Archive for the ‘குவைத்’ category
பிப்ரவரி 12, 2017
ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

குண்டுவெடிப்புகளில் காணப்பட்ட தமிழக தொடர்புகள், இணைப்புகள், சம்பந்தங்கள்: தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் உள்ள 6 நீதிமன்ற வளாகங்களில் தொடர்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே விதமாக நிகழ்த்தப்பட்டதால் இந்த சம்பவத்தில் ஒரே குழுக்கள்தான் ஈடுபட்டு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிரஷர் குக்கர், டிபன் பாக்ஸ் மற்றும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தபோது இந்த வகையான வெடிகுண்டுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பிரஷர் குக்கர் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மதுரையில் உள்ள பிரபல கடையில் வாங்கப்பட்டதையும் உறுதி செய்த அதிகாரிகள் தீவிரவாத குழுக்கள் மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தான் தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டான்.

தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் கைது மதுரையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டனவா? : இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் துப்புதுலக்கப்பட்டது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டார். இதனிடையே தடை செய்யப்பட்ட அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த சுட்டு கொல்லப்பட்ட இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளி மதுரை நெல் பேட்டையை சேர்ந்த சம்சுதீன் (24) என்பவரையும் நேற்று கைது செய்தனர். இவரும் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சதி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவான்மியூரில் கைதான சுலைமான் தான் தலைவன்: பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே உள்ள இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பல மணி நேரம் விசாரித்தனர். தென்மாநிலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கான காரணங்கள் குறித்தும் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கைதான தீவிரவாதிகள் பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த இயக்கத்தில் உள்ள சர்வதேச குழுக்களுடன் அடிக்கடி போனில் பேசிய தும் தெரியவந்துள்ளது. மதுரையில் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து சதி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அதன் பேரிலேயே குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் வெடிபொருட்களை வைத்துக் கொள்வதில்லை. சதி திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது வெடிபொருட்களை வாங்குதை வழக்கப்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, மிகவும் கவனமாக எல்லா ஆதாரங்களையும் மறைப்பதில்-அழிப்பதில் திறமையாக செயல்படுகின்றனர்.

சுலைமான் செயல்பட்ட விதம்: “தி பேஸ் மூமெண்ட்” என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கிய இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன் தலைவராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பெற்றோரிடம் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறுவர். சில வாரங்கள் மறைந்திருந்து குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு டிப்-டாப்பாக வீட்டுக்கு வருவதால் பெற்றோர்களுக்குகூட இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்கு விரோதிகளாக செயல்படும் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் இவர்கள் தீவிரமாக ஆலோசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக, இவ்வாறு தமிழகத்தின் பல நகரங்களில் செயல்படும் தீவிரவாதிகள், கேரளாவுக்கு சகஜமாக சென்று வரும் போக்கு, பெங்களூரில் உள்ள தொடர்புகள், ஹைதராபாத் (தெலிங்கானா) இணைப்புகள், இவை எல்லாமே சென்னையை தீவிரவாத-பயங்கரவாத பகுதியில் கொண்டு வந்துள்ளது.

சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்சில் சேர திட்டம் போட்ட சதி சென்னையில் தான் நடந்தது[1]: என்.ஐ.ஏவின் ஆவணங்களிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்சில் சேருவது என்ற திட்டம் / சதி “அபுதாபி திட்டம்” சென்னையில் தான் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது[2]. முன்னர் ஜனவரி 2016ல் தமிழகம், தெலிங்கானாவில் கைதான எட்டு பேர்களிடம் நடத்திய விசாரணை, பின்னர் சரிபார்த்த விவரங்கள் மூலம் இது உறுதியாகிறது[3]. இதற்காகாக வேண்டிய பணம் பலவழிகளில் திரட்டப் படுகின்றன. முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து நிதி வசூலிக்கப் படுகிறது. ஐ.எஸ்சிற்கு இப்பணம் உதவுகிறது என்று தெரிந்தும் கொடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான், யாராவது கைதானாலும், அதைப் பற்றிய செய்திகள் வந்தாலும், ஒன்றுமே நடக்காதது முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், போராட்ட குழுக்கள் இருக்கின்றன. சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா குண்டு வீசினால் போராட்டம் நடத்தும் இவர்கள், இச்செய்திகள் வரும் போது காணாமல் போகிறார்கள்.
