Archive for the ‘கிஸ்த்வார்’ category

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

அப்துல் பசித், பாகிஸ்தான் தூதர் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தாரா?: ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.

SYurriat meeting Abdul Basit - August .2014

1997ம் ஆண்டு முதல் நடந்த விவகாரங்களை 2017ல் கிளறுவது ஏன்?: 1997ல் அலி ஷா கிலானி சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது, அதனால் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதில் உள்ள சட்டமீறல்கள் முதலிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 29, 2010 அன்றும் இவர்மீது, தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது[7]. 2001ல் நேரிடையாக பண விநியோகம் நடந்த 173 ஹவாலா பரிவர்த்தனைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[8]. இந்த விவரங்களை முதலமைச்சர் மெஹ்பூபா முப்டியே கொடுத்துள்ளார்[9].  பாகிஸ்தான் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பணம் வந்துள்ளது. சவுதியிலிருந்து தான் அதிகமாக பணம் வந்துள்ளது. அதாவது, ஹக்கானி ஆவணங்கள் முதலியன சவுதி அரேபியா உலகம் முழுவதும், வஹாபி அடிப்படைவாதத்தை பரப்பும் மூலமாக, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளதால், அதில் எந்தவித ரகசியமும் இல்லை எனலாம்.

How hawala money is routed from Rawalpindi to Srinagar-three arrested

ஹவாலா பணம் ஹீவிரவாதிகளுக்கு செல்வது: 2011ல் அமுலாக்கப்பிரிவினர் கட்டுப்பாட்டு 1997ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றபோதே, அதிலிருந்தே விவரங்களைத் தெரிந்து கொள்லலாமே. எப்படி இருப்பினும், “டைம்ஸ்-நௌ” வெளியிட்ட விவரங்களை மற்ற ஊடகங்களையும், தங்களது சரக்கைச் சேர்ந்து, செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது. 20 வருடங்களாக “புலனாய்வு ஜார்னலிஸம்” என்று தம்பட்டம் அதித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லையில் நான்கு வியாபாரிகளை பிடித்தபோது, லஸ்கர்-இ-தொய்பா மூலம் அனுப்பப்படும் பணத்தை தீவிரவாதிகளுக்குக் கொடுக்க ஹவாலா மூலம் செயல்பட்டது தெரிய வந்தது. வங்கி மூலம் பணமாற்றத்தை செய்வதை விட, இம்மாதிரி ஹவாலா மூலம் பணபரிமாற்றம் செய்வது, அவர்களுக்கு நல்லது மற்றும் கொடுத்தவர்-வாங்கியவர்கள் விவரங்கள் தெரியாது, கண்டுபிடிக்க முடியாது என்ற கோணத்தில் தீவிரவாதிகள் கையாண்டு வருகிறார்கள். இதனால், அந்த ஹவாலாகாரர்களும் கணிசமான தொகை கமிஷனாகக் கிடைக்கிறது.

How hawala money is routed from Rawalpindi to Srinagar

நிலைமை தொடர்கிறது: 2014ம் ஆண்டில், 48 ஏஜென்டுகள், பொருள் பரிமாற்றம் மூலம் பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர். என்.ஐ.ஏ மற்றும் அமுலாக்கத்துறை, 20 வழக்குகளில் ரூ. 75,00,000/- பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்துள்ளனர். 2009 மற்றும் 2011 கள்ளப்பணம் மூலம் ரூ.1,20,00,000/- பரிவர்த்தனை நடந்துள்ளது. 2011ல் 74,000 சவுதி ரியால் பணம் வந்துள்ளது. அதாவது, இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தெரிகிறது. இவற்றில் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ள போது, அவர்கள் ஆட்டிக் கொடுக்காமல், இருந்து வருகின்றனர். ஹுரியத் கான்பரென்ஸ், ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் பிரென்ட், இஸ்லாமிய மாணவர்கள் முன்னணி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஜைஸ்—இ-மொஹம்மது, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு அப்பணம் சென்றுள்ளது[10]. 1997ல் சவுதி முதலிய அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றதற்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே போல, ஷாஜியா என்ற பெண் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றதும் தெரிய வந்தது[11]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சில இவையெல்லாம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன என்று தெரிவிக்கின்றன[12].

