Archive for the ‘கொடியேற்றம்’ category

கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!

ஓகஸ்ட் 16, 2012

கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!

 

சுதந்திர நாள் கொண்டாட்டம் என்றால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை விட்டு, ஏதோ தீவிரவாத தாக்குதல் தடுப்பு தினமாகக் கொண்டாடப்படுவதைப் போன்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி வருகிறது. இப்படி பயந்து கொண்டே கொண்டாடுவது கொண்டாட்டமா என்று தெரியவில்லை.

 

வழக்கம்போல பிரிவினைவாத, அடிப்படைவாத, இந்திய-எதிர்ப்பு காஷ்மீர முஸ்லீம் மக்கள் சுதந்திரதினத்தை கருப்பு நாளாகக் கொண்டாடி பெருமை சேர்த்துள்ளனர்[1].

 

பாகிஸ்தானியர்கள் கடந்த 11 நாட்களில், ஏழு முறை சட்டங்களை / ஒழுங்கை மீறி எல்லைப்புறங்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி, இந்திய வீரர்களுக்கு குண்டுகளை கொடுத்துள்ளது[2].

 

மணிப்பூரிலேயோ, குண்டுகள் வெடித்தே சுதந்திர நாள் கொண்டாடப்பட்டுள்ளது[3].

 

ஆனால், பிரதமந்திரியோ பத்திரமாக, குண்டு துளைக்காத கண்ணாடி கவசத்தின் பின்னாக நின்று கொண்டு, உணர்ச்சியே இல்லாமல் தயார் செய்து கொடுத்த பேச்சை தட்டுத் தடுமாறி இந்தியில் பேசி முடித்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாது, பல இடங்களில் உளறிக் கொட்டியுள்ளார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[4].


இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

ஏப்ரல் 7, 2012

இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!

முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.

பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.

ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.

அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.

தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை,  ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்‌க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].

வேதபிரகாஷ்

07-04-2012


[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”

[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.

[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.

[8] Karzai told a graduation ceremony at a military academy in Kabul (05-04-2012): “It’s set that post 2014, for the next 10 years until 2024 the international community, with the US in the lead and followed by Europe and other countries, will pay Afghanistan security forces $4.1 billion annually.”http://tribune.com.pk/story/353585/west-to-pay-afghan-military-4-bn-a-year-karzai/

[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.

http://paktribune.com/news/US-bounty-on-Saeed-a-wrong-signal-PM-Gilani-248887.html

[11] Interior Minister Rehman Malik said Jamaatud Dawa (JuD) chief Hafiz Saeed would not be arrested as there are no concrete evidences against him.

http://www.paktribune.com/news/Hafiz-Saeed-wont-be-arrested-Malik-248904.html

[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square

[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process,  Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738

பாகிஸ்தான் கொடியை ஏற்றியதைப் பற்றிக் வெட்கபடாத, ரோஷமற்ற, இந்திய அரசு, இந்திய கொடியை ஏற்றுவரும் போது தடுக்கிறது!

ஜனவரி 25, 2011

பாகிஸ்தான் கொடியை ஏற்றியதைப் பற்றிக் வெட்கபடாத, ரோஷமற்ற, இந்திய அரசு, இந்திய கொடியை ஏற்றுவரும் போது தடுக்கிறது!

22-01-2011 அன்று லால்சௌக்கில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டபோது, எந்த காங்கிரஸ் ஆளுக்கும் சூடு, சுரணை வந்து தடுத்துவிடவில்லை. எல்லைகளையெல்லாம் அடைத்துவிடவில்லை. ராணுவத்தை, பாதுகாப்பும்ப் படையை, ராணுவத்தை அனுப்பி அடக்குமுறைகாஇக் கட்டவிழ்த்து விடவில்லை; எல்லைகளிலேயே பிடித்து கைத் செய்யப்படவில்லை; குண்டுக் கட்டாக காரில் ஏற்றி, வேறு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை; ஆனால், இந்திய கொட்யை ஏற்றுஇவோம் என்றால், இவ்வளவும் நடந்தேரியுள்ளது? ஏன்? ஆஹா, அமைதிக்கு ஊறு ஏற்பட்டுவிடும் என்று அசளுக்கு ஆளுக்கு கிளம்பிவிடுகிறார்கள். லால்சௌக்கில் ஏன் கொடி ஏற்ற வேண்டும், வேறெங்கு வேண்டுமானால் ஏற்றலாமே? என்றெல்லாம் வாதங்களை வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.