Name in English |
பெயர் |
ஊர் / மாநிலம் |
Adnan Hussain from Karnataka[4] |
அட்னன் ஹுஸைன் |
பட்கல், கர்நாடகா |
Mohammed Farhan from Maharashtra |
மொஹம்மது பர்ஹன் |
மஹாராஷ்ட்ரா |
Sheikh Azhar Al Islam from Kashmir. |
ஷேக் அஸ்ர் அலி |
காஷ்மீர் |
Abdul Basith, a youth from Hyderabad |
அப்துல் பஸித் |
ஹைதரபாத், தெலிங்கானா |
Sultan Armar |
சுல்தான் அர்மர் |
|
Shafi Armar. |
சஃபி அர்மர் |
|
Subahani Haja Mohiddheen |
சுபஹனி ஹாஜா மொஹிதீன் |
கடையநல்லூர், தமிழகம் |
Suwalik Mohammed |
சுவாலிக் முகமது (26) |
கொட்டிவாக்கம், சென்னை |
Suliman |
சுலைமான் |
திருவான்மியூர் |
இப்படி சென்னையிலேயே கைது செய்யப்பட்டதும், இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால், சென்னையில் உள்ளவர்களின் சம்பந்தமும் இதில் வெளியாகிறது.
© வேதபிரகாஷ்
12-02-2017

[1] One.India.com, REVEALED: Conspiracy to recruit into the IS hatched in Chennai, Written by: Vicky Nanjappa, Published: Saturday, February 11, 2017, 11:33 [IST]
[2] http://www.oneindia.com/india/revealed-conspiracy-to-recruit-into-the-is-hatched-in-chennai-2344903.html
[3] According to NIA case records, a criminal conspiracy was hatched “in Chennai and other parts of the country by forming a terrorist gang which raised and received funds, organised camps, recruited and trained some persons, and facilitated their travel to Syria, to join ISIS”.
Indian Express, Abu Dhabi module recruited nine Indians for Islamic State, sent some to Syria: NIA probe, Written by Johnson T A | Bengaluru | Published:February 11, 2017 3:59 am.
http://indianexpress.com/article/india/abu-dhabi-module-recruited-nine-indians-for-islamic-state-sent-some-to-syria-nia-probe-4518611/
[4] Adnan Hussain, 34, an accountant from Bhatkal town who had been working in the UAE since 2012, had emerged on the radar of police after he was found to have transferred funds to the account of Abdul Basith, a youth from Hyderabad who had been recruited to join the IS by Indian recruiters Sultan Armar and Shafi Armar. Adnan Hussain, alias Adnan Damudi, transferred funds to an account linked to Basith to enable him to travel to Syria along with four others recruited from Hyderabad but the trip came to an abrupt end after the families of the youths got wind of their plan and sought help to bring them back.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அல்-உம்மா, அழிப்பு, அழிவு, அவமதிக்கும் இஸ்லாம், ஆயுதப்படை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐஸில், கடையநல்லூர், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகள், காயல்பட்டினம், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, குரூரம், குரோதம், குவைத், கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சிமி, ஜிஹாதி, ஜிஹாதி நேயம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாத், ஜீஹாதிகள், தங்கக் கட்டி, தங்கக்கட்டி, தங்கம், தாலிபான், தீவிரவாத திட்டம், தீவிரவாத நிதியுதவி, தீவிரவாதத்திற்கு துணை போவது, தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள்
Tags: அபுதாபி, இஸ்லாம், என்.ஐ.ஏ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கடையநல்லூர், கத்தார், கொட்டிவாக்கம், சிரியார், சென்னை, தங்கக் கட்டி, தங்கம், தமிழ்நாடு, திருவான்மியூர், துருக்கி, ஹைதராபாத்
Comments: Be the first to comment
நவம்பர் 13, 2016
மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!
பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.

சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].

52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11]. ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.

இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.
