Archive for the ‘குடியுரிமை’ category

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

ஏப்ரல் 8, 2023

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது; தமிழகத்தில் கட்டிடத் தொழில் பெருகப் பெருக “வட மாநிலத்தவர்” என்ற போர்வையில் லட்சக்கணக்கில் வேலையாட்கள் வந்து குவிகின்றனர். சென்னையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவது, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்வது என்பது பலநிலைகளில் நடந்து வருகிறது. அதில் அரசியல் அதிகமாகவே செயல் பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து, “வட மாநிலத்தவர்” போர்வையில் பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது, நிச்சயமாக எல்லாவிதங்களிலும் பிரச்சினை, சட்டமீறல் மற்றும் பெருங்குற்றமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே அடக்கி வாசிக்கிறார்கள். ஊடகங்களும் அதனை அமுக்கி விடுகின்றனர் எனலாம். பாலியல் பிரச்சினையில் காட்டும் அளவு கடந்த பாரபட்சம் இதில், இன்னும் பலமடங்குக் காட்டப் படுகிறது. ஆனால், எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குற்றங்கள் அதிகரித்து, கைதாவது அதிகமாகி, அரசாங்க ரீதியில் பதிவாகி வருகின்ற நிலையில் உண்மைகளை மறைக்க முடியாத நிலைக்கும் வந்தாகி விட்டது. ஒரு நிலையில் அவர்கள் இல்லை என்றால் வேலைகளே ஸ்தபித்து விடும் என்ற நிதர்சனத்தையும் முதலாளிகள் உணர்ந்து, அந்த உண்மையினை வெளிப்படையாகச் சொல்லவும் செய்து விட்டனர்.

தமிழகத்தவர் ஏன் வேலை செய்வதில்லை?: இருப்பினும், தமிழகத்தில் உள்ளோர் அந்த வேலைகளை ஏன் செய்வதில்லை, செய்ய விரும்பவில்லையா, அத்தகைய மனப்பாங்கு ஏன் உள்ளது போன்ற கேள்விகளும் எழுகின்றன. குறைந்து கூலிக்கு நிறைய வேலை செய்கின்றனர் என்பதை விட அவர்கள் அவ்வாறு செய்யும் பொழுது, இங்குள்ளவர் ஏன் செய்ய முடியாது என்பது தான் முக்கியமான கேள்வியாகிறது. பள்ளி-கல்லூரிகளில் ஒழுங்காக படிக்காமல் இருப்பது, சினிமா-பொழுது போக்கு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவது, பொழுது போக்குவது, பெற்றோர், பெரியவர், ஆசிரியர்கள் முதலியவர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை தான் தினம்-தினம் நிகழ்ச்சிகளாகி, அவை ஊடகங்களிலும் தாராளமாகவே, விவரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிறகு, இளைஞர்கள் அவற்றிற்கு வ்ருத்தப் பட வேண்டாமோ, தங்களை மாற்றிக் கொள்ள உடனடியாக திருந்தும் வழிகளை நாட வேண்டாமோ? ஆனால், அத்தகைய குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. போதை மருந்து, குடி, செக்ஸ், சினிமா, பொழுதுபோக்கு என்றவற்றில் தான் அவர்கள் உழன்று, தங்களை சீரழித்து, மற்றவர்களை கெடுத்து வருகின்றனர்.

