Archive for the ‘கைபேசி’ category

“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

நவம்பர் 7, 2016

மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறைஎனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

iso-certified-bhopal-jailபோபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் ஸ்விட்ஸ் ஆப்செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன? தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

midnight-to-3-a-m-when-jail-official-rama-shankar-goes-to-check-the-barracks-the-eight-simi-members-overpower-him-and-slit-his-throat-with-a-steel-plateகண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.

 they-take-the-keys-from-his-pocket-and-open-the-cell-they-carry-along-bed-sheets-which-they-tie-together-to-slide-down-the-prison-walls

அக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.

they-run-towards-the-periphery-wall-where-they-find-another-jail-official-they-tie-his-hands-and-legs-and-make-good-their-escapeவெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரைகவனித்துக் கொண்டதுயார்?: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9].  அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

near-the-periphery-wall-they-find-some-wooden-logs-put-together-a-ladder-with-the-logs-and-the-bed-sheets-scale-the-wall-and-escapeஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்?: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே? அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

07-11-2016

the-locations-of-jailbreak-encounter-etc-illustrated

[1] Indian Express, Clues to Bhopal SIMI activist jailbreak ‘inside job’: Moulds, CCTV off, Written by Dipankar Ghose | Bhopal | Published:November 7, 2016 3:20 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-jailbreak-encounter-insider-job-3740874/

[3] The Hindustan Times, CCTV cameras weren’t working in Bhopal jail when SIMI prisoners escaped, Anirban Roy, Hindustan Times, Bhopal, Updated: Nov 01, 2016 16:04 IST

[4] http://www.hindustantimes.com/india-news/non-functinal-cctv-cameras-may-have-helped-simi-prisoners-escape-sources/story-gxnkltkV0kH5T8ow6zkC7K.html

[5] Amjad, Zaqir Hussain, and Sheikh Mehboob alias Guddu — were among the six who escaped from the district jail three years ago. escaped from the Tantya Bheel central jail in Khandwa district on October 1, 2013.

[6] The Hindustan Times, Bhopal jailbreak exposes security gaps in MP’s best-secured prison, Kalyan Das, Hindustan Times, Bhopal, Updated: Oct 31, 2016 21:49 IST

[7] The tactics used in both jailbreaks were almost identical. On both occasions, the SIMI men used steel spoons, utensils, toothbrushes and metallic tongue cleaners to make crude daggers to attack jail guards. One such weapon was used to slit the throat of head warder Ramashankar Yadav inside the B block of the Bhopal jail between 2am and 3am. Then again, they made a rope ladder with bed sheets — stringing pieces of wood in between for steps. The technique was used by a self-styled SIMI commander at Khandwa jail.

http://www.hindustantimes.com/india-news/bhopal-jailbreak-exposes-security-gaps-in-mp-s-best-secured-prison/story-k5gFUlt9PnTEI2wfhdbRVK.html

[8] Indian Express,  Bhopal encounter: Jailbreak not possible without insider help, says MP Home Minister, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 2, 2016 12:26 pm.

[9] When contacted, Madhya Pradesh Home Minister Bhupendra Singh said it was “impossible to escape without inside collusion” and alleged that the jailbreak was facilitated by “funding from outside”. “It must have taken elaborate planning over two to three months because it is not possible to make duplicate keys so early and without help from an insider,” said Singh – Indian Express.

http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-encounter-simi-activists-jailbreak-not-possible-without-insider-help-says-mp-home-minister-bhupendra-singh-3733047/

[10] The Hindu, Death wish on a Bhopal night: Daring escape to nowhere, November 1, 2016.

[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/death-wish-on-a-bhopal-night-daring-escape-to-nowhere/article9289399.ece

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்!

ஜூலை 1, 2016

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்!

Al Jeelani Abdul Qader Mohsin Mahmood was one among the six persons released by the NIA after the terror raids in Hyderabad -Express photo

என்ஐஏ சோதனையில் ஹைதராபாதில் தீவிரவாதிகள் பிடிபட்டனர்: மாதிரி தீவிரவாதி குழுமம் [module] என்று அமைக்கப்பட்டு, தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் ரகசியமாக செயல்பட்டு வருகின்றன. என்னத்தான் முஸ்லிம்கள்  தங்களுக்கும், தீவிரவாதத்திற்கும் சம்பந்தமில்லை, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்றெல்லாம் வாத-விவாதங்கள் புரிந்தாலும் அத்தகைய காரியங்களை செய்யும் ஆட்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பழைய ஹைதராபாத்தில் 28-06-2016 அன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு நடத்திய அதிரடி சோதனையில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்[1]. ஹைதராபாத் நகரின் மீர் சவுக், பவானி நகர், மொகுல்புரா, பர்காஸ் உள்ளிட்ட பல பகுதிகளில், தெலங்கானா மற்றும் ஹைதராபாத் போலிஸாருடன் என்ஐஏ அதிகாரிகள் கூட்டாக இணைந்து 30-06-2016 புதன்கிழமை அன்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. இதில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப் பட்டனர்[3].

