Archive for the ‘கம்யூனிஸம்’ category

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

மார்ச் 16, 2017

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

girls-raped-at-muslim-orphanage-07-03-2017

அனைத்துலக பெண்கள் தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது:  மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

wayanad-muslim-orphanage-muttil-google-map

வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.

 medical-report-confirms-rape-of-students-of-yateen-khana

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

rape-in-kerala

சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].

yateen-khana-rape-persons-close-to-management-among-the-accused

வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

 rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours

மெத்தப்படித்த மாநிலத்தில், இவ்வாறு நடப்பது எப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.

© வேதபிரகாஷ்

16-03-2017.

rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours-gods-own

[1] Mathrubhumi, Girls in Wayanad orphanage sexually abused: report, Published: Mar 7, 2017, 08:43 AM IST

[2] http://english.mathrubhumi.com/news/kerala/girls-in-wayanad-orphanage-sexually-abused-report-kerala-crime-news-1.1780392

[3] http://www.wmomuttil.org/contact/

[4]  Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.

[5] தினத்தந்தி, ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மார்ச் 07, 11:07 AM.

[6] http://www.dailythanthi.com/News/India/2017/03/07110737/7-minor-girls-in-Kerala-orphanage-raped-for-2-months.vpf

[7] வெப்துனியா, ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன்அதிர்ச்சி செய்தி, Last Modified: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/seven-girls-molested-in-kerala-man-arrested-117030800028_1.html

[9] தினமலர், கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது, 07 மார்ச் 2017, 06:33 PM.

[10] http://www.dinamalarnellai.com/cinema/news/23902

[11] தினகரன், கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர், 2017-03-08@ 00:39:27.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339

[13] Kamudi.com, Yateem Khana rape: Persons close to management among accused, Posted on :15:06:31 Mar 7, 2017,  Last edited on:15:06:31 Mar 7, 2017

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

Kerala Isis nexus- confirmed

முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].

Kerala Isis nexus- confirmed- youth after conversionஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.

Kerala jouranalist joins ISISஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5].  அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.

Kerala Isis nexusதீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed]  என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].

Kerala, Kashmir becoming hub of ISISதமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

Missing Keralites links with ISIS confirmed - Kaumudi onlineமத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] http://tamil.oneindia.com/news/india/21-missing-from-kerala-may-be-is-camps-cm-257874.html

[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.

[4] http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%86

[5] தினகரன், ஐஎஸ் தீவிரவாதிகளான கேரள வாலிபர்கள்: தமிழகத்தில் உளவுத்துறை உஷார், Date: 2016-07-10@ 00:16:56

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=230018

[7] Reports said that a person called Abdul Rasheed Abdulla is suspected to have led the youths on to the terror path.

http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/kerala-jihadi-threat-missing-youths-story-in-points.html

[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=80207

[9] Father of Eesa and Yahiya, Vincent, alleged that his sons were influenced by Islamic preacher Zakir Naik

http://english.manoramaonline.com/news/just-in/people-missing-kasaragod-kerala-police-isis-islamic-state.html

[10] english.manoramaonline, ISIS links: Kerala police analyzing phone records, Thursday 14 July 2016 10:58 AM IST, byOur Correspondent

[11] http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/isis-links-kerala-missing-youth-police-tracking-phone-records.html

