அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை–புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான–செக்ஸியான திட்டம் (3)

Nigerian refugees sit at a Chadian camp in the village of Klissoum near NDjamena March 28, 2015- Philippe Desmazes-Getty Images
பெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறை: மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை. அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் ஜிஹாதிக்குழுக்கள் நடந்து கொண்ட் வருகின்றனர். மலாலாவை வைத்து, மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும், பெர்ம்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் தான் இருக்கின்றனர். மாறாக, இந்த ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லாவிதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும், ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர். அவ்வாறு அல்லாவிற்கு முழுமையாக சரணாகதி அடைந்த பெண்கள், எல்லாவற்றையும் செய்ய அறிவுருத்தப் படுகிறாள். அந்நிலையில் தான், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.
ஜிஹாதிகளின் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்”: பொகோ ஹரம் என்ற இஸ்லாமிய ஜிஹாதி இயக்கம் பிடித்து வைக்கப்பட்டுள்ள வயதுக்கு வந்துள்ள சிறுமிகள், இளம் பெண்கள் முதலியோரை உடலுறவு கொண்டு, கர்ப்பமாக்கி, குழந்தைகளை பெற்றெடுக்க செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்[1]. இதன் மூலம் புதிய வீரியமுள்ள ஹிஹாதி வீரர்களை பிறப்பெடுத்து, உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகப் பெருமையாகக் கூறிக் கொண்டனர். அதாவது குழந்தைகள் பிறந்ததும், அவை ஜிஹாதித்துவ பெண்மணிகளால் ஜிஹாத்-பாலூட்டி, அடிப்படைவாத-தாலாட்டி, இஸ்லாம்-சீராட்டி வளர்க்கப்படுவர். இதனால், அல்லா பெயரால் என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் கூடிய ரோபோக்களாகத் தயாராவர். அதனால், புதிய போராளிகள் கொண்ட பரம்பரை உருவாகும்[2]. அவர்கள் போர்ச்சுகீசியரும் இத்தகைய முறைகளை கோவாவில் பயன்படுத்தினர் என்பதனைக் கவனிக்கவேண்டும்[3]. கிருத்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்ற நாடுகளில் 100-200 ஆண்டுகளில் பலன் பெற அல்லது விளைவு ஏற்பட திட்டமிட்டு செய்யும் இத்தகைய செயல்களினால் ஏற்படும் தீங்குகள் அந்த்கந்த நாடுகளில் பிறகு தான் தெரியவரும்.
ஜிஹாதிகளை உருவாக்கும் எந்திரங்களாக பெண்கள் உபயோகப்படுத்தப் படல்: வடகிழக்கு நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் ஆளுனர் அல்-ஹாஜி காசிம் ஷேட்டிமா [Alhaji Kashim Shettima], சமீபத்தில் காமரூன் நாட்டு எல்லைகளில் உள்ள சம்பசி காடுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 214 சிறுமிகள், இளம் பெண்கள், பெண்கள் முதலியோரை வேண்டுமென்றே, வலுக்கட்டாயமாக கற்பழித்து அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்[4]. புரொபசர் பாபாதுன்டே ஓஸ்டோமேயின் [Professor Babatunde Osotimehin] என்ற ஐக்கிய நாடுகள் சங்க இயக்குனரும் இவ்விவரத்தை வெளியிட்டார். கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க தயாராக 214 பெண்கள் இருக்கிறார்களாம்[5]. இவர்களில் சிலருக்கு இரட்டை, மூன்று, நான்கு குழந்தைகளும் பிறக்க வாய்ப்புள்ளது. மதவெறி மற்றும் காழ்ப்புடன் இத்தகைய பேச்சுகளை பேசுகிறார்கள் என்பதனையும் கவனிக்கலாம். இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியுள்ளது. இப்பொழுது 1,000ஐ எட்டுகிறது[6]. இவர்கள் கடந்த ஆண்டில் கடத்திச் செல்லப்பட்ட 234 பெண்களில் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. 2014லிலிருந்து இத்தீவிரவாதிகள் 2,000ற்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளார்கள். மதரீதியில், இவ்வாறு பொம்மைகளைப் போல, அடிமைகளை விட மோசமான நிலையில் சொல்வதை செய்யும் மக்களை உருவாக்கும் எண்ணம் உலகத்திலேயே மோசமானது. இதனால், ஈவு-இரக்கம் இல்லாமல், மிகக்கொடுமையான, குரூரமான தீவிரவாத-பயங்கரவாத செயல்களை அவர்கள் மூலம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று தெரிகிறது.
