Archive for the ‘கல்யாண அகதிகள்’ category

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

ஓகஸ்ட் 26, 2016

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

காதர்பாட்சா மீது 8வது மனைவி புகார். தினகரன்

பலதார திருமணங்களில் பெண்கள் சிக்குவது விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது: பலதாரத் திருமணம் நடந்து கொண்டே இருப்பது, பெண்களின் பலவீனத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறாது, ஏனெனில், இப்படி, ஒரு ஆண், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. “வேலைக்குப் போகிகிறானா, இல்லையா?” என்று கூட தெரியாமல், ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், அவாற்றையும் மீறி, இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன எனும்போது, வியப்பாக இருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணிடம் அவ்வளவு எளிதாக ஏமாந்து விடுவாளா என்று நினைக்கும் போது திகைப்பாக உள்ளது. அடிப்படையிலேயே ஏதோ தவறு-தப்பு இருப்பது தெரிகிறது. எந்த பெண்ணும் தனது கற்பை, தாம்பத்தியத்தை அவ்வளவு எளிதாகக் கொடுத்து விடமாட்டாள். அந்நிலையில், ஒரு பெண் தெரிந்து செய்கிறாள் என்றால், கற்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாகிறது. பிறகு, அது மிக்க தீவிரமான சமூகப் பிரச்சினையாகி விடுகிறது.

8 பேரை மணந்தவர் கைது - 23_08_2016_015_023

பலதார திருமணம் மற்றும் பணமோசடி என்ற குற்றங்களில் ஈடுபட்ட காதர் பாட்சா: திண்டுக்கல் பெண் உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்தவர், ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதர் பாட்சாவின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1] என்று இப்பொழுது – ஆகஸ்டில் தினமலர் செய்தி வெளியிட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், ஜூலை 25ம் தேதியே, இம்மோசடியில் சம்பந்தப்பட்ட காதர் பாட்சா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 24-07-2026 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[2]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[3] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- எட்டாவது மனைவி புகார்

சலாமியா பானு மதுரையில் கொடுத்த புகார்: பிறகு எட்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். மதுரை புதுார் இ.பி., காலனியை சேர்ந்தவர் சலாமியா பானு (28). இவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து அளித்த புகார் மனு[4]: “எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்[5]. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயாருடன் ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது[6].  கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[7].

 காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- 8வது மனைவி புகார்

ஜூன் 26.2016ல் காதர் பாட்சாவுடன் திருமணம்: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் தஸ்லிமா தனது உறவினர் பையன் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு அவரை பிடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அவர் எனது தாய், தந்தையரின் அனுமதி பெற்று தன்னை காதர்பாட்சா என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு வங்கியில் வேலை செய்வதாக கூறினார். அப்போது அவர், என்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்[8]. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்பாட்சா (32). தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் பேசி, சம்மதம் பெற்று எனக்கும், காதர் பாட்சாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு ஜூன் 26.2016ல் திருமணம் நடந்தது”.  ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தஸ்லிமா தன்னை வற்புருத்தி கல்யாணம் செய்து வைத்தாள் என்கிறார்[9].

 8 பேரை மணந்தவர் கைது - Webdunia 22-07-2016

காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லைஎன்ற தோழி: சலாமியா பானு தொடர்கிறார், “அப்போது மணமகனின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி நான் தஸ்லிமாவிடம் கேட்டேன். அதற்கு காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்றார். இவர் அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாக கூறி என்னை திருமணம் செய்தார். 2 பேரும் எனது தாய் வீட்டில் / புதூரில் உள்ள எங்களது வீட்டில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது கணவர் காதர்பாட்சா திருமணத்திற்காக வங்கியில் 40 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன் என்றார். இதைதொடர்ந்து ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அப்போது அவர் வேலை விஷயமாக ஒரு வாரம் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தார்.

 8 பேரை மணந்தவர் கைது -தினகரன் - 22-07-2016

பணம், நகையோடு மாயமான காதர் பாட்சா:  சலாமியா பானு தொடர்கிறார்,திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார்[10]. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட். 2ஆம் தேதி காதர் பாட்சா வேலை வி‌ஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றார்[11]. பின்பு என்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய், 8 பவுன் நகை, .டி.எம்., கார்டுகளை எடுத்துச் சென்றார். .டி.எம்., கார்டை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். அதன்பின்னர் ரம்ஜானுக்கு முதல்நாள் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது செல்போன்சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த 5 செல்போன் எண்களுக்கும் மாறி, மாறி போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்று எனக்கு பயம் வந்து, தஸ்லிமாவிடம் கேட்டேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் திண்டுக்கல்லில் மோசடி : தனிப்படை போலீசார் தேடல், ஆகஸ்ட்.22 2015: 23.56

[2] தினகரன், 7 பெண்களை மணமுடித்தகல்யாண மன்னன்கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1590948

[5] வெதுனியா, 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர், வெள்ளி, 22 ஜூலை 2016 (02:05 IST).

