19-04-2023, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல், ஜமேஷா முபீன் கூட்டாள்களின் சதி வெளிப்படுத்தப் பட்டது!

கோவை காஸ் சிலின்டர் வெடிப்பு, திட்டமிட்ட குண்டு வெடிப்புதான்: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது[1]. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், பலியானார்[2]. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது[3]. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள “அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்” என்ற பழமையான கோவிலில் கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது[4]. ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (V-IED) கோவிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பில் முபீன் கொல்லப்பட்டார். முதலில், அது வெறும் குக்கர் தான், ஏதேச்சையாக, தற்செயலாக, விபத்து போல வெடித்தது என்று கூட சில ஊடகங்கள் திரித்து செய்திகள் வெளியிட்டன. திமுக மற்றும் திராவிடத்துவ ஆதரவாளர்கள் அதை திவிரவாத தாக்குதல் என்பதனையே மறுத்துப் பேசினர், வாதிடவும் செய்தனர். ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியைக் கூட தரக்குறைவாகப் பேசினர்.

11-பேர் கூட்டு சதிகாரர்கள் திட்டமிட்டு செய்தது: போலீஸ் விசாரணையில், இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, உள்ளிட்ட, 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது[5]. இவர்களை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், 20-04-2023 அன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்[6]. மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி இளவழகன்முன், 21-04-2023 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கார் முதல் கெமிகல்ஸ் வரை எல்லாமே திட்டமிட்டு பெறப்பட்டது, குண்டு தயாரிக்கப் பட்டது: இந்நிலையில் உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட டி.என்.01. எப்.6163 என்ற நம்பருடன் கூடிய மாருதி 800 காரை தல்ஹா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார்[7]. பைரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர், கேஸ் சிலிண்டரைக் கொண்டு காரை வெடிகுண்டாக மாற்ற உதவியுள்ளனர்[8]. அசாருதீன், அப்சர் மற்றும் அவரது உறவினர் முபீன் ஆகியோர் வெடிப்பொருட்களை ஆன்லைனில் வாங்க, வேதிப் பொருட்களின் கலவையை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்துள்ளனர்[9]. இவ்வாறு கூறப்பட்டுள்ளது[10]. அதாவது, இதற்கான ஆதாரங்களுடன் இந்த குற்றப் பட்த்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இன்னும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் உள்ளது என்று என்.ஐ.ஏ. த ரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜிஹாதில் ஈர்க்கப் பட்டு தயாரானது: இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அதன் சுயமாக அறிவிக்கப்பட்ட கலீஃபா அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷிக்கு ‘பயாத்’ அல்லது விசுவாசப் பிரமாணம் எடுத்தார். NIA 27.10.2023 அன்று RC-01/2022/NIA/CHE என வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மேலும் கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தபொழுது, அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த தொடர்பு தெரிய வந்தது. கூட்டாளிகள் சேர்ந்து வேலை செய்ய, அத்தகைய ஜிஹாத் சித்தாந்தமும் வேலை செய்தது என்பது தெரிகிறது. மனைவி-மகனுக்கு ஏற்பாடு செய்து விட்டு, இந்த “புனித” வேலைக்கு இறங்கியதும் கவனிக்கத் தக்கது. இதெல்லாம் அந்த ஜிஹாதி மாடலில் தான் வருகிறது. இதில், தமிழகத்தவரும் சிக்கிக் கொண்டுள்ளது விபரீதமாக உள்ளது. தொடர்ந்து, முஸ்லிம்களே அதில் ஈடுபடுவதும் ஆபத்தாக உள்ளது. அதிலும், தற்கொலை வெடிகுண்டு ரீதியில் செயல்பட தயாராவது, மிகவும் ஆபத்தானது, பயங்காமானது, தீவிவாதமானது.

