Archive for the ‘கொலை வெறி’ category
ஏப்ரல் 15, 2017
கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

காஷ்மீர் கல்லடி–கலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!

கிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.

ரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.

உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.

தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.

இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.
© வேதபிரகாஷ்
15-04-2017

[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.
[2] http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14092128/1079897/Gambhir-Sehwag-tweet-in-support-of-attacked-CRPF-Jawans.vpf
[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா? ஏப்ரல் 15, 05:00 AM
[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/15025043/In-Kashmir-the-military-jeep-YouthHuman-shield-use.vpf
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அகிம்சை, அடி உதை, அடையாளம், அத்தாட்சி, அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, அழிப்பு, அழிவு, ஆப்கன், ஆப்கானிஸ்தான், உமர் அப்துல்லா, கம்பீர், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், காந்தாரம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, கௌதம் கம்பீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், போராட்டம், போராளி, ஷேக் அப்துல்லா, ஷேவாக், Uncategorized
Tags: ஆப்கானிஸ்தான், இஸ்லாம், என்.ஐ.ஏ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கேரளா, சிரியா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத்
Comments: 1 பின்னூட்டம்
ஏப்ரல் 3, 2017
பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மத–காப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை. பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.
© வேதபிரகாஷ்
03-04-2017

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.
[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.
[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused
[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.
[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html
[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.
http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.
[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html
[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT
[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html
[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
பிரிவுகள்: 786, ஃபிதாயீன், அடி உதை, அடி வைத்தியம், அடிப்பது, அஹம்மதியா, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, குத்து வைத்தியம், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைவெறி, சன்னி, சலாபிசம், சலாபிஸம், சிரச்சேதம், சுத்தம், சுத்தி, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூடு, சூடு வைப்பது, சூபி, சூபித்துவம், ஜிஹாதி, ஜிஹாத், ஜோதிடம், தர்கா, தீய சக்திகளை விரட்டுவது, நரபலி, நிர்வாண வைத்தியம், பலி, பலிக்கடா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான், பைத்தியம், மசூதி, மசூதி இடிப்பு, மசூதி எரிப்பு, மசூதி சாவு, மந்திரக் கட்டை அவிழ்த்தல், மந்திரத் தொழிலில், மந்திரம், மாயை, முனி, முஸ்லிம் சாமி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம்-சோதிடம், முஸ்லிம்-மாந்திரிகம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் நரபலிகள், ரத்தக் காட்டேரி, ரத்தக் காட்டேரிகள், ரத்தம், ரத்தம் குடித்தல், வன்முறை, வாஹாபி, வாஹாபி இயக்கம், விமானம், வியாபாரம், வெடிகுண்டு, ஷியா, Uncategorized
Tags: அடி வைத்தியம், இஸ்லாம், கருப்பு ஆடு, சுடு வைத்தியம், சுடுதல், சூடு, சூனியம், தர்கா, தர்கா கூத்துகள், நரபலி, பலி, பில்லி, பைத்தியம், மந்திரம், மாந்திரீக நரபலிகள், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள், ரத்தம், வைத்தியம்
Comments: Be the first to comment
மார்ச் 19, 2017
முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக–பகுத்தறிவு–கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (3)!

பகுத்தறிவு–முஸ்லிம்கள், பெரியார் நாத்திகம்–இஸ்லாம் போன்ற கூட்டுகள் போலித்தனமானது: பெரியாரை அவரது வாழ்நாள் காலத்திலேயே அடக்கி வைத்து, பிறகு அடிமை போல ஆக்கிக் கொண்டனர் முஸ்லிம்கள். பெரியார் முஸ்லிம்கள் பின்னால் அலைந்து-அலைந்து திரிந்தாரே தவிர, எந்த முஸ்லிமும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஜின்னா கழட்டி விட்டது பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. அண்ணா-கருணாநிதிகளும் அதே மாதிரி அடிவருடிகளாக முஸ்லிம்களை பாராட்டி பேசி தான் ஆதரவு பெற்றார்கள், பதிலுக்கு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை அள்ளிக் கொடுத்தார்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸரீன் முதலியோர்களின் நிலையை கவனித்துப் பார்க்கலாம். மதுரை ஆதீனம் முன்னர் கருத்து சொன்னதற்கு முஸ்லிம்கள் அவரை மிரட்டி பின் வாங்க வைத்தனர். இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், மோமினாக இருப்பவன், காபிருடன் எந்த பேச்சையும், சம்பந்தத்தையும், உறவையும், வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அது குரானுக்கு எதிரானது. மொஹம்மது நபி “அல்-காபிரும்” என்ற அயத்தில் சொன்னதிற்கும் விரோதமானது. ஆகவே, இக்கூட்டு “ஷிர்க்” தான். தாங்கள் ஆண்டால், காபிர்களை, “திம்மிகளாக” அடிமைகளாக, ஜெஸியா வரி கட்ட வைத்து ஆளாலாமே தவிர, காபிர்கள் கூட சேர்ந்து ஆளமுடியாது, சல்லாபிக்க முடியாது. அதெல்லாமே, இஸ்லாத்திற்கு எதிரானது தான்.

பேஸ்புக், வாட்ஸ்–அப், டுவிட்டர்– சமூகவளைதளங்களில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் கண்டபடி விமர்சிப்பது: சமூகவளைத்தளங்களில் முஸ்லிம், கிருத்துவர்கள் தங்களது உண்மை பெயர், புனைப்பெயர் ஏன் இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, கேவலமாக, மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாக, கொச்சையாக…..பலவிதங்களில் இந்துமதம், கடவுள், சித்தாந்தம் முதலியவற்றை தாக்கி வருகின்றனர். பகுத்தறிவு, நுண்ணறிவு, நாத்திகம், செக்யூலரிஸம், கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்ற பலபோர்வைகளில் அத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவற்றைத் தட்டிக் கேட்பது ஒரு சிலரே. மேலும், அந்த ஒருசிலருக்கும், மற்ற இந்துக்கள் உதவுவது இல்லை. அதாவது, முட்டாள் இந்துக்களுக்கு ஒற்றுமை இல்லை. இதைத்தான், இவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இந்துத்துவம்” என்று ஆர்பாட்டம் செய்து கொண்டு, குறுகிய வட்டத்திற்குள் கிடக்கின்றனர். இந்துமதத்திற்கு எதிராக, எத்தனை ஆட்கள், கூட்டங்கள், இயக்கங்கள் எப்படி வேலை செய்து வருகின்றன என்பது கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள். தங்களுக்குள் பாராட்டிக் கொண்டு காலம் கழிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பரந்த அளவில் சிந்திப்பது, சமூக விளைவுகளைக் கவனிப்பது, செயல்பாடுகளின் நோக்கத்தை கண்டறிவது, அந்நோக்கம் ஆபத்தாக இருந்தால் தடுப்பது-குறைப்பது-ஒழிப்பது போன்ற முறைகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை.

சட்டமீறல்களுடன் குறங்களை செய்து, சட்டரீதியில் குழப்பங்களை உண்டாக்குவது: இதற்குள் அன்சர்ந்த் பயத்தினால் சரண் அடைந்துள்ளார் என்றும், இக்கொலைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அறிவிப்பது நோக்கத் தக்கது. யாரோ, அவரது சிம்மை உபயோகித்து, பேசியதால் தான், அவர் மீது சந்தேகம் கொண்டது போலீஸ், அதனால் தேடி வந்தது அறிந்து தான் சரணடைந்தார் என்கிறார் அவர். அப்படியென்றால், அவர் தன்னுடைய சிம்மை அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக வைத்திருக்கிறார் என்று தெரிகிறது[1]. போலீஸார் விசாரிக்கும் போது உண்மை தெரிய வரும். தேசிய முஸ்லிம் லீக் சார்பில்[2], “இதை மதரீதியில் சமூக வளைதளங்களில் விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். வியாபாரரீதியில் கூட விரோதம் இருந்திருக்கலாம்”, என்று வெளியிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. விசயத்தை திசைத் திருப்ப அல்லது விளம்பரம் அடையாமல் இவ்வாறு செய்கிறார்கள் போன்றுள்ளது.

