Archive for the ‘கடவுள்’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (3)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (3)!

Farooq murder - malaimalar - Vellore connection-1

பகுத்தறிவுமுஸ்லிம்கள், பெரியார் நாத்திகம்இஸ்லாம் போன்ற கூட்டுகள் போலித்தனமானது: பெரியாரை அவரது வாழ்நாள் காலத்திலேயே அடக்கி வைத்து, பிறகு அடிமை போல ஆக்கிக் கொண்டனர் முஸ்லிம்கள். பெரியார் முஸ்லிம்கள் பின்னால் அலைந்து-அலைந்து திரிந்தாரே தவிர, எந்த முஸ்லிமும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஜின்னா கழட்டி விட்டது பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. அண்ணா-கருணாநிதிகளும் அதே மாதிரி அடிவருடிகளாக முஸ்லிம்களை பாராட்டி பேசி தான் ஆதரவு பெற்றார்கள், பதிலுக்கு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை அள்ளிக் கொடுத்தார்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸரீன் முதலியோர்களின் நிலையை கவனித்துப் பார்க்கலாம். மதுரை ஆதீனம் முன்னர் கருத்து சொன்னதற்கு முஸ்லிம்கள் அவரை மிரட்டி பின் வாங்க வைத்தனர். இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், மோமினாக இருப்பவன், காபிருடன் எந்த பேச்சையும், சம்பந்தத்தையும், உறவையும், வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அது குரானுக்கு எதிரானது. மொஹம்மது நபி “அல்-காபிரும்” என்ற அயத்தில் சொன்னதிற்கும் விரோதமானது. ஆகவே, இக்கூட்டு “ஷிர்க்” தான். தாங்கள் ஆண்டால், காபிர்களை, “திம்மிகளாக” அடிமைகளாக, ஜெஸியா வரி கட்ட வைத்து ஆளாலாமே தவிர, காபிர்கள் கூட சேர்ந்து ஆளமுடியாது, சல்லாபிக்க முடியாது. அதெல்லாமே, இஸ்லாத்திற்கு எதிரானது தான்.

Farooq murder vellore connection - Malaimalar-32316400_2

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர்சமூகவளைதளங்களில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் கண்டபடி விமர்சிப்பது: சமூகவளைத்தளங்களில் முஸ்லிம், கிருத்துவர்கள் தங்களது உண்மை பெயர், புனைப்பெயர் ஏன் இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, கேவலமாக, மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாக, கொச்சையாக…..பலவிதங்களில் இந்துமதம், கடவுள், சித்தாந்தம் முதலியவற்றை தாக்கி வருகின்றனர். பகுத்தறிவு, நுண்ணறிவு, நாத்திகம், செக்யூலரிஸம், கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்ற பலபோர்வைகளில் அத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவற்றைத் தட்டிக் கேட்பது ஒரு சிலரே. மேலும், அந்த ஒருசிலருக்கும், மற்ற இந்துக்கள் உதவுவது இல்லை. அதாவது, முட்டாள் இந்துக்களுக்கு ஒற்றுமை இல்லை. இதைத்தான், இவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இந்துத்துவம்” என்று ஆர்பாட்டம் செய்து கொண்டு, குறுகிய வட்டத்திற்குள் கிடக்கின்றனர். இந்துமதத்திற்கு எதிராக, எத்தனை ஆட்கள், கூட்டங்கள், இயக்கங்கள் எப்படி வேலை செய்து வருகின்றன என்பது கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள். தங்களுக்குள் பாராட்டிக் கொண்டு காலம் கழிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பரந்த அளவில் சிந்திப்பது, சமூக விளைவுகளைக் கவனிப்பது, செயல்பாடுகளின் நோக்கத்தை கண்டறிவது, அந்நோக்கம் ஆபத்தாக இருந்தால் தடுப்பது-குறைப்பது-ஒழிப்பது போன்ற முறைகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை.