அகில-உலக தொடர்புகளும் உள்ளன: முகமது அசாருதீனிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு பென் டிரைவில் ஜமேஷா முபீனின் வீடியோ பதிவுகள் இருந்தன, அங்கு அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தினார். ‘காஃபிர்களுக்கு’ (நம்பிக்கையற்றவர்கள்) எதிராக தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். 2019 இல் ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 260 பேரைக் கொன்ற இலங்கையின் தீவிர இஸ்லாமிய மதகுருவான ஸஹ்ரான் ஹாஷிமின் பயான்களால் (பிரசங்கங்கள்) முபீன் ஈர்க்கப்பட்டார்[11]. முபீன் இந்தியாவில் உள்ள ‘காஃபிர்களுக்கு’ எதிராக இதேபோன்ற தாக்குதலைத் திட்டமிட விரும்பினார்[12]. முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மீட்கப்பட்டன, அதில் இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத, தற்போதுள்ள ஜனநாயக அமைப்பை விமர்சிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள், இரயில் நிலையம் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சில உள்ளூர் கோயில்கள் உள்ளிட்ட ‘இலக்குகள்’ குறித்தும் இந்த குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறிபிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றியது: இஸ்லாமிய மாநிலம் கொராசன் மாகாணத்தின் இணைய இதழான ‘வாய்ஸ் ஆஃப் கொராசன்’ இதை உறுதிப்படுத்தியது, ‘பசு மற்றும் எலிகள் வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்கேபி பொறுப்பேற்றது. . இந்த தாக்குதல் அவர்களின் மதத்தின் மாண்பை நிலைநிறுத்தவும், அல்லாஹ்வின் தீனையும் அவனது சட்டத்தையும் தனது நிலத்தில் நிலைநிறுத்தவும், ‘குஃப்ர்’ மற்றும் அதை பின்பற்றுபவர்களை பயமுறுத்தவும் இது ஒரு ஆரம்பம் என்று அச்சுறுத்தும் பழிவாங்கல் என்று கட்டுரை கூறுகிறது. ஆக, இது இந்துக்களை குறிவைத்து நடந்தப் பட்ட தாக்குதல் தான், ஆனால், ஏதோ விதமாக, முன்னரே வெடித்து விட்டதால், ஜமேஷா முபீனே பலியானான்.

பலவித சட்டப் பிரிவுகளில் குற்றப் பத்திரிக்கை தாக்குதல்: முபீனுக்கு அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் உதவினர்[13]. TN-01-F-6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி 800 நீல நிற காரை தல்ஹா பெற்றுக் கொண்டார், இது வாகனத்தின் IED வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது[14]. ஃபிரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்றை ஏற்றி, அது சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியது[15]. முபீனின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அஃப்சர் இருவரும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட VBIEDஐ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கூறுகளை கொள்முதல் செய்து, எடைபோட்டு, கலந்து பேக் செய்திருந்தனர். முபீன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த நிலையில், முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மீது 34, 120பி, 121 ஏ, 122, மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 5 மற்றும் 6 மற்றும் UA (P) சட்டத்தின் பிரிவுகள் 16, 18, 20, 38 மற்றும் 39. கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
© வேதபிரகாஷ்
22-04-2023

[1] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல், பதிவு செய்த நாள்: ஏப் 21,2023 04:35
[2] https://m.dinamalar.com/detail.php?id=3299833
[3] அப்-டேட்-நியூஸ், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல்.. அடுத்தகட்டத்திற்கு நகரும் விசாரணை..!!!, Author: Babu Lakshmanan, 21 April 2023, 11:44 am
[4] https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-bomb-blast-case-nia-submit-fir-210423/
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST.
[6] https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg
[7] தினமலர், கோவையில் வெடித்தது அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகையில் தகவல், Added : ஏப் 22, 2023 06:50; https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028
[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=3301028
[9] மாலைமுரசு, கோவை கார் குண்டு வெடிப்பு… முதல் குற்ற பத்திரிகை தாக்கல்…!, webteam-webteam, Apr 21, 2023 – 07:32
[10] https://www.malaimurasu.com/posts/crime/Arudra-Gold-Scam-Recovery-of-Bank-Accounts-Worth-100-Crores
[11] தந்தி டிவி, இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா? வெளியான அதிர்ச்சி தகவல் , By தந்தி டிவி 21 ஏப்ரல் 2023 9:50 AM.
[12] https://www.thanthitv.com/latest-news/sri-lanka-easter-bombing-and-coimbatore-car-cylinder-explosion-related-181410
[13] தமிழ்.ஏபிபி.லைவ், Crime: கோவை கார் வெடிப்பு வழக்கில் 6 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் – வெளியான அதிர்ச்சி தகவல்கள், By: பிரசாந்த் | Updated at : 21 Apr 2023 12:02 PM (IST); Published at : 21 Apr 2023 12:02 PM (IST)
[14] https://tamil.abplive.com/news/coimbatore/nia-filed-charge-sheet-against-6-people-in-coimbatore-car-blast-case-tnn-112879
[15] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!, Narendran S, First Published Apr 20, 2023, 7:19 PM IST; Last Updated Apr 20, 2023, 8:11 PM IST
https://tamil.asianetnews.com/tamilnadu/shocking-information-released-about-covai-car-blast-rtf2eg

அண்மைய பின்னூட்டங்கள்