Archive for the ‘கைது’ category
மே 8, 2017
தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (2)

புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, கல்லெறி ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம்: ஜூலை 2016ல் தீவிரவாதி புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் தீவிரவாதம், கல்லெறி ஜிஹாதி மற்ற வன்முறைகள் அதிகமாகி விட்டன. தீவிரவாதிகளை கண்டுபிடித்து, மடக்கிப் பிடிக்கும் போது, அவர்கள் தாக்கும் போது, வீரர்கள் பதிலுக்கு தாக்கி ஒழுங்கிற்கு எடுத்து வர முயலும் போதும், இந்த கல்லெறி ஜிஹாதிகள் வெளிப்படையாகவே, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மனித கேடயம் போல முன்னின்று கல்லேறிவது, அதன் மூலம், தீவிரவாதிகள் தப்பித்துச் செல்வது என்ற காரியங்கள் சகஜமாகி விட்டன. இதெல்லாம் சாதாரணமாக, இயல்பாக செய்யும் செயல்களாக இல்லாமல், திட்டமிட்டு, ராணுவத்தினரைத் தூண்டிவிடும் செயலாகவே தெரிந்தது. மேலும், பெற்றோர், உற்றோர், மற்றோர் இவற்றை எதிர்க்காமல் ஆதரித்து வருகின்றனர். பாலஸ்தீனம் போல, இவர்களை செயல்பட வைத்து, ஒருபக்கம் பலிகடாக்களாக்கி, இன்னொர்யு பக்கம், ராணுவம் மனித உரிமைகளை மீறியது என்று பிரச்சாரம் செய்யவே, இவ்வாறு செய்கிறது என்று புலப்படுகிறது. இப்பொழுது அத்தகைய பேச்சுகள் பரூக் அப்துல்லா போன்றோர் மூலம் வெளி வந்ததை கவனிக்கலாம். மேலும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அப்படியென்றால், இந்த கல்லெறி ஜிஹாதி, அவர்களால் வேலை மாதிரி செய்து வருகிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

கல்லெறி ஜிஹாதித்துவமும், கல்லூரி விடுமுறையும், வேலையில்லாத நிலையும் – நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது[1]: தி.இந்து ஏப்ரலில் வெளியிட்ட செய்தியே, சித்தாந்த ரீதியில், ஊடகங்கள் எவ்வாறு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளலாம். செய்தி இவ்வாறுள்ளது – “காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார். ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது. இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது. மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும்[2].

அரசியலுக்காக, விளம்பரத்திற்காக தொடுத்த வழக்கு போன்றுள்ளது: “இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார். “தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியா–பாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா? பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி. வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.”

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது: இங்கு எங்குமே, கல்லெறி கலாட்டா மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள், தீவிரவாதிகள் நுழைவு, தினமும் நடக்கும் துப்பாக்கிகி சண்டைகள், இறப்புகள், அதனால், இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைதல் முதலியவை விவாதிக்கப்படவில்லை. ஏதோ சாதாரணமாக, மாண்வர்கள் கல்லெறிவதில் ஈடுபட்டுள்ளது போன்று விவாதம் நடந்துள்ளதாக செய்தி விளக்குகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவதே மிகவும் தவறானது என்று எல்லாம் அறிந்த, தி.இந்து-காரர்களுக்கு தெரியாதா என்ன? மனித உரிமைகள் என்று வந்தால், அவை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது என்றுள்ளது போலும். அத்தகைய சித்தாந்தம் என்னவோ?

ராவல்பிண்டி, ஶ்ரீநகர் தொடர்புகள்: பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சில கிடைத்தபோது, அவற்றை சோதித்ததில், இரண்டு முறை பணம் கொடுத்தது-வாங்கியது என்பது ராவல்பிண்டி மற்றும் ஶ்ரீநகர் என்று காட்டுகிறது. அதாவது, ராவல்பிண்டியில் ஐ.எஸ்.ஐ தலைமையகம் உள்ளது, ஶ்ரீநகரில் ஹுரியத் உள்ளது. இங்கிருந்து பணம் அனந்ட்தநாக், புல்வாமா, குப்வாரா போன்ற இடங்களுக்கு செல்கிறது. ராவல்பிண்டியில், ஐ.எஸ்.ஐ ஆள், அஹமது / மெஹ்பூப் சாகர் ஹுரியத் தலைவர்களுடன் தொடர்ந்த உறவுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். இவன் பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசிந்திற்கு நெருக்கமானவன். இப்பணியை செய்ய இவனுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. இதுதவிர, “இன்டெல்”, மூலம் பெற்ற ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டன போன்ற விவரங்களும் பட்டியல்களில் காணப்படுகின்றன[3]. இதன்மூலம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூதரகம், பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்கள் முதலியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[4]. ஆகவே, நிச்சயமாக, இந்தியாவின் பெருந்தன்மையினை, மனிதாபிமான நடவடிக்கைகளை, கோடிகள் கொட்டி, அம்மக்களின் பாதுகாப்பை காப்பாற்றியும் ஏமாற்றி, துரோகம் செய்து வருவதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இனி வரிப்பணத்தை இந்த பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்வதை விட்டுவிட வேண்டும்.

பிடிபட்ட பாகிஸ்தான் ஒற்றர்கள் மூலம் தெரிய வந்துள்ள விவரங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன: சென்ற மாதம் ஏப்ரலில் மும்ப்ராவில், நஜீம் அஹமது [Nazim Ahmed] என்பவன் தீவிரவாத கும்பலின் தலைவன் என்று கைது செய்யப்ப்பட்டான்[5]. அவனுடைய கூட்டாளிகளும் உத்திரபிரதேசத்தில் பல இடங்களில் பிடிபட்டனர்[6]. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவருக்கு நிதியுதவி வழங்கியதாக மும்பையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தீவிரவாத ஒழிப்பு படையினர் மும்பையின் தெற்கு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அல்தாஃப் குரேஷி [Altaf Bhai Qureshi] என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[7]. லக்னோவில் தங்கியிருந்த அஃப்தாப் அலி [Aftaab Ali ] என்பவரின் வங்கி கணக்கில் குரேஷி பணம் செலுத்தியுள்ளார். குரேஷியிடம் இருந்து தீவிரவாத ஒழிப்பு படையினர் ரூ.71.57 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனினை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்[8]. இருவருமே ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்துள்ளனர்[9]. அலி பாகிஸ்தானுக்கு சென்று வந்ததோடல்லாமல், தில்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் போனில் பேசியுள்ளான். விசாரணையின் போது, இவ்விவரங்கள் வெளிவந்தன[10].
© வேதபிரகாஷ்
08-05-2017

