Archive for the ‘குண்டு நேயம்’ category
ஜூன் 15, 2019
கோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு, ஐசிஎஸ் முதலிய தொடர்புகள் – கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]

ஒரு பக்கம் முகமதியர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், இன்னொரு பக்கம் “இது குறித்து பேச விருப்பம் இல்லை” என்றும் செய்திகள்[1] : அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து [இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை போலவே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழ்த்த வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாகவும், அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த ஆள் திரட்டும் வேளைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது] பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர்[2]. பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது , உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது. அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது, உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது.

பாரூஹ் கொலைவழக்கில் சம்பந்தம் கொண்டவர்கள் முதலியன[3]: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்ற நபர்களில் ஒருவரான 26 வயதுடைய அக்ரம் சிந்தா குனியமுத்தூரில் வசித்து வருகின்றார். கோவையில் நகைக்கடை வைத்துள்ளதாக கூறப்படும் இந்த நபரின் மீது முன்னதாக கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் இறை மறுப்பு கொள்கை கொண்ட பாரூஹ் என்பவர், கடவுள் மறுப்பு கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றார் என அவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அக்ரம் சிந்தா, சம்பந்தப்பட்டு இருப்பதாக வழக்கு உள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இப்ராகிம், ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்துள்ளதாக தேசிய புலானய்வு துறை குறிப்பிடுகின்றது. ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்தபோதுதான் சஹ்ரான் ஹாஷிமின் உரைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டு வருவதாக கூறியதோடு, கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்புக்கு தான் தயாராக இருந்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுத் துறை முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த நபரோடு இப்ராகிம் நெருக்கமாக இருந்துள்ளதாலும், அசாருதீன் குழுவில் இருந்ததாலும் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்[4].

இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர்[5]: இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர். ஆக, நாளைக்கு மோடி சொல்லித்தான், நடத்தப் பட்டது என்று சொல்லமாட்டார்கள் என்று நம்பலாம்! மேலும், இவர்கள் இலங்கையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய சஹ்ரான் ஹாஷிமின் செயல்களை புகழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்தப்பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று கொண்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இதுகுறித்து பேசத் தயங்குகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், இந்த நபர்கள் யாரும் பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் இல்லை. இதற்கு முன்பு, இவர்கள் யாரும் பெரிய அளவில் வெளியில் செயல்பட்டதாகவும் தெரியவில்லை. இதுபோன்ற நபர்கள் சமூக ஊடகங்களில் செய்யப்படுவது அவர்களின் குடும்பங்களுக்குக்கூட தெரியாது, விசாரணைகளால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமுற்று இருக்கின்றனர் என்றார்[6].

மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப் பட்டன: கைது செய்யப்படும்போது 14 மொபைல் போன்கள் 29 சிம் கார்டுகள் 10 பேன் டிரைவ்கள் 3 லேப்டாப், ஆறு மெமரி கார்டுகள், 4 கார்ட் டிஸ்குகள் ஒரு இண்டர்நெட் டாங்கில், 13 சிடிகள் / டிவிடி, 300 ஏர் கன் பில்லெட்ஸ் பல டாக்குமெண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[7]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் சில துண்டு பிரசுரங்கள் ஸ்கேனரின் கீழ் இருந்தன[8]. மீட்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு மே 30 தேதி கோயம்புத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயது முகம்மது அஷாருதீன் மேலும் 5 பேர் தலைமையிலான குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பிரபாகரன் தேவையில்லை: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்தால் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் சகஜ நிலை திரும்பியபோதும் ஆங்காங்கே சில இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில், முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற அதிபர் சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது[9]: “நாடு தற்போது பிரிந்து இருப்பது உண்மை தான். இதனை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். ஆனால் இது நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து சமூக மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ளது. மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறப்பதற்கு மக்கள் அனுமதித்து விடக்கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழப்பு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பற்றி கவலைப்படாமல் சில அரசியல்வாதிகள் வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் அவர்களின் ஆசைகளுக்கு இரையாக வேண்டாம்,” இவ்வாறு அவர் பேசினார்[10].

இஸ்லாமிய பிரபாகரன் தமிழகத்திற்கும் ஆபத்துதான்: இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள்.இவர்களை மீளக்குடியேற்றுவது மிகமிக அவசியம். இந்தியா தமிழர்கள் மீதான அக்கறையில் மீள்குடியேற்றத்தை நடத்தாவிட்டாலும் தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க அதனைச் செய்யவேண்டும். இல்லாவிடின் இலங்கையின் கிழக்கில் இருந்து வெடிமருந்துகள் ஏற்றிய மத அடிப்படைவாதத் தற்கொலைக் கொலையாளிகளின் படகுகள் இந்திய கிழக்குக் கரையோரத் தளங்களை, இந்திய கடற்படையை, கப்பல்களைத் தாக்கின என்ற செய்திகள் வர அதிக காலம் எடுக்காது. இந்தியாவின் பாதுகாப்பு மட்டுமல்ல பொருளாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.

குண்டுவெடிப்பு ஜிஹாதிகள் கண்டறியப் பட்டு ஒழிக்கப் படவேண்டும்: கோயம்புத்தூரில் உள்ள முகமதியர்கள் இவ்வாறு தொடர்ந்து பயங்கரவாத தீவிரவாத செயல்களில் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது மிகவும் திகைப்பாக உள்ளது. கொல்வது என்ற சித்டாந்தத்துடன் தமிழகத்தில் இத்தகைய கூட்டம் தொடர்ந்து வேலை செய்வது நிச்சயமாக மனிதத்தன்மையற்ற தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. மதத்தின் பெயரால் அவர்களே குண்டு வெடிப்பு மூலம் அல்லது மற்ற தீவிரவாத பயங்கரவாத செயல்களால் கொல்ல வேண்டும் என்ற கொள்கையை இன்றும் செயல்படும் இந்த நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக ஒரு குரூர மனப்பாங்கு கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களை மனிதர்கள் கொல்வதனால் சொர்க்கத்திற்கு போக முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது ஒரு பெரிய குரூரமான் பைத்தியக்காரத்தனம் போன்றது தான். ஒருவேளை வெறி பிடித்த குரூரக் கொலைக்காரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கலாம். ஆனால் தற்கொலை மூலம் மற்றவர்களையும் கொல்லும் எண்ணம் எப்படி மனங்களில் உருவாகும் என்பது ஆச்சரியமாக உள்ளது.

தற்கொலை ஜிஹாதிகளை வளர்ப்பது, வைத்துக் கொள்வது அபாயகரமானது: ஆகவே தமிழகத்தில் இத்தகைய கூட்டத்தினரை வளர்த்தது, வளர்ப்பது அபாயகரமானது, மனிதர்களுக்கு ஒவ்வாதது. ஆகவே எல்லா நிலைகளிலும் இவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சட்டட்தின் முன்னர் கொண்டவரப்பட்டு, முறையாகத் தண்டிக்கப்படவேண்டும். இல்லை அவர்கள் இங்கே வாழ தகுதியற்றவர்கள் என்று கூட தீர்மானிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் நேரத்தில், ஜிஹாத் என்ற சித்தாந்தத்தில் இத்தகைய கொடுமைகளை உண்டாக்குபவர்களை எதிர்கொள்வது. என்பது சாதாரண மக்களால் முடியாத ஒன்று. ஆகவே, முளையிலேயே அவை கிள்ளியெறியப் படவேண்டும்.
© வேதபிரகாஷ்
14-05-2019

[1] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019
[2] https://www.bbc.com/tamil/india-48636958
[3] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019
[4] https://www.bbc.com/tamil/india-48636958
[5] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019
[6] https://www.bbc.com/tamil/india-48636958
[7] என்.டி.டிவி.தமிழ், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மாஸ்டர்மைண்ட் முகம்மது அசாரூதின் கைது, தமிழ்நாடு | Edited by Saroja | Updated: June 13, 2019 12:16 IST
[8] https://www.ndtv.com/tamil/isis-mastermind-with-link-to-sri-lanka-attacker-mohammed-azarudeen-arrested-in-tamil-nadu-2052511
[9] தி.தமிழ்.இந்து, ‘‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ – இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை, Published : 09 Jun 2019 17:10 IST; Updated : 09 Jun 2019 17:10 IST
[10] https://tamil.thehindu.com/world/article27703942.ece
பிரிவுகள்: அடையாளம், அல் - உம்மா, அல் - கொய்தா, அல்-முஜாஹித்தீன், அல்லா, இந்திய விரோதம், இலங்கை, இலங்கை குண்டுவெடிப்பு, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமியர்களை கொல்லும் முறை, ஈழ குண்டுவெடிப்பு, ஈழம், உக்கடம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம், குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம்
Tags: அடிப்படைவாதம், அடிப்படைவாதி, இணைதள ஜிஹாத், இலங்கை, இலங்கை குண்டுவெடிப்பு, இலங்கைத் தமிழர், ஈழ குண்டுவெடிப்பு, ஈழ ஜிஹாதி, ஈழம், ஐஎஸ், ஐஎஸ்ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கேரள ஜிஹாதி, கேரள பயங்கரவாதம், கோயம்புத்தூர், கோவை, ஜிஹாதி பயங்கரவாதம், தமிழக ஜிஹாதி, தமிழ் ஜிஹாதி, திராவிட ஜிஹாதி
Comments: Be the first to comment
ஜூன் 15, 2019
கோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு தொடர்புகள் – ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஜிஹாதி தீவிரவாதிகள்! கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [3]

ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை ஜிஹாதிகளும்: இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பில் உள்ள கொச்சிகடை அந்தோணியார் ஆலயம், நீர் கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள சீயோன் தேவாலயம் ஆகிய இடங்களில் பிரார்த்தனை நேரத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமான பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடித்த நேரத்தில் கொழும்பில் உள்ள 3 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதமோதல்கள் தொடர்ந்டால், முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை விடுத்தார்[1]. இந்த நிலையில் இலங்கை உளவு பிரிவின் விசாரணையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது[2].

