Archive for the ‘கிரேஸி’ category

மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்!

மே 31, 2014

மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்!

 

ctress-monica-hot-stills

ctress-monica-hot-stills

யார் இந்த ரேகா, மோனிகா, மௌனிகா, பர்வானா: ரேகா மாருதிராஜ் என்ற பெண் 1987ல் பிறந்திருக்க வேண்டும், ஏனெனில் “எனக்கு 26 வயதாகிறது” என்று சொல்லிக் கொள்வதால்.  25-08-1987 பிறந்த தேதி என்றும் சில இணைதலங்கள் கொடுக்கின்றன[1]. அப்பா மாருதிராஜ் கிருத்துவர், அம்மா கிரேஸ் இந்துவாம்[2]! ஆனால், பெயர்களினின்று தெரிவதாவது அம்மா கிருத்துவரை மணம் செய்து கொண்டதால், மதம் மாறியிருக்கிறார்[3]. 1990களிலேயே, அதாவது 3-4 வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டாளாம்! விலாசம்: எண்.3, திலகர் தெரு, ஹரி பிரியா அபார்ட்மென்ட்ஸ், சாலிகிராமம், சென்னை என்றும் உள்ளது. இவளுக்கு என்ற் ஒரு வெப்சைட்டும் உள்ளது[4]. மலையாளப் படங்களில் நடிக்க தனது பெயரை 2012ல் பர்வானா என்று மாற்றிக் கொண்டாராம்[5].

 

nanjupuram-hot-actress-monica-masala-wet-bathing-stills-5

nanjupuram-hot-actress-monica-masala-wet-bathing-stills-5

மோனிகா முஸ்லிம் ஆனாளாம்: யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் ‘அழகி’ மோனிகா[6]என்று ஊடகங்கள் ஊத ஆரம்பித்துள்ளன[7]. முதலில் இந்த நடிகை கேரளாவைச் சேர்ந்தவள். இது குறித்து அவர் கூறுகையில்,  “ஆன்மீக பற்று காரணமாகவே தான் இஸ்லாத்தை தழுவியுள்ளேன். காதல்கீதல்என்றுஎதுவும்இல்லை. ஏதோ ஷேக்கை கல்யாணம் பண்ணிகிட்டா என்றெல்லாம் தப்பா நினைக்காதீங்க. இஸ்லாம் மத்த மதங்களைப் போல்ல இல்ல. நான் புரிஞ்சுகிட்டுதான் மதம்மாறினேன்…..இனி மேல் நான் நடிக்கப் போவதில்லை,  இப்பொழுது கூட எனக்கு நிறைய ஆபர்கள் வந்து கொண்டிருக்கின்றன. 2010 லேயே நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிட்டேன்[8].  ஆனால் ஒப்புக் கொண்ட படங்கள் எல்லாம் முடிந்த பிறகு கூறலாம் என்று காத்திருந்தேன். இப்போதுதான் எல்லா படத்தையும் முடித்தேன்.  இனி நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை.  குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன்.  அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது,  உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்றார். இவ்வாறு, அவர் கொடுத்த பேட்டி பலவிதமாகப் போட்டிருக்கிறார்கள்.

 

Monika-கவர்ச்சி

Monika-கவர்ச்சி

ஆர். கே. வி. ஸ்டுடியோவில் கொடுத்த பேட்டி: இடையில் தமிழ்ப் படங்களில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இன்று திடீரென செய்தியாளர்களை ஆர்கேவி ஸ்டுடியோவில் சந்தித்தார் மோனிகா. அவர் கூறுகையில், “குழந்தை நட்சத்திரமாக என் சினிமா வாழ்க்கையை தொடங்கிய நான் இதுவரை 70 படங்கள் நடித்து இருக்கிறேன்.  அதற்க்கு காரணமாக நீங்கள் அனைவரும் இருந்திருக்கிறீர்கள் உங்களை விட்டு பிரிவது பெரும் கஷ்டமாக இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.  பணத்திற்காகேவா காதலுக்காவோ நான் மதம் மாறவில்லை. நான் அப்படிப் பட்ட பெண் இல்லை.  இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன்.  எனது திருமணம் பற்றிய முறையான தகவல் உரிய நேரத்தில் உங்களுக்கு தெரிவிப்பேன்.  எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன் பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் இப்போது என் பெயர் ‘எம். ஜி. ரஹீமா’. அதாவது மாருதிராஜ் கிரேஸி ரஹீமா  (அம்மா அப்பா பெயருடன் புதிய பெயர்)[9]. மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.  இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில்எந்த மாற்றமும் இல்லை,” என்றார்.