[1] ”தி.இந்து, அமைதி திரும்ப வேண்டுமெனில் காஷ்மீர் மாணவர்கள் கல்லெறிவதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம், கிருஷ்ணதாஸ் ராஜகோபால், Published: April 28, 2017 16:04 ISTUpdated: April 28, 2017 16:11 IST
[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9670246.ece
[3] TIMES NOW, TIMES NOW EXCLUSIVE: Secret intel papers show how ISI funds Hurriyat, by Srinjoy Chowdhury, May 07, 2017 | 10:55 IST.
[4] One of the annexures of top secret intel document has proof that cash was chan nelled to multiple individuals in the Hurriyat office in Srinagar. This is direct proof of a link between funds sent by Pakistan’s ISI and Hurriyat. “Register of treachery”, lists out names of Hurriyat men and money they took under various heads (see table). The payments made are only for one month, essentially meaning that there is a fixed salary paid to many and that there is a monthly contribution made for Hurriyat’s day-to-day expenses.
http://www.timesnow.tv/india/article/times-now-exclusive-secret-intel-papers-show-how-isi-funds-hurriyat/60605
[5] The Hindu, UP ATS arrests suspect from Pydhonie in espionage case, 04 MAY 2017 00:59 IST, Updated: 04 MAY 2017 00:59 IST
[6] http://www.thehindu.com/news/cities/mumbai/up-ats-arrests-suspect-from-pydhonie-in-espionage-case/article18380025.ece/amp/
[7] மாலைமலர், பாகிஸ்தான் உளவு அதிகாரிக்கு உதவியதாக ஹவாலா ஆப்பரேட்டர் மும்பையில் கைது, பதிவு: மே 05, 2017 00:31.
[8] http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05003134/1083576/Hawala-operator-held-in-Mumbai-for-funding-suspected.vpf
[9] Hindustan Times, Suspected ISI agent held in UP, another picked up from Mumbai, Rohit K Singh, Lucknow, Updated: May 03, 2017 22:52 IST
[10] http://www.hindustantimes.com/india-news/suspected-isi-agent-held-in-up-another-picked-up-from-mumbai/story-yTvIhUUyegnLevgpZLHwLM.html
பிரிவுகள்: அப்துல் பசித், அலி ஷா கிலானி, அலி ஷா ஜிலானி, ஆலி ஷா கிலானி, இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, உமர் ஃபரூக், உளவாளி, என்.ஐ.ஏ, ஐ.எஸ்.ஐ, ஐசிஸ், கலவரம், கலாட்டா, கல், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கள்ள நோட்டுகள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டுவெடிப்பு, கைது, ஜிஹாதி, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஷபிர் ஷா, Uncategorized
Tags: அப்துல் பசித், அலி ஜிலானி, கல், கல்லடி கலாட்டா, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி, கல்லெறி கலாட்டா, கல்வீச்சு, கிலானி, ஜிஜாதி தீவிரவாதம், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தில்லி, ராவல்பிண்டி, ராவல்பின்டி, ஶ்ரீநகர், ஷபிர் ஷா, ஹவாலா, ஹுரியத்
Comments: Be the first to comment
நவம்பர் 7, 2016
“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.
போபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன? தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.

அக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.
வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார்?: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9]. அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.
ஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்?: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே? அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
07-11-2016

[1] Indian Express, Clues to Bhopal SIMI activist jailbreak ‘inside job’: Moulds, CCTV off, Written by Dipankar Ghose | Bhopal | Published:November 7, 2016 3:20 am
[2] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-jailbreak-encounter-insider-job-3740874/
[3] The Hindustan Times, CCTV cameras weren’t working in Bhopal jail when SIMI prisoners escaped, Anirban Roy, Hindustan Times, Bhopal, Updated: Nov 01, 2016 16:04 IST
[4] http://www.hindustantimes.com/india-news/non-functinal-cctv-cameras-may-have-helped-simi-prisoners-escape-sources/story-gxnkltkV0kH5T8ow6zkC7K.html
[5] Amjad, Zaqir Hussain, and Sheikh Mehboob alias Guddu — were among the six who escaped from the district jail three years ago. escaped from the Tantya Bheel central jail in Khandwa district on October 1, 2013.
[6] The Hindustan Times, Bhopal jailbreak exposes security gaps in MP’s best-secured prison, Kalyan Das, Hindustan Times, Bhopal, Updated: Oct 31, 2016 21:49 IST
[7] The tactics used in both jailbreaks were almost identical. On both occasions, the SIMI men used steel spoons, utensils, toothbrushes and metallic tongue cleaners to make crude daggers to attack jail guards. One such weapon was used to slit the throat of head warder Ramashankar Yadav inside the B block of the Bhopal jail between 2am and 3am. Then again, they made a rope ladder with bed sheets — stringing pieces of wood in between for steps. The technique was used by a self-styled SIMI commander at Khandwa jail.
http://www.hindustantimes.com/india-news/bhopal-jailbreak-exposes-security-gaps-in-mp-s-best-secured-prison/story-k5gFUlt9PnTEI2wfhdbRVK.html
[8] Indian Express, Bhopal encounter: Jailbreak not possible without insider help, says MP Home Minister, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 2, 2016 12:26 pm.
[9] When contacted, Madhya Pradesh Home Minister Bhupendra Singh said it was “impossible to escape without inside collusion” and alleged that the jailbreak was facilitated by “funding from outside”. “It must have taken elaborate planning over two to three months because it is not possible to make duplicate keys so early and without help from an insider,” said Singh – Indian Express.
http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-encounter-simi-activists-jailbreak-not-possible-without-insider-help-says-mp-home-minister-bhupendra-singh-3733047/
[10] The Hindu, Death wish on a Bhopal night: Daring escape to nowhere, November 1, 2016.
[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/death-wish-on-a-bhopal-night-daring-escape-to-nowhere/article9289399.ece
பிரிவுகள்: ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், ஒவைஸி, கைதி, கைது, கைபேசி, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, சட்டமீறல், சட்டம் மீறல், சதி, சிபிசிஐடி, சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, சிறையில் அடைப்பு, ஜெயில், ஜெயில் உடைப்பு, ஜெயில் பூட்டு, தப்பித்தல், போபால், Uncategorized
Tags: இஸ்லாம், கண்காணிப்பு, கண்காணிப்பு கேமரா, காவலாளி, காவல், கேமரா, சிமி கொலையாளி, சிமி தீவிரவாதி, சிமி பயங்கரவாதி, சிறை, சிறைச்சாலை, சிறையுடைப்பு, தடை செய்யப்பட்டுள்ள சிமி, தப்பித்தல், திட்டம், போபால், வெளியேறுதல்
Comments: Be the first to comment
ஜூலை 1, 2016
ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்!

என்ஐஏ சோதனையில் ஹைதராபாதில் தீவிரவாதிகள் பிடிபட்டனர்: மாதிரி தீவிரவாதி குழுமம் [module] என்று அமைக்கப்பட்டு, தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் ரகசியமாக செயல்பட்டு வருகின்றன. என்னத்தான் முஸ்லிம்கள் தங்களுக்கும், தீவிரவாதத்திற்கும் சம்பந்தமில்லை, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்றெல்லாம் வாத-விவாதங்கள் புரிந்தாலும் அத்தகைய காரியங்களை செய்யும் ஆட்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பழைய ஹைதராபாத்தில் 28-06-2016 அன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு நடத்திய அதிரடி சோதனையில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்[1]. ஹைதராபாத் நகரின் மீர் சவுக், பவானி நகர், மொகுல்புரா, பர்காஸ் உள்ளிட்ட பல பகுதிகளில், தெலங்கானா மற்றும் ஹைதராபாத் போலிஸாருடன் என்ஐஏ அதிகாரிகள் கூட்டாக இணைந்து 30-06-2016 புதன்கிழமை அன்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. இதில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப் பட்டனர்[3].
ஐ.எஸ்சுடன் தொடர்புகள்: ஜனவரியில் இதே போன்ற நடவடிக்கையில் 25 பேர் பிடிபட்டனர். இந்திய முஜாஹித்தீன் [Indian Mujahideen (IM)] தீவிரவாத இயக்கத்திலிருந்து பிரிந்த அன்சர்-உல்-தவ்ஹீத் [Ansar-ul-Tawhid (AuT)] என்ற கூட்டத்தைச் சேர்ந்த இவர்கள், ஐஎஸ்சுடன் தொடர்புகள் வைத்துள்ளனர். ஐஎஸ்சுக்கு இந்த ஆட்கள் மிகவும் பாதுகாக்கப்படும் இணைதளம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்[4]. இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ரூ.15 லட்சம் ரொக்கம், 23 செல் போன்கள், 3 லேப்டாப்கள், போலி அடையாள ஆவணங்கள், அமிலங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன[5]. ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. ஹைதராபாத் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டது.