© வேதபிரகாஷ்
13-11-2016

[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.
[2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM
http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing
[3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf
[4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58.
[5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf
[6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.
[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324
[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016
[9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured
[10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016).
[11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art
பிரிவுகள்: அடையாளம், அமைதி, அலி சகோதரர்கள், அழிப்பு, அழிவு, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், ஆதரவு, ஆதாரம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், ஈரான், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கராச்சி, காதியான், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, குவைத், ஷியா, ஷியா சட்டம், ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized
Tags: இராக், இரான், இஸ்லாம், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், கிலாபத், கிலாபத் இயக்கம், குண்டு வெடிப்பு, கொலை, சுன்னி, சூபி, சூபி நடனம், சூபி-ஜிஹாத், சூபித்துவம், பலூச்சிஸ்தான், பாகிஸ்தான், ஷியா
Comments: Be the first to comment
ஜனவரி 4, 2012
பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது – சவுதியில் ஆணை அமூலுக்கு வந்துள்ளது!

பெண்கள் உள்ளாடைகள் விற்கும் கடைகளில் இனிமேல் ஆண்கள் வேலை செய்யக் கூடாது: அரேபியாவில் உள்ள பெண்களுக்கான உள்ளாடைக் கடைகளில் இனி பெண்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு
“I and many other women like me were always embarrassed to walk into lingerie shops because men were selling the goods,” said Saudi shopper Samar Mohammed. She said that in the past she often bought the wrong underwear “because I was sensitive about explaining what I wanted to a man”.
|
உத்தரவிட்டுள்ளது[1]. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பெண்கள் இனிமேல் வெட்கப்படாமல், கூச்சப்படாமல், தங்களுக்கு வேண்டிய உள்ளாடைகளை, தாங்கள் விரும்பிடயபடி, தேந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்[2]. “நான் பலமுறை தவறுதலான அளவுள்ள கீழுள்ளாடைகளை / ஜட்டிகளை வாங்கி வந்துள்ளேன். ஏனெனில், எனக்கு எந்த அளவில் வேண்டும் என்று ஆண்-விற்பனையாளரிடம் விவரிக்கக் கூச்சமாக இருந்தது”, என்று ஒரு பெண்மணி கூறினார். அப்பெண்மணி சொலவது மிகவும் நியாயமாகப் படுகிறது.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன: அங்குள்ள பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது; ஆண்கள்: துணையுடன் தான் கடைக்குப் போக வேண்டும்; கார்களை ஓட்டக் கூடாது; சூப்பர் மார்க்கெட்டுகள் / மால்களில் கேஷியராக பணி செய்யக் கூடாது[3]. இப்படி பற்பல தடைகள் உள்ளன. (இத்தடைகள் / கட்டுப்பாடுகள் மற்ற முஸ்லீம் அல்லாத பெண்களுக்கும் உண்டு). இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஆண்கள் வேலை செய்ய முடியாது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

2006-2012: மத மற்றும் சட்டப் பிரச்சினைகள்: ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பட்டும் அது அமலுக்கு வரவில்லை. ஏனெனில் அப்பொழுது பிரச்சினை, பெண்களை வேலைக்கு அனுப்பலாமா, கூடாதா
Saudi’s Arabia’s most senior cleric, Sheik Abdul-Aziz Al Sheikh, spoke out against the Labour Ministry’s decision in a recent sermon, saying it contradicts Islamic law. ‘The employment of women in stores that sell female apparel and a woman standing face to face with a man selling to him without modesty or shame can lead to wrongdoing, of which the burden of this will fall on the owners of the stores,’ he said. He also urged store owners to fear God and not compromise on taboo matters[4].
