Archive for the ‘கூட்டம்’ category

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?

மே 12, 2013

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?

PAK candidatesகடந்த நாட்களில் குண்டுவெடிப்பு, வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது[1]. தலிபான்கள் தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதனாமது, பெண்கள் ஓட்டுப் போடக்கூடாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள், பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், பெண்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்[2]. பாகிஸ்தானின் 14வது தேசிய மற்றும் மாகாண தேர்தல் நடந்துள்ளது. 372 கீழ்சபை மற்றும் 728 தேசிய அசெம்பிளி என்று சேர்ந்து தேர்தல் நடக்கின்றது. இன்னும் மக்கள் தெளிவாக வாக்களிக்கவில்லை என்கிறார்கள். ஏனெனில் யாருக்கும் அதிக இடங்கள் கிடைக்கவில்லை[3].

PAK-2013 constituenciesநவாஸ்செரிப்கட்சிமுன்னணியில்இருக்கின்றது: பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் செரிப் கட்சி முன்னணியில் இருந்து, ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது[4]. இப்பொழுதுள்ள நிலவரங்களின் படி, பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தனிக்கட்சி என்றுள்ளது[5]. இம்ரான் கான் பரிதாப அலையில் ஒருவேளை முன்னணியில் வருவார் என்று நினைத்தார்கள், ஆனால், நடக்கவில்லை[6].

PAK-2013 election position2கட்சிகளின் நிலவரம்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) [Pakistan Muslim League-Nawaz (PML-N)], பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் [Pakistan Tehreek-i-Insaf (PTI)] மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan Peoples party (PPP)] என்பவைதான் பிரதான கட்சிகளாக இருக்கின்றன.

கட்சியின் பெயர்

தலைவர் / பிரதம மந்திரி வேட்பாளர்

ஆங்கிலத்தில்

கிடைத்துள்ள இடங்கள்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) நவாஸ் செரிப்பின் கட்சி Pakistan Muslim League-Nawaz (PML-N)[7]

120

தெஹ்ரீக்-இ-இன்சாப் இம்ரான் கான் Pakistan Tehreek-i-Insaf (PTI)[8]

30

பாகிஸ்தான் மக்கள் கட்சி யூசுப் ராஜா ஜிலானி,ஆளும் கட்சி Pakistan Peoples party (PPP)[9]

35

Nawaz Sherrif - next PMநவாஸ் செரிப் மறுபடியும் பிரதமர் ஆகிறார்: 13 ஆண்டுகள் கழித்து, நவாஸ் செரிப், முன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆகிறார்[10]. 1990 மற்றும் 1997ல் பிரதமராக இருந்தார், ஆனால், இருமுறைகளிலும், குலாம் இஸாக் கான் மற்றும் பெர்வீஸ் முசாரப் என்கின்ற ஜனாதிபதிகளினால் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டார்[11].

Age-wise-Voter-list-2013-Elections-Pakistanஇம்ரான் கானின் கிரிக்கெட் கவர்ச்சி வேலை செய்யவில்லை: இம்ரான் கானின் கிரிக்கெட் பேச்சு, மற்றவர்களைப் பற்றித் தாக்கிப் பேசிய பேச்சு, பரிதாப அலை எதுவும் வேலை செய்யவில்லை என்று தெரிகிறது[12]. கூட்டங்களில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வதில், தனக்கு நிகர் தாந்தான் என்ற ரீதியில் பேசி வந்தார். இந்தியாவில் அம்பயர்கள் தனக்கு எதிராக அல்லது சாதகமாக இல்லை என்றாலும், தான் வென்றாதாகக் கூறிக் கொண்டார். எனினும் நிறைய இடங்களைப் பிடிக்கவில்லை. இதனால், எதிர்கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவோம் என்று கட்சியினர் கூறியிருக்கிறார்கள்[13].

PAK Election 2013 Islamicமக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைகளாகவே உள்ளன: ஓட்டு போட்டவர்களின் சதவீதம் 50 முதல் 60 வரை இருக்கிறது[14]. பொது மக்களைக் கேட்டால், அவர்களும் தண்ணீர், மின்சாரம், வேலை வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்று தான் பேசுகிறார்கள், அதாவது பொருளாதாரப் பிரச்சினைகள் தாம் முக்கியமாக இருக்கின்றன[15].

Paki women vote

பெண்கள் வந்து ஓட்டுப் போட்டது

PAKI women vote with faith or fear

© வேதபிரகாஷ்

12-05-2013


[7] Pakistan Muslim League (N) – Although, the party claims to be the extension of the All India Muslim League under the leadership of Mohammad Ali Jinnah that led the Muslims of sub-continent India to establish Pakistan, a separate country for the Indian Muslim but due to almost a dozen parties under the same name it is a bit difficult to confirm the claim.