ஆங்கில ஊடகங்கள் நிலைமையை ஓரளவிற்கு எடுத்துக் காட்டியுள்ளது: “இந்தியா டுடே” இதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளது வியப்பாகவே உள்ளது[3]. “நாத்திகன் கொலை செய்யப்பட்டான்” என்று தலைப்பிட்டு, என்ன நடந்தது என்று வரிசையாக தெரிவித்துள்ளது[4].
HERE’S WHAT YOU NEED TO KNOW
- Farooq was murdered after he had left his Bilal Estate house in South Ukkadam at around 11 pm after receiving a phone call.
- He was on his scooter and was nearing Ukkadam Bypass Road when four people on motorcycles intercepted him. He tried to flee but couldn’t escape.
- Hearing the commotion, residents of the area rushed out of their homes after which the assailants fled.
- Locals found Farooq’s body lying on the road. His body bore multiple stabs and cuts inflicted by the assailants.
- Coimbatore Deputy Commissioner of Police S Sravanan reached the spot with police and began investigations.
- According to DCP Saravanan, Farooq was the admin of a WhatsApp group of people with rationalistic views who regularly debunk religion and religious claims.
- That vocal opposition to religion might be a possible motive for murder, DCP was quoted as saying.
- Atheist Farooq had posted rationalistic messages on his Facebook page which attracted criticism by members of the Muslim community, who called him an apostate.
- Police collected grabs from CCTV cameras installed at various commercial outlets on the stretch to identify Farooq’s killers.
- The last call on his mobile was traced to a SIM that was obtained on fake Vellore address.
- A large number of DVK cadre gathered at the hospital and demanded a high-level inquiry.
- Ansath’s surrender has been linked to the pressure put on the police by DVK.
- A police official told a newspaper that the religious offence could be just one motive. “We are looking into multiple angles and it is yet to be known if he was executed by communal groups, business rivalry or for personal reasons. One of his controversial religious posts shared in FB attracted criticisms.”
இதைவிட, சுருக்கமாக ஆனால் அதே நேர்த்தில் முழுமையாக மற்றவர்கள் வெளியிடவில்லை என்றே தெரிகிறது.

கோவையில் தி.வி.க பிரமுகர் படுகொலை: சிபிஎம் கண்டனம் (19-03-2017)[5]: கோயம்புத்தூர், மார்ச் 18, 2017- திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட நிர்வாகியான பாரூக், மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாரூக். திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பில் செயல்பட்டு வந்த பாரூக், பகுத்தறிவு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் காரணமாக மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது சிறுபான்மை மதவெறியின் கோரமுகத்தை காட்டுகிறது. சமீபகாலமாக பகுத்தறிவுக் கருத்துகளை முழங்கிய நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கோவிந்த பன்சாரே போன்றோரை படுகொலை செய்த பெரும்பான்மை மதவெறிசக்திகளின் செயலையும், கோவை பாரூக் படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறுபான்மை மதவெறி சக்திகளின் செயலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது, இது, கருத்தை கருத்தால் விவாதிக்க முடியதாவர்களின் – ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் – மதவெறியர்களின் கோழைத்தனமான செயலாகும்.இந்திய நாட்டில் தன் கருத்துக்களை பேசுவதற்கும், எழுதுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாக இச்சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. பாரூக் படு கொலையை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும், மதநல்லிணக்கத்தை விரும்பு கிறவர்களும், சமூக நல்லிணக்கத்தில் அக்கறை உள்ளவர்களும் கண்டிக்க முன்வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் கோவை மாநகர காவல்துறை மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட்டு, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கவும், இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள சக்திகளை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
© வேதபிரகாஷ்
19-03-2017

[1] செல்போன், உதிரிகள் முதலிய வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருப்பதால், இவற்றை மாற்ற, குளறுபடி செய்ய அவர்களால் முடியும் என்று தெரிகிறது.
[2] https://www.youtube.com/watch?v=9wUyZ35k2X4
[3] IndiaToday.in , Coimbatore: Vocal atheist hacked to death, realtor surrenders, Posted by Sonalee Borgohain; New Delhi, March 18, 2017 | UPDATED 12:17 IST
[4] http://indiatoday.intoday.in/story/coimbatore-vocal-atheist-hacked-to-death-realtor-surrenders/1/906973.html
[5] தீக்கதிர், கோவை பதிப்பு, பக்கம். 6, 19-03-2017; http://epaper.theekkathir.org/
பிரிவுகள்: அருவம், அல்-உம்மா, அல்லா, அழிப்பு, அழிவு, ஆத்திகம், இஸ்லாம், உக்கடம், எச்சரிக்கை, எதிர்ப்பு, கடவுள், கடை, கம்யூனிசம், கருத்து, கருத்துச் சுதந்திரம், கருத்துரிமை, கழுத்தறுப்பு, காஃபிர், காஃபிர்கள், கொலை, கொலை செய்வது, கொலை மிரட்டல், கொலை வழக்கு, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, கொளத்தூர் மணி, சகிப்பு, சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சகிப்புத்தன்மை, சிம், சிம் கார்ட், செக்யூலரிஸ ஜீவி, செல்போன், நாத்திகம், பாரூக்
Tags: அடிப்படைவாத சித்தாந்தம், அடிப்படைவாதம், அடிப்படைவாதிகள், ஆத்திகம், இரும்பு, இரும்பு கழிவு, இரும்பு ஸ்கிராப், காபிர், கொலை, கொளத்தூர் மணி, கோயம்புத்தூர், கோவை, திக, திராவிடர், திராவிடர் கழகம், நாத்திகம், பாரூக், பெதிக, பெரியார், மதவெறி, மோமின், மோமொன்
Comments: Be the first to comment
நவம்பர் 7, 2016
“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.
போபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன? தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.

அக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.
வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார்?: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9]. அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.
ஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்?: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே? அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
07-11-2016

