மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்!
மரியம் பிச்சை விபத்தில் இறப்பு, மகனுக்கு கொலை மிரட்டல் (ஜூலை 2012): 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்ததற்காக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆக்கப்பட்டவர் மரியம்பிச்சை. ஆனால் அக்டோபரில் ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து விட்டார். அப்பொழுது, ஜெயலலிதா பிச்சையின் மனைவிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். நேருதான் பிச்சை இறந்ததற்கு காரணம் என்று உள்ளூர் அதிமுகவினர் கோஷமிட்டனர். இதனால், விசாரணைக்கும் ஆணையிடப்பட்டது[1]. இன்னொரு முஸ்லிம் இணைத்தளத்தின் படி மறைந்த மரியம் பிச்சை ஒரு ரவுடி, அவர் இறந்தபோது, அதிமுக மற்றும் தமுமுக ஆட்கள் கலாட்டா செய்ததாக புகைப்படங்களுடன் அப்பிரிவு முஸ்லிம்கள் வெளியிட்டுள்ளனர்[2].
நேரு குடும்பத்தினர் கிருத்துவர்கள், மரியம் பிச்சை குடும்பத்தினர் முஸ்லிம்கள், எனவே அம்மா விசாரணைக்கு உத்தரவிட்டு ஒதுங்கி விட்டார். இதற்குள் ஆசிக் மீராவுக்கு கொலை மிரட்டல் என்ற புகார் வேறு. உடனே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது[3]. போன் நெம்பரை வைத்து ஆள் யார் என்று பார்த்தால் மேரி என்ற 65 வயதான பெண்ணைக் கண்டு பிடித்தனராம்[4]. ஆனால், அப்போனை காணவில்லை என்றதும் போலீசார் விட்டுவிட்டனராம்! மாரி என்றல் பிடித்திருப்பர் போலும்!
கஸ்தூரி ஆசிக் மீராவின் மீது புகார் (மார்ச் 2012): மரியம் பிச்சை முஸ்லிம், அவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாம் மனைவியான கஸ்தூரி முன்னர் 19.03.2012 அன்று திருச்சி போலீஸ் கமிஷனர் கைலேஷ் யாதவ்விடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய கணவரின் முதல் மனைவி ஆயிஷா, அவருடைய மகன் ஆசிக் மீரா தற்போது திருச்சி மாநகராட்சி துணை மேயராக உள்ளார். என்னை அரசியலுக்கு வரக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுகிறார். என் உயிருக்கு ஆபத்து. என் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் அதற்கு காரணம் ஆசிக் மீராதான் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை இணை ஆணையர் ஜெயபாண்டியனிடம் விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[5].
மூன்று மனைவிகள் கொண்ட மரியம் பிச்சையும் கல்யாணமான மகன் ஆசிக்கும்: மரியம் பிச்சைக்கு 3 மனைவிகள்[6] என்று நக்கீரன் சாதாரணமாக செய்தியை வெளிய் இட்டது. ஏனெனில், மரியம் முஸ்லிம் ஆதலால், மூன்று மனைகள் இருப்பது வியப்பாக இல்லை போலும். முதல் மனைவி ஆயிஷா பீவி, மூன்றாவது மனைவி கஸ்தூரி, என்று விசித்திரமான தகவல்களைக் கொடுத்தாலும், இரண்டாவது மனைவி யார் என்ற விவரங்களைக் கொடுக்கவில்லை. முதல் மனைவியின் மகன் ஆசிக் மீரா [M. Asick Meera]. முஸ்லிம் என்பதால் ஜெ இவருக்கு சந்தப்பம் கொடுத்து பதவிக்கு வரவைத்தார்[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதி என்பதால், முஸ்லிமுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று கொடுக்கப்பட்டது என்று தி ஹிந்து விளக்கம் அளித்தது.
ஆசிக்மீராவின்புராணம்: அமைச்சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் கார் விபத்தில் அவர் இறந்துபோனார். மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புக் கொடுத்து திருச்சி மாநகர துணை மேயர் ஆக்கினார் ஜெயலலிதா[8]. 27-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. கவுன்சிலர் ஆசிக்மீரா துணை மேயர் வேட்பாளராகி இருக்கிறார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிக்மீரா பிளஸ்-2 படித்து இருக்கிறார். வயது 30. திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் ஜாகிதா பேகம். ஆயிஷா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. துணை மேயர் பதவி கிடைத்தது குறித்து ஆசிக் மீரா கூறியதாவது, முதல்- அமைச்சர் அம்மா வழி காட்டுதல்படி திருச்சி மாநகராட்சியை மேம்படுத்த உழைப்பேன். என் தந்தை விட்டுச் சென்ற பணியை தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்[9].