Hyderabad module - ISIS connection - NIA-detainedஐ.எஸ்சுடன் தொடர்புகள்: ஜனவரியில் இதே போன்ற நடவடிக்கையில் 25 பேர் பிடிபட்டனர். இந்திய முஜாஹித்தீன் [Indian Mujahideen (IM)] தீவிரவாத இயக்கத்திலிருந்து பிரிந்த அன்சர்-உல்-தவ்ஹீத் [Ansar-ul-Tawhid (AuT)] என்ற கூட்டத்தைச் சேர்ந்த இவர்கள், ஐஎஸ்சுடன் தொடர்புகள் வைத்துள்ளனர்.  ஐஎஸ்சுக்கு இந்த ஆட்கள் மிகவும் பாதுகாக்கப்படும் இணைதளம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்[4]. இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ரூ.15 லட்சம் ரொக்கம், 23 செல் போன்கள், 3 லேப்டாப்கள், போலி அடையாள ஆவணங்கள், அமிலங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன[5]. ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. ஹைதராபாத் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டது.

 Hyderabad module - ISIS connection

முன்னர் கண்காணீத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது: ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பது உள்பட பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாகவும், அதற்காக அந்நகரில் உள்ள இளைஞர்களை ரகசியமாகப் பயன்படுத்தி வருவதாகவும் உளவுத் தகவல் கிடைத்தது[7]. ஜூன் மாத ஆரம்பத்திலேயே அத்தகைய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, இலங்கையில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை வைத்து ஆந்திராவில் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்தது[8]. தற்போது இந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐயின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் ஐபி எச்சரித்தது. குறிப்பாக விசாகப்பட்டனத்தில் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் ஐபி எச்சரித்தது. இதையடுத்து விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து ஊடுறுவி வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஐபி கூறியது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது அரசின் உயர் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்ட அவர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்[9]. 22-06-2016 அன்றே முதல் தகவல் அறிக்கையை பல சட்டங்களின் கீழுள்ள பிரிவுகளில் பதிவு செய்து, நடவடிக்கையை ஆரம்பித்தது[10].

The houses in Charminar and Moghalpura from where the IS suspects were arrested.ரம்ஜான் காலத்தில் தீவிரவாதம் ஏன்?: பொதுவாக, இந்தியாவில் பண்டிகைகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நேரங்களில் வதந்திகளைப் பரப்புதல், குழப்பம் உண்டாக்குதல், இணைதளம் மற்றும் செல்போன்களில் போலியான தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள்-வீடியோக்கள் போட்டு பரப்புதல், கலவரங்களை ஏற்படுத்துதல், போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரம்ஜான் மாதத்தில், இத்தகைய கொலை-குண்டுவெடிப்பு முதலியவற்றால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று மூளைசலவையும் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தான், இந்த ரம்ஜான் நேரத்தில் உலகம் முழுவதும் அத்தகைய குரூர குண்டுவெடிப்புகள் நடைப்பெற்று வருவதை கவனிக்கலாம். “ஓநாய் போன்ற தாக்குதல்” என்ற முறையை பயன்படுத்தி, கலவரங்கள், நாசவேலைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது[11]. நகரத்தில் உள்ள எல்லா வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதிலும் பிரச்சினைகள் உள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், அத்தகைய முறைகளை முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். தங்களைக் கண்காணிக்கத்தான், பாதுகாப்பு என்றா போர்வையில் போலீஸாரை மசூதிகளுக்குள் நுழைய ஏற்பாடு செய்கின்றனர் என்று முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

© வேதபிரகாஷ்

01-07-2016

Hyderabad module - triacetone triperoxide bomb making

[1] தி.இந்து, 11 ஐஎஸ் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் கைது, Published: June 30, 2016 08:12 ISTUpdated: June 30, 2016 09:07 IST.

[2] http://tamil.thehindu.com/india/11-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article8791075.ece

[3] புதியதலைமுறை.டிவி, ஹைதராபாத்தில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது,  பதிவு செய்த நாள் : June 30, 2016 – 10:02 AM; மாற்றம் செய்த நாள் : June 30, 2016 – 10:05 AM.

[4] All the recruitments were done through the Internet and secure web-based applications. The accused were under surveillance for the past three months.

http://www.thehindu.com/news/cities/Hyderabad/hyderabad-youths-picked-by-city-police-nia-for-links-with-islamic-state/article8787455.ece

[5] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/35539/11-isis-terrorist-arrested-in-hyderabad

[6] தமிழ்.ஒன்.இந்தியா, ஹைதராபாத்தில் என்.. அதிரடி ரெய்டு.. அடுத்தடுத்து 11 .எஸ்..எஸ் ஆதரவாளர்கள் 11 பேர் கைது, By: Veera Kumar, Published: Wednesday, June 29, 2016, 10:28 [IST].

[7] தினமணி, ஹைதராபாதில் தாக்குதல் நடத்த சதி:.எஸ். தொடர்புடைய 11 இளைஞர்கள் கைது, First Published : 30 June 2016 04:06 AM IST.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஆந்திராவில் நாச வேலையில் ஈடுபடத் தயாராகும் லஷ்கர் தீவிரவாதிகள்எச்சரிக்கும் ஐபி, By: Sutha, Published: Thursday, June 2, 2016, 11:44 [IST].

