‘தி கேரளா ஸ்டோரி‘ லவ்-ஜிஹாத் – காதல் புனிதப் போர் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு–ஆதரவு ஏன்? (2)

கோயம்புத்தூரில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம்: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கோவையில் வணிக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்[1]. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு – பரபரப்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்[2]. இதில் மஜகவினரோடு ஜமாத் நிர்வாகிகள், தமுமுக, SDPI நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்[3]. தமிழக அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மஜக ஜனநாயக வழியில் போராட சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்தது[4]. இதனைத் தொடர்ந்து ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிரான முதல் கள எதிர்ப்பை மஜக பதிவு செய்துள்ளது.

இப்படத்தில் விவரிக்கப் படும் விசயங்கள் என்ன?: இதன் பின்னணியில், ஒரு இஸ்லாமிய மாணவிக்கு தம்முடன் தங்கியிருப்பவர்களை மூளைச்சலவை செய்யும் ASSIGNMENT கொடுக்கப்படுகிறது. அவரோடு 4 இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து கொள்கின்றனர். பிற மதக் கடவுளர்களை இஸ்லாமிய மாணவி விமர்சிக்கும் காட்சிகளும், ஹிஜாப் அணியும் பெண்களுக்கு எந்த ஆபத்தும் வராது என அவர் கூறும் வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்துகொள்வது போன்றும், அதன்பிறகு அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போன்றும் காட்டப்படுகிறது. இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இது மேலும் அனலைக் கூட்டியுள்ளது.

எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்!: இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. “சங் பரிவார் தொழிற்சாலையின் மிகப்பெரிய பொய் ‘THE கேரளா ஸ்டோரி’ திரைப்படம்” என கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும், “படத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை என்றால், கேரளாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கிறோம்” என்றும் அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விவகாரத்தில் தலையிட்டு, “இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளர்” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.

படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்: . கேரள உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம்!’தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று வாதம் நடந்தது. இப்படத்துக்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ”படத்தின் ட்ரெய்லரில் வரும் உரையாடல்கள் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் அப்பாவி மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது. இது கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கலாம். இந்தப் படம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அப்படத்தின் ட்ரெய்லரே உணர்த்துகிறது” என்றார். ”படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் அல்ல” – நீதிபதி அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ட்ரெய்லரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எதிராக எந்த கருத்தும் இடம்பெறவில்லை என்றார். அதற்குப் பதிலளித்த துஷ்யந்த் தவே, முழுப் படத்தையும் பார்த்தால் புரியும் என்றார். அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியம் சர்ச்சைக்குரிய பல காட்சிகளை நீக்கிவிட்டதே என்றும் மேலும் இந்தப் படம் கற்பனையே தவிர வரலாற்றுப் படம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். அதற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தணிக்கை வாரியத்தின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றும் புனைகதை என்றாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது எனவும் வாதிட்டார்.

சில மாறுதல்களுடன் நீதிமன்றம் திரையிட அனுமதி: அதற்கு நீதிபதி, இந்து சன்யாசிகளை கடத்தல்காரர்களாகவும் பாலியல் வன்முறை செய்பவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் இந்தி மற்றும் மலையாளத்தில் வெளிவந்து உள்ளன. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் மதத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி கடம், ‘இது உண்மைக் கதைகளால் ஈர்க்கப்பட்ட புனைகதை’ என்று நாங்கள் டிஸ்கிளைமரில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை வாரிய சான்றிதழ் தேவையில்லை,” எனவும் வாதிட்டார். மேலும் அவர், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இப்படத்தைக் குறிப்பிட்டது: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்[5]. பிரதமர் பேசுகையில்[6], “தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்தைத்தான் தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது,” எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்[7].மேலும், “இந்த திரைப்படம் கேரளாவை சேர்ந்த பெண்கள் எப்படி ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாதங்களில் சேர ஈர்க்கப்படுகிறார்கள்? பின்னர் அவர்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் போன்றவை நடைபெறுகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பாழாகிறது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தீவிரவாத ஆதரவாளர்களுக்கு துணைபோகிறது,” என்று பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்[8].

