கோவை காஸ் சிலின்டர் வெடிப்பு, திட்டமிட்ட குண்டு வெடிப்புதான்: கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது[1]. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், பலியானார்[2]. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது[3]. கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள “அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்” என்ற பழமையான கோவிலில் கடந்த ஆண்டு 2022 அக்டோபர் மாதம் வெடிவிபத்து ஏற்பட்டது[4]. ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (V-IED) கோவிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியது. குண்டுவெடிப்பில் முபீன் கொல்லப்பட்டார். முதலில், அது வெறும் குக்கர் தான், ஏதேச்சையாக, தற்செயலாக, விபத்து போல வெடித்தது என்று கூட சில ஊடகங்கள் திரித்து செய்திகள் வெளியிட்டன. திமுக மற்றும் திராவிடத்துவ ஆதரவாளர்கள் அதை திவிரவாத தாக்குதல் என்பதனையே மறுத்துப் பேசினர், வாதிடவும் செய்தனர். ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியைக் கூட தரக்குறைவாகப் பேசினர்.
11-பேர் கூட்டு சதிகாரர்கள் திட்டமிட்டு செய்தது: போலீஸ் விசாரணையில், இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, உள்ளிட்ட, 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது[5]. இவர்களை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், 20-04-2023 அன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்[6]. மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி இளவழகன்முன், 21-04-2023 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கார் முதல் கெமிகல்ஸ் வரை எல்லாமே திட்டமிட்டு பெறப்பட்டது, குண்டு தயாரிக்கப் பட்டது: இந்நிலையில் உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியதாவது, குண்டுவெடிப்புக்குப் பயன் படுத்தப்பட்ட டி.என்.01. எப்.6163 என்ற நம்பருடன் கூடிய மாருதி 800 காரை தல்ஹா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார்[7]. பைரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர், கேஸ் சிலிண்டரைக் கொண்டு காரை வெடிகுண்டாக மாற்ற உதவியுள்ளனர்[8]. அசாருதீன், அப்சர் மற்றும் அவரது உறவினர் முபீன் ஆகியோர் வெடிப்பொருட்களை ஆன்லைனில் வாங்க, வேதிப் பொருட்களின் கலவையை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரித்துள்ளனர்[9]. இவ்வாறு கூறப்பட்டுள்ளது[10]. அதாவது, இதற்கான ஆதாரங்களுடன் இந்த குற்றப் பட்த்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப் பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இன்னும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் உள்ளது என்று என்.ஐ.ஏ. த ரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜிஹாதில் ஈர்க்கப் பட்டு தயாரானது: இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அதன் சுயமாக அறிவிக்கப்பட்ட கலீஃபா அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷிக்கு ‘பயாத்’ அல்லது விசுவாசப் பிரமாணம் எடுத்தார். NIA 27.10.2023 அன்று RC-01/2022/NIA/CHE என வழக்கை மீண்டும் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மேலும் கிடைத்த ஆதாரங்களை ஆய்ந்தபொழுது, அவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் இருந்த தொடர்பு தெரிய வந்தது. கூட்டாளிகள் சேர்ந்து வேலை செய்ய, அத்தகைய ஜிஹாத் சித்தாந்தமும் வேலை செய்தது என்பது தெரிகிறது. மனைவி-மகனுக்கு ஏற்பாடு செய்து விட்டு, இந்த “புனித” வேலைக்கு இறங்கியதும் கவனிக்கத் தக்கது. இதெல்லாம் அந்த ஜிஹாதி மாடலில் தான் வருகிறது. இதில், தமிழகத்தவரும் சிக்கிக் கொண்டுள்ளது விபரீதமாக உள்ளது. தொடர்ந்து, முஸ்லிம்களே அதில் ஈடுபடுவதும் ஆபத்தாக உள்ளது. அதிலும், தற்கொலை வெடிகுண்டு ரீதியில் செயல்பட தயாராவது, மிகவும் ஆபத்தானது, பயங்காமானது, தீவிவாதமானது.
