Archive for the ‘கள்ளநோட்டுகள்’ category

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-six

குண்டுவெடிப்புகளில் காணப்பட்ட தமிழக தொடர்புகள், இணைப்புகள், சம்பந்தங்கள்: தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் உள்ள 6 நீதிமன்ற வளாகங்களில் தொடர்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே விதமாக நிகழ்த்தப்பட்டதால் இந்த சம்பவத்தில் ஒரே குழுக்கள்தான் ஈடுபட்டு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிர‌ஷர் குக்கர், டிபன் பாக்ஸ் மற்றும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தபோது இந்த வகையான வெடிகுண்டுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பிர‌ஷர் குக்கர் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மதுரையில் உள்ள பிரபல கடையில் வாங்கப்பட்டதையும் உறுதி செய்த அதிகாரிகள் தீவிரவாத குழுக்கள் மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தான் தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டான்.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting
தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் கைது மதுரையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டனவா? : இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் துப்புதுலக்கப்பட்டது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டார். இதனிடையே தடை செய்யப்பட்ட அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த சுட்டு கொல்லப்பட்ட இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளி மதுரை நெல் பேட்டையை சேர்ந்த சம்சுதீன் (24) என்பவரையும் நேற்று கைது செய்தனர். இவரும் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சதி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

திருவான்மியூரில் கைதான சுலைமான் தான் தலைவன்: பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே உள்ள இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பல மணி நேரம் விசாரித்தனர். தென்மாநிலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கான காரணங்கள் குறித்தும் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கைதான தீவிரவாதிகள் பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த இயக்கத்தில் உள்ள சர்வதேச குழுக்களுடன் அடிக்கடி போனில் பேசிய தும் தெரியவந்துள்ளது. மதுரையில் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து சதி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அதன் பேரிலேயே குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் வெடிபொருட்களை வைத்துக் கொள்வதில்லை. சதி திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது வெடிபொருட்களை வாங்குதை வழக்கப்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, மிகவும் கவனமாக எல்லா ஆதாரங்களையும் மறைப்பதில்-அழிப்பதில் திறமையாக செயல்படுகின்றனர்.

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

சுலைமான் செயல்பட்ட விதம்:  “தி பேஸ் மூமெண்ட்” என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கிய இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன் தலைவராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பெற்றோரிடம் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறுவர். சில வாரங்கள் மறைந்திருந்து குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு டிப்-டாப்பாக வீட்டுக்கு வருவதால் பெற்றோர்களுக்குகூட இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்கு விரோதிகளாக செயல்படும் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் இவர்கள் தீவிரமாக ஆலோசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக, இவ்வாறு தமிழகத்தின் பல நகரங்களில் செயல்படும் தீவிரவாதிகள், கேரளாவுக்கு சகஜமாக சென்று வரும் போக்கு, பெங்களூரில் உள்ள தொடர்புகள், ஹைதராபாத் (தெலிங்கானா) இணைப்புகள், இவை எல்லாமே சென்னையை தீவிரவாத-பயங்கரவாத பகுதியில் கொண்டு வந்துள்ளது.

moideen-is-operative-ie-cutting-25-10-2016

சிரியாவுக்கு சென்று .எஸ்சில் சேர திட்டம் போட்ட சதி சென்னையில் தான் நடந்தது[1]: என்.ஐ.ஏவின் ஆவணங்களிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்சில் சேருவது என்ற திட்டம் / சதி “அபுதாபி திட்டம்” சென்னையில் தான் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது[2]. முன்னர் ஜனவரி 2016ல் தமிழகம், தெலிங்கானாவில் கைதான எட்டு பேர்களிடம் நடத்திய விசாரணை, பின்னர் சரிபார்த்த விவரங்கள் மூலம் இது உறுதியாகிறது[3]. இதற்காகாக வேண்டிய பணம் பலவழிகளில் திரட்டப் படுகின்றன. முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து நிதி வசூலிக்கப் படுகிறது. ஐ.எஸ்சிற்கு இப்பணம் உதவுகிறது என்று தெரிந்தும் கொடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான், யாராவது கைதானாலும், அதைப் பற்றிய செய்திகள் வந்தாலும், ஒன்றுமே நடக்காதது முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், போராட்ட குழுக்கள் இருக்கின்றன. சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா குண்டு வீசினால் போராட்டம் நடத்தும் இவர்கள், இச்செய்திகள் வரும் போது காணாமல் போகிறார்கள்.

Name in English பெயர் ஊர் / மாநிலம்
Adnan Hussain from Karnataka[4] அட்னன் ஹுஸைன் பட்கல், கர்நாடகா
Mohammed Farhan from Maharashtra மொஹம்மது பர்ஹன் மஹாராஷ்ட்ரா
Sheikh Azhar Al Islam from Kashmir. ஷேக் அஸ்ர் அலி காஷ்மீர்
Abdul Basith, a youth from Hyderabad அப்துல் பஸித் ஹைதரபாத், தெலிங்கானா
Sultan Armar சுல்தான் அர்மர்
Shafi Armar. சஃபி அர்மர்
Subahani Haja Mohiddheen சுபஹனி ஹாஜா மொஹிதீன் கடையநல்லூர், தமிழகம்
Suwalik Mohammed சுவாலிக் முகமது (26) கொட்டிவாக்கம், சென்னை
Suliman  சுலைமான் திருவான்மியூர்

இப்படி சென்னையிலேயே கைது செய்யப்பட்டதும், இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால், சென்னையில் உள்ளவர்களின் சம்பந்தமும் இதில் வெளியாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-2017

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seized

[1] One.India.com, REVEALED: Conspiracy to recruit into the IS hatched in Chennai, Written by: Vicky Nanjappa, Published: Saturday, February 11, 2017, 11:33 [IST]

[2] http://www.oneindia.com/india/revealed-conspiracy-to-recruit-into-the-is-hatched-in-chennai-2344903.html

[3] According to NIA case records, a criminal conspiracy was hatched “in Chennai and other parts of the country by forming a terrorist gang which raised and received funds, organised camps, recruited and trained some persons, and facilitated their travel to Syria, to join ISIS”.