பிச்சை மனைவிகளுக்குள் சண்டை ஆரம்பித்தது: ஆசிக் மீரா துணை மேயரான பின்பு, கஸ்தூரி எனது தந்தையின் மனைவி கிடையாது. எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர் என்று சொல்லி கஸ்தூரிக்கு வாரிசு சான்று கொடுக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது அப்பாவின் மனைவி என்பதை மறுக்கவில்லை. அதாவது முதல் மனைவியின் மகன், இரண்டாவது மனைவியின் மீது புகார் கொடுத்தாராம். இருப்பினும், மரியம்பிச்சையின் மூன்றாவது மனைவிக்கான ஆதாரங்களை காட்டி, வாரிசு சான்றிதழ்களை வாங்கிவிட்டதாக கஸ்தூரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எனது பூஜை அறையில் எனது கணவரின் புகைப்படத்தை வைத்து தெய்வமாக வணங்கி வருகிறேன். வாரிசு சான்றிதழ் வாங்கியப் பிறகு, என்னை வீட்டை விட்டு ஆசிக் மீரா வெளியேற்றிவிட்டார். முஸ்லிம்களில் அப்பா ஒருவர், தாயார் மூவர் என்றால், இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.
அரசியல் ஆதாயத்திற்காக, முஸ்லிம் குடும்பம் போட்ட சண்டை: ஆசிக் மீரா தன்னுடைய மூன்றாம் மனைவியான கஸ்தூரியை விடவில்லை போலும். கட்சி அலுவலகம், கட்சி பணிகளில் ஈடுபடக் கூடாது, கட்சி சார்பில் தேர்தல்களில் நிற்கக் கூடாது என்று கஸ்தூரியை மிரட்டினார். “சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல் அமைச்சர் பிரச்சாரத்திற்கு சென்ற நாளில் நானும் சென்றேன். அப்போது சங்கரன்கோவிலுக்கு சென்றது ஏன் என்று போனில் மிரட்டினார் என்று கூறினார் கஸ்தூரி. மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி அல்லது மகன் ஆசிக் மீராவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று பரவலான பேச்சும் இருந்தது. ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பரஞ்சோதிக்கு ஸீட் கொடுத்தார் ஜெயலலிதா[10]. அதாவது அம்மா ஏற்கெனவே ஆசிக்குக்கு வாய்ப்பு கொடுத்ததால், மேலும் கொடுக்கத் தயாராக இல்லை போலும். இருப்பினும், முஸ்லிம் குடும்பம் சண்டை போட்டுக் கொண்டு, அதிக இடங்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டனர் போலும்.
திருச்சி துணைமேயர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு [11] (மார்ச் 2014): தற்போது, அப்பதவிக்கு, ஒரு பெண் வடிவில், ஆபத்து காத்திருக்கிறது, என்று தினமலர் ஆசிக்குக்கு பரித்து கொண்டு பேசுவது போல செய்தியை வெளியிட்டுள்ளது. திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த, ரஞ்ஜித் சிங் ராணா மகள், துர்கேஸ்வரி, 28. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, புகார் அளிக்க வந்தார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது[12]: “”நான் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கில் இன்ஷூரன்ஸ் ஆபீஸரா வேலைசெய்து வந்தேன். அப்போது அறிமுகம் ஆனவர்தான் ஆசிக் மீரா. தன்னை மரியம்பிச்சையின் கார் டிரைவர்னு சொல்லிகிட்டார். “என்னையும் என் குழந்தையையும் கொல்ல பார்க்கிறார் ஆசிக்[13]. நானும், துணை மேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரது அப்பா, ஆசிக்கை துரத்தி விட்டார். அதனால், என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரது செலவுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். அவரால், மூன்று முறை கருவுற்றேன். இப்போது குழந்தை வேண்டாம்’ என, மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவரது அத்தை, மைமூன் நிஷாவின் மகள், சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார்”. அதாவது, துர்கேஸ்வரியுடன் கள்ள உறவு கொண்டிருக்கும் போதே, சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.
இஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை: துர்கேஸ்வரி தொடர்கிறார், “இதுபற்றி கேட்டபோது, “எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை. கவலைப்படாதே… நீ தான் என் முதல் மனைவி”, என்றார். அவர் மீதான நம்பிக்கையால் அமைதியாக இருந்தேன். மீண்டும் கருவுற்றேன். நண்பர்கள் மூன்று பேரை தூண்டிவிட்டு, 1 லட்ச ரூபாய் கொடுத்து, அவரது மாமியார், மைமூன் நிஷா, என்னை கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும்படி மிரட்டியதால், மனமுடைந்து, விஷம் அருந்தினேன். என் தாய் மதுமதி அளித்த புகார்படி, தாங்கள் (கமிஷனர்) நடத்திய பேச்சில், தனிக்குடித்தனம் வைத்து, பார்த்துக் கொள்வதாக ஆசிக் எழுதிக் கொடுத்தார். விஷமருந்தியதால், நான்காவது முறை கரு கலைந்தது. தனிக்குடித்தனம் சென்ற பிறகு, மீண்டும் கருவுற்றேன். எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். வாரிசு பிரச்னை வரும் எனக் கருதி, அவரது மாமியார், என் கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார்.