அகில-உலக தொடர்புகளும் உள்ளன: முகமது அசாருதீனிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு பென் டிரைவில் ஜமேஷா முபீனின் வீடியோ பதிவுகள் இருந்தன, அங்கு அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தினார். ‘காஃபிர்களுக்கு’ (நம்பிக்கையற்றவர்கள்) எதிராக தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார். 2019 இல் ஈஸ்டர் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 260 பேரைக் கொன்ற இலங்கையின் தீவிர இஸ்லாமிய மதகுருவான ஸஹ்ரான் ஹாஷிமின் பயான்களால் (பிரசங்கங்கள்) முபீன் ஈர்க்கப்பட்டார்[11]. முபீன் இந்தியாவில் உள்ள ‘காஃபிர்களுக்கு’ எதிராக இதேபோன்ற தாக்குதலைத் திட்டமிட விரும்பினார்[12]. முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மீட்கப்பட்டன, அதில் இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத, தற்போதுள்ள ஜனநாயக அமைப்பை விமர்சிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள், இரயில் நிலையம் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சில உள்ளூர் கோயில்கள் உள்ளிட்ட ‘இலக்குகள்’ குறித்தும் இந்த குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெறிபிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றியது: இஸ்லாமிய மாநிலம் கொராசன் மாகாணத்தின் இணைய இதழான ‘வாய்ஸ் ஆஃப் கொராசன்’ இதை உறுதிப்படுத்தியது, ‘பசு மற்றும் எலிகள் வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்கேபி பொறுப்பேற்றது. . இந்த தாக்குதல் அவர்களின் மதத்தின் மாண்பை நிலைநிறுத்தவும், அல்லாஹ்வின் தீனையும் அவனது சட்டத்தையும் தனது நிலத்தில் நிலைநிறுத்தவும், ‘குஃப்ர்’ மற்றும் அதை பின்பற்றுபவர்களை பயமுறுத்தவும் இது ஒரு ஆரம்பம் என்று அச்சுறுத்தும் பழிவாங்கல் என்று கட்டுரை கூறுகிறது. ஆக, இது இந்துக்களை குறிவைத்து நடந்தப் பட்ட தாக்குதல் தான், ஆனால், ஏதோ விதமாக, முன்னரே வெடித்து விட்டதால், ஜமேஷா முபீனே பலியானான்.
பலவித சட்டப் பிரிவுகளில் குற்றப் பத்திரிக்கை தாக்குதல்: முபீனுக்கு அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் உதவினர்[13]. TN-01-F-6163 என்ற பதிவு எண் கொண்ட மாருதி 800 நீல நிற காரை தல்ஹா பெற்றுக் கொண்டார், இது வாகனத்தின் IED வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது[14]. ஃபிரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள், எரிவாயு சிலிண்டர்கள் போன்றவற்றை ஏற்றி, அது சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியது[15]. முபீனின் உறவினர்களான அசாருதீன் மற்றும் அஃப்சர் இருவரும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட VBIEDஐ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனக் கூறுகளை கொள்முதல் செய்து, எடைபோட்டு, கலந்து பேக் செய்திருந்தனர். முபீன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த நிலையில், முகமது அசாருதீன், முகமது தல்ஹா, ஃபிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் மீது 34, 120பி, 121 ஏ, 122, மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. , வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவுகள் 3, 4, 5 மற்றும் 6 மற்றும் UA (P) சட்டத்தின் பிரிவுகள் 16, 18, 20, 38 மற்றும் 39. கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
சட்டப்படிநடந்துவரும்நீதிமன்றவிசாரணைகளில்காலதாமதம்ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.
பட்டாசுவாங்கியகடையில்என்ஐஏஅதிகாரிகள்செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்றுசோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.
23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.
வெடிகுண்டுதயாரிக்கபயன்படுத்தப்பட்டுள்ளரசாயனங்கள்முதலியனபறிமுதல், சோதனைக்குஉட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.
ரசாயனங்கள்செயலிழக்கப்பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில்கைப்பற்றப்பட்டவெடிபொருட்கள்எங்கள்தொழிற்சாலையில்வைத்துசெயல்இழக்கச்செய்யப்பட்டன. காவல்துறையின்முக்கியஅதிகாரிகள்உட்பட 18 பேர்வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைவெடிவிபத்தில்கைப்பற்றப்பட்டவெடிமருந்துகள்அழிப்பு; என்ஐஏநடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.
