Archive for the ‘கைதி’ category

“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

நவம்பர் 7, 2016

மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறைஎனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

iso-certified-bhopal-jailபோபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் ஸ்விட்ஸ் ஆப்செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன? தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

midnight-to-3-a-m-when-jail-official-rama-shankar-goes-to-check-the-barracks-the-eight-simi-members-overpower-him-and-slit-his-throat-with-a-steel-plateகண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.

 they-take-the-keys-from-his-pocket-and-open-the-cell-they-carry-along-bed-sheets-which-they-tie-together-to-slide-down-the-prison-walls

அக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.

they-run-towards-the-periphery-wall-where-they-find-another-jail-official-they-tie-his-hands-and-legs-and-make-good-their-escapeவெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரைகவனித்துக் கொண்டதுயார்?: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9].  அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

near-the-periphery-wall-they-find-some-wooden-logs-put-together-a-ladder-with-the-logs-and-the-bed-sheets-scale-the-wall-and-escapeஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்?: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே? அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

07-11-2016

the-locations-of-jailbreak-encounter-etc-illustrated

[1] Indian Express, Clues to Bhopal SIMI activist jailbreak ‘inside job’: Moulds, CCTV off, Written by Dipankar Ghose | Bhopal | Published:November 7, 2016 3:20 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-jailbreak-encounter-insider-job-3740874/

[3] The Hindustan Times, CCTV cameras weren’t working in Bhopal jail when SIMI prisoners escaped, Anirban Roy, Hindustan Times, Bhopal, Updated: Nov 01, 2016 16:04 IST

[4] http://www.hindustantimes.com/india-news/non-functinal-cctv-cameras-may-have-helped-simi-prisoners-escape-sources/story-gxnkltkV0kH5T8ow6zkC7K.html

[5] Amjad, Zaqir Hussain, and Sheikh Mehboob alias Guddu — were among the six who escaped from the district jail three years ago. escaped from the Tantya Bheel central jail in Khandwa district on October 1, 2013.

[6] The Hindustan Times, Bhopal jailbreak exposes security gaps in MP’s best-secured prison, Kalyan Das, Hindustan Times, Bhopal, Updated: Oct 31, 2016 21:49 IST

[7] The tactics used in both jailbreaks were almost identical. On both occasions, the SIMI men used steel spoons, utensils, toothbrushes and metallic tongue cleaners to make crude daggers to attack jail guards. One such weapon was used to slit the throat of head warder Ramashankar Yadav inside the B block of the Bhopal jail between 2am and 3am. Then again, they made a rope ladder with bed sheets — stringing pieces of wood in between for steps. The technique was used by a self-styled SIMI commander at Khandwa jail.

http://www.hindustantimes.com/india-news/bhopal-jailbreak-exposes-security-gaps-in-mp-s-best-secured-prison/story-k5gFUlt9PnTEI2wfhdbRVK.html

[8] Indian Express,  Bhopal encounter: Jailbreak not possible without insider help, says MP Home Minister, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 2, 2016 12:26 pm.

[9] When contacted, Madhya Pradesh Home Minister Bhupendra Singh said it was “impossible to escape without inside collusion” and alleged that the jailbreak was facilitated by “funding from outside”. “It must have taken elaborate planning over two to three months because it is not possible to make duplicate keys so early and without help from an insider,” said Singh – Indian Express.

http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-encounter-simi-activists-jailbreak-not-possible-without-insider-help-says-mp-home-minister-bhupendra-singh-3733047/

[10] The Hindu, Death wish on a Bhopal night: Daring escape to nowhere, November 1, 2016.

[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/death-wish-on-a-bhopal-night-daring-escape-to-nowhere/article9289399.ece

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[1]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.