[1] Indian Express, Clues to Bhopal SIMI activist jailbreak ‘inside job’: Moulds, CCTV off, Written by Dipankar Ghose | Bhopal | Published:November 7, 2016 3:20 am
[2] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-jailbreak-encounter-insider-job-3740874/
[3] The Hindustan Times, CCTV cameras weren’t working in Bhopal jail when SIMI prisoners escaped, Anirban Roy, Hindustan Times, Bhopal, Updated: Nov 01, 2016 16:04 IST
[4] http://www.hindustantimes.com/india-news/non-functinal-cctv-cameras-may-have-helped-simi-prisoners-escape-sources/story-gxnkltkV0kH5T8ow6zkC7K.html
[5] Amjad, Zaqir Hussain, and Sheikh Mehboob alias Guddu — were among the six who escaped from the district jail three years ago. escaped from the Tantya Bheel central jail in Khandwa district on October 1, 2013.
[6] The Hindustan Times, Bhopal jailbreak exposes security gaps in MP’s best-secured prison, Kalyan Das, Hindustan Times, Bhopal, Updated: Oct 31, 2016 21:49 IST
[7] The tactics used in both jailbreaks were almost identical. On both occasions, the SIMI men used steel spoons, utensils, toothbrushes and metallic tongue cleaners to make crude daggers to attack jail guards. One such weapon was used to slit the throat of head warder Ramashankar Yadav inside the B block of the Bhopal jail between 2am and 3am. Then again, they made a rope ladder with bed sheets — stringing pieces of wood in between for steps. The technique was used by a self-styled SIMI commander at Khandwa jail.
http://www.hindustantimes.com/india-news/bhopal-jailbreak-exposes-security-gaps-in-mp-s-best-secured-prison/story-k5gFUlt9PnTEI2wfhdbRVK.html
[8] Indian Express, Bhopal encounter: Jailbreak not possible without insider help, says MP Home Minister, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 2, 2016 12:26 pm.
[9] When contacted, Madhya Pradesh Home Minister Bhupendra Singh said it was “impossible to escape without inside collusion” and alleged that the jailbreak was facilitated by “funding from outside”. “It must have taken elaborate planning over two to three months because it is not possible to make duplicate keys so early and without help from an insider,” said Singh – Indian Express.
http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-encounter-simi-activists-jailbreak-not-possible-without-insider-help-says-mp-home-minister-bhupendra-singh-3733047/
[10] The Hindu, Death wish on a Bhopal night: Daring escape to nowhere, November 1, 2016.
[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/death-wish-on-a-bhopal-night-daring-escape-to-nowhere/article9289399.ece
பிரிவுகள்: ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், ஒவைஸி, கைதி, கைது, கைபேசி, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, சட்டமீறல், சட்டம் மீறல், சதி, சிபிசிஐடி, சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, சிறையில் அடைப்பு, ஜெயில், ஜெயில் உடைப்பு, ஜெயில் பூட்டு, தப்பித்தல், போபால், Uncategorized
Tags: இஸ்லாம், கண்காணிப்பு, கண்காணிப்பு கேமரா, காவலாளி, காவல், கேமரா, சிமி கொலையாளி, சிமி தீவிரவாதி, சிமி பயங்கரவாதி, சிறை, சிறைச்சாலை, சிறையுடைப்பு, தடை செய்யப்பட்டுள்ள சிமி, தப்பித்தல், திட்டம், போபால், வெளியேறுதல்
Comments: Be the first to comment
நவம்பர் 1, 2016
8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?
ஊடகக்காரர்களின் பொறுப்பு முதலியனவெல்லாம் கூட தீவிரவாதிகளின் உரிமைகளைத் தான் ஆதரிக்கின்றன: இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்[1]. பயங்கரவாதிகள் எந்தஒரு ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று வெளியான தகவல்கள் வெளியாகியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயில் காவலர் கொல்லப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை / கவலையில்லை, ஆனால், இதுபோல கேள்வி கேட்க தயாராக உள்ளார். யோகேஷ் சவுதாரி, “இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார். இதற்கிடையே என்கவுண்டர் நடத்தப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அப்படியென்றால், இவற்றையெல்லாம் யாரோ கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாகிறது. அந்த அளவுக்கு யார் கவனிப்பது, வீடியோ எடுத்தது, தங்களது அடையாளங்களை மறைப்பது – இவற்றைச் செய்வது யார்?
என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் – ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி: என்கவுட்னர் வீடியோக்கள் குறித்தளவை உண்மையா-இல்லையா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்[2]. இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இல்லை அவர்களே தங்களை சுட்டுக் கொண்டனர் என்று கூட ஊடகக்காரர்கள் வாதிப்பார்கள் போலும். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார். இந்த சிமி பயங்கரவாதிகள் தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் 2008, 2011-ல் போலீஸ் கான்ஸ்டபிளை கொலை செய்து உள்ளனர்[3]. பயங்கரவாதிகள் எப்படி சிறையில் இருந்து தப்பினர்கள், தப்பிய பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்[4].
என்கவுன்டர் வீடியோ வெளிவ்ந்தது எப்படி? யார் எடுத்தது?: என்கவுன்டர் வீடியோ பற்றி தான் இப்பொழுது ஊடக ஆராய்ச்சி அதிகமாகியுள்ளது[5]. திங்கட்கிழமை காலை 10.30 – 11.30 இடையில் இந்த சிமி-தீவிரவாதிகள் மற்றும் போலீஸார் மோதல் நடந்துள்ளது[6]. போலீஸார் எடுத்துள்ள வீடியோ தவிர மற்றவர்களும் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது.
Ø அப்படியென்றால், யார் எடுத்தது?
Ø தீவிரவாதிகள் அங்குதான் இருக்கின்றனர் அல்லது போலீஸார் அங்கு வருவார்கள், இவ்வாறேல்லாம் நடக்கும், அப்பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?
Ø அப்படியென்றால், “என்கவுன்டர்” பெயரில், இவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, போலீஸாரை வைத்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்ரது யார்?
Ø அது யார் சார்பாக எடுக்கப்பட்டது?
Ø போலீஸாருக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா?
Ø அது ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தது?
ஊடகங்கள் எப்படி அவற்றை ஒலி-ஒளிபரப்பி விவதாங்களை உடனடியாக ஆரம்பி வைக்கலாம். உடனே தீவிரவாதிகளின் வழக்கறிஞர் அப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கலாம்?
ஸ்டில் டம்பளர், தட்டு கத்தியாக மாறியது, தலைமை கான்ஸ்டெபிள் கொல்லப்பட்டது எப்படி?: சிறையில் சிமி கைதிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியன கூர்மையாக கத்திகளாக மாறியது எப்படி என்பதை யாரும் விள்ளக்குவதாக இல்லை. சிமிக்காரர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை சிறையிலேயே ஏற்படுத்டிக் கொண்டார்களா அல்லது வெள்ளியியிலிருந்து, அத்தகைய தொழிற்நுட்பங்கள் வரவழைக்கப்பட்டனவா என்றும் விவாதிக்கப்படவில்லை. சிறையிலேயே அவற்றை வளைத்து, வெட்டி, ராவி கூராக மாற்றியுள்ளனர் என்றால், எப்படி சாத்தியமாகும். பிறகு, சிறையிலேயே அவர்களுக்கு உதவ யாரோ இருக்கின்றனர் என்றாகிறது? அவர்கள் யார்? ராம்சங்கர் யாதவ் என்ற தலைமை கான்ஸ்டெபிள் தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்[7]. டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் நடக்கும் என்றும் மிகவும் சந்தோசமாக இருந்தார், ஆனால், கொலைகாரர்கள் அவரைக் கொண்டு விட்டார்கள்[8]. இவரது உரிமைகள் பற்றி யார் பேசுவார்கள், விவாதம் நடத்துவார்கள்?
பொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.
© வேதபிரகாஷ்
01-11-2016