[6] தினத்தந்தி, நகை, பணத்துடன் மாயமாகி விட்டார்: 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 12:29 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 5:00 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/woman-petition-on-her-husband-he-who-married-many-women-116072200004_1.html

[9] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[10] தமிழ்முரசு, 8 பெண்களை மணம்புரிந்த கல்யாணராமன் மீது புகார், 23 Jul 2016

[11] http://www.tamilmurasu.com.sg/2016/07/23/216412367-3931.html

மோனிகாவுக்கு திடீர் திருமணம், சினிமாவில் இனி நடிக்க மாட்டார், வீட்டை விற்பனை செய்யப் போகிறார்- தமிழர்களுக்குத் தேவையான முக்கியமான செய்திகள்!

ஜனவரி 14, 2015

மோனிகாவுக்கு திடீர் திருமணம், சினிமாவில் இனி நடிக்க மாட்டார், வீட்டை விற்பனை செய்யப் போகிறார்- தமிழர்களுக்குத் தேவையான முக்கியமான செய்திகள்!

மோனிகா-மாலிக்-திருமணம்-நிக்காஹ்

மோனிகா-மாலிக்-திருமணம்-நிக்காஹ்

அம்மா ஹிந்து, அப்பா கிரிஸ்டியன், கணவன் முஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம்: மோனிகா பற்றிய முந்தைய பதிவில் அவரைப் பற்றிய விவரங்கள், ஊடகங்கள் எப்படி அவரை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றன மற்றும் இவரும் அதை வைத்துக் கொண்டு விளம்பரம் தேடுகிறார் போன்றவற்றைக் கொடுத்துள்ளேன்[1]. அப்பா மாருதிராஜ் கிருத்துவர், அம்மா கிரேஸ் இந்துவாம், இப்படி செக்யூலரிஸக் கலவையில் பிறந்து, இவர் முஸ்லீமாக மாறி முஸ்லிமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறது போலும்அதுவும் 2010லேயே முஸ்லிமாக மாறிவிட்டபோது, அவை கண்டுகொள்லவில்லை, ஆனால், 2014ல் முழித்துக் கொண்டன போலும்! நிச்சயமாக இதனைசெக்யூலரிஸசித்தாந்திகளும் இனி எடுத்துக் கொண்டுதுலுக்க நாச்சியார்போன்று உதாரணம் காட்டிடாமாரம்அடிக்கலாம்! ஆனால், “அம்மா ஹிந்து, அப்பா கிரிஸ்டியன், கணவன் முஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம்”, என்ற பார்முலாவில் தான் ஏதோ இடிக்கிறது.

 

மோனிகா நிக்காநாமா கையெழுத்து

மோனிகா நிக்காநாமா கையெழுத்து

ரேகா, பர்வானா, மோனிகா, ரஹீமா: அவசர போலீஸ் 100 படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மோனிகா. தொடர்ந்து என் ஆசை மச்சான் படத்திலும் இந்திரா படத்திலும் ஒரு பாடலுக்கு வந்து போனார். பின்னர் அழகி படம் மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தார். பகவதி, சண்டக்கோழி, சிலந்தி, குறும்புக்கார பசங்க, நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரையும் எம்.ஜி. ரஹிமா என்று மாற்றிக் கொண்டார். என்கிறது இப்பொழுதும் ஊடகங்கள். ஆனால் இவர் இப்பொழுது பெயர் மாற்றியுள்ளதற்கும் முன்பு பல பெயர்களை வைத்துக் கொண்டுள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. முதலில் அவரது பெயர் ரேகா மாருதி ராஜ். மலையாளப் படங்களில் நடிக்கும் போது, அவரது பெயர் பர்வானா. தமிழ்-தெலுங்குப் படங்களில் நடித்தபோது, மோனிகா. இப்பொழுது ரஹேமா / ரஹீமா[2]. அதாவது எம்.ஜி. ரஹீமா = மாருதிராஜ் கிரேஸி ரஹீமா. இனி இன்னொரு “எம்”ஐ சேர்க்கவேண்டும் போலிருக்கிறது! சரி எப்படித்தான் அவர் பிறப்பு சான்றிதழ், பேன்-கார்டு, பாஸ்போர்ட் முதலியவற்றை வாங்கினார் என்று தெரியவில்லை.

