கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)
காஷ்மீர் கல்லடி–கலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!
கிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.
ரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.
உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.
தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.
இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.
© வேதபிரகாஷ்
15-04-2017
[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.
[2] http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14092128/1079897/Gambhir-Sehwag-tweet-in-support-of-attacked-CRPF-Jawans.vpf
[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா? ஏப்ரல் 15, 05:00 AM
[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/15025043/In-Kashmir-the-military-jeep-YouthHuman-shield-use.vpf
அண்மைய பின்னூட்டங்கள்