முன்னர் கண்காணீத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது: ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பது உள்பட பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாகவும், அதற்காக அந்நகரில் உள்ள இளைஞர்களை ரகசியமாகப் பயன்படுத்தி வருவதாகவும் உளவுத் தகவல் கிடைத்தது[7]. ஜூன் மாத ஆரம்பத்திலேயே அத்தகைய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, இலங்கையில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை வைத்து ஆந்திராவில் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்தது[8]. தற்போது இந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐயின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் ஐபி எச்சரித்தது. குறிப்பாக விசாகப்பட்டனத்தில் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் ஐபி எச்சரித்தது. இதையடுத்து விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து ஊடுறுவி வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஐபி கூறியது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது அரசின் உயர் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்ட அவர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்[9]. 22-06-2016 அன்றே முதல் தகவல் அறிக்கையை பல சட்டங்களின் கீழுள்ள பிரிவுகளில் பதிவு செய்து, நடவடிக்கையை ஆரம்பித்தது[10].
ரம்ஜான் காலத்தில் தீவிரவாதம் ஏன்?: பொதுவாக, இந்தியாவில் பண்டிகைகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நேரங்களில் வதந்திகளைப் பரப்புதல், குழப்பம் உண்டாக்குதல், இணைதளம் மற்றும் செல்போன்களில் போலியான தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள்-வீடியோக்கள் போட்டு பரப்புதல், கலவரங்களை ஏற்படுத்துதல், போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரம்ஜான் மாதத்தில், இத்தகைய கொலை-குண்டுவெடிப்பு முதலியவற்றால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று மூளைசலவையும் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தான், இந்த ரம்ஜான் நேரத்தில் உலகம் முழுவதும் அத்தகைய குரூர குண்டுவெடிப்புகள் நடைப்பெற்று வருவதை கவனிக்கலாம். “ஓநாய் போன்ற தாக்குதல்” என்ற முறையை பயன்படுத்தி, கலவரங்கள், நாசவேலைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது[11]. நகரத்தில் உள்ள எல்லா வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதிலும் பிரச்சினைகள் உள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், அத்தகைய முறைகளை முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். தங்களைக் கண்காணிக்கத்தான், பாதுகாப்பு என்றா போர்வையில் போலீஸாரை மசூதிகளுக்குள் நுழைய ஏற்பாடு செய்கின்றனர் என்று முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
© வேதபிரகாஷ்
01-07-2016