30-05-2019 அன்றே RC-02/2019/NIA/KOC என்ற எண்ணில் கீழ்கண்டவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- மொஹம்மது அஸாருத்தீன் [Mohammed Azarudeen, aged 32, resident Ukkadam, Coimbatore],
- அக்ரம் சிந்தா [Akram Sindhaa, aged 26, Tirumarai Nagar Phase-II, Podannur Road, Coimbatore]
- ஷேயிக் இதயதுல்லாஹ் [ Y. Shiek Hidayathullah, aged 38, resident of South Ukkadam, Coimbatore],
- அபூபக்கர் [Abubacker M; aged 29, resident of Kuniyamuthur, Coimbatore],
- சதாம் ஹுஸைன் [Sadham Hussain A; aged 26, resident of Ummar Nagar, Podannur Main Road, Coimbatore],
- இப்ராஹிம் என்கின்ற சயின் ஷா [Ibrahim @ Shahin Shah, aged 28, resident of South Ukkadam, Coimbatore] and
- மற்றவர் [others]
ஐசிஸ் மற்றும் டேஷ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு சமூக இணைதளங்கள் மூலம் தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பி, தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து, இளைஞர்களை ஈர்த்து ஆள்சேர்ப்பதாக, ஆதாரங்கள் கிடைத்ததின் பேரில், இவ்வழக்குத் தொடரப்பட்டது.

கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் பேஸ்புக் குரூப் நடத்திய திஹாதி: இதில் மொஹம்மது அஸாரிதீன் கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் [“KhilafahGFX”] என்ற பெயரில் பேஸ்புக்கில், பிரிவை நடத்தி ஐசிஸ் மற்றும் டேஷ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் சித்தாதங்களைப் பரப்பி வந்தான். கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் = அதாவது, உலகம் முழுவதும் “கிலாபத்” இஸ்லாமிய ஆட்சியை, உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் வேலை செய்வது என்ற திட்டம். ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் [Sri Lankan suicide bomber Zahran Hashim] மற்ற உறுப்பினர்களுடன், நட்பு வைத்திருந்தான். இதில் இப்ராஹிம் என்கின்ற சயின் ஷா, ஜஹ்ரன் ஹாஷிமுடன் நெருங்கிய நண்பனாக இருந்தான் இவன் மீது, ஏற்கெனவே, ஐசிஸ் காசரகோட் வழக்கில் உள்ள ரியாஸ் அபூபக்கரும் தொடர்புள்ளது. ரியாஸும் கேரளாவில் ஐசிஸ் மற்றும் டேஷ் தரப்பில் குண்டுவெடிப்புகளுக்கு திட்ட போட்டிருந்தான்[3].

13-06-2019 அன்று தொடர்ந்து நடந்த சோதனை: இதையடுத்து இந்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த வாலிபர்களை கண்காணித்தனர். கோவை, கொச்சியில் இருந்து வந்த டி.எஸ்.பி. விக்ரம் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து கோவையில் உள்ள 7 பேர் வீடுகளில் 13-06-2019 அன்று காலை முதல் சோதனை நடத்தினர்[4].
- கோவை போத்தனூரை சேர்ந்த சதாம்,
- அக்பர்,
- அக்ரம்ஜிந்தா,
- உக்கடம் அன்பு நகரை சேர்ந்த அசாரூதின்,
- குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக்,
- உக்கடம் அல்அமின் காலனியை சேர்ந்த இதயத்துல்லா,
- ஷாகிம்ஷா ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடத்தியது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து அவர்களது வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் சோதனை நடந்து வரும் வீட்டில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதேபோல் வெளியில் இருந்து அந்த வீடுகளுக்குள் வரவும் அனுமதிக்கவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையில் அசாரூதின், இதயதுல்லா, அபுபக்கர் சித்திக் ஆகியோர் வீடுகள், நிறுவனத்தில இருந்து சில முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 1 மணியை தாண்டியும் நீடித்தது[5].

கைது என்று சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது: தேசிய புலனாய்வு அமைப்பு / தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) ஐ.எஸ்.ஐ.எஸ் தமிழ் தொகுதிப் பிரிவின் தலைவராக இருந்த முகமது அசாரூதினை கைது செய்துள்ளது. 13-06-2019 அன்று தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் ஏழு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. ஆரம்ப விசாரணைகளில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மாஸ்டர்மைண்ட் ஆக முகம்மது அசாரூதின் செயல்பட்டு வருவதால், கைது செய்யப் பட்டான். கைது செய்யப்பட்ட கோவை முகமது அசாருதீன் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் தென்னிந்திய தளபதியாக செயல்பட்டவர் என்கின்றன விசாரணை வட்டாரங்கள்[6]. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த அபுபக்கரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்[7]. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கோவை முகமது அசாருதீன்தான் இதில் முக்கிய பங்காற்றி வருவாதாக தெரிவித்தார். அதேபோல் இலங்கை சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சஹ்ரானுடன் முகமது அசாருதீன் தொடர்பில் இருந்ததை உறுதி செய்தனர்.

பிபிசி.தமிழ் – கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா?[8]: பிபிசி.தமிழின் செய்தி விசித்திரமாக இருக்கிறது. ஒரு பக்கம், “இந்த அலுவலகத்தின் அருகில், சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் பிபிசி தமிழ் விசாரித்தது,” என்று குறிப்பிட்டு, இன்னொரு பக்கம், “கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா?”, என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது! பிபிசி.தமிழ் கொடுக்கும் விவரங்கள்[9], “கொச்சினில் இருந்து வந்த தேசிய புலனாய்வுத் துறையினர் இந்தப்பகுதிகளில் உள்ள சில வீடுகளில் சோதனை செய்தது தெரியவந்தது. விசாரணைக்காக கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களில் ஷேக் இதயதுல்லா கைது செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். உக்கடம் , திருமறைநகர், குனியமுத்தூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன்விழா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு வீடுகளிலும், கரும்புக்கடை பகுதியில் க்யூப்லா என்ற ஒரு டிராவல் ஏஜென்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்தப் பகுதி அனைத்துமே பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழ்கின்ற பகுதி. சோதனை நடைபெறுகின்ற பொழுது இப்பகுதியில் பரபரப்பான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.

பிபிசி விசாரணை ஏன் ஒரு பக்கமாக இருக்கிறது?: இந்த அலுவலகத்தின் அருகில், சில இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் பிபிசி தமிழ் விசாரித்தது. அந்த இடத்தில் இஸ்லாமிய மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். “எங்கள் பகுதிகளில் போலீஸார் அடிக்கடி இப்படி சோதனைகளை நடத்துகின்றனர். எங்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் நாங்கள் வாழ்கின்ற இடங்களுக்கு வந்து விடுகின்றனர். எப்போதும் எங்களை சந்தேகத்தோடே பார்க்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இங்கு கூடியுள்ளோம்” என்றனர். ஆனால், சிறிது நேரத்தில் காவல்துறையினர் அந்தக் கூட்டத்தை கலைத்துவிட்டனர். பெற்றோர், உற்றோர், மற்றோர் அவர்களை அவ்வாறு செல்லாமல் கட்டுப்படுத்தி இருக்கலாம், தடுத்திருக்கலாம், ஆனால், செய்யவில்லை, எனவே, பிபிசி அவர்களிடம் கேட்டிருக்கலாமே. தொடர்ந்து, முகமதிய இளைஞர்கள் அவ்வாறு சென்று கொண்டிருக்கிறார்கள் எனும் போது, எங்களுக்குத் தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. பிறகு, வழக்கம் போல, என் பிள்ளை அப்பாவி, ரொம்ப நல்லவன், அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டான் என்று மறுப்புவாதங்களும் வரும்.
© வேதபிரகாஷ்
14-05-2019

[1] தி.இந்து.தமிழ், முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை, Published : 09 Jun 2019 17:10 IST; Updated : 09 Jun 2019 17:10 IST.
[2] https://tamil.thehindu.com/world/article27703942.ece
[3] The prime accused Mohammed Azarudeen has been the leader of the module and has been maintaining the Facebook page named “KhilafahGFX”, through which he had been propagating the ideology of ISIS/ Daish. Accused Mohammed Azarudeen has been a facebook friend of Sri Lankan suicide bomber Zahran Hashim and other members of the module have also been sharing radical contents attributed to Zahran Hashim, over the social media. Accused Ibrahim @ Shahin Shah (A-6) has been a close associate of arrested accused Riyas Abubacker (A-18) in case RC-02/2016/NIA/KOC (ISIS Kasaragod Case), who had planned to conduct terrorist attacks in Kerala, on behalf of the ISIS/ Daish.
[4] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு – கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை, பதிவு: ஜூன் 12, 2019 10:30, மாற்றம்: ஜூன் 12, 2019 15:58
[5] https://www.maalaimalar.com/news/state/2019/06/12103012/1245877/NIA-raids-at-7-locations-in-Coimbatore.vpf
[6] ஒன்இந்தியா.தமிழ், கோவை என்.ஐ.ஏ. கைது செய்த கோவை முகமது அசாருதீன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதி, By Mathivanan Maran | Published: Thursday, June 13, 2019, 9:04 [IST]
[7] https://tamil.oneindia.com/news/coimbatore/nia-arrests-isis-module-s-south-india-commander-353916.html
[8] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019
[9] https://www.bbc.com/tamil/india-48636958
பிரிவுகள்: ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், காலிப், கிலாபத், கிலாபத் இயக்கம், கிலாபஹ்.இ.எப்.எக்ஸ், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம், குண்டுவெடிப்பு, கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம், ஜஹ்ரன் ஹாஷிம், ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம், KhilafahGFX
Tags: இஸ்லாம் ஜிஹாதி, ஈழ ஜிஹாதி, கிலாபஹ்.இ.எப்.எக்ஸ், குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம், கேரள ஜிஹாதி, ஜஹ்ரன் ஹாஷிம், தற்கொலை குண்டு, தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம், ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம், KhilafahGFX
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 26, 2016
கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

