Archive for the ‘கனிமொழி’ category

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

AIADMK Iftar

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிலைப்பாடு:  ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].

Jeyalalita at Quade millat tombமூன்றாவது  அணிக்கு  வேலையில்லை:  இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர்  காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.

M . H. Jawahirullah, Hyder Ali of TMMKதமிழகத்தை பொறுத்தவரை .தி.மு.., மற்றும் தி.மு..வை தவிர மூன்றாவது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

IUML members with Jeyalalita

ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டுஅனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.

IUML splinter groups

அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

Muslims aiming to capture Parliament - banner

ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

makkal-nala-kuutani

அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினமலர், .தி.மு.., கூட்டணியில் தொடர்வோம் முஸ்லிம் லீக் தலைவர் தகவல், பிப்ரவரி.28, 2016. 07:31.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467302

[3] மாலைமலர், 3 –வது  அணிக்கு  வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

ஜூலை 26, 2013

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் நிகழ்சிகளும்: முஸ்லிம்களுக்கு நோன்பு என்றாலே கருணாநிதிக்கு குஷ்ஈய்யாகி விடுகிறது.

  • குல்லாப் போட்டு கஞ்சி குடிக்க சந்தர்ப்பம்,
  • இந்து பண்டிகைகளை தூஷிக்க சந்தோஷம்[1],
  • பிரத்யேகமாக குல்லா வாங்கி வந்து மாட்டிவிடும் வேலை
  • தன்னுடைய பெருமைகளை டமாரம் அடித்துக் கொள்ளும் விதம்
  • முஸ்லிம்களைவிட நான் எவ்வளவு பெரிய முஸ்லிமாக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் விதம்
  • முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு கைத்தட்டும் காட்சி

இப்படித்தான், வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகளும் நடந்து வருகின்றன. திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகள் என்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பனகல் பார்க் அருகில் ஒரு பேனர், “நோன்பு துறக்க வசதி செய்யப்பட்டுள்ளது” (ஶ்ரீ வேங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில்) என்று அறிவிக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினமணி): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை 25-07-2013 நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: “நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார். அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான். திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன”, என்றார் அவர். முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்[2]. முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு,“இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினகரன்): இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். கனிமொழி இம்முறை கஞ்சி குடிக்க வரவில்லை[3] போலும்!

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: “நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும்தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை.

 

ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள்.

Ø  மிலாது நபி தினத்தன்று விடுமுறை,

Ø  உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு,

Ø  அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்,

Ø  சிறுபான்மையினர் நல ஆணையம்,

Ø  விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு,

Ø  உருது அகாடமி,

Ø  காயிதே மில்லத் மணிமண்டபம்

Ø  இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு,

Ø  உமறுபுலவருக்கு மணிமண்டபம்,

Ø  திருமண பதிவு சட்டத்தில் திருத்தம்

 

என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன்”, இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார்.  தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்”, இவ்வாறு அவர் பேசினார்[4].

தி.மு.., அதிகதொகுதிகளில்போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு (தினமலர்)“லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்[5]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,” என்றார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது: “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன். நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு..,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.., ஆட்சியில்,

  • மிலாது நபிக்கு விடுமுறை;
  • உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது;
  •  சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது;
  • ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து,
  • விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.., ஆட்சி நடந்தது”, இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்சிகள் நடத்துவதால், கஞ்சிக் குடிக்க அவகாசங்கள் அதிகமாகவே உள்ளன. ஏற்கெனவே கார்த்திக் சிதம்பரம், தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்தது நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்[6]. திராவிடக் கட்சிகளுக்கு வெட்கமே இல்லை, குல்லா போட்டு போட்டோ, குல்லா போடாமல் போட்டோ என்று தமாஷாக்கள் நடத்தியுள்ளன[7].

ரம்ஜான் நோன்பு போது தான் இப்படி பேசுவார்கள் என்றில்லை. மற்ற நேரங்களிலும், மற்ற கட்சிகளும் சலைத்தவை அல்ல. மார்ச் மாதத்திலேயே இந்த நாடகம் ஆரம்பித்து விட்டது[8]. ஜெயலலிதா தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்வார்[9]. இப்படி வேடிக்கை-வினோதங்கள், இனி நிறைய பார்க்கலாம். இதோ இவற்றையும் படியுங்களேன்:

1.குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சிபோய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின்கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[10], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!

2.  குல்லா…………..மிரட்டல்களும்[11] (3).

3.  குல்லா…………..மிரட்டல்களும்[12] (2).

4.  குல்லா…………..மிரட்டல்களும்[13] (1).


[1] வேதபிரகாஷ்ரம்ஜான் கஞ்சியும்இந்துவிரோத திராவிட பேச்சுகளும், http://dravidianatheism.wordpress.com/2009/10/07/ரம்ஜாந்கஞ்சியும்-இந்து/