Indian Express, Abu Dhabi module recruited nine Indians for Islamic State, sent some to Syria: NIA probe, Written by Johnson T A | Bengaluru | Published:February 11, 2017 3:59 am.

http://indianexpress.com/article/india/abu-dhabi-module-recruited-nine-indians-for-islamic-state-sent-some-to-syria-nia-probe-4518611/

[4] Adnan Hussain, 34, an accountant from Bhatkal town who had been working in the UAE since 2012, had emerged on the radar of police after he was found to have transferred funds to the account of Abdul Basith, a youth from Hyderabad who had been recruited to join the IS by Indian recruiters Sultan Armar and Shafi Armar. Adnan Hussain, alias Adnan Damudi, transferred funds to an account linked to Basith to enable him to travel to Syria along with four others recruited from Hyderabad but the trip came to an abrupt end after the families of the youths got wind of their plan and sought help to bring them back.

 

எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!

ஜனவரி 31, 2016

எங்களுக்கும், கள்ளநோட்டு விநியோகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த முஸ்லிம் அமைப்பு சொன்னாலும், முஸ்லிம்கள் அதில் ஈடுபட்டுள்ளதை கவனிக்க வேண்டும்!

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்.முரசு

அதிரையில் அதிகரிக்கும் கள்ள நோட்டுக்கள்! பரிதவிக்கும் மக்கள்! கண்டறிவது எப்படி!: இதே போல இன்னொரு முஸ்லிம் இணைதளம், “அதிரை தற்போது சில வருடங்களாக கள்ள நோட்டுக்களில் புழக்கம் அதிகரித்துள்ளது என்று மார்ச்.2015ல் கூட விவரங்களை வெளியிட்டுள்ளது[1]. சமுக விரோதிகள் தங்களின் ஆதாயத்திற்க்காக கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றனர். இவ்வாறு வரும் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைரல் போல் ஊரெங்கும் பரவுயுள்ளது. அதிகளவில் பணம் பரிவர்த்தனை நடக்கும் இடங்களில் தான் இவ்வாறான நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இவ்வாறு கள்ள நோட்டுக்கள் அதிகம் 500, 1000 ரூபாய்களில் தான் அச்சடிக்கப்படுகின்றன. இதனால் அதிகளவில் துயரப்படுவது அப்பாவி மக்களே! கள்ள நோட்டை கண்டுபிடிக்கத் தெரியாத அப்பாவி மக்கள் அந்த பணத்தை வங்கியில் செமிக்க முனையும் போது பரிதாபமாக சிக்கிக் கொள்கின்றனர். இன்று அதிரையில் உள்ள ஒரு பிரதான வங்கியில் இதுபோல் தான் ஒருவர் தன் கணக்கில் பணம் செலுத்துவதற்க்காக வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என கண்டுபிடிக்கப்பட்டது கண்டு அதிர்ந்தார். உடனே வங்கி மேலாளர் அந்த பணத்தை கிழித்து அந்த நபரை எச்சரித்து அனுப்பினார். இது குறித்து அந்த அப்பாவி நபர் கூறுகையில் யாரிடம் பணம் வாங்கினேன் என்று எனக்கு தெரியவில்லை. உழைத்து சம்பாதித்த பணம் போய்விட்டது என மனக்குமுறலுடன் சொன்னார். எனவே இது போல் நாமும் ஏமாற்றப்படாமல் இருக்க ஒவ்வொருவரும் கள்ள நோடுக்களை அறிவது எப்படி என அறிந்து வைத்துக்கொள்வது அவசியம்”, என்று அறிவித்தது. பணம் என்ற விசயம் வரும்போது உஷாராகத்தான் இருக்கிறார்கள்.

Fake INR circulation in TN. how distributedதமிழகத்தில் மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[2]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஜூலை 2015ல் தீர்ப்பளித்தார்[3]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் தமிழகத்தில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[4]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[5]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

Fake INR circulation in Tamilnaduபாகிஸ்தான், பங்களதேசம், தமிழகம் தொடர்பு எப்படி?: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கள்ளநோட்டு புழக்கம் மற்றும் வழக்குகளும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கள்ளநோட்டு வழக்குகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாகிஸ்தானில் அச்சடிப்பு இந்தியாவிற்கு பாகிஸ்தான் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல்வேறு தொல்லை கொடுத்து வருகிறது[6]. ஒரு பக்கம் தீவிரவாதிகளை ஏவிவிட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி நாசவேலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் சதித்திட்டங்களையும் பாகிஸ்தான் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு கொண்டு போகப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் புழக்கத்திற்கு விடப்படுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது போல அனுப்பி, அவர்கள் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகிறது[7].

Fake INR circulation in TNதமிழகத்தில் ஊடுருவல்: தமிழகத்திற்குள்ளும் கட்டிட வேலை செய்பவர்கள் போலவும், ஓட்டலில் வேலை பார்ப்பவர்கள் போலவும், பிளாட்பாரங்களில் கடைபோட்டு துணி விற்பவர்கள் போலவும் கள்ளநோட்டு கும்பல் ஊடுருவி வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பெரும்பாலும் புழக்கத்தில் விடுகிறார்கள். தமிழகத்தில் கள்ள நோட்டு கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது வேட்டை நடத்துகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகர போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆதரவு உளவாளிகள் ஜாகீர் உசேன் உள்பட 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் முச்லிம்கள் என்பதில் தான் சந்தேகம் எழுகின்றது.

Fake INR circulation in Tamilnadu- tirupur two arrested2011ல் 1400 வழக்குகள் என்றிருந்து 2015ல் 1313 என்று குறைந்தது: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது குறைந்துள்ளது. வழக்குகள் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக போலீசார் வெளியிட்ட புள்ளி விவரக் கணக்கில் தெரியவந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 1400 கள்ளநோட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1313 கள்ளநோட்டு வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வழக்குகளில் கைதானவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் இவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள்.