உண்மையான செக்யூலரிஸ்டுகள்–கிறிஸ்துவர்கள்–இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறுமா?: கவனமாக இப்பிரச்சினையை ஆராய்ந்தால், அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை, ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம் ஓட்டுகளை வாங்கினால் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும். இவர்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும். கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர். ஆனால், அங்கு இந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது. ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

- தி கேரளா ஸ்டோரி பிரச்சினையை கவனமாக ஆராய்ந்தால், அதை அரசியலாக்க முயன்ற நிலை, திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது எனலாம்.
- கேரள அரசியலைப் பொறுத்த வரையில் கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் இந்துக்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை,
- ஹிந்துக்கள் 55%, முஸ்லிம் – 27%, கிறிஸ்துவர் – 18% என்றுள்ள நிலையில், யாரும் இந்து ஓட்டுவங்கியை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள்!
- ஏனெனில், அவர்களது ஓட்டுகளால் யாரும் ஆட்சிக்கு வந்து விட முடியாது. கிறிஸ்துவ-முஸ்லிம்களிடம் தான் கனிசமான சீட்டுகள் கிடைக்கும்.
- ஹிந்துக்கள்கள் பிரியும் நிலையில், மற்ற வகையறாக்கள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்தாக வேண்டும்.
- கம்யூனிஸ-செக்யூலரிஸ சித்தாந்திகள் கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் கோஷ்டிகளுடன் இணைந்துள்ளனர், இணைய தயாராக உள்ளனர்.
- ஆனால், அங்கு ஹிந்துக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட செயல்படுவதில்லை. இதனால், ஹிந்துக்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்!
- அந்நிலையில், பிஜேபிகாரர்கள் கிறிஸ்வர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது மற்றவர்களை அதிர்வடையச் செய்துள்ளது.
- ஒருவேளை உண்மையான செக்யூலரிஸ்டுகள்-கிறிஸ்துவர்கள்-இந்துக்கள் ஒன்று சேர்ந்தால், தேர்தல் கணக்கு மாறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
- இதனால் தான் ஜிஹாத் ஆதரிக்கப் படுகிறது, ஹிந்துக்களுக்கு எதிராக விரோதிகள் சேர்கின்றனர், எல்லைகளும் கடக்கின்றன!
© வேதபிரகாஷ்
05-05-2023

[1] தினத்தந்தி, ‘தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. கோவையில் பரபரப்பு, By தந்தி டிவி, 5 மே 2023 6:33 PM
[2] https://www.thanthitv.com/latest-news/protest-against-the-movie-the-kerala-story-commotion-in-coimbatore-184433
[3] நக்கீரன், ‘தி கேரளா ஸ்டோரி‘ வலுக்கும் எதிர்ப்புகள்; களத்தில் முதல் போராட்டம், Published on 05/05/2023 (18:21) | Edited on 05/05/2023 (19:32)
[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kerala-story-continues-protests-first-struggle-field
[5] புதியதலைமுறை, ‘தி கேரளா ஸ்டோரி‘ : அனல் பறக்கும் விவாதம்.. சூடுபிடிக்கும் போராட்டங்கள்.. களத்தில் இறங்கிய பிரதமர்!, , Justindurai S, Published on : 5 May, 2023, 3:21 pm.
[6] https://www.puthiyathalaimurai.com/india/kerala-high-court-refuses-to-stay-release-of-the-kerala-story
[7] தினமணி, தி கேரளா ஸ்டோரி: பிரதமர் மோடி கருத்து, By DIN | Published On : 05th May 2023 03:04 PM | Last Updated : 05th May 2023 03:04 PM
[8] https://www.dinamani.com/india/2023/may/05/pm-modi-opinion-about-the-kerala-story-movie-4001039.html
அண்மைய பின்னூட்டங்கள்