ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – இளம் பெண்கள் மீது குறி வைப்பது ஏன்? – காசர்கோடில் நடப்பதென்ன? (2)
இளம்பெண்களின் மீது ஏன் குறி வைக்கப் படுகிறது?: இந்தியாவில் கேரளாவிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இந்து இளம்பெண்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்து தீவிரவாதப் பணிகளுக்குப் பயன்படுத்தவென்றே ஒரு கும்பல் இந்தியா வந்திறங்கியிருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அஜண்டாவே; குடும்பத்தின் போதிய அரவணைப்பின்றி அனாதையாக தன்னை உணரக் கூடிய இந்து இளம்பெண்களை அடையாளம் கண்டு அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக மூளைச் சலவை செய்து தங்களது நாசவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும். இதற்கென அவர்களது தலைமை அவர்களுக்கு ரேட் கார்டு ஒன்றையும் தயாரித்துத் தந்திருக்கிறது. அதிகமான இளம்பெண்களை மதமாற்றம் செய்து அரேபிய நாடுகளுக்கும், சிரியாவுக்கும் அனுப்பும் ஏஜண்டுகளுக்கு போனஸ், இன்செண்டிவ் எல்லாம் உண்டாம். அதாவது, பெண்கள் சுலபமாக மூளைச்சலவை செய்ய முடிகிறது. அவர்கள், தீவிரவாதத்திற்கு,குறிப்பாக தற்கொலை குண்டாக மாற எளிதில் தயாராகிறர்கள். மேலும், தீவிரவாதிகள் தங்களது காமப்பசிக்கும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இவற்றைப் பற்றி, முந்தைய பதிவுகளில் விளக்கப் பட்டுள்ளன.
மதம் மாற்ற விலைப்பட்டியல் வைத்துள்ளார்கள்: இந்துப் பெண்களை அவர்கள் சார்ந்துள்ள மதம், ஜாதி, உள் ஜாதி எனப் பகுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயித்திருக்கிறார்கள்[1]. அதிர்ச்சி தரும் அந்த ரேட் கார்டுகள் தெரிவிக்கும் விவரங்களைக் கண்டால் அதில் இருக்கும் பயங்கரத் தன்மை விளங்கும்…
|
என்று அவர்களது விலைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி இந்தியப் பெண்களை மதமாற்றம் செய்ய ISIS அமைப்பு முஸ்லீம் கலிபாக்கள் மூலம் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதற்கு முன்னேற்பாடாக இந்தியாவெங்கும் அவர்களது ஏஜண்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்கிறது Times Now செய்தி[2]. ஆனால் இதை மறுக்கும் ஊடகங்களும் நம்மிடையே உள்ளன. இதில் வேடிக்கை அல்லது ஒற்றுமை என்னவென்றால், 2015ல், “டெக்கான் குரோனிகலில்” லவ்-ஜிஹாத் பற்றிய செய்தியில், இதே கணக்கு காணப்பட்டது[3]. அதற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்று விசாரிக்க வேண்டும். “சனாதன் சன்ஸ்தா” வெளியிட்ட புத்தகத்தில் அவ்விவரங்கள் காணப்பட்டன[4]. இருப்பினும், கேரள உயர்நீதி மன்றத்தில், “லவ்-ஜிஹாத்” வழக்குகள் விசாரிக்கப் படுகின்றன; போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். உண்மையில் பெண்ணுருமை பேசும் யாரும், இப்பிரச்சினைப் பற்றி விவாதிக்காமல் இருப்பதும் பற்பல கேள்விகளை, சந்தேகங்களை எழுப்புகின்றன.
ஐசிஸ் பயங்கரவாதம், தீவிரவாதங்களை சுலபமாக கருத முடியாது: இந்தியாவில் முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்க இது போன்ற செய்திகளை சில ஊடகங்கள் வலிந்து உருவாக்கி மக்களிடையே திணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி விடமுடியாது. இந்த ரம்ஜான் காலத்தில் 2017ல் அளவுக்கு அதிகமான ஜிஹாதி தீவிரவாதம், உலகம் எங்கும் அரங்கேறியுள்ளது. அப்பாவி மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது கண்டிக்கத் தக்கது எனும்படியான கண்டனங்களும் எழாமல் இல்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே அதற்கேற்ப பாதிக்கப் பட்ட பெண்ணின் அம்மாவே புகார் அளிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று நேற்று வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கலிபாக்கள் நிர்ணயித்த அந்த ரேட் கார்டு ஆதாரமும் வெளியாகியிருக்கிறது. இவற்றை எல்லாம் அத்தனை சீக்கிரம் கற்பனைக் கட்டுக் கதை என்று புறம் தள்ளி விட முடியாது. உண்மையில் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? மதத்தின் பெயரால் பிரிவினையைத் தூண்டும் முயற்சியா? அல்லது இந்துப் பெண்களை சந்தை அடிமைகளாக ஆக்குவதின் மூலம் இந்துக் கலாச்சாரத்தை இழிவு படுத்தும் முயற்சியா? இந்த விசயத்தில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் இந்தியப் பெண்களின் முதல் தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மட்டுமே[5].