© வேதபிரகாஷ்

08-05-2017

Two ISI agents arrested in April 2017- Abdul Basit nexus

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] On November 29, 2010 Geelani, along with writer  Arundhati Roy, Maoist Varavara Rao and three others, was charged under “sections 124A (sedition), 153A (promoting enmity between classes), 153B (imputations, assertions prejudicial to national integration), 504 (insult intended to provoke breach of peace) and 505 (false statement, rumour circulated with intent to cause mutiny or offence against public peace… to be read with Section 13 of the Unlawful Activities Prevention Act of 1967″. The charges, which carried a maximum sentence of life imprisonment, were the result of a self-titled seminar they gave in New Delhi, Azadi-the Only Way” on October 21, at which Geelani was heckled

[8] One.India, How Pakistan funded the Kashmir unrest 173 times, Written by: Vicky Nanjappa, Updated: Sunday, May 7, 2017, 8:14 [IST]

[9] http://www.oneindia.com/india/how-pakistan-funded-the-kashmir-unrest-173-times-2428208.html

[10] Investigations reveal that between the years 2009 and 2011 an amount of Rs 12 million had been recovered. Fake and foreign currency was recovered from agents who were funding terrorists. In 2011, some agents had also brought in 74,000 Saudi Arabian Riyals into the valley. NIA sources say that the funding has gone both to terrorist groups and separatists. Money has been pumped into the Hurriyat Conference, Jammu-Kashmir Liberation Front, Islamic Students Front, Hizbul Mujahideen, Jaish-e-Mohammad and Jamiat ul-Mujahideen.

[11] An 1997 FIR against separatist Syed Ali Shah Geelani an FIR alleges that he had got funding to the tune of Rs 190 million from Saudi Arabia and also another donation of Rs 100 million from the Kashmir American Council. Investigations had revealed that all these funds were routed through a Delhi-based Hawala operative. It was also found that Yasin Malik, another separatist, had received funding of USD 1 lakh and the money was being carried by a woman called Shazia. We are looking at each case since 1995, and this will help us get a better picture of the entire racket,” an NIA officer adds. Intelligence Bureau officials tell OneIndia that the money is being used for various purposes.

[12] Outlook, Secret Intel Docs Show Pakistan’s ISI Funds Hurriyat To Create Trouble In Kashmir, Says Channel Report, May 7, 2017. 6.48 pm

http://www.outlookindia.com/website/story/secret-intel-docs-show-pakistans-isi-funds-hurriyat-to-create-trouble-in-kashmir/298784

காஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

ஒக்ரோபர் 24, 2011

காஷ்மீர்  ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

   


பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவது: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் சிமி முதலியன தடை செய்யப் பட்ட பிறகு, பல அவதாரங்களில் செயல்பட்டு வருகின்றன. அரேபிய நாடுகளில் மக்களாட்சி என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு, முஸ்லீம்களே வீதிகளில் வந்து போராடி வருகின்ற நேரத்தில், எங்கே தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்ற பயத்தில், மென்மையான இலக்குகளில் ஒன்று என்று கருதப்படும் இந்தியாவில் தமது குண்டு வெடிப்புகளை அவ்வப்போது, ஜிஹாதிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அந்நியநாட்டு ஜிஹாதிகள் “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு-இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். “உள்ளுக்குள் வெடித்து சிதறவைக்கும் வெடிகுண்டு வகையில் குண்டு”களைத் தயாரிப்பது, குண்டுகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வைப்பது, டைமர் மூலம் வெடிக்க வைப்பது, ஊடகங்களுக்கு இ-மெயில் அனுப்பித் தெரிவிப்பது முதலிய செயல்பாட்டினை அதில் காணலாம். இருப்பினும், இத்தகைய தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் சிறுவர்கள்-இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்களே என்று முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. ஆனால், சில இயக்கங்கள் அவர்களை தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, குடும்பதிலிருந்து பிரித்து, மற்ற ஆசைகளைக் காட்டி அத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி வருவதைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஜிஹாதிகளால், தாலிபான்களால் உபயோகப்படுத்தப் படும் அதே முறையை, பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