Five arrested in Melappalayam - Musims protest, argue

Five arrested in Melappalayam – Musims protest, argue

ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[2]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[3], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[4]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.fullஎன்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை  நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது[6], ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, இத்தகைய பீதியைக் கிளப்பி விடுவது வழக்கமான வேலையாக இருக்கிறது. ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; கொலைகள் நடந்திருப்பது உண்மை; குண்டுகள் வெடித்திருப்பது உண்மை; அப்பாவி மக்கள் இறந்திருப்பது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?[7]. நீதிமன்றத்திலேயே, இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.

Chota-rajan-with-Dawoodநீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[8]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[9]. அதாவது, இவ்வாறு கலாட்டா செய்வதே அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக் காட்டப்படுகிறது. நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் சிறைச்சாலையை, சிறை போலீஸாரை எப்படி மதிப்பர்?

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[10]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[11]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. அன்று டி.எஸ்.பியை தாக்கியவர்களின் மனப்பாங்குதான், புழல் சிறையில் போலீஸாரைத் தாக்கியவர்களின் மனப்பாங்குடன் இயைந்து போகிறது. குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை செய்து கொண்டே இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்ற போக்கும் அவர்களிடையே உள்ளது.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].

[2]  விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)

Last updated : 16:05 (26/09/2015).

[3] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html

[5] http://www.vikatan.com/news/article.php?aid=52934

[6] Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.

 http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797

[7] https://islamindia.wordpress.com/2011/11/11/plan-to-kill-advani-arrest-haeabus-corpus-petition-legal-warangles/

[8]  http://zeenews.india.com/news/tamil-nadu/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court_861146.html

[9]  http://www.business-standard.com/article/pti-stories/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court-113070901058_1.html

[10]  http://www.dinamalar.com/news_detail.asp?id=753374

[11]  http://www.dnaindia.com/india/1858935/report-one-more-case-filed-for-trying-to-plant-bomb-during-lk-advani-s-yatra-in-tamil-nadu-in-2011

[12] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=103304

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

TN POLICE announcement

அல்உம்மா கும்பல் தாக்கியது[1]: என்று தலைப்பிட்டு தி இந்து செய்தி வெளியிட்டது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[2]. அந்த கைதிகளை அறைக் குள் அடைத்த போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர்[3].  காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர்.   இது தொடர்பாக   அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி புழல் சிறைக்கு விரைந்து வந்தார்[4]. அவர் அதிகாரிகளிடம்   நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் கைதிகள் பிடித்து வைத்துள்ள 2 காவலர்களை விடுவிக்க அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரவு அந்த காவலர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்[5].  பிறகு சிறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது[6].

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsபுழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை:  டி.ஐ.ஜி.  ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க  1 டி.ஐ.ஜி, 3 சூப்பிரண்டுகள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன், 81 துணை  வார்டன்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை   எடுக்கப் பட்டுள்ளது. கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் சிறை வார்டன் முத்துமணி, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   ஸ்டான்லி ஆஸ்பத்திரி ஐ.சி.யு. வார்டில் அவருக்கு   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[7]. கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8].  ;போலீஸாரின் மனைவி, மக்கள், உறவினர் சிறைச்சாலை முன்பு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டி ஆர்பாட்டம் செய்தனர்[9].

Mohammed Haneefa arrested - Advani murder plotஅல்உம்மா தீவிரவாதிகள் கலவரத்தில் இறங்கியது ஏன்?: ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். 25-09-2015 அன்று, புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது.

Bomb plnters to kill Advaniஅல்உம்மா தீவிரவாதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்[10]: குறிப்பிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் சேர்ந்திருந்தால், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதனால், அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. கலவரத்திற்கு காரணமான –

  1. போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin], வேலூர் சிறைக்கும்,
  2. பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], மதுரை சிறைக்கும்,
  3. பிலால் மாலிக் [Bilal Malik], கடலூர் சிறைக்கும்,
  4. காஜா மொய்தீன் [Khaja Moideen], சேலம் சிறைக்கும்,
  5. முன்னா [Munna alias Mohammed Rafiq] கோவை சிறைக்கும்,
  6. கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip], திருச்சி சிறைக்கும் மாற்றி,