[1] தி.இந்து, 11 ஐஎஸ் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் கைது, Published: June 30, 2016 08:12 ISTUpdated: June 30, 2016 09:07 IST.
[2] http://tamil.thehindu.com/india/11-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article8791075.ece
[3] புதியதலைமுறை.டிவி, ஹைதராபாத்தில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள் : June 30, 2016 – 10:02 AM; மாற்றம் செய்த நாள் : June 30, 2016 – 10:05 AM.
[4] All the recruitments were done through the Internet and secure web-based applications. The accused were under surveillance for the past three months.
http://www.thehindu.com/news/cities/Hyderabad/hyderabad-youths-picked-by-city-police-nia-for-links-with-islamic-state/article8787455.ece
[5] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/35539/11-isis-terrorist-arrested-in-hyderabad
[6] தமிழ்.ஒன்.இந்தியா, ஹைதராபாத்தில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு.. அடுத்தடுத்து 11 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் 11 பேர் கைது, By: Veera Kumar, Published: Wednesday, June 29, 2016, 10:28 [IST].
[7] தினமணி, ஹைதராபாதில் தாக்குதல் நடத்த சதி:ஐ.எஸ். தொடர்புடைய 11 இளைஞர்கள் கைது, First Published : 30 June 2016 04:06 AM IST.
[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஆந்திராவில் நாச வேலையில் ஈடுபடத் தயாராகும் லஷ்கர் தீவிரவாதிகள்… எச்சரிக்கும் ஐபி, By: Sutha, Published: Thursday, June 2, 2016, 11:44 [IST].
[9] http://tamil.oneindia.com/news/india/isi-s-sri-lanka-module-waiting-strike-andhra-pradesh-intelligence-bureau-255073.html
[10] A First Information Report (FIR) was registered by the NIA on June 22 under various sections of Indian Penal Code, the Explosive Substances Act and the Unlawful Activities Prevention Act (UAPA). The FIR, available with The Hindu, says: “The accused and their accomplices from Hyderabad and other parts of the country have entered into a criminal conspiracy to wage war against government of India by collecting weapons and explosive materials to target prominent places, public places, religious places, malls, markets, public properties and in particular sensitive government buildings in Hyderabad and other places.” It also read: “It is also reliably learnt that they have acquired weapons and explosive materials to carry out violent terrorist attacks and related subversive activities. The members of this group are in constant touch with each other on the Internet and are using various other communication platforms within India and have linkages abroad. Information has also been received to the effect that the group members are in communication with a terrorist organisation namely IS, which is a proscribed organisation.”
http://www.thehindu.com/news/cities/Hyderabad/hyderabad-youths-picked-by-city-police-nia-for-links-with-islamic-state/article8787455.ece
[11] It was clear that Syria-based IS handlers were luring the 11 suspects to join the group. Many individuals owing allegiance to IS or supporting their fight had carried out lone wolf attacks — springing up at public places and shooting at people with firearms — in different parts of the world recently.
http://www.thehindu.com/news/national/andhra-pradesh/did-is-handlers-plan-lone-wolf-attack-in-hyderabad/article8790389.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews
[12] “We cannot poke them continuously to improve their alertness, as they accuse us of harassment,” a Task Force official says.
http://www.thehindu.com/news/national/andhra-pradesh/security-at-public-places-still-dicey/article8790391.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews
பிரிவுகள்: அன்சர்-உல்-தவ்ஹீத், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அல்லா, அழிப்பு, அழிவு, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இப்தார், இராக், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், ஐதராபாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், கைது, கைபேசி, தீவிரவாத திட்டம், மாட்டிறைச்சி, மாட்யூல், Uncategorized
Tags: அன்சர்-உல்-தவ்ஹீத், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, கொலை, ஜிஹாத், தீவிரவாத திட்டம், மாட்டிறைச்சி, மாட்யூல், முகமதியர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ஷியா, ஹைதராபாத்
Comments: Be the first to comment
திசெம்பர் 18, 2015
மொஹம்மது அக்ரம் கான், என்ற பிடோபைல் ஐதராபாதில் கைது செய்யப்பட்டான்!
நிர்பயா வழக்கில் குற்றவாளியின் பெயரை மறைப்பது ஏன்?: நிர்பயா வழக்கில், கொடூர கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளவன், சிறுவன், 18 வயதுக்கு கீழானவன் என்று அவன் விடுவிக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி அவன் குற்றம் புரிந்திருந்தாலும், சிறுவன் என்ற முறையில் தப்பித்து விடுவான் என்ற நிலையுள்ளது. மேலும் குறிப்பாக அவன் முஸ்லிம் என்பது ஊடகங்களிலிருந்து அறவே மறைக்கப்படுகின்றன. சில ஊடகங்கள் மறைமுகமாக, அவன் மதத்திற்குத் திரும்பியுள்ளான், தினமும் நான்கு முறை தொழுகை செய்கிறான், தாடி வளர்த்துள்ளான், ரம்ஜான் மாதத்தில் உபவாசம் இருக்கிறான் என்று விளக்குகின்றன[1]. அதாவது, அவன் ஒரு முஸ்லிம் என்பதை வெளியே சொல்வதை தவிர்த்து வருகின்றன. தி இன்டிபென்டென்ட் போன்ற இங்கிலாந்து நாளிதழ் கூட அவன் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடுகிறது வேடிக்கையாக இருக்கிறது[2]. செக்யூலரிஸத்தில் ஊறியுள்ள மற்றவர்களும் இதைப் பற்றி வாய் திறக்கக் காணோம். ஆனால், இப்பொழுது பிடோபைல் விவகாரத்தில், பெயரைக் குறிப்பிட்டு அதிரடியாக செய்திகளை வெளியிட்டாலும், முரண்பாடுகளுடன் உள்ளது வேடிக்கையாக இருக்கிறது.
மொஹம்மது அக்ரம் கான் மனைவியுடன் சண்டை போட்டு வந்தான்: இந்ந்திலையில், ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய ஒருவனைப் பற்றிய செய்தி அது கொண்டிருக்கிறது. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், மொஹம்மது அக்ரம் கான் (46) தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்ததால் கணிசமாக சம்பாதித்து வந்தான். மேலும், தனது வீட்டிலேயே, நான்கு குடும்பங்களுக்கு வாடைகைக்கும் விட்டிருந்தான். இது வரை, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவனுக்கும், இவனது மனைவிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால், அவன் தன்னை அடிப்பதாக அவன் மீது புகார் கொடுத்து வழக்கும் [registered 498 a (domestic violence) IPC case against him] பதிவாகியுள்ளது. இதனால், அபவனுடன் சேர்ந்து வாழாமல், அருகிலேயே வேறு வீட்டில் வசிந்து வந்தாள்[3].