இதில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது[1].
ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[2].
மேலும் இவர்கள், ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், இரு வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஆதாரங்கள்பகுப்பாய்வுக்குஉட்பட்டவைஆகின்றன: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தடயவியல் துறையிடம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நிச்சயமாக போலீசாரோ, என்.ஐ.ஏவோ எல்லா விவரங்களையும் சொல்லி விடமுடியாது. அதிலும் இத்தகைய ஜிஹாதி-தீவிரவாதம், ஐஎஸ்-தொடர்பு பயங்கரவாதம் போன்றவை பின்னியிருக்கும் பொழுது, அதிலும் தமிழகம் போன்ற “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, பிரிவினைவாதம், மாநில சுயயாட்சி, தினமும் மத்திய அரசுடன் எதிர்ப்பு கொள்கை கொண்ட போக்கு-செயல்பாடுகள் எல்லாம் மேற்கொண்டு வரும்பொழுது, திராவிடத்துவத்தில் ஊறிய தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்றே சொல்லிக் கொள்ளும் தமிழர்கள், நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொல்வார்கள். மறுஅடியும் பெரியாரிஸம், நீதிகட்சி, அண்ணாயிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பிக்கும் போது, அத்தகைய எண்ணம் தான் தோன்றும். மேலும், இப்பொழுதைய நிலையிலும் அவ்வாறே பேசி வருவது தான் பிரச்சினை, சந்தேகம் மற்றும் தீவிரத் தனமாகிறது.
ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம்சென்னைபோலீசார்சோதனை… பின்னணிஎன்ன?: நியூஸ்18தமிழ், இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பினாலும், தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும், அதில் பதிலை சொல்லவில்லை. [3] இருப்பினும், ஒரு நிருபர் அவ்வாறு யோசித்திருப்பது தெரிகிறது[4]. முன்னரே எதற்கு நான்கு நாட்கள் தாமதம் என்ற கேள்வி கவர்னரால் எழுப்பப் பட்டு, ஆளும் கட்சியினரால் விவாதப் பொருள் ஆக்கப் பட்டுள்ளது. தேவையில்லாமல், ஊடகங்களில் வேறு விவாதிக்கப் பட்டுள்ளது. திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” (அநாகரிக பேச்சைத் தடுக்க நெறியாளர் மைக்கை மூடலாம், அது மூட் எனப்படும்) கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. மறுபடியும், இந்த ரெயிடுகளில் தாமதம் உள்ளதா, தொய்வு ஏற்படுகிறதா, என்.ஐ.ஏ செல்லும் பொழுது, போலீசார் துணை / பாதுகாப்புத் தேவைப் படுகிறதா போன்ற கேள்விகளும் சாதாரண செய்தி படிப்போர்களுக்கு எழத்தான் செய்யும், இருப்பினும், என்.ஐ.ஏ போன்றோருக்கு எதற்கு துணை / பாதுகாப்புத் தேவை, அவர்களுக்கு அதெல்லாம் தெரியாதா அல்லது கருவிகள் இல்லையா என்றெல்லாம் கூட யோசிக்கக் கூடும்.
என்.ஐ.ஏசோதனைகளுக்குமுஸ்லிம்அமைப்பினர்வெளிப்படையாகஎதிர்ப்புத்தெரிவிப்பது ஏன், எப்படி?: முன்பு, என்.ஐ.ஏ சோதனைகள் நடத்தியபோது, முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆர்பாட்டம் செய்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது, போலீசார் எப்படி அனுமதித்தார்கள், பார்த்துக் கொண்டிருந்தார்கள் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்தன. இருப்பினும், போலீசார் பார்த்துக் கொண்டிருந்தது போலத் தான் ஊடகங்களில் வெளியிடப் பட்ட புகைப் படங்கள் காட்டின. அதனால், “முஸ்லிம்” என்றாலே, மிருதுவாக செயல்படுகிறார்கள், ஓட்டுவங்கி போய்விடும் போன்ற காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில், “தீவிரவாதத்திற்கு மதம் இல்லை,” என்று செக்யூலரிஸத் தனமாகவும் மிக நம்பிக்கையுடன் பேசப் பட்டு வருகிறது. என்.ஐ.ஏ சோதனை தேவையில்லை, தமிழகத்திற்கே என்.ஐ.ஏ தேவையில்லை போன்ற வாதங்களும் வைக்கப் பட்டன. இவையெல்லாம் மத்திய-மாநில அரசு மோதல்களா, ஒன்றிய-திராவிட மாடல் சித்தாந்த ஊடல்களா, ஆரிய-திராவிட போராட்டங்களா என்ரு தெரியவில்லை. இருபினும், இதிலுள்ள முக்கியத் தன்மை, பாதுகாப்பு-தேவை, தீவிரத் தன்மை முதலியவற்றை தேசிய-பாதுகாப்பு, ஜாக்கிரதை, கவனிப்பு கோணங்களில் மிக-அத்தியாவசமாகிறது.