முஸ்லீம் அடையாளங்களை மறைத்து செயல்படுவது: கசாப்பின் வேஷத்தைப் பற்றி முன்பொரு பதிவில் விளக்கியிருந்தேன். அவன் அழகாக மழித்துவிட்டு / சேவ் செய்துவிட்டு, நீல நிறம் ஜீன்ஸ்-சர்ட் போட்டுக் கொண்டு, நெற்றியில் குங்குமம், கையில் கயிறு சகிதம் வந்து, வழியில் உள்ளவர்களிடம் “நமஸ்தே” என்று குசலம் விசாரித்து, பிறகு தான், தன்னுடைய குரூர உருவத்தைக் காட்டி சுட்டுக் கொள்ள ஆரம்பித்தான். அதே முறை தான் காஷ்மீரத்தில் சில தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்தபோது அம்முறை அங்கும் செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.அதனால் தான்  இக்காரியங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தாடி-மிசை-குல்லா என்று இஸ்லாத்தை அடையாளம் காட்டாத, அவையெல்லாம் இல்லாமல், அழகாக ஜீன்ஸ்-குள்ளசர்டுகளைப் போட்டுக் கொண்டு ராஜா, தேவ் ….. போன்ற இந்து பெயர்களையும் சேர்த்துக் கொண்டு செயபட்டு வருகிறார்கள். அதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி கொடுக்கப் பட்டு, ஜிஹாதி என்ற “புனிதப் போரை” நடத்த மூளைசலவை செய்து தயார்படுத்துகின்றனர்.

இ-மெயில்களில் விளையாடும் இளம் தீவிரவாதிகள்: இ-மெயில்கள் மூலம் திசைத்திருப்ப அல்லது சாட்டரீதியாக வழக்குகளை பலமிழக்க வேண்டுமென்றே பல இடங்களிலிருந்து இ-மெயில்கள் அனுப்பப்படுவது, அதற்கு ஊடகங்கள் துணைபோவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுப்ரீக் கோர்ட் வளகத்தில் குண்டு வெடித்த பிறகு பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது மற்றும் நான்காவது இ-மெயில்கள் கொல்கத்தாவிலிருந்து ஒரு டிவி செனலுக்கு Chottuminaliayushman@gmail.com என்ற பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது[1]. அதே நேரத்தில் இரண்டாவது இ-மெயில் கிஸ்த்வார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தது என்றும் செய்தி வந்துள்ளது[2]. இன்னொரு இ-மெயில் அஹமதாபாதிலிருந்து “சோட்டு” [Chhotoo Minani Ayushman[3]] என்ற பெயரில் அனுப்பட்டது[4]. மூன்றாவது இ-மெயில்சஹீத் அலி ஹூரி என்ற பெயரில், இந்தியன் முஜாஹிதீன் தரப்பில் URL|killindian@yahooID என்ற அடையாளத்தில் அனுப்பப்பட்டுள்ளது[5]. இரண்டு இடங்களிலிருந்து வந்ததாக உள்ள இ-மெயில்களை ஆராய்ந்தபோது, அவை ஆசம்கர், உத்திரபிரதேசம் மற்றும் காக்ஸ் பஜார், பங்களாதேசம் என்ற ஊர்களிலிருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் ஹுஜியின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடங்கள் ஆகும். இதிலிருந்து தான், ஹுஜியின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது[6].

எட்டாவது படிக்கும் அமீர் அப்பாஸ் ஹுஜியின் சார்பாக இ-மெயில் அனுப்பினான்: டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி அன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் இறந்தனர்[7]. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் [The National Investigation Agency (NIA)] தீவிர விசாரணை நடத்தி காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ் என்ற 8- ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை அக்டோபர் 7ம் தேதி கைது செய்தனர். கைதான மாணவன் அமீர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல்களை பத்திரிகை அலுவலங்களுக்கு ஹுஜியின் சார்பாக [Bangladesh-based Harkat-ul-Jihad-e-Islami (HuJI)] இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவனை காவல்துறையினர் கைது செய்தனர்[8]. கைதான மாணவர் அமீர் அப்பாஸ் தேவ் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறார்.  இதற்கிடையே மாணவனின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், அவனுக்கு காவலை நீட்டித்து தரவேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று அவனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று மாணவன் அமீரின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ஷர்மா 7 நாட்கள் நீட்டித்து அதாவது வரும் 14- ஆம் தேதி வரை காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

   

திட்டமிட்ட யுனானி மருத்துவர் காஷ்மீரிமாணவர் வாசிம் அக்ரம் மாலிக்[9]: இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்த வங்காளதேசத்தில் யுனானி மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரி மாணவர் வாசிம்அக்ரம் மாலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 7 அன்று வாசிம் டில்லியில் இருந்துள்ளான்[10]. அதைத்தொடர்ந்து அவனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவரை இந்தியா-வங்காள தேச எல்லையான டாகா அருகே அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து, இந்திய பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

   

வீட்டில் மொபைல் போன்கள் ஆவணங்கள் சிக்கின: இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். அன்கிருந்து கிஷ்த்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்று, வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தியபோது. மூன்று மொபைல்போன்கள், மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றினர்[11]. குறிப்பாக பணம் பட்டுவாடா செய்ய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின[12]. இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது[13]. இருப்பினும் வாசிம் அக்ரத்தின் பெற்றோர் அவன் குற்றமற்றவன் என்று வாதிடுகின்றனர்[14]. இரண்டு பேர்களில் யார் இ-மெயில் அனுப்பியது என்று என்.ஐ.ஏவால் சொல்லமுடியவில்லை என்றும் வாதம் உள்ளது[15].