[1] தினமலர், என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 19:43 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 20:36 PM IST.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1638739
[3] தினத்தந்தி, சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் என்ற விமர்சனத்தை நிராகரித்தது போலீஸ் , பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST.
[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31210512/Police-rejects-criticism-of-fake-encounter-of-SIMI.vpf
[5] Indian Express, SIMI activists’ jailbreak: Video shows cop shooting at inmate on ground; in another, a talk of talks, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 1, 2016 5:49 am
[6] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-dead-video-jailbreak-undertrials-3731611/
[7] DNA, Bhopal jailbreak: Constable killed by SIMI activists was preparing for daughter’s wedding, Mon, 31 Oct 2016-09:45pm , PTI
[8] http://www.dnaindia.com/india/report-bhopal-jailbreak-constable-killed-by-simi-activists-was-preparing-for-daughter-s-wedding-2269076
பிரிவுகள்: என்கவுன்டர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கொடூரம், கொலை, கொலை செய்வது, கொலை வெறி, சாட்சி, சாவு, சிமி, போபால், வீடியோ, Uncategorized
Tags: இஸ்லாம், என்கவுன்டர், கொலை, கொலை வழக்கு, கொலை வெறியாட்டம், கொலைகாரர்கள், கொலைவெறி, சிமி, சென்ட்ரல், சென்னை, தடை செய்யப்பட்டுள்ள சிமி, போபால், மதம்
Comments: Be the first to comment
நவம்பர் 1, 2016
8–சிமி குற்றவாளிகள் கொலை – தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?
8- சிமி பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் 1977ம் ஆண்டு தோன்றிய இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் ‘சிமி’ இயக்கம் [Students Islamic Movement of India (SIMI)] தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வியக்கத்தின்மீது மத்திய-மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. முஸ்லிம்கள் இன்றும் இவர்களை ஆதரித்து வருகிறார்கள் என்பது, அவர்களது பெற்றோர், உற்றோர், மற்றோர் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் முதலிய காட்டி வருகின்றது. அவர்கள் செய்துள்ள கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடுப்புகள், சிறையிலிருந்து தப்பிச் சென்றது, மறுபடியும் குற்றங்கள் செய்தது, பிடிபட்டது, சிறையில் அடைக்கப்பட்டது முதலியவற்றை மறைத்தே அவ்வாறு செய்து வருகின்றனர். இதற்கு டிவிசெனல்கள் இடம் கொடுத்து விவாதம் செய்வது தான் திகைப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களிடம், அவர்களுக்கு சார்பாக, அவர்களது உரிமைகளை ஆதரிப்பவர்களிடம், அவர்களின் வழக்கறிஞர்கள் முதலியோரைக் கூப்பிட்டு அத்தகைய விவாதம் நடத்துவதில்லை.
சிறையில் இருக்கும், அந்த சிமி–தீவிரவாதிகளின் யோக்கியதை[1]: சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தொடந்து குற்றங்கள் செய்து வரும் இவர்களின் யோக்கியதை இதுதான்[2]:
1. பிப்ரவரி 1, 2014 சோப்படான்டி, கரீம்நகர் மாவட்டம், ஸ்டேட் பாங்கில் ரூ 46 லட்சம் கொள்ளையடித்த வழக்கிலும் ஜாகிட் உஸைன் மற்ரும் செயிக் மஹபூப் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
2. மே.1, 2014 அன்று பெங்களூரு-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து, ஒரு இளம்பெண் கொலைசெய்யப்பட்ட மற்றும் 12க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்த வழக்கு.
இதே வழக்கில் –
1. ஜாகிர் உஸைன் / சாதிக் / விக்கி [Zakir Hussain, alias Sadiq, alias Vicky (32)]
2. செயிக் மஹபூப் / குட்டு [Sheikh Mehboob alias Guddu (30)]
3. எஜாவுத்தீன் [Ejazuddin (32)]
3. ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.
4. செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.
5. டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].
6. பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.
போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் தப்பிச் சென்றது: 2015ல் எஜாவுத்தீன் நல்கொண்டா அருகில் தெலிங்கானா போலீசாரால் கொல்லப்பட்டான். அவ்வகையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக நாட்டில் உள்ள பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் எட்டுபேர் 31-10-2016 அன்று அதிகாலை 2-3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறையில் இருந்த ஸ்டீல் தட்டு, மற்றும் டம்ப்ளரால் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3]. இதைத்தொடரந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த போர்வையை பயன்படுத்தி மதில்சுவரை தாண்டி குதித்து, இந்த எட்டுபேரும் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன[4]. தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றதே, திட்டமிட்டு செய்தது என்று தெரிகிறது. இனி, கைதிகளுக்கு ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியவை கொடுக்கலாமா-கூடாதா என்ற ஆராய்ச்சி நடத்த வேண்டும் போலிருக்கிறது.
தப்பிச் சென்றவர்களை எச்சரித்தும், மறுத்ததால் போலீஸார் சுட்டதில் 8-பேர் கொலை: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்[7] இப்படி தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக செய்திகளை வெளியிட்டன. போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்[8] என்று நீட்டிச் சொல்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மத்திய சிறையில் காவலரை சுட்டுக்கொன்று ஞாயிற்றுக் கிழமை 30-10-2016 அன்றிரவு 8 தீவிரவாதிகளும் தப்பிச்சென்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது என்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ். போபால் புறநகர் பகுதியில் உள்ள இன்கொடி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் 8 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். தீவிரவாத தடுப்பு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்[9]என்று தினத்தந்தி விளக்குகுறது. பயங்கரவாதிகளை சரண் அடைந்து விடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்காமல் பயங்கரவாதிகள் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால், வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கியை பிரயோகித்தனர். அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்[10]என்றும் தினத்தந்தி கூறியுள்ளது. இதனையடுத்து சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட என் கவுண்டரின் உண்மை தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்டது. ஊடகக்காரர்கள் அந்த 8-பேர் எப்படி அங்கு சென்றனர், ஊர்மக்கள் ஏன் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் முதலியவற்றைப் பற்றி கூட விவாதம் நடத்தலாமே?
அரசியலாக்கப் படும் என்கவுன்டர் வழக்குகள்: தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை அரசியல்வாதிகள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்கள் முஸ்லிம்கள் அதனால், அவர்களை ஆதரிக்க வேண்டும், அப்படி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணாத்தில் தான் காங்கிரஸ், ஆப் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிமி பயங்கரவாதிகள் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது. அரவிந்த் கேசரிவாலும் அத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். டிவிசெனல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், ஒவைசியைக் வைத்து, உரிமை போராட்டமே நடத்திக் கொண்டிருக்கின்றன. இனி, பாகிஸ்தான் இந்திய வீரர்களைக் கொன்றதை மறந்து, இதை வைத்துக் கொண்டு கதையை ஓட்ட ஆரம்பித்து விடுவர். எல்லையில் நடந்த அக்கிரமங்களுக்கு இந்திய ராணுவம் பதில் நடவடிக்கை எடுத்தற்குக் கூட, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தான், இதுவும் நடக்கிறது. அப்படியென்றால், எதிர்கட்சிகள் சிமி-தீவ்ரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்று விளக்கம் கொடுக்கலாமா?
© வேதபிரகாஷ்
01-11-2016

[1] The Hindu, Cadres of an outlawed group, with long list of terror cases, Updated: November 1, 2016 01:10 IST.
[2] http://www.thehindu.com/news/national/cadres-of-an-outlawed-group-with-long-list-of-terror-cases/article9288680.ece?textsize=large&test=1
[3] தினத்தந்தி, போபால் சிறைச்சாலையில் இருந்து 8 சிமி இயக்கத்தினர் தப்பி ஓட்டம், பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 8:53 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 8:53 AM IST.
[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31085334/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf
[5] மாலைமலர், சிறையில் இருந்து 8 ‘சிமி’ தீவிரவாதிகள் தப்பியோட்டம், பதிவு: அக்டோபர் 31, 2016 08:29.
[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/31082923/1047882/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf
[7] தினகரன், போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, Date: 2016-10-31 11:47:00
[8] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=255546
[9] தினத்தந்தி, போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை, பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST.
[10] http://www.dailythanthi.com/News/India/2016/10/31120513/8-SIMI-terrorists-who-earlier-today-fled-from-Bhopal.vpf
பிரிவுகள்: அசாதுதீன் ஒவைஸி, அடையாளம், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள் கொல்லப்படுதல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, எச்சரிக்கை, ஐதராபாத், ஓட்டு, ஓட்டுவங்கி, காவலர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, சென்ட்ரல், சென்னை, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, ஜெயிலர், ஜெயில், Uncategorized
Tags: இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், எதிர்-தாக்குதல், என்கவுன்டர், சிமி, சிறை உடைப்பு, சென்னை, தடை செய்யப்பட்டுள்ள சிமி, தப்பியோட்டம், தாக்குதல், போபால், மத்திய சிறை, வீடியோ, வெளியேறுதல்
Comments: Be the first to comment
ஜூலை 19, 2016
பாகிஸ்தான் நடிகை கொலை – ஆணவக் கொலையா, கௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?