28-09-2022லிருந்துபாப்புலர்ஃப்ரண்ட்ஆப்இந்தியாஅலுவலகங்களுக்குச்சீல்வைப்பதுமுதலியன: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்துக்குச்சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டிற்கு வந்தனர். அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டின் முதல் தளத்தில் போலீசார் விசாரணை 26-10-2022 அன்று நடத்தியபோது, ஏற்கெனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்துவிட்டுச்சென்றது தெரியவந்தது[5]. அந்த வீட்டில் வேறுகுடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டைக்காலி செய்யும் பொழுது எழுதிக்கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்[6]. இவையெல்லாம் தற்செயலாக நடந்தவையா அல்லது திட்டமிட்டு நடந்த நிகழ்வுகளா என்று அவர்கள் தான் புலனாய்வு செய்யவேண்டும். ஆனால், இங்கு 27-09-2022 முதல் 26-10-2022 வரை ஏன் தாமதம் என்ற கேள்வி தான் எழுகிறது.
10-11-2022 –வியாக்கிழமை – ஆவணங்கள்பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்டஐ.எஸ்.ஐ.எஸ்இயக்கஆதரவாளர்கள்லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.
15-11-2022 – நான்குநபர்களிடம்விசாரணை–சோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.
முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.
இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.
15-11-2022 அன்றுஊடகங்களின்செய்தி – விசாரணைக்குப்பிறகுவிவரங்கள்வெளியிடப்படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல்மண்ணடியில்உள்ளஒருவீட்டில்துணைஆணையர்ஆல்பர்ட்ஜான்தலைமையில்சோதனைநடைபெற்றுவருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்தினருடன்தொடர்பில்இருப்பதாகஎழுந்தசந்தேகத்தின்அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில்மாநகரபோலீஸாருடன்இணைந்துஎன்ஐஏஅதிகாரிகள்திடீர்சோதனையில்ஈடுபட்டனர்,………………….சென்னையில்சிலர்ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதிகளின்தொடர்பில்இருப்பதாகசந்தேகித்துமாநிலஉளவுப்பிரிவுபோலீஸாருக்குமத்தியஉளவுத்துறைசமீபத்தில்ஒருபட்டியல்அனுப்பியது. அதன்அடிப்படையிலேயேதற்போதுசோதனைநடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].
15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.
[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்துடன்தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில்என்ஐஏ, போலீஸார்தீவிரசோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.
