன் மனைவி சூஃபியா, முதலியோர் இருந்தனர்[4]. மதனி கேரளா மற்றும் குடகு பகுதிகளில் இருக்கும்போது, பெங்களூர் குண்டுவெடிப்புப்பற்றி திட்டம் திட்டியதாக நஸீர் சொல்லியுள்ளான். ஃபயாஸ் என்பவனின் வீட்டை சோதனையிட்டபோது, தடைசெய்யப்பட்ட சிமியின் கால அட்டவணை ஒன்று கிடைத்தது. அதில் எப்படி ஜிஹாத் அயோத்யாவிலிருந்து ஜெருஸலேம் வரை போராடவேண்டும் என்றுள்ளது. இந்த ஃபயாஸ், காஷ்மீரத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் நடந்த சண்டையில் உயிரிழந்தான். அப்பொழுது, அவந்தமிருந்த ஆவணங்களை பரிசோதித்தபோது, அவன் கேரளாவைச் சேர்ந்தவன் என தெரியவந்தது[5].

நஸீர் 2009ல் பங்களாதேஷத்தில், பங்களா ரைஃபிள் வீரர்களினால் கைது செய்யப்பட்டான். அப்பொழுது, அவன் போலீஸாரிடன் சொன்னதாவது[6], “மதனி தான் கூர்கில் ஹோஸ்ததா என்ற இடத்தில் இருந்தபோது, மதனி அங்கு வந்து சந்தித்ததான். 2008ல் அங்கு இஞ்சி தோட்டம் வைத்துள்ளது மாதிரி, உண்மையில் தீவிரவாத பயிற்சி அளித்துவந்தான். சில ஆட்களை பெங்களூரு வேலைக்கு வைத்து, பிறகு போலீஸாரின் திசைத் திருப்ப, நல்ல வேலைக்குச் சென்றுவிடு. கோயம்புத்தூரில் செய்தது போல செய்யவேண்டாம் (அதாவது எல்.கே.அத்வானியை விட்டுவிட்டது மாதிரி இருக்கக்கூடாது[7])”.

“மதனி சொல்லியபடியே, கேரளவிலிருந்து வந்த ஆட்களிடம், அந்த வேலையை ஒப்படைத்தேன். ஜூலை 26, 2008 கேரளாவில் மந்தன்வாடி என்ற இடத்தில் கே. பி. ஷப்பீர் என்பவனை சந்தித்தேன். பிறகு மதனியுடன் 9349955085 என்ற அவனுடைய எண்மூலம் மற்றும் 9744386493 என்ற தன்னுடைய செல்போனி மூலமும் தொடர்பு கொண்டேன். மதனியின் அந்தரங்க செயலாளி ரஸீப் பேசினான். அவன் மதனியை அன்வராசேரியில் வந்து சந்திக்குமாறு கூறினான். அங்குதான் மதனியின் தலைமையகம் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளது[8].

நஸீர் அன்வராசேரிக்கு போவதற்கு முன்பு மதனிக்கு ஒரு எஸ்.எம்.ஏஸ் கூட அனுப்பினான். ஆனால், அங்கு ஆகஸ்டில் சென்றபோது, மதனியின் சகோதரன் ஜமால் என்பவனைத்தான் சந்திக்க முடிந்தது. குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, மதனியின் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன, மற்றும் கண்காணிக்கப்படுவதால் மதனி அங்கு வரவில்லை. மேலும் நஸீரையும் போலிஸார் தேட ஆரம்பித்துவிட்டதால், தப்பொச்செல்லுமாறு கூறியுள்ளான். அதன்படியே நஸீர் பங்களாதேஷத்திற்கு தப்பியோடிவிட்டான். முன்பு, மதனியின் தாக்கத்தினால்தான், கண்ணூரில், தாயில் என்ற இடத்தில் சில்சிலா நூர்லிஸா தஹ்ரீக் (Silsila Noorlisha Tahreekh) என்ற இயக்கத்தை ஆரம்பித்ததாகவும் கூறினான்[9].