பவுசியா அஷீம், குவாந்தீல் பலூச் ஆகி, நடிகை–மாடல் ஆனது: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் குவாந்தீல் பலூச் (26). இவரது இயற்பெயர் பவுசியா அஷீம். பாகிஸ்தானில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். அத்துடன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார். மாடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தவுடன் தனது பெயரை குவாந்தீல் பலூச் என்று மாற்றிக் கொண்டார். மாடலிங்கில் அவருக்கு கிடைத்த புகழை விட சமூக வலைதளங்களில் அவரால் வெளியிடப்பட்ட அவரது வீடியோக்கள் மற்றும் ஏடாகூட”செல்பி” புகைப்படங்கள் மூலம் அவரது ரசிகர் கூட்டம் பெருகியது[1]. அத்துடன் முகநூலில் வெளியிட்ட அவரது சர்ச்சைக்குரிய சுய விளம்பரம் தேடும் கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றார்[2]. கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்து வீடியோ வெளி யிட்டார். அண்மையில் அவரது சர்ச்சைக்குரிய இசை ஆல்பம் ஒன்றும் வெளியானது. ஆனால், பழமைவாதிகளால் அவர் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தார்.
இந்திய தொலைக் காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு கொடுத்தது: சமூகவலைத்தளம் மூலம் உல களாவிய அளவில் அவர் பிரபலமானதால் இந்திய தொலைக் காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் நட்சத்திரங்களில் இணையத்தில் அதிகம் தேடப்படும் 10 பேரில் ஒருவராக குவான்டீல் பிரபலமடைந்தார். பழமைவாதிகள் அவருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். இதன்காரணமாக கராச்சியில் வசித்து வந்த அவர் பாதுகாப்பு கருதி முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவருக்கு உடன் பிறந்த 2 சகோதரிகளும் 5 சகோதரர்களும் உள்ளனர். குவான்டீலின் சமூக வலைத்தள வாழ்க்கையை குடும்பத்தினர் விரும்பவில்லை[3]. வெளியில் பெரிய அளவில் புகழ் பெற்ற போதும் அவரது மாடலிங் தொழில் மற்றும் சமூக வலைதள நடவடிக்கைகளுக்கு அவரது குடும்பத்தார் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. மாடலிங் தொழிலை விட்டு விலகும்படி அவரது சகோதரர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்பகிறது.
முஃப்தி அப்துல் குவாயின் நிலை: அண்மையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவரும், மத குருவுமான முஃப்தி அப்துல் குவாய் [member of Central Ruet-e-Hilal Committee, Mufti Abdul Qawi] என்பவருடன் செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்தியாவில் இத்தகைய படங்களை வைத்து, ஊடகங்கள் “இன்னொரு நித்தியானந்தா” என்றெல்லாம் விவரிப்பர். படங்களுடன் செய்திகளை வெளியிட்டு கலாட்டா செய்வர். ஆனால், இவ்விசயத்தில் அமுக்கப் பார்க்கின்றன போலும். இதனைத் தொடர்ந்து முஃப்தி அப்துல் குவாய் மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது மற்றும் மத்திய ருயத்-இ-ஹிலால் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார் [4]. குவாந்தீல் இம்ரான் கானை சந்திக்க வேண்டும் என்று தன்னிடம் சொன்னதாகவும், ஆனால், அச்சந்திப்பு நிகழவில்லை என்றும் முப்தி கூறினார். ஆனால், இத்தகைய “மரியாதை கொலைகளை” இஸ்லாம் அனுமதிப்பதில்லை மற்றும் பலூச்சின் கொலையை ஷரியத்தின் படியும் நியாயப்படுத்த முடியாது என்றார்[5]. மேலும் தான் பலுச்சை நல்வழிபடுத்த அறிவுறுத்தியதாகவும், பாவம் செய்யக்கூடாது என்று போதித்ததாகவும் கூறினார்[6]. இது (பலூச்சின் கொலை) ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்[7]. இவரை போலீஸார் விசாரிக்க வேண்டுமா, கூடாது என்பது பற்றி மாறுபட்ட கருத்து நிலவுகிறது[8]. ஆக இறுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தான் விஞ்சியது என்றாகிறது.
தென்னாப்பிரிக்கா, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுகளில் வேலை செய்தது (2007-2012): பௌசியா ஆஸீம் மார்ச்.1, 1990ல் பிறந்தாள். 2003-04ல் 14 வயதில் எட்டாவது படிக்கும் போதே, ஒரு பையனை காதலித்தாள், ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ள நினைத்தாள், ஆனால் நடக்கவில்லை, அவன் ஏமாற்றி விட்டான் என்றெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன[9]. இதனால், தான் தனித்து இருக்க விரும்பினாள். அந்த ஏமாற்றம் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு பேருந்து கம்பெனியில் சேர்ந்து வேலை செய்தாள். 2007ல், அதாவது 17 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு தைரியமாக சென்று வேலைக்கு சென்றாள். பிறகு, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வேலை செய்துள்ளாள். அப்படியென்றால், அவளுக்கு அந்த அளவுக்கு துணொவும், தைரியமும் இருந்திருக்க வேண்டும். யாராவது உதவினார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை. பிறகு தான் பாகிஸ்தானுக்கு வந்து நடிப்பு மூலம் தனது திறமைகளை வெளிகாட்டத் தீர்மானித்தாள்[10]. அப்படியென்றால், பத்தாண்டுகளில் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள், உழைத்திருப்பாள் என்பதை கவனிக்க வேண்டும். 2013க்குப் பிறகு தான் அவள் பிரபலமடைந்தாள். வழக்கம் போல தமிழ் ஊடகங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!” என்று தலைப்பிட்டுதான் செய்திகளை வெளியிட்டுள்ளன.
காதல் போல, திருமணமும் தோல்வியில் முடிந்தது (2008-09): குவான்டிலுக்கு 17 வயதிலேயே அவரது பெற்றோர் ஆஷிக் ஹுஸைன் என்பவருக்கு திருமணம் 2008ல் செய்து வைத்தனர்[11]. 2009ல் ஒரு குழந்தை பிறந்தது. ஒரு வருடத்திலேயே அந்த பந்தம் முறிவுக்கு வந்தது. அது ஒரு காதல் திருமணம், பலூச் தனக்கு காதல் கடிதங்களை ரத்ததினால் எழுதினாள் என்றெல்லாம் அவர் சொன்னார்[12]. அவள் தனக்கு பங்களா வேண்டும் என்றெல்லாம் கேட்ட்டாள், அவளுக்காக தான் அதிகமாக செலவிழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் குற்றஞ்சாட்டினார். அவளே பல நாடுகளுக்குச் சென்று வேலை செய்து சம்பாதித்துள்ளாள் எனும் போது, கணவனிடம் ஏன் பணம் கேட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. அவர் மேலும், பலூச் மூன்று திருமணங்கள் செய்து கொண்டால் என்றும் கூறினார்[13]. தினம் தினம் தன்னை கணவர் அடித்து சித்ரவதை செய்ததாக குவான்டில் கூறியுள்ளார்[14]. சீறிய வயதான, அழகான மனைவியுடன் அவரால் வாழ முடியவில்லை என்றால், அவர் மீது ஏதோ தவறுள்ளது என்ற் தெரிகிறது. அவருடன் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தையுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள தாரூல் அமானில் போய் அகதியாக வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் தாய்நாடு திரும்பிய குவான்டில், அடிக்கடி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்தார்[15].
17லிருந்து 26 வயதில் மூன்று திருமணம் செய்து கொண்டு, ஒரு பையனைப் பெற்ற நடிகை: தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான்கானை காதலிப் பதாகவும் அவரை திருமணம் செய்ய காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குவான்டீல் பகிரங்கமாக அறிவித்தார். இதனிடையே குவான்டீலுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவர் கூறியபோது பெற்றோர் வற்புறுத் தலால் இளம் வயதில் கட்டாய திருமணம் செய்து விவகாரத்து பெற்றுவிட்டதாகக் தெரிவித்தார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்[16]. இதெல்லாம் வழக்கம் போல, பிரபலமடைய அவள் கடைபிடித்த யுக்திகள் என்றே தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சர் மற்றும் டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்திருந்தார்[17]. ஆனால், அரசு நிச்சயமாக கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.
© வேதபிரகாஷ்
19-07-2016