Fake-Currency- two arrested in tirupurகள்ள நோட்டுகள் விழிப்புணர்வுநோட்டீஸ்[8]: இந்நிலையில், கனரா வங்கி உட்பட பல்வேறு தேசிய வங்கிகளின் சார்பில், அதன் கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், ரிசர்வ் வங்கி தகவலின்படி, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., வரிசையிலான, 1,000 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டுள்ளதால், அந்த நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 500 ரூபாய் நோட்டுகளில், 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., 100 ரூபாய் நோட்டுகளில், 4 ஏ.க்யூ., ஏ.ஏ.சி., ஆகியன கள்ள நோட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது[9]. என்னத்தான் எச்சரிக்கைகள், முதலியன இருந்தாலும், கள்ளநோட்டுகளை தடுக்க முடியவில்லை என்பது நிதர்சனமாக உள்ளது.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்முஸ்லிம்களின் தொடர்பு ஏன்?: பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட கள்ளநோட்டுகள், பங்களாதேசத்திற்கு வருகின்றன எனும் போது, அத்தனை தூரம் தாண்டி எப்படி வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது. பிறகு, அவை பங்களாதேச ஊடுருவல்காரர்கள் மூலம், விநியோகிக்கப் படுகிறது, தமிழகத்திலும் வருகிறது எனும் போது, இவையல்லாம் திட்டமிட்டு, ஒரு ஒருங்கினைப்போடு செயல்படுகிறது என்றாகிறது. பிறகு சம்பந்தப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம்கள் எனும் போது, அவர்கள் எப்படி, ஏன், எவ்வாறு அத்தகைய தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது, அதைவிட வியப்பாக இருக்கிறது. அதிரை எக்ஸ்பிரஸ் கவலைப்படுவது போல, எல்லா முஸ்லிம் அமைப்புகளும் கவலைப்படலாமே. சகோதரர்களுக்குச் சொல்லி தடுக்கலாமே? பீஹார், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் நடப்பவை, ஏன் தமிழகத்தில் நடக்க வேண்டும்?

 

© வேதபிரகாஷ்

31-01-2016

[1] http://adiraipirai.in/?p=920

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[3] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[4] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[5] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[6] தினத்தந்தி, பாகிஸ்தானில் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள் தமிழகத்தில் கள்ளநோட்டு வழக்குகள் வெகுவாக குறைந்தன, மாற்றம் செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள், ஜனவரி 25,2016, 1:20 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/State/2016/01/25012002/Fake-notes-being-pushed-into-tamilnadu-via-pakistan.vpf

[8] தினமலர், தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம், ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி , பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016,23:16 IST

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1439396

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது – பின்னணி என்ன?

ஜனவரி 31, 2016

கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது பின்னணி என்ன?

 தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டுகளுடன்

காரில் சென்று கொண்டே கள்ளநோட்டைக் கொடுத்து தின்பண்டங்கள் வாங்கிய கூட்டம்: தமிழக ஊடகங்கள் வழக்கம் போல, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு 29-01-2016 அன்று நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் வந்தது, கடையில் இருந்த சிறுவனிடம் ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து ரூ.60க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை வாங்கி சென்றது, தொடர்ந்து அடுத்துள்ள உள்ள மாடசாமி என்பவரது  மிக்சர் கடையிலும் ஆயிரம் ரூபாயை கொடுத்து  ரூ.80-க்குப் திண்பண்டம் வாங்கி மாற்றி சென்றது[1], இதேபோல் அண்ணாசிலை அருகில் உள்ள பழக்கடை ஓன்றிலும் இவ்வாறு செய்தது, இதனால் சந்தேகமடைந்த பிஸ்ட் கடை உரிமையாளர் கண்ணனுக்கு ரூபாய் நோட்டு மீது சந்தேகம் ஏற்பட்டது, அருகிலுள்ள தனியார் வங்கிக்கு / எதிரே உள்ள ஐ.சி.ஐ.சி. வங்கியில் சென்றது, அந்த ஆயிரம்  ரூபாய் நோட்டை காட்டியது, சோதனையில் அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது, என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். பிறகு, இதுபற்றி கண்ணன் போலீசில் புகார் செய்தார்[2] என்று தொடர்ந்தன.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல், 4 பேர் கைது

போலீஸார் சோதனையில் கார் பிடிபட்டது: திருப்புத்தூர் டவுன் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் கள்ளநோட்டு கும்பல் குறித்து மைக்கில் தெரிவித்து உஷார்படுத்தினர். எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால், இந்த குறிப்பிட்ட காரும் அவ்வழியாகச் சென்றது. அப்பொழுது, அந்த வழியாக காரில் வந்த கள்ளநோட்டு  கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி 30 ஆயிரம் ரூபாய், மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[3]. காரில் இருந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து  எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு. பறிமுதல்

விசாரணையின் போது வெளிவந்த விவரங்கள்: போலீஸ் விசாரணையில், அவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன.

  1. தஞ்சாவூரைச் சேர்ந்த அன்சாரி மகன் முகமது ஸாகிப் (27) என்று தினமணியும்/ தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34) என்று தினகரனும் கூறுகின்றன[4],
  2. புதுத்தெரு அகமது மகன்அப்துல்லா (35),
  3. ராஜா முகமது மகன்அஜ்மல் (20),
  4. பகுர்தீன் மகன்மீரான்முகைதீன் (32)

என தெரியவந்தது[5].  அவர்களிடமிருந்து கள்ளரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரான அமீர் அப்பாஸ் என்பவரது கார் என்பதும், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அவரிடம் காரை வாங்கி, கள்ள நோட்டுகளை கடத்தி வந்து அபிராமபட்டினத்திலிருந்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது[6]. அவர்களிடம் திருப்பத்தூர் ஆய்வாளர் செங்குட்டுவன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்[7].

தவ்ஹீத் ஜமா-அத் சின்னம்

தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது: இவ்வாறு தலைப்பிட்டு, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் வந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணிச் செயலருக்கு சொந்தமானது என்பதும், அவரிடம் இரவல் வாங்கிக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது[8]. இவர்களுக்கு கள்ளநோட்டைக் கொடுத்த முக்கிய நபர் மன்னார்குடியில் வசிப்பது தெரியவந்துள்ளது. எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, அவரைத் தேடி போலீசார் மன்னார்குடிக்கு சென்றுள்ளனர்[9]. காரை எந்த காரணத்திற்கு, யாரிடமிருந்து வாங்கி வந்தாலும், கள்ளநோட்டு விநியோகத்திற்கு உபயோகப்படுத்தப் பட்டதும், அதே காரில் கள்ளநோட்டுகள் பிடிபட்டதும் மறுக்கமுடியாது. இது முஸ்லிம்கள் பிரச்சினையல்ல, பொது பிரச்சினை என்று சொல்லமுடியாத அளவிற்கு, முஸ்லிம்கள் தான் ஈடுபட்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல் கள்ள நோட்டு

முஸ்லிம்களின் எச்சரிக்கை: அதிரை எக்ஸ்பிரஸ் என்ற முஸ்லிம் இணைதளம், “அதிரையில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் கள்ள நோட்டு கும்பல் வியாபாரிகளிடம் கள்ள நோட்டுகளை கொடுத்து அவர்களிடம் பொருள்களை வாங்கி செல்லும் அவலம் தொடர்ந்து அதிரையில் ஒரு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டு இருப்பதாக கூறபடுகிறது[10]. 500ரூ மற்றும் 1000 ரூபாய்கள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது.  இதில் அதிரை பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று அதே நாளில் வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது[11].  அதிராமபட்டினம் என்பதனை முஸ்லிம்கள் அதிரை என்று சொல்லிவருகின்றனர். இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ராஜாநகர் முகமதுஹனீப் (34). இங்கு, “குறிப்பாக பெண்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றுவதாக கூறப்படுகிறது” என்றுள்ளது. இங்கு சிறுவனிடம் கள்ளநோட்டு கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றுள்ளது.