Fake SIM obtained for Farooq murder -

சட்டமீறல்களுடன் குறங்களை செய்து, சட்டரீதியில் குழப்பங்களை உண்டாக்குவது: இதற்குள் அன்சர்ந்த் பயத்தினால் சரண் அடைந்துள்ளார் என்றும், இக்கொலைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அறிவிப்பது நோக்கத் தக்கது. யாரோ, அவரது சிம்மை உபயோகித்து, பேசியதால் தான், அவர் மீது சந்தேகம் கொண்டது போலீஸ், அதனால் தேடி வந்தது அறிந்து தான் சரணடைந்தார் என்கிறார் அவர். அப்படியென்றால், அவர் தன்னுடைய சிம்மை அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக வைத்திருக்கிறார் என்று தெரிகிறது[1]. போலீஸார் விசாரிக்கும் போது உண்மை தெரிய வரும். தேசிய முஸ்லிம் லீக் சார்பில்[2], “இதை மதரீதியில் சமூக வளைதளங்களில் விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். வியாபாரரீதியில் கூட விரோதம் இருந்திருக்கலாம்”, என்று வெளியிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. விசயத்தை திசைத் திருப்ப அல்லது விளம்பரம் அடையாமல் இவ்வாறு செய்கிறார்கள் போன்றுள்ளது.

muslim rationalist killed in Kovai - 17-03-2017 DC

ஆங்கில ஊடகங்கள் நிலைமையை ஓரளவிற்கு எடுத்துக் காட்டியுள்ளது: “இந்தியா டுடே” இதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளது வியப்பாகவே உள்ளது[3]. “நாத்திகன் கொலை செய்யப்பட்டான்” என்று தலைப்பிட்டு, என்ன நடந்தது என்று வரிசையாக தெரிவித்துள்ளது[4].

HERE’S WHAT YOU NEED TO KNOW

  1. Farooq was murdered after he had left his Bilal Estate house in South Ukkadam at around 11 pm after receiving a phone call.
  2. He was on his scooter and was nearing Ukkadam Bypass Road when four people on motorcycles intercepted him. He tried to flee but couldn’t escape.
  3. Hearing the commotion, residents of the area rushed out of their homes after which the assailants fled.
  4. Locals found Farooq’s body lying on the road. His body bore multiple stabs and cuts inflicted by the assailants.
  5. Coimbatore Deputy Commissioner of Police S Sravanan reached the spot with police and began investigations.
  6. According to DCP Saravanan, Farooq was the admin of a WhatsApp group of people with rationalistic views who regularly debunk religion and religious claims.
  7. That vocal opposition to religion might be a possible motive for murder, DCP was quoted as saying.
  8. Atheist Farooq had posted rationalistic messages on his Facebook page which attracted criticism by members of the Muslim community, who called him an apostate.
  9. Police collected grabs from CCTV cameras installed at various commercial outlets on the stretch to identify Farooq’s killers.
  10. The last call on his mobile was traced to a SIM that was obtained on fake Vellore address.
  11. A large number of DVK cadre gathered at the hospital and demanded a high-level inquiry.
  12. Ansath’s surrender has been linked to the pressure put on the police by DVK.
  13. A police official told a newspaper that the religious offence could be just one motive. “We are looking into multiple angles and it is yet to be known if he was executed by communal groups, business rivalry or for personal reasons. One of his controversial religious posts shared in FB attracted criticisms.”

இதைவிட, சுருக்கமாக ஆனால் அதே நேர்த்தில் முழுமையாக மற்றவர்கள் வெளியிடவில்லை என்றே தெரிகிறது.

Farooq released from jail and received by Kolattur Mani.

கோவையில் தி.வி. பிரமுகர் படுகொலை: சிபிஎம் கண்டனம் (19-03-2017)[5]: கோயம்புத்தூர், மார்ச் 18, 2017- திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட நிர்வாகியான பாரூக், மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச்  சேர்ந்தவர் பாரூக். திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பில் செயல்பட்டு வந்த பாரூக், பகுத்தறிவு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் காரணமாக மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது சிறுபான்மை மதவெறியின் கோரமுகத்தை காட்டுகிறது. சமீபகாலமாக பகுத்தறிவுக் கருத்துகளை முழங்கிய நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கோவிந்த பன்சாரே போன்றோரை படுகொலை செய்த பெரும்பான்மை மதவெறிசக்திகளின் செயலையும், கோவை பாரூக் படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறுபான்மை மதவெறி சக்திகளின் செயலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது, இது, கருத்தை கருத்தால் விவாதிக்க முடியதாவர்களின்ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின்மதவெறியர்களின் கோழைத்தனமான செயலாகும்.இந்திய நாட்டில் தன் கருத்துக்களை பேசுவதற்கும், எழுதுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாக இச்சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.  பாரூக் படு கொலையை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும், மதநல்லிணக்கத்தை விரும்பு கிறவர்களும், சமூக நல்லிணக்கத்தில் அக்கறை உள்ளவர்களும் கண்டிக்க முன்வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் கோவை மாநகர காவல்துறை மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட்டுஇந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கவும், இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள சக்திகளை கண்ட றிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