பாரிஸ் தொடர்புகளை ஒப்புக் கொண்ட சுபஹனி மொஹிதீன்: இஸ்லாமிய அரசு போராளி, தமிழகத்தைச் சேர்ந்தவன்[1], அவனுக்கு பாரிஸ் குண்டுவெடிப்பாளர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன என்று இப்பொழுது (அக்டோபர் 23 2016) வாக்கில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[2]. 2015 நவம்பரில் அவர்களை சந்தித்தப் பிறகு, இந்தியாவுக்கு வந்ததாகவும், அப்பொழுது ஊடகங்கள் மூலம், பாரிஸ் தாக்குதல் பற்றி அறிந்தபோது, அவர்களுடைய சந்திப்புகளை நினைவு கூர்ந்ததாகவும் சொன்னான்[3]. பாரிஸ் குண்டுவெடிப்பில் மூன்று குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் என்று ஈடுபட்டு குண்டுகளை வெடித்தும், ஏ.கே.47 துப்பாக்கிகளால் சுட்டும் 130 பேரைக் கொன்றுள்ளனர். இவர்களுக்கு – இந்த தீவிரவாதிகளுக்கு புனைப்பெயர்கள் தான் கொடுக்கப் பட்டன. மொஹம்மது அல்-பிரான்ஸிசி, அப்சலாம் அல்-பிரான்ஸிசி, என்று தான் அழைக்கப்பட்டனர்[4]. இதெல்லாம் “ஸ்லீப்பர் செல்” சித்தாந்தத்தின் படி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற முறையில் உருவாக்கப் பட்டதா அல்லது போலீஸாரிடம், தீவிரவாத தடுப்பு-கண்காணிப்பு குழுக்களிடம் மாட்டிக் கொண்டாலும் தப்பித்துக் கொள்ள யுக்தியாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கீழ்கண்ட பெயர்கள் வெளியிடப்பட்டன:
- Abdelhamid Abaaoud [main plotter] – அபதல்ஹமீது அபௌத்
- Brahim Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – இப்ராஹிம் அப்சலம் [1ன் சகோதரன்]
- Salah Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – சலஹ் அப்துல் ரஸாக் [1ன் சகோதரன்]
- Aleed Abdel-Razzak [killed in bomb blast, but not a terrorist] – அலீத் அப்தல் ரஸாக் [பாரீஸ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவன், ஆனால், தீவிரவாதி கிடையாது]
- Omar Ismail Mostefei – ஒமர் இஸ்மயில் மொஸ்தபி.
பாரிஸ் குண்டுவெடிப்பு தலைவன் தான் சுபஹனி மொஹிதீனின் தலைவன் ஆவான்: NIA மற்றும் பிரெஞ்சு தீவிரவாத கண்காணிப்புக் குழு, இவ்வழக்கை ஆராய்ந்து வரும் நிலையில், NIA அவர்களை தொடர்பு கொண்டபோது, பிரான்ஸில் தாக்குதல் நடந்த போது, அப்பகுதிகளில் சுபஹனி மொஹிதீன் இருந்ததாக சொல்கிறார்கள்[5]. மேலும் பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவன் தான் தன்னுடைய தலைவன் என்றும் கூறிக் கொண்டான்[6]. “தி ஹிந்து” “குண்டுவெடிப்பாளர்கள்” என்று பன்மையில் குறிப்பிடுகின்றது[7]. அதாவது மேற்குறிப்பிடப் பட்ட மூவரில் ஒருவன் தலைவனா அல்லது மூவருமே தலைவனா என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்[8]. மேலும் குண்டுவெடிப்பிலும் இவனுக்கு பங்கு உள்ளாதா இல்லையா போன்றா கேள்விகளும் எழுகின்றன. அப்படியென்றால், அவன் ஆணையின் படி அவன் இந்தியாவுக்குத் திரும்பினானா, அவனுக்கு என்ன திட்டம் கொடுக்கப்பட்டது, போன்ற கேள்விகள் எழுகின்றன. பாரிஸ் குண்டுவெடிப்பு நடந்தபோதே, தமிழகத்தைச் சேர்ந்தவனுக்கும் அந்த நிகழ்சிக்கும் தொடர்புகள் இருந்தன, தமிழகத்தைச் செர்ர்ந்த ஒருவன் அதில் இறந்து விட்டான், என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.
சுபஹனி மொஹிதீன் பாரிஸில் இருந்தானா, இல்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்பதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் நவம்பர் 2015ல் பாரிஸில் குண்டு வைத்தவர்களை இவனுக்குத் தெரிந்தது, அல்லது இவனே அப்பகுதிகளில் இருந்தது போன்றவையும் வியப்பாக இருக்கின்றன. ஆகவே, இவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததே ஒரு நாடகம் போன்றுள்ளது. போரில் தான் கண்ட கொடூரத்தைக் கண்டு பயந்து திரும்பி வந்தான் என்றால், அவன் தொடர்ந்தி, ஐசிஸ் உடன் தொடர்புகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. போலி பெயர், போலி பாஸ்போர்ட், தமிழக போலீஸாருக்கே, அவன் சிரியாவுக்குச் சென்றுத் திரும்பியது தெரியாது போன்ற விசயங்கள், ஒருவேளை ஆள்-மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது. எப்படியிருந்தாலும், இந்தியர்களை முட்டாள்கள் ஆக்கி, எமாற்றி வருகின்றனர். ஆனால், அவன் தொடர்புகள் வைத்துக் கொண்டு ஆள்சேர்த்தல், சதிதிட்டம் போடுதல் முதலியவற்றை செய்துள்ளான் என்பதிலிருந்தே அவனது பயங்காவாத-தீவிரவாத-குரூர மனத்தை வெளிக்காட்டுகிறது.
சுபஹனி மொஹிதீனை பாரிஸ் போலீஸார் விசாரிப்பார்கள்: 2015 நவம்பரில் இந்தியா திரும்பியுள்ளதாக சொல்லப்படும், மொய்தீன், பாரிஸ் தாக்குதல் தொடர்பான தகவலை செய்தியின் மூலம் தெரிந்ததாக கூறியுள்ள நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு இருந்த பகுதியில் பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிகள் உடனான சந்திப்பைப்பற்றியும் ஒப்புக் கொண்டுள்ளாதால், இதுதொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு பிரிவு பிரான்ஸ் போலீசிடம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திடமும் தெரிவிக்கப்பட்டு, விசாரணைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பெற்றபின்னர் பிரான்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் உள்ளடங்கிய விசாரணை நடைபெற்று வருகிறது, ஐ.எஸ். கைவசம் உள்ள பகுதியில் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட நேரத்தில் மொகதீனும் அங்குதான் இருந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பரில் 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 135-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
© வேதபிரகாஷ்
26-10-2016

[1] Indian Express, ‘Islamic State recruit’ from Tamil Nadu knew Paris attackers tells sleuths, By: Express News Service | New Delhi | Updated: October 24, 2016 6:22 am
[2] http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/
[3] http://www.dnaindia.com/india/report-indian-isis-operative-subahani-haja-moideen-knew-paris-bombing-accused-2266706
[4] “In Mosul, he was put in a group which also had these two individuals. He knew them only by their pseudonyms which carried the suffix al-Francisi. However, when he was shown the photographs of the attackers, he recognised them,” an NIA officer said.
http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/
[5] The NIA has informed the French security officials and contacted its Embassy here, the sources said, adding this was done in case it would help in their investigation. They said that French officials could question him as well after getting the requisite court order. According to the multi-country investigation into the French terror strikes, the accused involved in the gruesome killings were in IS-controlled areas at the same time Moideen was there.
The Hindu, ‘Indian ISIS operative knew Paris bombers, NEW DELHI, October 24, 2016 Updated: October 24, 2016 01:36 IST
[6] The Times of India, Paris attacker was my leader: IS recruit from India, Neeraj Chauhan| TNN | Updated: Oct 24, 2016, 01:38 IST
[7] http://www.thehindu.com/news/national/indian-is-operative-knew-paris-bombers/article9258867.ece
[8] http://timesofindia.indiatimes.com/india/Paris-attacker-was-my-leader-IS-recruit-from-India/articleshow/55020602.cms
பிரிவுகள்: அடிப்படைவாதம், அபதல்ஹமீது அபௌத், அலீத் அப்தல் ரஸாக், அழிவு, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இப்ராஹிம் அப்சலம், இராக், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஒமர் இஸ்மயில் மொஸ்தபி., குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சலஹ் அப்துல் ரஸாக், சூழ்ச்சி, சென்னை, செல், செல்போன், பாரிஸ், முகமது கனி உஸ்மான், Uncategorized
Tags: அபதல்ஹமீது அபௌத், அலீத் அப்தல் ரஸாக், இப்ராஹிம் அப்சலம், இஸ்தான்புல், இஸ்லாம், ஒமர் இஸ்மயில் மொஸ்தபி., சலஹ் அப்துல் ரஸாக், சிரியா, சுபஹனி மொய்தீன், சுபஹனி மொஹித்தீன், சென்னை, துருக்கி, பாரிஸ், முகமது கனி உஸ்மான், மோசுல், ஹாஜா, ஹாஜா மொய்தீன், ஹைதராபாத்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 13, 2016
ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக–சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – கணினி வேலை பார்த்தாலும், ஜிஹாதியில் குறியாக இருந்த தீவிரவாதி (3)