|
என்றிருந்தது. குறிப்பாக, மதத்தலைவர்கள், பெண்கள் இம்மாதிரியான கடைகளில் வேலை செய்யக் கூடாது என்று எச்சரித்ததுடன், பத்வாவும் கொடுத்திருந்தனர்[5]. அதுவும், இத்தகைய அலங்கார மற்றும் பெண்களின் உள்ளாடை கடைகளில், பெரிய மால்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பொருட்களை வாங்க வரும் போது, பெண்கள் அவ்வாறு கடைகளில் பொருட்களை, ஆண்களுக்கு முன்பாக விற்பது இஸ்லாமிற்கு எதிரானதாகக் கருதப் பட்டது. ஆனால் இந்த முறை அந்நாட்டு மன்னர் அப்துல்லா பிறப்பித்துள்ள உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது[6]. இதையடுத்து உள்ளாடைக் கடைகளில் பணிபுரிய சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இப்பொழுது பெண்கள் 30% தான் வெளியில் வந்து வேலை செய்கின்றனர். இனிமேல் அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால், சவுதி பெண்கள் சிறிதளவு வெற்றிப் பெற்றுள்ளார்கள், அவர்கள் உரிமைகள் கேட்டு போராடும் நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்கள்[7] என்றும் கருத்து உருவாகிறது[8].

விவேக் போன்றவர்கள் இனிமேல் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? விவேக் பெண்கள் உள்ளாடைகள் வைத்து ஜோக் அடிப்பது சகஜனமான “சப்ஜெக்டாக” உள்ளது. அதில் அவர் பி.எச்டியே செய்துள்ளார் எனலாம். அந்நிலையில், அத்தகைய நடிகர்கள் சவுதியில் அனுமதிக்கப் படுவார்களா? அங்கு அத்தகைய ஜோக்குகள் அனுமதிக்கப் படுமா? உள்ளாடை விளம்பரங்கள் செய்யப் படுமா? இந்தியாவில் மட்டும் எப்படி அத்தகைய அசிங்கமான, ஆபாசமான ஜோக்குகளை அனுமதிக்கிறார்கள்? வீட்டில் தொலைகாட்சியில், குடும்பத்துடன் பார்க்கும் போது, சங்கோஜம் இல்லாமல் ரசிக்கவா முடிகிறது?
வேதபிரகாஷ்
04-01-2012
பிரிவுகள்: அச்சம், அழகிய இளம் பெண்கள், இமாம், இஸ்லாம், உலமாக்கள், உள்ளாடை, கற்பு, கீழுள்ளாடை, குவைத், சம்பளம், சரீயத், சரீயத் சட்டம், சவுதி, ஜட்டி, துபாய், நாணம், நிகாப், பயிர்ப்பு, பர்கா, பர்தா, பர்தா அணிவது, பள்ளிவாசல், பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாடி, பேன்டி, மடம், மத-அடிப்படைவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் பெண்கள் வேலை, முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது, முஸ்லீம்கள், மேல் உள்ளாடை, Uncategorized
Tags: அரேபியா, ஆண், ஆண் ஊழியர், உள்ளாடை, கடை, கட்டுப்பாடு, கீழுள்ளாடை, கீழ் உள்ளாடை, சவுதி, ஜட்டி, தடை, தணிக்கை, பாடி, பெண், பெண் ஊழியர், பேன்டி, மால், மேல் உள்ளாடை
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 16, 2011
ஹஜ் யாத்திரையில் 19 முஸ்லீம்கள் இறப்பு, 31 பேர் காயம், ஒரு குழந்தை பிறப்பு முதலியன
சவுதி அரேபியா ஹஜ் பிரயாணிகளுக்கு பலவித ஏற்பாடுகளை செய்திருந்தது. எந்த விதத்திலும், எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்ற திட்டத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன[1]. பிரயாணத்தைப் பற்றிய விழிப்புணர்வு, மெக்கா-மெதினாவில் என்ன செய்யலாம்-செய்யக் கூட்டாது என்றெல்லாம் அறிவுருத்தப்பட்டன[2]. தங்கும் இடங்கள், ஆரோக்ய-மருத்துவ வசதிகள், போக்குவரத்து என பிரமாண்டமாக இருந்தன. அதே நேரத்தில் வசதிகள் இல்லை என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன[3]. 10% தங்குமிடங்கள் கூட, சட்டமுறைகள் படி அமைக்கப்படவில்லை, வசதிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பல காரணங்களுக்காக 19 இந்தியர்கள் மரணம்: ஹஜ் யாத்திரைக்குச் சென்ற 19 இந்தியர்கள் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[4] குறித்து ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை சிறந்தது. பரஸ்பர கடவுள் நம்பிக்கை அதைவிட சாலச்சிறந்தது. நல்லவேளை, இங்காவது “இந்தியர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இல்லயென்றால், “தமிழர்கள்” என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து 61,847 பேர் சென்றுள்ளனர்.