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்[11]. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் 26-09-2015 அன்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 26-09-2015 அன்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார்[12]. அதாவது அவனுக்கு எந்த அளவுக்கு கொழுப்பு, ஆணவம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்[13]. ஏற்கெனவே போலீஸாரைத் தாக்கி, கலவரம் செய்ததலினால், சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிக்கு, ஏன் இவர்கள் இவ்வாறு தாஜா செய்ய வேண்டும்? சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா? இந்நிலையில் பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகமது ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  S. Vijayakumar, Al Umma cadre attack jail officials in Puzhal prison, The Hindu, September.26, 2015, Updated: September 26, 2015 13:59 IST.

[2]  தினகரன், புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம், பதிவு செய்த நேரம்: 2015-09-25 21:08:54.

[3]  தினமலர், புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம், செப்டம்பர்.26, 2015. 03.11.

[4] http://www.thehindu.com/news/cities/chennai/al-umma-cadre-attack-jail-officials-in-puzhal-prison/article7690955.ece

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350503

[6] https://www.youtube.com/watch?v=rczOrMOMIBU

[7] http://www.dailythanthi.com/News/State/2015/09/26110857/6-prisoners-were-transferred-to-another-prison.vpf

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7694509.ece

[9] Policemen’s wives protest– Furious over the attack on the warders, the family members of prison staff staged a protest near Puzhal prison demanding that security for the personnel be stepped up. The police pacified them and they dispersed only after officers assured them that the necessary measures will be taken to ensure their safety. http://www.thehindu.com/news/cities/chennai/shortage-of-personnel-hits-security-at-puzhal-prison/article7693585.ece?ref=relatedNews

[10]  Viveka Narayanan, 6 Al-Umma cadre sent to different jails, The Hindu, September.27, 2015; Updated: September 27, 2015 08:06 IST

[11] http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[12]  தினமலர், சிக்கன் பிரியாணி கேட்டு போலீஸ் பக்ருதீன் கலாட்டா, செப்டம்பர்.27, 2015.08.33.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1351396

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

Puzhal jail

Puzhal jail

புழல் சிறையில் பயங்கரமான குற்றவாளிகள் இருப்பது, போலீஸார் குறைவாக இருப்பது[1]: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் 230 பேரும், விசாரணை கைதிகள் 2003 பேரும், பெண் கைதிகள் 150 பேர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். 3 விதமான கைதிகளுக்கும் தனித்தனி ஜெயில்கள் விசாலமாக உள்ளது. போதை  பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முக்கிய   பிரமுகர்களை தீர்த்து கட்டிய பயங்கரமான கைதிகளும் இங்கு அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2014ல் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது[2].  அப்போது என் கவுண்டரும் நடந்தது. இதில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழங்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தனை முக்கியமான சிறைக்கு பாதுகாப்பாக போலீஸார் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

Puzhal attacked -Puthiya thalaimurai - 25-09-2015

Puzhal attacked -Puthiya thalaimurai – 25-09-2015

கொலைக்குற்றவாளிகள், தீவிரவாதிகள் எப்படி வசதிகளை சிறைகளில் அனுபவிக்கின்றனர்?: திரைப்படங்களில் தாம், சிறைக்குற்றவாளிகள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போல காட்டுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மையாகவே அத்தகைய வசதிகள் குற்றவாளிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, தீவிரவாதிகளுக்குக் கிடைக்கிறது என்று அஜ்மல் கசாப், அபு சலீம் போன்றோரின் விவரங்களிலிருந்து அறியப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து திருப்தி படுத்தினர். அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதால், கோடிக்கணக்கில் செலவான பணம் நின்றது. ஆனால், அபு சலீம் போன்றோர் இன்னும் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே 24-07-2010 அன்று காலை (சனிக்கிழமை) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டான்[3]. அதாவது, இந்திய சிறைச்சாலைகள் அந்த அளவுக்கு ஓட்டையாக உள்ளனவா அல்லது தீவிரவாதிகள் தங்களது ஆடிக்கத்தைச் செல்லுத்தி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வில் ஹியூம் என்ற குழந்தை கற்பழிப்பாளி புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டான் என்ற செய்திகள் வந்தன. இப்பொழுது, அச்சிறையில் கலவரம், அல்-உம்மா தீவிரவாதிகள் ஜெயில் வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கினர், செல்போன் வைத்திருந்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