மாலிக் நிக்காநாமா கையெழுத்து

மாலிக் நிக்காநாமா கையெழுத்து

சினிமாவில் நடிக்க மாட்டார், வீட்டை விற்க்கப் போகிறார்: மாலிக் சென்னயில் உள்ள ஒரு தொழிலதிபர். இவர் மோனிகாவின் தந்தையின் நெருங்கிய நண்பருடைய மகன்[3], என்கிறது ஒரு நாளிதழ். அதாவாது மாருதிராஜின் நண்பருடைய மகன். மேலும் இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்[4], என்று இப்பொழுதும் செய்திகளாக வெளியிட்டுள்ளன, ஆனால், “மதம் மாறியதற்குப் பிறகு படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.  இந்த முடிவு வருத்தத்தைத் தந்தாலும், அதில்எந்த மாற்றமும் இல்லை,” என்றார், என்று கடந்த மே.2014லேயே சொன்னதாக, இதே ஊடகங்கள் ஊளையிட்டிருந்தன. இந்நிலையில் மோனிகாவிற்கு அவரது குடும்ப நண்பரான மாலிக் என்பவருடன் நந்தம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (11-01-2015) காலை திருமணம்  கிண்டி-மசூதியில் மிக எளிமையாக நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்[5]. மசூதியில் நிக்காஹ் நடந்தது என்ற விவரத்தைக் கூட ஒரு ஊடகம் தான் அறிவித்தது. நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை[6], என்கிறது இன்னொரு ஊடகம். அவர்கள் பங்கேற்க்கக் கூடாது என்று யாதாவது “கன்டிஷன்” இருக்கிறதா அல்லது மசூதிக்குள் அவர்கள் நுழையக் கூடாதா என்பதை குறிப்பிடவில்லை. குறைந்த பட்சம், இருக்கும் முஸ்லிம் நடிக-நடிகையர் கலந்து கொண்டிருக்கலாம், ஆனால், ஒருவேளை அவர்களுக்கெலாம் பத்திரிக்கைக் கொடுக்கப் படவில்லை போலும். மோனிகா திருமணம் முடிந்த கையோடு சென்னை போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தில் பல ஆண்டுகளாக தான் குடியிருந்து வந்த வீட்டை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்[7]. வீடு விற்பனை செய்வது குறித்து தனக்கு தெரிந்த நபர்களிடம் கூறியுள்ளாராம்[8].

மோனிகா திருமணம்.1

மோனிகா திருமணம்.1

திருமணம் செய்து கொள்ள மதமாற்றம், மதம் மாற வேண்டிய அவசியம் என்ன?: ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா தொடர்ந்து இவரும் முஸ்லீமாக மாறியுள்ளார் என்கின்றன ஊடகங்கள். ஒரு இந்து ஆனாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஏன் மதம் மாறி இன்னொரு பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எந்த அறிவிஜீவியோ, செக்யூலரிஸப் பழமோ சிந்தித்தது உண்டா என்று தெரியவில்லை. ஏன் ஒரு முஸ்லீம் அல்லது கிருத்துவ ஆண் அல்லது பெண் மதம் மாறி ஒரு இந்து பெண் அல்லது ஆணைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது? இது ஏன் ஒருவழி பாதையாகவே இருந்து கொண்டிருக்கிறது? “கௌரவம்” திரைப்படத்தில் கூட, சிவாஜி, தனது மகளைக் காதலிக்கும் காதலனை, “என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், நீ கிருஸ்துவனாக மாற வேண்டும், மாறுவாயா?” என்று கேட்பார். அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தில், ஒரு இந்து காதலி, தான் மதம் மாறமுடியாது என்று கிருஸ்துவ காதலனுக்கு தெரிவிப்பதை, பிரபலப்படுத்தி வருகிறர்கள். இவ்விசயத்தில் தான் இது “செக்யூலரிஸ” திருமணமாக இல்லாமல், “கம்யூனல்” திருமணமாக இருப்பது தெரிய வருகிறது. பிறகு ஏன் அறிவிஜீவிகள், முற்போக்கு வகையறாக்கள் இதைப் பற்ரியும் ஆராயக் கூடாது, கதைகள் எழுதக் கூடாது?