கொட்டிவாக்கத்தில் வசித்த தா. சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26): பிடிபட்ட ஐந்து பேரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து, என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நேற்று 3வது நாளாக 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். 5 பேரில் இரண்டு பேர், கோழிக்கோட்டில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பேஸ்புக் பக்கத்தின் சாட் (தகவல் பரிமாறும் தனிப்பட்ட பிரிவு) மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும், பரிமாறிக்கொண்ட தகவல்களை உடனுக்குடன் அழித்துள்ளனர்[1]. இவர்களில் ஒருவர் கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூரைச் சேர்ந்த தா. சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது அவரது மனைவி ஜிம்சின்னா (24), இரண்டரை வயது மகன் ஜின்னா ஆகியோர் இருந்தனர். இதில் ஜிம்சின்னாவிடம் சுமார் 3 மணி நேரமும், வீட்டின் உரிமையாளர் குணசேகர் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சில முக்கிய ஆவணங்களையும், ஜிம்சின்னா பயன்படுத்திய செல்லிடப்பேசி, சுவாலிக் முகம்மது பயன்படுத்திய மடிக்கணினி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை– கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனாவிடம் விசாரணை: விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:- 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[2]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா கத்தார் செல்ல திட்டம்: வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

Logo_of_Boko_Haram.svg
முகநூலில் வளர்ந்த தொடர்பு தீவிரவாதத்திற்கு தான் சென்றுள்ளது: முகநூல் (ஃபேஸ்புக்) மூலம் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரிடம் சுவாலிக் முகமது தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதன்வாயிலாகவே அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரின் குறிப்பிட்ட பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். அப்போது, சுவாலிக் முகம்மதுவை தொடர்பு கொண்டு பேசிய அந்த இயக்கத்தினர் பேச்சில், மூளை சலவை செய்யப்பட்ட சுவாலிக் முகம்மது காலப்போக்கில் இணைந்து தீவிரமாக செயல்பட்டிருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது முகநூல் நண்பர்கள், சந்தேகம்படும்படியான தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

நம்ப முடியவில்லை – என்று நண்பர்கள் கூறியது: சுவாலிக் முகம்மது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்ததாக கைது செய்யப்பட்டிருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என அவரது நீண்ட கால நண்பரும், மென்பொறியாளருமான மிர்ஷாத் தெரிவித்தார். 01-10-2016 (வெள்ளி) – ஆறு பேர் கைது, 02-10-2016 (சனி) – கோயம்புத்தூரில் ஐந்து பேர் வீட்டில் சோதனை, 03-10-2016 (ஞாயிறு) – கடையநல்லூரில் சோதனை, 04-10-2016 (திங்கள்), 05-10-2016 (செவ்வாய்), 06-10-2016 (புதன்) 07-10-2016 (வியாழன்), 08-10-2016 (வெள்ளி) நாட்களில் விசாரணை, 09-10-2016 (சனிக்கிழமை) – 16 இளைஞர்களிடம் விசாரணை நடந்தது, 10-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) எர்ணாகுளத்தில் – சுபானி ஹாஜி மொஹித்தீன் மார்கெட் ரோட், தொடுபுழாவில் உள்ள அவனது வீட்டிற்கு கூட்டிச் சென்றனர்[3]., இப்படி எல்லாமே நம்ப முடியாத அளவுக்கு தான் உள்ளன. ஆனால், குண்டுகள் வெடிக்கின்றன, அப்பாவி மக்கள் இறக்கின்றானர் என்பது உண்மைதானே? விசாரணையில் அவனது உறவினர்களுக்கு, இவனது ஐ.எஸ் தொடர்புகள் இருந்தது தெரிய வந்தது. அவனது வீட்டிலிருந்து அவன் மீது குற்றஞ்சாட்டுவதற்கு உபயோகமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. அவன் இராக்கில் உள்ள மோசூலுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லா வசதிகளுடன் மாதம் $100 (சுமார்ரூ.8,000) கொடுக்கப்பட்டது[4], முதலிய விவரங்கள் தெரிய வந்தன[5].

07-10-2016 அன்று கோயம்புத்தூரில் விசாரணை[6]: கோயம்புத்தூரில் 11 அபு பஸீரின் தொடர்பு கொண்ட இளைஞர்கள் விசாரிக்கப்பட்டனர். அவன் மூலம் ஒருவேளை ஐசிஸ் தொடர்புகள் இருக்கக்கூடுமோ என்று, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், செல்போன் எண்கள் போன்றவற்றில் தொடர்புடையவர்களிடம் தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பஸீர் உக்கடத்தில், ஜீ.எம். நகரில் தங்கியிருந்தபோது இந்த இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை ஆங்கிக் கொடுக்கிறேன் என்று வாக்குக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதை வைத்துதான், அவர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், தீவிரவாதத்திற்கும், அவர்களது வேலைதேடுதலுக்கும் சம்பந்தம் இல்லை என்றதால், அவர்கள் அனுப்பப்பட்டனர்[7].
© வேதபிரகாஷ்
13-10-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=250291
[2] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.
Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.
[3] New Indian Express, NIA grills 16 youth over suspected terror links in Kovai, By Express News Service, Published: 10th October 2016 04:10 AM; Last Updated: 10th October 2016 04:10 AM
[4] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.
[5] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf
[6] The Hindu, NIA team searches for evidence against Subahani at Kadayanallur, Tirunelveli, October 8, 2016, Updated: October 8, 2016 07:31 IST
[7] http://www.thehindu.com/news/national/tamil-nadu/nia-team-searches-for-evidence-against-subahani-at-kadayanallur/article9199882.ece
பிரிவுகள்: அரேபியா, அல் - உம்மா, இந்திய விரோதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உக்கடம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, Uncategorized
Tags: எர்ணாகுளம், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐசில், ஐசிஸ், கடையநல்லூர், கணினி, குண்டு வெடிப்பு, கொட்டிவாக்கம், கோயம்புத்தூர், கோவை, சென்னை, திருநெல்வேலி
Comments: Be the first to comment
திசெம்பர் 7, 2013
டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

சென்டிரல் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறியதாவது[1]: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்’ கதவு(வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே போலீசார் 250 பேரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 6ம் நாள் நினைவு தினமா, எதிர்ப்பு தினமா அல்லது தீவிரவாதிகளைத் தூண்டிவிடும் தினமா?: உதாரணத்திற்காக, சென்ட்ரல் பற்றிய செய்தி கொடுக்கப்பட்டது, ஆனால், இதே நிலைதான் மற்ற ரெயில்வே மற்றும் பேரூந்து நிலையங்களில். டிசம்பர் 6ம் நாள் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, ஆனால், மாற்ற நாட்களில் சாதாரணமாக இருந்து விடுகிறார்கள். சில நேரங்களில் அவ்வாறான நாட்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து, அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். ஆகவே, தீவிரவாதிகள் அல்லது டிசம்பர் 6ம் தேதியில் பழி வாங்க வேண்டும் என்று கங்கணல் கட்டிக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இந்த உண்மையினை உணரவேண்டும். ஏனெனில், இவர்களது பிரச்சாரம், அத்தகைய ஜிஹாதி மற்றும் தீவிரவாத முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதாகும் என்பது தெள்ளத்தெரிந்த விசயமே, பிறகு ஏன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்?

06-12-2013 மிரட்டல், பீதி, ஆர்பாட்டங்கள்: திண்டுக்கல்லில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில்பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்[2]. சென்னையில் கைது! பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்[3], பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்புக்கு எந்த அமைப்பும் வேண்டுகோள் வைக்கவில்லையெனினும், சில ஆண்டுகளுக்கு முன் சில சமுதாய அமைப்புகளால் வைக்கப்பட்ட வேண்டுகோள் வழமையாக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்நாளில் கடைகள் அடைக்கப்படுகிறது[4], இப்படி செய்திகள் தொடர்கின்றன.

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013
திண்டுகல்-மதுரையில்போலீஸ்பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்கள், மசூதிகள் உள்ள பகுதியில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ரெயில் தண்டவாள பகுதியிலும், பார்சல் அலுவலகங்கள் உள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் எல்லைப் பகுதியில் நுழையும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பஸ்நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013
பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக ரகசிய தகவல்: திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல்–தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனி அருகில் உள்ள பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது[5]. அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்[6]. பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக நிறுவனர் முபாரக் (வயது 34), ஜாபர் அலி (35), கணவா சையது (29), யாசிக் (24), ஷேக்பரீத் (24), அசனத்புரத்தைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா (28) என தெரியவந்தது[7].

அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா முதலியோர் சிறையில் அடைப்பு: அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசின் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தோடும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்பட சதித்திட்டம் தீட்டியதாக திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[8]. கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டு, 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேதகிரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆணிகளை எறிந்து பொதுமக்களை கொல்லசதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர் கைது[9]: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்[10].
மதுரையில் பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழியாக சம்பவம் நடந்தது போல் திட்டமிட்டவர்கள் மதுரையிலும் கைது: மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட “பைப்’களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் “ரிங்’ ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.
டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேதபிரகாஷ்
© 07-12-2013
[5] தினமணி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக 6 பேர் கைது, By திண்டுக்கல், First Published : 07 December 2013 12:17 AM IST
[6] தினத்தந்தி, பாபர்மசூதிஇடிப்புதினத்தில்பொதுஅமைதியைகுலைக்கசதித்திட்டம்தீட்டிய 6 பேர்கைதுதிண்டுக்கல்லில்பரபரப்பு, பதிவு செய்த நாள் : Dec 06 | 08:51 pm
[9] தினமலர், ஆணிகளைஎறிந்துபொதுமக்களைகொல்லசதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர்கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013,23:01 IST
பிரிவுகள்: 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ், இடிப்பு, இந்திய விரோதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உடைப்பு, ஔரங்கசீப், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காயல்பட்டினம், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரோதம், சங்கப் பரிவார், சங்கம், சட்டமீறல், சட்டம், சிதம்பரம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, த.மு.மு.க, மதுரை
Tags: இடிப்பு, காயல்பட்டினம், சிதம்பரம், சோதனை, டிசம்பர், திண்டுகல், பாபர், மசூதி, மதுரை
Comments: 5 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 20, 2013
பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

ஏப்ரல் 17, 2013 அன்று பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர்; 23 வாகனங்கள் நாசமடைந்தன; 56 கட்டிடங்கள் சேதமடைந்தன. அதில் கீழ்கண்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது[1].

எண் |
பெயர் |
பெயர் / வயது |
இடம் / ஊர் |
1 |
ஜே. பாஷிர் என்ற பஷீர் |
J Baasir alias Basheer, 30; |
(from Tirunelveli); |
2 |
எம். கிச்சன் புஹாரி என்கின்ற புகாரி |
M Kichan Buhari alias Bugari, 38; |
(from Tirunelveli); |
3 |
எம். முஹம்மது சலீம் |
M Mohammed Salin, 30; |
(from Tirunelveli); |
4 |
பன்னா இஸ்மாயில் என்ற முஹம்மது இஸ்மாயில் |
Panna Ismail alias Mohammed Ismail, 30; |
(from Tirunelveli); |
5 |
பறவை பாஷா |
Paravai Basha, 32, |
(from Tirunelveli); |
6 |
ஆலி கான் குட்டி |
Ali Khan Kutti |
(from Tirunelveli); |
7 |
செயிட் அஸ்கர் அலி என்ற செயிட் |
Sait Asgar Ali alias Sait, 29; |
(from Coimbatore) |
8 |
எஸ். ரஹமத்துல்லா |
S Rahmatulla, 32; |
(from Coimbatore) |
9 |
வலயில் ஹக்கீம் என்ற ஹக்கீம் |
Valayil Hakeem alias Hakeem, 32; |
(from Coimbatore) |
10 |
சையது சுலைமான் என்ற தென்காசி சுலைமான் |
Syed Suleiman alias Tenkasi Suleiman, 24; |
(from Coimbatore) |
11 |
மன் பாய் என்ற சுலைமான் என்ற ஓலங்கோ |
Man Bhai alias Suleiman alias Olango, 31; |
(from Coimbatore) |
12 |
ஜுல்பிகர் அலி |
Zulfikar Ali, 24 |
(from Coimbatore) |
13 |
பிலால் மாலிக் |
Bilal Malik alias Bilal, 28 |
(from Madurai) |
14 |
பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் |
Fakruddin alias Police Fakruddin, 30 |
(from Madurai). |

7,445 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில், 200 ஆவணங்கள் மற்றும் 260 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சிலர் அல்-உம்மா போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வியக்கம் 1998ம் ஆண்டில் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடத்தியது. அதுவும் அத்வானியைக் குறிவைத்ததாகும். அக்டோபர் 2, 2013 அன்று ஆந்திரபிரதேசத்திலிருந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பக்ருத்தீன் பிடிபட்டனர். பறவை பாஷா மற்றும் அலி கான் குட்டி இருவரும் இதுவரை பிடிபடவில்லை[2].

இந்தியகுற்றவியல்சட்டம், வெடிப்பொருட்கள்சட்டம், 1908, பொதுஇடங்களுக்குசேதம்ஏற்படுத்துதல்தடுப்புசட்டம் 1984 மற்றும்சட்டவிரோதமானகூடுதல்தடுப்புசட்டம் 1967 இவற்றின் கீழ் வழக்கு போட்டுள்ளது போதுமா?: 20-10-2013 சனிக்கிழமை நகர முதன்மை கூடுதல் மாஜிஸ்ட்ரேட் முன்னர், ஓம்காரைய்யா, ஜே.சி.நகர் ACP மற்றும் புலன் விசாரிக்கும் அதிகாரி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. வையாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட இந்த வழக்கில், இந்திய குற்றவியல் சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், 1908, பொது இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் தடுப்பு சட்டம் 1984 மற்றும் சட்டவிரோதமான கூடுதல் தடுப்பு சட்டம் 1967 [IPC sections 120 (B), 121, 121 (A), 123, 332, 307, 435 and 201 and under Section 3, 4, 5 and 6 of The Explosive Substances Act, 1908 and under Section 4 of Prevention of Damage to Public Property Act 1984 and under Section 10, 13, 15, 16, 17, 18, 19 and 20 of Unlawful Activities (Prevention) Act, 1967] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது[3]. குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி வழக்கு போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், ஏற்கெனவே, ஆதாரங்கள் இல்லை, என்று இத்தகைய ஜிஹாதிகள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் அல்லது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று, பிறகு வெளியே வந்தவுடன், மறுபடியும் அதே குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு?