19-03-2017

Farooq released and received by Kolattur Mani

[1] செல்போன், உதிரிகள் முதலிய வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருப்பதால், இவற்றை மாற்ற, குளறுபடி செய்ய அவர்களால் முடியும் என்று தெரிகிறது.

[2] https://www.youtube.com/watch?v=9wUyZ35k2X4

[3] IndiaToday.in , Coimbatore: Vocal atheist hacked to death, realtor surrenders, Posted by Sonalee Borgohain; New Delhi, March 18, 2017 | UPDATED 12:17 IST

[4] http://indiatoday.intoday.in/story/coimbatore-vocal-atheist-hacked-to-death-realtor-surrenders/1/906973.html

[5] தீக்கதிர், கோவை பதிப்பு, பக்கம். 6, 19-03-2017; http://epaper.theekkathir.org/

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (2)?

மார்ச் 10, 2014

அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (2)?

 

முஸ்லிம்களுக்காக   நாத்திக  கரு  மற்றும்  ஆத்திக  ஜெயா  காபிகளின்  நாடகங்கள்: இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனே நிறைவேற்றாமல், அதை தள்ளிப்போடும்விதமாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை அனுப்பி உள்ளதாகவும், தமிழக அரசு இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களை ஏமாற்றுவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்[1]. அதாவது நாத்திக கருவான, காபிர் மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம். ‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான்’ என, கருணாநிதி கூறியதற்கு, நாகர்கோவில், பிரசாரத்தில் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ”கருணாநிதியின் பேச்சை, இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு, தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல,” என்றும் தெரிவித்தார்[2]. அதாவது ஆத்திக ஜெயா காபிர், மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம்.

 

காபிர்களின்  வாதங்களும், மோமின்களின்  மௌனமும்: ‘முஸ்லிம்களுக்கு கன்னியாகுமரி அ.தி.மு.க., வேட்பாளர், ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில், பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பேசியதாவது: சிறுபான்மையினருக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு வருகின்றன. உலமாக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்தி உள்ளோம்[3]. முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான் என, கருணாநிதி கூறி உள்ளார். 2006ல், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து, அதில் சமூக மற்றும் கல்வியில், பின் தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை, முதன் முதலாக சேர்த்ததே, அ.தி.மு.க., அரசு தான்[4]. இதுதான் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டிற்கு, அடித்தளமாக, வித்தாக அமைந்தது. கருணாநிதி, தன் கேள்வி-பதில் அறிக்கையில், ‘இட ஒதுக்கீடு சதவீதத்தை, அதிகப்படுத்த வேண்டும் என, முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதைப்பற்றி உண்மையிலே அக்கறை இருந்தால், அந்த கோப்பினை, உடனே வரவழைத்து, ஆணை பிறப்பித்திருக்கலாம்’ எனக் கூறியிருக்கிறார். இப்படித்தான், அவர் ஆணை பிறப்பித்தாரா? நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில், திருத்தி அமைக்கப்பட்ட, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட, ஆய்வு எல்லையில், அ.தி.மு.க., அரசு, 2006ல் தெரிவித்த, இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை, கருணாநிதி, ஏன் வார்த்தை மாற்றாமல் சேர்த்தார்? தி.மு.க., 2006ல் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டதை போல, உடனே அதற்குரிய சட்டத்தை இயற்ற வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை? எதற்காக, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை, அவர் கேட்டார்?