டிசம்பர் 2006ல் எண்ணூரில் வங்கதேசத்தவர் கைது: சென்னை அருகே உள்ள எண்ணூர் படகில் வந்தவர் மீது சந்தேகம் எழ, அவர்களை நிறுத்தினர். அந்தப் படகுகளை வளைத்துப் பிடித்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்[1]. அப்போது அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது[2]. இவர்கள் பிடிபட்டது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும், மத்தியபுலனாய்வுப் படையினரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 பேரும் மாலத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் திசைமாறி இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாமோ என்றசந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து 16 பேரிடமும் போலீஸாரும், மத்திய புலனாய்வுப் படையினரும் துருவித் துருவி விசாரணைநடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பிப்ரவரி 2020ல் 40 வங்கதேசத்தவர் திருப்பி வைக்கப் பட்டனர்: முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்[3]. இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்[4]. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் வருகின்றனர். சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதேபோல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலரும் முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கோ பங்களாதேசத்தவர் பலமுறைகளைக் கையாள்கின்றனர் என்று தெரிகிறது. பொதுவாக, பங்களாதேசத்திலிருந்து, மேற்கு வங்காளத்தில் நுழைவது, அங்கிருந்து, அஸ்ஸாம் மூலம் பல மாநிலங்களுக்குப் பரவி செல்வது போன்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஏஜென்டுகளும் இருக்கிறார்கள்.

வங்கதேசத்தவர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்ததுதொடர் விசாரணை: இதுகுறித்து மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்துகொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும் அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் போலி பாஸ்போர்ட்டுடன் இருவர் பிடிபடுதல்: இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று புறப்பட்டது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப் போது புத்தமத துறவிகள் உடை யில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல், மின்டொ ஆகிய 2 பேர் இலங்கை செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவை போலி எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

செயல்படும் விதம், திட்டம் மற்றும் முடிவுகள்: பங்களாதேசத்திலிருந்து “வொர்க் மர்மிட்” வாங்கிக் கொண்டு மேற்கு வங்காளத்திற்குள் வேலைக்கு வருகின்றனர்.

காலை வேலைக்கு வந்து மாலையில் திரும்பி சென்று விடவேண்டும்.

ஆனால், தினம்-தினம் ஆயிரம் பேர் வந்தால் 100-200 பேர் தங்கி விடுகின்றனர், மறைந்து விடுகின்றனர்>…..

மேற்கு வங்காளத்திற்குள் தங்கியவர்கள் முதலில் ஆதார், ரேஷன், பேன் என்று கார்டுகளை வாங்கி, ஓட்டர் ஐடியையும் வாங்கி விடுகின்றனர்

மேற்கு வங்காளத்திலிருந்து பிறகு மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

இவர்களிடம் இரண்டு நாடுகள் அடையாள அட்டைகளும் இருக்கின்றன. இதனால், சகஜமாக செயல்பட்டு வருகிறனர்.

இவர்களில் உண்மையில் பிழைப்பிற்கு வேலை செய்பவர் யார், கடத்தல்கார்ர்கள் யார், தீவிரவாதிகள் யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சென்று / செயல்பட்டு வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

08-04-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் ஊடுறுவல்: 16 வங்கதேசத்தவர் கைது, By Staff Published: Saturday, December 16, 2006, 5:30 [IST]

[2] https://tamil.oneindia.com/news/2006/12/10/arrest.html?story=2

[3] தமிழ்.இந்து, சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியதாக 40 வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பிய போலீஸார்: போலி பாஸ்போர்ட்டுடன் சென்னையில் 2 பேர் சிக்கினர், செய்திப்பிரிவு, Last Updated : 12 Feb, 2020 10:10 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/539183-police.html

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

மே 31, 2015

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (2)

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

A migrant Rohingya woman from Myanmar breaks down while holding her son at Kuala Langsa in Aceh province

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள்: மே.28, 2012 அன்று மூன்று முஸ்லிம்கள் ஒரு பௌத்த பெண்மணியைக் கற்பழித்தனர். இதனால், பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். மனித உரிமைகளைக் கண்காணிக்கும் குழு, இது முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியது[1]. சுமார் 75,000 முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டனர்[2]. இவ்விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது, எதற்காக கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது நோக்கத்தக்கது. ஏற்கெனவே, தாக்கப்படும் நிலையில் இருக்கும் போது, இத்தகைய பிரச்சினைகளில், சமூக குற்றங்களில் முஸ்லிம்கள் ஏன் ஈடுபட வேண்டும்? மேலும் ரோஹிங்கிய முஜாஹித்தீனின் தாக்குதல்களும் இருப்பதால், பரிமீய பௌத்தர்கள் அவர்களை “வங்காள தீவிரவாதிகள்” என்றே குறிப்பிடுகின்றனர்.