காலைமலர், தவ்ஹித் கார் கள்ளநோட்டு

தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?[12]: காலைமலர் என்ர இணைதளத்தில், இத்தகைய மறுப்பு காணப்படுகிறது, “புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர். ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்தார் TNTJ மாவட்ட நிர்வாகி, இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை[13]. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S. அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்கள் நினைவிருக்கிறதா? அதேப்போன்று இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.அயோக்கியர்களின் அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் அது பொய் என நிரூபனம் ஆனது”. அதாவது, “இந்த சம்பவத்திற்கும் TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை”, என்கிறதே தவிர, முஸ்லிம்களுக்கும் கள்ளநோட்டு பட்டுவாடா, விநியோகம் முதலியவற்றிற்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அப்படியென்றால், இது அவர்களுக்குள் உள்ள பிரச்சினை போன்று காட்டிக் கொள்ளப்பார்க்கிறார்களா?

 

© வேதபிரகாஷ்

31-01-2016


 

[1] தினமணி, திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது, By திருப்பத்தூர், First Published : 29 January 2016 01:38 AM IST.

[2] தமிழ் முரசு, கள்ளநோட்டு கடத்தி வர பயன்பட்ட தவ்ஹித் ஜமாத் நிர்வாகி கார் பறிமுதல்: 4 பேர் கைது, 1/29/2016 4:42:49 PM

[3] தினகரன், கள்ளநோட்டு கும்பல் கைது, பதிவு செய்த நேரம்:2016-01-29 10:06:08

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=531507&cat=504

[5] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309

[6] – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=87309#sthash.AlvR6D0J.dpuf

[7]http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2016/01/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/article3249987.ece

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1444690

[9] தினமலர், கள்ளநோட்டு கும்பலை பிடிக்க மன்னார்குடிக்கு போலீஸ் விரைந்தது, ஜனவரி.29.2016:23.51.

[10] அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை மக்களே உஷார், Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 1/29/2016 07:54:00 PM.

[11] http://www.adiraixpress.in/2016/01/blog-post_470.html

[12]  காலைமலர், தவ்ஹீத் ஜமாஅத் கார் பறிமுதலாநடந்தது என்ன?, By Mathiyalagau, Jan 30, 2016.

[13] http://kaalaimalar.net/tntj-car-cheesed/

ஹிஜ்-உல்-முஜாஹித்தீன், லஸ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!

நவம்பர் 20, 2015

ஹிஜ்உல்முஜாஹித்தீன், லஸ்கர்தொய்பா, ஹர்கத்உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!

G 20 leaders Turkeyஜி-20 மாநாடும், நிதியுதவி தடுப்புகட்டுப்பாடு கண்காணிப்பு அமைப்பின் பரிந்துரைகளும்: ஜி-20 [The G20 nations] மாநாடு நவம்பர் 15 முதல் 16 வரை அனட்ல்யா, துருக்கியில் நடைபெற்றது. 13-11-2015 அன்று பாரிசில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு உடனடியாக நடந்ததால், இம்மாநாட்டில் தீவிரவாதம்-பயங்கரவாதம் முக்கியமான பிரச்சினையாகியது. முன்னர் ரஷ்ய விமான தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்பொழுது, உலகமெங்கும்செயல்பட்டு வருகின்ற ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அந்த இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், நிதி உதவியும் செய்கின்றன போன்ற விசயங்கள் விவாதிக்கப்பட்டன[1]. அப்பொழுது, பயங்கரவாத அமைப்புகளுக்கு, நிதி கிடைப்பதை தடுக்கும் வகையில், சர்வதேச அளவில், நிதியுதவி தடுப்பு-கட்டுப்பாடு கண்காணிப்பு அமைப்பு [Financial Action Task Force (FATF) – எப்.ஏ.டி.இ.,] அவசர கூட்டத்தில் சில பரிந்துரைகளை வெளியிட்டது. 1989ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், சர்வதேச அளவில் தீவிரவாதக் குழுக்களுக்கு பணம் எப்படி கிடைக்கிறது, யார் கொடுக்கிறார்கள் போன்றவற்றைப் பற்றி கண்காணித்து வருகின்றது. இந்நிதி நடவடிக்கை பிரிவில்இந்தியாவும் அங்கம் வகிக்கிறது.

huji Bangaladesh

huji Bangaladesh

எல்லைகளைக் கடந்து, அனைத்து நாட்டு சட்டங்களையும் மீறும் தீவிரவாதம்பயங்ரவாதங்கள்: பிரேசில், செக் குடியரசு, லிபியா மற்றும் பாலஸ்டைன் நாடுகளில் தீவிரவாதம்-பயங்ரவாதங்களைத் தாண்டிய காரியங்களுக்கும் நிதி சென்றைகிறது[2]. தீவிரவாதம்-பயங்ரவாதங்களில் ஈயுபடுபவர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள், அவர்களுக்கு பொருளுதவி-நிதியுதவி கொடுப்பவர்கள், பதிலுக்கு அவர்களிடம் நலன்–லாபம் பெறுபவர்கள், இவற்றையே வாழ்நாள் வேலை-வியாபாரம்-தொழில் போன்று நடத்தி வருபவர்கள் என்று உலகளவில் லட்சக்கணக்கில் உள்ளனர்.