 

மோனிகா-மாலிக்-திருமணம்

மோனிகா-மாலிக்-திருமணம்

சினிமா நடிகைகள் மதம் மாறுவது பெரிய செய்தியா?:  சினிமா நடிகைகள் மதம் மாறுவது பெரிய செய்தியே இல்லை! தொழில் ரீதியில், அவர்களுக்கு லாபம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பணம், புகழ் தான் அவர்களுக்குத் தேவை. மார்க்கெட் போனால் தான், குடும்பம் அல்லது பாதுகாப்பு என்று நினைப்பார்கள்.  பணம் இருந்தால், அந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருப்பார்கள்அவர்கள் மதத்தைக் கடந்தவர்கள் என்றே சொல்லலாம். அந்நிலையில், இந்த நடிகை கவர்ச்சியாக / ஆபாசமாக நடித்து வொட்டு, இனிமேல் நான் அப்படி நடிக்க மேட்டேன், நான் முஸ்லிமாக விட்டேன் என்றால், வேடிக்கையாகத்தான் உள்ளது. முன்னர் குறிப்பிட்டப்படி, இஸ்லாம் பல பெண்களை மணந்து கொள்ள, நடிகர்கள் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது முதல் இந்து பெண்டாடியை ஏமாற்றி, இரண்டாவது பெண்டாடி வேண்டும் என்றால் முஸ்லீமாக வேண்டும் என்பது சினிமா உலகத்தில், அரசியலில் இருந்து கொண்டுதான் உள்ளது[9].

 

மோனிகா திருமணம்.2

மோனிகா திருமணம்.2

வாழ்க மணமக்கள், அவர்களது இல்லறம் சிறக்க: நடிகை இப்பொழுது ஒருவருக்கு மனைவியாகி விட்டாள், ஆக, இந்தியப் பாரம்பரியம் படி மணமக்களை வாழ்த்த வேண்டும். அவர்கள் பதினாறும் பெற்று சிறக்க வாழ்க என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம். “பதினாறு” என்றால் குழந்தைகள் அல்ல வேறு விசயங்கள் என்று பெரியவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என்றிருப்பார்களா அல்லது முஸ்லிமாகவே இருப்பார்களா என்று இந்திய செக்யூலரிஸ பண்டிதர்கள் தாம் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள், பொங்கலன்று இதற்காக ஒரு பிரத்யேகமான பட்டி மன்றமும் நடத்தலாம். “நீயா-நானா?”விலும் இதைப் பற்றி அறிவிஜீவிகளை கூட்டி வைத்து விவாதிக்கலாம். ஏனென்றால், இவையெல்லாம் தமிழக மக்களுக்கு மிகவும் வேண்டிய விசயங்கள். நாளைக்கு ஒருவேளை, நுழைவு தேர்வுகளில் கூட, ஏதாவது கேள்விகள் கேட்டு வைத்தால், இக்கால இளைஞர்-இளைஞிகள் செய்திகளைப் படித்து, தங்களது பொது அறிவை வளர்த்துக் கொண்டு தயாராக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

14-01-2015

[1] வேதபிரகாஷ், மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்!, https://islamindia.wordpress.com/2014/05/31/monica-actress-converted-to-islam-in-2010-but-announced-in-2014/

[2] Monica had many name changes. She was born Rekha Maruthiraj. For Malayalam films, she is Parwana and she took the name Monica for Tamil and Telugu films. Now she is Raheema.

http://www.sakshipost.com/index.php/entertainment/news-gossip/51912-actress-monika-alias-raheema-married.html?psource=Feature

[3] Following the conversion, she had quit her 24 – year old acting career. The groom Malik is a Chennai-based entrepreneur, also happens to be the son of Rahima’s father’s close friend.

http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Actress-Monica-gets-married/articleshow/45850871.cms

[4]http://www.dinamani.com/latest_news/2015/01/11/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article2614704.ece

[5]http://makkalkural.net/news/blog/2015/01/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87/

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=135947

[7] தினமணி, வீட்டை விற்பனை செய்யும் முடிவில் மோனிகா!, By Sasikumar Balakrishnan

First Published : 13 January 2015 11:56 AM IST

[8]http://www.dinamani.com/cinema/2015/01/13/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/article2617898.ece

[9] Sarla Mudgal vs Union Of India – AIR 1995 S.C 1531