 

Monika முஸ்லிம்

Monika முஸ்லிம்

கிளாமருக்கு நோ என்று சொன்ன ரகசியத்தின் பின்னணி இதுதானா?:  மோனிகாவின் புது முடிவு[10], இனி கிளாமராக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நடிகை மோனிகா.  அழகி படத்தில் பாவாடை தாவணியில் அழகுப்பதுமையாக வந்து அசத்திய மோனிகா, சிலந்தி படத்தில் படுகவர்ச்சியாக வந்து கலக்கினார்.  குளியல் காட்சியில் தொடங்கி பெட்ரூம் காட்சி வரைக்கும் நெருக்கமாகவும்,  கிறக்கமாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.  இதையடுத்து நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த மோனிகாவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒன்றிரண்டு படங்களில் வந்த வாய்ப்பும் ஓவர் கவர்ச்சிக்காகத் தான்.  கவர்ச்சி நடிகை என்ற முத்திரை விழுந்து விடக்கூடாது என்பதால் அந்த வாய்ப்புகளையெல்லாம் மறுத்த மோனிகா,  தற்போது வர்ணம் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் ரொம்பவே டீசன்ட்டாக நடித்திருக்கிறாராம்.  அதே நேரம் இனி ஒருபோதும் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்., என்று தினமலரில் செய்தி!

 

மோனிகா முஸ்லிம் 2014-முன்னா கிள்ளல்

மோனிகா முஸ்லிம் 2014-முன்னா கிள்ளல்

முன்னா படுக்கையறை காட்சியில் கண்ட இடத்தில் கிள்ளி சில்மிஷம் செய்தாராம்: சிலந்தி படத்தில் மோனிகாவுடன் இணைந்து நடித்தவர் முன்னா.  அப்படத்தில் நடித்தபோது மோனிகாவை கண்ட இடத்திலும் கிள்ளியதாக புகாருக்குள்ளாகி மீண்டவர்[11].  இப்போது மணிரத்தினத்தின் ராவணா படத்திலும் சிறியபாத்திரத்தில் நடித்துள்ளார் முன்னா. அந்த மெய்சிலிர்ப்பிலிருந்து இன்னும் மீளவில்லையாம் முன்னா[12].  இப்படி நெருக்கமான கிரக்கத்தில் செய்தார் என்றால், நடிகைகள் என்ன செய்வார்கள்? “மேரே பாஸ் ஆஜாவோ” என்ற பாலலிலும் மிகவும் ஆபாசமாகவே நடித்துள்ளது, யுடியூப்லிருந்து தெரிந்து கொள்ளலாம்[13]. இதில் இரண்டு-மூன்று உள்ளன[14]. ஆகவே நடிகைகளைப் பொறுத்தவரைக்கும் கவர்ச்சி மற்றும் ஆபாசம் இவற்றிற்குள்ள் வேறுபாட்டை அவர்களே தான் விளக்கவேண்டும் என்று தெரிகிறது.

 

மோனிகா பலவிதம்

மோனிகா பலவிதம்

சினிமா நடிகைகள் மதம் மாறுவது பெரிய செய்தியா?:  சினிமா நடிகைகள் மதம் மாறுவது பெரிய செய்தியே இல்லை! தொழில் ரீதியில், அவர்களுக்கு லாபம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பணம், புகழ் தான் அவர்களுக்குத் தேவை. மார்க்கெட் போனால் தான், குடும்பம் அல்லது பாதுகாப்பு என்று நினைப்பார்கள்.  பணம் இருந்தால், அந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருப்பார்கள்!  அவர்கள் மதத்தைக் கடந்தவர்கள் என்றே சொல்லலாம். அந்நிலையில், இந்த நடிகை கவர்ச்சியாக / ஆபாசமாக நடித்து வொட்டு, இனிமேல் நான் அப்படி நடிக்க மேட்டேன், நான் முஸ்லிமாக விட்டேன் என்றால், வேடிக்கையாகத்தான் உள்ளது. முன்னர் குறிப்பிட்டப்படி, இஸ்லாம் பல பெண்களை மணந்து கொள்ள, நடிகர்கள் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.