  1. தீவிரவாதம்-பயங்ரவாதங்கங்களைத் தொடர்ந்து நடத்திவருவது.
  2. அதற்கான பொருளுதவி-நிதியுதவி பெறுவது.
  3. சினிமா-போர்னோகிராபி, திருட்டு வீடியோ உற்பத்தி செய்தல், விநியோகம், விற்பனை.
  4. கள்ளநோட்டு அச்சடிப்பு-விநியோகம்.
  5. பெண்கள் – குழந்தைகள் கடத்தல், விற்றல்.
  6. போதை மருந்து உற்பத்தி செய்தல், விநியோகம், விற்பனை.
  7. ஆயுத உற்பத்தி, விநியோகம், விற்பனை.
  8. திருட்டு அகழ்வாய்வு, புராதனப் பொருட்களைக் கொள்ளையெடித்தல், விற்றல்.
  9. இவற்றிற்குண்டான தொழிற்நுட்பம், திறமை அறிந்தவர்களை தேடிபிடித்தல், வேலைக்கு வைத்தல்.
  10. ஈடுபடும் தீவிரவாத-பயங்கரவாதிகளுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்தல்.
  11. பொருளுதவி-நிதியுதவி கொடுக்கும் தனிமனிதர்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு பதிலுக்கு எல்லா வழிகளிலும் உதவுவது.

இப்படி சுழற்சிகளாக விருப்பங்கள், நாதல்கள், தேடல்கள் முதலியன உள்ளதாலும், கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதாலும், இவை ஜோராக வேலை செய்து வருகின்றன.

ஐ.எஸ் கொடி

ஐ.எஸ் கொடி

ஐஸில் மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களின் [ISIL (Islamic State of in Iraq and the Levant) and other terrorist groups] அச்சுருத்தல்: இந்நிலையில், எப்.ஏ.டி.இ., வெளியிட்டுள்ள அறிக்கை[3]: இதுகுறித்து அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஐஸில் மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களின் [ISIL (Islamic State of in Iraq and the Levant) and other terrorist groups] அச்சுருத்தல் காரணமாக, உலகம் முழுவதும் இத்தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளிக்கும் பண-பரிமாற்றம் மற்றும் தீவிரவாத-தடுப்பு நிதி முறை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, எஃப்.ஏ.டி.எஃப் அமைப்பின் பரிந்துரைகளின்படி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது[4]. அவற்றின் மூலம் பெறப்பட்ட விவரங்கள் சில பரிமாரப்பட்டன. இனைத்து ஜி-20 நாடுகளுக்கும் இவ்விசயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்தன.

Afgan opium crossing bordersஹிஜ்உல்முஜாஹித்தீன் இலக்கில் இந்தியா: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்கும் நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[5]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஹிஜ்-உல்-முஜாஹித்தீன் [Hizb-ul-Mujahideen (HM)] அமைப்பிற்கு சில வங்கிகள் மூலம் பணம் செல்வது அறியப்பட்டது. இது தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத-பயங்கரவாத காரியங்களை மேற்கொண்டு வருகின்றதுகீதனால், பெருத்த உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டு வருகின்றது. கடந்த எட்டாண்டுகளில் ரூ.80 கோடிகள் நிதி திரட்டியது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இப்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது[6]. இந்த நிதி பாகிஸ்தான், மண்ணில் வைத்து, பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள், ஆடைகள், தகவல் தொடர்புக்காகும் செலவீனங்கள் போன்றவை ஈடுகட்டப்படுகின்றன[7]. அதுமட்டுமின்றி, தீவிரவாத தாக்குதலின்போது, பதிலடியால் பலியாகும், தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகையாகவும், இந்த பணம் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது[8].

ஹக்கானியை கட்டுப்படுத்தச் சொல்லும் அமெரிகா, ஏமாற்றும் பாகிஸ்தான்லஸ்கர்தொய்பா மற்றும் ஹர்கத்உல் ஜிஹாதி இஸ்லாமி இலக்கிலும் இந்தியா: இது தவிர, லஸ்கர்-இ-தொய்பா[ Lashkar-E-Taiba (LeT)] மற்றும் ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி  [Harkat-Ul Jihadi Islami (HUJI)] போன்ற தீவிரவாத இயக்கங்களும், பணம் கொடுத்து தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கின்றன. அவர்கள் மும்பையில் நுழைந்து, பிரபங்களைத் தாக்குவது போன்ற காரியங்களில் ஈடுபடப்போவதாக தகவல்கள் கிடைத்தன. கள்ளநோட்டுகளை வாங்குவது, புழக்கத்தில் விடுவது போன்றவற்றிலும் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நபர், இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளில் சில இடங்களைத் தாக்க, கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் அளவுக்கு அச்சடிக்கப்பட்ட, கள்ளப்பணம் கொடுக்கப்பட்டது, தெரிய வந்தது[9]. இந்திய அரசு, இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை 37 பேருக்கு சொந்தமான, 3 லட்சம் ஈரோ (சுமார் ரூ.2.13 கோடி) இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது[10]. இந்த, 37 பேரும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[11].

Russian plane crash - ISIS claiming responsibility blowing with IED in softdrink canஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா: செப்டம்பர் 2013ல் ஹக்கானி என்ற இஸ்லாமிய இயக்கத்தின் பிரிவான தலிபான் குழுவொன்று தாம் தான் சுஷ்மிதா பானர்ஜியைக் கடத்திச் சென்று கொன்றதாக ஒப்புக் கொண்டது. அப்பொழுது தான் இந்தியா பல ஜிஹாதி இயக்கங்களின் இலக்கில் உள்ளது என்று தெரிய வந்தது. ஆப்கானிஸ்தானிய மவ்லவி ஜலாலுத்தீன் ஹக்கானி 1980களில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார்[12]. ஹக்கானி குழுவினர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அரேபிய வளைகுடா நாடுகள் மற்றும் அதற்கு அப்பால் தமது ஆதிக்கத்தைச் செல்லுத்தி ஆண்டு வருகின்றனர். இறக்குமதி, ஏற்றுமதி, கட்டுமானம், போகுவரத்து என்று எல்லா வியாபாரங்களிலும் நுழைந்து, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், கந்துவட்டி, பணம் பிடுங்குதல் முதலியன செய்து, பணம் பெருக்கிவருகின்றன. போதைமருந்து, ஹவாலா, பணபரிமாற்றம், போன்ற எல்லா சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றையும் “ஜிஹாத்” போர்வையில் நடத்தி வருகின்றன.