மதவுரிமைகளில் மனிதவுரிமைகள் மறைந்து விடுகின்றன: பெண்களின் உரிமைகள் என்ற ரீதியில் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் மூலம் இவற்றை வெளியிட்டாலும், அவ்வூடகங்களின் நிருபர்கள், நிபுணர்கள் முதலியோர் கிறிஸ்தவர்களாக இருப்பதினால், இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம்-விரோத ரீதியில் செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று குற்றாஞ்சாட்டுகின்றன. அதே வேளையில், அல்-ஹஜிரா, கல்ப் செய்திகள் போன்ற இஸ்லாமிய ஊடகங்களிலேயே, பொகோ ஹராம், ஐசிஸ் போன்ற இயக்கங்களின் கொலைகள், கடத்தல்கள் முதலியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அதனால், அவை பொய் என்றாகி விடாது. இதற்கும் மதரீதியில் விளக்கம் கொடுத்து, ஜிஹாதிகளை உயர்வாகப் பேசி, தற்கொலையாளிகளை “ஷஹீத்” என்று பாராட்டி, அத்தகைய செயல்களை அல்லாவுக்காக செய்யப் படபடுகின்றன என்றும் விவாதிக்கலாம். ஆனால், இருவகையான விளக்கங்கள், செய்தி வெளியீடுகள், பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களை மாற்றிவிடப் போவதில்லை. ஹிஹாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. கற்பழிக்கப் பட்ட பெண்களின் தூய்மை, தாய்மை, மேன்மை முதலியவை அப்பெண்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அல்லாவுக்கு அவர்கள் செய்த காரியங்கள் மகிழ்வூட்டலாம், ஷ்ஹீதுகள் நேரிடையாக சொர்க்கத்துக்குப் போகலாம், ஆனால், பாதிக்கப் பட்ட பெண்கள், இவ்வுலகத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். பிறகு அவர்களது சாபங்களுக்கு யார் பதில் சொல்லப்போவது? அப்பெண்களின் துயத்தை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று[7].
நைஜீரிய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை: கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் உலக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பழைய நாகரிகங்களின் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. சரித்திரம் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் என்றெல்லாம் பேசும் மேற்கத்தைய நிபுணர்கள் இவ்விசயங்களில் அமுக்கமாகவே இருந்து வருகிறார்கள். இப்பொழுது, ஐசிஸ் மற்றும் பொகோ ஹராம் சமுதாயத்தைப் பலவழிகளில் பாதித்து வருகின்றன. பொருளாதார ரீதியில் சிறந்து விளங்க வேண்டிய நைஜீரியா, இப்பொழுது, பொகோ ஹராம் தீவிரவாதத்தால் சீரழிந்துள்ளது. உள்ளூர் ஆட்சியாளர்கள், முதலில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரமக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
09-05-2015
[1] Ludovica Iaccino, Nigeria: Boko Haram impregnated girls ‘to guarantee new generation of fighters’, IBTimes, May 6, 2015 17:58 BST
[2] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022
[3] கோவாவில் ஆரம்பித்த அவர்களது கலப்பின மக்கள் உற்பத்தி முயற்சி, பல ஜாதிகளை உண்டாக்கின. காஸ்டா / ஜாதி என்ற பெயரே அவர்களால் தான் உருவாக்கப்பட்டு, இன்று இந்தியர்களை ஆடிப்படைத்து வருகின்றது.
[4] The governor of Borno state, north-eastern Nigeria, has said that terror group Boko Haram (now Iswap) deliberately impregnated the 214 girls recently rescued by the army in the Sambisa forest on the border with Cameroon. The girls were part of some 234 women and children freed after being kidnapped by the terrorists, who are believed to have abducted some 2,000 civilians since the beginning of 2014.
[5]http://www.theroot.com/articles/news/2015/05/_214_out_of_the_234_women_girls_rescued_from_boko_haram_are_reportedly_pregnant.html
[6] The news was broken early this week by our former Minister of Health, Professor Babatunde Osotimehin, now Executive Director of United Nations Population Fund. He said most of the girls rescued from Boko Haram camps were visibly pregnant. Another source put the actual figures of expectant mothers at 214. That was when the figure of those rescued stood at about 600. Now, the number has hit at least 1,000. So, it means more babies could be expected. Of the identified 214 pregnant, some could be carrying twins, triplets, and possibly quadruplets. It’s really an invasion! http://sunnewsonline.com/new/?p=118371
[7] http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/nigeria/11593573/They-told-us-if-we-didnt-come-with-them-they-would-beat-us.html
அண்மைய பின்னூட்டங்கள்