 

“செக்ஸியாக காட்ட தெரியாத ஆளெல்லாம் தமிழ் டைரக்டர்!”

“செக்ஸியாக காட்ட தெரியாத ஆளெல்லாம் தமிழ் டைரக்டர்!”

நடிகை மோனிகா: “செக்ஸியாக காட்ட தெரியாத ஆளெல்லாம் தமிழ் டைரக்டர்!”[15]:  “தெலுங்கு பட டைரக்டர்கள் நடிகைகளை செக்ஸியாக காண்பிக்கும் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள்.  ஆனால், தமிழ் சினிமாவில் அந்தளவுக்கு இல்லை” என தனது மனக்குறையை வெளியிட்டுள்ளார், ‘சிலந்தி’  புகழ் நடிகை மோனிகா.நேற்று சர்வ தேச மகளிர் தினம். அதற்காக ஒரு அமைப்பு நடத்திய விழாவுக்கு, தமக்கு தெரிந்த  ‘சிறப்பு மகளிர்’ என்ற தகுதி அடிப்படையில்,  நடிகை மோனிகாவை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.அப்போது மீடியாக்களிடம் பேசிய மோனிகா, “டைரக்டர்கள் பெரும்பாலும் நடிகைகளை  ‘செக்ஸி’யாக காட்டத்தான் விரும்புகிறார்கள். ஆனால்,  அந்த திறமை தெலுங்கு டைரக்டர்களிடம் தூக்கலாகவே உள்ளது.நான் தற்போது தமிழில் இரண்டு படங்களிலும்,  மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறேன்.  தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் தமிழ்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை ஏற்க முடியாது.  ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான நடிகைகள் தமிழ் படத்தில் நடித்து உள்ளனர்.தமிழ்படங்களில் அதிகமான கவர்ச்சி உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி சொல்பவர்கள்,  தெலுங்கு படங்களை பார்க்கவில்லை என்று அர்த்தம்.  தெலுங்கு படங்களை விட இங்கு கவர்ச்சி குறைவாகத்தான் உள்ளது. அங்கு (தெலுங்கில்) ஹீரோயின்களே விரும்பி கேட்டுக் கொண்டு அதிக செக்ஸியாக நடிக்கிறார்கள்.  இதற்கு காரணம், தெலுங்கு டைரக்டர்களிடம், அந்த திறமைஉள்ளது” என்று தெரிவித்தார்.இந்த நடிகை,  ‘சிலந்தி’யில் ஊர்ந்த போட்டோக்கள் தொடர்பாக,  கூகுள் ஓனரை தேடி வருவதாக வெளியான செய்தியின் லிங்கை கீழே காணலாம்.தமிழ் டைரக்டர்களை குறை சொல்கிறாரே… நம்ம ‘சிலந்தி’ டைரக்டர் இந்தம்மாவுக்கு அப்படியொன்று குறை வைத்ததாக மேலேயுள்ள போட்டோவில் தெரியலையே!  இதுக்கு மேல் காட்டினா சென்சார்ல புடிங்குக்கு வாங்கம்மா…அப்போது, கூகுள் ஓனருக்கு கொக்கி போட முயன்ற நடிகை ஏன் இப்போது தலைகீழாக பேசுகிறார்?  தெலுங்கு படவாய்ப்பு தேவையோ! என்று ஒரு இணைதளம் விவரிக்கின்றது.

 