[1] https://www.facebook.com/OfficialQandeelBaloch/
[2] தினமணி, பாகிஸ்தான் மாடல் அழகியை “கவுரவக் கொலை” செய்த சகோதரர் கைது, By DN, முல்தான், First Published : 17 July 2016 02:35
[3]http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D/article8859718.ece
[4] விகடன், நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!, Posted Date : 13:46 (16/07/2016).
[5] Earlier today, Qawi said that neither Islam permits killing for ‘honour’ nor Qandeel Baloch’s murder could be justified through sharia. While talking to the media in a mosque in Multan’s Qadeerabad, Qawi said that none could justify murder for ‘honour’ of the family in light of Islam and murderer Wasim should be punished.
http://dunyanews.tv/en/Pakistan/345483-Police-decide-to-interrogate-Mufti-Qawi-in-Qandeel
[6] easternmirrornagaland.com, Qandeel Baloch’s murder a lesson for others: Mufti Abdul Qawi, By PTI / July 18, 2016.
[7] http://www.easternmirrornagaland.com/qandeel-balochs-murder-a-lesson-for-others-mufti-abdul-qawi/
[8] Dunya News, Police decide to interrogate Mufti Qawi in Qandeel Baloch murder case, Last Updated On 18 July,2016 03:53 pm
[9] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/
[10] Back in 2003-04, when she was still in the eighth grade, she fell in love with a boy and they both decided to elope together. Unfortunately, the day Fouzia fled her home the boy she was in love with ditched her. This betrayal marked a turning point in the model’s life who then decided to become completely self-reliant in life. She joined a bus transport company as a hostess and braved the grim challenges of life. Back then, she was reportedly in touch with her family. However, she later decided to move on with her life and joined show business with a new name Qandeel Baloch. In 2007, she went to South Africa to earn money for herself. She later worked in the Middle East and various European countries before opting to return back to Pakistan to work on her acting skills.
http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-balochs-another-husband-with-son-come-forward-model-claims-it-was-forced-marriage/
[11] The Express Tribune, Plot thickens: Qandeel Baloch was once married and has a son, By News Desk, Published: July 14, 2016
[12] Daily Pakistan Global, Qandeel Baloch married thrice, not twice, claims ex-husband, Khurram Shahzad, July 14, 2016 8:41 pm
[13] http://en.dailypakistan.com.pk/pakistan/qandeel-baloch-married-thrice-not-twice-claims-ex-husband/
[14] http://tribune.com.pk/story/1141469/plot-thickens-qandeel-baloch-married-son/
[15] http://www.vikatan.com/news/world/66243-pakistani-model-qandeel-baloch-killed.art
[16] தி.இந்து, பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை: இந்திய கிரிக்கெட் அணிக்கு சவால் விடுத்தவர், Published: July 16, 2016 16:06 ISTUpdated: July 17, 2016 11:43 IST.
[17] Weeks before her murder, however, Qandeel had notified the Interior Minister and Senior Superintendent of Police in Islamabad about the threatening calls she had been receiving, and had requested security.
http://www.catchnews.com/world-news/why-the-qandeel-baloch-story-reveals-society-s-darker-side-1468839244.html/2
பிரிவுகள்: அமைதி, அல்லா, அழகிய இளம் பெண்கள், ஆணவக் கொலை, ஆபாசம், இச்சை, இமாம் செக்ஸ், இம்ரான் கான், இரண்டாம்மனைவி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, உடலுறவு, கவுரவக் கொலை, காதல், காதல் ஜிஹாத், குந்தலீன் பலோச், குன்டலீன் பலூச், கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைவெறி, கௌரவக் கொலை, சரீயத், சரீயத் சட்டம், சலாபிசம், சலாபிஸம், மூல்தான், வெறி, வெள்ளிக் கிழமை, வெள்ளிக்கிழமை, ஹலால், ஹிஜாப்
Tags: அப்ரிதி, ஆணவக் கொலை, இம்ரான் கான், இஸ்லாமிய தீவிரவாதம், கவர்ச்சி, கவவுர கொலை, கவுரவக் கொலை, காஷ்மீர், குன்டலீன் பலூசி, குன்டலீன் பலூச், கௌரவ கொலை, ஜிஹாதி கொலை, பாகிஸ்தான், மதக் கொலை, முஸ்லிம் நடிகை, முஸ்லிம் மாடல், முஸ்லீம்கள், மூல்தான், மோடி
Comments: Be the first to comment
திசெம்பர் 31, 2015
ஆயிஷா அன்ட்ரப் – பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி: துக்தரன்-இ-மில்லத் [(Dukhtaran-e-Millat (DeM), உம்மாவின் மகள்கள்] என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி-தலைவி ஆஷியா அன்ட்ரபி (Asiya Andrabi, வயது 53) 2010களில் “கல்லடி கலாட்டா” என்ற யுக்தியைக் கையாண்டு, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தெருக்களில் வந்து, பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். கடந்த ஆகஸ்ட் 14, 2014 அன்று பாகிஸ்தான் கொடியேற்றி, பாகிஸ்தான் விடுதலை தினத்தைக் கொண்டாடினாள். இதே போல மார்ச்.23, 2014 அன்றும் செய்துள்ளாள். செப்டம்பர் 2014ல் கைது செய்யப்பட்டாள்[1]. உடன் பெஹ்மிதா சூபி [Fehmida Soofi] என்ற இன்னொரு பிரிவினைவாதக்குழுத் தலைவியும் இருந்தாள். இதனால், இவள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது[2]. உடனே, தொலைபேசியில், மும்பை குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேடப்பட்டுவரும், தீவிரவாதியான ஹாவிஸ் சையதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். சையது ஜிலானியின் மாணவி, பிரிவினைவாதத்தில் ஈர்க்கப்பட்டு, ஜிலானி வழியில் செயல்பட்டும் அடிப்படைவாத போராளி. மனித உரிமைகள் பெயரில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் குரூரக் கொலைகள், கற்பழிப்புகள் முதலியவற்றை மறைத்து, அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் உரிமைகள் பற்றி பேசிவரும் திறமைசாலி. இதனால், சிறைக்குள் செல்வது, வெளியே வருவது என்பது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி என்று போதிக்கும் இவள் பிரிவினைவாதப் போர்வையில், ஜிஹாத் தத்துவத்தை பெண்களுக்கு போதித்து வருகிறாள்.