இந்தியர்கள் செய்ய வேண்டியது என்ன?: தீவிரவாதம் இந்தியாவில் நுழைந்து மும்பை தாக்குதல் என்று அனுபவித்தாகி விட்டது, பயங்கரவாதம் என்று கெண்டுவெடிப்புகளிலும் ரத்தம் கொட்டியாகி விட்டது. ஜிஹாதி என்று தினமும் எல்லைகளைக் கடந்த துப்பாக்கி சூடுகள், ராணுவ வீரர்கள் பலி, அப்பாவி மக்கள் பலி, வீடுகள் தாக்கல் என்றா நிலையும் தொடர்கிறது. அங்கங்கு உள்ளூர் ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன் போன்ற குரூர கொலைகள், கண்டுவெடிப்புகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமைதியைக் காக்க, பொருளாதாரத்தை மேன்படுத்த, ஆவண செய்யாமல், பொறுப்பற்ற முறையில் அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். தீவிரவாதத்தை மதத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது என்றாலும், மறுபடி-மறுபடி முஸ்லிம்கள் தான், உலகளவில் அச்செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். மதரீதியில் அவர்கள் அவ்வாறு பிரகடனப்படுத்திக் கொள்வதாலும், மதசித்தாந்தங்கள் மூலம் தான் தாங்கள் உற்சாகம் பெற்று நடந்து கொள்வதாலும், அவ்வாறே பேசி வருவதாலும், உண்மை வெளிப்பட்டுதான் வருகிறது. மற்ற அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் தான் இவர்களை, இவற்றைத் தடுக்க முடியும். முஸ்லிம்கள், முஸ்லிம்களை எதிர்ப்பது என்பதில் கூட, ஐசிஸ் போன்றவை ஷியாக்களைக் கொன்று வருகிறது. பிறகு, சுன்னி இஸ்லாம் தீவிரவாதம் தனிமைப்படுத்தப் படுகிறது. ஆகவே, இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்திய முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றும் இந்தியர்கள், இந்தியர்களாக செயல்பட வேண்டும். செக்யூலரிஸ போர்வையில், அரசியல்வாதிகள் செய்து வரும் போலித்தனங்களில், தாங்களும் ஈடுபட்டால், அது அவர்களை ஆதரிப்பது போலாகிறது. அதனால் தான், ஹிஜ்-உல்-முஜாஹித்தீன், லஸ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல் ஜிஹாதி இஸ்லாமி, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களின் இலக்காக உள்ள இந்தியா!

© வேதபிரகாஷ்

20-11-2015


 

[1] தினத்தந்தி, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி 37 நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் மத்திய அரசு நடவடிக்கை,மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 20,2015, 1:18 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 20,2015, 1:18 AM IST.

[2] http://www.deccanherald.com/content/512885/assets-37-entities-individuals-frozen.html

[3] தினமலர், புதுடில்லி:37 பேர் சொத்துக்கள் முடக்கம், நவம்பர்.19.21.47.

[4] தினமணி, பயங்கரவாதத்துக்கு நிதி: ரூ.2.12 கோடி வங்கி இருப்பு முடக்கம், By  புது தில்லி, First Published : 20 November 2015 03:17 AM IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1390750

[6] In related findings for India, the FATF in a report brought out last month, chronicled the use of banking channels to fund the activities of the banned terror group Hizb-ul-Mujahideen (HM). The group has carried out many attacks and killings in India including in the Kashmir Valley. The gவிற்குள்bal body, quoting official submissions made by Indian investigators to it, said the HM raised over Rs 80 crore in the last eight years for “furthering terror activities” in India. “An ongoing investigation in India alleges that Hizb-ul-Mujahideen (HM) has been receiving funds originating from Pakistan through different channels in support of its terrorist activities in India. HM is claimed to be actively involved in furthering terrorist activities in India and has raised over INR 800 million within the past eight years. This group has been designated as a terrorist organisation by India, US and the European Union.

http://economictimes.indiatimes.com/news/defence/terror-funds-india-freezes-accounts-of-over-3-dozen-suspects/articleshow/49844171.cms

[7] தமிழ்.ஒன்.இந்தியா, இந்தியாவில் தாக்குதல் நடத்த ரூ.80 கோடி திரட்டியுள்ள ஹிஸ்ப்உல்முஜாகிதீன்: திடுக் தகவல், Posted by: Veera Kumar, Published: Thursday, November 19, 2015, 11:33 [IST]

[8]   http://tamil.oneindia.com/news/international/terror-outfit-raised-over-rs-80-crore-8-years-fund-terror-in-240178.html

[9] http://economictimes.indiatimes.com/news/defence/terror-funds-india-freezes-accounts-of-over-3-dozen-suspects/articleshow/49844171.cms

[10]http://www.dinamani.com/india/2015/11/20/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82.2.12-/article3137487.ece

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/20011811/Financial-assistance-to-terrorist-organizations-Freezing.vpf

[12] Gretchen Peters, Haqqani Network Financing: The Evolution of an Industry, Harmony Program, The Compating Terrorism Center at West Point, July 2012.

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

greater-islamic-bangladesh

greater-islamic-bangladesh

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய சாதகமாக இருக்கும் பங்களாதேசத்தின் இருப்பிடம்: பங்களாதேசம், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மயன்மார், வங்காள விரிகுடா என்று சூழ்ந்துள்ளது. வடக்கில் நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இருப்பதால், பங்களாதேச தீவிரவாதிகள், இந்தியாவில் நுழைந்து, இம்மாநிலங்கள் வழியாக நேபாளம், பூடான் சென்றுவிட்டால், அங்கிருந்து தப்பித்து விடலாம். அதேபோல, உள்ளே நுழையவும் செய்யலாம். இத்தலைய பாதுகாப்பற்ற எல்லைகளின் தன்மையினைத்தான், பங்களாதேச தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு இம்மாநிலங்களை ஒட்டியுள்ள ஜார்கெண்ட், பிஹார், சிக்கிம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற மாநிலங்களில் தொடர்புகளை வைத்துக் கொண்டால், இவர்களது வலை பெரிதாகி, தப்பித்துக் கொள்ள சுலபமாகிறது. மேலும், வடகிழக்கில் கடந்த 60 வருடங்களாக இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து வரும் இயக்கங்களும், சில நேரங்களில் – பணம், போதை மருந்து, ஆயுதங்கள் – என்று வரும்போது, கைக்கோர்த்துக் கொள்கின்றன. இதனால் தான், இஸ்லாமிய ஜிஹாதிகள், பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் இணைக்கலாம் என்று பலவழிகளில் முயன்று வருகிறார்கள்.