மதனியின் சுயசமர்ப்பண மனுவிற்கு எதிராக போலீஸாரால் கொடுக்கப்பட்டுள்ள 57 பக்கம் கொண்ட எதிர்வாதங்களில், “மக்தனி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 12 நபர்களுடன் 9349955085, 9349955082 மற்றும் 9846838833 என்ற எண்கள் கொண்ட கைப்பேசிகளில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். இவையெல்லாம் அவனுடைய மனைவியின் எண்கள்தாம்”, என்று எடுத்துக்காட்டியுள்ளனர்[10].

இப்பொழுது அவ்வழக்கில் மதானியின் பெயர் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளான். ஆனால், மதானியோ, தனக்கும் அதற்கும் சமந்தம் இல்லை என்றும், புலன் விசாரணை செய்யும் நிறுவனங்கள்தாம், தன்னை இப்பிரச்சினையில், சிக்கவைக்க முயல்கிறார்கள் என்றும், குற்றஞ்சாட்டி வருகிறான்.


[1] http://economictimes.indiatimes.com/News/Madani-stands-isolated/articleshow/6330830.cms

[2] http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Taliban-style-courts-in-Gods-Own-Country/articleshow/6182633.cms

[3] http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Taliban-style-courts-in-Gods-Own-Country/articleshow/6182633.cms

[4] According to sources, Madani’s alleged involvement in the case came to light after the arrest of Naseer, his aide-cum-follower. Naseer was also a member of Islamic Seva Sangh (ISS) of Madani, and later joined PDP. “The interrogation revealed that several meetings regarding the blasts had taken place in the presence of Madani’s wife. Madani was aware of the Bangalore blasts,” sources said. According to Kerala police, Madani was in the know of the blasts masterminded by Naseer.

http://timesofindia.indiatimes.com/india/Blore-blasts-Non-bailable-warrant-against-Madani/articleshow/6057024.cms

[5] Madani hatched his plans while in Kerala and Kodagu, the CCB charged. It said several books and a Simi calendar that called for Jihad ‘Ayodhya to Jerusalem’ had been recovered from the house of another accused in the case, Fayaz, who was later killed in an encounter with security forces in Kashmir. These showed that the blasts accused were members of the banned Simi. http://www.deccanchronicle.com/bengaluru/madani-war-state-ccb-335

[6] Naseer, who was arrested in 2009 in Bangladesh by the Bangladesh Rifles allegedly told the police that Madani had visited him in Hosthata in Coorg district, where he had set up a terrorist training camp in early 2008 under the guise of ginger cultivation and instructed him to assign a few men for the Bengaluru blasts to escape ‘police attention’ and asked him to do a proper job, ‘unlike the Coimbatore blasts,’ (which missed the main target—the BJP leader L.K. Advani.)

[7] http://www.deccanchronicle.com/bengaluru/blasts-%E2%80%98pupil%E2%80%99-gave-madani-away-016

[8] Naseer alleged that on the instructions of Madani he put together a small team of men from Kerala for the job. According to his statement, the day after the blast, on July 26, 2008 Naseer went to Manandwadi in Kerala; met co-accused K.P. Shabeer and called Madani on his cell phone (number 9349955085) from his mobile phone (number 9744386493). Madani’s personal assistant Razeeb answered the call and asked Naseer to meet Madani on July 27 at Anwaraserry, the PDP leader’s headquarters cum orphanage.

[9] Naseer also sent an SMS to Madani before setting off to Anwaraserry where Madani’s brother Jamal met them and told them that Madani couldn’t come because his phones were tapped and he was under police surveillance following the serial blasts. Naseer finally managed to meet Madani in the last week of August at Anwaraserry where he asked Naseer to escape as the police was hunting for him. Naseer fled to Bangladesh and took refuge there till his arrest. Naseer also alleged that it was under Madani’s influence that he started a radical outfit — ‘Silsila Noorlisha Tahreekh’ in Thayil, Kannur.

[10] The police, in their 57-page statement of objections, said that Madani maintained telephonic contact with 12 of the accused in the case. He had used mobile numbers 9349955085, 9349955082 and 9846838833, which stand in the name of Sufiya Abdul Nasser Madani (wife) and Rejeeb, respectively.  Read more: Court reserves verdict on Madani’s plea – Bangalore – City – The Times of India http://timesofindia.indiatimes.com/city/bangalore/Court-reserves-verdict-on-Madanis-plea/articleshow/6333286.cms#ixzz0x3jxDEIn