   
   

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி அஷர் அலி சொன்ன விவரங்கள்: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தீவிரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த அஷர் அலி என்பவர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினரிடம் அக்ரம் தெரிவித்தார். அவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் கோத்பால்வால் சிறையில் உள்ளார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அஷர் அலியிடம் விசாரித்தபோது, வாசிம் அக்ரமின் சகோதரன் ஜுனைத் என்பவனும் தீவிரவாத குழுவில் உள்ளான் என்று தெரிவித்தான். படித்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போய்விட்டதால், அவனது பெற்றோர் போலீஸாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்[16]. இப்படி இரண்டு மகன்களும் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிடுவது எப்படி என்று தெரியவில்லை[17].

பல காதலிகளுடன் பேசிக் கொண்டே, ஜிஹாதியைப் பற்றியும் படித்த வாசிம் அக்ரம் மாலிக்: வாசிம் அக்ரம் மாலிக்கிடம் போலீஸார் விசாரித்தபோது அவன் சொன்ன விவரங்கள், எவ்வாறு இளைஞர்கள் ஜிஹாதிகளால் மூலைசலவை செய்யப்படுகிறது என்று தெரிகிறது. துப்பாக்கியை எடுத்துக் மொண்டு காஷ்மீர் காடுகளில் திரிந்து தான் ஜிஹாத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. பல கார்ல்-ஃபெரெண்டுகளுடன் / பண் நண்பர்கள் / காதலிகள் ஃபேஸ்புக்கில் ஒரு கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டே, இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது வின்டோவில் ஒசாமா பின் லேடன், அயம் அல் ஜவஹிரி, அன்வர் அல் அவ்லகி போன்ற ஜிஹாதி தலைவர்களைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன் என்று விளாக்கினான்[18]. அதாவது மனத்தை எவ்வாறு மாற்றி, பதப்படுத்தி, சித்தாந்த ரீதியில் தாங்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து, பிறகு குண்டுகளை வைத்து, வெடிக்கப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது[19]. ஆகவே, முஸ்லீம் பெற்றோர்கள், பொறுப்புள்ள பெரியோகள் இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் மாறுவதை கண்டு பிடித்து தடுக்க வேண்டும், ஏனெனில் நாளைக்கு அவர்கள், தங்கள் சமூகத்தையே அழிக்க முற்பட்டாலும், முற்படலாம். அதாவது “ஜிஹாதி” முஸ்லீம்களுக்குள் கூட நடக்கலாம். யார் பெரிய ஜிஹாதி என்ற போட்டி வரலாம். அப்பொழுது எல்லோருடைய கதியும் அதோ கதிதான்.

குண்டு வெடிப்பில் மூன்று பேருக்கு தேடுதல் நோட்டீஸ்: ஜுனைத் அக்ரம் மாலிக் (19) வாசிம் அக்ரமின் தம்பி, ஷகிர் ஹுசைன் ஷேக் என்கின்ற சோடா ஹாஃபிஸ் (26), மற்றும் அமீர் அலி கமல் (25) என்ற மூவருக்கு தேடுதல் பிடிப்பு அறிக்கை அனுப்பப்படுள்ளது. மூன்றாமவன் 2005லிருந்து, காஷ்மீரத்தில் தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்[20]. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கெனெவே காஷ்மீர் வழியாக, பங்களாதேசத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம், இதற்கு முஸ்லீம் நாடுகள் அமோகமாக ஆதரவுடன் உதவி வருகின்றன. மேற்காசியாவில், ஜனநாயகம், குடியரசு போன்ற ரீதியில் முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தென்கிழக்காசிய அடிப்படைவாதிகள் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய பயங்கரவாதம், தீவிரவாதம் வெளிப்படையாக, ஆனால், திறமையாக வேலை செய்து வருகின்றது. இதற்கு ஆதரவும் இருப்பதால், அதன் மூலம் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