20-10-2001: மஹாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே உள்ள ஒரு தர்காவில் பானிஸ்தானின் தேசிக் கொடியை ஏற்றிய எல்லைப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை பொதுமக்கள் தாக்கினார்கள்[1]. நாசிக் அருகே உள்ள யாத்தேன்கிரி என்ற கிராமத்தில் ஹஜ்ரத் நாதுஷா பாபா என்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒருவர் பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றினார். இதைப் பார்த்தபொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். பிறகு அந்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கிய பிறகு போலீசில்ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுபவர்என்றும், காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிர்கிட் மலையில் வேலை செய்துவருவதாகவும்தெரியவந்தது. போலீசார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த பாகிஸ்தான் தேசியக் கொடியைக் கைப்பற்றினர்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

 

உள்துறை அமைச்சர், திருவாளர் சிதம்பரம் கண்டனம் தெரிவிக்கவில்லையே, ஏன்?: 22-01-2011 அன்று லால்சௌக்கில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டபோது உள்துறை சிதம்பரத்திற்கு தெரியாமலா போய்விட்டது? அப்படியிருந்தால் அமைச்சராக இருப்பதற்கே யோக்கியதை இல்லையே? ஆனால், தெரிந்தும் அமைதியாகத்தான் இருந்தார். பிரதம மந்திரி, ஜனாதிபதி கண்டுகொள்ளவேயில்லை. அப்படியென்றல், இவர்கள் எல்லோருமே பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் முதலியோர்க்கு ஆதரவாக செயல்படுவது போலத்தானே இருக்கிறது? இந்தியாவை ஆதரிக்கத இவர்கள் எப்படி பதவில்யில் இருக்கிறார்கள்?

லால் சௌக் இல்லாமல் வேறு இடத்தில் கொடியை ஏற்றலாமே? ஆமாம், தாராளமாக செய்யலாமே? ஆனால், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் அவ்வாறு செய்வதில்லையே? லால் சௌக்கில் தான் பாகிஸ்தான் கொடியை ஏற்றுகின்றனர், இந்தியக் கொடியை எரிக்கின்றனர். அது ஏன்? மற்ற இடங்களில் இந்திய கொடியை ஏற்றினால், யாரும் எதிர்ப்பதில்லையே? முக்கியமாக முஸ்லீம் தீவிரவாதிகள் ரகளை-கலாட்டா செய்வதில்லையே? அது ஏன்?

சீனாவுக்கு வக்காலத்து வாங்கும் இந்திய அறிவிஜீவி: ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஒரு அறிவுஜிவி எச்சரிக்கை விடுக்கிறது, இடா நகரில் போய் கொடியை ஏற்ற வேண்டியதுதானே, அவ்வாறு செய்தால், சீனாவே அதை எதிர்க்கும் என்றாரே பார்க்கலாம். அதாவது, இந்திய அறிவிஜீவிகளுக்கு, அந்த அளவிற்கு புத்தி மழுங்கி விட்டது என்று தெரிகின்றது.

காஷ்மீரத்தில் இப்பொழுது தான், ரொம்ப நாட்கள் கழித்து அமைதி திரும்பியிருக்கிறது. அதனை களைக்க வேண்டாம் – என்பது இன்னொரு வாதம்: ஆனால், அங்கு அமைதியை களைத்தது யார்? பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் தாமே? ஆனால், இந்திய கொடியை ஏற்ருபவர்கள் அவ்வாறில்லையே? பிறகு ஏன் இந்த மயக்கம்?