கோவையில் திடீரென்று ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)
ஐஎஸ்ஆதரவுஇளைஞர்களுக்குஉளவியல்ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவைமாநகரில்கார்வெடிப்புதினத்தில்இருந்துதீவிரபாதுகாப்புமற்றும்வாகனதணிக்கையில்போலீசார்ஈடுபட்டுவருகின்றனர். உக்கடம்சங்கமேஸ்வரர்கோயில், கோனியம்மன்கோயில்உள்ளிட்டகோயில்களில்தற்போதுவரைபோலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டுள்ளனர். உயர்அதிகாரிகளின்உத்தரவுபடி, உளவுத்துறைபோலீசார்தீவிரமாகபலரைகண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், கோவைமாநகரில்ஐ.எஸ். அமைப்பின்மீதுஈடுபாடுகொண்ட 60க்கும்மேற்பட்டஇளைஞர்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்களதுபட்டியலைதயார்செய்துவைத்துள்ளோம்[2]. அவர்களுக்குகவுன்சலிங்கொடுக்கமுயற்சிசெய்துவருகிறோம். மேலும்மருத்துவகுழுசார்பில், அவர்களுக்குஉளவியல்ஆலோசனைவழங்கவும்திட்டமிட்டுவருகிறோம். அவர்களைநல்வழிப்படுத்தஅனைத்துநடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும்………[3]மேலும்உலாமாக்கள், உளவியல்நிபுணர்கள்மூலம்அவர்களுக்குதவறானசெயல்களில்ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின்மோசனமானசெயல்பாடுகள்உள்ளிட்டவைகுறித்துஎடுத்துகூறி, நல்லகருத்துகளைபோதித்துஅவர்களைநல்லகுடிமகனாகமாற்றும்திட்டம்செயல்படுத்தஉள்ளோம். இதற்காகஅனுபவம்வாய்ந்தஉளவியல்நிபுணர்களைதயாராகஉள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.
தீவிரவாதம்வளர்ந்துஇந்நிலைஅடைந்ததுஎப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:
போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..
அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.
உளவியல்ஆலோசனைஎப்படி, யாரால், எவ்வாறுஎங்கேநடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:
கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
அத்திட்டத்தை செயல்படுத்துதல்
பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.
06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “…கடந்த, 1998ல்நடந்தகுண்டுவெடிப்பால், கோவைமக்கள்பாதிக்கப்பட்டு, மீண்டும்சகஜநிலைதிரும்பபலஆண்டுகளானது. கார்வெடிப்புபோல், வேறுசம்பவங்கள்நடக்ககூடாது. இச்சம்பவத்தில்ஈடுபட்டஒற்றைநபரைஇயக்கியதுயார், இவ்வளவுபெரியசம்பவத்தைநடத்துவதன்பின்னணிஎன்ன, என்பதுகுறித்துஉண்மைவெளிக்கொண்டுவரவேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பேஇஸ்லாமியசமூகத்தைசீர்குலைக்ககூடியநோக்கில்செயல்படக்கூடியது[6]. அதன்ஆதரவாளர்களாகஇருப்பவர்கள், அமைதியைசீர்குலைக்கும்நோக்கில்செயல்படுகின்றனர்[7]. இதுபோன்றமனநிலையில்உள்ளவர்களுக்குஉளவியல்ரீதியானகவுன்சிலிங்கொடுக்கபோலீஸ்தயாராகஉள்ளது[8]. போலீசார்சிறப்பாகசெயல்படுகின்றனர்[9]. கார்வெடிப்புசம்பவத்தைஎன்.ஐ.ஏ., எப்படிவிசாரிக்கப்போகிறதுஎன்பதுகேள்விக்குறிதான். தமிழகபோலீசாரேவிசாரிக்கவேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].
பயங்கரவாதம், தீவிரவாதம்மற்றும்அழிப்புவாதம்என்றால்என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.
[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமியசமூகத்தைசீர்குலைக்கும்ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷாமுபீனைஇயக்கியதுயார்..? ஜவாஹிருல்லாகேள்வி , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST
ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ்பாணியில் தற்கொலைவெடிகுண்டாகமாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)
சமயஇலக்கியங்கள்அனைத்தும்தமிழில்உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷாமுபீனின்நாட்குறிப்புபதிவுகள்பெரும்பாலும்மற்றமதங்கள், குறிப்பாகஇந்துமதம்மற்றும்கிறித்துவம்பற்றியஅவரதுபார்வையைவெளிப்படுத்துகின்றன. அவர்அந்தமதங்களின்கடவுள்களின்பெயர்களைமேற்கோள்காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர்இணைக்கும்அம்புகளுடன்கையால்எழுதப்பட்டசார்ட்விளக்கப்படத்தில்அவற்றைசித்தரித்துள்ளார். சி.ஏ.ஏஹிஜாப்சர்ச்சை, உணவுமீதானகட்டுப்பாடுகள், மாட்டிறைச்சிகாரணமாகநடந்தகொலைகள்போன்றசம்பவங்கள்இந்தியமுஸ்லிம்கள்எதிர்கொள்ளும்பிரச்சனைகளாககுறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள்இரண்டாம்தரகுடிமக்களாகமாறிவருகின்றனர். இந்தச்பிரச்னைகளைஎப்படிச்சமாளிப்பதுஎன்றும்அவர்திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.
