Archive for the ‘சந்தனம் பூசும் நிகழ்ச்சி’ category

தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

ஜூன் 6, 2010

தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

முஸ்லீம்கள் ஏதாவது ஒரு விஷயம், பிரச்சினை, பொருள், சின்னம்………….தங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால், அது எத்தகைய இஸ்லாம்-விரோதமாக இருந்தாலும் அமைதியாக இருந்து விடுவர். அதே விஷயம், பிரச்சினை, பொருள்………….இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறது என்று, இன்னொரு இடத்தில் பயங்கரமாக விளக்கி, இமாந்தாரர்களை மிரட்டுவர். இத்தகைய இருநிலைகள் ஏன் என்று தெரியவில்லை.

மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம்: சென்னை 05-06-2010 – ஞாயிற்றுக் கிழமை: காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாளை முன் னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு வந்த  கருணாநிதி, மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன்  ஸ்டாலின், அமைச்சர்கள் உடனிருந்தனர். காலை 11 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கட் சிப் பிரமுகர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலர் அன்வர்ராஜா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச் சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

திராவிட நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆரூண் எம்.பி., உள் ளிட்ட காங்கிரசாருடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் கட்சியினருடன், காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், முன் னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, பொதுச்செயலர் ஜகிருதீன் அகமது உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இஸ்லாமியருக்கு திருமாவின் அறிவுரை:  இந் நிலையில்  தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர்.

திருமா-முல்லா-2010

திருமா-முல்லா-2010

அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

நாகூர் தர்கா கந்தூரி விழா:கொடியேற்றம்,சந்தனம் பூசும் நிகழ்ச்சி, ரதங்களில் ஊர்வலம்!

மே 11, 2010
நாகூர் கந்தூரி விழா கொடியேற்றம்
மே 11,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24900

நாகப்பட்டினம் : நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா துவக்கத்திற்கு ஏற்றப்படும் கொடி, சிங்கப்பூரில் இருந்து நாகைக்கு நேற்று மாலை வந்தது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில் 453 ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 25ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

சோழ மன்னர் சரபோஜி கட்டித்தந்த பெரிய மினவரா உட்பட ஐந்து மினவராக்களிலும் வரும் 15ம் தேதி இரவு 9.30 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றப்படும் கொடி ஆண்டு தோறும் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து நாகைக்கு கொண்டு வரப்படும். நாகையில் இருந்து ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக புறப்பட்டு நாகூருக்கு வந்த பின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கும்.

பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றுவதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கொடி நேற்று காலை சென்னை வந்தது. அங்கிருந்து கார் மூலம் நாகை செம்மாரக்கடை தெருவில் உள்ள வாப்பாக்கண்ணு என்பவர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொடியை யானை மீது ஏற்றி முஸ்லிம் ஜமாத்தார்கள் ஊர்வலமாக, யாஹஈசைன் பள்ளித்தெரு அமீது சுல்தான் வீட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு தொடர்ந்து ‘பாத்தியா’ ஓதப்பட்டு வரும் 15ம் தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக நாகூர் தர்காவிற்கு சென்று கொடி ஏற்றப்படும்.

நாகூர் தர்கா கந்தூரி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
மே 16,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25112

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா, கொடியேற்றத்துடன் நேற்று (15-05-2010) துவங்கியது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா, நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் நாகை மீரா பள்ளிவாசலில், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு ‘துவா’ ஓதப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம் மற்றும் செட்டிப் பல்லக்கு, கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்ட இரண்டு வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு நாகூர் தர்கா வந்தடைந்தது.

தர்கா ஆலோசனை கமிட்டி தலைவர் செய்யது காமில் தலைமையிலான நிர்வாகிகள், கொடிகளுக்கு வரவேற்பு கொடுத்தனர். தர்காவில் மவுலியாக்கள் சிறப்பு ‘துவா’ ஓதிய பின், ஐந்து மினவராக்களிலும் கொடி  ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்திரிகர்கள் பங்கேற்றனர்.