கைது செய்யப் பட்ட நிலையிலேயே “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்ட முறை: இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப் பட்டபோதே, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் என்று பலவித முறைகளை, அவர்களின் மனைவிகள் மூலம் செய்விக்கப் பட்டன. ஏதோ தங்கள் கணவன்மார்களை அநியாயமாக கைது செய்யப் பட்டுள்ளனர், அவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றெல்லாம் வாதிடப் பட்டன. “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் தாராளமாக இவர்களுக்கு விளம்பரத்துடன் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டது. ஆனால், படுகாயம் அடைந்தவர்கள் பற்றி கவலைப் படவில்லை. ஷகீல் அஹமது, திவிஜய் சிங் போன்ற காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்தது, இதனால் பிஜேபிக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் வாய்கூசாமல், மனசாட்சி இல்லாமல் பேசினர், எழுதினர். பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவும் இதைப் பற்றிக் கண்டிக்கவில்லை. மாறாக, ஊழலைப் பற்றி பேசி, வெற்றியும் பெற்றனர். அதர்கு உள்ளூர் அறிவு-ஜீவிகள் தீவிரவாதத்தையும் மறந்து காங்கிரஸுக்குத் துணை போயினர். மோசமாக விமர்சனம் செயத காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கவில்லை. அதாவது, சாமர்த்தியமாக குண்டுவெடிப்பை ஆதரித்தனர் என்றேயாகியது. அதனால் தான், குண்டு வைத்தவர்கள், இத்தகைய முரண்பாட்டை, சித்தாந்த குழப்பங்களை, இந்துக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களின் நிலையை மறப்பது, மறைப்பது, மறுப்பது: சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கக் கூடாது, செய்யப் படக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், குண்டுவெடிப்பில் அநியாயமாகக் கொல்லப் பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள், அவர்களின் மனைவி-மக்கள் முதலோரின் கதி என்ன என்பதை, இவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அப்படி மனிதநேயம், ஈரம், உணர்வு, மனசாட்சி முதலியவை உள்ளன, இருந்திருந்தன என்றால், அவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு, இத்தகைய குரூரக் குற்றங்களை செய்யாதே, குண்டுகளை வைக்காதே, அப்பாவி மக்களைக் கொல்லாதே என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும். அப்பொழுதெ இவையெல்லாமே தவிர்க்கப் பாட்டிருக்கக் கூடும். தொடர்ந்து, இவ்வாறு ஜிஹாத் என்ற மதவெறியோடு இந்துக்களைக் கொல்வோம் என்று வெளிப்படையாக குரூரக்குற்றங்கள், கொலைகள் முதலியவற்றை செய்து கொண்டிருந்தால், மக்களுக்கு அவர்கள் எதை உணர்த்த செய்கிறார்கள் என்பதை அவர்கள் தாம் புரிந்து கொள்ள வேண்டும்.
© வேதபிரகாஷ்
20-10-2013
பிரிவுகள்: அடிப்படைவாதம், அம்மோனியம், அல் - உம்மா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத்தனம், இமாம், இமாம் அலி, இஸ்லாம், ஏர்வாடி காசிம், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், கிச்சன், கிச்சன் புகாரி, கிச்சன் புஹாரி, கிச்சான், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், கேரள ஜிஹாதி, கொலை, சிமி, சிம், சிம் கார்ட், சுலைமான், சுல்பிகர் அலி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தமிழ் ஜிஹாதி, தலிபான், பக்ருதீன், பங்களூரு வெடிகுண்டு, பன்னா, பன்னா இஸ்மாயில், பறவை பாட்சா, பஷீர், பாஷா, பாஷிர், பெங்களூரு, பைப், பைப் குண்டு, பைப் வெடிகுண்டு, முகமது சலீம், முஸ்லீம், முஹமது சலீம், முஹம்மது சலீம், மேலப்பாளையம், மொஹமது சலீம், மொஹம்மது சலீம்
Tags: அகீம், அஸ்கர் அலி, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கிச்சன் புகாரி, கிச்சன் புஹாரி, குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், செயிட், சேட், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பக்ருத்தீன், பன்னா இஸ்மாயில், பறவை பாட்சா, பறவை பாஷா, பாட்சா, பாஷா, பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், போலீஸ் பக்ருத்தீன், முகமது சலீம், முஸ்லீம்கள், முஹமது சலீம், முஹம்மது சலீம், மொஹமது சலீம், ரகமத்துல்லா, ரஹமத்துல்லா, ஹக்கீம்
Comments: Be the first to comment
ஒக்ரோபர் 5, 2013
தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!
திருப்பதி அருகே முஜாஹித்தீன் தீவிரவாதிகள்: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீசார் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து 10 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிஜேபி பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பிரம்மோஸ்தவம் நடக்கும் வேலையில் புத்தூரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம்: இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் (சித்தூர் மாவட்டம்) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் மேதரா வீதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். கதவை தட்டியபோது இரண்டு போலீசாரை அரிவாளால் வெட்டினர், இதில் இருவரும் படுகாயமுற்றனர். இதனையடுத்து போலீசாருக்கும், பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
தில்லியிலிருந்து எஸ்-ஐ.டி படை வந்தது: இன்று காலையில் தில்லியிலிருந்து எஸ்.ஐ.டி படை வந்தது. மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தின[2]. இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக போலீஸ்காரர் 2 பேர் காயமுற்றனர். முன்னதாக போலீசார் இறந்ததாக கூறப்பட்டது[3]. போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து போனில் பேசிவந்தது தெரிந்தது. ஜிஹாதிகள் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒடரு வீட்டில் பதுங்கியுள்ளனர். உள்ளே ஒருவேளை குண்டுக்லள் வைத்திருக்கக் கூடும் என்பதால், போலீசாரார் அதிரடியாக உள்ளே நுழைய பயப்படுகின்றன்சர் என்று தெலுங்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.
தமிழகத்தின் “அல்முஜாகிதீன் படை”[4]: மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது அல்-உம்மா, அல்-முஜீஹித்தீனாக மாறியது போலும். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை” என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது ஜிஹாத் தமிழகத்தில் “தியாகத்தோடு” செயல்படுவது மெய்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இவ்விதமாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் போலிருக்கிறது. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
பீடிசுற்றும் தொழிலாளிகள் போர்வையில் ஜிஹாதி குடும்பங்கள்: போலீஸ் விசாரணை அல்-உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் பீடிசுற்றும் தொழிலாளிகள் என்ற போர்வையில் அவ்வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளான்[5]. பீடி உற்பத்தி செய்யும் முஸ்லிம் தொழிற்சாலை அதிபர்கள் இந்துவிரோத பிரசுரங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை முந்த்யைய ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த இடம் “முஸ்லிம் காலனி” என்றே அழைக்கப்படுகிறது. குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதாவது “தியாகம்” செய்யவேண்டிய நிலை வரும் போது, “குடும்பங்கள்” சென்று விடும் போலிருக்கிறது. பிலால்மாலிக்கின் குடும்பத்துனருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். ஜிஹாதிகளுக்கு இப்படித்தான் “லாஜிஸ்டிக்ஸ்” கிடைக்கிறது போலும்!
தமிழக ஜிஹாதிகள்-போலீசார் துப்பாக்கி சண்டை: தமிழக-ஆந்திர எல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் பக்ருதீன் பிடிபட்டான். இதற்குள் மற்ற தீவிரவாதிகள் சித்தூரில், ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக போலீசார், அவ்வீட்டை வளைத்தனர். விசயம் தெரிந்த தமிழக ஜிஹாதிகள், போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளால் சுட்டதாகவும் தெரிகிறது[6]. ஒரு போலீஸ்காரரை – சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமண மூர்த்தி – தமிழக ஜிஹாதி குத்தித் தப்பிச் சென்றுவிட்டதாக ஆங்கில செனல்களில் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. போலீஸ் உடனே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, இன்னொரு போலீசார் காயமடைந்துள்ளார். சுமார் 30 போலீசார், இந்த வேட்டையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமிழக-ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்.டி.டிவி இதனை என்கவுன்டர் என்று வர்ணித்துள்ளது[7]. அதாவது, சட்டரீதில் ஜிஹாதிகளுக்கு உதவ ஆலோசனையை சூசகமாகத் தெரிவிக்கிறது. உடனே, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிடுவார் என்பது தெரிய வரும்.
பிலால்மாலிக்குடன் போலீசார் பேச்சு-வார்த்தை[8]: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையா, பேரமா, உடன் படிக்கையா என்பது பிறகு தான் தெரிய வரும். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. பிறகு,வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்[9]. இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப் படுவர். உபசரிக்கப் படுவர். அதற்குள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்படும்!
® வேதபிரகாஷ்
05-10-2013
[7] Firing between suspected militants and police in Andhra Pradesh; one cop killed: report
Hyderabad: A policeman has been killed and another injured in an on-going encounter with suspected militants in the Chittoor district of Andhra Pradesh, according to reports. A team of 30 policemen have reportedly surrounded the men, who are believed to be heavily armed. Police sources say the men are suspected to be behind the killing of Bharatiya Janata Party’s Tamil Nadu unit general secretary V Ramesh, who was attacked fatally with sharp-edged weapons near his house in July.
http://www.ndtv.com/article/south/firing-between-suspected-militants-and-police-in-andhra-pradesh-one-cop-killed-report-428105
பிரிவுகள்: ஃபிதாயீன், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அமோனியம், அல் - உம்மா, அல்-முஜாஹித்தீன், ஆந்திரா, ஆர்.எஸ்.எஸ், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்துக்கள், உருவ வழிபாடு, கலவரம், கவுனி, காஃபிர், கிச்சான், குடும்பம், குடை, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, சித்தூர், ஜிஹாதி, திருப்பதி, பக்ருதீன், பன்னா, பயம், பிலால், பீடி, பீதி, புகையிலை, போலீஸ்
Tags: அச்சம், அல் - உம்மா, ஆந்திரா, ஆல்ப்-முஜாஹித்தீன், குடும்பம், கைது, கொலை, சித்தூர், ஜிஹாதி, தியாகம், திருப்பதி, துப்பாக்கி, பக்ருதீன், பன்னா, பயம், பிலால், பீதி, பேச்சுவார்த்தை, முஸ்லிம், லீக்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 5, 2013
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி “போலீஸ்‘ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது!

Fakruddin alias Police Fakruddin – The Hindu photo
போலீசாரால் மும்முரமாகத் தேடப்பட்டவர்களில் ஒருவன் பிடிபட்டான்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான “போலீஸ்’ பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை (04-10-2013) பிடிபட்டார்[1]. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகவும், பெங்களுரில் பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு வைத்த வழக்கு, மதுரையில் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாகவும் –
- மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35),
- பிலால் மாலிக் (25),
- திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38),
- நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (45)
ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்[2]. மேலும் தேடப்படும் 4 பேரையும் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலகம் அறிவித்தது. போலீஸார் இவ்விசயத்தில் அதிக அளவில் தேடுதல் முயற்சிகள், யுக்திகளைக் கையாண்டுள்ளது. ஒரு லட்சம் போஸ்டர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடித்து “பிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு” என்று அறிவித்தது. தொலைக்காட்சிகளிலும் அறிவிக்கப்பட்டது[3].