மத்தியஸ்தம் செய்யவந்த ஆட்கள் எல்லாம் அறிவுரை கூற ஆரம்பித்துவிட்டனர்: இன்டர்லோகியூட்டர் எனப்படுகின்ற, இந்தியர்கள் தாம் இந்தியர்கள் என்பதனையே மறந்து, பாகிஸ்தானியர் போல பேசுவதும், காஷ்மீர இந்துக்களை உதாசினப் படுத்துவதும், இப்பொழுது, கொடி ஏற்றக் கூடாது என்றெல்லாம் அறிவுரைக் கூற வந்துவிட்டதும் பார்க்கும்போது, படுகேவலமாக இருக்கிறது. யார் இந்த ஆட்களுக்கு, இத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தது?

© வேதபிரகாஷ்

25-01-2011


காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு – குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்! (2)

செப்ரெம்பர் 2, 2010

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு – குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்! (2)

கார்த்திக்-சிதம்பரம்-குல்லா-கஞ்சி-2010

கார்த்திக்-சிதம்பரம்-குல்லா-கஞ்சி-2010

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு[1]: சிதம்பரம், ஜிஹாதினால் பேதி போன நிலையில், பிள்ளை கார்த்திக்கு, வேறுவிதமான யோசனை வந்து விட்டது போலும். “முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும்,” என அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார். தேசிய நண்பர்கள் குழு சார்பில் புனித ரமலான் (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி. அப்துல்காதர் தலைமை வகித்தார். தாராஷபி தொகுத்து வழங்கினார்.

Anbalagan-without-cap

Anbalagan-without-cap

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன: செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பேசும் போது, “தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் மலரும் போது மதுக்கடைகள் மூடப்படும்,” என்றார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: “ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன. ஆனால், முஸ்லிம்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை பதிவு செய்யவில்லை. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு காங்கிரஸ் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது[2].

Anbazhagan-with-kulla

Anbazhagan-with-kulla

கார்த்திக்கின் புதிய கண்டு பிடிப்பு: “மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”: “எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராகத் தான் உள்ளனர்[3]. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையாக தான் இருக்கிறது. முஸ்லிம்கள் தங்களது கருத்தை ஆழமாக சொல்ல வேண்டும். அவர்களின் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும். காங்கிரஸ் கட்சியும் மற்ற பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”.

chiru-real life - not reel

chiru-real life - not reel (நடிகராக இருக்கலாம், அதற்காக இப்படியா மாறுவேட போட்டிப் போன்று சேக் உடையெல்லாம் அணிந்து கொண்டு கஞ்சி குடிக்க வரவேண்டும்?)

திராவிடக் கட்சிகள் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் மதசார்பின்மை போய்விடும்: கார்த்தியின் அடுத்த கண்டு பிடிப்பு: மதச்சார்பின்மை கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தங்களுக்கு வசதி என்றால் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி வைக்கின்றன. பா.ஜ.,வின் எதிர்ப்பு இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது[4]. மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்படுகிறது[5]. இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயில வேண்டும். கல்வி அறிவு கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும். வறுமையை ஒழிக்க முடியம். விடுதலை கிடைக்கும்[6]. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.விழாவில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, ராஜ்குமார், சுந்தரம், சிரஞ்சீவி, கராத்தே தியாகராஜன், , ஹசீனா சையத், ரஞ்சன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

BJP-Iftar-2005

BJP-Iftar-2005 - பாவம் பிஜேபி காரர்கள் கூட இப்படி குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டியிருக்கிறது!

கஞ்சி-குல்லா லிஸ்ட் நீளுகின்றது: எது எப்படியாகிலும், இந்த தடவை குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கூட்டம் ஜாஸ்தியாகவே உள்ளது. அப்பன்-பிள்ளை என்று போட்டிப் போட்டுக் கொண்டு குல்லா போட்டுக் கஞ்சி குடிக்க வந்து விட்டார்கள் போலும். அடுத்த வருடத்தில், பேரப்பிளைகள் வந்து விடுவார்களோ என்னமோ?