 

எந்த  இட ஒதுக்கீடு  குறித்தும், எந்த  அரசும், தன்னிச்சையாக  முடிவெடுக்க  முடியாது: ஏனெனில், சட்டப்படி, அவ்வாறு தான் செய்ய முடியும். மண்டல் கமிஷன் வழக்கில், 1990ல், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பின் அடிப்படையில், எந்த இட ஒதுக்கீடு குறித்தும், எந்த அரசும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பிறகே, அதை நடைமுறைப்படுத்த முடியும்.அதே அடிப்படையில், தற்போது, இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற, முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்[5].

 

முஸ்லிம்களுக்குள்   சண்டை  ஏன்?: இதற்குள் “பேஸ்புக்கில்” ஒரு முஸ்லிம், எப்படி முஸ்லிம்கள் அளிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வெற்றிப் பெறவேண்டும் என்று விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அவர் கொடுத்துள்ளதாவது, “நமக்குள் எந்த பகையும் போட்டியும் இல்லாமல் பல இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள் ..அல்ஹம்துலில்லஹ் …ஆனால் இவர்களை வீழ்த்துவதற்கு பாஜகவை விட வேகமாக செயல்படும் ஒரு ஜமாஅத் இருப்பதை நினைத்து மனது கவலையளிக்கிறது ….முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியில் நம் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரித்து விடக் கூடாது! அவர்களின் வெற்றிக்கு நாம் எந்த வகையிலும் முட்டுக்கட்டைகளாக இருந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எங்கே? அமைப்புகள் வேறாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தில் சார்பாக ஓர் குரல் இந்திய பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று தாம் போட்டியிட இருந்த தொகுதியை விட்டுக் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சி எங்கே? வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் போட்டியிடுவதால்! சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியில் இருந்து விலகிக் கொண்டது! இராமநாதபுரம் தொகுதியில் சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியிடுவதால் மனித நேய மக்கள் கட்சி விட்டுக் கொடுத்தது குறிப்பிடதக்கது!

 

இடஒதுக்கீடு  கொடுத்தால்  மட்டுமே  .தி.மு.விற்க்கு  ஓட்டு  இல்லையே  .தி.மு.விற்க்கு  வேட்டுவைப்போம்: இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க -விற்க்கு ஓட்டு இல்லையே அ.தி.மு.க-விற்க்கு வேட்டு வைப்போம் என்று பகீரங்க அறைக் கூவல் விடுத்த (இடஒதுக்கீடு கொடுக்காத நிலையில் அ.தி.மு.க-விற்க்கு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு கொடுத்துள்ளது) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எங்கே?? சமுதாய மக்களே உங்கள் கற்ப்பனைக்கே விட்டு விடுகிறேன்! மதிப்பிற்குரிய சகோதரர் பிஜெ அவர்கள் தான் செய்வது விதண்டவாத அரசியல் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்[6]. இந்த சுயநல முடிவால் வரவிருக்கும் தேர்தலின் மூலம் 3-4 முஸ்லிம் MPகளின் பிரதிநிதித்துவம் கூட பாதிக்கப்படும் நிலை தானேவரும் இதையாவது கருத்தில் கொண்டீர்களா? உதாரனத்திற்க்கு மயிலாடுதுறையில் காங்கிரஸ் பிஜேபி எல்லாம் ஒரு நியாயமான அளவில் ஓட்டை பிரிக்கும் அங்கே ஒரு தனி சக்தியா இருக்கும் முஸ்லீம்களின் ஓட்டினாலும் திமுகவின் ஓட்டினாலும் வெற்றி பெற இருக்கும் நம் முஸ்லீம் பிரதிநிதி

 

முஸ்லிம்கள்  ஓட்டு  சிதறக்  கூடாது: உங்கள் சொல்லை வேதவாக்காக கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் சிதறும் ஓட்டால் தோல்வியடைய வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? இதை நிலை தான் வேலூர், பாண்டிச்சேரி மத்திய சென்னையிலும் (முஸ்லிம் நின்றால்) ஏற்பட வேண்டுமா? மொத்தத்தில் ஒரு முஸ்லிம் கூட வெற்றி பெறாமல் போக தான் இந்த தான்தோன்றி தனமான முடிவு … ஆனால் இன்றைய முடிவு யாருக்கும் உதவாது மாறாக நம்மை நாம் தான் காட்டிகொடுக்கும் வேலையை செய்கிறோம் என்பதை வருத்ததுடன் உங்களின் நலம் விரும்பு ஆயிரக்கனகானவர்களில் ஒருவராக சொல்லி கொள்ள விரும்புகிறோம். மமக எந்த நிலைப்பாடு எடுத்தாலும் ,சமுதாய நன்மையைப்பற்றி சிந்திக்காமல் அதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதற்காகவே அதிமுகவை ஆதரித்துள்ளார். வரும் செவ்வாய் அன்று அவசர மாநில செயற்குழுவில் த.த.ஜ முடிவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்[7], என்று முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி[8], 1. வடசென்னை தொகுதியில் நிஜாம் முகைதீன், 2. திருநெல்வேலி தொகுதியில் நெல்லை முபாரக், 3. ராமநாதபுரம் தொகுதியில் நூர் ஜியாவுதீன், போட்டியிடுகின்றனர்[9].  இந்துக்களுக்கு, இந்த புத்தி வருமா?