Puzhal police attacked - chennai patrika- 25-09-2015

Puzhal police attacked – chennai patrika- 25-09-2015

முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்[4]: கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை ஜெயிலர்   இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்தார்[5]. அப்படியென்றால், செல்போனை யார் கொடுத்தது, எப்படி ஜெயிலின் உள்ளே சென்றாது போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[6]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர் இளவரசன் கைதிகளை தீவிரமாக கண்காணித்தார். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்[7].  அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது[8].

Puzhal attacked police admitted in Hospital - 25-09-2015

Puzhal attacked police admitted in Hospital – 25-09-2015

ஜாகிர் உசேனை சிறையிலேயே அல்உம்மா ஆட்கள் அடித்தது ஏன்?: ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[9]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜாகிர் உசேன் சொன்னான், அதனால், அல்-உம்மா கும்பல் அவனை அடித்தது என்றால், சிறைக்குள்ளேயே அவர்கள் தங்களது ராஜ்யத்தை நடத்துகின்றனர் என்றாகிறது. மும்பை சிறைகளில் தான் அத்தகைய வசதிகளை பெறுகிறார்கள் என்றால், இங்கும் அதே நிலைதான் என்று தெரிகிறது. ஜெயிலில் கைதிகள் அடித்துக் கொள்வது, கலவரம் செய்வது, ஜெயிலரை அடிப்பது, தாக்குவது முதலியன போலீஸார் கட்டுப்பாட்டில் சிறை உள்ளதா அல்லது இந்த தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆட்டி வைக்கிறார்களா, இதன் பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றான.

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து ஜெயிலர் இளவரசனை தாக்குதல்: இந்த நிலையில் 25-09-2015 அன்று மாலை வழக்கம் போல் ஜெயிலர்  இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கினார்கள்[10]. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலை குலைந்த  ஜெயிலர் இளவரசன், அலறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தார்.  அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள். இதைப் பார்த்த சிறை காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர்.  ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள். கேரம் போர்டை உடைத்து அந்த கட்டையாலும் தாக்கினர். அப்போது கைதிகள் காவலர் முத்துமணியை  இரும்பு கம்பியாலும் குத்தினர். இதில் ஜெயிலர் இளவரசன் மற்றும் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் படுகாயம்  அடைந்தனர்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  Vivek Narayanan, Shortage of personnel hits secuirity at Puzhal prison, The Hindu, September.27, 2015.

[2] https://islamindia.wordpress.com/2013/10/05/tn-police-clash-with-jihadis-in-ap-one-policeman-killed/

[3]https://islamindia.wordpress.com/2010/07/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A/

[4] தினத்தந்தி, புழல் சிறையில் வார்டன் மீது தாக்குதல்:கைதிகள் 6 பேர் வேறு சிறைக்கு மாற்றம், மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST

பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST.

[5] The clashes in which two jail personnel were taken hostage and four others injured, was a fallout of an altercation over use of mobile phones in the prison and visitors bringing in prohibited food items. The Al Umma cadres attacked prison staff with carrom board and stones, the sources added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[6] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[7]  தினமணி, புழல் சிறையில் கைதிகள்காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர், By  சென்னை, First Published : 26 September 2015 01:49 AM IST.

[8]http://www.dinamani.com/tamilnadu/2015/09/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D—%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/article3047911.ece

[9] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=169216