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை இதுதான் போலும்! ஃபிரோஸ் கான் என்கின்ற ஃபிரோஸ் கந்தி என்கின்ற, ஃபிரோஸ் காந்தியாக மாறிய, இந்திராவின் கணவருக்குப் பிறந்த ராபர்டோ ராஜிவ் காந்தி!

Karunanidhi-with-kulla

Karunanidhi-with-kulla

அப்பா, அப்பப்பா, ஐயோ அப்பா, இந்த படத்தை பிடிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது! ஒரு நன்பர் அனுப்பி வைத்தார்! படத்தைப் பெரிது படுத்தினால், ஏதோ டச்-அப் செய்திருப்பது போல இருக்கிறது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் குல்லா போட்டது உண்மை, கஞ்சி குடித்தது உண்மை…………………


[1] தினமலர், காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு, செப்டம்பர் 02, 2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75927

[2] ஏதோ, ஸ்டாலின் பேசியதற்கெல்லாம் பதிலாக ஏதாவது பேச வேண்டும் என்ற தீர்மானத்தில் தயார் செய்து கொண்டு பேசியது பொல உள்ளது.

[3] அடிக்கடி ஜெயா டிவியைப் பார்க்கும் வழக்கம், கார்த்திக்கு அதிகமாகவே உள்ளது போல உள்ளது.

[4] பாவம் பிஜேபி இனி அதோகதிதான். பிஜேபி இன்னுமொரு காங்கிரஸ் ஆனால் காங்கிரஸ் காலி, இல்லை காங்கிரஸ் இன்னுமொரு பிஜேபி ஆனால், பிஜேபி காலி.

[5] பாவம் ஸ்டாலின், பட்டியல் இட்டுக் காட்டியதை பொய் என்கிறார் போலும்!

[6] ஆஹா, பாவம் முஸ்லீம்கள், அவர்கள் விடுதலையில்லாமல், இவர்தான் விடுதலை கொட்க்கப் போகிறார்போல இருக்கிறது. இணை வைக்கிறாரோ என்னவோ?

தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

ஜூன் 6, 2010

தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், எப்படி இந்த திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது?

முஸ்லீம்கள் ஏதாவது ஒரு விஷயம், பிரச்சினை, பொருள், சின்னம்………….தங்களுக்கு சாதகமாக உள்ளது என்றால், அது எத்தகைய இஸ்லாம்-விரோதமாக இருந்தாலும் அமைதியாக இருந்து விடுவர். அதே விஷயம், பிரச்சினை, பொருள்………….இஸ்லாமுக்கு விரோதமாக இருக்கிறது என்று, இன்னொரு இடத்தில் பயங்கரமாக விளக்கி, இமாந்தாரர்களை மிரட்டுவர். இத்தகைய இருநிலைகள் ஏன் என்று தெரியவில்லை.

மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடம்: சென்னை 05-06-2010 – ஞாயிற்றுக் கிழமை: காயிதே மில்லத்தின் 115வது பிறந்தநாளை முன் னிட்டு அவரது நினைவிடத்தில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத்தின் 115வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக் கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா மசூதி வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று காலை 9:20 மணிக்கு வந்த  கருணாநிதி, மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன்  ஸ்டாலின், அமைச்சர்கள் உடனிருந்தனர். காலை 11 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கட் சிப் பிரமுகர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலர் அன்வர்ராஜா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச் சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-திமுக

திராவிட நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஆரூண் எம்.பி., உள் ளிட்ட காங்கிரசாருடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தன் கட்சியினருடன், காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், முன் னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயதுல்லா, பொதுச்செயலர் ஜகிருதீன் அகமது உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இதுமட்டும் இஸ்லாம் ஆகுமா-அதிமுக