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

A refugee tries to help his unconscious friend after being save from the sea in Kuala Langsa

மியன்மார் தனது நிலையைத் தெளிவாக கூறியுள்ளது: கப்பல்களில் காணப்படும் முஸ்ம்களைப் பற்றி பங்களாதேசம், மியன்மார், மலேசியா, தாய்லாந்து முதலிய நாடுகள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இந்த எல்லா நாட்களும் அவர்கள் தங்கள் பிரஜைகள் அல்ல என்று மட்டும் அறிவிப்பதோடு, “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்களை தங்களது நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த வியாழக்கிழமை 21-05-2015 அன்று முறைகேடான பாதுகாப்பு இல்லாத படகில் பயணம் செய்த 200-க்கும் மேற்பட்டவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அகதிகளை ஐநா குழுவினர் பார்வையிட்டு மருத்துவ உதவிகளை அளித்தனர். மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை சமூக விரோதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாக மியான்மர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரோஹிங்கிய சிறுபான்மையின மக்களை தங்களது நாட்டு மக்களாக மியான்மர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த நிலையில், ரோஹிங்கிய மக்கள் பிரச்சினையில் மியான்மர் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என்று மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிதின் லைன் தெரிவித்துள்ளார். மேலும், “அகதிகளான மக்களுக்கு ஏற்படும் பிரசின்னைகளுக்கு ஊகத்தின் அடிப்படையில் மியான்மரை காரணம் காட்டக் கூடாது. அவரகள் எங்கள் நாட்டு மக்களாக ஏற்றுக் கொள்ள கூறுவது தவறானது” என்றார்[3].

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

Bangladeshi migrants walk toward a temporary shelter al at Kuala Langsa Port in Langsa

தாய்லாந்தில் இத்தகைய முஸ்லிம்கள் வந்ததால் விசாரணை[4]: தாய்­லாந்­தின் தெற்குப் பகு­தி­யில் நூற்­றுக்­கும் அதி­க­மா­ன­ சட்டவிரோதக் குடியேறிகளிடம் அவர்­கள் ஆட்­க­டத்­தல் நட­ வ­டிக்கை­க­ளால் குடி­யே­றி­யவர்­களா என்பது குறித்து அதி­கா­ரி­கள் விசாரணை மேற்­கொண்­டுள்­ள­னர்[5]. தாய்­லாந்து எல்லைக்­குள் ஆட்­க­டத்­தல் முகாம்­கள் பற்றிய உண்மை­களைக் கண்ட­றி­யும் முயற்­சி­யில் இந்த விசாரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. மியன்­மார், பங்­ளா­தேஷ் நாட்­ட­வ­ருடையதாக இருக்­க­லாம் என நம்பப்­படும் சுமார் 33 உடல்­கள் சொங்க்லா மாவட்­டத்­தில்­ ஒரு பள்­ளத்­தாக்­கில் கடந்த வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது; ஆட்­க­டத்­தல் முகாம்­கள் மூன்று கண்டு­பி­டிக்­கப்­பட்­டன. இதனையடுத்து சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தலை முறி­ய­டிக்க அதி­கா­ரி­களுக்கு 10 நாட்கள் அவ­கா­சம் அளித்­தி­ருந்தார் தாய்லாந்து பிர­த­மர் பிரயுத் சனோச்சா. மலேசியா, மியன்­மார் நாடு­களு­டன் முத்­த­ரப்பு கூட்டம் ஒன்றை இதன் தொடர்­பில் நேற்று முன்­ தி­னம் நடத்­தினார் திரு பிரயுத். தற்போது விசா­ரிக்­கப்­படும் 199 பேரில் 74 பேர் மியன்­மாரைச் சேர்ந்த ரோஹின்யா முஸ்­லிம்­கள்; 58 பேர் பங்­ளா­தேஷைச் சேர்ந்த­வர்­கள். கடத்தப்பட்டவர்கள் தாய்லாந்­தின் சமுதாய மேம்பாடு, மனிதப் பாது­காப்பு அமைச்­சி­டம் ஒப்­படைக்­கப்­படு­வர். தாமாக விரும்பி தாய்­லாந்­துக்­குள் நுழைந்­தவர்கள் குடி­நுழை­வுப் போலி­சா­ரி­டம் ஒப்­படைக்­கப்­பட்டு சொந்த நாடு­களுக்­குத் திருப்பி அனுப்­பப்­படு­வர், என்று அரசு அறிவித்துள்ளது.