இவர்களில் 27,487 பேர் மதீனாவிலும், 34,345 பேர் மதீனாவிலும் உள்ளனர்[5]. இவர்களில் 19 பேர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 223 விமானங்கள் மூலம் இந்திய யாத்ரீகர்கள் ஹஜ் புனிதப் பயணமாக சவூதி வந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இறந்த 19 பேரில் 15 பேர் இந்திய ஹஜ் குழு மூலம் வந்தவர்கள், 4 பேர் தனியார் மூலம்
வந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்[6].
காரணம் சொல்லப்படவில்லை என்று ஒரு இணைத்தளம் கூறுகிறது: இவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது டெல்லியில் இருந்து 20, 268 பேரும், லக்னோவில் இருந்து 10,128 பேரும், ஐதராபாத்தில் இருந்து 6,977 பேரும், கோழிக்கோட்டில் இருந்து 8,400 பேரும் ஹஜ் புனித பயணித்துள்ளதாக சவுதி அரேபியா சென்றுள்ளனர்[7].
மரணங்களுக்கிடையில், ஒரு ஜனனம்: இம்முறை, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் ஒருபெண், புனித மதீனா நகரில் அழகியதொரு பெண்குழந்தையை வெள்ளியன்று பிரசவித்ததாகவும், இந்திய ஹஜ் பயணிகளின் வரலாற்றில் புனித நகரொன்றில் ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது இதுவே முதல்முறை என்றும் சவூதி அரேபிய அரசின் செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது[8]. ஶ்ரீலங்காவைச் சேர்ந்த தம்பதியர் சாலை விபத்தில்
உயிரிழந்ததாகத் தெரிக்கப்பட்டுள்ளது[9]. முன்னர் சியால்கோட்டைச் சேர்ந்த பிரயாணிகளை பேருந்தில் ஏற்றிச் சென்றதில், மக்கா-மெதினா சாலை விபத்து ஏற்பட்டத்தில் 61 பேர் காயமடைந்தனர்[10]. இப்படி “இந்திய துணைகண்டத்தில்” (இப்படி எந்த ஊடகமும் குறிப்பிடாதது ஏன் என்று தெரியவில்லை) விஷயங்கள் நடந்துள்ளன.
வேதபிரகாஷ்
16-10-2011
[2] Makkah Gov. Prince Khaled Al-Faisal will launch on Saturday the media awareness campaign titled: “Haj … Worship & Civilized Conduct.” The campaign is aimed at enlightening pilgrims and residents to be committed to the rules and regulations concerning the pilgrimage. Al-Khodairi recalled the decision banning entry of vehicles with capacity of less than 25
passengers to Makkah and asked pilgrims to preserve the cleanliness of the holy sites. “The campaign will focus on enlightening people to keep away from all negative behavior that might impede the government’s efforts aimed at ensuring the safety and comfort of the guests of God,” he said.
http://arabnews.com/saudiarabia/article518220.ece
[9] Two Sri Lankan pilgrims died in a road accident when their speeding vehicle overturned on the Makkah–Jeddah highway on Wednesday night, the Sri Lankan Consulate General in Jeddah said on Thursday. Abdul Wahid Abdul Jawad, 47, and wife Abdul Haleem Shamsunissa, 42, died instantly after they flew out of the vehicle four kilometers outside Jeddah.
பிரிவுகள்: அரசு நிதி, அரேபிய ஷேக்கு, அரேபியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், ஆடு, ஆலிஃப்-லம்-மிம், இந்தியா, உயிர் பலி, கலிமா, கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வத், கல்வீச்சு, காஃபிர், காஃபிர்கள், குரான், குலுக்கல், குல்லா, குவைத், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், சவுதி, சூஃபி, மக்கா, மதினா, மெக்கா, யாத்திரை, ஹஜ்
Tags: அரேபியா, ஏற்பாடு, காபா, குலுக்கல், சவுதி, மக்கா, மதீனா, மெக்கா, மெதிமனா, யாத்திரை, விமானம், ஹஜ்
Comments: Be the first to comment
ஜூலை 17, 2011
மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்
குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.
வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].
உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது. ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].
சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.
செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.
மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.
26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.
[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, 786, அடையாளம், அபு சலீம், அபு ஜிண்டால், அப்துல் அஜீஸ், அப்துல் கய்யூம் சேய்க், அப்துல் காதர், அப்துல் நாஸர் மதானி, அப்துல் பாசித், அப்துல்லா, அமீனுத்தீன், அமீன், அமெரிக்க ஜிஹாதி, அரேபிய ஷேக்கு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்ஜமீன், அல்லா, அஸ்ரப் அலி, அஸ்லாம் பாஷா, ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எல்லை, எஸ்.எம்.எஸ், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர்கள், காந்தஹார், காந்தாரம், கீழக்கரை, குஜராத், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குவைத், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சாகுல், சாகுல் அமீத், சாதர், சானவாஸ், சிதம்பர ரகசியங்கள், சிமி, சியாசத், சுன்னத், சுன்னி, சுலைமான், ஜமாத், ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், டைம், த.மு.மு.க, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தலிபான், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி, தாவூத் மியான் கான், தாஹிர் ஷைஜாத், துபாய், துப்பாக்கி, தேசிய புலனாய்வு துறை, பங்களூரு வெடிகுண்டு, பலுச்சிஸ்தானம், பள்ளி வாசல், பழமைவாதம், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பைப் வெடிகுண்டு, மதானி, மதௌனி, முகமது ஆசிப், முகமது ஜியாஉல்ஹக், முஜாஹித்தீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம், முஹம்மது, மௌதனி, மௌதானி, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: அம்மோனியம் நைட்ரேட், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாம், சந்தேகிக்கப்படும் இயக்கங்கள், சிமி, செல்போன், டிபன் பாக்ஸ், தடை செய்யப்பட்டுள்ள சிமி, துணி, முகமது, மும்பை குண்டுவெடிப்பு, முஹமது, லஸ்கர்-இ-தொய்பா, ஸ்கூட்டர்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஜூலை 24, 2010
குல்ஷன்குமார் கொலையாளி சிறையில் தாக்கப்பட்டான்: அபு சலீமை முஹமது தோஸா சிறையிலேயே தாக்கினான்!
அப்துல் கய்யூம் சேய்க் குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான்[1]. அடுத்த வாரத்திலேயே, இன்னொருவன் தாக்கப்படுகிறான் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே இன்று காலை (சனிக்கிழமை 24-07-2010) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கினான்[2]. கழுத்திலும், தோளிலிலும் ரத்தம் சொட்டச்சொட்ட, மருத்துவமனைக்கு அபு சலீம் எடுத்துச் செல்லப்பட்டான். அபு சலீம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு, 1997 குல்ஷன்குமார் கொலை[3] முதலிய வழக்குகளுக்காக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். முஹமது தோஸாவும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியாவான். இது வெறும் சிறைச் சண்டையா[4] அல்லது திட்டமிட்ட கொலை சதியா என்று போலீஸார் திகைத்துள்ளனர்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட் டாளி அபு சலீம். போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த அபு சலீம் கைது செய்யப்பட்டு, இவரது காதலி மோனிகா பேடியுடன் டில்லிக்கு 2006ம் ஆண்டு அழைத்து வரப்பட்டார்.