[8] Pakistan Tehrik-e Insaf (PTI) – This party has gained considerable momentum over the last two years. Imran khan, once the hero of the Pakistan cricket who brought the 1992 champion trophy of the Cricket World Cup—established PTI in February 1996.

[9] Pakistan People’s Party- Since its inception in 1967, PPP in Pakistan’s recent history remained the only political party, having grass root level representation having liberal democratic norms. The charisma of its founding leader Zulfiqar Ali Bhutto based its manifesto on secularism and social equality, and ruled over the hearts and minds of the millions of Pakistanis for decades.

[11] Nawaz Sharif has remained prime minister two times in 1990 and 1997 but both of his government wre prematurely dismissed, once by then president Ghulam Ishaq Khan and then his second government was ousted in 1999 in a military coup by former military ruler Gen (r) Pervez Musharraf.

முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

ஏப்ரல் 29, 2013

முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

குர்ஷித் ஆலம் கான் அத்தகை யசதிதிட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் (28-04-2013): ஆஸம் கான் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் செலவதற்காக பாஸ்டன் விமானநிலையத்திற்குச் சென்ற போது, வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[1]. ஆனால், அது தம்மை முஸ்லிம் என்பதனால் அவ்வாறு நடஎது கொண்டார்கள் என்று குறைகூறினார். இப்பொழுது, சல்மான் குர்ஷித் தான் இதற்குக் காரணம் என்று பழிபோடுகிறார்[2]. குர்ஷித் ஆலம் கான் அத்தகைய சதி திட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்[3].

முஸ்லிம்,  முஸ்லிமை எப்படி பழிவாங்குவார்?: உம்மா, ஷரீயத் மற்றும் ஹதீஸ் முதலிய சித்தாந்தங்களின் படி, ஒரு முஸ்லிம், முஸ்லீமிற்கு எதிராக செயல்படலாகாது. அப்படி செய்வதானால், ஒரு முஸ்லிம், அடுத்த முஸ்லீமை காபிர் என்று அறிவித்து ஜிஹாத் தொடக வேண்டும். அப்படியென்றால், அரசியல் ரீதியில் இந்த இரு முஸ்லிம் தலைவர்களும் ஜிஹாதை ஆரம்பித்து விட்டார்கள் போலும்.

பாஸ்டன் விமான நிலையத்தில் சோதனை: 24-04-2013 புதன்கிழமை அன்று, அகிலேஷ் யாதவ் சார்பில் 11 பேர் கொண்ட படாளம் பாஸ்டன் விமானநிலையத்தில் வந்திறங்கியது. வழக்காமாக நடத்தப் படும் சோதனைகள் நடைப் பெற்றன. சமீபத்தில் பாஸ்டன் வெடிகுண்டில் முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டிருந்ததால், சோதனைகள் அதிகமாகவே இருந்தன. இதனால், ஆஸம் கான் சிறிது நேரம் காக்க வைக்கப் பட்டார்[4].

முஸ்லிம்கள் கும்பமேளாவிற்கு பொறுப்பு,  ஆனால், இந்துக்கள் செத்தா முஸ்லிம்கள் பொறுப்பல்ல: செக்யூலர் நாடென்பதால், கும்பமேளாவிற்கு பொறுப்பாக ஆஸம்கான் என்ற மதவாத அமைச்சரே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், நெரிசலில் இறப்புகள் ஏற்பட்டவுடன், முஸ்லிம்கள் “கும்பமேளாவிற்கு பொறுப்பு, ஆனால், இந்துக்கள் செத்தால் நாங்கள் பொறுப்பல்ல”, என்ற ரீதியில் பழியை ரெயில்வே மீது போட்டார் ஆஸம் கான். ஆனால், ரெயில்வே பொறுப்பாளர் தான் பொறுப்பு என்றனர். இதனால் ஆஸம் கான் ராஜினாமா செய்தார்.

கும்பமேளா என்பது சரித்திரரீதியில் சுமார் 3000 வருடங்களாக நடைப் பெற்றுவருகின்றது. அதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள மக்கள் கோடி கணக்கில் வந்து கலந்து கொள்வார்கள். இப்பொழுது சொல்லப்படும் “கூட்டத்தை நிர்வகிப்பது” (Crowd Management) என்ற தத்துவம் எல்லாம் அப்பொழுது கிடையாது, ஏனெனில், மக்களே ஒழுங்காக, சிரத்தையாக, சீராக மேளாவில் கலந்து கொண்டு தத்தம் இடங்களுக்கு, நாடுகளுக்குத் திரும்பிச் சென்று விடுவர். ஆனால், இப்பொழுது ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலிருந்து (Harvard University) ஒரு குழு, இதைப் பற்றி ஆய்வு நடத்த ஜனவரியிலேயே வந்து தங்கியது[5]. கடந்த பிப்ரவரி 2013ல் நடந்து முடுந்த கும்பமேளா வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும்.