அனைத்துதரப்புமக்களுடனும்ஒருநல்லிணக்கத்தோடுவாழ்வதையேநாங்கள்விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள் நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து மனித நேயம், மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது. தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது
ஜமாத்துகளின்சார்பில்வன்மையாககண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
100-க்கும்மேற்பட்டவீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.
‘கோட்டைஈஸ்வரன்கோவிலில்இருந்தகண்காணிப்புகேமராவில்பதிவானகாட்சிகள்வாயிலாக, கார்குண்டுவெடிப்புவழக்கில்துப்புதுலக்கமுக்கியதகவல்கள்கிடைத்தன‘: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.
கண்காணிப்புகேமராகாட்சிகளைகேட்டுச்சென்றபோது, பள்ளிவாசல்ஒன்றின்நிர்வாகிகடும்எதிர்ப்புதெரிவித்து, போலீசாரிடம்வாக்குவாதம்செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].
வேதபிரகாஷ்
05-11-2022
[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவைகார்சிலிண்டர்வெடிப்பில்பலியானஜமேஷாமுபீன்; இலக்கைநோக்கிபயணித்தசுயமானதீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm
[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23
கோவைஆர்காஸ்சிலிண்டர்வெடிகுண்டுசோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.
ஜமேஷாமுபின்வீட்டில்கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
கண்ணாடிகள் [Glass pieces],
9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
வயர் [wires],
சுவிட்ச் [switches],
சிலிண்டர் [cylinders],
ரெகுலெட்டர் [regulators],
டேப் [tapes]
இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–
உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.
ஜமேஷ்முபீனின்குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
கோட்டைஈஸ்வரன்கோவில்அருகேவீடுபார்த்துகுடிபெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
20-10-2022 அன்றுமனைவிகுழந்தைகளுடன்தாய்வீட்டிற்குசென்றுவிடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
22-10-2022 அன்றுமனைவியுடன்பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)
எஸ்.ஐ., உட்பட 27 பேருக்குவெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.
பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.
மத்தியஉளவுத்துறையும், தமிழகபோலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமயமாக்கப்படும்தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.
தமிழகத்தில்முதன்முதலாகஎன்.ஐ.ஏ. செய்துள்ளவழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைகார்வெடிப்புவிவகாரம்… சிறப்பாகபணியாற்றியகாவலர்களுக்குடிஜிபிபாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.
[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)
22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட்கிழமை) வரைநடந்துள்ளவைஎன்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.
இந்நிலையில்தான்கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம்–செய்திகள்வரஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].
22-10-2022 (சனிக்கிழமைஇரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.
பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்குண்டுவெடித்தலில்இறந்தவன்ஜமேசாமுபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……
வாட்ஸ்–ஆப்பதிவு, இறப்புஉண்மைஎன்றால், அதுதற்கொலைகுண்டுவெடிப்புஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸில், என்னுடையஇறப்புசெய்திஉங்களுக்குதெரியும்போதுஎனதுதவறைமன்னித்துவிடுங்கள், குற்றங்களைமறந்துவிடுங்கள்எனதுஇறுதிசடங்கில்பங்கேறுங்கள். எனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!
[1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
[2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
கோயம்புத்தூரில்ஶ்ரீலங்கைகுண்டுவெடிப்பு, ஐசிஎஸ்முதலிய தொடர்புகள் – கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]
ஒருபக்கம்முகமதியர்எதிர்ப்புதெரிவித்தனர்என்றும், இன்னொருபக்கம் “இதுகுறித்துபேசவிருப்பம்இல்லை” என்றும்செய்திகள்[1] : அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து [இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை போலவே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழ்த்த வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாகவும், அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த ஆள் திரட்டும் வேளைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது] பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர்[2]. பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது , உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது. அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது, உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது.