ஜிஹாதி குடும்பத்தில் பிறந்து, ஜிஹாதியாக செயல்பட்டுவரும் ஜிஹாதி–பெண்: ஆயிஷா அன்ட்ரபி 1962ல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. 1990ல் ஆஷிக் ஹுஸைன் என்ற பயங்கரவாதியை நிக்காஹ் செய்து கொண்டாள், அவனும் பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 23 ஆண்டுகளாக 1992லிருந்து சிறையில் இருக்கிறான். ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவன். மொஹம்மது பின் காசிம் (23) மற்றும் அஹமது பின் காசிம் (15) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவளுடைய மற்ற உறவினர்கள் பாகிஸ்தான், சௌதி அரேபியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். 1990ல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி, பிறகு 2004-2007 காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தாள். சர்வகட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் [All Parties Hurriyat Conference] கிளையாக துக்தரன்-இ-மில்லத் செயல்பட்டு வருகிறது. இவளின் மூன்று மைத்துனர்கள், தீவிரவாத தொடர்புகளுக்காக, பாகிஸ்தானில் செப்டம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். 2010ம் வருடம் மஸ்ரத் ஆலத்துடன் “கல்லடி கலாட்டாவில்” இறங்கியவள். இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய இந்த கல்லடி கலாட்டாக்களில் சுமார் நூறு பேர் இறந்ததாக தெரிகிறது. வெளிப்டையாக ஜிஹாதித்துவத்தை போதித்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி வருகிறாள் என்று காஷ்மீர மிதவாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

கல்லெறி கலாட்டா ஜிஹாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட்.2011)[4]: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தும் கொழுத்தினார்கள். கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாலஸ்தினத்தில் பயன்படுத்தப் படும் முறை என்பதனையும் அறியப்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஊடகக்காரர்கள் காயப்பட்டனர். ஆனால், இதைப் பற்றி அவர்கள் ஒன்றும் ஆர்பாட்டம் செய்யவில்லை. இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கலவரத்தின் போது தீ வைப்பு போன்ற சட்ட விரோத செயலில் சம்பந்தப்படாமல் கல்வீச்சில் மட்டும் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டது[5]. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது[6]. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்[7].

பசுமாட்டை அறுத்து எதிர்ப்புத் தெரிவித்த பயங்கரவாதி[8]: ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட பசு-மாமிச விற்பனை தடையை எதிர்த்து செப்டம்பர் 2015ல் ஒரு பசுவைக் கொன்று, அந்த கொலைக்காட்சி விடியோவை வெளியிட்ட[9] ஆயிஷா அன்ட்ரபியை என்னென்பது? அவளைக் கொடூரக்காரி எனலாமா அல்லது ஜிஹாதி என்று பாராட்டலாமா? பெண்களுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பசுமாட்டை இழுத்து வந்து, அவள் முன்னால் அறுக்கிறார்கள். அந்நேரத்தில் “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்” என்று கத்துகிறாள். வெறியோடு கத்தும் அவளது குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இதில் திகிலூட்டுவது என்னவென்றால், குழந்தை ஏந்திய ஒரு பெண் முன்வரிசையில் நின்று கொண்டு அவ்வாறு கத்துகிறாள். இப்படி பயங்கரமான செயல்களை சிறுவயதிலிருந்தே பார்த்து, கடினமாகி, இருகிவிட்ட இம்மனங்களுக்கு ஜீவகாருண்யம் என்பதெல்லாம் எப்படி புரியும்? பெண்கள் மென்மையானவர்கள் என்றெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. பெண் என்றால், பேயும் இரங்கும் என்றேல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில், பேயே இவளைக் கண்டால், பயப்படும். மற்ற பெண்களின் துன்பத்தை கண்டுகொள்ளாமல் மரத்துப் போன, வெறிபிடித்த ஜிஹாதி, முஸ்லிம் பெண்களுக்காக பாடுபடுகிறாள் என்று வேறு சொல்லிக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி வெளிப்படையாக ஊடகங்களில் வரவில்லை. மறைக்கப்பட்டது எனலாம். “பீப்” விசயத்தில் அத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்த ஊடகங்களை இதனை ஏன் மறைக்க வேண்டும்? இது சகிப்புத்தன்மையா என்று யாரும் கேட்கவில்லை.

ஆயிஷா அன்ட்ரபி ஐசிஸ்க்கு ஆள்பிடிக்கும் போராளியா?: இப்பொழுது டிசம்பர் 2015ல் ஹைதரபாதிலிருந்து மூன்று இளைஞர்கள் அன்ட்ரபியை சந்தித்து ஐசிஸ்ஸில் சேர செல்வதாக மத்தியாரசு புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது[10].
- மொஹம்மது அப்துல்லா பசித் [Mohd Abdulla Basith],
- சையது ஒமர் பரூக் ஹுஸைனி [Syed Omer Farooq Hussaini]
- மாஜ் ஹஸன் பரூக் [ Maaz Hasan Farooq]
இவர்கள் எல்லோருமே 20-22 வயதினர், உறவினர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, அன்ட்ரபியை சந்தித்து, பாகிஸ்தான் வழியாக ஐசிஸ் சேர செல்வதாக இருந்தது. கடந்த வாரம் மஹாராஷ்ட்ரா ஏ.டி.ஸ்.பிரிவு போலீஸாரால், நாக்பூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவ்விவரம் தெரியவந்தது. அவர்கள் அன்ட்ரபியை சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்[11]. இவர்களது மாமா சையது சலாவுத்தீன், தடை செய்யப்பட்ட சிமியின் தலைவர் ஆவார். இவர்கள் ஐசிஸ், தாலிபான், அல்-குவைதா அல்லது ஹிஜ்புல் முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத இயக்கத்துடன் சேருவதாக திட்டமிட்டிருந்தனர்[12]. ஆனால், அன்ட்ரபி அவர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும், அவர்கள் யார் என்பதும் தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேண்டுமென்றே தன் பெயரை இழுத்து விட்டனர் என்றும் கூறியுள்ளாள்[13]. சட்டத்தை வளைப்பதற்கு இவ்வாறு பேசுவது, பலமுறை சிறைச் சென்று விடுவிக்கப்பட்ட இவளுக்கு கைவந்த கலை என்பதால், ஒன்றும் வியப்பில்லை. விடுவிக்கப்பட்ட பிரிவினைவாதியான மஸரத் ஆலமும் [Masarat Alam] மறுபடியும் கைது செய்யப்பட்டான்.