மக்கள் இறந்த பிறகு, பழியை ஊடகங்களின் மீது போட்ட ஆஸம் கான்:  அலகாபாத்தில், கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் பலியான விவகாரத்திற்கு, மீடியாக்களே காரணம் என்று, கும்பமேளா ‌குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியவரும், மாநில அமைச்சருமான முகம்மது ஆசம் கான் கூறியுள்ளார்[6]. உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆசம் கான் கூறியதாவது, மகாகும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் விழுந்து 2 பேர் பலியாயினர். மீடி‌யாக்கள் இந்த செய்தியை வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அவ்விடத்திலிருந்து விரைந்து வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில்வே ஸ்டேசன் பகுதிக்கு விரைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மாநில நிர்வாகம், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அளவிற்கதிகமாக ஆட்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மட்டுமே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.முஸ்லிம் முஸ்லிம் மீது பழி போடுவது தப்பித்துக் கொள்ளவா, நாட்டை சீரழிக்கவா?

முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன் – முலாயத்தின் மகன் முழக்கம்: முன்னர் ராமஜென்மபூமி விஷயத்தில் முலாயம் அடாவடி காரியங்களை மேற்கொண்டதால், சாதுக்கள் பலர் கொல்லப்பட நேர்ந்தது; அவர்களை அயோத்தியாவிற்கு வரமுடியாத அளவிற்கு தடுத்தார்; ரெயில்கள் திருப்பிவிடப்பட்டன; ரத்து செய்யப்பட்டன; நடந்து வந்தவர்களையும் அடித்து, துரத்தினர்; இதனால் “முல்லாயம் சிங் யாதவ்” என்றெ அழைக்கபடலானார். அவரது மகன், சும்மா இருப்பாரா? முஸ்லிமையே விடாவிட்டால், நானும் போக மாட்டேன்[7] – என்று முலாயத்தின் மகன் முழக்கமிட்டு, தனது “முல்லா”த்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டார்[8]. இவருடன் ஆஸம் கான், டயானா எக், கெர்க் கிரீனௌ, ராஹுல் மல்ஹோத்ரா முதலியோர் பேசுவதாக இருந்தது[9]. ஆனால், அவர் வரமாட்டார் என்று ஹார்வார்ட் வெப்சை அறிவித்தது[10].

வேதபிரகாஷ்

29-04-2013


[2] A routine action by the US administration is turning into the latest threat for the UPA government. The Samajwadi Party, on whose outside support the UPA government depends, has raked up the brief questioning of minister Azam Khan at Boston’s Logan airport by an official of the US mainland security office. It has tried to blame the UPA government for the incident to possibly whip up Muslim sentiments in its favour and against Congress.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/azam-khan-says-salman-khurshid-to-blame-for-his-detention-in-boston/articleshow/19773634.cms

[3] The Samajwadi Party (SP) has blamed external affairs minister Salman Khurshid for plotting the “humiliation” of its senior leader Azam Khan at the Boston airport last Wednesday (24-04-2013).

http://timesofindia.indiatimes.com/india/Khurshid-plotted-my-detention-at-US-airport-Azam/articleshow/19774620.cms

[7] Yadav was listed as a panel speaker in the spring symposium of Harvard’s South Asia Initiative on the subject “Harvard Without Borders: Mapping the Kumbh Mela.” But evidently, Harvard’s outlook on borders was not shared by the department of homeland security when it held up minister Khan at the airport. Yadav later opted out of the presentation at the last minute due to what organizers said was “unforeseen circumstances.”

[9] Also speaking with Yadav on the “Harvard without Borders: Mapping the Kumbh Mela” panel are

  • Diana Eck, a professor of law and psychiatry and a member of the divinity faculty at Harvard;
  • Azam Khan, Urban Development Minister of Uttar Pradesh;
  • Gregg Greenough, professor from the Harvard School of Public Health; and
  • Rahul Mehrotra, a professor of urban design and planning and chair of Harvard’s department of urban planning and design.

The moderator of the panel is Tarun Khanna, director of the South Asia Institute a professor from Harvard Business School.

http://www.indusbusinessjournal.com/ME2/dirmod.asp?sid=&nm=&type=Publishing&mod=Publications%3A%3AArticle&mid=8F3A7027421841978F18BE895F87F791&tier=4&id=C185E65B79234812A70DD51227A3F1C5

[10] Harvard University website said: “Due to unforeseen circumstances, today’s Harvard without Borders: Mapping the Kumbh Mela panel speaker will be UP chief secretary Javed Usmani in place of UP CM Akhilesh Yadav.”

http://www.telegraphindia.com/1130427/jsp/nation/story_16833610.jsp#.UX3dtqJTCz4