சிசிடிவி வைத்து கண்காணித்த மனைவி: மேலும், அவனுக்கு பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கணவனின் நடத்தையில் சந்தேகம் பட்டு, அவனுக்குத் தெரியாமல், மனைவி வீட்டில் சிசிடிவி வைத்திருந்தாள்[4]. ஒரு நான்கு வயது பெண்ணை பாலியல் ரீதியில் தாக்கும் போது, அது அவனையும் அறியாமல் பதிவாகியது. ஆறு வயது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன[5]. அதனைப் பார்க்க முயன்ற போது, தன்னால் முடியாதலால், ஒரு நாள் டெக்னிஸியனைக் கூப்பிட்டு, பதிவாகியுள்ளவற்றைக் காண்பிக்கச் சொன்னபோது, அந்த விவகாரம் தெரிய வந்தது. அச்சிறுமியை கூப்பிடுவது, பேசுவது, சாக்கிலெட் கொடுப்பது, பிறகு தகாத முறையில் செக்ஸில் ஈடுபடுவது என்று எல்லாம் தெரிந்தது[6]. இதையெல்லாம் பார்த்துத் திகைத்து விட்டாள். இருப்பினும், முதலில் இதை மற்றவர்களிடம் சொல்ல தயங்கினாள்[7]. இதனால், வெளியே சொல்ல மறுத்தாள் என்றும் மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப் பட்டதற்கு கொதித்த அப்பெண், எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதைப் பார்த்த பிறகும், மறைக்கத் துணிந்தாள் என்பதும் திகைப்பாக இருக்கிறது.
வீடியோ பற்றி வெளியே அறிவித்தது மனைவியா, நண்பனா, விடியோ டெக்னிஸியனா?: போலீஸாரிடம் வீடியோ பற்றி தெரிவிப்பது பற்றி இருவிதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அவனது நண்பர் நகல் எடுத்ததாகத் தெரிகிறது. இதை அவர் போலீஸீடம் ஒப்படைத்ததால் கைது செய்யப்பட்டதாக, முதலில் செய்தி வந்தது. இறகு, அந்த வீடியோ பதியைப் பார்த்த மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான் என்றும் செய்தி உள்ளது[8]. ஹைதராபாதில் போலீஸாரார் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக பல இடங்களில் சிசிடிவிகளைப் பொறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சிசிடிவி டெக்னிஸியன்களுக்கும், குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவ்வாறு நடந்தால், எப்படி அறிவது போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது, ஒமர் என்ற சிசிடிவி டெக்னிஸியன் இதைப் பற்றி கூறினான். குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும் போது, கண்ட காட்சியை விவரித்தான்[9].
வாதம் புரிந்து கைதான மொஹம்மது அக்ரம் கான்: மேலும் கடந்த ஒரு மாத காலமாக வீட்டுக்கு வராமல், வேறெங்கேயோ தங்கியிருந்தான். போலீஸார் அவனை பிடித்து விசாரித்தபோது, தான் ஒரு பிடோபைல் என்பதனை ஒப்புக்கொண்டான். ஆனால், முதலில் தன் மீது எந்த குற்றமும் இல்லை, அந்த சிறுமிதான், மிகவும் அருகில் வந்தாள்[10], அதை கேட்டாள் என்றெல்லாம் வாதம் புரிந்தான். விடியோவில் இவன் வாதிப்பது வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை, நிர்பயா குற்றவாளியான அவனைப் போலவே தான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் இவன் அவ்வாறு வாதித்தானா என்ற எண்ணம் அதனால் எழுகின்றது. ஆனால், வீடியோ பதிவில் அவனது செயல் அப்பட்டமாகத் தெரிந்ததால், போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்[11]. ஹைதராபாதில், சுன்னே கி பட்டி, ஜஹானுமா ஏரியாவில், இவன் அவ்வாறு ஈடுபட்டபோது, சிசிடிவி மூலமாக பார்த்தபோது பிடிபட்டான். இதனால், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 377 (unnatural offence), 363 (punishment for kidnapping), 366, 419, [Section 377, Section 363, Section 366, Section 419 of IPC] மற்றும்நிர்பயா சட்டம் பிரிவு 534 (A) (1) (i) [534 (A) (1) (i) of Nirbhaya Act], மற்றும் பிரிவு 6 பொகோசோ சட்டம் [Section 6 of POCSO (Protection of Children from Sexual Offenses) Act] முதலிவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டான்[12].
© வேதபிரகாஷ்
18-12-2015
[1] According to the report, counselors and officers at the facility say that the man has reformed and is a model inmate. He has turned to religion, offering namaz 5 times a day, growing a beard as well as keeping the fast during the period of Ramzan.
http://www.dnaindia.com/india/report-nirbhaya-case-religious-juvenile-unwilling-to-leave-reform-home-2103589
[2] The juvenile, who belongs to a Muslim family that lives near the town of Islam Nagar,…………….
http://www.independent.co.uk/news/world/asia/juvenile-in-delhi-gang-rape-and-murder-case-pleads-not-guilty-to-charges-8515369.html
[3] Times of India, Businessman subjects minor girl to unnatural sexual abuse, Srinath Vudali,TNN | Dec 17, 2015, 11.18 PM IST.
[4] http://www.ndtv.com/hyderabad-news/man-caught-on-cctv-abusing-minor-girl-in-hyderabad-1256320
[5] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760
[6] To the shock of the technician, Akram has been abusing the four year old through unnatural sex just beyond anyone’s imagination. He has been luring the victim by giving her chocolate. Surprisingly, the wife also kept quite by not alert the police,” Deputy Commissioner of police (South Zone) V Satyanarayana told TOI. The victim is a neighbour to the accused and he is also accused of being in touch with other woman.
http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Businessman-subjects-minor-girl-to-unnatural-sexual-abuse/articleshow/50224559.cms
[7] http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature
[8] http://www.abplive.in/crime/46-year-old-man-caught-on-cctv-abusing-minor-girl-arrested-261760
[9] Later, the two watched the footage and a shocked wife chose to not report about it. However, the incident came into light when the police in the southern zone as part of community policing, set up CCTV at various places and conducted an an awareness programme for CCTV technicians. During the awareness program, Omar narrated about Akram’s incident
http://www.sakshipost.com/index.php/news/politics/69910-man-caught.html?psource=Feature
[10] http://www.newkerala.com/news/2015/fullnews-163740.html
[11] http://www.ibnlive.com/news/india/hyderabad-man-accused-of-sexually-assaulting-four-year-old-girl-blames-the-child-for-the-crime-1178612.html?utm_source=IBNLive_Article_From_This_Section_Widget&utm_medium=clicks&utm_campaign=ibnlive_article_page
[12] http://www.thehansindia.com/posts/index/2015-12-18/Wife-catches-hubby-raping-minor-193868
பிரிவுகள்: அடி உதை, அடிப்படைவாதம், இச்சை, ஊடல், கற்பழிப்பு, கற்பு, குடும்பம், குற்றம், குழந்தை பாலியல், கைது, சட்டம், சிறுமி, சிறுவர் பாலியல், பாலியல் குற்றம், பாலியல் வன்முறை, Uncategorized
Tags: அக்ரம் கான், குழந்தை பாலியல், சிறுவர் பாலியல், சிறுவல் பாலியல், செக்ஸ், பாலியல், பாலியல் வன்மம், பாலியல் வன்முறை, பிடோபைல், முஸ்லீம்கள், மொஹம்மது அக்ரம் கான்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 8, 2015
ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது
ஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்
ஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது? எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத்துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].