Burma Rohingya Refugee Camp

Burma Rohingya Refugee Camp

முரண்பட்ட செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாய்லாந்தில் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் 29-05-2015 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்து. இதில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தை தங்களது நாட்டு மக்களுக்கான பிரச்சினையாக எடுத்தக் கொள்ள வலியுறுத்த உள்ளதாக ஐ. நா. குறிப்பிட்டது[6]. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்தர்கள் தொடுக்கும் தாக்குதல்கள் காரணமாக, பெருமளவிலான முஸ்லிம் மக்கள் மியன்மாரை விட்டு கப்பல்களில் பிற நாடுகளுக்கு தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, கப்பல்களில் அடைக்கலம் தேடி வரும் மியன்மார் முஸ்லிம் மக்களை ஏற்க பல நாடுகள் மறுப்பதால், உண்ண உணவின்றி கப்பலிலேயே அவர்கள் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள், மியன்மார் இனத்தவர்கள் அல்ல என 1956 இல் இருந்தே ஒரு கருத்து அந்த நாட்டில் நிலவி வருகிறது, அந்த காலகட்டத்தில் இருந்து ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் அரங்கேறின. இன்று ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பலவந்தமாக மியன்மாரை விட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். படகுகளில் ஏற்றி அவர்களை வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் செயலை அங்குள்ள பௌத்த இனவாதிகள் செய்து வருகிறார்கள்[7]. அண்மையில் இவ்வாறு படகில் தத்தளித்தவர்களுக்கு மலேசியா அடைக்கலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரு குழப்பத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன[8]. மேலும் பங்களாதேசத்திலிருந்து வரும் அகதிகளும் இவர்களுள் சேர்ந்துள்ளது மர்மமாக உள்ளது.

MYANMAR_MIGRANTS, where they go

MYANMAR_MIGRANTS, where they go

நாடற்றவர்கள்”, “கள்ளக்குடியேறிகள்”, என்றெல்லாம் சொல்லப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள்: அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய அதிகாரிகள் மியன்மார் சென்றுள்ளனர். அண்மை நாட்களாக மோசமாகிவரும் கள்ளக்குடியேறிகளின் சர்ச்சை குறித்து மியன்மார் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது அந்தப் பயணத்தின் நோக்கம்[9]. இந்தோனேசியா, தாய்லந்து, மலேசியா ஆகிய மூன்றும், வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடிபெயர முயற்சி செய்வோர் வரும் படகுகளை அனுமதிக்கப்போவதாகக் கூறியிருந்தன. அதனைத் தொடர்ந்து மூன்று நாடுகளும் அவற்றின் அதிகாரிகளை மியன்மாருக்கு அனுப்பிவைத்துள்ளன. வாரக் கணக்காக அந்தப் படகுகள், கடலில் அங்குமிங்கும் தத்தளித்ததைத் தொடர்ந்து, கரைக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கடலில் அகப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கானோருக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மியன்மார் நெருக்கப்பட்டு வருகிறது[10]. இருப்பினும், மியன்மார் அம்மக்களின் அடையாளங்களை வைத்துதான் தீர்மானம் செய்யப்படும் என்றால், அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. பங்களாதேசம் ஒரு குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி வருவதால், மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும், அத்தகைய முறைப்பற்றி சந்தேகம் எழத்தான் செய்கிறது. இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியில் எந்த நாடும் அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், “நாடற்றவர்கள்” என்ற நிலையில் முஸ்லிம்களை, இதனால் தான் முஸ்லிம் நாடுகளே ஏற்க தயங்குகின்றன மற்றும் மறுக்கவும் செய்கின்றன.