இச்செய்தி வரும் நேரத்தில் காசர்கோடு முஸ்லிம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக “வாட்ஸ்–அப்பில்” செய்தி: “வாட்ஸ்-அப்பில்” வருவதையெல்லாம் செய்தியாக்கி விடுகிறார்கள் என்று கிண்டலடிப்பவர்களை, இதையும் பொய் என்று சொல்வார்களா? ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படும் கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. ஷாஜீர் எம்.அப்துல்லா என்ற இந்த இளைஞர் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் மூலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பி.சி.அப்துல் ரகுமானுக்கு வந்துள்ளது. தகவலுடன் கூடிய இந்தப் படத்தை, ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக நம்பப்படும், காசர்கோடு மாவட்டத்தின் மற்றொரு இளைஞர் அனுப்பியுள்ளார். ஷாஜீர் எப்போது, எப்படி இறந்தார் என்பதற்கான எவ்வித விவரமும் அத்தகவலில் இல்லை என அப்துல் ரகுமான் கூறினார். இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “எங்களுக்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை” என்றனர்[7]. ஆனால், பெற்றவர்களுக்குத் தெரிந்து விடுகிறதே? தமது மகன், மகள் என்று பரிகொடுப்பவர்கள், இதையெல்லாம் கட்டுக்கதை என்று அமைதியாக இருந்துவிடுவதில்லயே? பிணம் வரத்தான் செய்கிறது, அடக்கம் செய்கின்றனர், வருந்துகின்றனர். ஆனால், தீவிரவாதத்தில் சேராதே என்று சொல்லாமல் இருப்பது திகைப்படையச் செய்கின்றது.
© வேதபிரகாஷ்
25-06-2017
[1] தினமணி, இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By கார்த்திகா வாசுதேவன், Published on : 24th June 2017 05:56 PM.
[2] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547–1.html
[3] The rate card that they have attributed to the forum reads, “The boy will get Rs 7 lakh for marrying a Sikh girl, Rs 6 lakh for Punjabi and Gujarati Brahmin girls, Rs 5 lakh for a Brahmin girl, Rs 4.5 lakh for a Kshatriya girl, Rs 3 lakh for Gujarati Kacchi, Jain and Marwadi girls, Rs 2 lakh for a backward class girl and Rs 1.5 lakh for a Buddhist girl.”
http://www.deccanchronicle.com/150926/nation-current-affairs/article/youth-paid-love-jihad-book
[4] While claims of love jihad by right-wing organisations have attracted a lot of flak from various sections of society, Sanatan Sanstha, in 2011, had published a book on the controversial issue. It has also produced a ‘rate card’, on the basis of which Muslim boys are supposedly paid money to marry Hindu girls. The book claims the cash reward differs on the basis of caste and region. For example, the organisation claims that a Muslim youth marrying a Sikh girl is paid the highest amount while the one marrying a Buddhist girl gets the lowest. However, the source of Sanatan’s claims is dubious. In the book, Sanatan has claimed that the rate card was announced by the ‘Muslim Youth Form’. When contacted, a Sanatan spokesperson claimed it was taken from the website of the forum. However, this newspaper did not find any such website.
DECCAN CHRONICLE, Youth paid for love jihad: Book, SHRUTI GANAPATYE, Published Sep 26, 2015, 11:04 am IST; Updated Jan 10, 2016, 8:38 am IST |
[5] தி.இந்து.தமிழ், ஐ.எஸ்.ஸில் இணைந்த கேரள இளைஞர் பலி?, Published: June 21, 2017 09:39 ISTUpdated: June 21, 2017 09:40 IST
அண்மைய பின்னூட்டங்கள்