போலீசார் காயம்
போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை? எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012
ஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை?: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்? அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே? டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே? மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:
- கடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.
- நடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.
- மே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
- ஒரு வாரம் (?) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
- ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள்? ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும்? ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.
- பழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.
- 15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.
- ஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.
- 02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்?
- ஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்?
- சந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா? அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா?
- பெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்?
- தேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
- இதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].
© வேதபிரகாஷ்
08-08-2015
[1] http://www.maalaimalar.com/2015/08/06110912/ambur-violence-case-shameel-ah.html
[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லை – இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.
[3] http://www.vkalathur.in/2015/06/7_28.html
[4] http://www.deccanchronicle.com/150704/nation-crime/article/cb-cid-yet-question-custody-killer-inspector
[5] https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y
பிரிவுகள்: ஆம்பூர், ஆர்பாட்டம், இன்ஸ்பெக்டர், இறப்பு, எரிப்பு, கலவரம், கலாட்டா, கல்வீச்சு, கைது, கொலை, சிபிசிஐடி, பள்ளி கொண்டா, பள்ளிகொண்டா, பழனி, பவித்ரா, பிரேம் ராஜ், பிரேம்ராஜ், புகார், மார்டின், மார்டின் பிரேம்ராஜ், வேலூர், ஷமீல்
Tags: ஆம்பூர், ஆர்பாட்டம், இன்ஸ்பெக்டர், இறப்பு, கலவரம், கலாட்ட்டா, கல்வீச்சு, கைது, கொலை, சிபிசிஐடி, தவ்ஹீத் ஜமாத், பள்ளி கொண்டா, பள்ளிகொண்டா, பழனி, பவித்ரா, பிரேம் ராஜ், பிரேம்ராஜ், புகார், போலீஸ், மார்டின், மார்டின் பிரேம்ராஜ், வழக்கு, வேலூர்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 8, 2015
ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது
ஜூலை.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டது: ஜூன்.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று ஆம்பூர் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தனர், புகாரும் கொடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதால் தான் கலவரம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின[1]. ஷமீல் அகமது மரணம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் காணாமல் இருந்து, பிறகு கைது செய்யப்பட்டவுடன், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஜூன் 15 முதல் 18 வரை போலீஸ் கஸ்டடியில் ஷமீல் அகமத் இருந்தார்[2]. பிறகு அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர்
ஷமீல்அகமது இறப்பு, தௌவீத் ஜமாத் ஆர்பாட்டம், மார்ட்டின் பிரேம்ராஜ் மருத்துவ–விடுப்பு: ஜூன்.19 அன்று ஆம்பூரில் உள்ள பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். ஜூன்.23ம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஜூன்.26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் இறந்தார்[3]. தௌவீத் ஜமாத் [Thoweed Jamath] ஆட்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு கடந்த ஜூன் 27ம் தேதி ஆர்பாட்டம் செய்தனர் இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது[4]. அன்றிலிருந்தே, மார்டின் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவ-விடுப்பில் சென்று விட்டார்[5]. இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு[6] சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது[7]. ஒருபுறம் போலீஸார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். பெண் போலீஸார் தாங்கள் எப்படி துரத்தப் பட்டனர், மானபங்கத்திற்கு உள்ளாகினர் என்றெல்லாம் கதறியபடி தங்களது அனுபவங்களை சொல்லி வந்தனர். ஆனால், மறுபுறம் இந்நடவடிக்கையும் தொடர்ந்தது.

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்
ஜூன்.19 முதல் 26 வரை சிகிச்சை அளித்தது: ஷமீல் அகமது எட்டு நாட்களில், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்.
சிகிச்சை தேதிகள் |
மருத்துவமனை, இடம் |
சிகிச்சை பெற்ற நாட்கள் |
ஜூன்.19 முதல் 23. 2015 வரை |
ஆம்பூரில் உள்ள பொது மருத்துவமனை |
ஐந்து நாள் சிகிச்சை பெற்றுள்ளார். |
ஜூன்.23 முதல் 25. 2015 வரை |
அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவமனை |
இரண்டு / மூன்று நாள் நாள் சிகிச்சை பெற்றுள்ளார். |
ஜூன்.26. 2015 |
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை |
அன்று மாலை உயிரிழந்தார். |
அதனால், அங்கு இவருக்கு என்ன சிக்கிச்சை அளிக்கப்பட்டது, எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான, ஆவணங்கள் இருக்கும். எதனால், இறப்பு ஏற்பட்டது என்பதையும் மருத்துவரீதியில் இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். போலீஸ் விச்சரணையின் போது மாமனார் என்.கே. முகமது கௌஸ் [N. K. Mohammed Ghouse, father-in-law of Shamim Ahmad] தான் ஷமீம் அகமதுவைப் பார்க்க தினமும் அங்கு சென்றுள்ளதாகவும், மார்டின் ஒரு விருந்தினர் மாளிகைக்கு, ஷமீம் அகமதுவை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு பேட்டியில், ஜவஹருல்லா, மார்டின் தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினார் என்கிறார்[8].

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர் கைது – மாலைமலர்
ஜூலை 31ம் தேதி மான் வேட்டையாடியதாக மார்டின் பிரேம்ராஜ் கைது: ஷமீல் அகமது இறந்த விசயம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது [the summons issued by the CB CID in the case under section 176 (inquiry by a magistrate into the cause of death)[9]]. ஆனால் அவர் ஆஜராகவில்லை, நண்பர்களுடன் தலைமறைவாக இருந்தார்[10]. மருத்துவவிடுப்பில் சென்றார் என்று முன்னரே குறிப்பிடப்பட்டது. போலீஸார் அவரைத் தேடி வந்தனர்[11]. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகிய பாண்டியபுரம் வனச்சரக காடுகளில் மிளா / மான் வேட்டையாடியதாக [under Section 4 of the Wildlife Act ] மார்ட்டின் பிரேம்ராஜ் (50), பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டெபில் சி. கிறிஸ்டோபர்(51), டி. ஐயப்பன் (46), என். கோபாலகிருஷ்ணன் (22), முதலியோர்[12] வனத்துறையினர் உரிய வனச்சட்டதின் கீழ் ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டனர்[13]. 40 கி இறைச்சி, மான் தோல், கொம்புகள் முதலியவற்றுடன் இரண்டு வண்டிகள், துப்பாக்கி முதலியன கைப்பற்றப்பட்டன[14]. பிறகு நாகர்கோவில் / பாளையகோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்[15]. அதில் மார்டின் பிரேம்ராஜ் தேடப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஆவர்[16]. இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்[17]. அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[18]. இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[19].
© வேதபிரகாஷ்
08-08-2015
[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Delay-in-Booking-Inspector-led-to-Ambur-Clash/2015/07/08/article2908517.ece
[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1311782
[4] தினமலர், ஆம்பூர் கலவர வழக்கு விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் 3 நாள் விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.
[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece
[6] http://www.deccanchronicle.com/150708/nation-crime/article/suspended-inspector-named-ambur-custody-death-absconding
[7] தினகரன், ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.
[8] ராஜ்-டிவி, கோப்பியம் நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y
[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-takes-custody-of-pallikonda-inspector/article7505510.ece
[10] தி இந்து, ஆம்பூர் கலவரத்தில் சஸ்பெண்ட் ஆன காவல் ஆய்வாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு, Published: August 6, 2015 08:02 ISTUpdated: August 6, 2015 08:04 IST.
[11] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece
[12] The Hindu, Inspector suspended over Ambur clash held for hunting deer, Updated: August 1, 2015 05:53 IST.
[13] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-to-Grill-Premraj-for-3-days/2015/08/06/article2960000.ece
[14] http://www.thehindu.com/news/national/tamil-nadu/inspector-suspended-over-ambur-clash-held-for-hunting-deer/article7487594.ece
[15] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/08/05184106/Ambur-murder-case-of-a-young-man3-days-inspectorCipiciaiti.vpf
[16] During the questioning that followed it was found that they were C Christopher (51) of Kottricode, T Iyyappan (46) of Puthukadai, N Gopala Krishnan (22) of Puthukadai all from Kanyakumari district and C Martin Prem Raj (50) of Thirukoviloor in Villupuram district, said forest officials. All the four were booked under section 9 of Wild Life Protection Act on charges of trespassing into a reserve forest and poaching a sambar deer. They were arrested and were produced at the forest court, officials added. Of the arrested four Martin Prem Raj was an inspector of police who was on the look out list of Vellore police in connection with the Ambur riots in Vellore district recently.
http://m.newindianexpress.com/tamil-nadu/511278
[17] தினத்தந்தி, ஆம்பூர் வாலிபர் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டரை 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை வேலூர் கோர்ட்டு அனுமதி, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 06,2015, 2:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 05,2015, 6:41 PM IST.
[18]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7506466.ece
[19] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=160119
பிரிவுகள்: ஆம்பூர், ஆர்பாட்டம், இன்ஸ்பெக்டர், இறப்பு, எரிப்பு, கலாட்டா, கல்வீச்சு, கைது, கொலை, சேதம், தௌவீத் ஜமாத், நடவடிக்கை, பிரேம் ராஜ், புகார், போலீஸ், ப்ரேம்ராஜ், மான் வேட்டை, மார்டின், மார்டின் பிரேம்ராஜ், வழக்கு, விசாரணை
Tags: அடி, ஆம்பூர், ஆர்பாட்டம், இன்ஸ்பெக்டர், இறப்பு, எரிப்பு, கலவரம், கல்வீச்சு, கைது, கொலை, சஸ்பென்ட், தலைமறைவு, தௌவீத் ஜமாத், நடவடிக்கை, நாசம், பதவி விலக்கு, பிரேம்ராஜ், புகார், போலீஸார், போலீஸ், மான் வேட்டை, மார்டின், மார்டின் பிரேம்ராஜ், லீவ், வழக்கு, விசாரணை, விடுப்பு
Comments: Be the first to comment
ஏப்ரல் 11, 2015
தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (1)