[1] வேதபிரகாஷ்,
அப்துல் கய்யூம் சேய்க் குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான்,
https://islamindia.wordpress.com/அப்துல்-கய்யூம்-செய்க்-க/
[2] Read more at: http://www.ndtv.com/article/india/abu-salem-attacked-by-dawood-men-in-mumbai-jail-39419?cp
[3] http://ibnlive.in.com/news/abu-salem-attacked-by-dawood-henchman-in-jail/127408-3.html?from=tn
[4] http://www.ibtimes.com/articles/38058/20100724/mustafa-dossa-dawood-ibrahim-abu-salem-gang-war-india-attack.htm
பிரிவுகள்: அனீஸ் இப்ராஹிம், அபு சலீம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், குவைத், கைது, கொலை வழக்கு, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாத், ஜேவித் ஷேய்க், தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், துபாய், நதீம் சைஃபீ, புனிதப் போர்
Tags: அபு சலீம், அப்துல் கய்யூம் சேய்க், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், குண்டு வெடிப்பு, குல்ஷன்குமார், ஜிஹாதி தீவிரவாதம், தாவூத் இப்ராகிமின் கூட் டாளி, துபாய், மும்பை தொடர் குண்டு வெடிப்பு, முஹமது தோஸா, மோனிகா பேடி
Comments: 4 பின்னூட்டங்கள்
ஜூலை 12, 2010
குவைத்தில் சித்ரவதைப்படும் தாயை மீட்டுத் தரக் கோரி மகன், மகள் மனு
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38065
வீட்டுவேலை செய்ய குவைத்திற்குச் சென்ற பெண்: திருச்சி – ஜூலை 12, 2010 : “குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில், சித்ரவதை செய்யப்படும் தங்களது தாயை மீட்டுத் தர வேண்டும்’ என, மகனும், மகளும் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புரத்தாக்குடி புல்லம்பாடி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு மலர்கொடி (25), கல்பனா (23), ராசாத்தி (16) என்ற மூன்று மகள்கள், சேகர் (18) என்ற மகனும் உள்ளார். தனலட்சுமியின் கணவர் கிருஷ்ணன் 17 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதன்பின் தனலட்சுமி கூலிவேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்தார். மூத்த மகள் மலர்கொடிக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த காளை மற்றும் தேவேந்திரன் ஆகியோர் உதவியுடன், தனலட்சுமி, 2010 ஜனவரியில் குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அவருக்கு பேசிய படி மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படாமல் 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து லால்குடியில் உள்ள குடும்பத்தினரிடம் பேசிய தனலட்சுமி, “நான் வேலைக்கு சென்ற வீட்டில் என்னை அடித்து சித்ரவதை செய்கின்றனர். என்னை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என, தெரிவித்துள்ளார்.
சித்திரவதை செய்யப்படுவதாக கடிதம்: தொடர்ந்து, அடுத்தடுத்த சித்ரவரை குறித்து தனலட்சுமி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் தனலட்சுமி எழுதிய கடிதத்தில்,”நான் மிகவும் சித்ரவதை அனுபவித்து வருகிறேன். என்னை மீட்க நடவடிக்கை எடுங்கள். இந்த கடிதம் உங்கள் கையில் கிடைப்பதற்குள் நான் இறந்தும் போய்விடலாம்‘ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி கலெக்டர் (பொ) தட்ஷிணாமூர்த்தியிடம், தனலட்சுமியின் மகள் மலர்கொடி, மகன் சேகர் ஆகியோர், தங்களது தாயை மீட்டுத் தரும்படி மனு அளித்தனர்.
விபசார கும்பலிடம் ஏதும் சிக்கித் தவிக்கிறாரா? அதன்பின், மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், “”குவைத்தில் செலவில்லாமல் வேலை; மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி அழைத்துச் சென்று, எங்கள் அம்மாவை சித்ரவதை செய்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. முதலில் போன் செய்து பேசினார்; தற்போது அதுவும் இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர வேண்டும்,” என்றார். உடன் வந்த மலர்கொடியின் சித்தப்பா காசி கூறுகையில், “”குவைத்தில் தனலட்சுமி விபசார கும்பலிடம் ஏதும் சிக்கித் தவிக்கிறாரா? என்று சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
பிரிவுகள்: அடித்து சித்ரவதை, குவைத், குவைத்தில் விபசார கும்பல், குவைத்தில் வீட்டு வேலை, வீட்டு வேலை
Tags: அடித்து சித்ரவதை, குவைத், குவைத்தில் விபசார கும்பல், குவைத்தில் வீட்டு வேலை, செலவில்லாமல் வேலை, வீட்டு வேலை
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்