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,
ஏற்கெனவே கைதானவர்கள்: பலவித வன்முறை, தீவிரவாத குரூரக் காரியங்களுக்காகவும், குற்றங்களுக்காகவும் ஏற்கெனவே கைதானவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- கே. பீர் மொஹித்தீன் [K Peer Mohideen (39)],
- ஜே. பஷீர் அஹமது [ J Basheer Ahmed (30)]
- சையது மொஹம்மது புஹாரி என்கின்ற கிச்சான் புஹாரி [Syed Mohammed Buhari alias Kitchan Buhari (38) ]
முதலியோர் ஏற்கெனவே பெங்களூரு பொலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[4]. அத்வானி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் நாகூர் அனீபா என்கின்ற மொஹம்மது அனீபாவை ஜூலை 9, 2013 அன்று திண்டுகல்லில், வத்தலகுண்டு என்ற இடத்தில் மறைந்திருந்தபோது, போலீஸார் கைது செய்துள்ளனர்[5].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,
தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் துப்பாக்கி முனையில் பிடிப்பட்டார்: இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொள்வதால், அவர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடக்கக் கூடும் என்றதால், முக்கியமான பகுதிகளில் மாநில உளவுப்பிரிவு போலீஸார், மதவாத தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆகியோர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சூளையில் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நிற்பதை பார்த்தனராம். உடனே அந்த நபரை அப்பிரிவின் இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அந்த நபர், இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு ஓட முயன்றாராம். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார். அவனிடத்தில் மூன்று மொபைல் போன்கள், சில சிம் கார்டுகள், தமிழ்நாட்டின் வரைப்படங்கள், ஆவணங்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டன[6]. அவரிடம் விசாரணை செய்ததில், அவர் போலீஸாரால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேடப்படும் போலீஸ் பக்ருதீன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பக்ருதீனின் கூட்டாளிகள் யாரேனும் சென்னையில் இருக்கின்றனரா என போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாதியின் புராணம் – போலீஸ் பக்ருதீன் வளர்ந்தது எப்படி?[7]: மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். தமிழகத்தில் எப்படி அவனவன் தனக்காகப் பட்டத்தை வைத்துக் கொள்கிறானோ, அதுபோல, தீவிரவாதிகளும் வைத்துக் கொள்வதில் ஒன்றும் வியப்பில்லைதான். தாயார் சையது மீரா. சகோதரர்கள் 2 பேர். முகம்மது மைதீன் பீடி,சிகரெட் வியாபாரம் செய்துவருகிறார். மற்றொரு சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன். நெல்பேட்டையை சேர்ந்த பெண்ணை பக்ருதீன் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலேயே மனைவியைவிட்டு பிரிந்துவிட்டான். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான்.
7.3.2002ல் துப்பாக்கியால் சுட்டு இமாம் அலியை தப்பவைத்ததாக திருமங்கலம் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2010ல் விளக்குத்தூணில் கொலை முயற்சி மற்றும் உதவி கமிஷனர் வெள்ளத்துரையை மிரட்டியது உள்ளிட்ட 2 வழக்குகள், 2011ல் பாஜ மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்றதாக திருமங்கலம் தாலுகா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 30 வழக்குகளுக் கும் மேல் பக்ருதீன் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு தயாரிப்பதில் கில்லாடி: இமாம் அலி தப்பிய வழக்கில் 37 பேருக்கு தண்டனை வழங்கப்பட் டது. 7 பேருக்கு 7 ஆண்டும், 32 பேருக்கு 5 ஆண்டுகளும் தண்டனை விதிக் கப்பட்டது. இவர்களில் இமாம் அலி, சீனியப்பா, மாங்காய் பஷீ, முகம்மது இப்ராகீம் ஆகியோர் பெங்களூரில் 2002 செப்.29ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 ஆண்டு தண்டனை பெற்ற போலீஸ் பக்ருதீன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். இதன் பேரில் 2010ல் ஜாமீனில் வெளியே வந்தவன் பின்னர் போலீசில் சிக்கவில்லை, அதாவது தப்பிச்சென்றான் என்று சொல்லாமல் ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பக்ருதீன் தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய ரிமோட் குண்டை தயாரித்து 2011 அக்.28ல் பாஜ மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் வைத்தான். அதிர்ஷ்டவசமாக இதை முன்கூட்டியே போலீ சார் பார்த்து அகற்றியதால் அத்வானி தப்பினார். அப்போது கைப்பற்றப்பட்ட குண்டு, தயாரித்த தொழில்நுட்பத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னரே போலீஸ் பக்ருதீன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை போலீ சார் உணர்ந்து தீவிரமாக தேட துவங்கினர். பாவம், இத்தனை கொலைகள் செய்தும் அவனது, குரூர மனப்பாங்கை போலீசாரால் கண்டுப் பிடிக்க முடிவில்லை என்றல், அதனை என்றென்பது?
குரூரக் கொலைகள் செய்யும் மது அருந்தாத ஒழுக்கமான ஜிஹாதி: இந்த வழக்கில் 8 பேர் சிக்கியும் பக்ருதீன் சிக்கவில்லை. அடுத்தடுத்து கொலைகள்: ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் பக்ருதீன் ஆர்வம் கொண்டவன். அதாவது சுற்றிக் கொண்டே தீவிரவாத கொலைகளை செய்வான் போலும்! அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஏதோ ஒழுக்கமான ஜிஹாதி போன்ற சித்தரிப்பு, திகரன் செய்துள்ளது. 2013 ஏப்.3ல் பெங்களூரில் பாஜ அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித் தது, ஜூலை முதல் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், 19ம் தேதி சேலத்தில் தமிழக பாஜ பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் பக்ருதீன் மீது இந்த கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கிச்சான் புகாரியுடன் சேர்ந்து பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டான் பக்ருதீன் என தகவல் வெளியானது. இதற்கிடையே மதுரை மேலமாசி வீதியில் பால்கடைக்காரர் சுரேஷ் கொலையிலும் போலீஸ் பக்ருதீன் தலைமையிலான கும்பல் செய்தது தெரிந்தது. அப்போது போலீசார் விசாரித்தபோதுதான் அவன் மதுரைக்கு அடிக்கடி வந்து சென்றதும், நண்பர்கள் பலரது வீடுகளில் தங்கியிருந்ததும் தெரிந்தது. பக்ருதீனுடன் கூட்டாளிகள் பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளனர். பிலால் மாலிக் இந்து மக்கள் கட்சி தலைவர் காளிதாஸ் 2005 ஜூன் 22ல் மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவன். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், மைனர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்[8]. பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மோதலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது.
நெல்லை சைவத்தின் இருப்பிடமா, ஜிஹாதிகளிம் குகையா என்ற நிலையில் நெல்லை கும்பலுடன் நெருக்கம்: முகம்மது அனிபா நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவன். தென்காசி நகர் இந்து முன்னணி தலைவர் குமாரபாண்டியன் 2006ல் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நெல்லை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் மைதீன் ஷேக்கான் கொல்லப்பட்டார். குமார பாண்டியன் கொலை வழக்கில் முகம்மது அனிபா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த 2 கொலை வழக்கு குற்றவாளிகளும் 2007 ஆகஸ்ட்டில் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் முகம்மது அனிபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கவும், விசாரணை, ஜாமீன் பெற்றபோதும் மதுரையில் பதுங்கியிருக்க பக்ருதீன் உதவினான். இந்த பழக்கம் நெல்லையை சேர்ந்த பலருடன் நெருக்கமாக பழக பக்ருதீனுக்கு முகம்மது அனிபா மூலம் வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் கிச்சான் புகாரியுடன் பக்ருதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
தமிழக ஜிஹாதிகளுக்கு உதவுவது யார்?: ஊடகங்கள் இப்படி ஜிஹாதிகளின் புராணம் பாடினாலும், தமிழகத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல், அவர்கள் இவ்வாறு தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து கொண்டிருக்க முடியாது. அதிகார, அரசியல் மற்றும் மதவாத சக்திகளின் உதவியில்லாமல் நிச்சயமாக, இத்தகைய கூட்டுக் குற்றங்கள், சதி திட்டங்கள், திட்டமிட்ட கொலைகள் முதலியன நடத்தப்பட முடியாது[9]. எல்லா காரியங்களுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணம் இல்லாமல், தீவிரவாதச் செயல்களைச் செய்யமுடியாது. அதற்கும் மேலாக, இன்று “லாஜிஸ்டிக்ஸ்” என்று பேசப்படுகின்ற உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல், அத்தகைய காரியங்களை செய்யவே முடியாது. அதற்கு லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆகவே, யார், எப்படி அத்தகைய பெரிய பண பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்தாலே, இந்த ஜிஹாதிகளை, முஜாஹித்தின்களை, மதவெறியர்களைக் கண்டு பிடித்து விடலாம்.
எவ்விதத்திலும் உதவும் சித்தாந்திகள் தங்களது போக்கை மாற்ரிக் கொள்ள வேண்டும்: இந்திய செக்யூலரிஸவாதிகள் சாவிலும் அந்த பாரபட்சத்தைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது திராவிட, நாத்திக, கம்யூனிஸ சித்தாந்திவாதிகளின் செயல்முறைகளுடன் ஒத்துப் போவதைப் பார்க்கமுடிகிறது[10]. மேலப்பாளையத்தில், போலீசார் சோதனை செய்யச் சென்றபோது, முஸ்லீம்கள் அதனால் தான், தாங்கள் ஏதோ சட்டங்களுக்கு உட்படாத மனிதர்கள் போலக் காட்டிக் கொண்டார்கள், போலீசாரை மிரட்டினார்கள்[11]. சென்னையில் ஆர்பாட்டம், ஊர்வலம் என்று கூட்டங்களைக் கூட்டினார்கள்[12]. இதற்கெல்லாம், லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து உதவுவது யார் என்று ஆராய்ந்தாலே உண்மையை அறிந்து கொள்ளலாம். பெங்களூரு குண்டுவெடிப்பு இவர்களின் கூட்டுசதிமுறைகளை அம்பலமாக்கியுள்ளது[13]. நிகழ்சிகளை கோர்வையாக படிக்கும் சாதாரண மனிதனுக்குக் கூட, தமிழக ஜிஹாதிகளின் மனப்பாங்குப் புரிந்து விடும்[14], இருப்பினும் தமிழக அறிவுஜீவிகள் அதனை கண்டுகொள்ள மறுக்கிறது.
® வேதபிரகாஷ்
05-10-2013
[2] Mr. Nicholson said three persons – Fakruddin alias ‘Police’ Fakruddin, Bilal Malik and Hanifa – were the main conspirators in the plan to blow up the convoy of Mr. Advani. They were present at the scene of crime and escaped on seeing the police.
[3] This is perhaps for the first time in the crime history of Tamil Nadu that as many as one lakh posters have been printed by police announcing a cash prize of Rs five lakh (totalling Rs 20 lakh) on heads of each of the four suspects — ‘Police’ Fakruddin (35), Bilal Malik (25), Panna Ismail (38), and Abu Backer Siddique (45). The posters in Tamil and English are being displayed at vantage points across Tamil Nadu to get inputs from the public on the accused.
13.060416
80.249634
பிரிவுகள்: அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அல் - உம்மா, ஆந்திரா, ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இமாம் அலி, இஸ்லாம், உக்கடம், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஏர்வாடி, ஏர்வாடி காசிம், ஓட்டுவங்கி, கவுனி, காபிர், குடை, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கொடை, சங்கம், சித்தூர், சிமி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, திருப்பதி, முஸ்லிம்
Tags: அத்வானி, அல் - உம்மா, ஆந்திரா, சித்தூர், ஜிஹாதி, திருநெல்வேலி, பக்ருதீன், பெங்களூரு, பைப் குண்டு, போலீஸ்
Comments: Be the first to comment
மே 12, 2013
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் – ஜனநாயகத்திற்குத் திரும்புகிறாதா, இஸ்லாமியத்துவம் மிஞ்சுகிறதா?
கடந்த நாட்களில் குண்டுவெடிப்பு, வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது[1]. தலிபான்கள் தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதனாமது, பெண்கள் ஓட்டுப் போடக்கூடாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள், பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், பெண்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்[2]. பாகிஸ்தானின் 14வது தேசிய மற்றும் மாகாண தேர்தல் நடந்துள்ளது. 372 கீழ்சபை மற்றும் 728 தேசிய அசெம்பிளி என்று சேர்ந்து தேர்தல் நடக்கின்றது. இன்னும் மக்கள் தெளிவாக வாக்களிக்கவில்லை என்கிறார்கள். ஏனெனில் யாருக்கும் அதிக இடங்கள் கிடைக்கவில்லை[3].
நவாஸ்செரிப்கட்சிமுன்னணியில்இருக்கின்றது: பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் செரிப் கட்சி முன்னணியில் இருந்து, ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது[4]. இப்பொழுதுள்ள நிலவரங்களின் படி, பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள தனிக்கட்சி என்றுள்ளது[5]. இம்ரான் கான் பரிதாப அலையில் ஒருவேளை முன்னணியில் வருவார் என்று நினைத்தார்கள், ஆனால், நடக்கவில்லை[6].
கட்சிகளின் நிலவரம்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) [Pakistan Muslim League-Nawaz (PML-N)], பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் [Pakistan Tehreek-i-Insaf (PTI)] மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan Peoples party (PPP)] என்பவைதான் பிரதான கட்சிகளாக இருக்கின்றன.
கட்சியின் பெயர்
|
தலைவர் / பிரதம மந்திரி வேட்பாளர்
|
ஆங்கிலத்தில்
|
கிடைத்துள்ள இடங்கள்
|
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) |
நவாஸ் செரிப்பின் கட்சி |
Pakistan Muslim League-Nawaz (PML-N)[7] |
120
|
தெஹ்ரீக்-இ-இன்சாப் |
இம்ரான் கான் |
Pakistan Tehreek-i-Insaf (PTI)[8] |
30
|
பாகிஸ்தான் மக்கள் கட்சி |
யூசுப் ராஜா ஜிலானி,ஆளும் கட்சி |
Pakistan Peoples party (PPP)[9] |
35
|
நவாஸ் செரிப் மறுபடியும் பிரதமர் ஆகிறார்: 13 ஆண்டுகள் கழித்து, நவாஸ் செரிப், முன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆகிறார்[10]. 1990 மற்றும் 1997ல் பிரதமராக இருந்தார், ஆனால், இருமுறைகளிலும், குலாம் இஸாக் கான் மற்றும் பெர்வீஸ் முசாரப் என்கின்ற ஜனாதிபதிகளினால் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டார்[11].
இம்ரான் கானின் கிரிக்கெட் கவர்ச்சி வேலை செய்யவில்லை: இம்ரான் கானின் கிரிக்கெட் பேச்சு, மற்றவர்களைப் பற்றித் தாக்கிப் பேசிய பேச்சு, பரிதாப அலை எதுவும் வேலை செய்யவில்லை என்று தெரிகிறது[12]. கூட்டங்களில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வதில், தனக்கு நிகர் தாந்தான் என்ற ரீதியில் பேசி வந்தார். இந்தியாவில் அம்பயர்கள் தனக்கு எதிராக அல்லது சாதகமாக இல்லை என்றாலும், தான் வென்றாதாகக் கூறிக் கொண்டார். எனினும் நிறைய இடங்களைப் பிடிக்கவில்லை. இதனால், எதிர்கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவோம் என்று கட்சியினர் கூறியிருக்கிறார்கள்[13].
மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைகளாகவே உள்ளன: ஓட்டு போட்டவர்களின் சதவீதம் 50 முதல் 60 வரை இருக்கிறது[14]. பொது மக்களைக் கேட்டால், அவர்களும் தண்ணீர், மின்சாரம், வேலை வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்று தான் பேசுகிறார்கள், அதாவது பொருளாதாரப் பிரச்சினைகள் தாம் முக்கியமாக இருக்கின்றன[15].