பாரூஹ்கொலைவழக்கில்சம்பந்தம்கொண்டவர்கள்முதலியன[3]: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்ற நபர்களில் ஒருவரான 26 வயதுடைய அக்ரம் சிந்தா குனியமுத்தூரில் வசித்து வருகின்றார். கோவையில் நகைக்கடை வைத்துள்ளதாக கூறப்படும் இந்த நபரின் மீது முன்னதாக கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் இறை மறுப்பு கொள்கை கொண்ட பாரூஹ் என்பவர், கடவுள் மறுப்பு கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றார் என அவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அக்ரம் சிந்தா, சம்பந்தப்பட்டு இருப்பதாக வழக்கு உள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இப்ராகிம், ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்துள்ளதாக தேசிய புலானய்வு துறை குறிப்பிடுகின்றது. ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்தபோதுதான் சஹ்ரான் ஹாஷிமின் உரைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டு வருவதாக கூறியதோடு, கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்புக்கு தான் தயாராக இருந்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுத் துறை முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த நபரோடு இப்ராகிம் நெருக்கமாக இருந்துள்ளதாலும், அசாருதீன் குழுவில் இருந்ததாலும் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்[4].
இந்தசோதனையில்தேசியபுலனாய்வுத்துறைஅதிகாரிகள்ஈடுபடவில்லைமாறாகமாநகரகாவல்துறையின்நுண்ணறிவுப்பிரிவினர்இந்தசோதனைகளைநடத்தினர்[5]: இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர். ஆக, நாளைக்கு மோடி சொல்லித்தான், நடத்தப் பட்டது என்று சொல்லமாட்டார்கள் என்று நம்பலாம்! மேலும், இவர்கள் இலங்கையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய சஹ்ரான் ஹாஷிமின் செயல்களை புகழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்தப்பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று கொண்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இதுகுறித்து பேசத் தயங்குகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், இந்த நபர்கள் யாரும் பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் இல்லை. இதற்கு முன்பு, இவர்கள் யாரும் பெரிய அளவில் வெளியில் செயல்பட்டதாகவும் தெரியவில்லை. இதுபோன்ற நபர்கள் சமூக ஊடகங்களில் செய்யப்படுவது அவர்களின் குடும்பங்களுக்குக்கூட தெரியாது, விசாரணைகளால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமுற்று இருக்கின்றனர் என்றார்[6].
மின்னணுஉபகரணங்கள்கைப்பற்றப்பட்டன: கைது செய்யப்படும்போது 14 மொபைல் போன்கள் 29 சிம் கார்டுகள் 10 பேன் டிரைவ்கள் 3 லேப்டாப், ஆறு மெமரி கார்டுகள், 4 கார்ட் டிஸ்குகள் ஒரு இண்டர்நெட் டாங்கில், 13 சிடிகள் / டிவிடி, 300 ஏர் கன் பில்லெட்ஸ் பல டாக்குமெண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[7]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் சில துண்டு பிரசுரங்கள் ஸ்கேனரின் கீழ் இருந்தன[8]. மீட்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு மே 30 தேதி கோயம்புத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயது முகம்மது அஷாருதீன் மேலும் 5 பேர் தலைமையிலான குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமியபிரபாகரன்தேவையில்லை: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்தால் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் சகஜ நிலை திரும்பியபோதும் ஆங்காங்கே சில இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில், முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற அதிபர் சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது[9]: “நாடுதற்போதுபிரிந்துஇருப்பதுஉண்மைதான். இதனைஏற்றுக்கொள்ளதான்வேண்டும். ஆனால்இதுநாட்டுக்குநல்லதல்ல. அனைத்துசமூகமக்களிடமும்ஒற்றுமையைஏற்படுத்தவேண்டியதேவைதற்போதுள்ளது. மீண்டும்ஒருமுஸ்லிம்பிரபாகரன்பிறப்பதற்குமக்கள்அனுமதித்துவிடக்கூடாது. இதுநாட்டுக்குநல்லதல்ல. நாம்பிரிந்துநின்றால்ஒட்டுமொத்தநாட்டுக்கும்இழப்புதான். இதில்எந்தமாற்றமும்இல்லை. நாட்டைபற்றிகவலைப்படாமல்சிலஅரசியல்வாதிகள்வரவுள்ளதேர்தலைமனதில்கொண்டுசெயல்படுகின்றனர். மக்கள்அவர்களின்ஆசைகளுக்குஇரையாகவேண்டாம்,” இவ்வாறு அவர் பேசினார்[10].
