கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!
முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.
ஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5]. அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.
தீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed] என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].
தமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.
மத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].
© வேதபிரகாஷ்
16-07-2016
[1] http://tamil.oneindia.com/news/india/21-missing-from-kerala-may-be-is-camps-cm-257874.html
[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.
[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.
[4] http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%86
[5] தினகரன், ஐஎஸ் தீவிரவாதிகளான கேரள வாலிபர்கள்: தமிழகத்தில் உளவுத்துறை உஷார், Date: 2016-07-10@ 00:16:56
[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=230018
[7] Reports said that a person called Abdul Rasheed Abdulla is suspected to have led the youths on to the terror path.
[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=80207
[9] Father of Eesa and Yahiya, Vincent, alleged that his sons were influenced by Islamic preacher Zakir Naik
[10] english.manoramaonline, ISIS links: Kerala police analyzing phone records, Thursday 14 July 2016 10:58 AM IST, byOur Correspondent
[11] http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/isis-links-kerala-missing-youth-police-tracking-phone-records.html
அண்மைய பின்னூட்டங்கள்