“நீ தான் என் முதல் மனைவி’ என, நம்பவைத்து, நான்கைந்து முறை கர்ப்பமாக்கி, மாமியார் மூலம் என் கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும், என் கணவர், ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா மற்றும் நண்பர்கள் மூன்று பேர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு, கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் சென்றதால், பொன்மலை போலீசில், புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை வாங்கவில்லை. சம்பந்தப்பட்ட பொன்மலை ஸ்டேஷனில் புகார் கொடுக்க அறிவுருத்தப்பட்டது.
ஆசிக் மீரா யார்காரணம் என்று விளக்கம் கொடுத்தது: இதுகுறித்து திருச்சி மாநகர துணை மேயர் ஆசிக் மீரா கூறியதாவது[14]: அப்பெண்ணை எனக்கு தெரியும். அவர் கர்ப்பத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. ஏற்கனவே இரண்டு கர்ப்பத்துக்கும் யார் காரணம்? அவரது, “ஸ்டேட்மென்ட்’ தவறாக உள்ளது. அரசியலில் என் வளர்ச்சி பிடிக்காததால், அவரை தூண்டி விடுகின்றனர். இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு, அவர் கூறினார். இவரது பேச்சும் சரியில்லை, தெரியும் ஆனால் தெரியாது என்ற தோரணை வேடிக்கையாக உள்ளது. முன்னர் கஸ்தூரி விசயத்தில் இவர் நடந்து கொண்டுள்ள முறையும் நோக்கத்தக்கது. ஒருவேளை, திருமணத்திற்காக முஸ்லிமாக மாறிய பின்னரும், அப்பெண்கள் முன்னர் போலவே, இந்துமத சம்பிரதாயங்களைப் பின்பற்றி வந்தால், இவர்களுக்கு / முஸ்லிம்களுக்குப் பிடிக்கவில்லை போலும்.
பெண் சர்ச்சையில் சிக்கும் “புள்ளிகள்‘: தினமலர், இவ்வாறு தலைப்பிட்டு, விவரங்களைக் கொடுக்கிறது:
- ஏற்கனவே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர், பரஞ்ஜோதி, டாக்டர் ராணி என்பவர், இரண்டாவது திருமணம் செய்ததாக தொடர்ந்த வழக்கால், அமைச்சர் பதவி, கட்சிப் பதவி என, அனைத்தையும் பறி கொடுத்தார்.
- அதேபோல, துறையூர் யூனியன் சேர்மன் பொன்.காமாரஜ், ஆந்திரா சிறுமியை கற்பழித்த வழக்கால், கட்சியிலிருந்தே தூக்கப்பட்டார்.
- தற்போது, ஆசிக் மீரா, பெண் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
எது எப்படியாகிலும், ஆசிக் மீரா விசயம், முஸ்லிம் சமாசாரமாக இருக்கிறது. பெண்கள் தினத்தில் புகார் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வழக்கம் போல பெண்ணிய வீராங்கனைகள் கண்டு கொள்ளாமல் இருகிகிறார்கள். அந்த ராதா-ஷ்யாம் அல்லது பைசூல்-பர்வீன் சமாசாரம்[15] போல அமுக்கி விடுவர் அல்லது அமுங்கி விடும் என்று நம்பலாம்.
© வேதபிரகாஷ்
09-03-2014
[1] Chief Minister Jayalalithaa said the CB-CID would thoroughly investigate the “mysterious” death. “Family members [of the Minister] and the public say the death is suspicious.” The CB CID will carry out an investigation and the culprits, whoever they are, will be punished, the Chief Minister said after flying in from Chennai to offer her condolences. Even as Ms. Jayalalithaa stepped on to the premises of Mariyam Theatre at Sangiliandapuram, where the body was kept for the public to pay homage, party workers raised slogans that the newly sworn-in AIADMK Minister was murdered by his political adversary and demanded strong action.
[4] http://timesofindia.indiatimes.com/city/madurai/Trichy-police-still-clueless-about-threat-phone-call/articleshow/15050020.cms?referral=PM
[7] In the run-up to the by-election, there was much speculation here on whom Muslims, who form a sizeable chunk of voters in the constituency, would support given the ‘discontent’ in the community. The by-election results disproved the contention. Mr. Meera’s nomination for ward No.27 has appeased the community. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mariam-pichais-son-all-set-to-become-tiruchis-deputy-mayor/article2578542.ece
[13] நக்கீரன், திருச்சிதுணைமேயர்மீதுஇளம்பெண்பரபரப்புகுற்றச்சாட்டு, சனிக்கிழமை, 8, மார்ச் 2014 (18:48 IST)
[14] தினமலர், கருவைகலைக்கசொல்லிகணவர்மிரட்டுகிறார்‘ : அ.தி.மு.க., துணைமேயர்மீது 8 மாதகர்ப்பிணிபுகார், மார்ச்.9, 2014.
அண்மைய பின்னூட்டங்கள்