 

முஸ்லிம்களில் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அப்பிரச்சினை தீர்க்க வேண்டியதாக உள்ளது. இக்காலத்தில், அவ்வாறு குறிப்பிட்ட முஸ்ம்களினால் படிக்க முடியவில்லை என்றால், அது இந்துக்களைப் போன்ற ஏழ்மை என்றாக இருந்தால், பொருளாதார ரீதியில், எல்லோருக்கும் கல்வி கொடுக்கப் படவேண்டும். ஆனால், அதில் பொதுவான கல்விமுறை விடுத்து, மதரீதியில் கல்வி அளிப்போம் என்றால், அங்கு பிரச்சினை வருகிறது.  இக்காலத்தில், ஆங்கிலத்தில் படிப்பது அல்லது குறிப்பிட்ட தொழிலுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பைப் படிப்பது என்ற போக்கு உள்ளது. அந்த வகையில் எல்லோரும் படிப்பதை யாரும் தடுக்க முடியாது. பிரச்சினை இவ்வாறாக இருந்தால், அரசு அதனை சரிசெய்தாக வேண்டும்.

 

வேதபிரகாஷ்

10-03-2014


[1] தினமணி, முஸ்லிம்களுக்கானஇடஒதுக்கீடு: கருணாநிதிபுகாருக்குஜெயலலிதாபதில், By dn, நாகர்கோவில், First Published : 10 March 2014 12:50 AM IST

[2] தினமலர், மக்கள்ஏமாளிகள்அல்ல: கருணாநிதிக்குஜெ., பதில், சென்னை, மார்ச்.10, 2014.

அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!

ஒக்ரோபர் 15, 2013

அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!

Allah quran etc symbolism

2009 முதல் 2013 முதல் கடவுளுக்கு எந்த சொல்லை உபயோகிப்பது?: 2009ம் ஆண்டு மலேசியாவில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவ பத்திரிகை “ஹெரால்ட்” அல்லா என்ற வார்த்தையை கிருத்துவக் கடவுளுக்காக உபயோகப்படுத்தி இருந்தது[1]. குறிப்பாக மலாய் மொழி பைபிளில் கடவுளுக்குப் பதிலாக “அல்லா” என்ற வார்த்தை உபயோகப் படுத்தப் பட்டது[2]. அதை எதிர்த்து முஸ்லிம் இயக்கத்தினர் வழக்குத் தொடர்ந்தன. அதனால், “ஹெரால்ட்” பத்திரிக்கைக்காரர்கள் அதனை உபயோகிக்கக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தது[3]. இதற்கு எதிராக கிருத்துவ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இடைக்கால தடையை அது ரத்து செய்தது.  இதில் உள்துறை அமைச்சகம் தலையீடு இருந்தது. இதனால், 2010ல் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள், குறிப்பாக, சர்ச்சுகள் தாக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு, கற்கள், பெயிண்ட் முதலியை அத்தாக்குதல்களில் உபயோகப் படுத்தப் பட்டன[4]. அரசு மேல்முறையீடு செய்தது.