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

ஜிஹாதிகளின் ஜார்கெண்ட் தொடர்பு (13-11-2014)[1]: கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 13-11-2014 (புதன்கிழமை) சங்கிராம்பூர் என்ற, ககூர் மாவட்டம், ஜார்கெண்டில் உள்ள ஊரில் என்.ஐ.ஏ. இரண்டு பேர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இவ்வூர், மேற்கு வங்களாத்தின் பீர்பூம் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. பீர்புமில் ஆயிரக்கணக்கான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன, போலீஸ் அதிகாரியின் மீது குண்டெரியப் பட்டது, கலவரம் ஏற்பட்டது, மூன்று பேர் கொல்லப் பட்டனர் போன்ற விவரங்கள் முன்னமே கொடுக்கப் பட்டன. ஆகவே, மாநில எல்லைகளைக் கடந்து ஈடுபட்டு வரும் இவர்களைக் கண்காணிப்பதில், இம்மாநில பாதுகாப்பு, போலீஸார் முதலியோரும் மெத்தனமாகவே இருந்து வருகின்றனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகளால் அவர்கள் நன்றாக கவனிக்கப் பட்டு வருவதால், அவ்வாறு இருந்திருக்கிறார்கள் போலும். ஜார்கெண்டில் உள்ள இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகளைக் கவனிக்க வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது[2].

how money reached khagragarh from sylhet

how money reached khagragarh from sylhet

கள்ளநோட்டுகள் தொடர்பு: என்.ஐ.ஏ 09-11-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலி / கள்ளா இந்திய ரூபாய் நோட்டுகள் [FICN – Fake Indian Currency Notes] விசயமாக ஆழ்ந்த சோதனையை மேற்கொண்டது. இந்திய பொருளாஹாரத்தை சீரழிக்கும் இந்த விசயத்தில், என்.ஐ.ஏ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது[3]. நான்கு நாட்கள் பங்களாதேசத்தில் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது, ஜே.எம்.பி மற்றும் இதர ஜிஹாதிக்குழுக்கள் இந்த கள்ள நோட்டுகள் கடத்தல் மற்றும் விநியோகங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது[4]. இந்திய-பங்களாதேச எல்லைகள், பல இடங்களில் வேலையில்லாமல் இருப்பதாலும், பாதுகாப்பு-சோதனை போதிய அளவு இன்மை, ஆளும் கட்சிகள் கொடுக்கும் ஊக்குவிப்பு ஆதரவு முதலிய காரணங்களினால், எல்லைகளைத் தாண்டி இவ்வேலைகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மற்ற இந்திய-விரோத இயக்கங்களும் இதில் ஈடுப்பட்டுள்ளன, கைகோர்த்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. ஊடுருவல்காரகளுக்கு கொடுக்கப் படும் முக்கியமான வேலையே, இந்த நோட்டுகளை விநியோகிக்கும் வேலைதான். கடந்த 2011-2014 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமாக கள்ளாநோட்டுகள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக அசாம் மாநில எல்லைப் பிரதேசங்களிலிருந்து, இக்கள்ளப்பணம் அதிகமாக நுழைந்து, மற்ற இடங்களுக்குப் பட்டுவாடா செய்யப் படுகின்றன. குறிப்பாக உபியில் அதிகமாக செல்கிறது. இப்பணம் தான், அங்குள்ள தீவிரவாத-பயங்கரவாத-வன்முறை செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

burdwan masterminds plotting

burdwan masterminds plotting

ஜியா உல் ஹக் தொடர்புகள் – 07-11-2014 அன்று கைது செய்யப் பட்டான்[5]: என்.ஐ.ஏ. அதிகாரிகள் 07-11-2014 அன்று ஜியா உல் ஹக் (மொஹம்மது பரித்தூனின் மகன்) என்பவனை கைது செய்தனர். இவன் மறைந்து வாழும் ரிஜாவுல் கரீம் மற்றும் யூசுப் ஷேக் அல்லது மௌலானா யூசுப்பின் கூட்டாளி ஆவான். மஸ்ஜித் தல்ஹாவில் (காக்ராகர், பர்த்வான்) தங்கியிருந்தபோது பிடிபட்டான். இவன் ஜிஹாதித்துவத்துவை புதியவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளவன் என்று தெரிய வந்தது. ஜிஹாதி சம்பந்தப்பட்ட வீடியோக்களை சேகரித்துத் தொகுப்பது இவனது முக்கியமான வேலை. குஜராத் கலவரங்கள், அஸாம் கலவரங்கள், ரோஹிங்கிகள் கொல்லப் படுதல் முதலியவற்றின் வீடியோக்களை வெட்டி-ஒட்டி ஜிஹாதி நோக்கில் தயாரிக்கப் பட்ட வீடியோக்களை சிமுலியா மற்றும் முகிம்நகர் மதரஸாக்களில் போட்டுக் காண்பிப்பது வழக்கம். இவற்றை மற்ற “ஹை-டெக்” ஜிஹாதிகள் இணைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இவன் இப்பொழுது தப்பி மறைந்து வாழும் ஜே.எம்.பியின் தளபதி, சஜித் மற்றும் சகிப் என்கின்ற சுமன் முதலிவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். மால்டாவின் அவனது வீட்டில் சோதனையிட்டபோது, கிடைத்த லேப்டாப்பில், இவ்விசயங்கள் இருந்தன. பர்த்வான் குண்டுவெடிப்புப் பிறகு, ரிஜாவுல் கரீம் லேப்டாப்பை ஜியா உல் ஹக்கிற்குக் கொடுத்தான். ஆக இந்த இளைஞர்கள் எல்லாவற்றிலும் பயிற்சியளிக்கப் பட்டு தயார் செய்யப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