Stranded Burma-Migrants-AFP

Stranded Burma-Migrants-AFP

புதைக்குழி பற்றிய விவாதங்கள்: 25-05-2015 அன்று மலேசியாவில் கண்டெடுக்கப் பட்ட புதைக்குழிகள் பல்வேறு விசயங்களை எடுத்துக் காட்டுகிறது[11]. அது இம்மாத ஆரம்பத்தில் தாய்லாந்தில் கண்டு பிடித்தது பொன்றேயுள்ளது. ஆட்கடத்தல், சமூக விரோத செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படல், கள்ளக்கடத்தல், போட்டிக் கூட்டங்களில் நடந்த சண்டை என்று பலவாறு விவாதிக்கப்படுகின்றன[12]. பங்களதேசம் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகளை ஆல்-கடத்தல் கும்பல்கள் பலவிதங்களில் சதாய்த்து வருகின்றன[13]. தாய்லாந்து மற்றும் மலேசிய எல்லையில், இவ்வாறான புதைக்குழியில் பிணங்கள் கண்டுபிடிக்கப் பட்டது, பல்வேறுபட்ட யூகங்களை உண்டாக்கியுள்ளன. பொதுவாக, தென்கிழக்காசிய நாடுகள், எத்தகைய பிரச்சினை, தீவிரவாதம், போன்ற விசயங்களை ஏற்பதாக இல்லை.  அவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தான் என்று வாதிக்கும் நேரத்தில் தான், மியன்மார் அவர்கள் தங்கள் நாட்டவர் அல்ல என்கிறது மற்றும் மலேசியா “கள்ளக் குடியேறிகள்” என்றும் குறிப்பிடுகிறது. ஐநா போன்ற குழுக்கள் பொதுவாக மனித உரிமைகள் என்றெல்லாம் பேசினாலும், முரண்பாடுகள் அதிகம் உள்ள இப்பிரச்சினையில், அனைவருமே ஜாக்கிரதையாகத் தான் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் வழக்கம் போல இதன் மூலம் ஆதாயம் தேடும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஊடக விளம்பரங்களுக்குக்காக ஆர்பாட்டங்கள் நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

30-05-2015

[1] http://www.hrw.org/sites/default/files/reports/burma0413webwcover_0.pdf

[2] http://www.cbc.ca/news/world/why-burma-s-rohingya-muslims-are-among-the-world-s-most-persecuted-people-1.3086261

[3] http://www.telesurtv.net/english/news/Myanmar-Denies-Rohingya-Muslims-Citizenship-Under-UN-Pressure-20150529-0018.html

[4] http://www.tamilmurasu.com.sg/story/50804

[5] http://www.telesurtv.net/english/news/Thousands-of-Rohingya-Migrants-Remain-Stranded-at-Sea-20150516-0011.html

[6]http://www.tamilantelevision.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99-20362.html

[7]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE-219430.html

[8] http://www.telesurtv.net/english/news/Malaysia-Says-800-Rohingya-Migrants-Muslims-Not-Welcome-20150514-0009.html

[9] http://www.tamilmurasu.com.sg/story/51689

[10] http://seithi.mediacorp.sg/mobilet/asia/21may-us-asia-migrants/1862354.html

[11] http://www.chicagotribune.com/news/nationworld/ct-boat-people-mass-grave-20150524-story.html

[12] http://www.dailyherald.com/article/20150525/news/305259989

[13] http://www.chicagotribune.com/news/nationworld/ct-migrants-rohingya-20150516-story.html#page=1