actress-monica-hot-stills-12

actress-monica-hot-stills-12

‘சிலந்தி’ நடிகை மோனிகாவுக்கு கிடைத்த “கூகுள் ஓனருக்கு கொக்கி போடுங்க” அட்வைஸ்![16]: தமிழில் ‘சிலந்தி’ என்ற கலை நுணுக்கம் மிக்க படத்தில் நடித்திருந்த நடிகை மோனிகா, கடும் கோபத்தில் உள்ளார். சிலந்தியில் தன்னை கவர்ச்சி கடலில் தள்ளி, குடும்ப இமேஜையும் குழிதோண்டி புதைத்தார் என எகிறி, பிளாக்-லிஸ்ட்டில் அப்படத்தின் டைரக்டர் ஆதியை ஏற்கனவே வைத்து விட்டார் அவர். இப்போதுள்ள கோபத்துக்கு டைரக்டர் ஆதி நேரடிக் காரணமல்ல, சுற்றி வளைத்துப் பார்த்தால் வருகிறார்.சரி.  அம்மணி கடும்கோபமுற்று இருப்பதற்கு என்ன காரணம்?இது டெக்னிகல் சமாச்சாரம்.  இன்டர் நெட்டில் நடிகை மோனிகா என்று டைப் செய்தாலே சிலந்தி ஸ்டில்களாக வந்து விழுகின்றனவாம்.  இதனால் தனது இமேஜ் மேலும் கெடுகின்றது என்பதே கோபத்துக்கு காரணம். அதுவும்,  தமிழக அரசு வேறு இப்போது விலையில்லா மடிக்கணனி வேறு கொடுக்கிறது. இதனால், இமேஜ் கெடும் வேகம் ஆக்சிலரேட் ஆகிறது!இதையடுத்து,  தமக்கு தெரிந்த கம்ப்யூட்டர் வல்லுனர் ஒருவரிடம் ஆலோசனை கேட்க, அவரோ, “கூகுள் ஓனருக்கு தான் கொக்கி போடணும்”  என்று சொல்லி விட்டாராம். நடிகை மோனிகா, கூகுள் ஓனரை எங்கே போய் தேடுவது? சமீபத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் ‘கூகுள் கூகுள்’ என்று ஒரு கருத்து மிக்க பாடல் வருகிறதே.  அதை எழுதிய கவிஞரிடம் கேட்டுப் பார்க்கலாமே!, என்று அதே இணைதளம் கிண்டலடித்து எழுதியுள்ளது!

 

மோனிகா மதம் மாறுதல்

மோனிகா மதம் மாறுதல்

பணம் சம்பாதிக்கும் முறைகள்: இப்படி முன்னுக்கு முரணான செய்திகள், விவரங்கள், விவகாரங்கள் முதலியன, ஒருவகையான விளம்பரத்திற்கு செய்வதாகவே தெரிகிறது. இப்பொழுதுள்ள சாதாரண மக்களை சினிமாக்காரர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிகிறது. லட்சங்களில், கோடிகளில் புரளுகிறர்கள் என்றால், சாதாரண மக்கள் செல்லுத்தும் பணத்தில் தான் என்பது உண்மை, ஆனால், பதிலுக்கு அவர்களுக்குக் கிடைப்பது என்ன? கண்களால் காமத்தைப் பருகி, மனங்களால் கற்பழித்து, தூக்கத்தில் வியர்வை சிந்துவதுதான். ஏனெனில், அடுத்த நாள் எழுந்து அவன் வியர்வை சிந்தி உழைத்தால் தான் பணம் கிடைக்கும். சினிமா பார்த்தால் பணம் கிடைக்காது. இந்நிலையில் தேவையில்லாமல், நான் இஸ்லாத்திற்கு மாறினேன் என்றெல்லாம் பேட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

© வேதபிரகாஷ்

31-05-2014

[1] http://web.archive.org/web/20120225160808/http://www.jointscene.com/artists/Kollywood/Monika/234

[2] On her conversion, Monica said, “I have been practicing Islam for almost four years now. My father is a Christian and my mother is a Hindu and they support my decision fully. 

[3] http://www.kollytalk.com/stills/actress-monica-embraced-islam-press-meet-photos-155443.html

[4] http://http//www.actressmonika.com/

[5] http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Monica-will-be-Parvana-in-Mollywood/articleshow/17225945.cms

[6] தினமணி, இஸ்லாத்துக்குமாறிவிட்டார்அழகிமோனிகா, By Web Dinamani, சென்னை, First Published : 30 May 2014 07:34 PM IST

[7] http://timesofindia.indiatimes.com/Entertainment/Malayalam/Movies/News-and-Interviews/Actress-Monica-embraces-Islam/articleshow/35836329.cms

[8]http://www.dinamani.com/cinema/2014/05/30/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/article2254321.ece

[9] http://tamil.oneindia.in/movies/heroines/monika-converts-islam-202388.html#slidemore-slideshow-1

[10] http://cinema.dinamalar.com/tamil-news/1622/cinema/Kollywood/Azhagi-Monika-no-to-glamour.htm

[11] http://tamil.oneindia.in/movies/heroes/2009/05/23-munna-opens-coffee-shop.html

[12] http://tamil.oneindia.in/topic/munna

[13] http://www.youtube.com/watch?v=1d_H77vkrOI

[14] http://www.youtube.com/watch?v=3OBCME-FiqU

[15] http://viruvirupu.com/2013/03/09/49435/

[16] http://viruvirupu.com/2012/12/29/42589/