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

Sanheetha Nataka Academy kerala oppose hanging of afsal guru

ஜிஹாதி இஸ்லாத்தை நோக்கி, கேரள முஸ்லிம்கள் செல்வது: மலையாள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக போராடுவது ஒன்றும் புதியதல்ல. 2008ல், காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டையில் இறந்தவர்களைப் பற்றி ஆராய்ந்ததில், அவர்கள் கேரளாவிலிருந்து வந்தது தெரிய வந்தது.  9/11 மற்றும் 26/11 ஜிஹாதி-தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்மேன் மூணாறில் உள்ள டாடாவின் விருந்தினர் மாளிகையில் வந்து தங்கியிருந்து, நோட்டம் விட்டிருக்கிறான். 1990களிலிருந்தே கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதத்துடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்து விட்டது[1]. அதாவது, உள்ளூர் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல், இக்காரியங்கள் எல்லாம் நடக்காது என்பதனை இவ்விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஷரீயத் சட்டம் அமூல் படுத்தப் படவேண்டும், இஸ்லாமிய அரசு ஏற்படுத்தப் படவேண்டும் என்பதெல்லாம் அதன் திட்டமாகும்[2]. அப்பொழுது தான் தூய்மையான, உண்மையான இஸ்லாத்தை அடைய முடியும், அதற்கு முகமது நபி இருந்து, வழிநடத்திய பூமிக்குச் சென்றால் தான் தமக்கு அவரது அருள் கிடைக்கும், தானும் சிறந்த ஜிஹாதியாக மாற முடியும், பொராட முடியும் என்றேல்லாம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். இதனால், அவர்கள், எளிதில் நம்பி அங்கு செல்ல தயாராகி விடுகிறார்கள்.  இஸ்லாமிய வங்கிகளும் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

Communist IUML nexus Keralaகம்யூனிஸத்தில் இஸ்லாம் பரிசோதனை, அவர்களையே தாக்குகிறது!: கம்யூனிஸ்டின் “மலப்புரம்” பரிசோதனை 1970ல் ஆரம்பித்தது, 2016ல், மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இப்பிரச்சினை, அனைத்துலக விசயமாகி விட்டது. சென்ற வருடம் 2015 – மலபுரத்தில், ஐஎஸ் தொடர்பு கொண்ட 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்[3]. துபாயில் இன்டெர்போல் மூலம் கண்காணிக்கப்பட்ட அவன் 29-08-2015 அன்று கைதானான்[4]. அரபு நாடுகளிலிருந்து வரும் பணத்திலிருந்து மதரஸாக்களை அமைத்து, அவற்றின் மூலம், சலாபி / வஹாபி போன்ற தீவிர இஸ்லாமிஸம் போதிக்கப்படுவதால், அவர்கள் எளிதில் ஜிஹாதிகளாக மாற துணிந்து விடுகிறார்கள். திருமணம் என்பதை மதமாற்றத்திற்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கேரள அரசு மறுத்து-மறைத்து வருகிறது. இப்பொழுது அதில் கிருத்துவர்களும் சிக்கியுள்ளார்கள் என்பது தெரிந்த நிலையில், விசயத்தை அமுக்கி வாசிக்கப் பார்க்கிறது[5]. “மெரின்”லிருந்து “மரியம்” என்று மலையாள மனோரமா விவரங்களை வெளியிட்டது[6]. ஏற்கெனவே லவ்-ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்படுவதால், அதனை பூசிமெழுகப்பார்க்கிறது. ஆனால், சமீபத்தைய, ஐஎஸ் ஆள்-சேர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை வெளிப்படுத்தி விட்டன. 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[7].

ISIS recruit on Facebookதிடீரென்று பெற்றோர்கள் கவலைப்படுவது: தமிழகத்தில் திருப்பூர் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 15 இளைஞர்கள் மாயமாகி உள்ளனர். இவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக இளைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது[8]. இதனால் மாயமான இளைஞர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க போலீசாருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்[9]. அம்மாநிலத்தில் இருந்து இதுவரை 21 பேர் மாநிலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் அறிவித்துள்ளார். அவர்களில் 6 பேர் பெண்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியாகும்.

iuml - back with Islamic flagதிருப்பூரில் பிடிபட்ட இரு முஸ்லிம் இளைஞர்கள் (14-07-2016): மாயமான அனைவரும் கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன முஹமது (மலபுழம்) மற்றும் ஷப்பீர் (பாலக்காடு) திருப்பூரில், ஒரு பின்னாலடை தொழிற்சாலையில் வேலைசெய்வது தெரிய வந்துள்ளது[10]. முன்பு மேற்கு வங்காளத்திலிருந்து வந்த ஐஎஸ் தீவிரவாதி திருப்பூரில் தங்கியிருந்தபோது தான் கைது செய்யப்பட்டான். 14-07-2016 அன்று அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கேரளாவுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர்[11]. ஆனால், கோயம்புத்தூர் வழியாக கேரள முஸ்லிம்கள் இப்படி தாராளமாக வந்து செல்வதும், அவர்கள் குற்றங்கள் மற்றும் தீவிரவாத தொடர்புகள் உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது திருப்பூரில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவுள்ளது தெரிய வருகிறது.