சிமி கொல்லப்பட்டவர்களுள் ஒருவன்
வாராங்கல் ஜெயிலிலிருந்து நீதிமன்றத்திற்கு செல்லும்போது, 5 சிமி தீவிரபவாதிகள் சுட்டுக்கொலை: தெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர் . தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்தவர் விக்ருதீன் அகமது (30). தெரீக்-கல்பா-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கிய அவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இரண்டு போலீஸாரை சுட்டுக் கொன்றது, குஜராத் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன . பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் விக்ருதீன் அகமதுவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. தலைமறைவாக இருந்த அவர் கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் முகமது ஹனீப், சையது அகமது அலி, இஷார் கான், முகமது ஜாஹிர் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் விசாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்ட தால் வாரங்கல் சிறைக்கு மாற்றப் பட்டனர். இந்நிலையில் விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிக்க முயன்றபோது 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் .

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னொருவன்
என்கவுன்ட்டர் நடத்தியது / நடந்தது எப்படி?: இந்த என்கவுன்ட்டர் குறித்து தெலங்கானா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வாரங்கல் சிறையில் இருந்து காலை 8.30 மணிக்கு விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் வேனில் ஏற்றிக் கொண்டு போலீ ஸார் புறப்பட்டனர். அவர்களுடன் 17 போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர். ஹைதராபாத்-வாரங்கல் நெடுஞ் சாலையில் கண்டிகாடா தண்டா என்ற இடத்தில் காலை 10.25 மணிக்கு வேன் வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வேனை நிறுத்துமாறு விக்ருதீன் அகமது கோரினார். அந்த இடத்தில் போலீஸார் வேனை நிறுத்தினர். ஐந்து பேரும் கீழே இறங்கியவுடன் அருகில் நின்ற போலீஸாரின் துப்பாக்கியை பறித்து சுட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மற்ற போலீஸார் அவர் கள் ஐந்து பேரையும் சுட்டு வீழ்த்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்தில் வாரங்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.கே.ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். ஐந்து தீவிரவாதிகளின் உடல்களும் ஜாங்கோன் நகர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னுமொருவன்
2-வது என்கவுன்ட்டர் சம்பவம்: சில நாட்களுக்கு முன்பு நலகொண்டா மாவட்டம், சூர்யாபேட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 போலீஸாரை சிமி தீவிரவாதிகள் இரண்டு பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட சூரியபேட் பஸ் நிலைய பகுதியில் கடந்த ஏப்ரல் 2–ந்தேதி அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பஸ்சில் இருந்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் இறக்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு, அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்து விட்டு தப்பி ஓடினர். இதில் ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர் . விசாரணையில் இவர்களுக்கும் மற்ற சிமி தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது . போலீஸார் நடத்திய தீவிர வேட்டையில் 2 தீவிரவாதிகளும் [Aslam Ayub and Mohammed Aijajuddeen] 04-04-2015 அன்று சனிக்கிழமை அன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் நடைபெற்ற ஒரு வாரத்துக்குள் வாரங்கல் மாவட்டத்தில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெலிங்கானாவில் இத்தகைய நிகழ்சிகள் நடப்பது கவலைக்குரியதாக உள்ளது. தெலிங்கானாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 12.4%மாக இருப்பதாலும், மஜ்லிஸ் கட்சி பொதுவாக அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதாலும், இப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகும் என்று தீவிரவாதம் பற்றி ஆயும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Vikruddhi father alleged that it was fake encounter, custodial death
பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்: தில்லியிலிருந்து வந்த ஒருவன் இவர்களை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது . ஆனால், விக்ருத்தீனின் தந்தை மற்றவர்கள், இதெல்லாம், பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர் . அகில இந்திய மஜ்லீஸ்-இ-முஷாவரத் என்ற அந்த அமைப்பின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம், 09-04-2015 வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “மோதல் நடைபெற்றபோது, உயிரிழந்தவர்களின் கைகள் விலங்கிடப்பட்டிருந்ததாக பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்தக் கருத்தை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூத்த அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது, கடந்த காலங்களில் நடைபெற்ற ஹாஷிம்புரா, பாட்லா ஹவுஸ் போன்ற போலி மோதல் சம்பவங்களைப் போன்றதாகும். இந்தச் சூழ்நிலை பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்”, என்றார் ஜாஃபருல் இஸ்லாம்.
பொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.
2013 சிறையிலிருந்து தப்பி வந்ததிலிருந்து கொள்ளைகள், குண்டுவெடிப்புகள்: அக்டோபர் 2013ல் கந்த்வா என்ற சிறையிலிருந்து ஐந்து சிமி பயங்கரவாதிகள் தப்பித்ததிலிருந்து, தொடர்ந்து நடந்து வரும் திருட்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை பொலீஸார் கவனித்து வருகின்றனர் . அக்டோபர் 7ம் தேதி காலை நேரத்தில் ஜெயில் பாதுகாவலர்களைத் தாக்கி துப்பாக்கிகள், வயலெஸ் செட் முதலியவற்றை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர் . இவர்கள் உபி, தெலிங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் என்று தொடர்ந்து தங்களது இடங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதிலிருந்து அங்கங்குள்ள அவர்களது உறவினர்கள் மற்ற தொடர்பாளிகள் ஆதரித்து வருகின்றனர் என்றாகிறது. கர்நாடகாவில் ஹோஸ்பெட் என்ற இடத்தில் பார்த்தபோது, அடையாளம் காணப்பட்டனர். மெஹ்பூப் அப்பொழுது தனது தாய் நஜ்மாபீபியுடன் தங்கியிருந்தான்ளதாவது பெற்ற தாயே, மகனை தீவிரவாதத்தில் ஈடுபடாதே என்று கண்டிப்பதை விடுத்து, அவனுடனே பல இடங்களுக்குச் சென்று வருவது வியப்பாக இருக்கிறது. 2008ல் பாட்லா என்கவுன்டரில் முக்கியமான அதீப் அமீன் [Atif Ameen] என்பவனும் மற்றவர்களும் கொல்லப்பட்டவுடன் இந்திய முஜாஹித்தீனின் செயல்கள் கொஞ்சம் குறைந்திருந்தன. யாசின் பட்கல் [Yasin Bhatkal, ஆசதுல்லா அக்தர் [Asadullah Akhtar], தேஸின் அக்தர் [Tehsin Akhtar] மற்றும் ஹைதர் அலி [ Haider Ali] முதலியோர் இதற்குப் பிறகு கைதாக உதவியது.
வேதபிரகாஷ்
© 11-04-2015
பிரிவுகள்: குட்டு, கைது, சிமி, ஜெயில், தப்பித்தல், துப்பாக்கி, தெலிங்கானா, தெலுங்கானா, வாரங்கல்
Tags: ஆந்திரா, ஐதராபாத், குட்டு, கைது, சிமி, தெலிங்கானா, தெலுங்கானா, பிஜ்னோர், பூனா, வாராங்கல்
Comments: Be the first to comment
ஜூலை 7, 2013
நீதிமன்ற தடை மீறல், போலீஸ் உத்தரவு எதிர்த்தல், போக்குவரத்து பாதிப்பு – ஊர்வலம் செல்ல முயன்ற தமுமுகவினர் கைது!
தடையை மீறி தமுமுக சென்னையில் ஊர்வலம் (06-07-2013): தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து இந்த பேரணி அதன் தலைவர் ரிபாயி தலைமையில் செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. இட ஒதுக்கீடு, திருமண சட்டத்தில் திருத்தம், நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடப்பதாக இருந்தது. சென்னையில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. கோட்டை நோக்கி செல்லும் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை[1]. இதனை எதிர்த்து தமுமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் 05-07-2013 அன்று தள்ளுபடி செய்தது[2]. எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது[3]. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயிருந்து பேரணி நடத்த தீர்மானித்தனர். ஆனால் த.மு.மு.க.வினர் ஒன்று திரண்டு பேரணியாக செல்ல திட்டமிட்டனர்[4]. அவர்களின் திட்டத்தை முறியடிக்க போலீசார் உஷாரானார்கள். இதையடுத்து பேரணிக்கு வாகனங்களில் வந்த தமுமுகவினரை சென்னைக்கு வெளியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தனர். ரயில் மூலம் சென்ட்ரல், எழும்பூர் வந்தவர்களும் தடுத்து நிறுதத்ப்பட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலில் ஈடுபட்ட சுமார் 1,500 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பஸ் – ரெயிலில் வந்த கூட்டம், கைது: பேரணியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் எழும்பூர் நிலையம் வந்த தொண்டர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 500 தொண்டர்கள் ரெயில் நிலைய வாசலில் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். த.மு.மு.க. தொண்டர்கள் திடீரென கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்தனர். இதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்ரு தெரியவில்லை. ஆனால் போலீசார் எழும்பூர் பகுதி முழுவதும், ரெயில் நிலையம் முன்பும் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களது போராட்டம் முறியடிக்கப்பட்டது. இப்படி செய்தி வெளியிட்டிருப்பதே வேடிக்கையாக இருக்கிறது.
தமுமுகவின் மூன்று கோரிக்கைகள்: தமுமுக வைத்துள்ள கோரிக்கைகள் இவைதான்:
- முஸ்லிம்களுக்கான, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்;
- 10 ஆண்டுகளை நிறைவு செய்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்;
- திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
இவற்றை ஆழமாக அலசினால், அவர்கள் இந்தியாவில் ஏதோ தனியான மக்கள் போலவும், இந்நாட்டு சட்ட-திட்டங்கள் தமக்கு ஓத்துவராது போலவும் தெரிக்கிறது. எஸ்.சிக்களுக்குண்டான இடவொதுக்கீட்டில், உள்-ஓதுக்கீடு செய்கிறோம் என்று 3.5%த்தை ஜாதியேயில்லை என்று பறைச்சாற்றிக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதை எஸ்.சிக்கள் எதிர்த்துள்ளனர். ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் ஏனிப்படி இடவொதுக்கீடு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. பிரச்சினைகளை பாரபட்சமாக அணுகுவது தமுமுகவின் ஆர்பாட்டங்களில் தெரிகிறது[5]. லிங்கம் பெருமாள் என்ற தமிழக வீரர் காஷ்மீரத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தது[6], சிமி தொடர்புகள், அயல்நாட்டு பணம் பெற்றது முதலிய விஷயங்களில் சந்தேகமற்ற நிலையில்லாமல் இருப்பது[7] என்பன சில உதாரணங்கள்.
டிசம்பர் 6 2011ல் ஆர்ப்பாட்டம்