08-11-2014 அன்று எஸ்.கே. ரஹமத்துல்லா கைது[6]: எஸ்.கே. ரஹமத்துல்லா என்கின்ற எஸ்.கே. புர்ஹான் (லெப்னினென்ட். சித்திக் மியா அலியின் மகன்) பொலீஸாரால் கைது செய்யப் பட்டான். ஜெசோர் ரோடில் கைது செய்யப் பட்டு என்.ஐஏவிடம் ஒப்படைக்கப் பட்டான். ஜே.எம்.பியின் பர்த்வான்-திட்டத்தை அமைத்த முக்கிய நபர்களில் ஒருவன். இவனிடமிருந்து பல போலியான சிம் கார்டுகள், பான் கார்டுகள், EPIC, DL, முதலியன கண்டெடுக்கப்பட்டன[7]. இன்னொரு அறிக்கை, அவன் பெயர் ஷேயிக் ரஹமத்துல்லா / சஜித் / புர்ஹான் ஷேக் / சுரோத் அலி (ஆலம் ஷேயிக் / ஜானு எஸ்.கே / மறைந்த சித்திகி மியா-வின் மகன்) என்று குறிப்பிடுகிறது[8]. பங்காளதேசத்தவன், இப்பொழுது ஜார்கெண்டில் வாழ்ந்து வந்தான்[9]. பல இடங்களில் நகர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்கள், தங்களது அடையாளங்களை மாற்றிக் கொண்டு, அதற்கெற்றப் படி ஆவணங்களிலும் தங்களது விவரங்களை பலவிதமாகக் கொடுத்து வருகிறார்கள்.

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

அம்ஜத் ஷேக் / காஜல் 10-11-2014 அன்று கைது[10]: 10-11-2014 அன்று 30 வயதான அம்ஜத் ஷேக் / காஜல் (சுகுர் ஷேக்கின் மகன்) பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டான். இவனும் ஜே.எம்.பியின் உறுப்பினன், பர்த்வான் குண்டு தொழிற்சாலை திட்டத்தில் பங்குக் கொண்டவர்களில் முக்கியமாக செயல்பட்டவன். குண்டு தயாரிக்க வேண்டிய முக்கியமான ரசாயனப் பொருட்களைப் பெற்று, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தான். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, கொல்கொத்தாவில் உள்ள இவனது வீட்டை சோதனை செய்தபோது, ரசாயனப் பொருட்கள் வாங்கியதற்கான சிட்டுகள், ரசீதுகள் முதலிய கண்டெடுக்கப் பட்டன. 08-11-2014 அன்று இவன் தில்லிக்குச் சென்றுள்ளான். பிறகு உப்யில் உள்ள பஸ்தி என்ற இடத்திற்கு வந்துள்ளான். அங்கு ஒரு போலீஸ்காரன், இவன்மறந்திருக்க இடம் கொடுத்துள்ளான். பிறகு, மறுபடியும் மேற்கு வங்காளத்திற்கு சென்றபோது, அங்கு கைது செய்யப்பட்டான். ஜே.எம்.பியின் திட்டப்படி, மேற்கு வங்காளத்திலுள்ள மதரஸாக்களில் ஜிஹாதி பயிற்சிமுறைகளை அளிக்க பாடுப்பட்டவர்களில் முக்கியமானவனாக இருந்தவன்[11]. இவனைப் பற்றி துப்புத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்படிருந்தது.

24 பர்கானாஸ் மாவட்டத்தில் விமான நிலையப் பகுதியில் ஷேக் ரகமதுல்லா (40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (08-11-2014) போலீஸார் கைது செய்தனர்[12]. விசாரணையில் அவர்தான் பர்த்வான் குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய சஜித் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராவார். மேலும் அவர் மஜ்லிஸ்-இ-சுரா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தில் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் மேற்கு வங்க மாநிலம், முர்ஷீதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரில் ஒரு மதரஸா அருகே வசித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

15-11-2014

[1] http://zeenews.india.com/news/jharkhand/burdwan-blast-probe-two-picked-up-from-jharkhand_1498285.html

[2] As per GOI, MHA Oder No. 11011/67/2013-IS.IV dated 27/12/2013, NIA has taken over the investigation of the FIR No. 985/2013 dated 04/11/2013 of Kotwali (Hindpiri) Police Station, Ranchi, Jharkahnd and re- registered the case on 31/12/2013 at PS NIA, New Delhi as Case No. RC-12/2013/NIA/ under section 121, 121A, 120B, 34 of IPC, Section 16,18,20,23 of UA (P) Act, Section 3,4 of Explosive Substances Act and section 17 of Criminal Law. The accused persons are involved in commission of subversive and anti-national activities by entering into a criminal conspiracy with others and in pursuance to that they had collected explosives and other prohibited articles in concealed manner for the purpose of waging war against the Governement of India.

[3] Damage to the monetary stability of India was caused by way of transporting, smuggling and circulating of high quality counterfeit Indian Currency Notes of Rs.1000/- denomination in India. As per GOI, MHA order F. No. 11011/35/2014/IS.IV dated 16 June 2014, NIA registered a case on 25.06.2014 at PS, NIA, Delhi as Case RC-02/2014/NIA/DLI U/s -120B, 489B & 489C of IPC and Section 16 & 19 of UA (P) Act .

[4] http://bdnews24.com/neighbours/2014/11/09/nia-probing-jmbs-fake-currency-business

[5] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.

[6] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி, Arrest of SK Rahmatlla @ Sajid in RC-3/2014/NIA-DLI. – SK Rahmatlla @ Sajid @ Burhan SK, S/O Lt. Siddique Miyan Vill Farajikanda, P.O. Madangunj, P.S.Bandar, District Narayangunj, Bangladesh arrested by Police from Jessore Rode, PS Airport, around 1430 Hrs. and handed over to National Investigation Agency. He is one of the main leaders of West Bengal Module of Jamaat-ul-Mujahideen-Bangladesh. Several fake identity documents like EPIC, DL, PANCARD and other items have been recovered from his possession.

[7] http://www.nia.gov.in/writereaddata/PressRelease08112014.pdf

[8] http://www.nia.gov.in/writereaddata/PressRelease09112014.pdf

[9] STATUS REPORT AS ON 09.11.2014 IN BURDWAN BLAST CASE (NIA CASE NO. RC-03/2014/NIA-DLI)

[10] http://www.nia.gov.in/writereaddata/PressRelease10112014.pdf

[11] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.  NIA today achieved a major breakthrough with the arrest of one Amjad Sheikh@ Kajal, son of Sukur Sheikh, age 30 years, resident of Kazi market, Kirnahar, District- Birbhum (West Bengal) for his role in Burdwan blast case. Amjad Sheikh was a key member of Jamaat-ul-Mujahideen, Bangladesh (JMB) and also one of the main conspirators of the Burdwan blast case.

[12]http://www.dinamani.com/india/2014/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/article2514313.ece