PFI army to fight against India11-07-2016 அன்று கேரள சட்டசபை விவாதத்தில் ஐஎஸ் விவகாரம் வெளிவந்தது: கேரளாவில் 11-07-2016 அன்று சட்டசபை கூடியதும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். ‘‘கேரள இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க பொது மக்களின் உதவியை முதல்வர் நாட வேண்டும். கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்[12]. பாஜக எம்எல்ஏ ஒ.ராஜகோபால், முதல்வரின் சொந்த தொகுதியில் வசித்து வந்த பல் மருத்துவ படிப்பு மாணவியும் மாயமாகியுள்ளார். அவர் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு பாலக்காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அம்மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] In 2008, five Malayali Muslim youth went all the way to Kashmir to fight alongside the separatists and four of them were shot dead by Indian forces. If it’s Kashmir in 2008, it’s only natural that it’s IS in 2016 because Islamism has been growing in the state since the 1990s. The common ideal is international Islam, as against the state’s age-old local Islam, and the allegiance is to what’s purported to be the purest form and practice — something that the Islamists believe belong to the Prophet’s land and the Prophetic era. It’s part of their blind trust in global kinship, an exclusive transnational state of radical Islam and the rein of Sharia law.

http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[2] The First Post, Kerala should be worried about its missing youths and possible Islamic State links, G Pramod Kumar,  July 10, 2016 14:49 IST

[3] http://www.marunadanmalayali.com/news/exclusive/isis-recruitment-from-malappuram-21553

[4] MALAPPURAM:  Intelligence sleuths have taken into custody a 23 –year-old youth hailing from Pattarnakkavu, over his alleged ISIS links. The person was arrested jointly by IB and Karipur Emigration department as soon as he deplaned at Karipur airport. He, who was living in Dubai, had been under the observation of Abu Dhabi Interpol. And, his arrest was carried out as he arrived at the airport on August 29, 2015. The person had gone abroad five years ago and did his studies there, according to sources. He is also known to have travelled to several foreign countries.

http://kaumudiglobal.com/innerpage1.php?newsid=68525

[5] http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[6] FROM MERIN TO MARIAM, FROM COCHIN TO SYRIA-Merin, who hails from a Christian family in Cochin, went to Mumbai after finishing her studies in Cochin. Her mother Mini told Manorama that she was influenced by her long-time classmate Yahiya, his brother Eeza and his wife Fathima, and converted to Islam. Merin who christened herself Mariam, later married Yahiya. Mini also said that the couple informed her about travelling to Sri Lanka for some prayers and that she had tried to stop her daughter.

India Today, ISIS recruits from Kerala: 11 out of 22 missing Keralites suspected to be in Syria, Posted by Vivek Surendran, New Delhi, July 11, 2016 | UPDATED 18:02 IST.

[7] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

http://indiatoday.intoday.in/story/isis-kerala-recruitment-syria-kasargod-pinarayi-vijayan/1/712168.html

[8] தினமலர், ஐஎஸ்.,ல் சேர்ந்தார்களா கேரள இளைஞர்கள்?, பதிவு செய்த நாள். ஜூலை9, 2016: 11.59.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1560666

[10] Onmanorama Staff, 2 missing Kerala youths traced in Tamil Nadu. No, they didn’t leave to join ISIS, Friday 15 July 2016 02:17 AM IST.

[11] http://english.manoramaonline.com/news/just-in/kerala-palakkad-youths-isis-suspect-traced-tamil-nadu.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் இருந்து 21 பேர் மாயம்உறுதிப்படுத்தினார் பினராயி.. ஐஎஸ்ஸில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகம், By: Mayura Akilan, Published: Tuesday, July 12, 2016, 11:23 [IST]