வேதபிரகாஷ்

24-10-2011


[1] The second and the fourth Indian Mujahideen (IM) e-mails in the Delhi High Court blast case have been traced to Kolkata. The e-mails were sent from Chottuminaliayushman@gmail.com to a TV channel.

http://ibnlive.in.com/news/delhi-blast-two-im-emails-traced-to-kolkata/183773-3.html

[2] A second unverified email received today by different media organisations allegedly from Indian Mujahideen said that the group takes responsibility for Wednesday’s Delhi High Court blast in which 12 people were killed and over 76 were injured. Yesterday, HuJI, an outlawed  terrorist group with a base in Pakistan took responsibility for the blast. The mail was traced to a cyber cafe in Kishtwar, Jammu and kashmir

http://www.hindustantimes.com/Read-Indian-Mujahideen-mail-claiming-Delhi-blast/Article1-743144.aspx

[4] Investigators were groping for leads on Wednesday’s blast at Delhi High Court even as an email was sent to a TV channel claiming that the attack was carried out by Indian Mujahidin and not HuJI and threatening attacks on shopping complexes on Tuesday (13-09-2011). The email sent by one Chhotu, an alleged IM operative, was traced to Ahmedabad.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-09/india/30134439_1_huji-mail-im-emails-new-email

[5] Third email after Delhi blast ‘decoded’ Earlier, the Delhi Police claimed to have decoded the third email sent after the Delhi High Court blast. This email sent by someone claiming to be Saeed Ali Al Hoori of Indian Mujahideen from aURL|killindian@yahooIDclaimed the next attack would be at 1.8.5.13.4.1.2.1.4. But this is more like a kindergarten riddle: read A for 1, H for 8, E for 5 and you have Ahmedabad. Read more at: http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-third-email-warns-of-attack-in-ahmedabad/1/150641.html

[6] In what is viewed as a positive lead, agencies are probing two calls made on the evening of the blast from two different places in Uttar Pradesh to Bangladesh. Highly placed sources said they have managed to track calls made from Pilkhuwa and Azamgarh in UP to Cox’s Bazar and Chittagong in Bangladesh.Both these calls were made from a PCO between 5 pm and 6 pm on the day of the blast. Both Chittagong and Cox’s Bazar have Harkatul-Jihad al-Islami (HuJI) training camps and it is in these camps that some key IM members are said to have taken refuge.

[7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரைமாறிவரும்ஜிஹாதின்தன்மை!, https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[8]

[12] Looking for some ‘concrete’ evidence connecting the ‘missing’ links in the Delhi High Court blast case probe, the National Investigation Agency (NIA) has seized three mobile phones and some documents, including papers relating to money transaction, from residence of one of the accused Wasim Ahmed Malik in Jammu and Kishtwar.

[15] Unfortunately, the absurdity of the NIA’s allegations against Mr Malik is only symptomatic of its pathetic handling of the probe into the blast. Even when the agency arrested Abid Hussain and Amir Abbas – the two boys from Kishtwar who allegedly sent the email claiming responsibility for the attack – it provided only sketchy details, failing to pinpoint which of the two had sent the email.

Read more at:http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe-nia-claim-questionable/1/154392.html

[16] According to sources, NIA officials had recently quizzed Azhar and found that Wasim’s teenaged brother Junaid had been initiated into terrorism. Junaid allegedly disappeared a year ago and his family has lodged a missing person report. Intelligence agencies suspect that Junaid has been operating from somewhere in the Kashmir Valley.

[18] For Wasim, the idea of jehad is not picking up a gun and fighting in the jungles of Jammu and Kashmir; he is highly radicalised but without overt symbols attached to it. He can discuss his multiple girlfriends with as much ease as he can discuss Osama bin Laden, Ayman al Zawahiri and Anwar al Awlaki.He has no qualms about opening Facebook in one window and chatting with girlfriends and simultaneously reading about international jehad in the second window on his computer,” said a source who is privy to his interrogation details.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Malik-believed-in-action-did-recee-of-HC-himself/Article1-760830.aspx

[20] The fugitives include 19-year-old Junaid Akram Malik, younger brother of Wasim Akram Malik. Wasim, a medical student in Bangladesh, is presently in NIA custody in Delhi. The other two are Shakir Hussain Sheikh alias Chota Hafiz (26) and Amir Ali Kamal (25). While Sheikh has been active in the Kashmir Valley since 2005, Kamal has been operating since 2008.

http://timesofindia.indiatimes.com/india/NIA-issues-wanted-notice-for-3-Hizbul-terrorists-in-Delhi-HC-blast-case/articleshow/10446851.cms