இஸ்லாமியபிரபாகரன்தமிழகத்திற்கும்ஆபத்துதான்: இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள்.இவர்களை மீளக்குடியேற்றுவது மிகமிக அவசியம். இந்தியா தமிழர்கள் மீதான அக்கறையில் மீள்குடியேற்றத்தை நடத்தாவிட்டாலும் தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க அதனைச் செய்யவேண்டும். இல்லாவிடின் இலங்கையின் கிழக்கில் இருந்து வெடிமருந்துகள் ஏற்றிய மத அடிப்படைவாதத் தற்கொலைக் கொலையாளிகளின் படகுகள் இந்திய கிழக்குக் கரையோரத் தளங்களை, இந்திய கடற்படையை, கப்பல்களைத் தாக்கின என்ற செய்திகள் வர அதிக காலம் எடுக்காது. இந்தியாவின் பாதுகாப்பு மட்டுமல்ல பொருளாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.
குண்டுவெடிப்புஜிஹாதிகள்கண்டறியப்பட்டுஒழிக்கப்படவேண்டும்: கோயம்புத்தூரில் உள்ள முகமதியர்கள் இவ்வாறு தொடர்ந்து பயங்கரவாத தீவிரவாத செயல்களில் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது மிகவும் திகைப்பாக உள்ளது. கொல்வது என்ற சித்டாந்தத்துடன் தமிழகத்தில் இத்தகைய கூட்டம் தொடர்ந்து வேலை செய்வது நிச்சயமாக மனிதத்தன்மையற்ற தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. மதத்தின் பெயரால் அவர்களே குண்டு வெடிப்பு மூலம் அல்லது மற்ற தீவிரவாத பயங்கரவாத செயல்களால் கொல்ல வேண்டும் என்ற கொள்கையை இன்றும் செயல்படும் இந்த நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக ஒரு குரூர மனப்பாங்கு கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களை மனிதர்கள் கொல்வதனால் சொர்க்கத்திற்கு போக முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது ஒரு பெரிய குரூரமான் பைத்தியக்காரத்தனம் போன்றது தான். ஒருவேளை வெறி பிடித்த குரூரக் கொலைக்காரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கலாம். ஆனால் தற்கொலை மூலம் மற்றவர்களையும் கொல்லும் எண்ணம் எப்படி மனங்களில் உருவாகும் என்பது ஆச்சரியமாக உள்ளது.
தற்கொலைஜிஹாதிகளைவளர்ப்பது, வைத்துக்கொள்வதுஅபாயகரமானது: ஆகவே தமிழகத்தில் இத்தகைய கூட்டத்தினரை வளர்த்தது, வளர்ப்பது அபாயகரமானது, மனிதர்களுக்கு ஒவ்வாதது. ஆகவே எல்லா நிலைகளிலும் இவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சட்டட்தின் முன்னர் கொண்டவரப்பட்டு, முறையாகத் தண்டிக்கப்படவேண்டும். இல்லை அவர்கள் இங்கே வாழ தகுதியற்றவர்கள் என்று கூட தீர்மானிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் நேரத்தில், ஜிஹாத் என்ற சித்தாந்தத்தில் இத்தகைய கொடுமைகளை உண்டாக்குபவர்களை எதிர்கொள்வது. என்பது சாதாரண மக்களால் முடியாத ஒன்று. ஆகவே, முளையிலேயே அவை கிள்ளியெறியப் படவேண்டும்.
[9] தி.தமிழ்.இந்து, ‘‘முஸ்லிம்பிரபாகரன்உருவாகிவிடுவார்’’ – இலங்கைஅதிபர்சிறிசேனாஎச்சரிக்கை, Published : 09 Jun 2019 17:10 IST; Updated : 09 Jun 2019 17:10 IST
அண்மைய பின்னூட்டங்கள்