[9] http://tamil.oneindia.com/news/india/isi-s-sri-lanka-module-waiting-strike-andhra-pradesh-intelligence-bureau-255073.html

[10] A First Information Report (FIR) was registered by the NIA on June 22 under various sections of Indian Penal Code, the Explosive Substances Act and the Unlawful Activities Prevention Act (UAPA). The FIR, available with The Hindu, says: “The accused and their accomplices from Hyderabad and other parts of the country have entered into a criminal conspiracy to wage war against government of India by collecting weapons and explosive materials to target prominent places, public places, religious places, malls, markets, public properties and in particular sensitive government buildings in Hyderabad and other places.” It also read: “It is also reliably learnt that they have acquired weapons and explosive materials to carry out violent terrorist attacks and related subversive activities. The members of this group are in constant touch with each other on the Internet and are using various other communication platforms within India and have linkages abroad. Information has also been received to the effect that the group members are in communication with a terrorist organisation namely IS, which is a proscribed organisation.”

http://www.thehindu.com/news/cities/Hyderabad/hyderabad-youths-picked-by-city-police-nia-for-links-with-islamic-state/article8787455.ece

[11] It was clear that Syria-based IS handlers were luring the 11 suspects to join the group. Many individuals owing allegiance to IS or supporting their fight had carried out lone wolf attacks — springing up at public places and shooting at people with firearms — in different parts of the world recently.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/did-is-handlers-plan-lone-wolf-attack-in-hyderabad/article8790389.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

[12] “We cannot poke them continuously to improve their alertness, as they accuse us of harassment,” a Task Force official says.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/security-at-public-places-still-dicey/article8790391.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறைந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!

மே 12, 2013

சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!

பெங்களூருகுண்டுவெடிப்புசம்பந்தமாகதமிழகத்தவர் கேரளாவில் கைது: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்[1]. சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் என்ற இருவர் கேச்சேரியில் / கெச்சேரியில்[2] உள்ள ஷபீரின் உறவினரின் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர்[3]. கீழக்குமுரி, பத்திக்கர என்ற இடத்தில் உள்ள இவ்வீட்டில் மறைந்திருக்கும் விவரம் கிடைத்தது[4].

மொபைல்போன்சிக்னல்களை, தொடர்ந்துகண்காணித்துகைது: இவர்களின் மொபைல் போன் சிக்னல்களை, தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார்[5], நேற்று முன்தினம் கைது செய்தனர்[6]. சாதாரணமான ஆட்களே சிம்கார்டுகளை அழித்துவிடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர் எனும்போது, இத்தகைய கைதேர்ந்தவர் எப்படி அதே நம்பர்களை வைத்திருப்பர் என்று தெரியவில்லை.

மொத்தம்கைது 13, ஆனால், யாரால்குண்டுவெடிக்கப்பட்டதுஎன்பதுஇன்னும்சொல்லப்படவில்லை: கோயம்புத்தூர் உக்கடத்தைச் சேர்ந்த இவர்கள் குன்னங்குளத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர்[7]. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸார்அதிகம்அளவில்காயமடைந்ததால்தொடர்விசாரணையாஅல்லதுவேறுவிஷயம்இருக்கிறதா: பெங்களூரில், பாரதிய ஜனதா அலுவலகம் முன், ஏப்ரல்த மாதம், 17ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 11 போலீசார் உட்பட, 17 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் கர்நாடகா போலீசாருக்கு, தமிழகம் மற்றும் கேரள போலீசாரும் உதவி செய்து வருகின்றனர்.

மாநிலம்மாறிகுற்றம்செய்தால்தப்பித்துக்கொள்ளவாய்ப்புஉள்ளதா: சம்பந்தப் பட்டவர்கள் மூன்று மாநிலங்களிலும் மாறிமாறி இருந்து கொண்டு வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் எல்லோருமே முன்னமே யாதாவது ஒரு வழக்கில் சிக்கியுள்ளவர்கள், சிலர் தண்டனைப் பெற்ற்வர்கள், அல்-உம்மா, சிமி போன்ற தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரிகின்றது.

© வேதபிரகாஷ்

13-05-2013


[4] The investigation team team took them into custody from the house of a relative of Shabeer at Kizhakkumuri, Pathikkara.

[5] Thrissur: Two persons hailing from Coimbatore have been arrested for their suspected involvement in the April 17 bomb blast in front of the BJP office in Bangalore, the police said on Sunday. Sulfikar Ali, 22, and Shabeer, 24, were arrested from the house of Shabeer’s relative at Kecheri near Kunnamkulam in the district on Sunday, they said. The arrest was made by a team of police from Karnataka and Tamil Nadu after following the duo’s mobile phone signals, the police said. Following the arrest of Sulfikar and Shabeer, the total number of arrests in connection with the blasts, that left 17 persons injured, including 11 policemen, has gone up to 13.