ஆதித்தனார் சிலை ரவுண்டானாவில் போராட்டம்[8]: இந்நிலையில் மாலை 3 மணியில் இருந்து எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகே தமுமுகவினர் குவிந்தனர். போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. பேரணியாகச் செல்ல முடியாததால் தமுமுகவினர் அங்கேயே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் மட்டுமன்றி அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினரை போலீஸார் கைது செய்தனர்[9]. பின்னர் தமுமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதை முன்னரே செய்யாமல், இவ்வாறு ஆர்பாட்டம் செய்து, பிறகு செய்தது எதைக் காட்டுகிறது?
பிப்ரவரி 2013 – உதகையில் போராட்டம்
போக்குவரத்து பாதிப்பும், மக்கள் தொந்தரவு அடைந்ததும்[10]: தமுமுகவினரின் இந்த பேரணியால் சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இன்று மாலை மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணி காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இப்படி பிடிவாதமாக நடந்து கொள்வதால் சாதிப்பது என்ன ஆல்ல்லட்து இவர்கள் பொது மக்களுக்கு என்ன அறிவிக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொது மக்கள் என்ன நினைப்பார்கள், இதனால், ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. விடுமுறை நாட்களில் பொதுவாக சென்னையில் கடைகளுக்குச் செல்வது என்று தான் இருப்பார்கள்.
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறியதாவது[11]: “மாநிலம் தழுவிய பிரச்னைகளுக்கு, பேரணி நடத்த உரிமை உண்டு. நாங்கள், மூன்று அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய பிரச்னை என்பதால், சென்னையில், கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டோம்; பேரணிக்கு அரசு தடை விதித்துள்ளது. “மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு தடை விதிப்பது‘ என, முடிவு செய்து, முதலாவதாக எங்களில் இருந்து ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். இது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், தடையை மீறி பேரணிக்கு குவிந்துள்ளோம். சட்டம் – ஒழுங்கை மதிக்கவும் தெரியும்; எங்கள் உரிமையை வென்றெடுக்கவும் தெரியும். இரவு முதலே போலீசார், எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்து, ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளனர்; நாங்கள் எல்லாரும் அமைதியாக கைதாவோம்”. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது
வழக்கமான கைதும், விடுவிப்பும்: இந்த போராட்டத்தில் தமுமுக மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் வழக்கம் போல விடுவிக்கப்பட்டனர்[12]. சிரித்துக் கொண்டே பஸ்சில் ஏறியவர்கள், சிரித்துக் கொண்டே கைகளை உயர்த்தி ஆட்டிக் கொண்டு வெளியே வந்துவிட்டனர் போலும்!
சட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனவா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர் தப்பித்துக் கொள்கின்றனரா: தமுமுகவின் தடையை மீறி செய்யப்படும் இத்தகைய சட்டமீறல்கள் வழக்கமாக, பழக்கமாக, வாடிக்கையாக தொடர்ந்து இருந்து வருவது தெரிக்கிறது. குறிப்பிட்ட நபர்கள் செய்யும் அதே குற்றமீறல்களை (repeated violations of the provisions of the same Act and Rules) மறுபடி-மறுபடி செய்யும் போது, அச்சட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனரா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர் (habitual offenders) என்ற நிலையினை அடைகின்றனரா என்று சட்ட வல்லுனர்கள் ஆராய வேண்டும். வருடாவருடம், இம்மீறல்கள் நடைபெறுவதால், இது ஒரு சட்ட-வேடிக்கை நிகழ்வாக ஆகிவிட்டது. “காலையில் கைது–மாலையில் விடுதலை” என்ற அரசியல் வேடிக்கையாகவும் மாறி வருகிறது. ஆனால், ஏற்படும் பாதிப்பு அவ்வாறில்லை. நடந்தது நடந்ததாகத்தான் இருக்கிறது. விரயம் ஆனது விரயமானது தான், திரும்ப வராது. இழந்த நேரம், இழந்ததுதான்.
கீழ்கண்டவை உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:
Business Standarad, Hundreds of TMMK members held in Chennai for defying ban, Chennai July 6, 2013, Last Updated at 23:18 IST[13]Special Correspondent, TMMK volunteers arrested for defying ban, The Hindu, Saturday, May 10, 2008[14].
Special Correspondent, TMMK man arrested in Ramnad, January 3, 2009, The Hindu, RAMANATHAPURAM: The Tamil Nadu Muslim Munnetra Kazhagam district president Salimulla Khan was on Friday arrested under the Tamil Nadu Public Property Damage and Loss Act. Sources said when the cadres of TMMK led by him were taken to the police station by vans after being arrested for blocking the rail traffic in Ramanathappuram on December 6 they reportedly damaged seats of the police vans[15].
Tims of India, Hundreds arrested for defying ban, SWATI DAS, TNN | Dec 6, 2004, 05.48 PM IST[16]
|
வேதபிரகாஷ்
© 07-07-2013
[1] மாலைமலர், சென்னைபேரணிக்குஅனுமதிமறுப்பு: ரெயிலில்வந்தத.மு.மு.க. தொண்டர்கள் 500 பேர்கைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 06, 3:26 PM IST
[8] தினமணி, தடையை மீறி முஸ்லிம் அமைப்ப்பினர் போராட்டம்: 1500 பேர் கைது, ஜூலை 7, 2013.
[12] தினமலர், தடையைமீறிகோட்டைநோக்கிபேரணிக்குமுயற்சி : த.மு.மு.க.,வினர் 3,400 பேர்கைது, பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013,00:20 IST
பிரிவுகள்: ஆர்பாட்டம், ஊர்வலம், கைது, சட்டமீறல், சனிக்கிழமை, தமுமுக, தொந்தரவு, பேரணி, போராட்டம், விடுதலை
Tags: ஆர்பாட்டம், ஊர்வலம், கைது, சட்டமீறல், தமுமுக, பேரணி, போராட்டம், விடுதலை
Comments: 2 பின்னூட்டங்கள்
மே 12, 2013
சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் கைது – கேரளாவில் மறந்து வாழ்ந்தவர் பெங்களூரு போலீஸாரால் கைது!
பெங்களூருகுண்டுவெடிப்புசம்பந்தமாகதமிழகத்தவர் கேரளாவில் கைது: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்[1]. சுல்பிகர் அலி மற்றும் ஷபீர் என்ற இருவர் கேச்சேரியில் / கெச்சேரியில்[2] உள்ள ஷபீரின் உறவினரின் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர்[3]. கீழக்குமுரி, பத்திக்கர என்ற இடத்தில் உள்ள இவ்வீட்டில் மறைந்திருக்கும் விவரம் கிடைத்தது[4].
மொபைல்போன்சிக்னல்களை, தொடர்ந்துகண்காணித்துகைது: இவர்களின் மொபைல் போன் சிக்னல்களை, தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார்[5], நேற்று முன்தினம் கைது செய்தனர்[6]. சாதாரணமான ஆட்களே சிம்கார்டுகளை அழித்துவிடுகின்றனர் அல்லது மாற்றி விடுகின்றனர் எனும்போது, இத்தகைய கைதேர்ந்தவர் எப்படி அதே நம்பர்களை வைத்திருப்பர் என்று தெரியவில்லை.
மொத்தம்கைது 13, ஆனால், யாரால்குண்டுவெடிக்கப்பட்டதுஎன்பதுஇன்னும்சொல்லப்படவில்லை: கோயம்புத்தூர் உக்கடத்தைச் சேர்ந்த இவர்கள் குன்னங்குளத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு போலீஸார் அங்கு சென்று கைது செய்தனர்[7]. இவர்களையும் சேர்த்து மொத்தம் 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
போலீஸார்அதிகம்அளவில்காயமடைந்ததால்தொடர்விசாரணையாஅல்லதுவேறுவிஷயம்இருக்கிறதா: பெங்களூரில், பாரதிய ஜனதா அலுவலகம் முன், ஏப்ரல்த மாதம், 17ம் தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில், 11 போலீசார் உட்பட, 17 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் கர்நாடகா போலீசாருக்கு, தமிழகம் மற்றும் கேரள போலீசாரும் உதவி செய்து வருகின்றனர்.
மாநிலம்மாறிகுற்றம்செய்தால்தப்பித்துக்கொள்ளவாய்ப்புஉள்ளதா: சம்பந்தப் பட்டவர்கள் மூன்று மாநிலங்களிலும் மாறிமாறி இருந்து கொண்டு வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் எல்லோருமே முன்னமே யாதாவது ஒரு வழக்கில் சிக்கியுள்ளவர்கள், சிலர் தண்டனைப் பெற்ற்வர்கள், அல்-உம்மா, சிமி போன்ற தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரிகின்றது.
© வேதபிரகாஷ்
13-05-2013
[4] The investigation team team took them into custody from the house of a relative of Shabeer at Kizhakkumuri, Pathikkara.
[5] Thrissur: Two persons hailing from Coimbatore have been arrested for their suspected involvement in the April 17 bomb blast in front of the BJP office in Bangalore, the police said on Sunday. Sulfikar Ali, 22, and Shabeer, 24, were arrested from the house of Shabeer’s relative at Kecheri near Kunnamkulam in the district on Sunday, they said. The arrest was made by a team of police from Karnataka and Tamil Nadu after following the duo’s mobile phone signals, the police said. Following the arrest of Sulfikar and Shabeer, the total number of arrests in connection with the blasts, that left 17 persons injured, including 11 policemen, has gone up to 13.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அத்வானி, அல் - உம்மா, இந்தி ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உருது ஜிஹாதி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், கன்னட ஜிஹாதி, கன்ன்ட ஜிஹாதி, குன்னங்குளம், குன்னம்குளம், கேச்சேரி, கேரள ஜிஹாதி, கைது, கைபேசி, சிம், சிம் கார்ட், சுல்பிகர் அலி, செல், செல்போன், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தடை, தமிழ் ஜிஹாதி, தெலுங்கு ஜிஹாதி, தொலைபேசி, நம்பர், பெங்களூரு, மலையாள ஜிஹாதி, ஷபீர்
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்தி ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உக்கடம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கன்னட ஜிஹாதி, குன்னன்குளம், குன்னம்குளம், கேரள ஜிஹாதி, கைப்பேசி, கோயம்புத்தூர், சிம் கார்ட், சிறுபான்மையினர், சில்பிகர் அலி, செக்யூலரிஸம், செல், செல்போன், தமிழ் ஜிஹாதி, தெலுங்கு ஜிஹாதி, நம்பர், பெங்களூரு, மலையாள ஜிஹாதி, முஸ்லீம்கள், ஷபீர்
Comments: 5 பின்னூட்டங்கள்
மார்ச் 22, 2013
தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8]. இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST
கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை
முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.
© வேதபிரகாஷ்
23-03-2013
[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.
[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.
[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.
[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கல்வீச்சு, கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கைது, கையெறி குண்டுகள், கொடி எரிப்பு, ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபான், தாவுத் இப்ராஹிம், பிதாயீன், மசூதி, மதரஸா, மதரஸாக்கள், மதவெறி, ரகசிய சர்வே
Tags: ஃபிதாயீன், அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உபி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளே நுழைதல், ஊடுவல், காஷ்மீர இஸ்லாம், சமரசம், ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜிஹாதி தீவிரவாதம், தீவிரவாதம், நேபாளம், பிதாயீன், பெண் தீவிரவாதிகள், முஜாஹித்தீன், ஹர்கத்-உல்-முஜாஹித்தீன், ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹிஜ்லி ஷரீப்
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்