பெண்கள் வந்து ஓட்டுப் போட்டது

© வேதபிரகாஷ்
12-05-2013
[7] Pakistan Muslim League (N) – Although, the party claims to be the extension of the All India Muslim League under the leadership of Mohammad Ali Jinnah that led the Muslims of sub-continent India to establish Pakistan, a separate country for the Indian Muslim but due to almost a dozen parties under the same name it is a bit difficult to confirm the claim.
[8] Pakistan Tehrik-e Insaf (PTI) – This party has gained considerable momentum over the last two years. Imran khan, once the hero of the Pakistan cricket who brought the 1992 champion trophy of the Cricket World Cup—established PTI in February 1996.
[9] Pakistan People’s Party- Since its inception in 1967, PPP in Pakistan’s recent history remained the only political party, having grass root level representation having liberal democratic norms. The charisma of its founding leader Zulfiqar Ali Bhutto based its manifesto on secularism and social equality, and ruled over the hearts and minds of the millions of Pakistanis for decades.
[11] Nawaz Sharif has remained prime minister two times in 1990 and 1997 but both of his government wre prematurely dismissed, once by then president Ghulam Ishaq Khan and then his second government was ousted in 1999 in a military coup by former military ruler Gen (r) Pervez Musharraf.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அரசாங்கத்தை மிரட்டல், இந்திய விரோதி ஜிலானி, இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி, இஸ்லாம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காயிதே மில்லத், கிரிக்கெட் விளையாட்டு, குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், கூட்டம், ஜமாஅத், ஜமாஅத்தார், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமிலாபாத், நவாஸ், பலுச்சிஸ்தானம், பலுச்சிஸ்தான், பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, லஷ்கர்-இ-தொய்பா, லாகூர், லாஹூர், லீனா
Tags: ஓட்டு, கிழக்கு பாகிஸ்தான், சிறுபான்மையினர், தேர்தல், பாகிஸ்தான், பாகிஸ்தான். தேர்தல், பெரும்பான்மையினர், முஸ்லிம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம்கள்
Comments: 1 பின்னூட்டம்
மே 11, 2013
இன்னொரு ஜமாத்-இ-இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!
மொஹம்மது கமருஸ்ஸாமன் (Muhammad Kamaruzzaman[1]) என்ற ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர், ஒன்பது குற்றங்களுக்காக, மரண தண்டனைக்குட் பட்டிருக்கிறார்[2]. நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியபோது, பாதுகாப்புப் படை மற்றும் கலவரம் ஒடுக்கும் படையினர் தயாராக இருந்தார்கள்[3]. பங்களாதேச விடுதலைப் போர் 1971ல் நடந்தது. அப்பொழுது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்து கொண்டு, ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய தீவிரவாத குழு அப்பாவி மக்கள் ஐந்து லட்சம் பேர்களைக் கொன்றுக் குவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அக்கூட்டத்தினர் பல பெண்களை கற்பழித்துக் கொன்றுள்ளனர். இந்த போர் குற்றங்களுக்காக இவருக்கு மண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது[4]. உலக நாடுகள் இதை ஆதரிக்கின்றன[5]. இவ்வாறு தண்டனை அளிக்கப்படும் போதெல்லாம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெருக்களில் வந்து கலவரங்களை ஏற்படுத்தி[6], இந்துக்களை தாக்கும் போக்கில் இருந்து வருகிறார்கள். இதனால், மக்கள், குறிப்பாக இந்துக்கள் இதன் பின்விளைவுகள் பற்றி அஞ்சுகிறார்கள்[7].
சென்ற மார்ச் மாதம், டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[8] விதிக்கப்பட்டது[9]. அதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:
- 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[10] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
- முஸ்லீம்களின் வெறியாட்டம் பங்களாதேசத்தில்இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[11].
- “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[12].
© வேதபிரகாஷ்
11-05-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இமாம், இமாம்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உலமாக்கள், காஃபிர்கள், குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பங்க பந்து, பங்காள தேசம், மொஹம்மது கமருஸ்ஸாமன், வங்காளம்
Tags: பங்க பந்து, பங்களாதேசம், பங்காபந்து, புனிதப்போர், போர் குற்றவாளி, முஸ்லிம், முஸ்லிம்கள், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் பெண்கள், முஸ்லீம்கள், மொஹம்மது கமருஸ்ஸாமன்
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்