Christian usage of Allah

மலேசிய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளைப் போலத்தான் செயல்படுகின்றனர்: 2009ல் நஜீப் ரஸாக் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது, மலாய் முஸ்லிம் மற்றும் முஸ்லிம்-அல்லாத சிறுபான்மையினருடன் குறிப்பாக சீன மற்றும் இந்திய வம்சாவளி மக்களுடன் தாஜா செய்து கொண்டிருந்தார்[5]. பிறகு முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுகிறார். மலேசியாவின் மக்கட்தொகையில் 60% முஸ்லிம்கள், 9% கிருத்துவர்கள். இப்ராஹிம் அன்வர் கடந்த மலேசிய மேமாத தேர்தல், ஒரு பெரிய பிராடு / மோசடி என்று வர்ணித்தார்[6]. எது எப்படியாகிலும், முஸ்லிம்-அல்லாதோர் மலேசியாவில் அவஸ்தைப் படவேண்டியதுதான். நஜீப் ரஸாக், இப்ராஹிம் அன்வர் முதலியொர் பேசுவது, நடந்து கொள்வது, சோனியா, திக்விஜய் சிங், முல்லாயம் சிங் யாதவ், கருணாநிதி போன்றே உள்ளது. ஆகவே, அடிப்படைவாதிகளுக்குக் கொண்டாட்டம் தான்!

The court case has sparked debate in Muslim-majority Malaysia

அல்லா முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானவர்: “அல்லா” என்ற சொல்லை கடவுளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது[7]. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை 14-10-2013 அன்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், கடந்த 2009ல் கீழ் நீதிமன்றம் ஹெரால்ட் என்ற பத்திரிகைக்கு அல்லா என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்து, இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அல்லா என்ற வார்த்தை இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே உபயோகத்தில் இருந்தது, கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு. என்றெல்லாம் வாதிடப்பட்டது[8]. மூன்று நீதிபதிகள் கொண்ட இத்தீர்ப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.

Allah for muslims only - Vedaprakash

“அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும்: இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது. மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர். “அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும் என்று சபா பிராந்திய, எஸ்டர் மோய்ஜி என்பவர் பிபிசியிடம் முறையிட்டுள்ளார்[9].

Allah for muslims only - Vedaprakash.2

கிருத்துவ-முகமதிய இறையியல் மோதல்கள்: “ஹெரால்ட்” செய்தித்தாளின் ஆசிரியர் லாரன்ஸ் ஆன்ட்ரூ [ Lawrence Andrew, editor of the Catholic newspaper, The Herald] மேல்முறையீடு செய்ய தீர்மானிக்த்துள்ளார்[10]. 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டன. ஜெப்ரிஜால் அஹமது ஜாபர் என்பவர், “ஒரு முஸ்லிமாக நான் அல்லா என்ற வார்த்தையை ஜிஹாத் போல கருதுகிறேன். அதனை நான் ஆதரிக்கிறேன்”, என்று கூறுகிறார்[11]. இந்தோனியா, போனியோ மற்றும் அரபு நாடுகள், முதலியற்றில் உள்ள கிருத்துவர்கள் அவ்வார்த்தையைத் தொடர்ந்து உபயோகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளனர்[12].

Allah for muslims only - Vedaprakash.3

© வேதபிரகாஷ்

14-10-2013


[5] Prime Minister Najib Razak, who took office in 2009, has walked a tight-rope between pleasing his ethnic Malay Muslim base while not alienating the country’s non-Muslim ethnic Chinese and Indian minorities.

[8] Lawyers for the Catholic paper had argued that the word Allah predated Islam and had been used extensively by Malay-speaking Christians in Malaysia’s part of Borneo island for centuries.

http://www.reuters.com/article/2013/10/14/us-malaysia-court-allah-idUSBRE99D01J20131014

[9] “If we are prohibited from using the word Allah then we have to re-translate the whole Bible, if it comes to that,” Ester Moiji from Sabah state told the BBC.

http://www.bbc.co.uk/news/world-asia-24516181

[11] “As a Muslim, defending the usage of the term Allah qualifies as jihad. It is my duty to defend it,” said Jefrizal Ahmad Jaafar, 39. Jihad is Islamic holy war or struggle.

http://www.reuters.com/article/2013/10/14/us-malaysia-court-allah-idUSBRE99D01J20131014

[12] Christians in Indonesia and much of the Arab world continue to use the word without opposition from Islamic authorities. Churches in the Borneo states of Sabah and Sarawak have said they will continue to use the word regardless of the ruling.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/malaysia/10376674/Malaysian-court-rules-only-Muslims-can-use-the-word-Allah.html