இஸ்லாமியருக்கு திருமாவின் அறிவுரை:  இந் நிலையில்  தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணியத் தமிழர் காயிதேமில்லத் அவர்களின் 115ம் பிறந்த நாளில் (ஜூன்- 5, 2010) இஸ்லாமியப் பெருங்குடி மக்களுக்கும் இன்னபிற சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசியலில் போற்றுதலுக்குரிய பெருந்தலைவராக விளங்கிய கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தினருக்காகவும் பாடுபட்ட மிகச் சிறந்த ஜனநாயகச் சிந்தனையாளராவார். அன்னைத் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழ்ப் பற்றாளராவார். இந்து, முஸ்லிம் என்கிற மதவெறி உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் வன்முறைகளுக்கு ஊக்கமளித்தோருக்கிடையில், அத்தகைய மதவெறி உணர்வுகளுக்கெதிராக சமூக நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர். அதாவது, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இந்திய தேசிய நலன்களுக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றியவர்.

திருமா-முல்லா-2010

திருமா-முல்லா-2010

அத்தகைய மாமனிதரின் கனவுகளை நனவாக்கும் வகையில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவரும் அரசியல் சக்தியாக அணிதிரள வேண்டும். கண்ணியத் தமிழரின் ஜனநாயகச் சிந்தனைகளையும் சமூக நல்லிணக்க அணுகுமுறைகளையும் போற்றிப் பாதுகாத்திட அவர்தம் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

நாகூர் தர்கா கந்தூரி விழா:கொடியேற்றம்,சந்தனம் பூசும் நிகழ்ச்சி, ரதங்களில் ஊர்வலம்!

மே 11, 2010
நாகூர் கந்தூரி விழா கொடியேற்றம்
மே 11,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24900

நாகப்பட்டினம் : நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா துவக்கத்திற்கு ஏற்றப்படும் கொடி, சிங்கப்பூரில் இருந்து நாகைக்கு நேற்று மாலை வந்தது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவில் 453 ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 25ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

சோழ மன்னர் சரபோஜி கட்டித்தந்த பெரிய மினவரா உட்பட ஐந்து மினவராக்களிலும் வரும் 15ம் தேதி இரவு 9.30 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றப்படும் கொடி ஆண்டு தோறும் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து நாகைக்கு கொண்டு வரப்படும். நாகையில் இருந்து ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக புறப்பட்டு நாகூருக்கு வந்த பின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கும்.

பாதுஷா நாயகம் மினவராவில் ஏற்றுவதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கொடி நேற்று காலை சென்னை வந்தது. அங்கிருந்து கார் மூலம் நாகை செம்மாரக்கடை தெருவில் உள்ள வாப்பாக்கண்ணு என்பவர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொடியை யானை மீது ஏற்றி முஸ்லிம் ஜமாத்தார்கள் ஊர்வலமாக, யாஹஈசைன் பள்ளித்தெரு அமீது சுல்தான் வீட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு தொடர்ந்து ‘பாத்தியா’ ஓதப்பட்டு வரும் 15ம் தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக நாகூர் தர்காவிற்கு சென்று கொடி ஏற்றப்படும்.

நாகூர் தர்கா கந்தூரி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
மே 16,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25112

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா, கொடியேற்றத்துடன் நேற்று (15-05-2010) துவங்கியது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா 453ம் ஆண்டு கந்தூரி விழா, நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் நாகை மீரா பள்ளிவாசலில், தர்காவின் ஐந்து மினவராக்களிலும் ஏற்றப்படும் கொடிகள் வைக்கப்பட்டு ‘துவா’ ஓதப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய ரதம், சின்ன ரதம் மற்றும் செட்டிப் பல்லக்கு, கப்பல்கள் போன்று வடிவமைக்கப்பட்ட இரண்டு வாகனங்களில், மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, ஊர்வலமாக நாகை, நாகூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு நாகூர் தர்கா வந்தடைந்தது.

தர்கா ஆலோசனை கமிட்டி தலைவர் செய்யது காமில் தலைமையிலான நிர்வாகிகள், கொடிகளுக்கு வரவேற்பு கொடுத்தனர். தர்காவில் மவுலியாக்கள் சிறப்பு ‘துவா’ ஓதிய பின், ஐந்து மினவராக்களிலும் கொடி  ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான யாத்திரிகர்கள் பங்கேற்றனர்.