© வேதபிரகாஷ்
31-12-2015
[1] The youngest child of prominent Srinagar doctor Sayeed Shahabuddin Andrabi, 1962-born Ms. Andrabi had completed a degree in biochemistry, and hoped to study further in Dalhousie. http://www.geo.tv/article-197860-Asiya-Andrabi-arrested-four-Kashmiris-killed-in-Indian-army-firing-
[2] The DeM chief celebrated Pakistan’s Independence Day on August 14 at her residence by singing that country’s national anthem and unfurling the flag of the neighbouring country on the outskirts of the city. Hours after that, Andrabi had stoked another controversy by addressing via phone a rally in Pakistan which was organized by Mumbai attack mastermind Hafiz Saeed-led Jamat-ud Dawa (JuD).
Saeed was sitting on the stage during Andrabi’s address. Andrabi had earlier also celebrated Pakistan’s National Day on March 23 this year and hoisted the flag of the country and sung its national anthem, following which the police registered a case against her under the Unlawful Activities Prevention Act.
http://articles.economictimes.indiatimes.com/2015-09-18/news/66677405_1_dem-chief-pakistani-flag-saeed
[3] http://www.thehindu.com/news/national/inside-kashmirs-new-islamist-movement/article580687.ece?ref=relatedNews
[4] மாலைமலர், கல் எறிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு: காஷ்மீர் அரசு அறிவிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28, 3:04 PM IST.
[5] http://www.maalaimalar.com/2011/08/28150458/Amnesty-for-throwing-stones-Ka.html
[6] தினமலர், கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு, ஆகஸ்ட்.28, 2011, 17:14.
[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=302950
[8] https://www.youtube.com/watch?v=UVwF71dJWMQ
[9] Ms. Andrabi, who slaughtered a cow after a court ordered banning the same, faces a number of FIRs in the Valley. She released a 1:15-minute video on September 10 wherein she slaughtered a cow to defy the beef ban.
http://www.thehindu.com/news/national/separatist-andrabi-arrested-for-antinational-activities/article7664426.ece
[10] The central government has ordered an investigation by a high-level body after three boys, Mohd Abdulla Basith, Syed Omer Farooq Hussaini and Maaz Hasan Farooq (all aged around 20-22) from Hyderabad claimed they were on their way to Srinagar to meet Andrabi.
http://www.hindustantimes.com/punjab/dukhtaran-e-millat-chief-asiya-andrabi-denies-isis-links/story-uSQaI3tGwRuMcn9g6Q00tL.html
[11] Whether Kashmiri separatist leader Asiya Andrabi visited Telangana has yet to be determined, said the local police today amid reports that three young men arrested for wanting to join jihadi groups in Pakistan have confessed that they wanted to meet the 53-year-old.
http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743
[12] During the interrogation, the arrested men reportedly confessed that they were trying to join any of the jihadist groups — ISIS, Al Qaeda or Hizbul Mujahideen. The police say their uncle was Sayed Salahuddin, the former chief of the banned Students Islamic Movement of India or SIMI.
http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743
[13] “I came to know about the story through the media. Even the ATS (Anti-Terrorism Squad) Hyderabad was quoted saying that they [the boys] wanted to meet me. I think the arrested boys know better why they named me. It seems my name has been deliberately dragged in,” said Ms. Andrabi.
http://www.thehindu.com/news/national/other-states/never-met-hyderabad-youths-andrabi/article8046023.ece
பிரிவுகள்: அப்சல் குரு, அமர்நாத் யாத்திரை, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-முஜாஹித்தீன், அல்-முஹாஜிரோன், அல்லாஹூ அக்பர், ஆயிஷா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கற்களை வீசி தாக்குவது, கற்பழிப்பு ஜிஹாத், கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், காஃபிர், கிலானி, கொலை வெறி, சரீயத், சரீயத் சட்டம், துக்தரன்-இ-மில்லத், பசு, பசு மாமிசம், பசு வதை, மாட்டிறைச்சி, Uncategorized
Tags: அல்லா, ஆயிசா, ஆயிசா அன்ட்ரப், ஆயிஷா அன்ட்ரப், ஆயிஸா அன்ட்ரப், ஐசில், ஐசிஸ், கத்தி, கல், கல்லெறி கலாட்டா, கல்லேறி ஜிஹாத், சிரியா, ஜிஹாதி கணவன், ஜிஹாதி குடும்பம், ஜிஹாதி மனைவி, ஜிஹாத், துக்தரன்-இ-மில்லத், பசு, பசு மாமிசம், பசுவதை, பெண் ஜிஹாத்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 2, 2015
யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

1993 Mumbai blast- who pay for the victims.1
மார்ச். 2013 – சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12–ந்தேதி அன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 12 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தீர்ப்பில் யாகுப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.2
பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது – சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் மூலம் அறிவித்தது (மார்ச்.2013): மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.3
போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் (மார்ச்.2013): போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது[1]. குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடுமையான தடா சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்த கிரிமினல் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். தற்போது கோர்ட் சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுதைய தீர்ப்பைப் படித்தறிய வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால், செக்யூலரிஸ போர்வையில், காங்கிரஸ்காரர்கள் தங்களது வாய்களைத் திறந்து உளாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

1993 Mumbai blast- who pay for the victims.4
காங்கிரஸ் தலைவர்கள் யாகுப்பின் தூக்கிற்கு வருத்தப் பட்டது (ஜூலை.2015): யாகுப் மேனன் 30-07-2015 அன்று காலை தூக்கிலிடப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “அரசு இதே போல, மற்ற எல்லா தீவிரவாத வழக்குகளிலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று டுவிட்டரில், தனது கருத்தை வெளியிட்டார்[2]. பல நேரங்களில் விசித்திரமாக பேசி வரும் இவர், இதே வேகத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட வேண்டும் என்று கமென்ட் அடித்தார்[3]. சசி தரூர், “அரசு ஒரு மனிதனை தூக்கிலிட்டது குறித்து வருத்தமடைகிறேன். அரசு மூலம் நடக்கும் கொலைகள் நம்மையும் கொலைகாரர்களாக்கி விடும். கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல”, என்றெல்லாம் கமென்ட் அடித்தார்[4]. ஒருவேளை தனது மனைவி மர்ம மரணத்தில் / கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் தான் சம்பந்தப் பட்டிருப்பதால், அவ்வாறு பேசினாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel
ஜூலை 30.2015 காலை தூக்கிலிடப்பட்ட நாள்: உச்ச நீதிமன்ற அமர்வு அந்த நேரத்தில் கூடி, மரண தண்டனையை நிறுத்தக் கோரும் குற்றவாளியின் மனுவை ஆய்வு செய்தது. ஆனால் “மிகுதியான அளவு காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டே மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் காலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். யாகூபின் அண்ணன் சுலைமான் உடலைப் பெற்றுக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்றார். மாஹிமில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக, மும்பை முழுவதும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மும்பை பகுதியான மாஹிம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை இஸ்லாமிய முறைப்பட்டி யாகூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மும்பையில் இவர்களது குண்டுவெடிப்பில் பலியான 257 ஆத்மாக்களும் சாந்தியடைந்தன என்று அவர்களது உறவினர்கள் கூறிக்கொண்டார்கள். இதை ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை, மனித உருமைகள் பேசுபவர்களையும் கண்டுகொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்[5] கூறும்போது, “யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல” என்றார். [இதை ஏற்கெனவே அதிகாரிகள் மறுத்துள்ளனர், ஏனெனில் அதிகாரிகளுக்கு அத்தகைய பேரம் பேசவும், எந்தவித தண்டனை குறைப்பு உத்திரவாதம் கொடுக்கவும் சட்டப்படி உரியையும், அதிகாரமும் இல்லை. எனவே, வழக்கம் போல கம்யூனிஸ்டுகள், இறந்தவரின் கருத்தைக் குறிப்பிட்டு குழப்ப முயற்சி செய்கின்றனர்]
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். [இவரது கருத்தும் அர்த்தமில்லாதது, பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு, முறைப்படி கருணை மனு, அது மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனு என்று எல்லாவற்றையும் விசாரித்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வைத்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாது].
© வேதபிரகாஷ்
02-08-2015
[1] இதனை செக்யூலரிஸவாதிகள், யாகுப்-ஆதாரவாளர்கள் கண்டு கொள்வவதில்லை.
[2] Congress general secretary Digvijaya Singh fired the first salvo, saying that the BJP- led government should show “similar commitment” in all cases of terror as it showed in the case of Yakub Memon. “I hope similar commitment of the government and the judiciary would be shown in all cases of terror, irrespective of their caste, creed and religion,” he said in a tweet following Memon’s execution in the Nagpur central jail on Thursday morning (30-07-2015).
[3] http://indianexpress.com/article/india/india-others/show-same-urgency-in-other-terror-cases-digvijaya-singh-on-yakub-memons-hanging/
[4] Party colleague and former union minister Shashi Tharoor said he was “saddened” by Memon’s execution.”Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too,” Tharoor tweeted. “There is no evidence that death penalty serves as a deterrent, to the contrary in fact. All it does is exact retribution, unworthy of a government,” the Thiruvananthapuram parliamentarian said.
[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/article7484832.ece
பிரிவுகள்: 1993, அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இப்ராஹிம், உயிர், உரிமை, கருணை, கருணை மனு, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, தாவூத் இப்ராஹிம், மனித உயிர், மும்பை, மும்பை குண்டு, மும்பை குண்டுவெடிப்பு, மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இப்ராஹிம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உயிரை எடுப்பது, உயிர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, கைது, கொலை, கொலை செய்வது, கொலைவெறி, செக்யூலரிஸம், ஜிஹாத், டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம், தூகுத் தண்டனை, தூக்கு, மதவெறி, மரண தண்டனை, மரணம், மும்பை, மும்பை குண்டுவெடிப்பு, மேமன், யாகுப் மேமன், யாகூப் மேமன்
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்